உயருது பாரீர் மின்சாரப் பட்டியலும்.....!
ஏப்ரல் மாதம் முதல் 30% அதிகரிப்பு
மின்சாரப் பட்டியல் அடுத்த மாதம் முதல் நூற்றுக்கு முப்பது வீதம் அதிகரிக்கப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தற்போது புதிய விலைப் பட்டியலைமறுசீரமைத்துள்ளது.
புதிதாக நிர்ணயிக்கப்பட்டுள்ள பட்டியல் கட்டணங்கள் அலகு 1 - 30 வரை 60/= வினாலும், அலகுகள் 30 - 90 வரை 170/= வினாலும் உயர்த்தப்படும். அலகுகள் 90 - 120 வரை 800 ரூபாவினாலும், 120 - 180 வரை 1750/= வினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக உயர்மட்டத் தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.
இதுதவிர, தொழிற்சாலைகளுக்குரிய மின்சாரக் கட்டணம் நூற்றுக்கு 30% அதிகரிக்கப்படவுள்ளது.
இந்நாட்டு மின்சார உற்பத்தியிலிருந்து 80% மட்டுமே எரிபொருளினாலும், நிலக்கரியினாலும் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதனாலேயே இவ்வாறு மின்சாரப் பட்டியல்களில் தொகை அதிகரிப்பு நிகழ்த்தப்படுகின்றது என்று அரசாங்கம் குறிப்பிடுகின்றது.
அடுத்த மாதம் முதல் மின்சாரப் பட்டியல் தொகை அதிகரிப்புடன் வழங்கப்படவுள்ள அனைத்து மின்சாரப் பட்டியல்களிலும் பாவனையாளர்களின் பாவனை அலகுக்கு ஏற்ப செலவாகும் தொகையும், பாவனையாளர்களுக்குக் கிடைக்கின்ற கழிவுகளும் வெவ்வேறாகக் குறித்துக் காட்ட அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment