தாக்குதல் அச்சமே வவுனியாவில் தடுப்பு
கொழும்பில் நடைபெறவிருந்த ஆர்ப்பாட்டமொன்றில் கலந்து கொள்வதற்காக வவுனியாவிலிருந்து புறப்பட்ட பொதுமக்களின் பஸ்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களை அடுத்தே அவர்கள் கொழும்பு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான புத்திக சிறிவர்தன தெரிவித்தார். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட சில பஸ்கள் மீது இனந்தெரியாதோர் சிலர் கற்களை வீசித் தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
அத்துடன், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவிருந்தவர்கள் பயணிக்கும் பஸ்கள் மீதும் கல் வீச்சுத் தாக்குதல்கள் நடத்தப்படவிருந்ததாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இந்நிலையில், அம்மக்களின் பாதுகாப்பு கருதியே அவர்களை கொழும்புக்கு செல்லவிடாது பொலிஸார் தடுத்தனரே தவிர, அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்பது பொலிஸாரின் நோக்கமல்ல என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment