வெளிநாடுகள் மருத்துவிச்சி வேலை மட்டுமே பார்க்க முடியும்.. என்கிறார் டக்ளஸ்.. வீடியோ இணைப்பு
இலங்கைக்கு எதிராக பலம்வாய்ந்த வெளிநாட்டு சக்திகள் பல ஒன்று திரண்டுள்ள நிலையில் இச்சவால்களை எவ்வாறு இலங்கை எதிர்கொள்ளப்போகின்றது என்ற கேள்வியை கச்சதீவு வந்திருந்த ஊடகவியலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டபோது, „எங்கள் பிரச்சினை தீர்வு விடயத்தில் வெளிநாடுகள் மருத்துவிச்சி வேலையையே செய்ய முடியும் எனவும் அவர்கள் எங்களுக்காக பிள்ளை பெற முடியாது' எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் புலிகளின் தலைவர் இன்னும் உயிருடன் இருப்பதாக தமிழ் நாட்டு மக்களுக்கு சொல்லப்படுவதாகவும் அம்மக்களுக்கு நீங்கள் சொல்லும் செய்தி என்ன என்றும் கேட்டபோது, கேள்வியை கேட்ட ஊடகவியலாளரை அண்மைக்கு வர அழைத்த அமைச்சர்; „பிரபாகரன் உயிரோட இல்லே.. „ என உரத்த குரலில் கத்தினார்.
மேலும் இந்தியாவிற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்குவதாகவும் அதற்குமுன் மீனவர் பிரச்சினைக்கு தீர்வின்றேல் கடல் வழியாக ஐயாயிரம் பேரை அழைத்துக் கொண்டு கடல் பேரணி நடாத்துவது குறித்து ஆராயப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
அவர் அங்கு தெரிவித்த முழுமையான கருத்துக்களை மேலுள்ள காணொளியில் காண்க...
0 comments :
Post a Comment