Wednesday, March 5, 2014

நான் ஜனாதிபதியாகி போதைப் பொருளை முற்றாக இல்லாதொழிப்பேன்! - ரணில் விக்கிரமசிங்க

தான் இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது நிச்சயம் எனவும், அவ்வாறு தெரிவுசெய்யப்பட்டால் ஐக்கிய தேசிய ஆட்சியின் கீழ் ஏற்பட்டுத்தப்படவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அரசின் கீழ், ஒன்றரை ஆண்டுகளாக பெரும் அநியாயத்தை நிலைநாட்டிவரும் போதைப் பொருள் பாவனையை முற்று முழுதாக இல்லாதொழிப்பேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடுகிறார்.

தற்போது நடைமுறையிலுள்ள அரசாங்கத்தின் கீழ் திருட்டு, வழிப்பறிக் கொள்ளை, பாலியல் வல்லுறவுகள் போன்றவற்றை உலகுக்கு எடுத்துக் காட்டும் முகநூலை எந்த வகையிலும் தடைசெய்வதற்கு நாங்கள் விடமாட்டோம் எனக் குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், போருக்காக இப்போது பண விரயம் இல்லாதபோதும், போர்க்காலத்தில் இல்லாத அளவு பொருட்களின் விலை அதிஉச்சாணிக்குச் சென்றுள்ளது எனக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பேஸ்புக் எனும் முகநூலின் மூலம் துஷ்பிரயோகங்கள், அடாவடித்தனங்கள் வெளியுலகிற்குக் கொண்டு செல்லப்படுவதால்தான், அரசாங்கம் அதனைத் தடை செய்ய முனைகிறது என்பதைத் தெளிவுறுத்தியுள்ள ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கத்திற்கு வால் பிடிக்கின்ற சில ஊடகங்கள் அதனாற்றான் முகநூலின் மூலம் தற்கொலை என்பதை பூதாகரமாக்கிக் காட்டுகின்றது என்றும் குறிப்பிடுகிறார்.

(கேஎப்)

1 comment:

  1. நீயும் ஒரு கோமாளி , உன்னால் ஒண்ணுமே செய்ய முடியாது , better 1st u find a good boy friend than mangala.

    ReplyDelete