நாடு கலவர பூமியாக மாற்றம்! கயந்த கருணாதிலக
அரசாங்கம் நாட்டை முழு அளவில் சீரழித்து பேய்கள் கூத்தாடும் கலவர பூமியாக மாற்றியுள்ளது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக குற்றஞ்சாட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் மக்கள் எதிர்பார்த்த வாழ்வு முறையோ சூழலோ நாட்டில் ஏற்படவில்லை. நாட்டின் வாழும் பொதுமக்களின் மூச்சுக் காற்றுக்கும் வரி விதிக்கும் அளவிற்கு அரசாங்கத்தின் நிதி நிர்வாகம் நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
யுத்தத்தின் பின்னர் மக்கள் எதிர்பார்த்த வாழ்வு முறையோ சூழலோ நாட்டில் ஏற்படவில்லைவெறும் கண்கட்டு வித்தைகள் ஊடாக பொதுமக்களை ஏமாற்றி அரசாங்கம் நாட்டை முழு அளவில் சீரழித்து பேய்கள் கூத்தாடும் கலவர பூமியாக மாற்றியுள்ளதுடன், நாட்டில் கொலை மற்றும் களவு போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்து சட்ட ஆட்சி வீழ்ச்சி கண்டுள்ளதுடன் பொலிஸாரும் இணைந்து கூட்டுக்கொள்கைகளில் ஈடுபடுகின்றனர் என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
1 comments :
Sir,Why not you turn back the pages of the history ,1983 a good example for you to remember.
Post a Comment