Monday, June 30, 2014

எமது நாட்டில் இரண்டே இரண்டு சண்டியர்களே இருந்தனர்!

எனக்கு தெரிந்த வகையில் எமது நாட்டில் இரண்டே இரண்டு சண்டியர்களே இருந்தனர். அதிலொருவர் வேலுப் பிள்ளை பிரபாகரன். மற்றொருவர் ரோஹன விஜேவீர. அதற்கு அப்பால் சண்டியன்கள் இந்த நாட்டில் இல்லை என மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இன்று காவியுடையணிந்து கொண்டு சண்டியர்கள் வருகின்றனர். சேறுபூசி சண்டித்தனம் காட்டுவோர், சண்டியர்கள் இல்லை எனவும் சண்டியன் யார் என்பதை நான் நன்கறிவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரன் ஒரு சண்டியன். அவர் என்னை கொல்வதற்கு முயன்றார். எனது உடலில் ஒரு பக்கத்தில் இரும்பு துகள்கள் இருக்கின்றன. சண்டியன் மரணித்துவிட்டான். நான் இருக்கின்றேன். விஜேயவீர என்ற சண்டியனும் என்னை கொல்வதற்கு முயன்றார். அதனால் எனது உடலின் மற்றொரு பக்கத்தில் இரும்பு துகள்கள் இருக்கின்றன. சண்டியன் இறந்துவிட்டான். நான் உயிரோடு இருக்கின்றேன்.

தங்காலை, கலமெட்டி மீனவர் துறைமுகத்திற்கு இன்று அடிக்கல்லை நாட்டிவைத்ததன் பின்னர் அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மீன்பிடித்துறை அமைச்சர் ராஜித்த சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Read more...

நவி பிள்ளை நியமித்த ஆணைக்குழுவின் சுயரூபம் அம்பலம்!

சர்வதேச உலகால் ஏற்றுக்கொள்ளப்பட்டாதவர்களையே பிள்ளை நியமித்துள்ளார்!

இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம் பெற்றதா என்பது தொடர்பில் கண்டறிவதற்காக, பிள்ளை நியமித்த ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள், உலகில் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் அல்லவென, சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

அமெரிக்கா உட்பட மேற்குலக நாடுகளின் உதவியுடன் இலங்கையில் போர்க்குற்றம் நிகழ்ந்துள்ளதாக கூறி விசாரணைகளை நடாத்துவதற்கென, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை நியமித்த குழுவின் அங்கத்தவர்களின் பெயர் விபரம்; வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் இவர், இரு அங்கத்தவர்களை நியமித்ததுடன், அவர்கள் இருவருக்கும் சர்வதேச ரீதியில் பாரிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவர்கள் இருவரும் சர்வதேச புலம்பெயர் தமிழர் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுபவர்கள் என, தகவல்கள் அம்பலமாகின.

ஐக்கிய நாடுகள் பொது செயலாளர் பேங்கிமூன், இந்த நியமனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தமையினால், இவர்கள் இருவரதும் பெயர்களை நீக்க, நவி பிள்ளை நடவடிக்கை எடுத்ததாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புதிதாக 3 அங்கத்தவர்களை கொண்ட குழுவினை நியமிக்க, அதனை தொடர்ந்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நவநீதம்பிள்ளை இலங்கைக்கு எதிராக நியமித்துள்ள புதிய குழுவில், பின்லாந்தின் மார்டி அத்திசாரி, நியூசிலாந்தின் சில்வியா கார்டிரைட், பாகிஸ்தானை சேர்ந்த அஸ்மா ஜஹன்கீர் இடம்பெற்றுள்ளனர். மார்டி அத்திசாரி, பின்லாந்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி என்பதுடன், இவர் கொசோவோ சமாதான திட்டத்தின் அநுசரணையாளராகவும், செயற்பட்டுள்ளார்.

இவரது தலையீடுகள் காரணமாக, கொசோவோ, சேர்பியாவிலிருந்து பிரிக்கப்பட்டதுடன், அங்கு சுயாதீன இராச்சியம் பிரகடனப்படுத்தப்பட்டது. இதற்காக இவர் கொசோவோ பிரிவினைவாதிகள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு 40 மில்லியன் யூரோவை இலஞ்சமாக வழங்கியுள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பின்லாந்தின் எஸ்.ரி.ரி. செய்தி முகவர் நிறுவனம், 2007ம் ஆண்டில் இது தொடர்பான தகவல்களை அம்பலப்படுத்தியது.

அத்துடன் பல மில்லியன் யூரோவை இலஞ்சமாக பெற்று பிரிவினைவாதத்திற்கு துணைபோன நபர் ஒருவர், இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதை கண்டறிய நியமிக்கப்பட்டதால், உண்மையான பெறுபேறுகளை பெற முடியுமா என. சர்வதேச விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, பிள்ளையின் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள ஏனைய அங்கத்தவர்ளுள் ஒருவரான பாகிஸ்தானின் அஸ்மா ஜஹான்கீர், முஸ்லிம் என்பதுடன், அளுத்கம பேருவளை சம்பவங்களின் பின்னரே இவர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளதாக, தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்த செயற்பாடுகளை பயன்படுத்தி, இனவாத, மதவாத உணர்வினை தூண்டி, சர்வதேச விசாரணைகளை வேறு திசைக்கு இட்டுச்செல்வதே, நவி. பிள்ளையின் நோக்கமா என, சர்வதேச விமர்சககள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் நவநீதம் பிள்ளையின் இலங்கைக்கு எதிரான விசாரணைகளில் உண்மையான பயனை எதிர்பார்க்க முடியுமா என, சர்வதேச ரீதியில் பேசப்படுகிறது.

...............................

Read more...

பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தருக்கு கத்திக்குத்து!

பொகவந்தலாவ பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தியுள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

சந்தேகத்தின் பேரில் கைது செய்த மேற்படிநபர்க்கு உணவு வழங்குவதற்காக பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் சமயலறைப் பகுதிக்கு கொண்டு செல்லும் போது சமயலறைப் பகுதியில் இருந்த கத்தியை எடுத்து தன்னை கைது செய்த பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தியுள்ளார்.

மேற்படி நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என பொகவந்தலாவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் 30.06.2014 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கத்தி குத்துக்கு இழக்கான பொலிஸ் உத்தியோகத்தர் (சுரேஷ்) பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

(க.கிஷாந்தன்)

Read more...

ஆளும் கட்சியிலிருந்து 30 இற்கும் மேற்பட்டோர் ஐதேகவில் இணையத் தீர்மானம்!

அரசாங்கத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களில் 30 இற்கும் மேற்பட்டோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டார தெரிவிக்கின்றார்.

அநுராதபுரவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர், ஆளும் கட்சியில் தற்போது பனிப்போர் நடந்துவருவதாகவும் வெகுவிரைவில் அது பற்றியெரியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அடுத்து வரும் எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெறுவதற்காக ஆவன செய்துள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்தார்.

(கேஎப்)

Read more...

ஞானசாரர் அமெரிக்காவினுள் உட்பிரவேசிக்க தடை விதிக்கிறது அமெரிக்கா!

அமெரிக்காவினுள் நுழைவதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டிருந்த ஐந்துவருடத்திற்காக “விசா” தடைசெய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா அரச திணைக்களமொன்றினால் ஞானசாரரின் விசா தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், இவ்விடயம் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் மூலம் அவரும் இத்தகவல் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

“எனது அமெரிக்க விசா தற்போது பிரச்சினையாக இருக்கிறது. அதன்மூலம் அமெரிக்காவின் ஜனநாயகம் பற்றி தெரிந்துகொள்ள முடியும். சிங்கள பௌத்தர்கள் இலங்கைக்கு பெரும்பான்மையாக இருக்கலாம். ஆனால் சர்வதேசத்திற்கு சிறுபான்மை இனம். அவ்வாறான ஒரு இனத்திற்காக குரல் கொடுக்கும் எங்களுக்கு அமெரிக்க விசா தடைசெய்யப்பட்டுள்ளது” என இதுதொடர்பில் ஞானசாரர் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

Read more...

உக்ரேன் தொடர்பாக அமெரிக்காவும் நேட்டோவும் ரஷ்யாவிற்கு புதிய இறுதி எச்சரிக்கை விடுக்கின்றன. By Bill Van Auken

வியாழனன்று பாரீசில் உரையாற்றுகையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி ரஷ்ய அரசாங்கத்திற்கு ஒரு புதிய இறுதி எச்சரிக்கை விடுத்தார், மேற்கால் கியேவ்வில் நிறுவப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக கிழக்கு உக்ரேனிய கிளர்ச்சிகளை முடிவுக்கு கொண்டு வர செயல்பட்டு கொண்டிருக்கிறது என்பதை அது "சில மணி நேரங்களுக்குள்" எடுத்துக்காட்ட வேண்டும் அல்லது விளைவுகளை முகங்கொடுக்க வேண்டுமென அவர் எச்சரித்தார்.

“அவர்கள் பிரிவினைவாதிகளை நிராயுதபாணியாக்குவதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அடுத்த சில மணிநேரங்களில் எடுத்துக்காட்டுவதென்பது ரஷ்யாவிற்கு இக்கட்டாக இருக்குமென்பதில் நாங்கள் முழுமையாக உடன்படுகிறோம்,” என்று தெரிவித்த கெர்ரி தொடர்ந்து கூறுகையில், “ஐரோப்பிய சமூகம் அவை தடை விதிக்கவிருக்கின்ற அம்சங்கள் குறித்து விவாதிக்க ஒன்று கூடுகின்றன. அவை தயாராக இருக்க வேண்டுமென்பதில் நாங்கள் அனைவரும் உடன்பட்டு இருக்கிறோம்,” என்றார்.

புருசெல்ஸில் வியாழனன்று நேட்டோ வெளியுறவுத்துறை மந்திரிகளின் கூட்டம் நிறைவடைந்திருக்கும் சூழலில் மற்றும் பெல்ஜியம் நகரில் யெப்ரெஸில் உள்ள முதலாம் உலக யுத்தக்களத்தில் இன்று ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு தொடங்க இருக்கின்ற நிலையில் கெர்ரியின் இந்த எச்சரிக்கை வெளியானது.

தெளிவாக ஏதோவொரு விதத்தில் வேறுபட்ட நிகழ்ச்சிநிரலில் செயல்பட்டு வந்த பிரெஞ்ச் வெளியுறவுத்துறை மந்திரி லோரன்ட் ஃபாபியுஸோடு சேர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் அவரது கருத்துக்களை கால அட்டவணையைக் குறிப்பிடாமல் தெரிவித்தார். அதற்கு ஒருநாள் முன்னதாக, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி பெட்ரோ போறோஷென்கோ மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் பங்குபெற்ற நான்கு முனை தொலைபேசி கலந்துரையாடலில் புட்டின் உறுதியளித்த பொறுப்புறுதிகள் மீதும், உக்ரேனில் தீவிரத்தன்மை குறைந்திருப்பதாகவும் (de-escalation) ஃபாபியுஸ் பேசினார். “வரவிருக்கும் நாட்களில்" ரஷ்யாவின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமென்று பிரான்ஸ் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

வாஷிங்டன் வெளிப்படையாகவே ரஷ்யாவுடன் மோதலை வளர்க்க முனைந்து வருகின்ற நிலையில், மேற்கு ஐரோப்பிய அதிகாரங்களோ அதுபோன்றவொரு தீவிரப்பாட்டிற்கு குறைவாகவே உற்சாகம் காட்டி வருகின்றன. இதற்கிடையில், ஒரு பெரும் மனிதாபிமான நெருக்கடிக்குள் திரும்பி வரும் உக்ரேனில் ஏதேனும் "தீவிரதன்மை குறைந்திருப்பதற்கான" (de-escalation) நிலைமை இருக்கிறதா என்பது தெளிவாக இல்லை, மேற்கத்திய அரசாங்கங்களும் ஊடகங்களும் இந்த விபரத்தைப் பெரிதும் புறக்கணித்துள்ளன.

கடந்த வாரம் போறோஷென்கோவினால் அறிவிக்கப்பட்ட போர்நிறுத்தம் என்றழைக்கப்படுவது நடைமுறையில், கியேவ் ஆட்சியிலிருந்து தன்னைத்தானே சுதந்திரமாக அறிவித்துள்ள டோனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களின் படைகள், அவற்றின் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு அல்லது "அழித்துவிடுவதற்கு" ஒரு இறுதிகெடுவாக செயற்பட்டுள்ளது.

போர்நிறுத்தம் என்றழைக்கப்பட்ட நாட்கள் முழுவதும் ஸ்லாவ்யான்ஸ்க்கிலும் மற்றும் ஏனைய மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளிலும் விமான தாக்குதல்கள் மற்றும் பீரங்கி குண்டு தாக்குல்கள் உட்பட தொடர்ந்து தாக்குதல் நடந்ததாக கிழக்கு உக்ரேனில் உள்ள பிரிவினைவாதிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் கியேவ் ஆட்சியும் ஒரு இராணுவ ஹெலிகாப்டர் தகர்க்கப்பட்டதில் ஒன்பது சிப்பாய்கள் உட்பட துருப்புகளை இழந்துள்ளதாக அறிவித்துள்ளது. அந்த ஹெலிகாப்டரை தரையிறக்க பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ரஷ்யாவிலிருந்து வழங்கப்பட்டு இருந்ததாக—முற்றிலும் எந்தவொரு ஆதாரமும் இல்லாமல்—புதனன்று கியேவ் குற்றஞ்சாட்டியது, அந்த குற்றச்சாட்டை மாஸ்கோ மறுத்துள்ளது.

கிழக்கில் நிலவும் அதிகளவிலான பதட்டமான நிலைமைகளும், வெள்ளியன்று உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வரவிருக்கின்ற போர்நிறுத்தத்திற்குப் பின்னர் அமெரிக்க ஆதரவிலான அரசாங்கத்தின் ஒரு வன்முறையான தீவிர இராணுவ தாக்குதலைக் கொண்டு வருமென்ற அச்சமும் ரஷ்ய எல்லையை நோக்கி தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

“அங்கே ஸ்லாவ்யான்ஸ்க்கில் இன்னமும் நிறைய மக்கள்—தாய்மார்களும், குழந்தைகளும், முதியோர்களும் இருக்கிறார்கள்,” என்று ஸ்லாவ்யான்ஸ்க்கில் சேவையளித்து வரும் ஒரு சுய ஆர்வலர் ரஷ்யாவின் RIA நோவோஸ்டி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார். “இரண்டு மாதங்களுக்கு மேலாக அவர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் பணமில்லாமல் இருக்கிறார்கள். அந்நகரம் குடிநீரோ அல்லது மின்சாரமோ இல்லாமல் விடப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் எரிவாயு கிடையாது. விரைவிலேயே பஞ்சம் ஏற்படக்கூடும். மக்களை அங்கிருந்து வெளியேற்றி ஆக வேண்டும்,” என்று தெரிவித்தார்.

நகரை விட்டு வெளியேற முயலும் குடும்பங்களை சோதனை சாவடிகளில் இருக்கும் தேசிய பாதுகாப்பு படையின் சிப்பாய்கள் திருப்பி அனுப்பி வருவதாக ஸ்லாவ்யான்ஸ்க்கில் வசிப்பவர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த தேசிய பாதுகாப்பு படையோ, கடந்த பெப்ரவரியில் உக்ரேனின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சை வெளியேற்றிய மேற்கத்திய ஆதரவிலான அந்த ஆட்சி கவிழ்ப்பு சதியை முன்னெடுத்த Right Sector மற்றும் ஏனைய நவ-பாசிச மற்றும் அதிதீவிர தேசியவாத உட்கூறுகளின் அங்கத்தவர்களால் பெரிதும் நிரப்பப்பட்டதாகும்.

எவ்வாறிருந்த போதினும் அசோசியேடெட் பிரஸ் குறிப்பிட்டது, “தங்கள் உடைமைகள் நிரம்பிய கார்களில் ஆயிரக் கணக்கான உக்ரேனியர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய கிழக்கு எல்லையில் வியாழனன்று அணிவகுத்து நின்றனர், அவர்களில் சிலர் தங்களின் அரசாங்கத்தால் தாங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டதாக கூறியதோடு, மீண்டும் ஒருபோதும் திரும்ப போவதில்லை என்றும்" தெரிவித்தார்கள். சண்டை தொடங்கியதில் இருந்து தஞ்சம் கோரி 90,000 உக்ரேனியர்கள் எல்லையைக் கடந்து வந்திருப்பதாக ரஷ்ய புலம்பெயர்வு சேவை தெரிவிக்கிறது.

போர்நிறுத்தம் என்றழைக்கப்படுவதை நீட்டிப்பதன் சாத்தியக்கூறு மீது உக்ரேனிய ஆட்சி, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கும் மற்றும் கிளர்ச்சியாளர்களின் தலைவர்களுக்கும் இடையே இன்று பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளன.

புதனன்று நேட்டோ மந்திரிகளின் மாநாடு உக்ரேனிய ஆட்சிக்கு கூடுதல் இராணுவ ஆதரவு பொதியை வழங்க ஒப்புதல் வழங்கியது. அதில் சரக்கு கையாளுகை, படை மற்றும் கட்டுப்பாடு மற்றும் இணையவழி பாதுகாப்பு போன்ற துறைகளில் உதவிகள் உள்ளடங்கி இருக்குமென கூறப்பட்டது. “அதன் பாதுகாப்பு மற்றும் இராணுவ துறையின் மறுகட்டுமானம் குறித்த ஒரு தெளிவான கண்ணோட்டத்தையும், அந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான ஒரு தெளிவான மூலோபாயத்தையும்" அது கொண்டிருப்பதாக அறிவித்து, பொது செயலர் ஆண்டர்ஸ் போக் ராஸ்முஸ்சென் கியேவிற்கு வரையறையற்ற ஆதரவைத் தெரிவித்தார்.

அதன் பங்கிற்கு ரஷ்யா, நேட்டோவின் நகர்வை கூடுதல் ஆத்திரமூட்டலாக குற்றஞ்சாட்டியது. “அது உக்ரேனின் இராணுவ சக்தியை, நமக்கு தெரியும், அந்நாட்டின் தென்கிழக்கில் வெகுசனங்களுக்கு எதிராக பயன்படுத்தி வருகின்ற நிலையில்" நேட்டோ ஒரு "ஆத்திரமூட்டும் போக்கை" ஏற்றிருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் மரியா ஜகாரோவா வியாழனன்று தெரிவித்தார். “உக்ரேனிய சம்பவங்களைக் சாக்காக வைத்து, [அவர்கள்] ரஷ்ய எல்லைக்கு அருகில் இராணுவ-அரசியல் பதட்டங்களைத் தீவிரப்படுத்த அழுத்தம் அளித்து வருகிறார்கள்,” என்று அப்பெண்மணி குறிப்பிட்டார்.

அந்த மோதலைத் தணிக்க ரஷ்ய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரஷ்ய இன மக்களின் பாதுகாப்பிற்காக கிழக்கு உக்ரேனில் தலையீடு செய்வதற்கான அதிகாரத்தை புட்டினுக்கு அளித்து மார்ச்சில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை புதனன்று ரத்து செய்ததும் அதில் உள்ளடங்கும். புட்டின் அரசாங்கம் போறோஷென்கோவை உக்ரேனிய ஜனாதிபதியாக அங்கீகரித்து, துருப்புகளையும் எல்லையிலிருந்து பின்னுக்கு நகர்த்தி இருப்பதோடு, ஒரு சமாதான திட்டம் என்றழைக்கப்படுவதன் மீது அவரோடு பேச்சுவார்த்தைகளையும் நடத்தியது. மாஸ்கோ பணிந்து செல்வதானது பெரிதும் அந்நாட்டின் பில்லினிய செல்வந்த தட்டின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கி திரும்பியதாகும், இவர்களின் செல்வம் மிக நெருக்கமாக மேற்கோடு பிணைந்துள்ளது. ஆனால், வாஷிங்டனோ மாஸ்கோவுடனான ஒரு மோதல் கொள்கையிலிருந்து—மற்றும் அதற்கு எதிராக இராணுவ அழுத்தத்தை அளிப்பதிலிருந்து—திரும்புவதற்கு எந்த அறிகுறியும் காட்டவில்லை.

வாஷிங்டனுக்கு சாதாகமாக அதன் மீது "எந்ததுறையில் தடைகளை விதிப்பது" என்ற விதமான ஒரு முடிவை ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாடு தீர்மானிப்பதற்கு சாத்தியமில்லை என்பதாக தெரிகிறது, ஏனெனில் வாஷிங்டன் எரிபொருள், இராணுவம் மற்றும் நிதி போன்ற ரஷ்ய பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் இலக்கில் வைத்திருக்கக்கூடும். அமெரிக்கா எந்தளவிற்கு ரஷ்யாவுடன் வர்த்தகங்களைக் கொண்டிருக்கிறதோ அதை விட சுமார் 12 மடங்கு அதிகமான வர்த்தக உறவுகளை ஐரோப்பிய ஒன்றியம் அதனோடு வைத்திருக்கிறது, மேலும் அதன் எரிவாயு தேவைகளில் 30 சதவீதத்திற்கு ரஷ்யாவை சார்ந்துள்ளது. ரஷ்ய பொருளாதாரத்திற்கு எதிரான எந்தவொரு தீவிர நடவடிக்கையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சொந்த பொருளாதாரங்களை ஆழமான நெருக்கடிக்குள் கொண்டு செல்லும்.

“உலகளாவிய சந்தைகளைத் தொந்தரவுக்கு உள்ளாக்குமென" அஞ்சி வாஷிங்டனே கூட "ஈரானிய பாணியிலான தடைகளை" நிராகரித்திருப்பதாக, அமெரிக்க அதிகாரிகளை மேற்கோளிட்டு காட்டி நியூ யோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. வியாழனன்று இலண்டனின் பைனான்சியல் டைம்ஸ் அதற்கு கிடைத்த வரைவு ஆவணங்களின் அடித்தளத்தில் குறிப்பிடுகையில், வரையறுக்கப்படாத "இலக்கில் வைக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு" உக்ரேனிய சம்பவங்கள் உகந்ததாக இருந்தால் அவற்றை மாஸ்கோ முகங்கொடுக்க வேண்டியதிருக்கும் என்று அதை எச்சரிக்க மட்டுமே ஐரோப்பிய ஒன்றியம் தயாராகி வருகிறது என்று குறிப்பிட்டது.

அங்கே பரிந்துரைக்கப்பட்ட தடைகளின் மீது அமெரிக்க பெருநிறுவன மற்றும் நிதியியல் ஸ்தாபகத்திற்கு உள்ளேயும் அதிருப்தி நிலவுகிறது. “பல தரப்பட்ட தடைகள் அமெரிக்க நலன்களைப் பாதித்திருப்பதை வரலாறு காட்டுவதால்" மற்றும் "அமெரிக்க உற்பத்தியாளர்களை பாதிப்பதோடு, அமெரிக்க வேலைகளின் செலவைக் கூட்டுமென்பதால்" அவற்றிற்கு எதிராக எச்சரித்து அமெரிக்க வர்த்தக அமைப்பும், தேசிய உற்பத்தியாளர் கூட்டமைப்பும் அமெரிக்க பத்திரிகைகளில் ஒரு கூட்டு பத்திரிகை விளம்பரங்களை அளித்தன.

ரஷ்யாவை இலாபங்களுக்கான ஒரு பிரதான ஆதாரவளமாக காணும், குறிப்பாக மிகப் பெரிய எரிசக்தித்துறை குழுமங்கள், கவலை கொண்டுள்ளன. ஒபாமா நிர்வாகம் ஒருதலைபட்சமாக தடைகளை விதித்தால், எக்ஸோன் (Exxon) மற்றும் ஹலிபர்டன் (Halliburton) போன்ற நிறுவனங்கள் டோட்டல் மற்றும் ஸ்கூலும்பெர்ஜெர் (Schlumberger) போன்ற ஐரோப்பிய போட்டி நிறுவனங்களிடம் ஆதாயமான ஒப்பந்தங்களை இழக்க வேண்டியதிருக்கும்.

எவ்வாறிருந்த போதினும் யுரேஷியாவில் மேலாதிக்கத்தைப் பெறுவதற்கான அதன் உந்துதலுக்கு ரஷ்யாவை ஒரு முக்கிய தடையாக வாஷிங்டன் கருதுவதால் அதனோடு மோதலுக்கு அழுத்தமளிக்க அமெரிக்க ஆளும் அரசியல் ஸ்தாபகம் தயாராகி உள்ளது என்பதற்கு அங்கே அறிகுறிகள் உள்ளன.

“நம்முடைய வெளியுறவு கொள்கை நலன்கள் தனிப்பட்ட வர்த்தக நலன்களைப் பாதிக்கும் காலங்கள் இருந்திருக்கின்றன, இப்போது அவ்வாறான ஒரு காலப்பகுதி நிலவுகிறது,” என்று வங்கியியல் மற்றும் வெளியுறவுத்துறை கமிட்டிக்கான டென்னஸியின் குடியரசு கட்சி செனட்டர் பாப் கோர்கெர், புளூம்பேர்க் செய்திகளுக்குத் தெரிவித்தார்.

இன்றைய ஐரோப்பிய ஒன்றிய உச்சமாநாட்டினோடு சேர்ந்து, உக்ரேனிய ஆட்சியானது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உக்ரேனுக்கு இடையிலான ஒரு கூட்டு உடன்படிக்கையின் பொருளாதார பகுதியில் கையெழுத்திட உள்ளது. அந்த உடன்படிக்கையானது உக்ரேனிய பொருட்களுக்கு மேற்கு ஐரோப்பாவில் நடைமுறை அளவில் சந்தையே இல்லை என்ற நிலைமைகளின் கீழ் மேற்கு ஐரோப்பாவிலிருந்து பண்டங்களை உக்ரேனிய சந்தைக்குள் திறந்துவிட, பெரிதும் ஒரு ஒருதரப்பு சுதந்திர வர்த்தக மண்டலத்தை உருவாக்கும்.

அதுபோன்றவொரு உடன்படிக்கை சமூக கொந்தளிப்பைக் கட்டவிழ்த்துவிடுமென அஞ்சிய யானுகோவிச் அதுபோன்றவொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பின்வாங்கியதே, அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் ஒத்து ஊதப்பட்ட மற்றும் பாசிசவாதிகளால் முன்னெடுக்கப்பட்டதான ஆட்சி கவிழ்ப்பு சதியால் அவர் அதிகாரத்திலிருந்து வெளியேற காரணமாக இருந்தது.

Read more...

தற்கொலை வாழ்க்கையின் முடிவல்ல?

மலையக சிறுவர்கள் மத்தியிலும், பெரியவர்கள் மத்தியி லும் தற்கொலை முயற்சிகள், உயிரிழப்பு போன்ற சம்ப வங்கள் அண்மைக்காலமாக ஆக்கிரமித்துவருகின்றது. குடு ம்பத்தில் சிலசில முரண்பாடுகளாலும்,குடும்ப அங்கத் தினர்கள் மத்தியில் பரஸ்பர உறவின்மையாலும் இவ் வாரான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை பொலிஸ் விசாரனைகள் மூலம் தெரியவருகின்றது. கடந்த ஜனவரி முதல் ஜீன் மாதம் வரை சில சம்பவங்களை விபரிக்கலாம்.

டயகம பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்டபகுதியில் 17 வயதுமதிக்கதக்க யுவதி ஒருவர் கொழும்பில் தொழில் செய்த வீடொன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. அக்கரப்பத்தனை பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டம் ஒன்றில் தந்தையும், மகனும் வீட்டில் தூக்கிட்டு பரிதாபகரமாக நிலையில் உயிரிழந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பணை தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டமை அப்பிரதேச மக்களையும் பாடசாலை மாணவர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொகவந்தலாவை பிரதேசபொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோட்டமொன்றில் 04 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு இறந்தமை சுட்டிக்காட்டவேண்டிய அதேவேளை பாடசாலை மாணவி ஒருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டமையும் சுட்டிக்காட்டலாம்.

இது இவ்வாறு இருக்கையில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சிக்கும் செயற் பாடுகள் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்றது. டுயகம வைத்தியசாலைக்கு அண்மித்த தோட்டபகுதியில் யுவதி ஒருவர் அதிகமான பெனடோல் வில்லைகளை குடித்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் இடம் பெற்றுள்ளது. அக்கரப்பத்தனை வைத்திய சாலையை அண்மித்த பகுதியில் கடந்தமாதம் மூன்று சம்பவங்கள் இதேபோன்று இடம்பெற்றுள்ளது. 13 வயதுடைய சிறுவர் ஒருவர் விசமருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்னும் இரு சிறுவயது சிறுமிகள் தூக்க வில்லைகளையும், பெனடோல் வில்லைகளையும் குடித்து அனுமதிக்ப்பட்டதோடு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு இட மாற்றம் செய்யப்பட்டது.

தற்போது இவ்வாறான சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கப்படுவதால் மலையக சமூகம் பாரியஅழிவை எதிர்நோக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் இருந்து இவர்களை காப்பாற்றும் பொருட்டு விழிப்புணர்பு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் குடும்பத்தில் உள்ளவர்களின் மத்தியில் மாலைநேரங்களில் தொலைகாட்சி தொடர்களை பார்வையிடுவதால் ஏற்படும் விளைவுகளின் விபரீதங்களே இதற்குகாரணமாக அமைகின்றது. அத்தோடு குடும்பங்களில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுகளின்போது தகாத வார்தைகளை பெற்றோர்கள் உபயோகிக்கும் போது அதிகமான சிறுவர்கள் தற்கொலை செய்துகொள்வதாவும், விசமருந்திசாவதாகவும், தூக்கிட்டுசாவதாகவும் பகிரங்கமாக சிறுவர்கள் தங்களது கோபங்களை வெளிப்படுத்துகின்றனர். ஆதனை சிலர் பின்பற்று வோர்களின் அதிகமானோர் இறப்பை நாடுகின்றனர். எனவே எமது சமூகத்தில் இவ்வாறான சிந்தனை உள்ளவர்களை விடுவிக்கும் வகையில் உளவியல் தொடர்பான பயிற்சிகளை தொடர்சியாக வழங்கவேண்டிய நிலைமை இருப்பதால் எமது சமூகத்தின் மேல் அக்கறைகொண்டவர்கள் சமூகத்தின் விழிர்ப்புக்காக செயல்படுவது காலத்தின் தேவையாகும். இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கான காரணங்கள் என்ன என்பதினை சமூகசேவையாளரும், சமாதான நீதவானுமாகிய திரு ஐ.கிருஸ்ணராஜா அவர்களை வினாவிய போது:

இன்று மாணவர்கள் மத்தியில் முழுமையாக கல்வியை நோக்காக கருதுவது அவர்களின் கட்டாயதேவையாக இருக்கின்றது. பெற்றோர்களுக்கும், சிறுவர்களுக் கிடையில் நல்ல பரஸ்பர உறவோடு நண்பர்களைபோல் பிள்ளைகளின் மத்தியில் பழகுவதன் ஊடாக ஒளிவு மறைவற்ற கருத்து பரிமாற்றங்கள் இடம்பெறும். இதனூடாக தற்கொலைகளை குறைப்பதற்கு ஒருகாரணமாக அமையும், சிறார்கள் மத்தியில் தேவையற்ற வார்த்தை பிரயோகங்களை தவிர்த்துக் கொள்வது மிகதேவையான ஒருவிடயமாகும். பெரியோர்கள், மற்றும் சமூகத்தினர் இன்று ஏதோ ஒருவகையில் சிறுவர்களின் தீயசெயல்களுக்கு காரணமாக அமைகின்றார்கள். பெரியோர்கள் மத்தியில் குடும்பத்தில் ஏற்படும் சிறுசிறு சச்சரவுக்காகசவுதான் அதற்கான தீர்வாக அமையும் என்று கருதுகின்றார்கள்.

ஒருவர் இறந்தால் அவரோடு முடிவதில்லை, அவருடைய பிள்ளைகள், மனைவி, உறவினர்கள் உட்பட ஒரு சமூகமே பாதிக்கப்படுகின்றது. இவ்வாறான நிலைக்கு சமய விழுமியங்களுடன் ஒன்றிணைந்து செயல்படாமையும் காரணமாகும். எதிர்காலத்தில் பிரச்சனைகளுக்கு மரணம் தான் தீர்வு என்று எண்ணாமல் வாழ்க்கையில் பலசவால்களை சந்திக்க கூடிய நபர்களாக உருவெடுப்பது ஒவ்வொரு தனிமனிதனின் சிந்தனை ரீதியாகமாற்றம் பெறவேண்டும். ஏன இவர் கூறினார்.

(க.கிஷாந்தன்) ...............................

Read more...

கோத்தாவின் தீர்மானம் கண்டு மகிழ்வடைகிறது முஸ்லிம் கவுன்ஸில்!

இன, மதவாத பிரச்சினைகளை கிளப்பிவரும் இணைத்தளங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ அறிவித்துள்ள அறிக்கை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.

பாதுகாப்புச் செயலாளரின் இந்தத் தீர்மானம் தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. அதில், இந்தத் தீர்மானது மிகவும் தேவைப்பாடானது என்றும் இத்தீர்மானத்தை எடுத்த்து தொடர்பில் பாதுகாப்புச் செயலாளருக்கு நன்றியைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை மக்களுக்கு மட்டுமன்றி சர்வதேசத்திற்கே இது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் எனச் குறிப்பிட்டுள்ள முஸ்லிம் கவுன்ஸில், இதற்கு முன்னர் இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக் காட்டியுள்ளது.

எதுஎவ்வாறாயினும், சமூக இணையத்தளங்களுக்கு மட்டுமன்றி ஏனைய ஊடகங்களுக்கும், பொதுக்கூட்டங்களுக்கும் இந்தத் தீர்மானத்தைச் செயற்படுத்துமாறும் முஸ்லிம் கவுன்ஸில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை கேட்டுக் கொண்டுள்ளது.

(கேஎப்)

Read more...

அளுத்கம தாக்குதலில் ஈடுபட்ட குண்டர்களை எங்களுக்குத் தெரியும்! - ரணில்

ஸ்ரீகொத்த தாக்குதல் உள்ளிட்ட இன்னும் பல்வேறு தாக்குதல்களுடன் சம்பந்தப்பட்ட குண்டர்களே அளுத்கம மற்றும் பேருவலை தாக்குதலுக்கும் சம்பந்தப்பட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.

தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் தற்போது இனங்காணப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிடுகின்ற எதிர்க்கட்சித் தலைவர், இதன்பின்னர் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்படுவதற்கு இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் தெளிவுறுத்தினார்.

தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பேருவலை மற்றும் அளுத்கம பகுதியைப் பார்வையிடுவதற்காகச் சென்றிருந்த வேளையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற் கண்டவாறு தெளிவுறுத்தியுள்ளார்.

அளுத்கம, பேருவலை மற்றும் பாலித்த தெவரப்பெரும தாக்குதலுக்கு உள்ளானமை பற்றி தான் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

Read more...

Sunday, June 29, 2014

துப்பாக்கி ஒன்றினைக் கொள்வனவு செய்யப்போகின்றாராம் அனந்தி! பொதுமக்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கவா இந்த நாடகம்??

தனக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நீக்கப் பட்டிருப்பதைத் தொடர்ந்து தனது பாதுகாப்பிற்காக துப் பாக்கி ஒன்றினைக் கொள்வனவு செய்யவுள்ளதாக வடக்கு மாகாண உறுப்பினர் அனந்தி சசிதரன் மாகாண சபை அமர்வில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் உறுப்பினர் அனந்தி தனக்கு எவரால் ஆபத்து ஏற்படுமென வெளிப் படையாகத் தெரிவிக்க வேண்டு மெனவும், வடக்கில் படையினரை வெளி யேறுமாறு கோரிவரும் அவர் எவ்வாறு பொலிஸாரின் பாதுகாப்பைக் கோருவார் எனவும் யாழ் மக்கள் கேள்வியெழுப் பியுள்ளனர்.

தேர்தலின்போது உறுதியளித்தவாறு மக்களுக்கு எந்தவிதமான சேவையையும் செய்யாது, கடந்த நான்கு வருடங்களாக மக்கள் பணியாற்றி வந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் குழப்பியமையால் பொதுமக்களிடமிருந்து தங்களைப் பாதுகாக்கவா இவர்கள் பொலிஸ் பாதுகாப்பினைக் கோருகிறார்கள் எனவும் மக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

எமது மக்கள், எமது பிரதேசம், எமது மாகாண சபை, எமது ஆட்சி எனக் கூறிவரும் தமிழ்க் கூட்டமைப்பின் வடமாகாண சபையினர் பாதுகாப்பிற்கு மட்டும் பொலிஸாரை அழைப்பது ஏன் எனவும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தாம் மிகுந்த அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில், அரசியல் பணியினை தொடர்ந்து கொண்டிருப்பதாக பாதுகாப்பு நீக்கப் பட்டிருக்கும் மாகாணசபை உறுப்பினர்கள் தெரிவித்த கருத்து பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

தமக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றால் நவீன துப்பாக்கிகளை வழங்குங்கள் என வடமாகாண சபை உறுப்பினர்கள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளனர்..

அனந்தி சசிதரன் உள்ளிட்ட வடமாகாண சபை உறுப்பினர்கள் பொலிஸ் பாதுகாப்பு தேவையென்றால் அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது. அத்துடன் அனந்தி உள்ளிட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்ட போது அது தற்காலிகமானது என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அவர்களும் தமக்கு தொடர்ச்சியான பாதுகாப்பு தேவை என்று விண்ணப்பிக்கவில்லை. என்றும் இது தொடர்பில் பொலிஸ் ஊடுகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்..

அந்த வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக பாதுகாப்பு தற்போது நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் எழுத்து மூலமாக விண்ணப்பிக்காத காரணத்தினால் தற்காலிக பாதுகாப்பை இதற்கு மேல் நீடிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
.

Read more...

14 பெண்கள் உட்பட 28 பேரின் தாக்குதலுக்கு உள்ளானார் முணசிங்கராம விகாரையின் விகாராதிபதி!

பண்வில, ஹாத்தலே பிரதேசத்தில் உள்ள முணசிங்கராம விகாரையின் விகாராதிபதி பிரதேசவாசிகளினால் தாக்கு தலுக்கு இலக்காகியுள்ளதுடன் தாக்குதல் தொடர்பில் 14 பெண்கள், சிறுவர்கள் உட்பட 28 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசவாசிகள் மற்றும் விகாராதிபதிக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் தெல்தெணிய நீததவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் 27 பேர் எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புட்ட 17 வயது சிறுவன் நீதவானின் அலோசனைப்படி வேரகல சிறுவர் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான விகாராதிபதி தற்போது கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Read more...

ஜெனிவா ஐ.நா முன்றலில் முஸ்லிம்கள் சிறுவர் துஷ்பிரயோகம். விசாரணை வேண்டும் என்கின்றன சிறுவர் பாதுகாப்பு அமைப்புக்கள்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்க்கப்படுவதாகவும் அவற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு இவ்வன்செயல்களுக்கு காரணமான பொதுபல சேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரரை கைது செய்வதுடன் அவ்வமைப்பினை இலங்கையில் தடைசெய்யவேண்டும் என்றும் நேற்று சனிக்கிழமை ஐரோப்பிய வாழ் முஸ்லிம்கள் சுவிட்சர்லாந்தின் ஜெனிவா ஐ.நா முன்றலில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இத்தாலி, பிராண்ஸ், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளில் வாழுகின்ற முஸ்லிம்களில் ஒரு சிறு தொகையினர் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

ஐ.நா முன்றலில் மேற்கொள்ளப்பட்ட இவ்வார்ப்பாட்டத்தில் 10 மேற்பட்ட சிறார்கள் கலந்து கொண்டிருந்ததுடன் இவர்கள் இனவாத கருத்துக்களைக்கொண்ட சுலோகங்களையும் தாங்கி நின்றனர். இச்செயற்பாடானது வெளிப்படையானதோர் சிறுவர் துஷ்பிரயோகம் என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளதுடன். இவ்விடயம் தொடர்பில் சுவிட்சர்லாந்து பொலிஸார் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என சிறுவர் உரிமை அமைப்புக்கள் வேண்டவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.

சர்வதேச நாடுகளில் புலிகள் அமைப்பு பயங்கரவாத இயக்கமாக தடை செய்யப்பட்டமைக்கு அவ்வமைப்பு மேற்கொண்ட சிறுவர் துஷ்பிரயோகங்களும் காரணம் எனச் சுட்டிக்காட்டும் மேற்படி அமைப்புக்கள், குறித்த ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் மற்றும் குறித்த சிறார்களின் பெற்றோரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும் கோரவுள்ளனர்.


Read more...

ஜேர்மனியில் அரசு இரகசிய பொலிஸின் மீள்வருகை! By Ulrich Rippert

தேசிய பாதுகாப்பு முகமையின் முன்னாள் ஒப்பந்ததாரர் எட்வார்ட் ஸ்னோவ்டெனால் கடந்த ஆண்டு ஊடகங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த 50க்கும் மேலான NSA ஆவணங்களை Der Spiegel கடந்த வாரம் பிரசுரித்தது. அமெரிக்க உளவுத்துறை முகமைக்கும், ஜேர்மனிய வெளிநாட்டு உளவுத்துறை சேவைக்கும் (BND) மற்றும் உள்நாட்டு உளவுத்துறை முகமைக்கும் (BfV) இடையே எந்தளவிற்கு நெருங்கிய ஒத்துழைப்பு இருந்ததென்பதை இந்த உயர்மட்ட இரகசிய ஆவணங்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஜேர்மனியில் NSA இன் இந்தளவிலான நடவடிக்கைகளைக் கண்டு ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்திருப்பதாக கூறும் பாதுகாப்புத்துறை எந்திரத்தின் மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முன்னணி அதிகாரிகளின் வாதங்களுக்கு இவை முற்றிலும் முரண்பாடாக இருக்கின்றன. NSAஇன் தகைமைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து BND மற்றும் BfVக்கும், அத்தோடு அமைச்சக பிரதிநிதிகளுக்கும் முழுமையாக தகவல் தெரிந்திருந்தது என்பதை Spiegel இன் ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன.

ஜேர்மனியின் உளவுத்துறை முகமைகள் NSA உடன் மேலும் நெருக்கமாக கூடி வேலை செய்யவும் கூட அழுத்தம் அளிக்கப்பட்டது. BND மற்றும் BfV அவற்றின் சொந்த நடவடிக்கைகளை பரந்தளவில் விஸ்தரிக்கவும், மற்றும் அரசுக்குள் ஒரு அரசை தோற்றுவிக்கும் மற்றும் எந்தவொரு ஜனநாயக கட்டுப்பாட்டில் இருந்தும் சுதந்திரப்பட்ட ஒரு பாதுகாப்பு எந்திரத்தை உருவாக்கவும் ஜேர்மன் எல்லைக்குள் இருந்த NSA இன் உளவு நடவடிக்கைகளை அவை பயன்படுத்தி கொண்டன.

Der Spiegel குறிப்பிடுகையில், “கடந்த 13 ஆண்டுகளில் ஜேர்மன் முகமைகளோடு அதிகளவில் மிக நெருக்கமான உறவுகளை அபிவிருத்தி செய்திருந்ததும், அதேநேரத்தில் அதன் பிரசன்னத்தை பாரியளவில் விஸ்தரித்து இருந்ததுமான ஒரு சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்க முகமையின் சித்திரத்தை அந்த ஆவணங்கள் சித்தரிக்கின்றன,” என்று எழுதியது. “பாதுகாப்பு விருப்பம் மட்டும் இல்லாமல், ஆனால் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டையும் பெறுவதில்" அக்கறை கொண்டிருந்த "ஒரு இரகசிய NSA உளவுத்துறை எந்திரம்" பெடரல் குடியரசில் இருந்ததைப் போல அங்கே "வேறெந்த நாட்டிலும் இருக்கவில்லை." 2007இல், செயல்பட்டு கொண்டிருந்த ஒரு டஜன் சேகரிப்பு மையங்களை NSA ஜேர்மனியில் கொண்டிருந்ததாக செய்திகள் குறிப்பிட்டன.

Der Spiegel இன் பதிப்பாசிரியர்களின் கருத்துப்படி, ஜேர்மனியில் சேகரிக்கப்பட்ட உளவு தகவல்கள் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களைக் கைது செய்வதற்கும், கொல்வதற்கும் உபயோகிக்கப்பட்டதாக அந்த ஆவணங்கள் தெரிவிக்கின்றன. “அவ்வாறானால் பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்பட்டவர்களுக்கு எதிரான அமெரிக்காவின் உயிர்பறிக்கும் நடவடிக்கைகளில் ஜேர்மனி ஒரு பாலமாக சேவை செய்துள்ளதா?” என்று அந்த பதிப்பாசிரியர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். “NSA ஜேர்மனியில் சேகரித்த தரவுகளை அமெரிக்க இராணுவமும், CIAஉம் அவற்றின் டிரோன் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினவா?” Der Spiegelலிடம் இருந்து வந்த இந்த கேள்விகளுக்கு NSA விடையிறுக்கவில்லை, ஆனால் உண்மைகள் எடுத்துக்காட்டும் விதத்தில் "ஆமாம்" என்பதே ஒரே முடிவான பதிலாக உள்ளது.

அந்த இரகசிய ஆவணங்களில் இருந்து அம்பலமான NSAஇன் நடவடிக்கைகள், ஜேர்மன் சட்டங்களின் கீழ் சட்டவிரோதமானவை ஆகும். “ஜேர்மன் எல்லைக்குள் நடத்தப்பட்ட இத்தகைய NSA நடவடிக்கைகள் குறித்து ஜேர்மன் அரசாங்கத்திற்கு ஒன்றும் தெரியாது என்பதை ஏற்க முடியுமா?” என்று தொடர்ந்து கேள்வி எழுப்பிய Der Spiegel, பதிலுக்கு காத்திராமல், “அவ்வாறு கற்பனையும் செய்து பார்க்க முடியாது,” என்று எழுதியது. NSA பல தசாப்தங்களாக ஜேர்மனிக்குள் செயல்பட்டு வந்துள்ளது என்பது மட்டுமல்ல, மாறாக சான்சலரின் அலுவலகத்திற்குள் அதன் கண்காணிப்பு அமைப்பைக் கொண்டிருக்கும் BND உடனும் அது நெருக்கமாக கலந்தாலோசித்து வேலை செய்கிறது.

“ஜேர்மன் உடனான NSAஇன் உளவுத்துறை உறவுகள்" என்ற தலைப்பில் ஜனவரி 17, 2013 தேதியிட்ட ஒரு ஆவணத்தில், BND, BfV மற்றும் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பிற்கான பெடரல் அலுவலகத்தோடு (BSI) இருக்கும் நீண்டகால கூட்டுவேலைகளை NSA விவரிக்கிறது. அந்த ஆவணத்தின் படி, “விரிவான பகுப்பாய்வு, செயல்பாடு மற்றும் தொழில்நுட்ப பரிவர்த்தனைகளோடு" 1962க்கு முன்னர் இருந்து BND உடனான கூட்டுவேலைகள் தொடங்கி இருந்தன.

“இருதரப்பு கூட்டுறவை பலப்படுத்துவதற்கான மற்றும் விஸ்தரிப்பதற்கான BND தலைவர் [ஹெகார்ட்] ஸ்ஷின்ட்லரின் ஆர்வத்தை NSA வரவேற்பதாக," அந்த ஆவணம் குறிப்பிடுகிறது. தங்களின் சொந்த SIGINT தகைமைகளை மேம்படுத்தவும் தகவல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கவும் அமெரிக்காவின் தேவைகளுக்கு ஒத்துழைக்கும் பணியில், தங்களின் சொந்த முன்முயற்சியை மற்றும் சுய-தீர்மானங்களை ஜேர்மன் முகமைகள் வெளிப்படுத்தி உள்ளன.

சமிக்ஞைகளை உளவுபார்த்தல் (signals intelligence) என்பதன் சுருக்கமே SIGINT என்பதாகும், அதாவது செயற்கோள் சமிக்ஞைகளைக் இடைமறித்தல் அல்லது தொலைதொடர்பு கேபிள்களிலிருந்து உருவி எடுத்தல் போன்ற மின்னணு தரவுகளை இடைமறிப்பதன் மூலமாக தகவல்களைப் பெறுவது என்பதே அதன் அர்த்தமாகும்.

“அங்கே 'SIGDEV முறையை அறிமுகப்படுத்தவும் மற்றும் உள்நாட்டு தரவுகளைப் பெற்று பயன்படுத்துவதில், பகுப்பதில், மற்றும் செயல்படுத்துவதில் BfVஇன் திறனை மேம்படுத்துவதற்கான தொழில்பழக்கத்தை அறிமுகப்படுத்தவும் மற்றும் ஜேர்மனிக்கும் அமெரிக்காவிற்கும் இரண்டிற்கும் ஆதாயமளிக்கக்கூடிய பெரிய சேகரிப்பு மையங்களை சாத்தியமானால் அபிவிருத்தி செய்யவும் BND/BfV/NSA/CIAஇன் பல பன்முக தொழில்நுட்ப கூட்டங்களும் NSA ஆல் நடத்தப்பட்டிருந்தது' என்பதைப் போன்ற பலவித வாக்கியங்கள் அதில் காணப்படுகின்றன" என்று எழுதி Die Zeit உம் அந்த ஆவணம் குறித்த விவரங்களை வெளியிட்டது.

NSA உடன் இன்னும் நெருக்கமாக, குறைந்தபட்சம் அமெரிக்க உளவுத்துறை முகமைக்கு ஏற்ப அது வேலை செய்யக்கூடிய விதத்தில், தரவு பாதுகாப்பைத் தளர்த்த BND ஜேர்மன் அரசாங்கத்திற்கு அழுத்தம் அளிக்கும் அளவிற்கு அமெரிக்கா மற்றும் ஜேர்மன் உளவுத்துறை முகமைக்கு இடையிலான கூட்டுறவு இருந்தது. “BND அதன் வெளிநாட்டு கூட்டாளிகளுடன் இன்னும் இலகுவாக தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கு உதவியாக ஜேர்மன் அரசாங்கம் ஜேர்மன் பிரஜைகளின் தகவல் பரிவர்த்தனைகளைப் பாதுகாக்கும் ஜி-10 தனிநபர் சட்டத்தின் பொருள்விளக்கத்தை திருத்தி அமைத்ததாக" அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.

அந்த ஆவணத்தில் “முக்கிய விடயங்கள்” என்பதன் கீழ், அது இவ்வாறு குறிப்பிடுகிறது, “மே 2012இல் NSAஇன் பிரதிநிதிகள் குழுவிற்கு ஜேர்மனியோடு புதிய கூட்டுறவு வாய்ப்புகளை ஏற்படுத்த அனுமதிக்கும் வகையில், FORNSAT சேகரிப்பு திட்டத்தின் முழு பொறுப்பையும் BNDயிடம் NSA ஒப்படைத்தது.” FORNSAT என்பது வெளிநாட்டு செயற்கோளில் இருந்து தகவல்களைத் திரட்டுதல் (foreign satellite collection) என்பதைக் குறிக்கிறது, அதாவது உளவுபார்த்தல் என்பதாகும்.

2007இன் ஒரு இரகசிய அறிக்கையில், ஜேர்மன் அமைப்புகளை நிறுவி ஒருங்கிணைத்தமை குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர் முன்னுரிமை இலக்குகளில் இருந்து தகவல்களைச் சேகரிப்பதையும், அபிவிருத்தி செய்வதையும் மேம்படுத்தி இருந்ததாக NSA எழுதியது. அந்த ஆவணத்தின்படி, தானியங்கி கண்காணிப்பு அமைப்புகள், மெட்டா-டேட்டாகளைத் திரட்டுதல், IP வழி உரையாடல்களைப் பிரித்தெடுத்தல், மற்றும் மொபைல் தொலைபேசி வலையங்களில் இருந்து மெட்டா-டேட்டாக்களைத் திரட்டுதல் ஆகியவை புதிய அல்லது மேம்பட்ட தகைமைகளில் உள்ளடங்கி இருந்தன. வலையக பகுப்பாய்வில் BND ஊழியர்களின் திறமைகளை மேம்படுத்த, NSA ஊழியர்கள் அவர்களின் சக BND ஊழியர்களுக்கு பாடங்களையும், நடைமுறைகளையும் கற்றுத் தந்திருந்தனர்.

இதற்கும் கூடுதலாக, குறுந்தகவல் சேதிகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட தரவுகளை NSA எங்கே வைத்திருக்கிறதோ அந்த DISHFIRE தரவுக்களஞ்சியம் என்பதையும் அந்த ஆவணம் குறிப்பிட்டது. பாட் அய்பிலிங் நகரை மையமாக கொண்டதும், NSA மற்றும் BNDஇன் கூட்டு தொழில்நுட்ப உளவுத்துறை நடவடிக்கையுமான Joint SIGINT Activity (JSA) என்பது, NSAஇன் தரவுகளஞ்சியத்திற்குள் புதிய தரவுகள் பாய்வதற்கு பாதையைத் திறந்துவிட்டிருந்தது. JSA அன்றாடம் குறுந்தகவல்களில் இருந்து 330,000 சேதிகளை DISHFIREக்கு அனுப்புகிறது.

ஆகவே ஜேர்மன் பாதுகாப்பு முறைமைகள் NSAஇன் சட்டவிரோத நடைமுறைகளை அறிந்திருந்தன என்பது மட்டுமல்ல. அவையும் இத்தகைய உளவுபார்ப்பு நடவடிக்கைகளில் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தன. BND, BSI, இராணுவ உளவுவேலை-தடுப்பு சேவை (MAD) மற்றும் BfV ஆகியவை அன்றாடம் எண்ணற்ற தரவுகளை அவற்றின் அமெரிக்க கூட்டாளிகளோடு பகிர்ந்து கொள்கின்றன. அமெரிக்காவும் சரி ஜேர்மன் அரசாங்கமும் சரி இந்த கூட்டுறவை எவ்விதத்திலும் மட்டுப்படுத்த எந்தவொரு ஆர்வமும் கொண்டிருக்கவில்லை. இந்த புதிய அரசாங்கம் NSA விவகாரம் அம்பலமாவதைத் தடுக்க இதுவரையில் அதனால் ஆனமட்டும் எல்லாவற்றையும் செய்துள்ளது.

இருந்த போதினும், NSA நாடாளுமன்ற புலனாய்வு கமிட்டியை ஸ்தாபிப்பதற்கு உடன்பட அவர்கள் நிர்பந்திக்கப்பட்டிருந்தார்கள், மற்றும் ஜூன் மாத தொடக்கத்தில் அரசு பொது வழக்கறிஞர் ஹரால்ட் ரன்க, சான்சலர் அங்கேலா மேர்க்கெலின் மொபைலில் ஊடுருவியதன் மீது ஒரு புலனாய்வை அறிவிக்க நிர்பந்திக்கப்பட்டு இருந்தார்.

உளவுத்துறை முகமைகள் அமெரிக்காவிடமிருந்து இன்னும் சுதந்திரமாக, சுய-நிர்ணயம் பெற்றிருக்க வேண்டுமென்று ஊடகங்கள், வணிக வட்டாரங்கள் மற்றும் அரசியல் ஸ்தாபகத்தின் பிரிவுகளிடமிருந்து முறையீடுகள் மேலெழும்பி வருகின்ற சூழலில் தான், சில காலமாக Der Spiegelஇன் வசமிருந்த இந்த NSA ஆவணங்கள், இப்போது பிரசுரிக்கப்பட்டு இருக்கின்றன.

இது பலமான நாடாளுமன்ற கட்டுப்பாடு உடனோ அல்லது உளவுத்துறை எந்திரத்திற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்பதோடோ சம்பந்தப்பட்டதல்ல. அதற்கு நேர்மாறாக, NSA உளவுவேலை மீதான விமர்சனம் "ஜேர்மன் இராணுவத்தைப் பலப்படுத்துவதற்கான" (Die Zeitஇன் பதிப்பாசிரியர் ஜோசெப் ஜோஃபே) அழைப்போடு பிணைந்துள்ளது.

BND இன் முகவர்களை இந்த கோடையில் மத்திய பேர்லினின் ஒரு புதிய மையத்திற்கு மாற்றியதே இந்த முறையீடுகளை அடையாளப்படுத்துகின்றன. ஐரோப்பாவின் இந்த மிகப்பெரிய அலுவலக வளாகத்தில், உலக மக்களை உளவுபார்ப்பதில் ஏனைய உளவுத்துறை முகமைகளோடு நெருக்கமாக கூடி வேலை செய்ய 4,000கும் மேற்பட்ட முகவர்கள் பணிக்கப்படுவார்கள்.

BND மற்றும் ஏனைய உளவுத்துறை முகமைகளைப் பலப்படுத்துவதென்பது ஒட்டுமொத்த பாதுகாப்பு எந்திரத்தையும் பரந்தளவில் மறுகட்டமைப்பு செய்வதோடு இணைந்துள்ளது. பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்காக என்ற போலிக்காரணத்தின் கீழ், பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளின் அதிகாரங்கள் கடந்த தசாப்தத்தில் பரவலாக விரிவாக்கப்பட்டுள்ளன. 2004இல், பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்பிற்கான கூட்டு மையம் (GTAZ) ஸ்தாபிக்கப்பட்டது, அது ஜேர்மனியின் அனைத்து உளவுத்துறை முகமைகளின் பிரதிநிதிகளையும் ஒரே இடத்திற்குள் கொண்டு வந்தது.

பேர்லினின் திரெப்டோவ் நகரில் சிறப்பான முறையில் கட்டப்பட்ட ஒரு கட்டிடத்தில், BfV, BND, BKA (மத்திய குற்ற புலனாய்வு அமைப்பு), MAD, மத்திய பொலிஸ், சுங்க நெறிமுறை ஆணையம், மத்திய தலைமை வழக்கறிஞர் அலுவலகம், புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான மத்திய அலுவலகம், அதனோடு சேர்ந்து அனைத்து 16 மாநில உளவுத்துறை முகமைகளும் மற்றும் குற்றவியல் விசாரணை அமைப்புகளும் நெருக்கமாக இணைந்து வேலை செய்கின்றன. சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளாலும் BKAஇன் "பயங்கரவாத எதிர்ப்பு தகவல் களஞ்சியத்தை" அணுக முடியும்.

நாஜி சர்வாதிகாரத்தின் போது நடத்தப்பட்ட குற்றங்களிலிருந்து பெறப்பட்ட ஒரு முக்கிய படிப்பினையாக, பொலிஸ் மற்றும் உளவுத்துறை சேவைகளைப் பிரித்து வைப்பதென்று ஜேர்மன் அரசியலமைப்பில் ஸ்தாபிக்கப்பட்டது, இது இப்போது நடைமுறையில் கைவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரஜையையும் அரசின் எதிரியோ என்று பார்க்கும் மற்றும் அவர்களை உளவுபார்க்கின்ற ஒரு பொலிஸ் அரசின் கட்டமைப்புகள் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு கண்ணுக்கு முன்னால் விரிந்து வருகின்றன.

அனைத்திற்கும் மேலாக இது போர் குறித்த கேள்வியின் மீது மிகவும் வெளிப்படையாக இருக்கிறது. இராணுவ கட்டுப்பாடுகள் மீதான ஜேர்மன் சகாப்தம் முடிந்துவிட்டது, அதாவது அது நெருக்கடி பிரதேசங்களில் சுதந்திரமாகவும், சுயநம்பிக்கையோடும் தலையீடு செய்யும் என்ற ஜனாதிபதி ஜோஹாயிம் கௌவ்க், சமூக ஜனநாயகக் கட்சியின் வெளியுறவுத்துறை மந்திரி பிராங்-வால்டர் ஸ்ரைன்மையர், மற்றும் பாதுகாப்பு மந்திரி உர்சுலா வொன் டெர் லையன் ஆகியோரிடம் இருந்து வந்த அறிக்கைகளுக்கு ஜேர்மன் மக்களோ அதிகளவில் கோபத்தோடு விடையிறுப்பு காட்டியுள்ளனர்.

அரசாங்கம் இந்த எதிர்ப்பிற்கு ஒரு விரிவான பிரச்சார இயக்கத்தோடு மட்டும் விடையிறுப்பு காட்டவில்லை, மாறாக பாதுகாப்பு எந்திரங்களை பலப்படுத்தியும் மற்றும் அரசு கட்டமைப்புகளைக் கட்டியெழுப்பியும் கூட விடையிறுப்பு காட்டியுள்ளது. ஜேர்மன் இராணுவவாதத்தின் மீள்வருகை இவ்விதத்தில் நாஜிக்களின் கீழ் கெஸ்டாபோ (Gestapo) கொண்டிருந்த அதிகளவிலான அதிகாரங்களின் எச்சசொச்சங்களோடு ஒரு பொலிஸ் அரசின் கட்டுமானத்தோடு கை கோர்த்து செல்கிறது.

Read more...

நாட்டிற்கு ஆசி வேண்டி மத அனுஷ்டானங்களில் இறங்கியுள்ளார் ரணில் விக்கிரமசிங்கா! க.கிஷாந்தன்

நாட்டிற்கு ஆசி வேண்டி நாட்டின் பல பாகங்களிலும் மத அனுஷ்டானங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி. இதன் ஆரம்பமாக மேற்று கினிகத்தேன அம்பகமுவ விஜயபாகு விகாரையில் விசேட மத அனுஷ்டானங்கள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜக்கிய தேசிய கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர் கே.கே.பியதாஸ மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளதை படங்களில் காண்கின்றீர்கள்.
Read more...

Saturday, June 28, 2014

இலங்கைக்கு எதி­ராக ராஜ­தந்­திர ரீதி­யி­லான ஆளில்லா விமான தாக்­குதலை நடத்துகின்றது ஐ.நா விசாரணைக் குழு!

ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை நிய­மித்­துள்ள நிபு­ணர்கள் குழு இலங்கை அர­சாங்­கத்­திற்கு எதி­ராக ராஜ­தந்­திர ரீதி­யி­லான ஆளில்லா விமான தாக்­குதலை நடத்துகின்றது என இலங்­கையின் முன்னாள் இரா­ஜ­தந்­தி­ரியும் சிரேஷ்ட அர­சியல் விமர்­ச­க­ரு­மான கலா­நிதி தயான் ஜய­தி­லக்க தெரி­வித்­துள்ளார்.

அத்துடன் அண்­மையில் அளுத்­க­மவில் இடம்­பெற்ற முஸ்லிம் விரோத கல­வ­ரங்­களும் இந்த குழுவின் விசா­ர­ணை­க­ளுக்கு பரிந்­து­ரைக்கும் எனக் கூறப்­ப­டு­கி­றது. இதற்கு சாதகமாக அளுத்­க­மவில் இடம்பெற்ற சம்­ப­வங்­க­ளுக்கு கண்­டனம் வெளி­யிட்­டி­ருந்த நவ­நீ­தம்­பிள்ளை, கொழும்பு அர­சாங்கம் அனைத்து சிறு­பான்மை மதத்­தி­னரை பாது­காக்க வேண்டும் அழைப்பு விடுத்­தி­ருந்­துடன் அஸ்மா ஜஹாங்­கீரை நிபு­ணர்கள் குழுவின் உறுப்­பி­ன­ராக நிய­மித்­தி­ருந்­தாக ஜய­ல­தி­லக்க சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

பாலஸ்­தீ­னத்தின் காசாவில் இடம்­பெற்ற மோதல்­களில் இடம்­பெற்ற மீறல்­களை கண்­ட­றிய ஐ.நா ரிச்சர்ட் கோல்ட்ஸ்டோன் என்ற ஒரு நபரை மட்­டுமே நிய­மித்­தி­ருந்­தது. எனினும் இலங்கை மீதான விசா­ர­ணை­க­ளுக்கு மூவர் கொண்ட குழுவை ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் அலு­வ­லகம் நிய­மித்­துள்­ளது. இந்த குழு மிகவும் வலு­வா­னதும் கனத்தை எடை­யையும் கொண்­டது எனவும் தயான் ஜய­தி­லக்க குறிப்­பிட்­டுள்ளார்.

Read more...

160 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளிர்ச்சிப் படையினர் கொன்று குவித்தனர்!!

160 பேரை சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ். கிளிர்ச்சிப் படையினர் அவர்களை கொலை செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எல். கிளிர்ச்சியாளர்கள், மோசுல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி வருகின்றனர்.

1,700 ராணுவ வீரர்களை கொன்று குவித்துள்ளதாக தீவிரவாதிகள் தரப்பில் தகவல் வெளியிடப்பட்டது. அது தொடர்பான புகைப்பட ஆதாரங்களையும் இணையத்தில் தீவிரவாதிகள் வெளியிட்டனர். ஆனால், அந்த புகைப்படங்கள் உண்மையானதுதானா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. மிகப்பெரிய அளவிலான படுகொலைகள் நிகழ்ந்திருப்பதாக கூறப்படுவது குறித்து இராக் அரசு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்தனர்.

இந்நிலையில், ஜூன் 11 - 14 தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களில் 160 முதல் 190 பேர் வரை தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கலாம். இந்த சம்பவம் திக்ரித் நகரில் நடந்திருக்கவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது என இராக்கில் உள்ள மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

Read more...

உரிமையாளர் அற்ற பொதியை மீட்கச்சென்ற பொலிஸாருக்கு கிடைத்தது வயோதிபரின் சடலம்!

புத்தளம் மன்னார் வீதியின் 4ம் கட்டைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உரிமையாளர் அற்ற பொதி ஒன்று இருப்பதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட போதே பொலிஸார் சடலத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர், அத்துகிரிய மிலேனியம் சிற்றி பகுதியை சேர்ந்த 71 வயதானவர் எனவும் அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் அமெரிக்காவில் வசித்து வருவதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Read more...

தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகிய மகள் வைத்தியசாலையில்! யாழ். மீசாலையில் சம்பவம்!

தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகிய தர்மிகா (22) என்ற இளம்பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.

யாழ். மீசாலைப் பகுதியில் தந்தைக்கும் தாய்க்கும் இடையில் இடம்பெற்ற சண்டையினை நிறுத்தச் சென்ற மகளை தந்தை வாளால் வெட்டியதில் மகள் கையிலும், தலையிலும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (27) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

Read more...

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் பலர் நீக்கப்படுவர்!

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தொகுதிகள் பலவற்றின் அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய அமைப்பாளர்கள் நியமிப்பதில் கவனம் எடுக்கப்பட்டள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தகவல்கள் குறிப்பிடுகின்றன.

அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டம் மற்றும் தொகுதிகளில் இடம்பெறுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் ஆலோசனை செய்வதற்காக ஸ்ரீசுக ஒழுங்குசெய்திருந்த கூட்டத்தின்போது, அங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்களைக் கருத்திற்கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இத்தீர்மானத்திற்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.

தொகுதிகள் பலவற்றின் அமைப்பாளர்கள் கலந்து கொண்ட அக்கூட்டத்தின்போது, அமைப்பாளர்கள் பலரினதும் நடத்தைகள் தொடர்பில் கருத்துப் பரிமாற்றங்கள் சூடுபிடித்தாக தெரியவருகின்றது.

அங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தும் உயர்பீடத்திற்கு தெரிவிக்கப்படும் என கூட்டத்திற்கு வருகை தந்திருந்த கட்சியின் உயர்மட்டக் குழு பிரதிநிதிக்குத் தெரிவித்துள்ளனர்.

(கேஎப்)

Read more...

பொது அபேட்சகர் ஒருவரை நிறுத்துவற்கு ஒத்துழைக்குமாறு ரணிலின் காலில் விழுகிறது ஜேவிபி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியிலிருந்து பொது அபேட்சகர் ஒருவரை போட்டியிடச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் பிரயத்தனம் எடுத்துவருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

ஜேவிபியின் மேல் மாகாண சபைத் தலைவர் லால் காந்த இது தொடர்பில் கருத்துரைக்கும்போது,

ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரணில் விக்கிரமசிங்க எடுத்துள்ள தீர்மானமானத்தை மாற்றுவதற்கு தங்களது கட்சி பெரும் உற்சாகம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிமிடம் வரை ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடுவதற்கே முடிவு செய்துள்ளது.

எதிர்க்கட்சியின் பொது அபேட்சகராகப் போட்டியிடவுள்ள மாதுலுவாவே சோபித்த தேரர் குறிப்பிடும்போது, எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒனறிணையாதிருப்பின் தானும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

Read more...

ஆசிரியைகளின் அழுத்தத்தால் மாணவி தற்கொலை: ஒருவரைச் சேவையிலிருந்து இடைநிறுத்தத் தீர்மானம் !!

கந்தான பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவ த்துடன் தொடர்புடையவரெனக் கூறப்படும் ஓர் ஆசிரி யையை சேவையிலிருந்து இடை நிறுத்த மேல் மாகாண கல்வித்திணைக்களம் தீர்மானித்துள்ளது.குறித்த பாடசா லையின் இரு ஆசிரியைகளின் அழுத்தம் காரண மாகவே இந்த மாணவி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டார் என விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

கந்தானை ஹப்புகொடை பிரதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்று வந்த 15 வயதான அபேக்ஷா செவ்மினி என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவரது தற்கொலைக்கு முன்னர் அவரால் எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்றிலிருந்து கிடைத்த தகவலுக்கு அமையவே அவரது பாடசாலை ஆசியைகள் இருவருக்கும் மாணவியின் தற்கொலைக்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Read more...

ஓட்ட பந்தயத்தில் சாதனை படைத்த எட்டு மாத கர்ப்பிணி (படங்கள்) !!

சாதனைக்கு வயது மட்டுமல்ல.., கர்ப்பம் கூட ஒரு தடையே அல்ல என்று 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் அலிசியா மோண்ட்டானோ நிரூபித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இவர், தேசிய அளவில் மத்திய தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். மேலும், பல்வேறு சர்வதேச ஓட்டப் பந்தய போட்டிகளிலும் 2012-ல் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியிலும் அமெரிக்காவின் சார்பில் இவர் பங்கேற்றுள்ளார்.

2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்க திட்டமிட்டுள்ள இவர், அதற்குள் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்து, கருவுற்றார். இந்நிலையில், கடந்த 26-ம் தேதி கலிபோர்னியா நகரில் நடைபெற்ற 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 8 மாத கர்ப்பிணியாக பங்கேற்று ஓடிய இவர் சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2010-ம் ஆண்டு இதே தூரத்தை 1:57.34 கடந்தது இவரது தனது அதிவேக சாதனையாக கருதப்படுகிறது. இந்த பந்தயத்தில் 35 வினாடிகள் தாமதமாக 2:32.13 நேரத்தில் லிசியா மோண்ட்டானோ கடந்துள்ளார். 28 வயதாகும் இவர் வெற்றி கோட்டை கடந்ததும் கூடியிருந்த பார்வையாளர்கள் கைதட்டி, கூச்சலிட்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com