Thursday, August 30, 2012

வடக்கில் 17 வயதுக்குட்பட்ட 11000 அனாதைச் சிறுவர்கள் பதிவாகியுள்ளனர். சிவஞானம்.

1700 அனாதைச் சிறுவர்களின் விடாமுயற்சி யாழ்ப்பாண, சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை(Centre For Child Development)ஓய்வின்றி உழைக்க வைத்துள்ளது. பெற்றோரை இழந்த இந்த சிறுவர்கள் பாடசாலையில் தாம் எட்டவிருந்த குறிக்கோளையடைவதற்கு பல தடைகளைத் தாண்ட வேண்டியிருந்துள்ளது. அவரகள் எல்லோரும் கற்றறிந்த வெற்றியாளர்கள் அல்லர், சரியான திசையில் செல்லும் முயற்சியாளர்கள் என மேற்படி நிலையத்தின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அவர் கருத்து மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் அவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகின்றது. நாங்கள் இந்த அனாதைச் சிறுவர்களைப் பராமரிப்பதற்கு நிதிவசதி அளிக்கின்றோம். அவர்களை அனாதை இல்லத்துக்குப் பதிலாக வீட்டுச் சூழலில் பாட்டன், பாட்டிமாரிடம் அல்லது பெற்றோரின் சகோரங்களுடன் இருந்து வாழவைக்கின்றோம். அவர்களும் இவர்களை அன்புடன் ஏற்றுக் கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கில் உள்ள 3 இலட்சம் சிறுவர்களில் 17 வயதுக்குட்பட அனாதைகள் 11,000 பேர் பதிவாகியுள்ளார்கள். 1 – 9 வகுப்புகள் வரை படிப்புக்காக மாதம 750 ரூபாவும், உயர் இரண்டாம் நிலைக் 1000 – 1200 ரூபாவும் செலவழிக்கப்படுகின்றது. ஐரோப்பா மற்றும் உண்ணாடு வெளிநாடுகளில் உள்ள தமிழ் அடிப்படை அமைப்புகளில் இருந்து நிதி வந்து சேர்கின்றது. அனால், இன்னும் நன்கெடையாளர்களை நிறுவனம் எதிர்பார்க்கின்றது என திரு சிவஞானம் குறிப்பிட்டார்.

அக்கறையுள்ளவர்கள் 0094 213211354 அல்லது 0094212220483 தொலைபேசிகளைப் பயன் படுத்தலாம் எனவும் இணையம் isdevelopers.org. மற்றும் மினஞ்சல்:cfcd@isdevelopers.org
ஊடாக தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com