ஹலால் விவகாரத்தில் தலையிடுகிறார் கோத்தபாயர் !
இடைநிறுத்தப்படுகிறது ஹலால் சான்றிதழ்!
இஸ்லாமிய சமயத்திற்கேற்ப வழங்கப்படும் ‘ஹலால்’ சான்றிதழை உடனடியாக இடைநிறுத்த முடிவு எடுத்துள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் அறிவிக்கின்றன.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ இது சம்பந்தமாக குறித்தபகுதியினருடன் பலமுறை கலந்துறவாடி இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
அனைத்து பௌத்த மதபீடங்களினதும் தலைமை தேரர்களுடனும், இலங்கை வணிக அமைப்புக்களின் உறுப்பினர்கள், முஸ்லிம் வியாபாரிகள், ஜம்இய்யத்துல் உலமா சபை ஆகியவற்றுடன் இதுபற்றி பாதுகாப்புச் செயலர் நீண்ட உரையாடலை மேற்கொண்டதன் பின்னரேயே இந்த முடிவுக்கு வந்துள்ளார்.
எதுஎவ்வாறாயினும் ஹலால் சான்றிதழ் தற்போது இடைநிறுத்தப்பட்டாலும் ஏற்கனவே வழங்கப்பட்ட ஹலால் சான்றிதழ்கள் சந்தைப்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் முடிவடையும்வரை அவற்றை விற்பனை செய்யவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் இவ்வாறு ஹலால் சான்றிதழ் வழங்கப்படுமாயின் அவற்றுக்கு எந்தவொரு தொகையும் அறவிடப்பட மாட்டாது என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் தொடர்பாக அண்மைக் காலமாக ஏற்பட்டுள்ள பிளவுகளுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காகவே பாதுகாப்புச் செயலளர் இதில் தலையிட்டுள்ளார். பாதுகாப்புச் செயலருடன் ஜனாதிபதி ஆலோசகர் மிலிந்த மொரகொடயும் கலந்துரையாடலில் பங்குகொண்டுள்ளார்.
(கேஎப்)
3 comments :
இன்றைய நாகரிக உலகில் கற்கால காட்டுமிராண்டி மதக் கொள்கைகளை கடைப்பிடிக்க முடியாது.... நவீன வாகனங்களுக்கு பதில் ஒட்டகங்களையும், செல்போனுக்கு பதில் புறாக்களையும், பேஷ்புக்குப் பதில் பள்ளிவாயளையும் பாவித்துக்கொண்டிருக்கலாமா?
முஸ்லீம் மக்களே சிந்தித்து வாழுங்கள்.
முட்டாள் தனமான சிந்தனையில் இருந்து விடுபடுங்கள்.
அல் ஹக்கீம், கொழும்பு
அன்புள்ள சகோதரரே, நாங்கள் முட்டாள் தனத்தில் வாழ்கிறோம் என்றெ வைத்துக் கொள்வோம். இவ்வுலகில் உள்ள அறிவுள்ள கொள்கைகள் பற்றி எங்களுக்கு சொல்ல முடியுமா?
Erumaikale..................
Vinai Vithaiththavan Vinai Aruppaan. Thinai Vithaiththavan Thinai Aruppaan.
Post a Comment