தராசில் சுத்துமாத்து செய்தால் மாட்டுவீர்!
நிறையை குறைத்து நுகர்வோரை ஏமாற்றி பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போலியான தராசுகளை வைத்தும், எடை அளக்கும் டிஜிற்றல் சாதனங்களில் போலியான மாற்றங்களை ஏற்படுத்தியும் மக்களை ஏமாற்றி வருவதாக நிறுவை மற்றும் அளத்தல் திணைக்களத்திற்கு தொடர்ந்து முறைப்பாடுகள் கிடைத்த வண்ணம் இருக்கின்றன. இதனால் வர்த்தக நிலையங்களோடு சேர்த்து வாராந்த, நாளாந்த சந்தைகளிலும் சோதனைகளை மேற்கொள்ள திணைக்களங்கள் தீர்மானித்தன.
இதனைத் தொடர்ந்து தெல்கந்த மற்றும் ஹரகம்பிட்டிய வாராந்த சந்தைகளில் மிரிஹான மற்றும் ஹரகம்பிட்டிய பொலிஸாரின் உதவியுடன் சுற்றிவளைப்புகளும், தேடுதல் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. இத் தேடுதல் வேட்டையின் போது தெல்கந்த சந்தையில் போலி எடைகளை வைத்து விற்பனையில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதே போன்று ஹரகம்பிட்டிய வாராந்த சந்தையில் விற்பனையில் ஈடுபட்டிருந்த போலி ஏமாற்று விற்பனையாளர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.
1978 ம் ஆண்டு இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல் காரணமாக தொழில் வாய்ப்பினை இழந்த துல்ஹிரிய பூகொட தொழிற்சாலையின் ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வரகாபொல பீலடுவ விகாரையில் இடம்பெற்ற கூட்டத்தில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கையில், தொழிலாளர்களை பாதுகாப்பதற்கு மஹிந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் மஹிற்த சிந்தனை பற்றி அமைச்சர் தெரிவிக்கையில், இனங்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தவதே மஹிந்த சிந்தனையின் குறிக்கோள்களில் ஒன்று என்றார்.
மின்திரி ஆடைத் தொழிற்சாலையில் 10 வருடங்கள் சேவையாற்றிய ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் கொலை செய்யப்பட்ட ஊழியர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது. துல்கிரிய மற்றும் பூகொட தொழிற்சாலை ஊழியர்களுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment