Tuesday, May 13, 2014

சிறையில் இருக்க வேண்டிய பிபி.ஜயசுந்தரவிற்கு அரசாங்கம் பயப்படுகின்றது! அரசை சாடுகின்றார் விமல் வீரவன்ச

பி.பி.ஜயசுந்தர என்பவர் சந்திரிகா ஆட்சி காலத்தில் அரச நிறுவனங்களை விற்றவர் எனவும் அவர் இன்று சிறையில் இருக்க வேண்டிய நபர் எனவும் தெரிவிக்கும் விமல் வீரவன்ச நாட்டின் பொருளாதாரத்தை இரண்டு மூன்று பேர் கொண்ட குழுவே கையாள்வதாகவுமஐமசுமு அரசாங்கத்தின் வீடமைப்பு, பொறியல், நிர்மாணம் மற்றும் பொது வசதிகள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நேரடி ஒளிபரப்பு அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

திறைசேரியில் ஜயசுந்தரவை சந்திப்பதென்றால் அமைச்சர்கள் வரிசையாக காத்து இருக்க வேண்டியுள்ளது. அமைச்சர் எஸ்.பி திசாநாயக்க ஜயசுத்தரவை போன்ற சிறந்த செயலாளர் இந்த நாட்டில் ;;இல்லை என அவரைப் புகழ்ந்து பேசினால் அவருக்கு பல்கலைக்கழகத்திற்குரிய சகல நிதிகளை வழங்குவார். அந்த நிலைக்கு அவர் அமைச்சர்களை கணக்கில் எடுப்பவராக இருக்கின்றார்.

இந்த ஜயசுந்தர வெளிநாட்டு வங்கிகளில் நீண்ட கால வட்டிக் கடன்களையே பெறக்கூடிய திட்டத்தினையே கொண்டு வருபவர். இதில் இவருக்கு பாரிய கொமிசன் உண்டு. இந்தநாட்டில் உள்ள கிராமத்து மக்களையும் தாயின் வயிற்றில் வளருகின்ற குழந்தையும் கடன்காராக ஆக்குகின்றார். இவர் பெருந்தெருக்கள் பாதைகள் அமைப்பதற்கே உலக வங்கிகளிடமும் சீனாவிடமும் என பல வெளிநாட்டு வங்கிகளிடம் கடன்களைப் பெறுகின்றார். ஆனால் கிராமத்தில் உள்ள குடிமக்களுக்கு இந்த பெருந்தெருக்களால் அமைப்பதால் ஒரு பயனுமில்லை. ஜனாதிபதியின் ஹம்;பாந்தோட்டை துறைமுகம் அமைக்கும் திட்டமே முடியாது என்ற சொன்னவர்தான் இந்த ஜயசுந்தர. இன்று ஜனாதிபதியின் பக்கத்தில் இருக்;கும் இந்த மாபியாக்களினால் ஒருபோதும் நாம் இந்த நாட்டை சிறந்த பொருளாதார நாடாக மாற்ற முடியாது.

ரேஸ் மன்னன் 'பேக்கருக்குரிய' சட்டமூலத்தை ஒரு மாதத்திற்குள் தயார்படுத்தி வரிவிலக்கு அளித்து அதனை நிறைவேற்றுகின்றார். அவர் ஒரு போதும் கிராமத்து மக்களைப் பற்றியும் இந்த நாட்டைப்பற்றியும் சிந்திப்பதில்லை. கிராமத்து மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் ஒரு பால் பெட்டியையே அல்லது தொழில்பேட்டையோ அமைப்பது பற்றிய திட்டங்களை அவர் எப்போதும் கொண்டு வந்ததில்லை.

அவருக்கு நீண்டகாலக் கடன் திட்டத்தினை எடுத்து நெடும் வீதிகள் அமைப்பதில் அவருக்கு வருமானம் உண்டு. ஆகவே தான் நாம் ஜனாதிபதியிடம் சொல்லியிருக்கிறோம் 'இந்த ஜயசுந்தரவை வைத்திருக்காதீர்கள்' அவரை பதவியில் இருந்து அகற்றுங்கள் என சொல்லி வந்திருக்கின்றேன்.
கடந்த தேர்தலின்போது இந்த அரசின் வாக்குபலம் ஏற்கனவே 10 வீதத்தால் குறைந்துவிட்டது. இது மேலும் குறைவதற்கு இடமுன்டு. தங்களை சுற்றியிருப்பவர்களை ஒருபோதும் நம்பாதீர்கள் என சொல்லியிருக்கின்றேன்.

சூது சட்டத்தை மிக விரைவில் நிறுத்துங்கள் என சொல்லியிருந்தேன். அந்த சூது சட்டத்தில் சூழ்ச்சியமாக ஏற்கனவே கொழும்பு நகரில் இருக்கும் 5 கிளப்புக்களையும் பேக்கர் நிர்மாணிக்கும் ஹோட்டலுக்குள் கொண்டுவந்து அந்த சூது கிளப்புக்கு உயிர் கொடுப்பதற்கே மேற்படி சட்டம் கொண்டுவரப்பட்டது. அதற்கு வரி விலக்கும் அளிக்கப்பட்டது. ஏற்கனவே 5 கிளப்புக்கள் வழங்கும் வரியை நாம் இழக்கின்றோம். இதனால் இந்த நாடு பாரிய வரியை இழக்கின்றது என சொல்லியிருந்தோம்.

நாங்கள் எமது கட்சியின் பேராளர் மாநாட்டின்போது அரசுக்கு 12 கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். இந்த அரசினை சரியான பாதையில் கொண்டுவருவதற்கே இதனை முன்வைத்துள்ளோம். இதுவரை எங்களுக்கு எவ்வித பதிலும் அரசிடமிருந்து வரவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

ஜனாதிபதி வசமுள்ள நிறைவேற்று அதிகாரம் ஜனாதிபதிக்கும் அவரது அமைச்சர்களுக்கும் உரியது என்ற போதும், பிபி.ஜயசுந்தர அந்த அதிகாரங்களை தவறான வகையில் பயன்படுத்துவதாக நாட்டுக்கு கடன் குவிக்கப்பட்டு அதன் பலன் சில குடும்பங்களுக்கு செல்வதாகவும் ஆனால் நாட்டின் சாதாரண மக்களுக்கே பொருளாதார பிரதிபலன் சென்றடைய வேண்டும் எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

பிபி.ஜயசுந்தரவிற்கு பதிலாக நாட்டை நேசிக்கும் பொருளாதார நிபுணர் ஒருவரை அப்பதவியில் இருத்த முடியாமல் போனது இந்த அரசாங்கத்தின் முழுமூடச் செயல் மற்றும் வெற்றுத்தனமே அன்றி வேறில்லை எனவும் பிபி.ஜயசுந்தரவிற்கு அரசாங்கம் பயந்துள்ளதாகவும் தீர்மானம் முடிவு எடுப்பவர்களும் அவருக்கு பயம் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com