இந்தியாவில் தேடப்பட்ட இலங்கை இளைஞன் கைது!
இந்தியாவில் போலி நாணயத்தாளை கொண்டு பாரிய மோசடியில் ஈடுபட்டு வந்தார் என்ற சந்தேகத்தில் தோடப்பட்டுவந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ம் ஆண்டு மேற்படி குற்றச்சாட்டில ஏழு கிணறு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த முகமது கியாஸ், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்ததுடன் பிணையில் வெளியாகியவுடன் இலங்கை வந்திருந்தார்.
தொடர்ந்து இந்திய நீதிமன்றினை நிராகரித்து வந்த அவருக்கு சர்வதேச பொலிஸ் உதவியுடன், சிவப்பு அட்டை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு, வேறு பெயரில் வந்திருப்பதாக, சி.பி.சி.ஐ.டி., போலி நாணயத்தாள் தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு, தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருச்சி சென்ற பொலிஸார், முகமது கியாசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
0 comments :
Post a Comment