ரஜீவ் காந்தி கொலையாளிகளை தூக்கிலிடுவீர்! சுப்ரமணியசுவாமி
இந்திய நாட்டின் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் குற்றவாளிகள் எனத் நிருபிக்கபட்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மூவரையும் விரைவில் தூக்கிலிடவேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் டாக்டர் சுப்ரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது மேற்கண்ட கோரிக்கையை விடுத்த அவர் இதே தண்டனை விதிக்கப்பட்டுள்ள வீரப்பன் கூட்டாளிகளுக்கும் தூக்கு தண்டணையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.
மஹிந்தவை சந்தித்தது தொடர்பாக கேட்கப்பட்டபோது 'இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு தனி மாநிலத்தை பெற்றுத் தருவதற்காகவே அந்நாட்டு அதிபர் ராஜபக்ஷேவை அண்மையில் சந்தித்து பேசினேன்' என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில் 'வருகிற மக்களவை தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தோல்வியை தழுவும். பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தான் ஆட்சியை அமைக்கும். தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இணையுமா என்பதற்கு ஜெயலலிதாவிடம் தான் கேட்க வேண்டும்' என்றார்
0 comments :
Post a Comment