"இலங்கை தமிழர்கள் தமிழகத்தை நம்பலாமா?!"
மனித சிந்தனைகள்தான் எத்தனை வினோதமானது! எத்தனை விந்தையானது!!.. காலத்துக்கு காலம் மாற்றமடையும் இந்த மனித சிந்தனைகள்.. மனித குலம் பயனடையும் வகையில் ஒரு சீரான ஆரோக்கியமாக பாதையில் பயணிக்குமேயானால் அது பாராட்டுக்குரியதுதான்!.. ஆனால் அந்த சிந்தனைகள் ஒரு தனி மனித இனத்தில் இருக்கும் நெருக்கடிகளுக்கு சரியான தீர்வு காண முயற்சிப்பதற்கு பதிலாக.. அந்த நெருக்கடிகளை அதிகரிக்கும் வகையில் வேறு ஒரு விதண்டாவாத பாதையில் பயணிக்குமானால் அது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த மனித குலம் சிலவேளைகளில் சிந்திக்க தவறி விடுகிறது..
இன்று இலங்கை தமிழர்களுக்கு உதவுகிறேன் பேர்வளிகளாக.. போராட்ட களத்தில் இறங்கியிருக்கும் தமிழக மாணவர்கள்.. பிரபாகரன் என்ற தனி மனிதன் ஒருவரின் மகன் பாலச்சந்திரன் படுகொலை விடயத்தை கையில் எடுத்துக் கொண்டு.. இலங்கையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ போர்க் குற்றவாளியாக தண்டிக்கப்பட வேண்டும்.. இலங்கை தமிழர்களின் இன அழிப்புக்கு இவர்தான் முக்கிய காரணமானவர் என்று கூறிக் கொண்டு.. அவர் உருவப் பொம்மையை எரிப்பதும்.. உண்ணா விரதம் இருப்பதும்.. ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடத்துவதும்.. இலங்கை தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்குமே தவிர அது எந்த விதத்திலும் இலங்கை தமிழர்களுக்கு ஒரு விமோசனத்தையோ அல்லது ஒரு தீர்வையோ கொண்டு வரப்போவதில்லை என்பது உறுதியானதொன்றாகும்..
தமிழகத்தில் இவர்களுடைய இந்த திடீர் ஆர்ப்பாட்டங்களால் கல்லூரிகள் யாவும் காலவரையறையின்றி இழுத்து மூடப்பட்டுள்ளன.. நடைபெற இருந்த வருடாந்த பரீட்சைகளும் பின் போடப்பட்டுள்ளன.. கல்லூரி வளாகங்களில் அமைந்திருக்கும் மாணவர் தங்கு விடுதிகளும் திடீரென்று மூடப்பட்டு அங்குள்ள மாணவ மாணவிகள் அனைவரும் உடன் வெளியேற வேண்டும் என்ற அரசாங்க கட்டளையால்.. தூர பிரதேசங்களில் இருந்து அங்கு வந்து தங்கியிருந்த மாணவ மாணவிகள் இந்த திடீர் உத்தரவால் பல அசௌகரியங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.. ஒரு நாட்டின் வழர்ச்சியில் பெரும் பங்காற்றும் மாணவர் கல்விக்கு இப்படி ஒரு இடைஞ்சல் ஏற்பட்டிருப்பது எத்தனை வேதனைக்குறியது என்பதை இதை ஊக்குவிக்கும் சுயநலவாத அரசியல் அமைப்புகள் சிறிதளவேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறதா!.. இல்லையே!...
ஒரு பிரச்சனையின் தூர நோக்கு சிந்தனையற்ற ஒரு மாணவர் சமூகத்தினரை.. அரசியல் சூதாட்டத்தில் பழம் தின்று கொட்டை போட்ட சில தமிழக அரசியல்வாதிகள் தூண்டி விடுவது கண்டிக்கப்பட வேண்டியஒரு காரியமாகும்!.... மாணவர்களுக்கே உரிய இளமைப் துடிப்புடன் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படம் வரைந்த பானரின் பின்னணியில் அவர்கள் உண்ணா விரதம் இருக்கும் காட்சியை பார்க்கும்போது வேதனையாகத்தான் இருக்கிறது..
ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்துக் கொண்டு.. பாலசந்திரன் என்ற அந்த ஒன்றுமறியாத அப்பாவி சிறுவன் படுகொலை செய்யப்பட்டது சிரூபிக்கப்பட்டால்.. அது ஒரு பாதகச் செயல் என்பது எவராலும் மறுக்க முடியாத ஒன்றுதான்.. ஆனால் அதே வயதையொத்த எத்தனைபோ அப்பாவிச் சிறுவர்கள் இந்த பாலச்சந்திரனின் தகப்பனாகிய பிரபாகரனால்.. அவரது சமாதானத்தை மறுதலித்த அடாவடி யுத்தத்தில் பலி கொடுக்கப்பட்ட அந்த மகா பாதகச் செயல்கள் யாவும் புகைப்படங்களுடனும்.. வீடியோ காட்சிகளுடனும்.. அந்த குழந்தைகளின் பெற்றோரின் சாட்சிகளுடனும் நிரூபிக்கப்பட்டிருக்கிறன.. அந்த அப்பாவி சிறுவர்களின் மரணத்திற்காக தமிழகத்தில் கண்ணீர் வடித்தவர் யார்?.. குரல் கொடுத்தவர் யார்?.. ஒருவருமில்லையே!!.. ஆனால் இன்று மட்டும் ஏன் இந்த கண்ணீர்!.. ஏன் இந்த போராட்டம்!!..
இன்று இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைகளை வைத்து தமிழகத்தில் அரசியல் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் சீமான்.. வைகோ.. பழ நெடுமாறன்.. திருமாவளவன் போன்றோர் தங்கள் சார்பில் தனித் தனியாக துடிப்புள்ள இளைஞர்களை பிரித்தெடுத்துக் கொண்டு.. தங்கள் போராட்டங்களை தனித்தனி வழிகளில் நடத்துகிறார்களே.. இவர்களுக்கு இலங்கைத் தமிழர்கள் மேல் உண்மையான அக்கறையிருகுமேயானால் ஏன் இவர்கள் அனைவரும் ஒரே அணியில் ஒன்று திரண்டு.. அந்த இளைஞர்களை எல்லாம் ஒன்று திரட்டி தங்கள் போராட்டங்களை பலம் பொருந்திய ஒன்றாக நடத்தக் கூடாது என்று இந்த மாணவர்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறார்களா?....
இப்படித்தானே அன்றொரு காலத்தில் தமிழர்களின் விடுதலைக்கு போராடப் புறப்பட்ட இளைஞர்கள் தனித் தனியாக பிரிந்து பற்பல இயக்கங்களாக உருவெடுத்தபோது.... அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தமிழர்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்ப்பதற்கு பதிலாக.. பிரபாகரன் என்ற மனிதன்.. "தலைமை" என்ற பதவி ஆசையினால்.. அவர்கள் அனைவரையும் அழித்து.. தமிழர்களின் தனிப்பெருந்த தலைவராக தன்னை உயர்த்தி.. தனது சர்வாதிகாரத்தினால் தமிழர்களை அடக்கி ஒடுக்கி அரசாண்டு.. முடிவில் ... தமிழினத்தின் விடுதலையை குழி தோண்டிப் புதைத்து விட்டு.. தானும் அழிந்து போனார் என்ற உண்மையை இந்த மாணவ இளைஞர்கள் ஏன் சிறிதேனும் சிந்தித்து பார்க்கவில்லை!.. அன்றைய போராட்டக் குழுக்கள் அனைத்தையும் பிரபாகரப் புலிகள் அரவணைத்து அந்த விடுதலைப் போராட்டத்திற்கு வலுவூட்டியிருந்தால் இன்று இத்தனை மனித அழிவுகள் அங்கு ஏற்பட்டிருக்குமா?.. என்றோ இலங்கை தமிழர்களின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்திருக்குமே!..
ஆம்..இவைகள் யாவுமே இன்று இலங்கைத் தமிழர்களுக்காக கூக்குரலிடும் தமிழக அரசியல்வாதிகள் யாவரும் நன்கு அறிந்தவைகள்தான்!.. ஆனால் அன்று மௌனம் சாதித்த இவர்கள் இன்று மட்டும்,, நீலிக் கண்ணீர் வடித்து வீராவேசப் பேச்சுகள் பேசுவது எதற்காக? ஆம்.. இவைகள் அனைத்துமே இந்த கூழைக் கூத்தாடிகள் தங்கள் சுயநலங்களுக்காக ஆடும் அரசியல் தெருக் கூத்துகளே தவிர வேறொன்றுமில்லை!....
இன்று இலங்கை தமிழர்களின் நலன்களுக்காக என்று வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கியிருக்கும் இந்த அரசியல்வாதிககள் ..கடந்த காலங்களில் எப்படியெல்லாம் அரசியல் குத்துக்கரணம் அடித்திருக்கிறார்கள் என்பதை தமிழகத்தில் நடைபெற்ற கடந்தகால தேர்தல்களை இந்த மாணவர்கள் ஆராய்ந்து பார்த்திருந்தால் அவர்களுக்கு அது சரியாக புரிந்திருக்கும்..
என் இரத்தத்தின் இரத்தம் என்றும்.. என் உயிரின் உயிரே என்றும் வாய் நிறைய அழைக்கப்பட்டவர்களை.. பின்னர் அதே வாயால் பச்சைத் துரோகி என்றும்.. மானம் கெட்டவன் என்றும்.. திட்டித் தீர்ப்பது தமிழக தேர்தல் மேடைகளில் பல்லாண்டு காலமாக.. பல தடவைகளில் பலரும் கண்டு புளித்துப்போன விடயங்கள் என்பதை.. பாவம் இந்த அரசியல் அரிச்சுவடி அறியாத மாணவர்கள் எப்படி அறிந்திருப்பார்கள்!... இந்த பச்சோந்தி தமிழகஅ ரசியல்வாதிகள் அனைவரும் ஒருவருக்கொருவர் தோளில் கைபோட்டு.. சந்தர்ப்பம் வரும்போதுமுதுகில் கத்தி பாய்ச்சும் புரூட்டஸ் தனமான அரசியல்வாதிகள் இவர்கள் என்பதை அந்த மாணவர் சமூகம் உணர்ந்து கொண்டதில்லை!.. ஆறு கடக்கும்வரைதான் இவர்கள் அண்ணன் தம்பிகள்.. ஆறு கடந்த பின்.. நீ வேறு நான் வேறு என்ற ரகத்தை சேர்ந்தவர்கள் இவர்கள்!....
போராட்டங்கள் தோல்வியுற்று.. பலத்த மனித அழிவுகளும் நடந்து.. அனைத்தும் முடிந்து.. சுமார் நான்கு வருடங்கள் கடந்து விட்ட நிலையில்.. தற்போது ஒரு சமாதானப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் தமிழ் சிங்கள மக்களின் உறவை சீர்குலைக்கும் முகமாக இவர்கள் ஆரம்பித்து நடத்திக் கொண்டிருக்கும் இந்த போராட்ட போட்டியில்.. உன்னை விட நான்தான் இலங்கை தமிழ் இனத்தின் மேல் அக்கறையுள்ளவன் என்று காட்டி இன்று எதற்காக அனைத்து தமிழக அரசியல்வாதிகளும் முன்னின்று போராடுகிறார்கள்?.. ஆம் தங்கள் அரசியல் தளத்தை படுத்தும் முகமாக.. தமிழக மக்களின் ஆதரவை தங்கள் பக்கம் திரட்டும் ஒரு போலியான அமைச்சூர் நாடகமே தவிர இவைகள் வேறொன்றுமில்லை!..
மனிதப் படுகொலை!.. மனிதப் படுகொலை!!.. என்று இந்த தமிழக அரசியல்வாதிகள் வாய்க்கு வாய் கொப்பளிக்கும் இந்த வார்த்தைகள் உண்மையில் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்காக எழுப்பப்படுகிறதா??,, அப்படியானால் இலங்கை தமிழர்களின் பிரதேசங்களில் பிரபாகரனின் நிழல் ஆட்சிக் காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்களே அப்போதெல்லாம் அந்த மனித படுகொலைகளுக்கு எதிராக குரல் கொடுக்க எந்த ஒரு தமிழக அரசியல்வாதிகளும் முன் வரவில்லையே!.!.. யாழ்ப்பாண வீதிகளில் தெரு நாய்களை விட கேவலமாக தரதரவென்று இழுத்து வரப்பட்ட மாற்று இயக்கங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உயிருடன் டயர் போட்டு எரிக்கப்பட்ட போதெல்லாம் எங்கே போனது இவர்கள் மனிதாபிமானம?.. அப்போதெல்லாம் வாய் மூடி மௌனம் காத்த இந்த தமிழக அரசியல் கூட்டம்.. இப்போது மட்டும் மனிதாபிமானம் பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது!..
பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டது வேதலைக்குரிய விடயம் அதற்கு காரணமானவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.. தண்டிக்கப் படவேண்டும்.. என்று கூக்குரலிடும் இவர்கள்.. பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் கதற.. கதற.. அவர்களை எட்டி உதைத்து.. இதே பாலச்சந்திரனின் வயதை ஒத்த ஆயிரக் கணக்கான அப்பாவி குழந்தைச் செல்வங்களை பிரபாகரனின் அடியாட்கள் பலோத்காரமாக இழுத்துச் சென்று.. தங்கள் படையணியில் இணைத்து.. கையில் ஆயுதத்தை திணித்து.. அங்கே போர்க்களங்களில் அநியாயமாக பலி கொடுத்த போதெல்லாம் எங்கே போயிருந்தது இவர்கள் மனிதாபிமானம்!.. அன்று ஒரு இந்திய தமிழக தெரு நாய்கூட அவர்களுக்காக தெருவில் நின்று ஊழையிட முன்வரவில்லையே!.. ஏன்?... இன்று யாருக்காக ஆடப்படுகின்றன இந்த நாடகங்கள்?.. இலங்கை தமிழர்களுக்காகவா?.. அல்லது அந்த தமிழக அவரசியல்வாதிகளின் சுயநல அரசியல் லாபத்திற்காகவா?..
அண்மையில் தஞ்சாவூருக்கு தொல் பொருள் ஆராச்சிக்காக வருகை தந்திருந்த சிங்கள மாணவர்கள் குழுவொன்றை சேர்ந்த ஒரு பௌத்த துறவியை குறி வைத்து.. அவர் பயத்துடன் மிரண்டு.. மிரண்டு அங்குமிங்கும் ஓட .. அவரை விரட்டி.. விரட்டி தாக்கியிருக்கிறது ஒரு தமிழ் வெறியேற்றப்பட்ட இளைஞர் கூட்டம்.. "சிங்கள நாயே வெளியேறு!".. என்று கூக்குரலிட்டபடி அவரை அடித்து விரட்டி துன்புறுத்தி தங்கள் கேவலமான தமிழ் உணர்வை வெளிக்காட்டியிருக்கிறது அந்த தமிழக வெறிக் கூட்டம்.... இதுதானா வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் பண்பு?.. இதுதானா மகாத்மா காந்தி பிறந்த நாட்டிற்கு வருகை தருவோருக்கு வழங்கப்படும் மரியாதை?..
அதைவிட கேவலமாக சென்னை சென்ரல் ரெயில் நிலையத்தில் வந்திறங்கிய இன்னொரு பௌத்த துறவி ஒருவரையும் இதே பாணியில் தாக்கியிருக்கிறது சீமானின் நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த இளைஞர் குழு ஒன்று.. இவர்கள் நாம் தமிழர் கட்சியின் அடையாளமான கறுப்பு முழு கைச்சட்டை அணிந்திருப்பதிலிருந்து இது சீமானின் எடுபிடிகள்தான் என்று தெளிவாக தெரிகிறது.. இப்படிப்பட்ட நிகழ்சிகளுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைமுக ஆதரவும் இருந்து வருகிறது என்றுதான் கூற வேண்டும்..... ஏனெனில் இலங்கை தமிழர்கள் விடயத்தில் கருணாநிதிக்கு போட்டியாக அவர் களமிறங்கியிருக்கும் காரணத்தால்தான்.. அவருடைய மறைமுக ஆதரவின் துணையுடன் இந்த வன்முறையாளர்கள் இப்படிப்பட்ட கொடுமைகளின் உச்ச கட்டத்தை அடைகிறார்கள் என்று கருத முடிகிறது...
எதிர்த்து போராட திராணியற்ற அந்த அப்பாவி துறவியின் பரிதாபத்தை.. இந்திய தமிழினத்தை வெட்கித் தலை குனிய வைக்கும்அந்த காட்சியை..கீழேயுள்ள இந்த லிங்கில் பார்வையிடலாம்..
இதை பார்க்கும்போது சுமார் 65 வருடங்களுக்கு முன் ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிசக் கொள்கைகளுக்கு ஆதரவளித்து.. அவர் வழியையே பின்பற்றி வந்த இத்தாலிய சர்வாதிகாரி முசலோனியும்.. தனது "கருப்பு சேட்" குண்டர் படையை கொண்டு யூத மதத் தலைவர்களை குறி வைத்து நட்ட நடுவீதிகளில் அடித்து உதைத்து துன்புறுத்திய நிகழ்வுகள் ஞாபகத்திற்கு வருகிறது.. அன்று எல்லைப் புற கிராமங்களின் வாழ்ந்து வந்த அப்பாவி ஏழை சிங்கள மக்களின் குடிசைகளுக்குள் நடு இரவில் புகுந்து.. பிரபாகரனின் கட்டளையின் பேரில்.. அவரது எடுபிடிகள் அவர்கள் கைக் குழந்தைகள் உட்பட ஈவிரக்கமில்லாமல் வாளால் வெட்டி கொலை செய்த அதே மிலேச்சனத்தையா இன்று சீமானின் கட்டளையின் பேரின் அவரது எடுபிடிகள் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்!..
இதுபோலதானே இதற்கு முன்பும் தமிழகத்திற்கு வருகை தந்திருந்த சிங்கள யாத்திரிகர்களை இந்த பகுத்தறிவில்லாத காட்டுமிராண்டிக் கூட்டம் இப்படி வழிமறித்து தாக்கியிருந்தது.... இப்படி தமிழகத்திலுள்ள கசாப்புக் கடை அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில்.. அங்கே வருகை தரும் சிங்கள மக்களுக்கு எதிராக.. தமிழக இனவெறியர்கள் வன்முறைகளில் இறங்குவதன் மூலம் .. இலங்கையில் தற்போது சமாதானத்துடன் வாழும் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் ஒரு பகையை உருவாக்கி.. அங்கே மீண்டும் ஒரு இனக் கலவரத்தை உண்டு பண்ணி.. அதில் பற்றியெரியும் நெருப்பில் குளிகாய முயற்சிக்கிறார்களா இந்த தமிழக குள்ள நரிகள்? ..
அல்லது இப்படியெல்லாம் செய்வதன் மூலம் இலங்கைக்கு சுற்றுலா வருகின்ற இந்திய யாத்திரிககளை.. சிங்கள மக்கள் பழி வாங்கும் முகமாக தாக்க வேண்டும்.. அதன் மூலம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஒரு பகைமை உருவாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இந்த காட்டு மிராண்டி அரசியல்வாதிகள் கூட்டம் இப்படியெல்லாம் செயல்படுகிறதா?..
இவர்கள் எல்லாம் ஒன்றை மட்டும் நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்.. இன்று இலங்கையின் சிங்களப் பிரதேசங்களிலும்.. தலை நகரான கொழும்பிலும் சுமார் இருபது இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள்.. கொழும்பில் சுமார் 60 வீதத்திற்கும் அதிகமான வியாபார ஸ்தலங்கள் தமிழர்களுக்கு சொந்தமானவைகள்.. இங்கே வாழும் தமிழர்கள் அனைவரும் இங்கே வாழும் சிங்கள மக்களுடன் சமாதானமாகவும் நட்புறவுடனும்தான் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள்..
இன்றுவரை இவர்களுக்கு எந்த வகையிலும் அந்த சிங்கள மக்கள் இடையூறுகள் எதுவும் ஏற்படுத்தியதில்லை.. மேலும் இங்குள்ளவர்களில் பலர் பிரபாகரனின் சர்வாதிகார அடக்குமுறை காலத்திலேயே வட பகுதியில் இருக்க பயந்து.. தங்கள் குடும்பத்துடன் இங்கு வந்து சிங்கள மக்கள் மத்தியில் பாதுகாப்பாக குடியேறியர்வர்கள்தான் என்பது இங்கே குறிப்பிடத் தக்கது... அதாவது பிரபாகரப் புலிகளை நம்புவதை விட சிங்கள மக்களை நம்புவது எவ்வளவோ மேல் என்ற எதிர்பார்ப்பில்தான் இங்கு வந்து அவர்கள் குடியேறினார்கள்.. அந்த நம்பிக்கை இன்றுவரை பாதுகாக்கப்படுகிறது..
ஆகவே நீங்கள் தமிழகத்தில் செய்கின்ற இப்படிப்பட்ட அடாவடித் தனங்கள் யாவும் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவானதல்ல.. மாறாக அவைகள் யாவுமே அவர்கள் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறானாவை.. புலிகளின் அடாவடி யுத்தங்களால் சுமார் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அனுபவித்து வந்த போர் கொடுமைகளுக்கு பிறகு.. தற்போதுதான் ஓரளவாவது நின்மதி மூச்சு விடும் இவர்களை மீண்டும் பெரும் பிரச்சனைகளுக்குள் தள்ளி.. பெரு மூச்சு விட வைத்து விடாதீர்கள்!...
இந்திய விடுதலை போராட்டத்தை மகாத்மா காந்தி முன்னெடுத்தபோது.. அது ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக இருந்ததே அல்லாமல்.. அது இந்தியாவில் வாழ்ந்து வந்த எந்த ஒரு ஆங்கிலேயனுக்கும் எதிராக நடத்தப்படவில்லை என்பதும்.. அதனால்தான் இங்கிலாந்தில் வாழ்ந்து வந்த ஆங்கிலேயரே அந்த போராட்டத்திற்கு ஆதரவளித்தார்கள் என்பதையும்.. அதனால்தான் அந்த விடுதலை போராட்டம் பெரு வெற்றி பெற்றது என்பதையும்.. இன்றைய தமிழ் நாடு மறந்து மறந்துவிடக் கூடாது.. அதுபோலவே இலங்கை தமிழர்களும் சிங்கள மக்களை தங்கள் எதிரிகளாக என்றுமே கருதியதில்லை.. அவர்களுடைய போராட்டம் என்பது.. தங்களுக்குரிய தீர்வை சமாதான வழிகளில் தேடிக் கொள்வது மட்டுமே என்பதையும்.. தங்கள் உரிமைக்காக தங்கள் பிள்ளை செல்வங்களை இனியும் ஒரு போர் முனையில் பலி கொடுத்த அவர்கள் தயாராக இல்லை என்பதையும்.. சற்று அறிந்து கொள்ளுங்கள்!..
இன்று ஜெனிவா மகா நாட்டின் முன்றலில்.. இலங்கை தமிழ் மக்களின் படுகொலைகள் என்று இந்த வெளிநாட்டு புலிப் பினாமிகள் எழுப்பும் கோசம் கூட.. இலங்கை சிங்கள தமிழ் முஸ்லீம் மக்களை வகை தொகையில்லாமல் கொன்றொழித்த பிரபாகரனாதியோயோரை இலங்கை அரசாங்கம் அழித்து.. தங்கள் பிழைப்பில் ஜனாதிபதி மகிந்தா மண் அள்ளிப் போட்டு விட்டார் என்ற ஆதங்கத்தில் அல்லாமல் .. அது முள்ளி வாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக அல்ல என்பதை இந்த வெளிநாட்டுப் புலிகளின் கடந்தகால நடவடிக்கைகளை நன்கு அறிந்தவர்கள் நிட்சயம் ஊகித்திருப்பார்கள்.. இதை தமிழக தமிழ் உணர்வாளர்களே நீங்களும் அறிந்து கொள்ளுங்கள்!..
சரி இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் மகிந்தா குற்றவாளியாக்கப்பட்டு தண்டிக்கப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.. அதற்குப் பின் இலங்கையின் ஜனாதிபதியாக வரப்போவது யார்?.. ஒரு தமிழரா?.. இல்லையே!.. அமெரிக்காவின் அனுசரணையுடன் தமிழர்களுக்கான ஒரு தீர்வு கிடைக்கும் என்று கனவு காண்பவர்கள் ஒன்றை அறிந்து கொள்ள வேண்டும்.. அப்படித்தான் அமெரிக்கா இலங்கையில் ஒரு ஜனாதிபதியை நியமிக்கும் நிலை ஏற்பட்டால்.. அது நிட்சயம் சரத் பொன்செகாவாகத்தான் இருக்கும்..
ஏனெனில் அமெரிக்க பிரஜையான சரத் பொன்செகாவுக்கு கடந்த காலமொன்றில் அமெரிக்காவில் வைத்துஏற்கெனவே தகுந்த பயற்சிகளும் அளித்து ஜனாதிபதி தேர்தலில் இறக்கி விட்டதே அந்த அமெரிக்காதான் என்ற இரகசியம் பலருக்கும் தெரிந்திருக்க் நியாயமில்லைதான்.. ஆனால் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள் உங்கள் தலைவர் பிரபாகரனுக்கு சமாதி கட்டிய முக்கிய நபர்களில் அவர்தான் பிரதானமானவர்.. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை முன்னின்று நடத்தியவர் சாட்சாத் இதே சரத் பொன்செகாதான் என்பது உலகறிந்த விடயம்..
அப்படிப்பட்டவரின் ஆட்சியில் தமிழர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதை சற்று கற்பனை பண்ணிப் பாருங்கள்!... அது சட்டியில் இருந்து அடுப்புக்குள் விழுந்த கதைபோல் ஆகிவிடாதா என்ன?.. அப்படி அவர்தான் அடுத்த ஜனதிபதியாக தெரிவு செய்யப்படா விட்டாலும்.. அந்த ஜனாதிபதி இருக்கையை அலங்கரிக்கப் போவது இன்னொரு சிங்கள ஜனாதிபதிபதிதான் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.. அவர் தமிழர்களுக்கு சார்பாக செயல்படுவார் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை!..
புலம் பெயர்ந்த தமிழகளுக்கு இனவெறியேற்றி.. அதன் மூலம் அவர்களிடன் காசு கறந்து.. சுகபோக வாழ்க்கை அனுபவித்து வந்த வெளி நாட்டுப் புலிப் பினாமிகள் போலவேதான்.. அங்கே தமிழகத்தில் பிரபாகர புலிகளை வைத்து அரசியல் பிழைப்பு நடத்திய உங்கள் இனவாத அரசியல்வாதிகளும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.. இன்று உங்களை தூண்டி விட்டு.. தமிழகத்தை ஒரு கொந்தளிக்கும் நிலைக்குள் தள்ளை.. தங்கள் பிழைப்பை தொடர நினைக்கும் அந்த நயவஞ்சகர்கள் வலையில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.. அவர்களுக்கு தேவை மீண்டும் பிரபாகரனைப் போன்ற ஒரு தூர சிந்தனையற்ற இனவெறி கொண்ட முட்டாள்தனமான விடுதலை தலைவர்.. அப்படிப்பட்ட ஒருவர் மீண்டும் இலங்கை தமிழர்கள் மத்தியில் உருவாகி.. இலங்கையில் மீண்டும் ஒரு போர் வெடித்து அங்கே எஞ்சியிருக்கும் எமது ஏழை தமிழர்களின் பிள்ளை செல்வங்கள் போர் களங்களில் பலி கொடுக்கப்பட வேண்டும்.. அங்கே ஓடும இரத்த ஆற்றிலே தங்கள் அரசியல் தோணியை சொகுசாக செலுத்த வேண்டும் என்றுதான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்..
உங்களுக்கு ஒன்று தெரியுமா!.. 1983 ம் ஆண்டு இனக் கலவரவத்தை நீங்கள் இன்று செய்து கொண்டிருக்கும் இதே வன்முறை பாணியில்தான் பிரபாகரனும் அன்று ஆரம்பித்து வைத்தார்.. வட பகுதியில் நிலை கொண்டிருந்த இலங்கை இராணுவ சிப்பாய்கள் 27 பேரை கண்ணி வெடி வைத்து கொன்று சிங்கள இனத்தை சூடேற்றி.. அவர்களை கொதித்தெழச் செய்து.. சிங்கள பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் மேல் அவர்கள் வன்முறையை கட்டவிழ்த்து விட வழி கோலினார்.. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு எடுத்து வரப்பட்ட அந்த சிப்பாய்களின் உடல்களின் தகனம் கொழும்பு கனத்தை மயானத்தில் எரியூட்டப்பட்ட அன்றே தமிழர்களின் வீடுகளும் அங்கே தீப்பற்றியெரியத் தொடங்கின.. அதை அன்றைய இனவெறி ஜனாதிபதியாக ஜே.ஆர்.. ஜனாதிபதி ஊக்குவித்தார்..
ஆனால் நீங்கள் இன்று இந்தியாவிற்கு வருகை தரும் சிங்கள அப்பாவி மக்கள் மேலும் பௌத்த துறவிகள் மேலும் உங்கள் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்ட போதிலும்.. இன்னும் இங்கே இலங்கையில் அமைதிதான் நிலவிக் கொண்டிருக்கிறது.. அப்படிப்பட்ட ஒரு இனக் கலவரம் இனியும் நடைபெற இங்கே சந்தர்ப்பம் இல்லை.. ஏனெனின் இங்கே இலங்கையில் வாழ்ந்து வரும் சிங்கள தமிழ் முஸ்லீம் பரங்கியர் என்ற பல்லின மக்கள் கடந்த காலங்களில் தாங்கள் அனுபவித்து வெறுத்துப் போன அந்த கறை படிந்த காலங்கள் அவர்களுக்கு ஒரு சிறந்த பாடமாக அமைந்து விட்ட படியால்தான்..
சீமானின் தொண்டர்களே!.. முடிவில் ஒன்றை அறிந்து கொள்ளுங்கள்.. தமிழர்களுக்கு எதிரான இனவெறி கொண்ட எந்த சிங்கள மகனும் உங்கள் தமிழகத்தினுள் காலடி எடுத்து வைக்க விரும்ப மாட்டான்.. அப்படி அங்கே தமிழகத்திற்கு வருகை தரும் சிங்கள யாத்திரீகர்கள் அனைவரும் பெரும்பாலும் தமிழர்களின் நண்பர்கள்.. இதற்கு ஆதாரமாக சென்னை சென்ரல் புகையிரத நிலையத்தில் வைத்து அந்த பௌத்த பிக்கு தாக்கப்பட்டபோது.. அந்த குழுவில் வந்திருந்த ஒரு சிங்களப் பெண்மணி தங்களுக்கு நேர்ந்த கதியை மற்றவர்களுக்கு தமிழில் சரளமாக விளக்கியதில் இருந்தாவது அறிந்து கொள்ளுங்கள்..
சீமான்மார்களே!.. உங்கள் பிச்சை இலங்கை தமிழர்களான எங்களுக்கு வேண்டாம்.. ஆனால் அவிழ்த்து விடப்பட்டிருக்கும் உங்கள் வெறி நாய்களை மட்டும் தயவு செய்து பிடித்துமீண்டும் கட்டிப் போடுங்கள்..
அன்புடன்
சித்திறெஜினா..
4 comments :
மகிந்த என்ன குற்றம் செய்தார் ? அவர் தமிழர்களை கொன்று உயிருடன் எரித்த புலிக் கூட்டத்தை எமது நாட்டில் இல்லாது ஒழித்தார் , அவர் எப்படி குற்றவாளி ஆக முடியும் , இன்றைய இலங்கையில் எவரும் பயங்கரவாத தாக்குதல்களில் உயிரிழப்பதில்லை , புலிகள் இருக்கும் பொது ஒவ்வொரு நாளும் மக்கள் கொல்லப்பட்டார்கள்.
மக்களை பயங்கரவாதிகளிடம் இருந்து காத்தவரை எப்படி தண்டிக்க முடியும் , அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் இதில் விளக்கமின்மை இருக்கலாம் , ஏன் புலன் பெயர் தமிழர்களுக்கு தெரிந்தும் வீண் வம்பு ? பழிவாங்கும் பிடி வாதம் ?
பிரபாகரனின் பழிவாங்கும் தன்மையே ராஜீவ் காந்தியை கொலை செய்து பல்லாயிரம் தமிழரின் உயிருக்கு உலை வைத்தது.
புலன் பெயர் தமிழர் முதலில் புலிகளின் மனித உரிமை மீறல்களை கண்டிக்க வேண்டும், உதாரணம் கந்தன் கருணை படு கொலை உட்பட பல உள்ளன.
Unforgettable "shit" behaviour of Tamil Nadu.
Honestly no Tamilian or any Indian likes this barbaric attack. What's happening here is pure political game to show who is closer to Ceylon Tamils. Unfortunately these acts will only aggravate the peacefull coexistence. Also,,please watch in the video after the monk is attacked.The porter is carrying all their luggages and helping them to come out. please note that .That is how any normal Tamilian or Indian will behave. We care for people.
As a true Tamilian , I condemn this attack and we keep all this in mind in the next election. I hope our CM will ensure these things doesn't repeat in future.These will ruin her vote bank, which is made of truthful , non political , common citizen like me. Jai Hind! Vazhga Tamizhagam.
I don't think Tamils from India do any good to Sri Lankan's Tamils instead creating more problems to both countries. I m agreed to both above comments. Well done Siti.Please writes more articles to open the innocents eyes.
Post a Comment