சுப்பிரமணியசாமி வீடு மீது புலிகளின் ஆதரவினர்களால் தாக்குதல்!
இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் புலிகளின் தலைவர் பிரபாகரன் மகன் பாலச்சந்திரன் கொலை செய்யப்பட்டதை விமர்சித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு ஆதரவாக பேசியதை கண்டித்தும் இன்று(05.03.2013) காலை மதுரை சட்டகல்லூரி மாணவர்கள் 35 பேர் மதுரையில் உள்ள ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சம்பவம் அறிந்த போலீசார் சுப்பிரமணிய சாமி வீட்டுக்கு விரைந்து வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சுப்பிரமணிய சாமி டெல்யில் இருப்பதால், புகார் கொடுக்க முடியவில்லை. இதனால் இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முடியவில்லை. இந்தச் சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1 comments :
It is a shame to the law college,
where they learn about democracy,law and order but the behaviour of the particular students will bring shame to the law colleges and its blindfolded administration.They should know what is law democracy and justice before they start their studies.
Post a Comment