மேலுமொரு போர்க்குற்ற ஆதாரப்படத்தை வெளிவிட்டது அதிர்வு இணைத்தளம்.
இலங்கையில் இடம்பெற்றதாக சுமத்தப்படுகின்ற போர்க்குற்றங்களுக்கு ஆதாரம் இதோ என அதிர்வு இணையத்தளம் அதிரடியாக மேலும் ஒரு படத்தினை வெளிவிட்டுள்ளது. பல உடல்கள் எரிந்து கருகிய நிலையில் காணப்படும் „குறிப்பிட்ட இப்புகைப்படம் முள்ளிவாய்க்காலுக்கு அருகில் எடுக்கப்பட்டதா இல்லை பிறிதொரு இடத்தில் எடுக்கப்பட்டதா என்று தெரியாத நிலை காணப்படுகிறது' என அவ்விணையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தெரிவிப்பதன் ஊடாக , நிட்சயமாக இப்படம் முகமாலை , ஓமந்தை , பூநகரி போன்ற முள்ளிவாயக்காலிலிருந்து சற்றேனும் தூர இடங்களில் எடுக்கப்படவில்லை என்றும் முள்ளிவாய்கால் அல்லது அண்மித்த இடத்திலேயே எடுக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் அதிர்வு சொல்கின்றது.
தம்மீது சுமத்தப்படுகின்ற போர் குற்றச்சாட்டுக்கள் யாவும் அடிப்படை ஆதாரம் அற்ற புனையப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்றும் அதற்கு சான்றாக சமர்பிக்கப்படுகின்ற வீடியோக்கள் படங்கள் யாவுமே சோடிக்கப்பட்டவை என்றும் இலங்கை அரசு கூறுகின்றது.
„இப்புகைப்படம் முள்ளிவாய்க்காலுக்கு அருகில் எடுக்கப்பட்டதா இல்லை பிறிதொரு இடத்தில் எடுக்கப்பட்டதா என்று தெரியாத நிலை காணப்படுகிறது'; என அதிர்வு இணையம் தெரிவிக்கின்றது. ஆனால் வன்னியின் யுத்தம் பற்றி கேள்விப்பட்ட வாசகர்களுக்கு இப்படத்திலுள்ள வீடு முள்ளிவாய்காலில் அல்லது அதற்கு அண்டிய பிரதேசத்தில் உள்ளது என்று சொன்னால் : அவர்கள் என்ன கேட்பார்கள் தெரியுமோ? „ இந்த வீட்டின் ஓடுகள், சுவர் யாவும் புளெட் புருபோ' என்றுதான் கேட்பார்கள். ஏன் என்றால் வன்னியில் பெய்த செல்மழை படாத ஒரே ஒரு கட்டிடம் தமிழ் தேசியத் தலைவர் எனத் தனக்கு தானே மகுடம் சூட்டிக்கொண்டவரின் நிலக்கீழ் மாளிகை மாத்திரமே என்பது அனைவரும் அறிந்த உண்மை.
தப்பி தவறியும் கண்தெரியாத வயதுபோன சீவன் ஒன்றை பிடித்து அம்மா ! ஐயா! முள்ளிவாய்காலில் வீடு ஒன்று இருக்கின்றது. அந்த வீட்டின் உரிமையாளர்கள் எவரையேனும் வீட்டில் பாதுகாப்புக்காக அமரவைக்க விரும்புகின்றனர். வீட்டின் படம் என் கையில் உள்ளது. உங்களுக்கு பார்வை இல்லைத்தானே நான் படத்தில் என்ன இருக்கின்றது என விளக்குகின்றேன் என்றால் : விளக்குவதற்கு முன்னர் வயது போன சீவன் என்ன கேட்கும் தெரியுமோ? „ என்ர குஞ்சு கூரை எப்படிக்கிடக்குதடி „ என்றுதான் கேட்கும். ஏனென்றால் அந்த வயது போன ஜீவனுக்கும் தெரியும் வன்னியில் கூரையுடன் ஒரு வீடும் தப்பவில்லை என்பது.
அதிர்வு மாதிரி சிறிதும் விளக்கம் இல்லாமல் „இந்தப்படத்தில் உள்ள வீட்டின் கூரையிலோ அன்றில் சுவர்களிலோ ஒரு சின்ன காயமும் இல்லை' என்று சொன்னால், பழசு என்ன சொல்லும் தெரியுமோ: ' என்ர சிவனறிய (இன்றைக்கு சிவராத்திரி என்ற படியால்) உந்தவீடு வெளிநாட்டில்தான் இருக்கிறது, வன்னிக்குள்ளே இல்லே, நான் போகன் , என்ர கடைசி மூச்சு உங்கதான் பிரியவேண்டும் ' என்றுதான் சொல்லும்.
அதுக்கும் மேல கிறுக்கு பிடித்த கிழடாக இருந்தால் என்ன சொல்லும் தெரியுமோ „இந்த கொம்புயூட்டர் படித்தவங்கள் யாரையும் பிடித்து முதல் உந்த கூரையை வெட்டிப்போட்டு , மிச்சத்தப்பார்' என்று சொல்லும்.
அதிர்வின் பிரகாரம் உண்மையில் இது முள்ளிவாய்கால் பிரதேசத்தில் எடுக்கப்பட்ட படமாக இருந்தால் அது சிலவேளை யுத்தம் ஆரம்பிப்பதற்கு முன்னர் புலிகளின் ஆட்சியில் வன்னி இருந்தபோது, அதாவது கட்டிடங்கள் செல்தாக்குதலால் சிதைவதற்கு முன்னர் எடுக்கப்பட்டவையாக இருக்கவேண்டும்.
அவ்வாறாயின் இவை வன்னியில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளாக இருக்கவேண்டும். எனவே இங்கே இறந்து கிடக்கின்றவர்கள் இலங்கை இராணுவத்தினரை சேர்தந்தவர்களா? அன்றில் மாற்று தமிழியக்க உறுப்பினர்களா? என்ற கேள்விகளை எழுப்ப வேண்டியுள்ளது. இது சில நேரங்களில் சாத்தியமாக இருக்கலாம். காரணம் இங்கு இறந்து கிடப்பவர்கள் யாவருமே ஆகக்குறைந்தது 6 அடி 2 – 3 அங்குலம் உயரம் கொண்ட உயர்ந்த பெரிய மனிதர்கள். இவ்வாறானவர்கள் இலங்கை இராணுவத்திலும் ஒரு குறைந்த தொகுதியினரே உள்ளனர் என்பதுடன் இயக்கங்கள் ஆரம்பமானபோது ஒரு சில உறுப்பினர்கள் இவ்வாறு உயர்ந்த பெரிய தோற்றம் உள்ளவர்களாக இருந்துள்ளனர்.
அது தவிர வன்னியிலிருந்து படையினரால் மீட்கப்பட்ட அதிகமானோர் சுமார் 5 அடி 5 அங்குலம் நீளம் கொண்டவர்கள் என்பதும் புலிகளால் இரத்தம் உறிஞ்சப்பட்டு மிகவும் நலிந்த உடல்நிலையில் இருந்தவர்கள் என்பது யாவரும் அறிந்த உண்மை.
இதனை உறுதிப்படுத்தும் முகமாக கிளிநொச்சியில் புலிகளின் ஆட்சியில் இருந்த நபர் ஒருவர் தனது குழந்தைக்கு பால் பக்கட்டு ஒன்றை வாங்குவதற்கு புலிகளுக்கு தான் தனது இரண்டு பைன்டு இரத்தத்தை கொடுக்க நேரிட்டதாக தெரிவிக்கின்றார். அதன் வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது.
எது எவ்வாறாயினும் „ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பார்கள்- அந்தவகையில் மேற்படி படம் புலிகளின் போர் குற்றச்சாட்டுகளையும் அதன் ஆதாரங்களையும் தோலுரித்து காட்டியுள்ளது.
காலம் கடந்தாவது உண்மையை வெளியிட்டமைக்கு அதிர்வுக்கு மக்கள் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும். கண்ணா முடிந்தால் நைஜீரியா , சூடான் நாடுகளில் இடம்பெற்ற மனித நேயமற்ற கொலைகள் தொடர்பான படங்கள் இதேபோன்று நூற்றுக்கணக்கில் உள்ளது, தேடி எடுத்துவந்து போட்டு போர்குற்றப்படம் காட்டு கண்ணா.
எடுக்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள் சிலவற்றை சொல்லுகின்றேன் கேளு கண்ணா!.
படத்தின் காணப்படக்கூடிய வீடுகள் உடைந்து , கூரை சிதைந்து , அண்மையிலுள்ள மரங்கள் நொருங்கி காணப்படவேண்டும்.
தரை பள்ளம் மேடாக இருக்கவேண்டும்.
படத்தில் இருப்பவர்கள் சாதாரணமாக இலங்கை மக்களில் உடல் பருமன் உள்ளவர்களாக இருக்கவேண்டும். (வியட்னாம் யுத்தத்தில் உயிரிழந்த படங்கள் சிலவேளை சரியாக இருக்கலாம்)
பெண்கள் செத்துக்கிடந்தால் அவர்களின் மார்பகத்தின் அளவை கருத்தில் எடுக்கவேண்டும். ஆண்கள் என்றால் ஆணுடம்பின் அளவு கட்டாயம் கவனத்தில் கொள்ளப்படவேண்டியது. (காரணம் படத்தில் உள்ளது நிட்சயமாக ஆபிரிக்கர்கள் எனத் தெரிகின்றது. )
அத்துடன் இச்சந்தர்ப்பத்தில் மேலும் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் ஒன்று உள்ளது. இலங்கையில் யுத்தம் உக்கிர நிலையை அடைந்திருந்தபோது, 13.05.2009 நெஞ்சை உருக்குகின்ற படங்களை வெளியிட்டிருந்த அதிர்வு உட்பட்ட சில இணையத்தளங்கள், அதன் செய்தியில் இலங்கையின் வடக்கே, வன்னியில் இடம்பெறும் யுத்தத்தில் புலிகளை நிராகரித்து அரச கட்டுப்பாட்டினுள் வந்துள்ள மக்களை அரச தரப்பினர் கடத்திச் சென்று பொலநறுவைப் பிரதேசத்தில் உள்ள மறைவிடம் ஒன்றில் வைத்து அவர்களது உடல் அவயவங்களை (சிறுநீரகம், இருதயம், நுரையீரல்) கழற்றிய பின்னர், உடலங்கள் குளிரூட்டப்பட்ட சவ அறை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்ததடன் இவ் உடலங்களை பொலநறுவைப் பிரதேசத்தில் உள்ள இராணுவ அதிகாரி ஒருவரது மகளின் ஞானஸ்தான தீட்சை வைபவத்திற்கு சென்றிருந்த கத்தோலிக்க பாதிரியார் ஒருவர் கண்ணால் கண்டு அவற்றை படமெடுத்து வந்தாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் 24.04.2009 அன்று கிளிநொச்சியில் இயங்கும் மர்மச் சிறைச்சாலை எனும் தலைப்பில் சில படங்கள் வெளியிடப்பட்டிருந்தது.
அவ்விரு படங்கள் தொடர்பிலும் நாம் தேடுதலை மேற்கொண்டபோது „இந்தியாவில் எவ்வாறு மரணபரிசோதனை செய்கின்றார்கள் என்பதை எடுத்துரைக்கும் இணையத்தளம் ஒன்றில், உடலங்கள் எவ்வாறு வெட்டி கீறிக் கிழிக்கப்பட்டு மரண பரிசோரனை மேற்கொள்ளப்படுகின்றது என்பதை விளங்கப்படுத்துவதற்கு தரவேற்றம் செய்யப்பட்டிருந்த படங்கள் என்பதை அறிந்து கொண்டதுடன் அதனை ஆதாரங்களுடன் வாசகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம்.
பொய்ப்பிரச்சாரம் ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்ட அதிர்வு அந்தர் பல்டி அடித்து மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது. ஆதாரம் கீழே.
இதேபோல் இம்முறையும் அந்தர் பல்டி அடிக்கக்கூடாது. இப்படங்களுடன் சர்வதேச நீதிமன்றுக்கு செல்லவேண்டும்.
1 comments :
பொறுப்புடன் நடந்துகொள்ளுங்கள்
http://wafflesatnoon.com/2011/10/16/nigerian-christians-burnt-alive-photo-hate-mongering-fake/
Post a Comment