அதட்டல் செய்தியின் அரங்கேற்றம்! (கவிதை)
வீதியெங்கும்
ரயர்கள் எரிந்து
விபரீதங்கள் தடுக்கப்படுவதற்காய்
பொலிஸர் குவிந்து நிற்க...
தெருக்களெங்கும்
நாய்கள்
உல்லாசமாய்
ரோந்துபோய்
காதல் புரிகிறது!
ஆனால்,
மனித வர்க்கமோ
வீட்டிற்குள்
முடங்கிக் கிடக்கிறது!
இத்தனையும்
இராப்பொழுதில்...!
அதட்டல் இல்லாத வீரர்களால்
விநியோகமகிப்போன
துண்டுப் பிரசுரம் சொல்லிப்போன
அதட்டல் செய்தியின்
அழகிய அரங்கேற்றங்களே...!
-எம்.பீ அன்வர்
0 comments :
Post a Comment