Sunday, August 11, 2013

வட மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பில் த.தே.கூ.க்கும், மு.கா. இடையில் இரகசிய உடன்படிக்கை!

வட மாகாண சபையின் ஆட்சியை கைப்பற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிர ஸக்கும் இடையில் ரகசியமான, உடன்படிக்கை ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும், குறுகிய அரசியல் இலாபத்தை அடைவ தற்காக இந்த ஏமாற்று உடன் படிக்கையை இரு தரப்பும் மேற்கொண்டுள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என அரசாங்கம் கூறிவரும் வேளையில் கிழக்கு மாகாணத்திற்கு அந்த அதிகாரங்கள் தேவை என தெரிவித்து, முஸ்லிம் காங்கிரஸ் பாரிய பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸடன் இணைந்து செயற்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணங்கியுள்ளது எனவும் அருண் தம்பிமுத்து மேலும் தெரிவித்துள்ளார்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக முஸ்லிம் காங்கிரஸை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்திக் கொள்ள முனைவதாக அவர் மேலும் தெரிவித் துள்ளார்.

1 comments :

Anonymous ,  August 11, 2013 at 8:55 AM  

They always like to remain in politics,because it is a pardaise Garden of Eden and they enjoy the maximum,for that their political acrobatic circus is their usual performances.We must be cautious,because we have more than half a century bitter experiences.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com