இருப்பதா? போவதா? தேசுமுவின் பிரேரணைகள் அடங்கிய மகஜர் மகாசங்கத்தினரிடம்…!
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் தொடர்ந்தும் செயற்பட வேண்டுமாயின், மிக வேகமாக சீர்திருத்த்த்திற்கு உள்ளாக்கப்பட வேண்டிய 12 பிரேரணைகள் அடங்கிய மகஜர் ஒன்று இன்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவினால் அஸ்கிரிய மகா சங்கத்தினருக்கு வழங்கி ஆசிர்வாதம் வாங்கப்பட்டது.
சூழ்ச்சியுடன் கூடி அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் திட்டம் தேசிய சுதந்திர முன்னணிக்கு இல்லை என்றும், அரசாங்கத்தை சரியான வழியில் வழிநடாத்துவதே தங்கள் கட்சியின் திட்டம் எனவும் அக்கட்சியின் தலைவர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தபோது குறிப்பிட்டார்.
அரசாங்கத்துடன் செயற்பட்டு, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியது அமைச்சர் ஒருவரின் பொறுப்பாகும் என இங்கு கருத்துரைத்திருந்த மகா சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
மக்கள் தப்பான வழியில் சிந்திக்காது இருக்காதிருக்க ஆவன செய்ய வேண்டியது அமைச்சர்களின் பொறுப்பு எனவும் மகா சங்கத்தினர் கருத்துரைத்துள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment