Tuesday, March 5, 2013

முன்னாள் புலிகளை ஒருங்கிணைத்து அரசியல் புரட்சியை ஏற்படுத்துவேன்! மிரட்டுகின்றார் சகாதேவன்.

பிரபாகரனின் பிரேதத்தை தனது ஜீப்பில் கட்டிக்கொண்டு கிளிநொச்சி முழுக்க ஓடித்திரிய ஆசைப்பாட்டாராம் சங்கரியார்! திடுக்கிடும் தகவல்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பின் தலைவர் சகாதேவன் , தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி வருவதாகவும் இச்செயற்பாடு தொடருமானால் முன்னாள் போராளிகளை புதிய அரசியல் பாதையில் இணைத்து அரசியல் புரட்சி ஒன்றை ஏற்படுத்துவேன் என மிரட்டுகின்றார்.

அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சகாதேவன் தமிழ் விடுதலைக் கூட்டணியின் முக்கிய பொறுப்பு ஒன்றில் ஆனந்தசங்கரிக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். தற்போது அவ்வமைப்பிலிருந்து வெளியேறியுள்ளார்.

2009 ம் ஆண்டு புலிகளியக்கம் தோற்கடிக்கப்படும் தறுவாயில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்ததாகவும். பிரபாகரன் இறந்த செய்தியை யாழ்பாணத்திலிருந்து கட்சியின் தலைவர் ஆனந்தசங்கரிக்கு தொலைபேசி ஊடாக அறிவித்தபோது 'அந்த ராஸ்கலின் உடலத்தை யாரிடமாவது வாங்கி கொண்டு வா! எனது ஜீப்பில் கட்டி இழுத்துக்கொண்டு கிளிநொச்சி முழுக்க ஓடிக்கொண்டு திரிய ஆசையாக இருக்கின்றது' எனத் தெரிவித்தாராம் என்ற திடுக்கிடும் தகவலை தனது அறிக்கையில வெளியிட்டுள்ளார் சகாதேவன்;

அவ்வறிக்கை கீழே..


முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்து அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம்.

கடந்த 30 வருட காலமாக தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய விடுதலைப்புலிகள் அமைப்பில் விசுவாசமாகவும், அர்ப்பணிப்புடனும் போராடி, இறுதியில் சரணடைந்து தடுப்பு முகாம்களில் அல்லற்பட்ட முன்னாள் போராளிகள் அனைவரும் இன்று தேடுவாரற்ற நிலையில் அவமானத்தை சுமந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். மேலும் பலர் தொடர்ந்தும் தடுப்பு முகாம்களில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இவர்களுக்காக யுத்தம் முடிந்து 04 வருடங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு என்ன வேலைத்திட்டத்தினை முன்வைத்துள்ளது என்ற கேள்வியினை தாயகத்தில் வாழும் தமிழ் மக்களும், புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் கேட்கத்தொடங்கிவிட்டார்கள்.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தேசிய அரசியல் வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கும் என்று நம்பி நம்பி தமிழ் மக்கள் ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள். இது போதாதென்று நாடு கடந்த அரசாங்கம் என்ற ஒன்றை நடத்தி வரும் திரு.உருத்திரகுமாரன் தமிழ் மக்களின் அவலங்களை வைத்து தங்களது சுயலாபம் கருதிய வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அதாவது போரால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்களைக்கூறி தமிழ் மக்கள் மத்தியில் வாக்கு வாங்கி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நடத்திக்கொண்டிருக்க மறுபக்கத்தில் போரால் பாதிக்கப்பட்ட மக்களைக் காரணம் காட்டி புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடையே நூதனமான முறையில் உண்டியல் குலுக்கி தமிழ் மக்களின் அவலங்களை பணமாக்கும் முயற்சியில் நாடு கடந்த அரசாங்கம் ஈடுபட்டு வருவது வேதனை அளிக்கிறது.

இது வரை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவொரு உதவியும் செய்யாத நாடுகடந்த அரசாங்கம் வெளிநாடுகளில் சேகரிக்கும் பணத்தை போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எவ்விதம் செலவாக்கப்போகிறது என்பதனையும்இ பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணத்தை செலவு செய்ய எவ்வாறான கட்டமைப்பு வசதிகளை கொண்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால் போரால் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக புலம்பெயர்ந்து வாழும் இலட்சக்கணக்கான உறவுகளினால் அன்பளிப்பு செய்யப்படுகின்ற பணம் தமிழ் மக்களின் அவலத்தைக்காட்டி பிழைப்பு நடத்துவோரின் சுகபோக வாழ்க்கைக்கே பயன்னடுத்தப்படும் என்பதே வெளிப்படை.

இதே வேளை 2009ஆம் ஆண்டு நடைபெற்ற வவுனியா நகரசபை தேர்தல் தொடக்கம் அடுத்து வந்த நாடாளுமன்ற தேர்தலிலும்இ கடைசியாக நடந்த கிழக்கு மாகாணசபை தேர்தலிலும் மக்களை ஒற்றுமையாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்குமாறு தூண்டி இதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பு சாதித்தது என்ன.

ஐக்கிய நாடுகளின் அறிக்கையானது ஒரு அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் இதனால் தமிழ் மக்களுக்கு எவ்விதமான விடிவும் ஏற்படாது என்றும் 'தருஷ்மன் அறிக்கை' வெளிவந்த நாளிலிருந்தே நாம் கூறி வருகின்றோம். இவ்வறிக்கையின் உள்நோக்கத்தினை புரிந்து இராஜதந்திரமாக காய் நகர்த்த வேண்டிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இம்முறையும் nஐனிவா சென்று வெறுங்கையுடன் தான் நாடு திரும்புவார்கள். இதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் மக்களுக்கு விரோதமான அரசியல் வேலைத்திட்டம் வலுப்பெற வழி வகுப்பதோடு தங்களது இராஜதந்திர தோல்வியினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், அதன் தலைவர்களும், தாங்கள் சுமக்க வேண்டிய சுமைகளையும், தோல்விகளையும் தமிழ் மக்கள் தலை மீது தந்திரமாக இறக்கி வைத்துவிட்டு தாங்கள் தங்களது அரசியல் கதிரைகளை இறுக்க பற்றி சூடேற்றிக்கொண்டிருப்பார்கள். இது தான் தமிழ் மக்களுக்கு கிடைக்கபோகும் விளைவாக இருக்கும்.

2000ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்ட பின்னர் அந்த அமைப்பின் ஆலோசகராக இருந்தவர் ஆனந்தசங்கரி. அவர் பின்னர் புலிகளால் திட்டமிட்டு ஓரம்கட்டப்பின்னர் அவ்வமைப்பினை மூர்க்கத்தனமாக எதிர்த்தார். அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் திரு.சித்தார்த்தன் தலைமையிலான புளொட் அமைப்பினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்வாங்குவதற்கு தடையாக இருந்தவரும் இதே ஆனந்தசங்கரி தான்.

2009ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் இறந்துவிட்டதாக வந்த செய்தியை எமது தமிழர் விடுதலைக்கூட்டணி 024 222 2818 இலக்க தொலைபேசியினூடாக ஆனந்தசங்கரியின் அலுவலகத்திலுள்ள 0112552372 இலக்க தொலைபேசிக்கு அழைப்பினை ஏற்படுத்தி திரு.ஆனந்தசங்கரிக்கு நான் தெரிவித்தபோது 'அந்த ராஸ்கலின் (பிரபாகரனின்) பிரேதத்தை யாரிடமாவது கேட்டு வாங்கி எடுத்து தன்னுடைய ஜீப்பில் கட்டி இழுத்துக்கொண்டு கிளிநொச்சி வீதியில் உலாவர வேண்டும் என்று தனக்கு ஆசையாக உள்ளது' என்று ஆவேசமாக கூறினார். இப்படியான ஆனந்தசங்கரிக்கு ஏன் ஐ.நா அகிம்சைக்கும், சமாதானத்திற்குமான விருதினை வழங்கினர் என்பது ஐக்கிய நாடுகள் சபைக்கு மட்டும் தான் தெரியும்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பையும், சம்மந்தனையும், அவரது கூட்டாளிகளையும் பற்றி நான் விளக்கமாக இங்கு கூறவேண்டிய அவசியம் இல்லை.
இது தொடர்பாக நான் கூறவுள்ளது இது தான்.

'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு தொடர்பில் தமிழ் மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைய பெற்றுத்தருவதாகக் கூறி அவர்கள் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அழையா விருந்தாளியாக நுழைந்திருப்பது அவருடைய வாக்கு வங்கி அரசியலாக காணப்படுகின்றது. இவரின் உள்நுளைவைத் தொடர்ந்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிளவுகள் ஏற்பட தொடங்கியுள்ளன.

இதேவேளை வடமாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், மாவை சேனாதிராஜா ஆகியோர் முதலமைச்சர் வேட்பாளர்களாக நிறுத்தப்படுவார்களாயின் அவர்களுக்கு எதிராகச் செயற்படுவோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் ஒன்றாக இருந்து இந்தத் தேர்தலை எதிர்கொள்ளும் நேரத்தில் மக்களின் கருத்திற்கு முன்னுரிமை வழங்காது தன்னிச்சையாக முடிவெடுத்தால் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம் அதற்கு எதிராக செயற்படும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள், முன்னாள் போராளிகள் அனைவரையும் ஓரணியாகத் திரட்டி தமிழ்த்தேசிய கூட்டமைப்பினுடைய மக்கள் நலன் சராத, சுயநல, சுயலாப, வாக்கு வங்கி அரசியல் வேலைத்திட்டத்தை எதிர்ப்பதோடு மக்களுக்குரிய புதிய அரசியல் வேலைத்திட்டம் ஒன்றை முன்வைப்போம்'


இவ்வண்ணம்
உண்மையுள்ள
வி.சகாதேவன்
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இயக்கம்


6 comments :

Unknown March 5, 2013 at 6:28 PM  

கூட்டமைப்பின் முகமூடியை கிழித்தெறிந்து,தமிழ் இளம் தலைமுறைக்கு புதிய வழி காட்டுங்கள்.

Unknown March 6, 2013 at 6:08 PM  

தமிழர்களை முட்டாளக்கி அரசியல் வியாபாரம் செய்கிறது குட்டமைப்பு, இவர்களுக்கு ஓய்வுகுடுத்து. புதிய தலைமை உருவாகட்டும். நீங்கள் வழிகாட்டுங்கள். அண்ணா சகதேவன்

Anonymous ,  March 6, 2013 at 7:12 PM  

பல வருட காலமாக, மக்களை ஏமாற்றி, நீதி, நியாயத்திற்கு மாறாக புலிகளுக்கு ஜால்ரா போட்டு தங்கள் இருப்புக்களையும், பிளைப்புக்களையும் மட்டும் பார்த்த சுயநல தமிழீழ அரசியல் கோமாளிகளுடன் ஒப்பிடும் போது, ஆனந்த சங்கரியார் மிகவும் தன்மானமுள்ள, தன்னலமற்ற தமிழ் தலைவர் என்பதை எவரும் மறுக்க முடியாது. இதுவரைக்கும் ஒரு ஒழுங்கான, நேர்மையான தமிழ் தலைவர்கள் இருந்ததில்லை என்பதால் தற்சமயம் ஆனந்த சங்கரியை தலைவராக ஏற்றுக்கொள்வதே சிறந்ததது.

வன்னித் தமிழர்

Arya ,  March 6, 2013 at 11:46 PM  

இது எல்லாமே சுயநல அரசியல் , கூட இருப்பதும் , பின் குழி பறிப்பதும் , தமிழனின் பாரம் பரியம் , இதனால் தான் தமிழன் இன்றைக்கும் கக்கூசு களுவும் இனமாக இருகிறான், சாகிற வயசிலும் பணம் , பதவிகு ஆசை படுகிறான்.
புலியை எதிர்க்கின்றான் பின் அதே புலிக்கு வக்காலத்து வாங்கின்றான் , சுயநலம் தவிர வேறு எதுவும் தெரியாது இவர்களுக்கு , ஆம் இவ்விரண்டு பிண்டங்களைத்தான் குறிபிடுகின்றேன்

Unknown March 7, 2013 at 3:31 AM  

Dear brother sagaadevan, in respect of your ventures and endevour you have under gone to achieve the goals of the war victims of the the north , I with the maximum pleassure i do adore , appreciate and admire your solitary drive to to awaken the people of the north amidst the invincible corrupted atmosphere. dear annah please do not hamper your effort untill the the nothern society realize the current political situation in the war affected area. I do pray the all mighty for all your success in all your attempts.

suthakaran - Periyannelavanai ,  March 7, 2013 at 6:56 AM  

sanghari is the best leader.....
his expectation is correct....like sampanthar...mavai...all are opposed...terrorist PIRABA.
95% TAMILS EXPECT TO KILL PIRABAKARAN.
NO NEED POLITICS WITH LTTE...OK

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com