கொழும்பில் வசிக்கும் மக்களில் அரைப்பங்கினர் நீரை கொள்ளையடிக்கின்றனர்.
கொழும்பு நகரில் வசிக்கும் மக்களில் அரைப்பங்கினர் நீர் கட்டணத்தை செலுத்துவதில்லையென்றும், இக்கட்ட ணத்தை அறவிடுவதற்காக கிரமமான முறையொன்று அமுல்படுத்தப்படு மென்றும், அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,நாங்கள் குடிநீரை பாதுகாப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். நாங்கள் வீதிகளுக்கு இலவசமாக நீர் விநியோகம் செய்வதில்லை. கொழும்பு நகரில் பல வருடங்களாக நீர்க்கட்டணத்தில் 50 வீதமானவை செலுத்தப்படுவதில்லை. சட்ட விரோதமாக குடிநீர் இணைப்பை பெற்றுக் கொண்டிருப்பதே இதற்கு காரணம் அதனை தடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்கால உலகில் இலங்கை நீர் வளம் நிறைந்த நாடாக காணப்படும் என்றும், எதிர்வரும் 25 வருடங்களில் உலகின் பல்வேறு நாடுகளில் வரட்சி காணப்பட்டாலும், இலங்கையில் அவ்வாறு அச்சுறுத்தல் ஏற்படாதென அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment