தமிழகத்தில் அதிகரித்துவரும் படுபாதகச் செயல் அறிவீரோ?
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெண் சிசுக் கொலைகள்… ஆய்வில் அதிர்ச்சியளிக்கும் தகவல்கள்....
பெண் சிசு, கருக் கொலைகள் சட்டப்படி குற்றம் என்று அறிவித்தாலும், இன்றும் பல தமிழகத்தின் பல மாவட்டங்களில் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பெண் சிசு, கருக்கொலைகள் தொடர்பாக சென்னை டி.ஜி. வைஷ்ணவக் கல்லூரி சார்பில் தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது இது தெரியவந்துள்ளது.
‘பெண் சிசுக்கொலை, பெண் சிசு கருக்கொலை உங்கள் பகுதியில் நடந்துள்ளதா? உங்கள் பகுதி மருத்துவமனைகளில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று பார்க்கின்றனரா, உங்கள் ஊர் ‘ஸ்கேன்’ மையத்தில் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்று சொல்கிறார்களா? பெண் சிசுக்கொலை குறித்து யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்பது தெரியுமா?' உள்ளிட்ட 11 வகையான கேள்விகள் இந்த ஆய்வின்போது பொதுமக்களிடம் கேட்கப்பட்டன.
சிசுக் கொலைகள் தமிழகத்தில் இவ்வாறு பரவலாக நடைகின்றபோதும், அது பற்றி நீதிமன்றில் வழக்குத் தொடரப்படுகின்றபோதும், அறியாமை, வரதட்சணைக் கொடுமைகளால் இவை நிகழுகின்றன எனத் தீர்ப்பு வழங்கப்பட்டு கொலை செய்பவர்கள் விடுவிக்கப்படுகின்றனர்.
அண்மையில் சின்னமனூர் அருகே குழந்தை பிறந்து 48 மணி நேரத்தில் குழந்தை கொலை செய்யப்பட்டது. என்றாலும் அதுபற்றி மதுரை உயர் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது, அறியாமையால் நிகழ்ந்தது என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி குற்றவாளியை விடுதலை செய்ததும் குறிப்பிடத்க்கது.
வறுமையின் காரணமாக தமிழகத்தில் சிசுக்கள் எருக்கம்பால் கொடுத்துக் கொலை செய்யப்படுவதும், கருவிலேயே கருவழிக்கப்பட்டு கருக்கலைப்பு எனும் அநியாயம் செய்யப்படுவதும் சர்வ சாதாரணமாகி வருகின்றது.
(கேஎப்)
1 comments :
Why not the tamil Nadu politicians raise their voices against the illegeal killing female innocent children,before they express their feelings and demonstrations on behalf of the neighbouring country`s people.There is a proverb While the mother is in hunger son went to the holy city to feed the poor.
Post a Comment