Monday, May 19, 2014

சுவிட்சர்லாந்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் தொடர்பலான வாக்கொடுப்பில் சாதகமான முடிவு!

சுவிட்சர்லாந்து அரசு நேற்று குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுகின்றவர்கள் அவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாழ்நாள் தடை விதிக்கும் புதிய மசோதாவிற்கு வாக்கெடுப்பு நடத்தியது. மொத்தம் 26 மண்டலங்களைக் கொண்ட அந்த நாட்டின் மக்கள் தொகையில் 63.5 சதவிகிதத்தினர். இந்த சர்ச்சைக்குரிய நடவடிக்கைக்கான தீர்ப்பிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்த முடிவு குழந்தை பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான சட்ட விதிகளை சுவிஸ் நாட்டு சட்டமன்ற உறுப்பினர்கள் செயல்படுத்த வழி வகுத்துள்ளது. அந்நாட்டில் இயங்கிவரும் ஒயிட் மார்ச் சங்கம் இதற்காக மிகவும் பாடுபட்டு வந்தது. இத்தகைய குற்றவாளிகளுக்கென தண்டனை சட்டங்கள் ஏற்கனவே விதிமுறையில் இருக்கின்றன என்று அரசுத்தரப்பு இவர்களுக்கு பதில் அளித்திருந்தது. தண்டனையின் கடுமை குற்றத்தின் தன்மையையோ, சட்ட இயல்பு விளக்கங்களையோ மாற்றக்கூடியதாக அமைந்துவிடக்கூடும் என்ற தனது கவலையையும் அரசு தெரிவித்திருந்தது.

ஆயினும் பத்து வயதுக்குட்பட்டவர்களிடம் தகாத முறையில் நடந்து கொள்பவர்களுக்கு குறைந்த பட்சம் ஆறு மாத சிறைத் தண்டனை மட்டுமே விதிக்கப்படுவதாகவும், இது கடுமையாக்கப்படவேண்டும் என்றும் இந்த இயக்கம் கோரியது.

மேலும் ஒரு 20 வயது இளைஞன் 16 வயதுக்குட்பட்டவர்களிடம் தவறாக நடந்துகொண்டாலும், ஆபாசத்தைத் தூண்டும்விதமான பரிமாற்றங்களில் ஈடுபட்டாலும் புதிய சட்டத்தின்மூலம் அவன் தண்டிக்கப்படவேண்டும் என்று ஒயிட் மார்ச் சங்கம் வலியுறுத்தியது.

நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பின் சாதகமான முடிவு குறித்து ஒயிட் மார்ச் சங்கத்தின் தலைவர் கிறிஸ்டின் பசட் தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார். இந்த வாக்கெடுப்பினைத் தொடர்ந்து சுவிஸ் பாராளுமன்றம் பாலியல் குற்றவாளிகளுக்கு எதிரான ஐரோப்பாவின் கடுமையான சட்டங்களை இயற்ற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com