பரத லக்ஷ்மன் கொலை வழக்கின் சந்தேக நபர்கள் ஜாமீனில் விடுவிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மனின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்கள் மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகபடுகின்றது. மேற்படி வழக்கினை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய சந்தேக நபர்கள் மூவரையும் தலா 50000 ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க உத்தரவு பிறபித்தார்.
அதன்படி பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் பாதுகாப்பு அதிகாரி ஏ . அனுர துஷார மற்றும் தனிப்பட்ட பாதுகாவலர்கள் சரத் பண்டார உள்ளிட்ட மேலும் ஒருவர் இவ்வாறு விடுவிக்கப்பட்டு இருப்பதாக அறியப்படுகின்றது.
அத்துடன் பிரதி சனிக்கிழமை தோறும் இவர்கள் குற்றவியல் விசாரணைகள் பிரிவினர் முன்னிலையில் ஒப்பமிடவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆயினும் சந்தேக நபர்களால் வழக்கின் சாட்சிகள் அச்சுறுத்தப்படும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் கைதுசெய்யப்படுவார்கள் என உயர் நீதிமன்ற நீதவான் லலித் ஜயசூரிய அறியத்ததுள்ளார்.
இதே வேளை பரத லக்ஷ்மன் கொலை தொடர்பில் கைதான சமிந்த ருவிநாத் என்று அழைக்கப்படும் தெமட்டகொட சமிந்த உள்ளிட்ட மேலும் மூவர் சமர்பித்திருந்த பிணை மீதான மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் மீது மேலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள காரணத்தினால் இவர்களின் பிணை மனு நிராகரிக்கபடுவதாக அறியப்படுகின்றது.
எனவே இவர்களுக்கு மேலும் மூன்றுமாத சிறைவாசம் நீடிப்பதாகவும் அறியப்படுகின்றது.
0 comments :
Post a Comment