இராணுவ இடமாற்றங்கள் வழமையான இடமாற்றங்களே, அது திடீர் செயற்பாடுகள் அல்ல! - இராணுவ ஊடகப் பேச்சாளர்
ஆண்டின் நடுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் இராணுவ இடமாற்றங்கள் மற்றும் பதவி மாற்றங்கள், திடீர் செயற்பாடுகளன்றி, வழமையான செயற்பாடுகள் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் றுவன் வனிகசூரிய தெரிவித்துள்ளார். இராணுவ வருடாந்த பதவி மாற்றங்கள், ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இடம்பெறுகின்றன.
இராணுவ சேவையின் தொழிற்சார் செயற்பாடுகளை சமநிலைப்படுத்துவதை உறுதிப்படுத்தும் வகையில், உத்தியோகத்தர்களுக்கான பதவி உயர்வுகள் உட்பட பயிற்சிக்ள வழங்கப்படும். பயிற்சிகளை தொடர்ந்து மீள சேவையில் இணைதல் போன்ற தேவைகளை அடிப்படையாகக் கொண்டு, பதவி மாற்றங்கள் மேற்கொள்ளப்படுமென, இராணுவ ஊடகப் பேச்சாளர் றுவன் வனிகசூரிய மேலும் தெரிவிக்கிறார்.
பாதுகாப்பு சேவை கட்டளை தளபதிகள், படைப்பிரிவு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட இராணுவ தலைமையகத்தின் சிரேஷ்ட பதவி நிலை உத்தியோகத்தர்கள் போன்ற பல பதவிகள், இடமாற்றங்களும் இக்காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. இப்பதவி மாற்றங்களுக்கு அமையவே, கடமை பொறுப்பேற்புகள் இடம்பெறுவதாகவும், இராணுவ பேச்சாளரின் ஒப்பத்துடனான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment