Thursday, July 31, 2014

ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் ஜனாதிபதியை தடுத்தனர்!

நிகழ்வுகளைப் பகிஷ்கரிக்கும் நோக்கம் அரசாங்கத் துக்கு இல்லை!

பாதுகாப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடை பெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி நிகழ் வுகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்குபற்ற மாட்டார் என அமைச்சரவைப் பேச்சாளரும் தகலவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது;

ஒரு நாட்டுத் தலைவருக்குரிய பாதுகாப்பு வழங்கப்படும் எனத்தெரிவித்து ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் அங்கு செல்லவேண்டாம் என ஜனாதியின் பாதுகாப்பு பிரிவினர் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

பொதுநலவாய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளைப் பகிஷ்கரிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை. அவர்கள் வழங்கக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் போதிய திருப்பதி இல்லாத காரணத்தினாலும் வேறு பல காரணங்களினாலும் ஜனாதிபதி பொதுநலவாய விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கலந்துகொள்ள மாட்டார் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (31) பிற்பகல் அமைச்சில் நடைபெற்றபோது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

Read more...

மகிந்த வெல்வது உறுதி! வாக்களிக்கா விட்டால் நட்டமடைவது முஸ்லிம்கள் தான். மஹிந்த அல்ல!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அளித்த வாக்குகளை விடவும் குறைவான வாக்குகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அளிப்பார்களாக இருந்தால் தனது அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுப் பொறுப்பை இராஜினாமா செய்வேன் என அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வருவது உறுதி. அதில் நாமும் பங்காளர்களாக இணைந்து கொள்ள வேண்டும். தேர்தலில் எதிர்த்து வாக்களித்து விட்டு அவர் வெற்றி பெற்றதன் பின்னர் மீண்டும் அவரிடம் சென்று அமைச்சுப் பொறுப்பை பெற்று என்ன முகத்துடன் எமது பகுதிக்கு அபிவிருத்திக்கான நிதியை கேட்பது. அதனால் தான் கூறுகின்றேன். கடந்த காலங்களில் அளிக்கப்பட்ட வாக்குகளை விடவும் குறைவாக வாக்குகள் மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம்களால் அளிக்கப்படுமாக இருந்தால் எனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்வேன்.

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியை மாற்றலாம் என்ற நம்பிக்கை இருந்தால் மாத்திரம் தான் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இலங்கையில் உள்ள ஒட்டு மொத்த முஸ்லிம்களும் ஒற்றுமைப்பட்டு ஜனாதிபதிக்கு எதிராக வாக்களித்தால் மாத்திரம் தான் தோற்கடிக்க முடியும் என்றால் நாம் ஒற்றுமைப்பட்டு அவரை தோற்கடிக்க முயற்சிக்க வேண்டும். மாறாக மட்டக்களப்பில் உள்ள முஸ்லிம்கள் மாத்திரம் எதிர்த்து வாக்களிப்பதால் அவரை தோற்கடிக்க முடியாது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாக்களிக்காமல் அவரை தோற்கடித்து வெல்ல வேண்டும் அல்லது அவர் வெல்வார் என்றால் அவருக்கு வாக்களித்து வெல்ல வேண்டும். எந்த வெற்றி பொருத்தமாக இருக்குமோ அதன்படி நடப்பவர்களாக நாம் இருக்க வேண்டும்.

நாட்டில் உள்ள பெரும்பான்மை மக்களின் கூடுதலான வாக்குகளை பெற்று மீண்டும் ஜனாதிபதியாக அவர் வருவது உறுதி. அவ்வாறு அவர் ஜனாதிபதியாக வரும் போது அந்த வெற்றியில் பங்காளர்களாக இல்லாமல் நாம் இருப்போமானால் நட்டமடையப் போவது வாக்களிக்காத முஸ்லிம்கள் தான். மஹிந்த ராஜபக்ஷ அல்ல என்றார்.

ஓட்டமாவடியில் இடம்பெற்ற நிகழ்வென்றில் கலந்துகொள்ளும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Read more...

ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் ஷியா முஸ்லிம்களை சுட்டுக்கொல்லும் கோரக்காட்சிகள் (படங்கள்)

ஈராக்கின் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள், அங்கு வசிக்கும் ஷியா முஸ்லிம்களை கொடூரமாக கொன்று வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் ஷியா முஸ்லிம்கள் 50 பேரை சுட்டுக்கொல்லும் கோரக்காட்சிகள் அடங்கிய வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

இந்நிலையில், நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடிய நேரத்திலும் அவர்கள் ஷியா முஸ்லீம்கள் ஏராளமானோரை கொன்று குவித்துள்ளனர். இதில் 50 பேரை கொல்லும் காட்சியை வீடியோவில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். 50 பேரையும் 2 வேன்களில் ஏற்றி ஒரு பகுதிக்கு போராளிகள் அழைத்து செல்கிறார்கள். பின்னர் அவர்களை வேனில் இருந்து இறக்கி ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு 50 பேரின் கைகளை பின்னால் கட்டி குனிந்தபடி அழைத்து செல்கின்றனர்.

அதன்பின்னர், அங்குள்ள ஆற்று ஓரமாக அவர்கள் அனைவரையும் குனிந்தபடி உட்கார வைக்கின்றனர். அதைத்தொடர்ந்து சுற்றி நிற்கும் போராளிகள், அவர்களை ஒவ்வொருவராக சுட்டுக் கொல்கின்றனர். பின்னர் பிணத்தை தண்ணீரில் வீசிவிட்டு போராளிகள் அங்கிருந்து சென்றுவிடுகின்றனர். இந்த கோரக்காட்சிகள் அடங்கிய வீடியோ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன

Read more...

ஊடகவியலாளர்களுக்கு அமெரிக்கா எந்த நோக்கத்தில் உதவுகிறது? புரியாத புதிராக உள்ளது - கெஹெலிய

யாழ் ஊடகவியலாளர்களுக்காக அமெரிக்க தூதரகம் கடந்த வாரம் ஒழுங்கு செய்திருந்த பயிற்சி திட்டம் ஒன்றை அரசாங்கம் இரத்து செய்ததாக தெரிவித்து அமெரிக்க தூதரகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை அரசாங்கம் தனது அதிருப்தியை வெளியிட் டுள்ளது.

இந்த அறிக்கையின் மூலம் இலங்கையின் ஊடகவியலா ளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தனது அறிக் கையில் சுட்டிக்காட்டியிருந்தது. எவ்வாறாயினும் இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சு, அமெரிக்க தூதரகம் இவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு எந்த நோக்கத்தில் உதவுகிறது என்பது தெளிவில்லை என குறிப்பிட்டுள்ளது

Read more...

இலங்கை போலந்துக்கு இடையில் விமான சேவைக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!

இலங்கை போலந்து நாடுகளுக்கிடையிலான விமான சேவைகளுக்கான இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தமொன்று அண்மையில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகளால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையின் விமான சேவையினை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் செயலாளர் கலாநிதி ரவீந்திர ருபேரு தலைமையிலான அதிகாரிகள் குழுவொன்று போலந்தின் தலைநகர் வார்சவ்விற்கு சென்றுள்ளனர். மேலும் போலந்திலுள்ள இலங்கை தூதரக அங்கத்தவர்கள், வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், சட்டமா அதிபர் திணைக்களத்தவர்கள், சிவில் விமான போக்குவரத்து சபையினர் மற்றும் சிறிலங்கன் விமான சேவை அங்கத்தவர்கள் என அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைகள் போலந்து நகரின் விமான போக்குவரத்து துணைத்தலைவர் இஸபெலா ஸிமஜடா வோஜ்ரிடசோவஸ்காவினால் தலைமை தாங்கப்பட்டது. மேலும் போலந்து பொது மக்கள் ஆணைய அங்கத்தவர்கள், வெளிவிவகார அமைச்சின் பிரதிநிதிகள், விமான சேவையின் பிரதிநிதிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கும் போலந்துக்கும் இடையிலான சிறந்த நட்புறவினை வெளிப்படுத்தும் வகையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் இரு நாட்டு ஒப்பந்தங்கள் தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. இடம்பெற்ற பேச்சு வார்த்தையின் முடிவில் இரு குழுக்களும் புதியதொரு விமான சேவை ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டதுடன், இடம்பெற்று வரும் துரித அபிவிருத்திகள் , மற்றும் பொது நோக்கு அபிவிருத்தி சம்பந்தமாக மேலும் கலந்துரையாடினர்.

1982 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கை போலந்துக்கிடையில் விமான சேவை சம்பந்தமாக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் இவ் ஒப்பந்தம் குறிப்பிடக்கூடிய தொன்றாக அமையும்.சுற்றுலா வியாபாரம் சம்பந்தமான முன்னேற்றங்கள் மட்டுமன்றி இருநாடுகளுக்கிடையிலான நட்புறவும் விரிவடையக்கூடிய சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

போலந்தின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் இலங்கை தூதரகத்துடன் வைத்திருந்த நெருங்கிய தொடர்பு உறவின் மூலமே இப் பேச்சுவார்த்தை மற்றும் கூட்டத்தொடர் துரித கதியில் வெற்றிகரமாக நடைபெற வழிகோலியுள்ளதாக போலந்துக்கான இலங்கையின் தூதரக அலுவலர் டி.எஸ்.டி. சில்வா தெரிவித்துள்ளார்.

Read more...

பிரதேச சபை பிரதான காரியாலயத்தின் கூரைக்கு மேல் ஏறி ஆளுந்தரப்பு உறுப்பினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! (படங்கள்)

அம்பகமுவ பிரதேசசபைக்கு உட்பட்ட கிராமிய மக்களுக்கு அபிவிருத்தி தொடர்பிலான திட்டங்களில் பாரபட்சம் காட்டுவதாக ஆளுந்தரப்பு உறுப்பினர் வீ.ஜீ. ஹெலபிரிய நந்தராஜ் சபை அறிக்கை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததோடு அம்பகமுவ பிரதேசசபையின் பிரதான காரியாலயத்தின் கூரைக்கு மேல்ஏறி ஒரு மணித்தியா லயத்திற்கு மேல் எதிர்ப்பு தெரிவித்ததோடு அட்டன் கொழும்பு பிரதானவீதியில் கினிகத்தேன பிரதேசசெயலாளர் காரியாலயத்தின் முன்னால் பஸ் தரிப்பு நிலையத்தின் கூரைக்குமேல் ஏறி இரண்டு மணித்தியாலயம் எதிர்ப்புதெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேசசபையின் மாதாந்த சபை அறிக்கை பிரதேசசபையின் தலைவர் வெள்ளையன் திணேஷின் தலைமையில் 31.07.2014 காலை நடைபெற்றது. இந்த மாதாந்த சபை அறிக்கையின் போது பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் சுற்று அறிக்கைக்கு மாறாக பிரதேசசபையின் சில அதிகாரிகள் செயற்படுவதாக ஆளுந்தரப்பு உறுப்பினர் வீ.ஜீ.ஹெலபிரிய நந்தராஜ் குற்றம் சுமத்தினார்.

(க.கிஷாந்தன்)

Read more...

புத்த சாசன அமைச்சை மூடுவதற்கு ஒரு மாத காலக்கெடு! - ராவண பலய

புத்த சாசன அமைச்சை ஒரு மாத காலத்திற்குள் புனர் நிர்மாணம் செய்யாதவிட்டால் உடனடியாக அதனை மூடிவிடுமாறு ராவண பலய அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இன்று (31) புத்த சாசன அமைச்சுக்கு தேரர்கள் பலருடன் சென்றவேளையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டுக்கும் இனத்திற்கும் மதத்திற்கும் எதிரான சவால்களை முறியடிப்பதற்கும், குரல் கொடுப்பதற்கும் செயற்படுவதற்கும் தேர்ர்களுக்கும் பாரம்சாட்டிவிட்டு, புத்த சாசன அமைப்பு தூங்கிக் கொண்டிருப்பதைத் தொடர்ந்தும் பார்த்துக் கொண்டிருக்கவியலாது என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தேரர் குறிப்பிட்டார்.

அதிகாரிகள் அசிரத்தையாக இருந்தால் புத்த சாசனத்தையும், பௌத்தர்களையும் பாதுகாக்க முடியாது எனவும் சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.

(கேஎப்)

Read more...

அத்துமீறி இலங்கைக்குள் ஊடுருவ முற்பட்டால் கைது செய்வோம்! கடற்படை தயார் நிலையில்!

தமிழகத்தில் போராட்டம் நடத்துவோர் இலங்கைக்குள் ஊடுருவ முற்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என கடற் படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

இலங்கைக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை எதிர்த்து இந்திய மீனவர்கள் இலங்கைக்கெதிராக போராட்டம் நடத்தியவாறு இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறப் போவதாக எச்சரிக்கை விடுத்திருப்பது இது மூன்றாவது தடவையாகுமென சுட்டிக் காட்டிய கொமாண்டர், இவை வெறும் வாய்வார்த்தை மாத்திரமே. அதனை அவர்களால் செயற்படுத்த முடியாதெனவும் கூறினார்.

தமிழக மீனவர்கள் இலங்கையில் கைதுசெய்யப்படுவதனை எதிர்த்து இந்தியாவில் போராட்டம் நடத்தி வரும் மீனவர்கள் ஓகஸ்ட் 02 இல் படகுகளில் வெள்ளைக் கொடி கட்டி குடும்பத்துடன் இலங்கையில் அகதிகளாக தஞ்சம் புகும் போராட்டத்தினை திட்டமிட்டபடி நடைமுறைப்படுத்த விருப்பதாக பகிரங்க அறிவிப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து கடற்படை பேச்சாளர் விளக்கமளிக்குகையில் :-

இதற்கு முன்னரும் இரு தடவைகள் இந்திய மீனவர்கள் கச்சதீவில் அத்துமீறி குடியேறப் போவதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். இருப்பினும் அவர்களால் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. இந்திய பொலிஸார், இரா ணுவம் மற்றும் கரையோர காவற் படையினர் இந்திய மீனவர்களின் தன்னிச் சையான தீர்மானங்களை மேற்கொள்ள ஒருபோதும் இடமளிக்கமாட்டார்கள். அவர்களை மீறி தமிழக மீனவர்களால் வெள்ளைக் கொடியுடன் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதென்பது இயலாத காரியமாகும். அதனையும் மீறி அவர்கள் வருவார்களாயின் இலங்கையின் சட்ட திட்டங்களுக்கமைய அவர்களைக் கைது செய்வது உறுதியெனவும் அவர் கூறினார்.

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திக்கான ஊடக மத்திய நிலையத்தின் வாராந்த செய்தியாளர் மாநாடு நேற்று நடைபெற்ற போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக் குகையிலேயே கொமாண்டர் இவ்வாறு கூறினார்.

Read more...

தேர்தலில் முஸ்லிம் பெண்கள் நிகாப் - ஹிஜாப் அணியவே முடியாது.. ! - தேர்தல்கள் ஆணையாளர்

காதுகளை மூடிய அடையாள அட்டையும் செல்லுபடியாகாது!

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சிகளின் செயலாளர்களுக்கான விசேட தெளிவுறுத்தல் கலந்தாலோசனை நேற்று (30) தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

அங்கு ஜாத்திக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளரும் மாகாண சபை உறுப்பினருமான நிசாந்த ஸ்ரீ வர்ணசிங்க தேர்தல் ஆணையாளரிடம் பல வினாக்களை கவனத்திற்குக் கொண்டுவந்தார்.

வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்கு வருகின்ற முஸ்லிம் பெண்கள் முழுமையாக முகமூடி வருவது தொடர்பாகவும், தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும்போது முஸ்லிம் பெண்கள் படம் எடுத்துக் கொள்ளும்போது, காதுகளை மூடும் வண்ணம் ஹிஜாப் அணிவதும் பிரச்சினைக்குரியதாகும் என வினா எழுப்பினார்.

அத்துடன், வாக்குச் சாவடிகளில் பணியாற்றும் முஸ்லிம் பெண்கள் முகமூடியிருப்பது தொடர்பிலும் தேர்தல் ஆணையாளரிடம் வினா எழுப்பியதுடன், அதுதொடர்பில் தேர்தல் ஆணையாளரின் கருத்தையும் குறிப்பிடுமாறு கோரினார்.

அவரது வினாவுக்கு விடையளிக்குமுகமாக தேர்தல் ஆணையாளர், வாக்குச் சாவடிக்கு வருகின்ற எந்தவொரு முஸ்லிம் பெண்ணோ வேறு எவரோ முகத்தை மறைத்து வர முடியாது எனக் குறிப்பிட்டார்.

அதற்கு எந்தவொரு முறையிலும் இடமளிக்கப்பட மாட்டாது எனவும், நிகாப் மற்றும் புர்கா அணிந்து வாக்களிக்க முடியாது எனவும் தெளிவுறுத்தியதுடன் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும்போது காதுகளை மறைக்க முடியாது எனவும், ஒவ்வொருவரையும் இனங்காண ஏதுவாக இருக்க வேண்டியது அத்தியாவசியம் எனவும் தெளிவுறுத்தினார்.

இதற்கேற்ப, எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம் பெண்கள் வாக்களிக்கும்போது முகத்தை முழுமையாகவோ குறைவாகவோ மறைக்க முடியாது என்பதுடன் அடையாள அட்டையில் காதுகள் மறைக்கப்படக்கூடாது எனவும் தேர்தல் ஆணையாளர் கட்சிச் செயலாளர்களிடம் தெளிவுறுத்தியுள்ளார்.

(கேஎப்)

Read more...

ஆட்டோக்களைக் திருடிச் சென்று உதிரிப்பாகங்களை விற்பனை செய்த 14 வயது சிறுவன் கொழும்பில் கைது .....

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகளை கடத்திச் சென்று அவற்றின் உதிரிப்பாகங்களை கழற்றி விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் கிரேன்ட்பாஸ் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. கிரேன்ட்பாஸ் பிரதேசத்தைச் சேர்ந்த 14 வயதான சிறுவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

இவரிடமிருந்து முச்சக்கரவண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தற்போது கல்கிஸ்ஸை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Read more...

பிரான்சில் தமிழ் இளைஞனின் மர்மமான சடலம்!

பிரான்ஸ் பரிசின் புறநகர் பகுதியான நியுலி ப்லேசன்ஸ் பகுதியில் 23 வயதுடைய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவருடைய சடலம் ஆற்றிலிருந்து நேற்று பிரான்ஸ் காவல்துறையினரால் மீட்க்கபட்டுள்ளது. இச்சடலம் 23வயது டைய இராஜதுரை லஜீவன் என அடையாளம் காணபட்டு ள்ளது. இது கொலையா அல்லது தற்கொலையா என காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Read more...

கொழும்பில் ரூ.1 கோடியை மீளப்பெற்ற 17 வயது இளைஞன்......

ஜா-எலயிலுள்ள வங்கியொன்றில் சேமிப்பு கணக்கொன்றை திறந்து, தன்னியக்க இயந்திரத்தின் ஊடாக ஒரு கோடியே 78 இலட்சம் ரூபாவை மீளப்பெற்ற 17 வயதான இளைஞனை கொழும்பு கோட்டை நீதவான் பிணையில் விடுவித்துள்ளார். அவருடைய வங்கி கணக்கில் ஒரு இலட்சத்து 63 ஆயிரம் ரூபாவே மீதமிருக்கின்றது. இந்நிலையில் அவர், ஒருகோடி ரூபாவிற்கு மேல் மீளப்பெற்றுக்கொண்டுள்ளார் என்று நீதிமன் றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. தன்னியக்க இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாவே இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டுள்ளது என்று வங்கி தரப்பில் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

பொலனறுவையை வசிப்பிடமாகக் கொண்ட குறித்த இளைஞர் கடந்த ஜனவரி மாதம் ஜாஎல பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றில் கணக்கு ஒன்றை ஆரம்பி த்துள்ளார். குறித்த இளைஞன், பல்வேறு நகரங்களில் 558 தடவைகள் பணத்தை மீளப்பெற்றுள்ளார். சந்தேக நபரான இளைஞன், கொழும்பு கோட்டே நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

பணத்தைக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றை குறித்த இளைஞர் கொள்வனவு செய்துள்ளார். மீளப் பெற்றுக்கொண்ட பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வங்கிக்கு திருப்பிச் செலுத்துவதற்கு அந்த இளைஞர் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்தே அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் சரீர பிணையிலும் விடுதலை செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே உத்தரவிட்டார்.

Read more...

Wednesday, July 30, 2014

கிராமத்தான் கலீபாவின் “நழுவி” கவிதை நூல் வெளியீட்டுவிழா மருதானையில் !

பன்முக ஆளுமைமிக்க எழுத்தாளரும், கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் “நழுவி” கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பு - மருதானையில் நடைபெறவுள்ளது.

மருதானை, தெமட்டகொட வீதி, இல. 73 இல் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் பிற்பகல் 4.00 மணிக்கு விழா நடைபெறவுள்ளது.

தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், பொத்துவில் பிரதேச சபையின் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாசித் பிரதம அதிதியாகக் கலந்துகொள்வார்.

புரவலர் ஹாஷிம் உமரின் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுகளில் எழுத்தாளரும், கவிஞருமான முஸ்டீன் நூல் அறிமுகம் செய்வார். கவிமணி நஜ்முல் ஹுஸைன், சந்தக்கவி கிண்ணியா அமீர் அலி இருவரும் கவிவாழ்த்திசைப்பர்.

இக்கவிதை நூலில் முதற்பிரதியை பிரபல தொழிலதிபர் மீராலெப்பை முஸம்மில் பெற்றுக் கொள்வார்.

பேராசிரியர் துறை மனோகரன், கவிஞர் நாச்சியாதீவு பர்வீன் இருவரும் “நழுவி” திறனாய்வு செய்வர். கவிஞர் கலைவாதி கலீல், மணிப்புலவர் மருதூர் ஏ. மஜீத் இருவரும் வாழ்த்துரை வழங்குவர். நிகழ்ச்சிகளை எழில்வேந்தன் தொகுத்து வழங்கவுள்ளார்.

(கேஎப்)

Read more...

பெருந்தொகைத் தேயிலைக் கழிவுடன் ஒருவர் கைது! (படங்கள் இணைப்பு)

ஹட்டன் - எபோட்சிலி தோட்டத்திலிருந்து பாவனைக்குதவாத பெருந்தொகைத் தேயிலைக் கழிவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இழுவை வண்டி ஒன்றில் (டெக்டர்) இருந்து குறித்த தேயிலைக் கழிவினை நேற்று (29) மாலை மற்றொரு லொரிக்கு ஏற்றிகொண்டிருக்கும் போது, பொலிஸார் சுற்றிவளைத்தனர்.

விசாணையின் போது அனுமதி பத்திரம் இல்லாமல் இக்கழிவு தேயிலை தூளை ஏற்றிகொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

விசாரணைக்குப் பின்பு இழுவை வண்டி (டெக்டர்) உட்பட சாரதியையும் கைது செய்ததோடு, பாவனைக்கு உதவாத 207 கிலோ கழிவு தேயிலை தூளையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேகநபரை இன்று (30)ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

(கிஷாந்தன்)

Read more...

தனி நாடு தேவை என்று ஊக்கப்படுத்தப்பட்டோம்! இது ஒரு தேவையற்ற யுத்தம் என பல காலத்தின் பின்புதான் உணர முடிந்தது!

பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) நேர்காணலின் முழு வடிவம்!

கேள்வி: யுத்தத்திற்கு பின்னராக பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக பல்வேறு குற்றச் சாட்டுகள் இருந்து வருகின்றன இது தொடர்பில் தங்கள் கருத்து என்ன?

பொதுவாக இது முற்றுமுழுதாக தவறான ஒரு கருத்து. ஏனெனில் ஒரு யுத்தம் இடம்பெற்ற நாட்டில் உடனடியாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவதென்பது ஒரு முடியாத விடயம். 30 வருடகாலமாக யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது 5 வருடங்கள் நிறைவுற்றி ருக்கின்றது. இந்த வருடங்களுக்குள் எமது அரசாங்கம் பல மாற்றங்களைக் ஏற்பட்டிருக்கின்றன.

பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்கள் - மக்கள் சுதந்திரமாக நடமாடக்கூடிய வாய்ப்பு - சுதந்திரமாக கல்வி கற்கக் கூடிய வாயப்புகள் சுதந்திரமாக இலங்கையில் எந்த இடத்திற்கும் மூவின மக்களும் சென்றுவரக்கூடிய நிலைமைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

எமது வடக்கு கிழக்கு பிரதேசங்களை எடுத்துக் கொண்டால் எதுவித கைதுகள், இராணுவ கெடுபிடிகள், முற்றுகைகள் இல்லை. இன்று மிகவும் சிறந்த முறையில் இந்த மனித உரிமைகள் பேணுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டிருக்கின்றன. ஆனால் கடந்த யுத்த காலங்களில் பலர் காணாமல் போயிருக்கின்றார்கள். இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

உண்மையில் யுத்தம் தொடர்ந்து இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இங்கிருந்த போராட்ட குழுக்களால் கூட பல இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள் கைது செய்யப்பட்டார்கள். போராடுவதற்காகக் கூட கொண்டு செல்லப்பட்டார்கள்.

மேலும் யுத்தங்கள் பல காட்டுப் பிரதேசங்களில் கூட இடம்பெற்றது. அங்கு பல உடல்கள் கைவிட்டுச் செல்லப்பட்டன. எனவே யார் யார் எங்கு காணாமற் போனார்கள் என்பதை திடமாகக் கூற முடியாது.

இன்று நாங்கள் ஒரு கணக்கெடுப்பை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருக்கின்றோம் எல்.எல்.ஆர். சி என்ற ஒரு பொதுவான அமைப்பை உருவாக்கி அதனூடாக பலவிசாரணைகளை மேற்கொண்டு அதில் இன்று மக்கள் வெளிப்படையாகச் சென்று தங்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதற்குரிய சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றோம்.

இதே போல் எமது இனப்பிரச்சனைகளை சிறந்த முறையில் பேசித் தீர்ப்பதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவினை ஏற்படுத்தி இருக்கின்றோம். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அது புறக்கணிக்கப்பட்டு வருகின்றது அவர்களால் இதனைப் புறக்கணிப்பதன் மூலம் எதையும் வெல்ல முடியாத நிலை ஏற்படும். ஏனெனில் அவர்கள் அதில் பங்குபற்றாமலேயே பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள்.

இது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு செயற்பாடாகும். ஆனால் நாம் அரசாங்கத்துடன் இருந்து கொண்டு எமது மக்களுக்காக பாரிய வேலைத் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். வருடா வருடம் எமது மக்களின் வாழ்க்கைத்தரம், கல்வித்தரம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. எனவே இன்னும் இதனை நாங்கள் மேம்படுத்துவதற்கு திட்டமிட்டிருக்கின்றோம்.

கேள்வி: புலம்பெயர் நாடுகளிலுள்ள அமைப்புகளின் செற்பாடுகள் பற்றி உங்கள் கருத்து என்ன?

அவர்கள் எங்களுடைய மக்கள் அதனை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்கள் எமது உடன்பிறப்புகள்- சகோதரர்கள்தான் இன்று புலம்பெயர்ந்த மக்களாக வாழ்கின்றார்கள். புலம்பெயர்ந்த மக்களை நாம் ஒருபோதும் பிரித்துப் பார்க்க முடியாது. ஆனால் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியில் சிறந்த தெளிவாக்கங்களை நாம் உருவாக்க வேண்டும்.

ஏனெனில் அவர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றார்கள் அவர்களுக்கு இங்கு நடக்கின்ற நடைமுறைகள் தெரியாமல் இருக்கலாம். எனவே இங்கிருக்கின்ற வெளிப்படைத் தன்மைகளை நாம் தெளிவாக்குகின்ற போதுதான் அவர்கள் சிறந்த விடயங்களை அறிந்து கொள்வார்கள்.

சில தமிழ் அரசியல் கட்சிகள் புலம் பெயர்ந்த மக்களை தவறாக வழிநடத்து கின்றார்கள் என்று தான் நான் கூறுவேன். ஏனெனில் இங்கு பல அட்டூழியங்கள் நடப்பதாகவும், இராணுவக் கெடுபிடிகள் இருப்பதாகவும், மக்கள் காணாமற் போவதாகவும் தவறான பிரச்சாரங்களை தற்போது மேற்கொண்டிருக்கின்றார்கள். எனவே இதனை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. என்னைப் பொருத்தமட்டில் இலங்கையில் மனித உரிமைகள் மிகவும் சிறந்த முறையில் வளர்ச்சியடைந்திருக்கின்றது என்றுதான் கூறுவேன்.

கேள்வி: இங்கு இனஅழிப்பு, இன அடக்கு முறைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறதே!

அண்மையில் முஸ்லிம் சிங்கள மக்களிடையில் தவறான புரிந்துணர்வு காரணாக முஸ்லிம் மக்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டது உண்மையான விடயம்தான். இதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நம் உடனடியாக படைப்பிரிவினரை, காவல் துறையினரைப் அனுப்பி நிலைமையை கட்டுப்படுத்தினோம்.

ஜனாதிபதி அவர்கள் கூட அவ்விடத்திற்கு நேரடியாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக்கொடுத்தார். அதெல்லாம் ஒரு பாரிய விடயமாக நாம் கருத முடியாது.

நாட்டின் பல்வேறு பாகங்களிலும் இவ்வாறான விடயங்கள் இடம்பெறுவதென்பது சாதாரணமான விடயம். ஆனாலும் சட்ட ஒழுங்குகள் சிறந்த முறையில் அந்த இடத்தில் பேணப்பட்டிருக்கின்றது. அசம்பாவிதங்கள் இடம்பெற்றிருந்தாலும் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றிருக்கின்றது. எனினும் இது போன்ற அசம்பாவிதங்கள் எதிர்காலத்தில் இடம்பெற விடக்கூடாது என்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கின்றோம்.

கேள்வி: நாட்டில் மீள் நல்லிணக்க செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றது. அதில் உங்களின் பங்கு என்ன? அதற்காக மக்கள் என்ன செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

உண்மையில் மீள் நல்லிணக்கம் என்பது மக்கள் மனங்களில் இருந்து உருவாக வேண்டும். ஏனெனில் முப்பது வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக புரையோடிப்போயிருந்த பிரச்சனை, இதன் நிமித்தம் மக்களின் மனங்களில் இருந்த காழ்ப்புணர்வுகள், நீக்கப்பட்டு மக்கள் மனங்களில் இருந்து உருவாக்கப்படவேண்டிய விடயம்.

தற்போது இது மெல்லமெல்ல உருவாகி வருவதை நாம் காண்கின்றோம். ஏனெனில் காலத்தின் மாற்றம் தான் இது ஏற்படுவதற்கு வாய்ப்பாக இருக்கும். இது குறுகிய காலத்தில் ஏற்படக்கூடிய விடயம் அல்ல. இதில் எனக்கும் பங்கிருக்கின்றது. எவ்வாறெனினில் நான் முதலில் தேசியநல்லிணக்க அமைச்சராகத்தான் இருந்தேன். எனவே இதில் நானும் ஒரு பங்குதாரன் என்பதை கூறிக்கொள்கின்றேன்.

கேள்வி: நீங்கள் போராளியாக இருந்து அரசியலுக்குள் வந்திருக்கின்றீர்கள் தற்போது அந்த மாற்றத்தினை எவ்வாறு உணர்கின்றீர்கள்?

அதில் பாரிய மாற்றங்கள் என்று கூறுவதற்கு இல்லை சொல்லப்போனால் முன்பு இருந்த அரசாங்கங்கள் விட்ட தவறின் காரணமாகத்தான் இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது 83ம் ஆண்டு ஏற்பட்ட யூலைக்கலவரத்தின் பிற்பாடுதான்.

அந்நேரம் ஜே.ஆர் ஜெயவர்த்தன அவர்கள் நாட்டின் தலைவராக இருந்தார். அதன் பிற்பாடுதான் பாரிய யுத்தமாக இந்த நாட்டில் வெடித்தது. அதில் போராட வேண்டிய கடமை ஒன்றுக்கு நாம் தள்ளப்பட்டிருந்தோம்.தனி நாடு தேவை என்று ஊக்கப்படுத்தப்பட்டோம். இது ஒரு தேவையற்ற யுத்தம் என்று பல காலத்தின் பின்புதான் உணரக் கூடியதாக இருந்தது. எனவே இந்த யுத்தத்தை நிறுத்தி தற்போது நாங்கள் ஜனநாயக நீரோட்டத்திலே இணைந்து இன்று யுத்தத்தில் ஈடுபட்டதை விட பாரிய வேலைத்திட்டங்களை மக்களுக்கு நாங்கள் செய்து கொணடிருக்கின்றோம்.

இதனூடாக பல இன உறவுகள் ஏற்பட்டு இன்று பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தற்போது மக்கள் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றார்கள் எனவே இதனை நாங்கள் நன்கு வளப்பத்தி மேலும் மேலும் மக்களுக்கு உதவியை வழங்க வேண்டும் என்பதைத்தான் நாம் எதிர்பார்க்கின்றோம்.

கேள்வி: இந்த விடயத்தில் புலம்பெயர் அமைப்புகள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கின்றீர்கள்?
புலம்பெயர்ந்த மக்களிடம் நான் அன்பாகக் கேட்டுக் கொள்வது என்னவென்றால் இலங்கை ஒரு வன்முறையான நாடு அல்லது தவறான நாடாக சித்தரிக்கப்படுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை. அவர்கள் நினைத்தால் என்றும் வரலாம்.

புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்களிடம் இருக்கின்ற பொருளாதார பலங்கள் அறிவியல் ரிதீயான வளங்களை அவர்கள் இங்கு வடக்கு கிழக்கிலே பிரயோகிக்க வேண்டும். மாறாக வெளிநாடுகளில் இருந்து கொண்டு சத்தம் போட்டுக் கொண்டு கதைத்துக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.

இன்று வடக்கு கிழக்கில் பொருளாதார கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கு வர்த்தகங்களை மேற்கொள்வதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றது. இதில் அவர்கள் முதலீடுகளைச் செய்து எமது மக்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவார்களாக இருந்தால் யுத்தத்தில் இழந்த பல குறைபாடுகளை நாம் நீக்கக் கூடியாக இருக்கும். இதனை விடுத்து வீணே குற்றச்சாட்டுக்களை மாத்திரம் பிரயோகிப்பதில் எதுவித நன்மையும் பெறப் போவதில்லை.

கேள்வி: அபிவிருத்தியில் புலம்பெயர் உறவுகள் எவ்வாறு செயற்பட முடியும்?

அபிவிருத்தி என்பது இரண்டு விதமாக இருக்கின்றது. தற்போது வடக்கு கிழக்கில் அரசாங்கத்தினால் பாரிய அளவிலான கட்டுமான பணிகள் இடம்பெற்று ஒரு வகை அபிவிருத்தி மேற்கொள்ளபட்டு வருகின்றது.

ஆனால் தொழில் வாய்ப்பு என்ற ரீதியில் அரசாங்கத்தினால் முழுமையாக வழங்கமுடியாத நிலை ஏற்படும். ஏனெனில் அரசாங்கம் என்பது சட்டதிட்டங் களுக்கு அமைய கல்வித்தகமைகளுக்கு அமைய மாத்திரம் தான் தொழில் வாய்ப்புகளை வழங்க முடியும்.

இந்த யுத்தத்தின் காரணாக பல இளைஞர்கள் கல்வி கற்கின்ற வாய்ப்புகளை இழந்து தற்போது தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களுக்கு சில தொழிற்சாலைகள்- தொழில்மையங்கள் வர்த்தக நிலையங்களை ஆரம்பிக்கின்ற போது தான் தொழில் வழங்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகரிக்கும்.

இது போன்ற பாரிய முதலீடுகளை புலம் பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் மேற்கொள்வார்களாக இருந்தால் இங்கு பலமாற்றங்களை கொண்டுவரலாம் என நான் எதிர்பார்க்கின்றேன்.

கேள்வி: மீள்குடியேற்றம் தற்போது எந்த நிலைமையில் இருக்கின்றது?

மீள்குடியேற்றத்தைப் பொருத்த மட்டில் 98 வீதம் முடிவடைந்திருக்கின்றது. இரண்டு வீதமான பிரச்சனைகள் தற்போது இருக்கின்றது. அவற்றை மிக விரைவாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் சம்பூர் போன்ற பிரதேசங்கள் ஏனைய பிரச்சனைகள் தற்போது முடிவடைந்திருக்கின்றது.

அந்த பிரதேசங்களில் இருக்கின்ற குறைபாடுகளை இணை அமைச்சுகளின் ஊடாக நிவர்த்தி செய்து வருகின்றோம். பொதுவாக மின்சார அமைச்சு, நீர்ப்பாசன அமைச்சு, விவசாய அமைச்சு, வீதிஅமைச்சு போன்ற அமைச்சுக்களினூடாக அந்தந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் பல முன்னேற்றங்கள் நடந்து கொணடிருக்கின்றன.

இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் 45000 வீடுகள் யாழ்ப்பாணத்தில் கட்டப்படுகின்றதன. இதில் 4000 வீடுகள் தற்போது மட்டக்களப்பிலும் 1000 வீடுகள் திருகோணமலை மாவட்டத்திலும் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

அது போல் வீடு இழப்புகளுக்காக 1700 லட்சம் ரூபா நிதியும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தற்போது கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு லட்சம் ரூபா வீதம் வழங்கப்படுவதற்கும் திட்டமிட்டிருக்கின்றோம். இதே போன்று பல திட்டங்களை தற்போது எமது மக்களுக்காக நாம் செய்துக்கொண்டிருக்கிறோம்.

எனவே மிக விரைவில் அவர்கள் சிறந்த வாழ்க்கைக்குள் செல்வார்கள் என்பதை எதிர்பார்க்கின்றோம். இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காகவே பாராளுமன்ற தெரிவுக் குழுவினை ஏற்படுத்தி இருக்கின்றோம்.

இன்று யுத்தம் முடிவடைந்து அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாக வாழும் ஒரு சூழ்நிலை தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது சிங்கள தமிழ் முஸ்லிம்கள் சேர்ந்து வர்த்தகம் செய்கின்றார்கள். மூவின மக்களும் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றார்கள். அவ்வாறான சிறந்த புரிந்துணர்வு தற்போது ஏற்பட்டிருக்கின்றது என அவர் தெரிவித்தார்

Read more...

யாழில் பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த அவலம்!

யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொ ன்றில் கத்திமுனையில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த வீட்டு க்குள் செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை 1 மணிக்கு நுழைந்துள்ள கொள்ளையர்களில், வீட்டிலுள்ளவர்களை கத்தியைக் காட்டி அச்சுறுத்தியே கொள்ளையில் ஈடுபட்டு ள்ளனர் என கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி வீட்டிலிருந்த பெண், செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை மலசல கூடத்திற்கு செல்வதற்காக வீட்டிற்கு வெளியில் வந்திருந்த வேளை, அங்கு முகத்தைத் துணியினால் கட்டிய நிலையில் நின்றிருந்த இருவர் அந்த பெண்ணை கத்தி முனையில் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளனர்.

வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கணவன் மற்றும் மகன் ஆகியோரைக் சத்தம் போட வேண்டாம் எனவும் சத்தம் போட்டால் பெண்ணை கத்தியால் குத்துவோம் என்றும் மிரட்டியுள்ளனர். தொடர்ந்து, வீட்டின் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த 15 பவுண் நகை (6 இலட்சத்து 30 ஆயிரம்) மற்றும் 3 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பணம் ஆகியவற்றினைக் கொள்ளையடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, குறித்த வீட்டுக்காரர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தனர். அந்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Read more...

பெற்றோரை தாக்கிவிட்டு 4 வயது சிறுவன் கடத்தப்பட்டான் அநுராதபுரத்தில் சம்பவம்!!

அநுராதபுரம் மீகல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் வீட்டில் இருந்த சிறுவன் ஒருவனை முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசம் அணிந்த நான்கு பேர் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்து நேற்று முன்தினம் இரவு கடத்திச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் 4 வயதான மகன் ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளான். பெற்றோருடன் வீட்டில் இருந்த போதே மோட்டார் சைக்கிளில் வந்த முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசம் அணிந்த நான்கு பேர் இவ்வாறு கடத்திச் சென்று ள்ளனர்.

இச்சம்பவத்தின் போது சிறுவனின் பெற்றோறை கடத்தல் காரர்கள் கத்தியால் தாக்கி விட்டே சிறுவனை கடத்திச் சென்றுள்ளமை தெரியவருகின்றது.

குறித்த வர்தகரிடம் இருந்து கப்பம் பெறும் நோக்கிலேயே சிறுவன் கடத்தப் பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இதுவரையில் கடத்தல்காரர்கள் தொடர்பிலோ சிறுவன் தொடர்பிலோ எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மீகல்லாவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read more...

Tuesday, July 29, 2014

சிங்கள பௌத்தர்களையும், உரிமைகளையும் பாதுகாக்க புதிதாய் உருவாகிறது ஓர் அமைப்பு!

சிங்கள பௌத்தர்களையும், பௌத்த உரிமைகளையும் பாதுகாப்பதற்காக சிங்கள ராவய அமைப்பினார் புதிதாக அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பில் முற்றுமுழுதாக சிங்கள பௌத்த இளைஞர் யுவதிகள் பங்கேற்கவுள்ளனர்.

இதுதொடர்பில் அவ்வமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், நாடு தழுவியதாக உருவாக்கப்படவுள்ள இவ்வமைப்பின் முதலாவது அமைப்பு கொழும்பில் ஆரம்பிக்கப்படுகின்றது. இதற்காக நுற்றுக்கணக்கான இளைஞர் யுவதிகள் தங்கள் விருப்புக்களைத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

காசாவில் இஸ்ரேலிய போர் குற்றங்களை இந்தியா மூடி மறைக்கிறது! By Deepal Jayasekera

காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய இராணுவ தாக்குதலுக்கு இந்தியாவின் புதிய அரசாங்கத்தின் விடையிறுப்பானது, இந்து மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சி இஸ்ரேலுடன் ஒரு நெருக்கமான கூட்டணியை ஏற்படுத்த பார்த்து வருவதைக் குறித்துக் காட்டுகிறது. இரண்டு வாரங்களாக காசா மீது இஸ்ரேல் ஒரு மரணகதியிலான வான்வழி போர் நடத்திய பின்னர் பாலஸ்தீன பிராந்தியத்தின் மீது அதன் தரைவழி தாக்குதலைத் தொடங்கிய இருந்த நிலையிலும், இந்திய அரசாங்கம் தோற்றப்பாட்டளவிற்கு மவுனமாக இருந்தது.

ஜூலை 10இல், வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஒரு அறிக்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் இருப்பதற்கு அறிகுறியைக் காட்டியது. "இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே தீவிரமாக அதிகரித்திருக்கும் வன்முறை குறித்து, குறிப்பாக அப்பாவி மக்களைப் பரிதாபகரமாக கொன்றிருக்கும் மற்றும் பலத்த பொருட்சேதங்களை ஏற்படுத்தி இருக்கும் காசா மீதான பலமான வான்வழி தாக்குதல்கள் குறித்து" இந்தியாவின் ஆழ்ந்த கவலைகளை அது வெளியிட்டது. இருந்த போதினும், “இஸ்ரேல் தரப்பின் இலக்குகளுக்கு எதிரான ராக்கெட் தாக்குதல்களால் எல்லை தாண்டிய ஆத்திரமூட்டல்கள் ஏற்பட்டிருந்ததற்கு" அதன் அதிர்ச்சியை வெளிப்படுத்தி, அது இஸ்ரேலின் தரப்பில் சாய்ந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நடுநிலைமை என்ற போர்வையில் அந்த அரசாங்கம், இஸ்ரேல் காசாவில் அதன் குற்றகரமான நடவடிக்கைகளுக்கு வழங்கும் நியாயப்பாட்டை ஆதரித்தது.

இஸ்ரேலின் படுகொலைகளுக்கு மக்களிடையே எதிர்ப்பு இருந்த போதினும், பிரதம மந்திரி நரேந்திர மோடியும் அவரது அரசாங்கமும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவிக்க மறுத்ததோடு, இந்திய நாடாளுமன்றத்தின் கீழ்சபை மற்றும் மேல்சபையான முறையே லோக்சபா மற்றும் ராஜ்ய சபாவில் கடந்த வாரம் விவாதத்தையும் தடுத்தனர். காங்கிரஸ், ஸ்ராலினிச இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) மற்றும் இந்திய மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) உட்பட உத்தியோகபூர்வ எதிர்கட்சிகள், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் உடனடியாக கண்டனம் தெரிவிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தன.

ஆனால் இந்த கட்சிகளின் நிலைப்பாடு முற்றிலும் போலித்தனமானதாகும். காங்கிரஸ் கட்சி அந்த யூத-பாதுகாப்புவாத அரசுடன் மிக நெருக்கமாக இராஜாங்க மற்றும் இராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொண்டே, அது பாரம்பரியமாக பாலஸ்தீன மக்களின் ஒரு நண்பனாக காட்டிக் கொண்டதோடு, இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கு வெற்று விமர்சனங்களை வெளியிட்டது. 1992இல், சோவியத் ஒன்றியத்தின் பொறிவுக்குப் பின்னர், பிரதம மந்திரி நரசிம்ம ராவின் காங்கிரஸ் அரசாங்கம் தான், இஸ்ரேலுடன் ராஜாங்கரீதியிலான உறவுகளை ஸ்தாபித்தது.

இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்கள் ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், புது டெல்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் மற்றும் காஷ்மீர் உட்பட, இந்தியாவெங்கிலும் பரந்தளவில் நடந்திருந்ததற்கு இடையே, அந்த நாடாளுமன்ற விவாதத்திற்கு அழுத்தம் அளிக்கப்பட்டிருந்தது. காஷ்மீரில் நடந்த போராட்டங்களை ஒடுக்குவதில், மத்திய ரிசர்வ் பொலிஸ் படை (CRPF) கடந்த சனியன்று குல்காம் மாவட்டத்தில் ஒரு இளைஞரைச் சுட்டுக் கொன்றது.

வெளியுறவு விவகாரங்களுக்கான மந்திரி சுஷ்மா சுவராஜ் எந்தவொரு விவாதத்தையும் தடுக்க வழங்கிய பரிந்துரையை ராஜ்ய சபா அவைத்தலைவர் நிராகரித்த பின்னர், இறுதியாக திங்களன்று ராஜ்ய சபாவில் காசா மீதான ஒரு விவாதத்தை எதிர்கட்சிகளால் கொண்டு வர முடிந்தது. "நாம் அவ்விரு தேசங்களோடும் இராஜாங்கரீதியிலான உறவுகளைக் கொண்டிருக்கிறோம். ஆகவே எந்தவொரு நட்பு நாட்டையும் தாழ்வுபடுத்தி குறிப்பிடுவது அவர்களுடனான நமது உறவுகளைப் பாதிக்கும்," என்று கூறி சுவராஜ் அவருடைய நிலைப்பாட்டை நியாயப்படுத்தினார்.

சுவாராஜின் கருத்துக்கள் கடந்த இரண்டு தசாப்தங்களாக இந்தியா ஈடுபட்டு வரும் அந்த சமநிலைப்படுத்தும் நடவடிக்கையைப் பிரதிபலிக்கிறது. 1992இல் இருந்து, அடுத்தடுத்து வந்த காங்கிரஸ் மற்றும் பிஜேபி-தலைமையிலான அரசாங்கங்கள் இஸ்ரேலுடன் மிக நெருக்கமான உறவுகளை ஸ்தாபித்துள்ளன, அது இப்போது ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகப் பெரிய ஆயுத வினியோகஸ்தராக உள்ளது. இஸ்ரேலினது ஆயுத ஏற்றுமதிகளில் 40 சதவீதத்தை இந்தியா விலைக்கு வாங்கி வருவதாக ஒரு இஸ்ரேலிய நாடாளுமன்ற (Knesset) ஆய்வறிக்கை குறிப்பிட்டது. “இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக" போராடுகிறோம் என்ற பெயரில் இந்தியாவும் இஸ்ரேலும் அவற்றின் இராணுவங்கள் மற்றும் உளவுத்துறை எந்திரங்களுக்கு இடையிலான ஆழமான தொடர்புகளையும் அபிவிருத்தி செய்துள்ளன.

வெளியேறவிருந்த காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கத்தின் இறுதி நடவடிக்கைகளுக்கு இடையே, இஸ்ரேல் உடன் ஒரு தாயக பாதுகாப்பு உடன்படிக்கையில் கையெழுத்திட்டதும் ஒன்றாக இருந்தது. பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அருகில் உள்ள இந்தியாவின் எல்லைகளை ஒட்டி நிறுவுவதற்காக, கடந்த டிசம்பரில் இஸ்ரேலிடம் இருந்து இந்தியா 15 ஆளில்லா டிரோன் விமானங்களை விலைக்கு வாங்கியது. 2009இல், காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் தந்திரமாக வேவு பார்க்கும் ப்ஹால்கான் உபகரண அமைப்புமுறையை இஸ்ரேலிடம் இருந்து விலைக்கு வாங்கியது.

அதே நேரத்தில், எரிபொருள் இறக்குமதிகளுக்காக இந்தியா மத்திய கிழக்கை பலமாக சார்ந்திருப்பதால், இஸ்ரேலின் தரப்பில் மிக பகிரங்கமாக சாய்வதன் மூலமாகவோ அல்லது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான அதன் போர் குற்றங்களை பகிரங்கமாக ஆதரிப்பதன் மூலமோ அப்பிராந்தியத்தின் அரபு முதலாளிகளிடமிருந்து அது அன்னியப்படவும் முடியாது.

ராஜ்ய சபாவில் நடந்த விவாதத்தின் போது, காங்கிரஸைச் சேர்ந்த எதிர்கட்சி தலைவர் குலாம் நபி ஆஜாத் பேசுகையில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை மாறிவிட்டதா என கேள்வி எழுப்பி, வெளியுறவுத்துறை மந்திரிக்கு சவால் விடுத்தார். சுவராஜ் பதிலளிக்கையில், “பாலஸ்தீனத்தை நோக்கிய இந்தியாவின் கொள்கையில் முற்றிலும் அங்கே எந்த மாற்றமும் இல்லை. அது முழுவதுமாக பாலஸ்தீன தரப்பை ஆதரிக்கிறது, அதேவேளையில் இஸ்ரேலுடனும் நல்லுறவுகளைப் பேணுகிறது," என்றார்.

இந்த பாரபட்சமற்ற அணுகுமுறை என்று அழைக்கப்படுவதற்குப் பின்னால், அந்த அரசாங்கம் இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டிருக்கிறது. காசாவின் நிராதரவான மக்கள் மீதான இஸ்ரேலிய யுத்த எந்திரத்தின் தாக்குதலுக்கு ஒரு பெயரளவிலான கண்டனத்தையும் கூட அது வெளியிட மறுத்தது, அல்லது அதை பாலஸ்தீன போராளிகளால் இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட வரம்புக்குட்பட்ட ராக்கெட் தாக்குதல்களோடு சமாந்தரப்படுத்தி காட்டியது, இந்த ஒரு நடவடிக்கை, இஸ்ரேலில் மற்றும் சர்வதேச அளவில் குறிப்பெடுத்துக் கொள்ளப்படும்.

முஸ்லீம்-விரோத இந்து மேலாதிக்கவாதத்தின் அடிப்படையில் அமைந்த பிஜேபி, சந்தேகத்திற்கு இடமின்றி அந்த யூத-பாதுகாப்புவாத ஆட்சியோடு ஒரு அரசியல் உறவைப் பேணுகிறது என்பதோடு, "இஸ்லாமிய பயங்கரவாதத்தின்" மீதான அதன் போரில் அதை ஒரு கூட்டாளியாகவும் கருதுகிறது. இந்த ஆண்டின் தேர்தல்களை வெல்வதற்கு முன்னதாக குஜராத் மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கையில், மோடி இஸ்ரேலுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தி கொண்டிருந்தார்.

மே மாத மத்தியில் வெளியான இன்டர்நேஷனல் பிசினஸ் டைம்ஸின் ஒரு கட்டுரை மோடியை "இஸ்ரேலினது தெற்காசியாவின் சிறந்த நண்பராக" பாராட்டி இருந்தது. அது குறிப்பிடுகையில், “மோடியின் தலைமை மற்றும் ஊக்கத்தின் கீழ் ... இஸ்ரேல் பில்லியன் கணக்கான டாலர்களை முதலீடாக குஜராத்திற்குள் பாய்ச்சி உள்ளது. குஜராத் மற்றும் இஸ்ரேல் இருதரப்பில் இருந்தும் அதிகாரிகள் வர்த்தக மற்றும் பொருளாதார தொடர்புகளை ஆழப்படுத்துவதற்காக கடந்த சில ஆண்டுகளில் ஒருவரையொருவர் சந்திக்க விஜயம் செய்துள்ளனர்," என்று குறிப்பிட்டது.

அதே நேரத்தில், மோடி அரசாங்கத்தால் மத்திய கிழக்கின் அரபு ஆட்சிகளோடு ஒரு பகிரங்கமான முறிவையும் ஏற்றுக் கொள்ள முடியாது. பாலஸ்தீன மக்களை நோக்கிய அரபு முதலாளிமார்களின் போலித்தனமான பாத்திரத்தை நன்கறிந்துள்ள நிலையில், சுவராஜ் விவாதத்தின் போது, "அவ்விரு நாடுகளுக்கும்—இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம்—இடையே பேச்சுவார்த்தைக்கான எகிப்தின் ஏற்பாட்டை ஏற்குமாறு நாம் அவற்றுக்கு கூற வேண்டும்," என்று கூறி, மத்தியஸ்தம் செய்வதற்கான எகிப்தின் ஏற்பாட்டை பிடித்துக் கொண்டார்.

இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கும் பாலஸ்தீனியர்கள் எகிப்தில் அடைக்கலம் காண்பதைத் தடுப்பதற்காக காசாவை ஒட்டியுள்ள அதன் எல்லைகளை மூடிமுத்திரையிட்டது உட்பட, ஒரு அமெரிக்க வாடிக்கையாளர் ஆட்சியாக விளங்கும் எகிப்திய இராணுவம் பகிரங்கமாக இஸ்ரேலுடன் ஒத்துழைத்துள்ளது. எகிப்திய இராணுவம் தரகு பேச்சுவார்த்தைகளை வழங்கி வருகிறதென்றால், அது இஸ்ரேலிய போர் குற்றங்களால் மத்திய கிழக்கு முழுவதிலும் ஒரு கிளர்ச்சிப் பேரலை உருவாக்கப்படுமோ என்ற அச்சத்தினால் மட்டுமே ஆகும்.

ராஜ்ய சபாவில் அந்த விவாதம் நடப்பதற்கு அனுமதித்திருந்த போதினும், பிஜேபி-தலைமையிலான அரசாங்கம் காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களைக் கண்டித்து ஒரு தீர்மானத்தை கொண்டு வர எதிர்க் கட்சிகளை அனுமதிக்கவில்லை. அதற்கான விடையிறுப்பில், காங்கிரஸூம் ஏனைய எதிர்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகளும் போலியான ஒரு போராட்டக் காட்சியை அரங்கேற்றுவதற்காக வெளிநடப்பு செய்தனர்.

புதனன்று வெளிப்படையாக அதன் உண்மை-ஸ்வரூபத்தைக் காட்டும் விதத்தில், ஒரு பாலஸ்தீன தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க மோடி அரசாங்கம் ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் கழகத்தில் உள்ள அதன் பிரதிநிதிகளுக்கு குறிப்புகளை அனுப்பியது. அந்த தீர்மானமோ, இருதரப்பிலிருக்கும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்திருந்ததோடு, ஆக்கிரமிப்பு பாலஸ்தீன பிராந்தியத்தில், அதுவும் குறிப்பாக காசாவில், மனித உரிமை மீறல்களின் மீது ஒரு சுதந்திரமான விசாரணைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

அந்த வாக்கெடுப்பு ஒரு ஸ்தாபிக்கப்பட்ட வடிவத்திலேயே நடந்தேறியது. அமெரிக்காவிடம் இருந்து மட்டுமே எதிர்ப்பு ஓட்டு வந்திருந்தது என்ற போதினும், அதன் ஐரோப்பிய மற்றும் ஆசிய கூட்டாளிகள் அந்த வாக்கெடுப்பைத் தவிர்த்திருந்தனர். ஆபிரிக்கா, மத்திய கிழக்கத்திய மற்றும் இந்தியா உட்பட ஆசிய நாடுகளின் வாக்குகளோடு அந்த தீர்மானம் நிறைவேறியது.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையை அரசாங்கம் மாற்றவில்லை என்பதற்கு ஆதாரமாக, அந்த வாக்கெடுப்பை இந்திய வெளியுறவுத்துறை விவகாரங்களுக்கான மந்திரி சுவராஜ் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த வாக்கெடுப்பில் எதிராக வாக்களித்திருந்தாலோ அல்லது அதை தவிர்த்திருந்தாலோ சந்தேகத்திற்கு இடமின்றி அது மத்திய கிழக்கிலிருந்து விமர்சனத்தைத் தூண்டிவிட்டிருக்கும். அதுபோன்றவொரு நடவடிக்கையை உடனடியாக எடுக்க அது தயாராக இல்லை என்ற அதேவேளையில், பிஜேபி அரசாங்கம் இஸ்ரேல் உடனான நெருக்கமான உறவுகளின் அடித்தளத்திற்கு தெளிவாக தயாரிப்பு செய்து வருகிறது.

Read more...

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்திருந்து சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர் கேரளாவில் கைது!

சுற்றுலா வீசாவில் இந்தியாவின் கேரளா பிரதேசத்திற்கு சென்றிருந்த 24 வயதான ஜோனாதன் போல்ட் என்ற நபரை மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாக கூறி பிரதேச போலீசார் கைது செய்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றது.

சுற்றுலா விசாவில் கேரளா சென்ற அவர், சினோஜ் என்ற மாவோயிஸ்டு தீவிரவாதியின் நினைவு நாள் கூட்டத்தில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. கேரளாவை சேர்ந்த சினோஜ் ஆந்திரா-கர்நாடகா எல்லையில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த மாதம் பலியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

அம்மாநிலத்தில் உள்ள வளப்பாடில் உள்ள சினோஜின் ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நினைவு நாள் கூட்டத்தில் ஜோனாதன் போல்ட் கலந்து கொண்டதை தெரிந்துகொண்ட போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மாவோயிஸ்டு இயக்கத்தின் சித்தாந்த இதழ்களும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிப்பதுடன் அவர் மீது விசா விதிமுறைகளை மீறியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 10ந் தேதி பெண் ஒருவருடன் கேரளா வந்தடைந்த அவர், கன்னூர் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளை சுற்றிப்பார்த்துள்ளார் என்பதுடன் பல்வேறு தகவல்களை திரட்டியுள்ளதாகவும் அச்செய்திகள் கூறுகின்றது.

Read more...

ஹட்டனில் மிகச் சிறப்பாக முஸ்லிம்கள் ஈத் பண்டிகையை கொண்டாடினர்! (படங்கள் இணைப்பு)

இன்று (29) ஹட்டன் மாநகர முஸ்லிம்கள் தங்களது ஈத் பண்டிகையை ஈத் பண்டிகைக்கான விசேட தொழுகையின் பின்னர் வெகுவிமரிசையாகக் கொண்டாடினர்.

ஹட்டன் நகரின் பிரதான ஜும்ஆப் பள்ளிவாசலில் முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் விசேட தொழுகையிலும், பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

முஸ்லிம்களின் பண்டிகையை மிகச் சிறப்பாக்க் கழித்த்தை படங்களில் காணலாம்.

(க. கிஷாந்தன்)

Read more...

ஜேவிபி தலைவரின் சாரதி கைது!

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்கவின் வாகன சாரதியை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொறுப்பற்ற வகையில் வாகனத்தை செலுத்தினார் என்ற குற்றச்சாட்டில் அவரை கைதுசெய்துள்ளதாகவும் அவரை, நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அத்திணைக்களம் அறிவித்துள்ளது.

அனுரகுமார திசாநாயக்க எம்.பி பயணித்த கெப்ரக வாகனமும் எதிரேவந்த டிப்பர் ரக வாகனமும் இரத்தினபுரி- ஹொரணை வீதியில் கிரியுல்ல எனுமிடத்தில் ஒன்றுடன் ஒன்று மோதி நேற்றுவிபத்துக்குள்ளானது இதில் அனுரகுமார திசாநாயக்க எம்.பி காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் சிறு காயமடைந்த சாரதி, இரத்தினபுரி வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Read more...

இலங்கைநெற் வாசகர்கள் அனைவருக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்!


வருக ஈகைத் திருநாளே!

திங்களொன்று நோன்பு நோற்று
தராவீஹ் தஸ்பீஹ் முறையாய்செய்து
இங்கிதமாய் சுற்றத்தொடு சேர்ந்தமர்ந்து
இனிதாய் இப்தார் செய்திட்டோமே!

அதிகாலை துயிலெழுந்து தொழுது
அன்பாய்க்கூடி ஸஹர்செய்து – பின்
கதிமிகதந்திடும் ஸுப்ஹும் தொழுது
குர்ஆன் ஓதிட்டோமே திங்களிதில்!

செய்த தவறுக்காய் தேம்பியழுது –நம்
தேகமெங்கும் சேர்ந்திட்ட பவக்கரைநீங்கிட
பெய்யும் மழையாய் அருள்தனைவேண்டி
படைத்தவனிடம் ஏந்தினோமே கை!

வாடிடும் ஏழைகட்கு வாரிவழங்கி
வல்லா னருளை மேலாய்ப்பெற்று
தேடிட சுவர்க்கம் செய்தன நல்லன
தரணியில் ரமழானை தரமாயேற்றே!

எனக்கே சொந்தமீதென்ற இறைக்கு
ஏந்தினோ முயர்வாய் அதனை-இன்று
மணந்திடும் பெருநாளீதில் – நாம்
மனங்களை இணைப்போமே ஒன்றாய்!

இல்லாமையொழித்து இனிதுமகிழ்ந்து
இனத்தொடு ஒட்டி என்றுமிருந்திட
நில்லாத நிலத்தினின் நல்லனசெய்திட
நலமேந்தி வருக ஈகைத்திருநாளே!

அறையினிலடங்கி நிற்கும் வனிதைக்கும்
அழுதுநிற்கும் விதவைக்கும் – அன்பாய்
கறையிலா ஆடவர் கிடைத்திட இன்று
கருத்துக்கினிய பெருநாளே தூதேந்திவா!

உயர்ந்தோர் தாழ்ந்தோர் பேதம்நீக்கி
உத்தம நபியின் ஸுன்னாவையேற்று
கயமைநீக்கி நற்கருமம் செய்திட
கருணைமழை யேந்திவா பெருநாளே!

- மதுராப்புர கலைமகன் பைரூஸ்

Read more...

ஏகாதியபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணைபோக வேண்டாம்! விக்கி விதிவிலக்கானவர் அல்ல!

இலங்கை மீது யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சர்வ தேச ரீதியில் இலங்கையை தனிமைப்படுத்தி நெருக்கடி யில் தள்ளிவிடுவதை இலக்காக வைத்தே ஐ.நா. சர்வதேச விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இது இலங்கைக்கு எதிரான மாபெரும் சதித்திட்டம். எனவே, அரசாங்கம் அதனை நிராகரித்து விட்டது. எனவே, இவ்வாறானதொரு குழுவிற்கு இலங்கையர்கள் எவரும் சாட்சியம் வழங்கக்கூடாது எனவும் ஐ.நா. சர்வதேச விசாரணை ஆணைக் குழுவிற்கு சாட்சியமளிப்பது இலங்கைக்கு எதிரான ஏகாதியபத்தியவாதிகளின் சதித் திட்டத்துக்கு துணைபோகும் செயலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்

அத்துடன் அதற்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் விதிவிலக்கானவர் அல்ல. எவரும் இக் குழுவிற்கு சாட்சியம் வழங்கக் கூடாது. அவ்வாறு சாட்சியம் வழங்குவோர் இலங்கைக்கு எதிரான ஏகாதிபத்திய வாதிகளின் சதித் திட்டத்திற்கு துணை போகின்றவர்கள் என்றே கருதப்படுவார்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Read more...

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் வாழ்த்துச் செய்தி!

அனைவருக்கும் இதயம் நிறைந்த நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

நோன்பு நோற்றுப் பெற்ற பயிற்சியோடு அடுத்து வரும் காலத்தை எதிர்கொள்வோமாக! முஸ்லிம் உம்மத் நாட்டிலும் உலகிலும் எதிர்கொள்ளும் சோதனை மிக்க காலத்தைக் கடந்து செல்வதற்காக ஈமான், இறையச்சம் என்பவற்றோடு தனிப்பட்ட, குடும்ப, மற்றும் சமூக வாழ்விலும் எமது பொறுப்புக்களை உணர்ந்து செயல்படுவோமாக! வாழ்வின் அனைத்து துறைகளிலும் நன்மை செய்து வாழுகின்ற ஒரு சூழலைக் கட்டியெழுப்புவோமாக! ஏனைய சமூகங்களோடு உறவுகளைப் பலப்படுத்தி இணக்கமாக வாழந்த எமது மரபுகளை தொடர்ந்தும் உறுதியோடு பேணி வருவோமாக! நாட்டிலும் சமூகத்திலும் சுபீட்சமானதொரு எதிர்காலம் மலர அர்ப்பணத்தோடு உழைப்போமாக!

ஈதுல் பித்ர் ஆகிய இந்த நன்நாளில் எங்களது நற்செயல்களுக்கான கூலியை நிரப்பமாக தந்து எமது பாதங்களை அவனது தீனில் அல்லாஹ் ஸ்தீரப்படுத்துவானாக!

மீண்டும் அனைவருக்கும் இதயம் நிறைந்த ஈதுல் பித்ர் நல்வாழ்த்துக்கள்.

உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர்
அமீர்,
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி

Read more...

Monday, July 28, 2014

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் அநுசரணையிலேயே பயங்கரவாதச் செயல்கள் நடைபெறுகின்றன...!

இந்தியாவினால் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ள நபர், இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்திலுள்ள ஒருவரினால் இயக்கப்படுபவர் என்ற தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பாக்கீர் ஹுஸைன் என்ற பெயருடைய குறித்த இலங்கையர் இந்திய உளவுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எதுஎவ்வாறாயினும், குறித்த நபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டவிடத்து இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் மூலம் வழிநடாத்தப்படுவதாகத் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பில் இந்திய உயர் அதிகாரிகள் இலங்கைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த அதிகாரி, பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவர் என்பதும், அவர் பயங்கரவாதச் செயல்களுடன் ஈடுபட்டவர் என்பதும் தெளிவாகியுள்ளதாக இந்திய ஊடகங்களும் தகவல் வெளியிட்டுள்ளன.

குறித்த உயர் அதிகாரியின் ஆலோசனையின் பேரில், பாக்கிர் ஹுஸைன் இந்தியாவின் சென்னையில் அமைந்துள்ள ஐக்கிய அமெரிக்க குடியரசின் கவுன்சிலர் காரியாலம், இந்தியாவின் பெங்களுரில் அமைந்துள்ள இஸ்ரேலிய கவுன்ஸிலர் காரியாலயம் ஆகியவற்றின் தகவல்களைச் சேர்த்துள்ளதுடன், குறித்த கவுன்சிலர் காரியாலங்களின் படங்களையும் எடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த பாகிஸ்தான் தூதுவராலய காரியாலய ஊழியர் தொடர்பில் அரச தந்திர மட்டத்திலும் தகவல்கள் பரிமாற்றப்பட்டுள்ளன எனவும், இந்தியா - இலங்கையினிடையே 2010 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட அந்நியோன்ய சட்டரீதியான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கேற்ப செயற்படுவதாகவும் அவ்வூடகங்கள் மேலும் சுட்டிக் காட்டியுள்ளன.

(அததெரண - கேஎப்)

Read more...

வடமுதலமைச்சர் விக்கி யுத்த குற்றச்சாட்டு தொடர்பில் சாட்சியமளிக்க போகின்றாராம்!

வடக்கு கிழக்கு மாகணங்களில் வசிக்காத யுத்தத்தின் உண்மை நிலையை கண்டிராத வடமுதலமைச்சர் விக்கி சாட்சியமளிப்பதன் வேடிக்கை என்ன????

யுத்த காலத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இராத வட மாகாண முதலமைச்சர், இலங்கைக்கு எதிராக யுத்த குற்றச்செயல்கள் குறித்து, ஜெனீவா ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க திட்டமிட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான யுத்த குற்றச்செயல்களை சுமத்தி, விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு தூபமிடும் நவநீதம் பிள்ளையின் குழுவிடம் சாட்சியமளிப்பதற்கு தான் எதிர்பார்ப்பதாக, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சொந்தமான வடக்கில் வெளி யாகும் உதயன் பத்திரிகையிலேயே அவருடைய கூற்று வெளியிடப்பட்டுள்ளது.

யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற சம்பவங்கள் எதனையும் தான் காணாத போதிலும், ஆணைக்குழு முன்னிலையில் தான் சாட்சியமளிக் கப்போவதாக, அவர் தெரிவித்தார். இலங்கை தொடர்பாக உண்மையான சுயாதீன மத்தியஸ்த விசாரணையொன்றை நடாத்துவதாக இருந்தால், அங்கு தகவல்களை பெற்றுக்கொள்ள வேண்டிய உண்மையான இடம், மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் வாழ்ந்த அங்குள்ள நிலைமைகளை அனுபவித்தவர்களிடம் கேட்டறிய வேண்டும்.

எனினும் இவ்வாறு வடக்கின் உண்மை நிலையை கண்டிராத, பயங்கரவாதத்திற்கு தூபமிட்டு, சர்வதேசத்திற்கு மத்தியில், மறைந்திருப்பவர்களிடம் பெற்றுக்கொள் ளும் சாட்சியங்களின் பயன் என்னவென, சர்வதேச ஆய்வாளர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

அத்துடன் பிள்ளையின் குழுவிற்கு விசாரணைகளை மேற்கொள்ள செல்ல, தெற்காசியாவின் எந்ஜதவொரு நாடும் வீசா வழங்காத நிலையில், தெற்காசிய பிராந்தியம் தவிர்ந்த வேறொரு இடத்திலிருந்து அக்குழுவிற்கு விசாரணைகளை நடாத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. எவ்வாறான சிரமங்களுக்கு மத்தியிலேனும் யுத்தத்தினால் வெற்றிகொள்ள முடியாத பயங்கரவாதிகளின் நோக்கத்தை, வேறு அரசியல் சூழ்ச்சிகள் மூலம் வென்றுகொடுப்பது, இலங்கை மற்றும் சர்வதேச பயங்கரவாத ஆதரவாளர்களின் முயற்சியாக அமைந்துள்ளது.

Read more...

ஹிருணிக்கா சொன்னால் போதைப்பொருள் விற்பனையாளர்களை உடன் பிடிப்போம்!

போதைப் பொருள் விற்பனையாளர்கள் பற்றி மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர பொலிஸிற்கு தகவல் வழங்குவாராயின் அதுதொடர்பில் பொலிஸ் செயற்படுவதற்கு ஆயத்தமாகவிருப்பதாக பொலிஸ் குறிப்பிடுகிறது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிடும்போது, கொழும்பில் போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் பற்றி மாகாண சபை உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமாயின் அவர் போதைப் பொருள் வியாபாரம் செய்பவர்களின் பெயர்களைப் பொலிஸாருக்கு வழங்கினால் மிகவும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல் பெற்றுத் தருவோர் விடயத்தில் இரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

Read more...

இனந் தெரியாத பறவை வடமராட்சியில் உள்ள வீட்டு மரமொன்றில் முட்டையிட்டுள்ளது !!(படங்கள்)

வடமராட்சி கப்புது பகுதியில்உள்ள வீடு ஒன்றின் மரத்தில் இனந்தெரியாத அழகிய பறவை ஒன்று கூடுகட்டி முட்டை யிட்டுள்ளது. இம் மரத்தின் கீழ் பறவையின் எச்சம் கிடக்கும் போது வீட்டில் உள்ளவர்கள் மரத்தை அவதா னித்த போதே இந்த இனந் தெரியாத பறவை முட்டை யிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இரவில் மட்டுமே இப் பறவை திரிவதாகவும் பகலில் கூட்டில் அடைகாத்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.









Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com