சம்பந்தன் தலைமையிலான த.தே.கூவின் பிரிவினைவாதமும் புலம்பெயர் தமிழரின் ஈழக்கனவும் இன்னும் முடியவில்லை. வீரவன்ச.
சர்வதேச சக்திகளின் ஆதரவுடன், ஈழமொன்றை உருவாக்குவதற்கு, புலம்பெயர் தமிழர்கள் முயன்று வருவதாக விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். ஜேவிபி யிலிருந்து பிரிந்து சென்று அவர் அமைத்துக்கொண்ட தேசிய சுதந்திர முன்னணியின் மேதின கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு பேசிய வீரவன்ச, சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரிவினைவாதம் இன்னும் முற்றுப்பெறவில்லை. புலம்பெயர் தமிழர்களின் ஈழத்திற்கான போராட்டமும், முடியவில்லை. எல்லையற்ற அகண்ட ஈழமொன்றை உருவாக்குவதில், புலம்பெயர் தமிழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான மேற்கு சக்திகள் அதற்கு புத்துயிரளித்து வருகின்றன. புலம்பெயர் தமிழர்களின் முயற்சி, வேறு கோணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் யதார்த்தத்தை நீங்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். அதனை தெளிவுபடுத்தவே, இங்கு கூடியுள்ளோம் என்றார்.
வீரவன்ச வின் மேதின ஊர்வலத்தின் பிரதான வாசகமாக வடக்கில் தேர்தல் வேண்டாம் என அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment