Thursday, March 7, 2013

இன்று இல்லாவிட்டால் என்றாவது இலங்கை மீது சர்வதேச விசாரணை வருமாம் சம்பந்தன்

இன்று இல்லாவிட்டால் எதிர்காலத்திலாவது இலங்கை மீது சர்வதேச விசாரணை வரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியிருப்பது வெட்கத்துக்குரியதாகும். இதன்மூலம் அவர் தேசத் துரோகம் இழைத்துவிட்டார். இத்தகைய வார்த்தைகளை வரலாற்றில் எந்த தமிழ்த் தலைவர்களும் கூறியிருக்கவில்லை என்று ஆளும் கட்சி எம்.பி.யான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

சம்பந்தன் எம்.பி. வெளிநாட்டுக்கு சென்று அரசவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார். இன்று இல்லாவிட்டாலும் எதிர்காலத்திலாவது இலங்கை மீது சர்வதேச விசாரணைகள் வரும் என்றும் அவர்கூறியிருப்பது வெட்கத்துக்குரியது. இதன் மூலம் அவர் தேசத்துரோகம் இழைத்திருக்கின்றார். இந்நாட்டின் வரலாற்றில் எந்தவொரு தமிழ்த் தலைவர்களும் இவ்வாறு செயற்பட்டது கிடையாது. இந்நாட்டின் தமிழ், முஸ்லிம் மக்களை இன்றைய அரசாங்கமே பாதுகாத்து வருகின்றது என்றார்.

இதன் மூலம் இலங்கை அரசுமட்டுமல்ல் தமிழ் மக்களையும் ஏமாற்றி விட்டார் என தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  March 7, 2013 at 5:31 PM  

We have heard enough tales from our mums and grand mums,which are not true just to entertain the little children.Ambulimama tales are wonderful.Now Mr.Sam is coming out with the same old Ambulimama tales.Yes Wickrmathiththan again running after the Vedalam.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com