அடுத்த வாரம் முதல் போக்குவரத்துக் கட்டணம் அதிகரிக்கப்படும்!
அடுத்த வாரம் முதல் நாட்டின் போக்குவரத்துச் சேவையிலுள்ள அனைத்து தனியார் பேரூந்துகளுக்குமான கட்டணத்தை உயர்த்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேரூந்துச் சங்க உறுப்பினர்கள், உயரதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 6% - 7% இடைப்பட்ட அளவில் பேரூந்துக் கட்டணத்தை உயர்த்துவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மிகக் குறைந்த கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்றும் இதற்கு தனியார் போக்குவரத்து அமைச்சர் விருப்புத் தெரிவித்துள்ளதாகவும் இலங்கைத் தனியார் பேரூந்து உரிமையாளர்களின் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எதுஎவ்வாறாயினும், இதுபற்றிக் கருத்துத் தெரிவித்த தனியார் போக்குவரத்துச் சேவை அமைச்சர் சீ.பீ. ரத்நாயக்கா, ‘பேரூந்துக் கட்டணத்தை உயர்த்துவது பற்றி இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குழுவொன்று இன்று தனியார் பேரூந்துச் சங்கங்கள் பலவற்றுடன் கலந்துரையாடியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
1 comments :
Look before you leap,just hitting the poor man`s stomach may push the poorman into greater inconveniences,the results would be disasterous.people belong to the poverty line travel in buses and in private transports.Rich people may make use of their cars.Politics should be specially centered to the grievances of the poor and not the rich and richest.
Post a Comment