Friday, August 31, 2012

பயங்கரவாதத்தை முறியடிக்க இலங்கை சகல வழிகளிலும் ஆதரவளிக்கும் - ஜனாதிபதி

இலங்கை அரசாங்கம் அனைத்து விதமான பயங்கரவாதத்திற்கு எதிரான பல்முனை பிரயத்தனங் களுக்கும் ஆதரவளிக்கும் என்று 16 ஆவது அணிசேரா நாடுகளின் மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அவர் அங்குதொடர்ந்தும் உரையாற்றுகையில், சமாதானம் மற்றும் பாதுகாப்பு என்பவற்றை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் நாம் தொடர்ந்தும் முழுமையான ஆதரவை வழங்குவோம் எனவும், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு உட்பட்டிருக்கும் நாடுகளுக்கு ஏனைய சர்வதேச நாடுகள் ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை- பூகோள ரீதியாக அனைத்து நாடுகளும் பயங்கரவாதத்தினால் அச்சுறுத்தப்பட்டுள்ளது எனவும், பயங்கரவாதத்தை முறியடித்ததன் பின்னர் சவால்களை வெற்றி கொள்வதற்கு தமது அரசாங்கத்திற்கு மக்களை அடிப்படையாக கொண்ட செயற்பாடு ஒன்று அவசியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகள், அணிசேரா நாடுகளின் கொள்கை என்பவற்றில் உள்ளவாறு ஒரு நாட்டின் உள்ளக விவகாரங்களில் பிறநாடுகள் தலையீடு செய்யக்கூடாது என்ற வாசகத்தை அவதானமாக கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தையும், இரட்டைக் கொள்கைகளின் போது ஒரு தரப்பினருக்கு மாத்திரம் பலனைத் தரக் கூடிய விடயங்கள் உள்ளடங்கியிருக்கக்கூடாது என்றும் இதன்போது வலியுறுத்தினார்.

"சவால்களுக்கு மத்தியில் ஒன்றிணைந்த நிர்வாகத்தின் ஊடான நிலையான சமாதானம்' என்ற தொனிப்பொருளில் இந்த முறை அணிசேரா நாடுகளின் மாநாடு இடம்பெறுகிறது.

Read more...

அமெரிக்க வங்கியில் 1 மணி நேரத்துக்கு 2.5 லட்சம் யூரோ சம்பளம் வாங்கும் முன்னாள் ஜனாதிபதி

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியை தழுவிய நிகோலஸ் சர்கோஸி, அமெரிக்க வங்கியான Morgan Stanley ல் "சிறப்பு ஆலோசகர்" பணியில் இணைந்துள்ளார். இதற்காக வழங்கப்படும் ஊதியம், 1 மணி நேரத்துக்கு 2.5 லட்சம் யூரோ!

சர்கோசி பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்தபோது, பிரிட்டிஷ் பிரதமராக இருந்த தமது முன்னாள் சகா டோனி பிளேரின் காலடித் தடங்களைதான், இந்த விஷயத்திலும் பின்பற்றியிருக்கிறார். டோனி பிளேர் பிரிட்டிஷ் பிரதமர் பதவியில் இருந்து இறங்கியவுடன், இதே அமெரிக்க வங்கி மோர்கன் ஸ்டேன்லி, பிளேரையும், "சிறப்பு ஆலோசகராக" சேர்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது

டோனி பிளேர் பிரிட்டிஷ் பிரதமர் பதவியில் இருந்து இறங்கிய பின், 6 ஆடம்பர வீடுகளை வாங்கியுள்ளார். பிரைவேட் ஜெட்டில் உலகை சுற்றி வருகிறார். வருட வருமானம், 20 மில்லியன் பவுன்ட்ஸ் என்று கணக்கு காட்டியுள்ளார். அதில், 2 மில்லியன் பவுன்ட்ஸ் வந்தது, மோர்கன் ஸ்டேன்லி வங்கி கொடுத்த ஊதியம் என தெரியவருகின்றது.

Read more...

அவர்களை உடனடியா பிடி. பொலிஸ் நிலையம் முன் ஆதரவாளர்களுடன் உட்காந்தார் பா.உ ஹரீஸ்

அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு இன்று (31.08.2012) பிற்பகல் விஜயம் செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் உட்பட கட்சி முக்கியஸ்தர்களை வளிமறித்த குழுவொன்று அவர்களை தாக்க முற்பட்டதுடன் அச்சுறுத்தலும் விடுத்துள்ளது.

மேற்படி சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் முக்கியஸ்தர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முன்பு வீதியில் அமர்ந்திருந்து தமது அதிருப்தியை வெளிக்காட்டி அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அதிருப்தியாளர்கள் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் உள்ள பிரதான வீதியல் அமர்ந்திருப்பதனையும், அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் நிலையப்பொறுப்பதி ஆகியோருடன் உரையாடுவதனையும், பாதையில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்களிடம் பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்வதனையும் படங்களில் காணலாம்.




Read more...

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: புயல் கிளப்ப தயாராகும் திருச்சி வேலுச்சாமி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குறித்து பல திடுக்கிடும் தகவல்களுடன் ஒரு புத்தகத்தை எழுதி வருகின்றார் திருச்சி வேலுச்சாமி. பதவியில் உள்ளவர்களும், அரசியலில் உள்ளவர்களும் ஓய்வு பெற்ற பின்பு யாருக்கும் தெரியாத, தாங்கள் அறிந்து வைத்த ரகசியங்களை புத்தகம் மூலம் வெளியிட்டு வருகின்றனர். தற்போது அந்த வரிசையில் ஒரு பிரபல தலைவரின் கொலை வழக்கு குறித்து அதிர்ச்சி, ஆச்சர்யம் கலந்த உண்மைகளை உலகிற்கு வெளி கொண்டு வரும் முயற்சியில் ஈடுப்டடுள்ளார் திருச்சியைச் சேர்ந்த வேலுச்சாமி.

காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவராகவும், ஜனதா கட்சி தலைவர் டாக்டர் சுப்பிரமணியன் சாமிக்கு உதவியாளராகவும் இருந்து வந்தவர் திருச்சி வேலுச்சாமி. மனதில் பட்டதை பட்டென்று சொல்லிவிடும் குணம் கொண்டவர். இது அவருக்கு அரசியலில் பெரும் பலம் சேர்த்தது. அதுவே பலவீனமாகவும் ஆகிப்போனது.

சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளர் என பண்முகம் கொண்ட அவர் விடுதலைப்புலிகள் மற்றும் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சாமி, புதிய பார்வை ஆசிரியர் (சசிகலா) நடராஜன் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் ஆகியோருடன் நல்ல நெருக்கம் கொண்டவர்.

இந்த நிலையில் ராஜீவ் காந்தி கொலையை விடுதலைப் புலிகள் தான் செய்தார்கள் என்று அப்போது தகவல் பரவியபோது, அதை மறுத்து மாற்றுக் கருத்து வெளியிட்டவர் திருச்சி வேலுச்சாமி. இதனால் அவரை பலரும் உற்று நோக்கத் தொடங்கினர்.

இந்த நிலையில் தற்போது ராஜீவ் காந்தி படுகொலையின் பின்னணி பற்றி முழு விவரப் புத்தகம் ஒன்றை எழுதி வருகிறார். இந்தப் புத்தகத்தின் மூலம் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும் என்கிறார்கள்.

Read more...

த.தே.கூ வினர் பிச்சைக்காரன் உடம்பில் உள்ள புண் போன்றவர்கள். குமுறுகின்றார் கருணா.

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிச்சைக்காரனின் உடம்பில் உள்ள புண் போன்றவர்கள். அதனை பெருப்பித்து பெருப் பித்து பிச்சைக்காரன் பிச்சை யெடுப்பது போல தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் இங்கு அரசியல் செய்துகொண்டுள்ளனர் என மட்டக்களப்பு பிள்ளையாரடிப் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பேசிய பிரதி அமைச்சர் கருணா எனப்படுகின்ற முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றிய அவர் நாங்கள் காட்டில் ஆயுதம் தூக்கிப்போராடியபோது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எங்கிருந்தார்கள். பல்வேறு நாடுகளில் சுகபோகங்களை அனுபவித்துவிட்டு இங்கு வந்து மக்களை குழப்பிக்கொண்டிருக்கின்றனர். இவர்களால் ஒருபோதும் கிழக்கு மாகாணசபையினை கைப்பற்றி ஆட்சியமைக்க முடியாது.

நான் தமிழ் மக்களுக்காக போராடச்சென்றவன். எனக்கு அவர்களுக்கு இருக்கும் உணர்வைவிட அதிகமாக இருக்கும். நான் இந்த நாட்டைவிட்டுச்சென்று சொகுசாக வாழ்ந்திருக்கமுடியும். ஆனால் நான் அவ்வாறு வாழவிரும்பவில்லை.
 
எமது இனம் தொடந்து அழிவுகளை சந்தித்துக்கொண்டிருக்கமுடியாது என்பதற்காகவே நான் போராட்ட முறையில் இருந்து அரசியல் முறைக்குள் பிரவேசித்தேன்.
 
அன்று விடுதலைப்புலிகளின் தலைவர் அவர்களிடமும் இந்த போராட்டத்தை வெல்லமுடியாது.நடைபெறும் பேச்சுவார்த்தையினைக்கொண்டு பெறக்கூடிய அதிகாரத்தைப்பெற்று நாங்கள் அரசியல் ரீதியாக உரிமையை பெற முயற்சிப்போம் என்று கூறினேன் ஆனால் அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று என்ன நடந்துள்ளது. அவர் அன்று அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று முதலமைச்சர் நிலையில் அவர் இருந்திருப்பார்.
 
நான் போராட்டத்தின் கொள்கையை மாற்றக்கூறவில்லை.போராட்ட வடிவத்தை மாற்றி நாங்கள் முயற்சிகளை செய்வோம் என்றே கூறினேன். ஆனால் அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அதில் இருந்து பிரிந்துவந்துடன் கிழக்கின் போராளிகள் 6000 பேரினையும் வீட்டுக்கு அனுப்பி அவர்களின் உயிர்களையும் காப்பற்றியுள்ளேன்
 
இன்று மட்டக்களப்பு மாவட்டம் உட்பட முழு இலங்கையுமே அமைதியாகவுள்ளது. முன்பு காலையில் எழும்பும்போது அழுகுரல்களும் சடலங்களையுமே நாங்கள் காணுவோம். அந்த நிலைமை இன்று இல்லை. அதனை மீண்டும் ஒரு தடைவ கொண்டுவர நாங்கள் அனுமதிக்ககூடாது.
 
கிழக்கு மாகாண தேர்தலை பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கு மிகவும் முக்கியமான தேர்தல் இதில் நாங்கள் மிகவும் ஒன்றுபட்ட சக்தியாக வாக்களிக்கவேண்டும். நாங்கள் அரசாங்கத்தை ஆதரிப்பதன் மூலமே எமது சமூகத்தினை முன்கொண்டுசெல்லமுடியும். இதனை உணர்ந்த மக்களாக நாங்கள் மாறவேண்டும்.
 
மக்கள் இந்த தேர்தல் தொடர்பில் தெளிவான முடிவுகளை எடுக்கவேண்டும்.இன்னும் கூட்டமைப்பினரின் பொய்ப்பிரசாரங்களுக்கு மயங்கும் சமூகமாக இருந்தால் நாங்கள் இன்னும் பல வருடங்களுக்கு பின் செல்லவேண்டிய நிலையே உருவாகும்.
 
நாங்கள் எம்மத்தியில் உள்ள சிறந்த வேட்பாளர்களை தெரிவுசெய்யவேண்டும். கடந்த காலங்களில் இருந்தவர்களினால் எமது மக்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை. அவர்கள் தமது பலத்தை பயன்படுத்த தெரியாதவர்களாகவே இருந்தனர். அவர்களால் எதுவித பிரயோசனமும் இல்லை.

Read more...

இலங்கையில் அதிக வயதில் வாழ்ந்த பிக்கு காலமானார்.

ராமன்ய மகா நிகாய மகாநாயக்கர் வண. வேல்தெனிய மேதாலங்கார தேரர் தனது 103 வது வயதில் கொழும்பில் தனியார் மருத்துவ மனையில் காலமானார். 1922 ல் குருவாக அமர்த்தப்பட்ட அவர் மீரிகமை சசனாவர்தன பிரிவேனா விகாரைக்கு வருமுன்னர் குருமட ஒழுக்க விதிகள் மற்றும் சித்தாந்தங்களை நான்கு வருடங்கள் பயிற்றுவித்துக் கொண்டிருந்தார். தான் ஈரானுக்குப் புறப்படுவதற்கு முன்னர், தேரரின் இறுதிக் கிரியைகளை அரச மரியாதையோடு நடாத்தும்படி பணிப்புரை விடுத்ததாக புத்தசாசன மற்றும் சமய அலுவல்கள் அமைசைசுச் செயலாளர் எம்.கே.பி. திசாநாயக்கா கூறியுள்ளார்.

அவரது இறிதிச் சடஙகிக் செப். 03 ல் நடைபெறும்.

Read more...

ஐ.நா முறைமை சீர்திருத்தப்பட வேண்டும் – நியோமல் பெரேரா.

உலக நிதி மற்றும் பொருளாதார அவசரத் தேவைகளுக்கு ஏற்றவாறு ஐ.நா முறைமை சீர்திருத்தப்பட வேண்டுமென வெளிநாட்டமைச்சின் பிரதிச் செயலாளர் நியோமல் பெரேரா ஈரானில் நடைபெறும் அணிசேரா நாடுகள் அமைப்பின் 16வது உச்சி மாநாட்டின் அமைச்சர் மட்டத்திலான கூட்டதில் பேசும் போது தெரிவித்துள்ளார்.

உலக பொருளாதார மற்றும் நிதிப் பிரச்சினைகள் காரணமாக ஆழமான சமூகத் தாக்கம் ஏற்படுவதுடன், காலநிலை மாற்றம், சுற்றாடல் தரம் குறைதல், மற்றும் வள இழப்பு காரணமாக பாரிய சவால்களுக்கு முகங் கொடுக்க வேண்டியருக்கிறது எனவும், இதற்கு வினைத்திறனுள்ள பதில் தேவைப்படுவதனால், நிலைத்த சம பலமுள்ள உலக வளர்ச்சிக்கு, பொருளாதார கொள்கைத் தீர்மானங்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

Read more...

அந்தப் பள்ளிக்குச் செல்பவர்கள்: எஸ்.நஸீறுதீன்.

அல்லாஹ்வுக்காக, பாராளுமன்ற, மாகாண, பிரதேச சபைத் தேர்தல்களின்போது மட்டும் நபிகள் நாயகத்தையும், கலிபாக்களின் கிலாபத்து ஆட்சிகளையும் பேசுவதற்கே வக்கற்ற நிலைமையிலுள்ள நீங்கள், உங்களிடம் இல்லாதன கூறல் இழுக்கு என்பதற்கொப்ப உங்களையே அசிங்கம் செய்கிறீர்கள்.

அவர்கள் யாரென்று பார்க்க முன்னர், அந்தப் பள்ளிகளைப் பற்றி முதலில் பார்க்கவேண்டியுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் தனி அல்லது பலபேர் சேர்ந்த கூட்டு அடிப்படையில் வாங்கப்பட்டு, அன்பளிப்பாக வழங்கப்பட்ட காணிகளுக்கானது, இன்னும் சில முன்னாள் அரசுகள்-முஸ்லிம்களும் இந்த நாட்டின் பிரஜைகள், மத உரிமை உள்ளவர்கள் எனும் நோக்கில் வழங்கப்பட்டவை.

இங்கு இடத்தைச் சுட்டி யாருக்கும் பிரச்சினையில்லை அங்கு வரும் ஆட்கள்தான பிரச்சினை என்றால், அவர்கள் அங்கு அப்படி என்னதான் பண்ணுகிறார்கள்? நிச்சயமாகப் பயங்கரவாதி வருகிறானென்றால், அல்லாஹ்வின் வீட்டை நெருங்கவே முடியாதவன். அவன் முஸ்லிமாகவே இருக்க முடியாது. முதலாளித்துவம் , பயங்கரவாதி குர்- ஆனே என நினைத்து முன்னர் ஆபிரிக்காவில் பைபிளைக் கொடுத்து மாற்றியும், இப்போது ஆப்கானில் எரித்தும் இல்லாமலாக்கி விடலாம் என நினைப்பது போன்ற அசட்டுத்தனமே இது.

இதனால், சும்மா கிடந்த சங்கின் முத்தை எல்லோரும் தேடும்படியான தன்மையையே உருவாக்கி விடுகிறார்கள். அதனால்தான், இருளிலிருந்து ஒளிக்கு என தன விருப்பத் தேர்வைப் புத்தகமாக்கிய பெண்ணைச் சிறை செய்ததுவும்.

முஸ்லிம்கள், வாழ்வின் அனைத்துச் செயற்பாடுகளையும் -புற ,அகச் சுத்தங்களையும் கண்டடையக் குர்-ஆனே தங்களுக்கு வழி காட்டவல்லது என நம்புகிறவர்கள். இன்னும் முதலாளிகளின் நவீன சித்தாந்தங்களின்படி சொன்னால், முஸ்லிம்கள் என்பவர்கள், ' நன்கு இறுக்கமாகக் கட்டப்பட்டு ஆழ நதிக்குள் போடப்பட்ட கற்களைப் போன்றவர்கள்.. பாவம்,அந்த அப்பாவிகளைக் குற்றம் சாட்டாதீர்கள். குர்ஆனின் வழியுறுத்துதலை நம்பிய அடிமைகள் அவர்கள்.வாழ்வியல் மட்டுமன்றி, தங்களையும் எங்கிருந்து வந்தீர்,எங்கு போக உள்ளீர் எனச் சொன்னதையும், மறைவானவற்றையும் நம்புகிறவர்கள் அவர்கள். இங்கு பிறப்பதற்கு முன்னரேயே, அல்லாஹ்வின் முன்னிலையில் சஜதாவில் (தலை தாழ்த்தி)விழுந்தபடி 'நீதான் எங்கள் அல்லாஹ்' என மொழிந்துவிட்டு வந்தவர்கள்.

மௌத்தின் பின்னரும், அவன் முன் எழுப்பப்பட்டு கேள்விக்கு உட்படுத்த உள்ளதை நம்புகிறவர்கள் . கேள்வி? இந்தப் பூமியில் பின்பற்றி நடந்தாயா? என்பதுதான். . நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்களைப் பின்பற்றி நடந்தால் வெற்றியடைந்தவனாவாய் என முன்னரேயே அவன் வசனங்களினூடு அருளியிருந்தான். நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) அவர்கள் இறந்த பின்னர் ஒரு சஹாபி அவர்களின் மனைவி ஆயிஷா நாயகி அவர்களிடம்,'அவர்களின் வாழ்வு எப்படி இருந்தது’ எனக்கேட்க, ஆயிஷா நாயகியவர்கள்-' குர்-ஆனாய இருந்தது’ என்பார்கள். அந்த இறைத் தூதர்தான், முஸ்லிம்களாகிய நீங்கள் அல்லாஹ்வின் அடிமைகள், அவனின் வழியை விட்டும் தவறிவிடாதிருக்க ஐந்து வேளையும் தொழுது வாருங்கள். அதுவும் தனியே தொழுவதைவிட இருபத்தேழு மடங்கு நன்மைபெற பள்ளியில் தொழுங்கள். எனவும், தனது ஊரின் பள்ளியைச் சாராதவன் மட்டுமல்ல, இனம், மொழி, பிரதேசம் பேசுகிறவனும் எம்மைச் சார்ந்தவனல்ல என்பதைச் சொல்லி செயலில் நிறுவிக்காட்டியவர்கள் .

இதை இன்னும் வலியுறுத்த 'முஸ்லிம்கள் ஒருடம்பு போன்றவர்கள்: அவர்களின் எந்தப் பகுதியில் வலி ஏற்படினும், மொத்த உடலுமே துடிக்கும்' என்றார்கள். பள்ளிகளில் அவர்கள் தலை தாழ்த்தி வணங்கும், மகிமைக்குரிய அல்லாஹ்வைப் பற்றி அதிகம் சொல்லிக் கொடுத்தார்கள். அவன் தனித்தவன், இணை, துணை அற்றவன். அனைத்தையும் ஆள்பவன். கேள்வி கேட்பவன்: யாராலும் கேட்கப்பட முடியாதவன். அன்பாளன். அருளாளன். மூஸா நபியுடன் வானவரின்றி பேசியவன். எந்தவித ஒப்பீடும் அற்றவன், உருவமற்றவன், அவனைத் தன் புறக் கண்களினூடு பார்க்க மூஸா நபி விரும்பிய போது, தன்புறமிருந்து துகளளவான ஒளியை இறக்கியருளவே, சிதறிய மலையும், பேரொளியும் கண்டு, நினைவற்று மூர்ச்சையர்றுப் போனதன் மூலம் தன் உள்ளமையின் வல்லமையை காட்டியவன்.

ஈசா நபியின் தாய், மரியமுக்கு, மூஸா நபியின் காலத்தின் போது இஸ்ரேலர்களுக்கு வானிலிருந்து உணவு அனுப்பியவன், உயிர் துவங்கி அனைத்தும் கொடுப்பவனும், பறிப்பவனும் அவனே என நம்பிக்கை கொண்டவர்கள். நடந்தது, நடக்க உள்ளது, நடந்து கொண்டிருப்பது அத்தனையும் அவன் நாட்டத்தின் படியே என முழுக்க விசுவாசித்து அவன் புறமாகத் தன்னை ஒப்படைத்து அவன் ஆகுமாக்கியதைக் கொண்டு திருப்தி கொண்டவர்கள். அதன்வழி தவறிவிடும்போது பிழை பொறுக்கவும், அவனுக்கு நன்றி தெரிவிக்க்கவுமாகக் கூடும் இடம் பள்ளி வாசல். அங்கு பயங்கரவாதச் சிந்தனை இருக்கச் சாத்தியமேயில்லை. ஒரு உண்மையான முஸ்லிமுக்கு இந்தப் பூமி சோதனைக்குரிய இடம் . இடைத் தங்கும் தலம், அவ்வளவுதான்.

அல்லாஹ்வின் தேர்வுக்கு முன்னால், தன் நாட்டம், செயல் எதையுமே முன்வைக்க முடியாத அடிமை .. இதை அவனே ஏற்றுக்கொள்கிறேன் என்றபோது, தான் என்னமோ உயுரத்திலுள்ள மோட்டு வளையில் உட்கார்ந்திருப்பதாக நினைத்துக் கொண்டு 'ஏலே, என்னாலே நீ இப்பிடியிருக்க' என்றால், அவனென்ன செய்ய முடியும்? ஏதும் வைத்துக் கொண்டா அவன் வஞ்சனை செய்கிறான்.? அனைத்தும் அறியுமாம் அல்லாஹ்வின் வார்த்தைகளான திருமறை. அது, ஒருபோதும் ‘இது முஸ்லிம்களுக்கு மட்டுமானது’ என சொல்லவில்லை. 'இந்த ஒளி .உலக மாந்தர்களுக்கு ஒரு நேரிய வழிகாட்டி’ என்றே சொல்கிறது. அதை எந்த . வேதம்தான் சொல்லவில்லை. அதையேதான் அதுவும் சொல்கிறது. அதுவும் இப்படிமுன்னர் வந்த அனைத்து வேதங்களையும் உண்மைப் படுத்துவாக இதுவும், நீங்களும் இருந்த போதிலும்,,,,' அதாவது, இந்து, பௌத்தம், கிறிஸ்தவ வேதங்களுக்குப் பிந்தியதாகவே முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வருகை இருந்தது. இஸ்லாம் மிக இள வயது கொண்ட மதம். இலங்கையில் சிங்களவரும், தமிழரும் இருந்த காலத்திலிருந்து முஸ்லிம்களும் இருந்ததனரா என்பது தெரியாது. ஆனால்,நிச்சயமாக இலங்கை முஸ்லிம்களின் இத்தனை பரம்பலின் மூதாதைகள் -நமது ஆறாம், ஏலாம் அறிவெல்லாம் வேண்டாமல் ஐந்தைக் கொண்டு பார்த்தாலே, பெரும் பகுதியினர் மொழியால், சிங்களம்-தமிழ்: ,. மதத்தால் பௌத்தம், இந்து, கிறிஸ்தவம் . அது வாள் கொண்டுதான் சாதிக்கப்பட்டது என்பதுஅபத்தமானது.

இந்தியாவைத் தவிர்த்து, இந்தோனேசியா, மலேசியா, மாலைதீவு, இலங்கை,,,,எங்குமே அவர்களின் போர் நிகழ்ந்ததில்லை. இங்கெல்லாம் இஸ்லாம் பரவியது நபிகள் நாயகத்தை அடியொற்றிய மிகப்பெரும் கண்ணியத்துக்குரிய ஆலிம்களால்தான். இலங்கையின் இன்றைய பெரும்பாலான பழைய பள்ளிவாயல்களினது, பெயரீடுகளை நீங்கள் தேடிக்கண்டடைந்தாலே அதை ருசுப்படுத்திக்கொள்ள முடியும். அவர்களிடம் இன்றைக்கு இஸ்லாத்துக்கு உரிமையும், அதிகாரமும், செல்வ நிலையும் எங்களுக்குரியதுதான் எனக்காட்டுபவர்களைப் போல், (அப்படி ஒன்று எந்த வேதத்துக்குமே யாராலும் கோரப்பட முடியாது என்பதுவே சத்தியமான உண்மையாயிருக்க) உரிமை கொண்டாடும் நிலைமை இருக்கவில்லை. அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்ததனால், அவனது அண்மையைப் பெற்றவர்களாக அவர்கள் இருந்தார்கள். தமது இள வயது முதற்கொண்டு , தனது அத்தனை முயற்சி,உழைப்பு, , 'என் வழியில் போர் செய்பவர்களுக்கு நானே பாதைகளை இலகுவாக்கிக் கொடுக்கிறேன்' எனும் அவனின் வார்த்தையில் நம்பிக்கை கொண்டு வாழ் நாள் பூராக அவன் ஏவிய அமல்களிலேயே இருந்தவர்கள் அவர்கள். ஆம்,, பாதைகள் வேறு வேறான போதும், ஒருத்தர் மற்றையவரையும் மேலாகவே மதித்திருந்த காலம்அது. அவர்கள் இதற்காக எந்தக் கூலியையும் பெற்றதில்லை. ஏனெனில்,தங்களை அவனளவில் முடுகுதல் பெற்றோராக, இந்த உலகின் அனைத்து வளங்களையும் விட மேலான செல்வம் வாய்க்கப் பெற்றோராக அவர்கள் இருந்தனர்.

அல்லாஹ்வே 'தங்களை தனவந்தர்களாக அவர்கள் கருதுகின்றனர். அவர்களுக்குக் கொடுங்கள்' என உத்தரவிடுகிறான். மக்களோ , அதைத் தங்களின் கடமையாக நினைத்து, நன்மையை நாடி அவர்களைப் போசித்தார்கள். அல்லாஹ்வின் மார்க்கத்தை ஞாபகப்படுத்துபவர்களாகவே அவர்களைக் காணும் பொழுதெல்லாம் இருந்தது. மக்களும் தங்களின் அனைத்துக் காரியங்களையும் மதத்தைவிட்டு அப்பால் ஆக்காதபடி இருக்க அது வழி செய்தது.

பள்ளிக்குப் பள்ளி கந்தூரி, வீட்டுக்கு வீடு ஆபத்து, நேர்ச்சை, இறந்த உறவினர்களுக்கான வேண்டுதல்கள், தான தர்மங்கள், ரொட்டியும் சாப்பாட்டு வாசமுமாக ஊரே மத வாசம் பூசி நிற்கும். பகலை இருட்டுச் சுருட்டி எடுக்கும் நேரம் ,முன்னால ஒருத்தர் பெர்ரோமேகஸ் லாம்ம்பை, மாப்பிள்ளைக்கு அருகாகப் பிடித்துவர, தலைப்பாகை போட்டதுகள் மாப்பிள்ளையை பைத்துச் சொல்லிக் கூட்டிப் போவார்கள்.. ஒருத்தரையும். சைக்கிள்ளை பார்க்கேலா. நடை பவனி. இன்னொரு நாளைக்கு இரவைக் கிழிக்கும்,மரணத்தை ஞாபகமூட்டும் அமைதியைச் சூறையாடும் மரண ஊர்வலம். அப்போதும் குரலில் வேதனை மறைத்து, ஓதிக்கொண்டு போவார்கள். நோன்பு மாசம்தான் எத்தனை உசத்தியானது இரு பெருநாட்கள், மௌலூது, மீலாது விழா வென்று எப்போதும் மார்க்க சிந்தனையில் மக்கள் இருப்பது இலகுவாயிருந்தது..., ஒரு குவளை நீர் அருந்துவதானால் கூட, தாகத்தைத் தீர்க்கும் தண்மையை நீருக்கு வழங்கி உயிருள்ள அனைத்தின் தாகம் தீர்க்கும் வல்லவனின் அருளை ஞாபகம்கொண்டு உட்கார்ந்து கொண்டு அருந்துவதுதான் அவர்களின் பண்பாயிருந்தது.

முஸ்லிம்களுக்கான வாழ்வியலை, மொழி, பிரதேசம், இனம், நிறம் கடந்த வாழ்வாகக் காட்டித் தந்தவர்கள் அவர்களே. மக்களின் திருமணம், காணிப்பிரச்சினைகள், முரண்பாடுகள் அனைத்துமே பள்ளிவாயல் நிருவாகங்களினூடாக தீர்த்து வைக்கப்பட்டிருந்தன. உலமா சபை என்பது முஸ்லிம்களின் நிம்மதியான வாழ்வுக்கு வழிகோலியது. அன்றையமக்களிடமிருந்த நம்பிக்கை இன்றைய மக்களிடம் இல்லை. ஆனால் எல்லோரும் முன்னர் சந்திக்கு சந்தி நின்று பேசிய அரசியலுடன் ஒன்றாக இதையும் ஆக்கப்பார்க்கிறார்கள்.

அந்தப் பள்ளிக்கு வருபவர்களின் மூதாதையரின் காலம், ஒரு முஸ்லிம் தூங்கி எழுந்தது முதல் படுக்கைக்குச் செல்லும்வரையான மார்க்கக் கடமைகள் இப்படித்தான் இருக்க வேண்டும், அனைத்திலும் இப்படியே இருங்கள் என்பதைச் செய்தும், போதித்தும் வந்தவர்கள் முஸ்லிம்களின் தலைவர்களாக இருந்த காலம் . அன்று பாராளுமன்றத்தில் இருந்த முஸ்லிம் அரசியல் சார்பான எம்பிக்கள்கூட இந்தப்பெரியார்களைத் தங்களின் மரணமற்ற உயரிய வாழ்வுக்கு முன் உதாரணமாகப் பின்பற்றிய காலம். அதன் பின்னர் வந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியாலும், வருடா வருடம் அரபிக் கலாசாலைகள் வெளித்தள்ளிய மூவாயிரம் மௌலவிகளாலும் (ஆலிம்கள் அல்ல) முஸ்லிமாயிருப்பது என்பது இந்த அரசியல் சாக்கடைகளைப் பின் பற்றுவது என்றாகிப் போயிருக்கிறது.

மௌலவிகள் பச்சோந்தித்தனமான இந்த அரசியல்வாதிகளுக்கு ஏற்றதுபோல மக்களை வழிகேட்டுக்கு உள்ளாக்க முனைந்துள்ளார்கள். ஒரு உதாரணம் : ஐ. தே.க. சார்ந்த ஒரு மௌலவி ஜும்மாவிலேயே இப்படிப் பேசுவார் : முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்: ஒரு காலம் வரும் அப்போது, உள்ளத்திலே நயவஞ்சகமும், பேராசையும்வைத்துக் கொண்டு, தொண்டைக்கு அருகான வாயினால் மட்டும் இஸ்லாத்தைப் பேசுகிறவர்கள் உங்களின் தலைவர்களாக வருவார்கள் என்று.
அடுத்த ஜும்மாவில் முஸ்லிம் காங்கிரஸ் சார்ந்த மௌலவி பேசுவார் : முஹம்மது நபி (ஸல்)அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்: ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் என்று.

இரெண்டையும் கேட்கிறவனின் பாடுதான் என்ன ஆவது? அல்லாஹ்வே தனது திருமறையில், சொற்ப ஆதாயத்துக்காக ' இதன் வசனங்களை மாற்றுபவனுக்குக் கேடுதான்' எனச் சொன்ன பின்னரும், ஹராமாகப் பொருள் தேடிக் குவிக்கும் இந்தப் பொறுக்கிகளின் அரசியலுக்கு வாகாக மதம் பிடித்தலைபவர்களை என்ன சொல்வது?

தமிழ் மொழி பேசுவோருக்கு விடுதலை என்று சொன்னாலும், முஸ்லிம்களைக் கொன்றொழித்ததிலும், யாழை விட்டுத் துரத்தியதிலும் புலிகளுடன் உடன்பட்ட கூட்டணியின் எந்த மேடையிலும்,யாரும், 'தங்களின் கட்சிக் கொள்கையாக கீதோபதேசத்தையோ, அவர்களின் வேதப் புத்தகங்களையோ யாப்பாகக் கொண்டிருப்பதாகச் சொன்னதில்லை. இவர்களால் மட்டும்தான் குர்- ஆனும், ஹதீதுமே எங்கள் யாப்பு எனச் சொல்ல முடிந்திருக்கிறது.

அல்லாஹ்வுக்காக, பாராளுமன்ற, மாகாண, பிரதேச சபைத் தேர்தல்களின்போது மட்டும் நபிகள் நாயகத்தையும், கலிபாக்களின் கிலாபத்து ஆட்சிகளையும் பேசுவதற்கே வக்கற்ற நிலைமையிலுள்ள நீங்கள், உங்களிடம் இல்லாதன கூறல் இழுக்கு என்பதற்கொப்ப உங்களையே அசிங்கம் செய்கிறீர்கள்.

புலிகளின் அராஜகத்தின்போது கிட்டத்தட்ட நூறு பள்ளிவாயல்கள் சேதமாக்கப்பட்டதை துளியளவுகூட கண்டிக்க வக்கற்ற நீங்கள், இன்று ஜனநாயகம் இருக்கிற தைரியத்தில், ஆட்டுகிற சின்னிவிரலின் வீரத்தில் மொத்த முஸ்லிம்களே திகைத்துப் போயுள்ளார்கள். அனைத்துப் பள்ளிவாயல்களுக்கும் பொறுப்பான உலமா சபையினரினால், தீர்க்கவேண்டிய கடுகளவு பிரச்சினையை- அனுராதபுர தர்ஹா தகர்ப்பின்போது, மூச்சுக்கூட விடாது முக்காட்டுள் மூடிக் கிடந்துவிட்டு, தேர்தலுக்காக என்னமாய்த்தான் வீராப்புப் பொங்கி வழிகிறது உங்களிடம்.

முஸ்லிம்களின் வழி காட்டுதலுக்குரிய தலைவர்களின் - உலமாக்களின் தொழிலை மேற்கொள்ள முனையாதீர்கள். எல்லா அரசியல் கட்சிகளையும்போல பத்தோடு ,இன்னொன்றாக இருந்துவிட்டுப் போங்கள். நீங்களாகவே ' முஸ்லிம்களின் தலைவர்கள்' எனும் குல்லாவைப் போர்த்துக்கொண்டு அவர்களின் நாளாந்த வாழ்க்கையையே அச்சத்துக்குரியதாக்கி விடாதீர்கள்.

ஏனைய சமூகத்தவரிடம், ஆற்றோரப் பத்திரிக்கை போலவே, ஆற்றோரப் பாராளுமன்றத்துக்கு வருபவர்களிடம் உங்கள் பிரச்சனைகளை வைத்துக் கொள்ளுங்கள் என எங்கள் உலமாக்கள் சொல்லி விடட்டும். ஏனெனில்,முஹம்மது நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் 'அயல் விட்டான் மனம் கோணும்படி நடப்பவன் முஸ்லிமாகவே இருக்க முடியாது என்றார்கள்.. நோன்பின் பிந்திய காலத்தின்போது, ஜிப்ரீல்(அலை) அவர்கள், பக்கத்து வீட்டு யூதனுக்கு வாரி, வாரி வழங்கச் செய்ததன் மூலம் உறவுக்காரர் ஆக்கிவிடுவார் போலிருந்தது' என்பது அவர்களின் வாழ்வியல் முறை .

தனது சொந்த மகனை நாயகத்தின் தோழர், இஸ்லாத்தில் இணைந்து கொள்ள நிர்ப்பந்திக்கலாமா? எனக்கேட்க, வஹி மூலம் 'யார் மீதும் நிர்ப்பந்தமில்லை' என்கிறான் அல்லாஹ்.

பள்ளிவாயலில், அல்லாஹ்வின் வழியை விட்டும், தன் நப்சு மாற்றம் செய்வதை நிறுத்தவே, அதனுடன் போராடவே அவன் தன்னுள் உருவிய வாளையும் கவசத்தையும் பாதுகாப்பதே பெரும்பாடாயிருக்க உங்களின் அவாவுக்குப் பின்னால் அவனை இழுத்துச் செல்லாதீர்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நேரிய வழியைத் தந்தருள்வானாக. ஆமீன்.

பிற்குறிப்பு: இது முன்னரே எழுதப்பட்டதாயினும், கிழக்கு மாகாண சபைக்குப் போட்டியிடும் அபேட்சகர்களை உலமாக்களை வைத்து சத்தியம் பெற்ற செய்தியை முன்னிட்டு இது.

உங்கள் உறுப்பினர்கள் மட்டுமல்ல, எல்லா முஸ்லிம்களுக்கும் அவர்களேதான் வழிகாட்டிகள் என்பதை ஒப்புக் கொண்டு, மக்களையும் அவர்கள் காட்டும் வழியில் செல்ல விட்டு விடுங்கள். மேற்படி கட்டுரைக்குச் சாதகமாகவே -நாங்கள் இப்படித்தான் இருந்தோம்' என்பதை ஆதாரபூர்வமாக்கிய உங்களின் நிகழ்வுக்கு நன்றி சொல்லியே ஆக வேண்டும்.

Read more...

இந்தியா இலங்கையின் பரம விரோதி, சீனாவுடனான உறவை வலுவாக்குவீர். குணதாச

இந்தியா, இலங்கையின் பரம விரோதி என்றும், அதனால் இலங்கை சீனாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் என்று, தேசப்பற்றுள்ள தேசிய அமைப்பின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 30ம் திகதி இடம் பெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் இந்திய வாயில் புத்தபோதனையும் வயிற்றில் விலங்கிறைச்சியினைக் கொண்டுள்ளதாகவும் அவர் விமர்சிக்கின்றார்.

மேலும், இலங்கை தொடர்பில் இந்தியா இரட்டை வேடம் போடுகின்றது என்றும், ஒரு பக்கத்தில் கலிலவஸ்துவை இலங்கைகு அனுப்பும் இந்தியா, மறுபக்கத்தில் இலங்கையில் பௌத்த தலங்களைத் தாக்க ஏவுகணைகளை ஆயத்தமாக வைத்துள்ளது என்றும், இது வாயில் பௌத்தமும் வயிற்றில் இறைச்சியும் என்பதற்கு ஒப்பாக இருக்கிறது எனவும், அதனால் இந்தியாவுக்குப் பயப்படாமல் சீனாவோடு அதிகமாக உறவைப் பலப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

சிரிகோத்தா முன் உண்ணாவிரதம் இருக்க போகின்றாராம் பந்துல

ஒரு சிலரின் விருப்பத்துக்காக பாராளு மன்ற உறுப்பினர் தயாசிரியை ஐக்கிய தேசிய கட்சியிலிருந்து நீக்கினால், தான் ஆயிரக்கணக்கான ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களுடன் வந்து, சிரிகொத் தாவின் முன்பாக உண்ணாவிரதம் இருப்பேன் எனதெற்கு மாகாண சபை உறுப்பினர் பந்துல லால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.

மேலும், ஐக்கிய தேசியக் கட்சி நாட்டுக்குத் தேவையான நபர்களுக்கு இடம் கொடுக்காது நாளாந்தம் நலிவுறுகின்றது என்றும், சரத் பொன்சேகா, கரு ஜயசூரியா, சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒரே கொடியின் கீழ் ஒன்றிணைந்து கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read more...

ஆயுதங்களை கொள்வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் உரிமைகள் மறுக்கப்படலாகாது

ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் உறுப்பு நாடுகள், சிறிய மற்றும் இலகுரக ஆயுதங்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகள், ஆயுதங்களை கொள் வனவு செய்வதற்கான அரசாங்கத்தின் உரிமையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்று ஐ.நா.வுக்கான இலங்கையின் துணைத் தூதுவர் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 27, 28 ம் திகதிகளில் நடைபெற்ற "சகல வழிகளிலும் சிறிய மற்றும் இலகுரக ஆயுதங்களின் சட்டவிரோதமான வர்த்தகத்தை தடுத்தல், முறியடித்தல் மற்றும் ஒழித்தல்" வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் 2வது ஐ.நா மாநாட்டில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன். அத்தகைய ஆயுதங்களின் சட்டமுரணான வர்த்தகம் காரணமாக 30 ஆண்டுகள் பாதிக்கப்பட்ட நாடு இலங்கை எனவும். ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் , சட்டமுரணான முறையில் இத்தகைய ஆயுதங்களைச் உலகளாவிய ரீதியில் பெருமளவில் பெற்று, இலங்கையின் சட்டபூர்வமான அரசாங்கத்துக்கு எதிராக அராஜகம் நடாத்திக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது என சுட்டிக்காட்டினார்.

2006 ல் நடைபெற்ற அதன் முதலாவது மாநாட்டில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more...

அரசுடன் தொங்கிக் கொண்டிருப்பதா? தேர்தலின் பின்னர் தீர்மானம் – ஹசன் அலி.

அரசாங்கத்துடன் தொடர்ந்திருப்பதா? இல்லையா? என்பதை தேர்லுக்குப் பின்னர் முடிவு செய்வோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார். எனினும் இது தொடர்பாக இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

இம்முறை கிழக்கில் தனியாக போட்டிடுவது கட்சிக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றும், இது தொடர்பாக ஜனாதிபதியுடன் நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read more...

போர் மற்றும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் வழங்கவுள்ளது.

இலங்கையில் போர் இடம்பெற்ற வடக்கு கிழக்கு மாகாணங்கள், அத்துடன் தெற்கு மாகாணத்தில் 2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடுகளை இழந்தவர்கள், அவற்றை திருத்தியமைத்துக் கொள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி கடனுதவி வழங்க விருப்பதாகவும் இந்தக் கடன் டி.எஃ.சி.சி வர்தன வங்கியூடாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2009ல் 30 ஆண்டு யுத்தம் முடிவற்ற பின்னர், வடக்கு கிழக்கில் வீட்டுத் தேவைகள் அதிகரித்துள்ளதாகவும், இதற்கான கடன் வழங்கும் திட்டத்தை டி.எஃ.சி.சி வர்தன வங்கியூடாக நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தனியார் துறை செயற்பாட்டுத் திணைக்களப் பணிப்பாளர் பிலிப் எர்குய்கா அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Thursday, August 30, 2012

அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் இலங்கையில் ஆற்றிய உரை

சர்வதேச சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜெரி வைட் கடந்த 26ம் திகதி கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சோ.ச.க. பொது செயலாளர் விஜே டயஸ், வைட்டை அறிமுகப்படுத்தியதோடு அமெரிக்க தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் சோ.ச.க. அதன் ஜனாதிபதி வேட்பாளரை அனுப்ப முடிவு செய்தது ஏன் என்பதையும் விளக்கினார். 'அமெரிக்க சோ.ச.க., மாற்று சோசலிச கொள்கைகளுக்காகப் போராடவும் அந்த திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதற்கான போராட்டத்தை வழிநடத்தவும் ஜனாதிபதி தேர்தலில் தலையீடு செய்கின்றது,' என்று அவர் கூறினார்.

ஐவட்டின் உரையை கேட்பதற்காக தொழில்சார் வல்லுனர்கள் , இளைஞர்கள் மற்றும் வட இலங்கை , மலையக தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர். ஆங்கு உரையாற்றிய ஜெரி வைட்

தனது பயணம், சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் அமெரிக்கவிலும் அனைத்துலகிலும் உள்ள தொழிலாளர்களின் ஐக்கியத்துக்காகப் போராடும் சோ.ச.க.யின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு முக்கிய பகுதியாகும் என்று வலியுறுத்தி வைட் உரையை ஆரம்பித்தார்.

சர்வதேச மற்றும் அமெரிக்க அரசியல் அபிவிருத்திகள் குறித்து வைட் தெரிவித்ததாவது: 'புஷ் நிர்வாகம் ஈராக்கிற்கு எதிராக இராணுவ தாக்குதல்களை முன்னெடுத்து கிட்டத்தட்ட பத்து வருடங்களின் பின்னர், ஜனாதிபதி ஒபாமா சிரியா மீது அமெரிக்க படையெடுக்க அச்சுறுத்துகின்ற நிலையில், அதே சிடுமூஞ்சித்தனமான கூற்றுக்களை மீண்டும் தெரிவிக்கின்றார். இத்தகைய போர் ஈரான் மீது விரிவாக்கப்படவுள்ளதோடு அத்துடன் அது அணு ஆயுதங்களைக் கொண்ட ரஷ்யா மற்றும் சீனாவுடனான ஒரு மோதலுக்கான ஆபத்தைக் கொண்டுள்ளது.'

வாஷிங்டனானது சீனா மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளான ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே பிராந்திய எல்லைப் பிரச்சினைகளைத் தூண்டிவிடுகின்றது என வைட் விளக்கினார். 'இராணுவ ரீதியில் சீனாவை சுற்றிவளைக்கும் அமெரிக்காவின் பூகோள-அரசியல் திட்டங்களுக்குள் இலங்கையின் 21 மில்லியன் மக்களும் இழுத்துப்போடப்பட்டு வருகின்றனர்.'

'ஆசியாவின் தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களைப் பொறுத்தவரையில், ஒரு அமெரிக்க இராணுவவாதத்துக்கும் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்தில் மிகவும் இன்றியமையாத பங்காளி அமெரிக்க தொழிலாள வர்க்கமே ஆகும்,' என வைட் கூறினார்.

லெஹ்மன் பிரதர்ஸின் சரிவை தொடர்ந்து 2008ல் அமெரிக்காவில் தொடங்கிய நிதிப் பொறிவு, உலகம் முழுவதும் பரவியது, என வைட் விளக்கினார்.

ஐரோப்பிய முதலாளித்துவம் இந்த பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது பற்றி உடன்பாடுகொண்டிருக்காததோடு, பிரேசில், சீனா, இந்தியா மற்றும் இலங்கை உட்பட வளரும் நாடுகள் ஏற்றுமதிக்கான கேள்வியில் ஒரு தீவிர சரிவையும், சம்பளத்தைக் குறைக்க வேண்டிய அழுத்தம் புதுப்பிக்கப்படுவதையும் மற்றும் வேலையின்மை வளர்ச்சியடைவதையும் கண்டன, என அவர் சுட்டிக்காட்டினார்.

'அமெரிக்காவில், நவம்பர் தேர்தலில் ஜனாதிபதி ஒபாமா வென்றாலும் சரி அல்லது அவரது குடியரசு போட்டியாளர் மிட் ரொம்னி வென்றாலும் சரி, பெருநிறுவன மற்றும் நிதிய உயரடுக்குகள் தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளை வெட்டி அகற்றுவதில் உறுதியாக உள்ளன,' என வைட் விளக்கினார்.

இந்த வளர்ச்சிகள், 'அமெரிக்க தொழிலாளர்களின் அரசியல் நனவில் ஆழ்ந்த மாற்றத்துக்கு வழிவகுக்கின்றன,' என வைட் தெரிவித்தார். இன மற்றும் அடையாள அரசியலின் அடிப்படையில், பழைய தொழிற்சங்கங்களுடனும் ஒபாமாவுடனும் தொழிலாள வர்க்கத்தைக் கட்டிப் போட முயற்சிக்கும் போலி இடது அமைப்புக்களுக்கு எதிராக சோ.ச.க. தனது போராட்டத்தை நடத்தி வருகின்றது, என வைட் தொடர்ந்தார்.


வைட் வலியுறுத்தியதாவது: 'பல தசாப்தங்களாக, எங்கள் இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு, அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்துக்கு ஒரு புரட்சிகர முன்னோக்கைப் பாதுகாக்க போராடி வருகின்றது. இப்போது நாம் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின், குறிப்பாக அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மிக பெரும் வர்க்க போராட்டங்கள் வெடிக்கும் சூழ்நிலையை நெருங்கியுள்ளோம்.

'ட்ரொட்ஸ்கி புரட்சிகர போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் விளக்கியது போல்: 'ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் உள்ள தொழிலாள வர்க்கத்தின் பணி, நன்கு சிந்தித்து உருவாக்கப்பட்ட முதலாளித்துவத்தின் எதிர்ப் புரட்சிகர மூலோபாயத்தை எதிர்த்துத் தாக்குவதை உள்ளடக்கியதாகும். அதன் சொந்த புரட்சிகர மூலோபாயம் கடைசிவரை அதே போல் நன்கு சிந்தித்து ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.'

இத்தகைய புரட்சிகர தலைமைக்கு அமெரிக்காவிலும் அனைத்துலகிலும் சோ.ச.க.யை கட்டியெழுப்புவது அவசியமாகும் என சுட்டிக்காட்டி வைட் தனது உரையை முடித்தார்.

வைட்டின் உரையைத் தொடர்ந்து நீண்ட கேள்வி, பதில் நிகழ்வு தொடர்ந்தது. பார்வையாளர்கள், விஸ்கான்சின் எதிர்ப்பு போராட்டத்தின் தலைமைத்துவம் பற்றி, 2011ல் வோல் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு இயக்கம் பற்றி, அமெரிக்காவின் சுதந்திரப் போர் மற்றும் உள்நாட்டு போரின் புரட்சிகர தன்மை பற்றியும், மற்றும் முதலாளித்துவ அமைப்பை மாற்றியமைக்கவும் ஆளும் வர்க்கத்தின் எதிர்ப் புரட்சிகர மூலோபாயத்தை எதிர்கொள்ள எப்படி சோ.ச.க. முயற்சிக்கின்றது என்பது பற்றியும் கேள்விகளை எழுப்பினர். இந்த கேள்விகளுக்கும் ஏனைய கேள்விகளுக்கும் வைட் நீண்ட பதில்களை வழங்கினார்.

மேலும், நவம்பர் 6 நடக்கவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சோ.ச.க. வேட்பாளரை வாக்குச்சீட்டில் இருத்த வேண்டும் என விஸ்கான்சின் அரசாங்க பொறுப்பு குழுவுக்கு கோரிக்கை விடுக்கும் தீர்மானம் ஒன்று கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் கூறியதாவது: 'அமெரிக்காவில் நவம்பரில் நடக்கவுள்ள தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான ஜெரி வைட் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் பிளிஸ் ஷெரரும் விஸ்கான்சின் வாக்குச் சீட்டில் இடம்பெறுவதற்கு அரச அதிகாரிகள் இடும் சகல தடங்கல்களும் அகற்றப்பட வேண்டும் என இந்த கூட்டம் கோருகின்றது.'

வைட் உரையாற்றும் பொதுக் கூட்டங்கள் மற்றும் இலங்கை சோ.ச.க. போட்டியிடும் எதிர்வரும் மாகாண சபை தேர்தல் பிரச்சாரங்களை மேம்படுத்த உதவுவதற்கு 14,000 ரூபாய் நிதி வழங்கப்பட்டது. இலங்கை சோசலிச சமத்துவ கட்சியின் வரலாற்று மற்றும் சர்வதேச அடித்தளங்கள் உட்பட ரூபா 10,000 க்கும் மேற்பட்ட பல இலக்கியங்கள் விற்பனையாகின. 'சர்வதேசிய கீதத்துடன்' கூட்டம் முடிவுக்கு வந்தது.

Read more...

ஜெர்மனியில் 2-ம் உலகப்போர் குண்டை வெடிக்க செய்தனர்: 3 நாட்களாக தீ எரிகிறது

2-ம் உலக போருக்கு காரணமான ஜெர்மனியில் அந்த போரின் போது பயன்படுத்த வைத்திருந்த குண்டுகள் பல இடங்களில் புதைந்து கிடக்கின்றன. இவற்றை கண்டுபிடித்து செயலிழக்க செய்யும் முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

இதற்கிடையே ஸ்க்வாபிங் மாவட்டத்தில் 250 கிலோ எடை கொண்ட குண்டு புதைந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை செயலிழக்க செய்யும் முயற்சி தோல்வியடைந்தது.

இதையடுத்து இந்த குண்டு முனிச் நகரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டது. இந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்க செய்வதற்கு முன்னதாக அந்த பகுதியில் இருந்த 3 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

குண்டு வெடித்த இடத்தில் பெரும் பள்ளம் ஏற்பட்டது. அந்து பகுதி முழுவதும் நிலநடுக்கம் ஏற்பட்டதுபோல குலுங்கியது. இதன் சத்தம் பல கிலோ மீட்டர் துரத்துக்கு கேட்டது. குண்டு வெடித்ததால் எழுந்த தீ கடந்த 3 நாட்களாக எரிந்து கொண்டிருக்கிறது.

Read more...

முன்னேஸ்வரம் பலிபூசை ஜனாதிபதியின் வேண்டுதலில் ஒத்தி வைப்பு.

புத்தர் பெருமானின் கபிலவஸ்து புனிதச் சின்னங்கள் வயம்ப பிரதேசத்தில் காட்சிக்கு வைக்கப்படும் காலத்தில், அப்பிரதேசத்தில் மிருக பலி பூஜை வேண்டாம் என ஜனாதிபதி முன்னேஸ்வரம் ஆலய நிர்வாகத்தினரிடம் விடுத்த வேண்டுதலை அடுத்து இவ்வாண்டு மிருக பலி பூஜையை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக முன்னேஸ்வரம் காளி கோவிலின் பிரதம குருவான சிவபாத சுந்தரம் தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் முதலாம் திகதி இம்மிருக பலி பூஜை நடத்தப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்று வியாழக்கிழமை காலை கூடிய முன்னேஸ்வரம் காளி கோவில் நிர்வாக சபையினர் இந்த முடிவை எடுத்ததாகவும், வருடாந்தம் இடம்பெற்றுவரும் மிருக பலி பூஜையினை ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் இவ்வருடம் மாத்திரம் நிறுத்துவதென முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

Read more...

மிஷல் ஒபாமாவை அடிமை போல சித்தரித்துப் படம்- சர்ச்சையில் ஸ்பெயின் பத்திரிக்கை!

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிஷலை கருப்பர் இன அடிமைப் பெண் போல சித்தரித்து அரை நிர்வாண கோலத்தில் மார்பிங் செய்த படத்தை வெளியிட்டு ஸ்பெயின் நாட்டு பத்திரிக்கை ஒன்று சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ஒரு கருப்பர் இனத்துப் பெண் மேலாடை இல்லாமல், வெற்று மார்புகளுடன் இருப்பது போல அந்தப் படம் உள்ளது. ஆனால் முகம் மட்டும் மிஷல் ஒபாமாவுடையது. மார்பிங் செய்து முகத்தை மட்டும் மிஷல் முகமாக மாற்றியுள்ளனர்.

இந்தப் படத்தை ஸ்பெயின் நாட்டின் பியூரா டி செரி என்ற பத்திரிக்கை அட்டைப் படமாக வெளியிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது இனவாத, செக்ஸ் வக்கிரம் பிடித்த செயல் என்று கண்டனங்கள் வெடித்துள்ளன.

ஏற்கனவே பாடகி ரிஹானாவை இப்படித்தான் ஒரு டச்சு நாட்டு பத்திரிக்கை மோசமான முறையில் கேலிச் சித்திரம் வரைந்து சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில் மிஷல் ஒபாமாவை அசிங்கமாக சித்தரித்துப் படம் போட்டிருப்பது புயலைக் கிளப்பும் என்று தெரிகிறது.

கரின் பெர்செரன் டேணியல்ஸ் என்ற ஒவியரின் படத்தை எடுத்து அதில் மிஷல் ஒபாமாவின் முகத்தை சூப்பர் இம்போஸ் மூலம் பொருத்தி வெளியிட்டுள்ளனர்.

Read more...

இலங்கைக்கு இராஜதந்திரிகள் விஜயம் செய்வது போன்று எந்த நாட்டிலும் இல்லை.

உயர்மட்ட வெளிநாட்டு ராஜதந் திரிகளின் இலங்கை விஜயத்தினால், தாயகத்திற்கு ஏராளமான நன்மைகள் கிடைத்துள்ளதாக, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வரலாற்றில் ஒருபோதும் இடம்பெறாத வகையில், ஏராளமான இராஜதந்திரிகள், இலங்கைக்கு வருகை தந்த வண்ணமுள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் மூன்று நாடுகளில் உயர்மட்ட தலைவர்கள், இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் வடபகுதிக்கு வந்து, இடம்பெற்று வரும் அபிவிருத்திகளை அவதானித்துள்ளனர். அவர்கள், கடந்த மூன்று வருடங்களில் இதுபோன்ற அபிவிருத்திகள், உலகில் எந்தவொரு நாட்டிலும் இடம்பெறவில்லையென,தெரிவித்துள்ளார்.

சீஷெல்ஸ் ஜனாதிபதி, பிரிட்டனின் நேஸ்பி பிரபு, அத்துடன் பிரிட்டனிலிருந்து வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்தியாவின் முக்கிய அமைச்சர்கள் ஐவர், இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் எமது நாட்டின் நிலைமையை ஆராய்ந்து, தங்கள் நாட்டுக்கு எடுத்துரைத்துள்ளனர். அதன் மூலம் வெளிநாடுகள் நமது நாடு தொடர்பாக வைத்திருந்த அபிப்பிராயம் மாற்றமடைந்துள்ளது.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளேக், இலங்கைக்கு வருகை தரவுள்ளார். பொதுநலவாய அமைப்பின் பொது செயலாளர் கமலேஷ் ஷர்மா, தாயகத்திற்கு வருகை தரவுள்ளார். சீனா மற்றும் ரஷ்யாவின் உயர்மட்ட தலைவர்கள், இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். அவை சிரிய நாடுகள் அல்ல. எமது நாட்டுக்கு பொருந்தும் வகையிலேயே, பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். வெளிநாடுகளில் திணிக்கப்படும் தீர்வுகளே அல்ல. இது தொடர்பாக சிறந்த புரிந்துணர்வு வெளிநாடுகளில் காணப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.

Read more...

நாட்டை மீட்டெடுத்த இந்த அரசாங்கத்தை மறப்பது துரோகத்தனமானது - சஜித் பிரேமதாச

மூன்று தசாப்த யுத்தத்தை முடித்து, பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்ட பெருமை, தற்போதைய அரசாங்கத்திற்கே உரியது எனவும் எந்தவொரு அரசாங்கத்தினாலும், சாதிக்க முடியாத கடமையை நிறைவேற்றி, தற்போது மக்கள் அனுபவிக்கும் சுதந்திரத்தை, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமே, பெற்றுக்கொடுத்தது என்பதை, மக்கள் மறக்கக்கூடாதெனவும், அவ்வாறு மறப்பது, துரோகத்தனமானதென, ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிரித்தலை நகரில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உண்மையை பேசி, நமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென்பதே, எனது தூய்மையான நம்பிக்கையாகும். அந்த நிலைப்பாட்டிலிருந்து கொண்டு, நாட்டை நேசிக்கும் ஒரு அரசியல் வாதியாகவும், நாட்டின் பிரஜையாகவும், நாம் ஒரு விடயம் தொடர்பாக மகிழ்ச்சியடைய வேண்டும். மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தை எம்மால் வெற்றிகொள்ள முடிந்தது. அதற்குரிய கௌரவம், தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பையே சாரும் என தெரிவித்துள்ளார்.

Read more...

மேலும் உறுதியடைந்தது சீனா - இலங்கைக்கும் உறவு.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியேன் குவேங்லி ஆகியோருக் கிடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் நேற்று இடம் பெற்றுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரானில் நடைபெறும் அணிசேரா இயக்க மாநாட்டில் பங்கேற்பதற்காக ஈரானுக்கு செல்வதற்கு முன்னர், இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை- சீன நட்புறவு மேலும் மேம்படுவதற்கு, இந்த சந்திப்பு உந்துசக்தியாக அமையுமென, ஜனாதிபதி தெரிவித்தார். அத்துடன் இலங்கை தொடர்பில், சீனா செலுத்தி வரும் ஆர்வம் மற்றும் ஒத்துழைப்பு தொடர்பாகவும், இலங்கை மக்கள் சார்பில் தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் சவால்களின்போது, சீனா தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளது எனவும் இதற்காகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சீன பாதுகாப்பு அமைச்சரிடம் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இலங்கையுடன் தொடர்ந்தும் நட்புறவை பேணுவதற்காக அனைத்து உதவிகளையும், வழங்குவதாக, இச்சந்திப்பின்போது, சீன பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார் ஜெனரல் லியேங் குவேங்லீ, சீன பாதுகாப்பு அமைச்சராக இலங்கைக்கு வருகை தந்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பேச்சுவார்த்தையை அடுத்து, ஜனாதிபதி, சீன பிரதிநிதிகளுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும், இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

Read more...

இலங்கையர்களின் பணங்களை சுறுட்டிய நைஜீரியப் பிரஜைக்கு சிறை சிறைத்தண்டனை

ஈ.ஸ்.பி.ன். கிரிக்கெட் சபை நடத்திய அதிஷ்ட இலாபச்சீட்டில் 750,000 ஸ்ரேலிங் பவுண் பரிசு கிடைத் திருப்பதாக தெரிவித்து, இலங்கை யர்களை ஏமாற்றிய நைஜீரியப் பிரஜையொருவருக்கு கொழும்பு கோட்டை நீதிவான் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

இலங்கை இளைஞர் ஒருவரிடமிருந்து 720,400 ரூபாவை மோசடி செய்ததாகவும் மற்றொரு வர்த்தகரிடமிருந்து 1,000 அமெரிக்க டொலர்களை மோசடி செய்யமுயன்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்த கிளின்ச் கிறிஸ்டியன் எனும் மேற்படி நபர் இக் குற்றச்சாட்டை ஒப்புக்கொள்வதாக அவர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து மேற்படி நைஜீரியப் பிரஜைக்கு 5 வருட காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட ஒருவருட சிறைத் தண்டனையை வழங்கியதுடன், இரு குற்றங்களுக்கும் தலா 1,500 ரூபா வீதம் அபராதமும் விதித்தார்.

Read more...

கைதிகள் தினத்தை முன்னிட்டு யாழ். சிறைச்சாலை கைதிகளை உறவினர்கள் சந்திக்க ஏற்பாடு

கைதிகள் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 9 ஆம் திகதி யாழ். சிறைச்சாலையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் கைதிகளை, அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம். செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ். சிறைச்சாலை கைதிகளால் அமைக்கப்பட்ட பனை கைப்பணிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதாகவும், யாழ். சிறைச்சாலை அத்தியட்சகர் ஆர்.எம். செனரத் பண்டார தெரிவித்துள்ளார்.

Read more...

வடக்கில் 17 வயதுக்குட்பட்ட 11000 அனாதைச் சிறுவர்கள் பதிவாகியுள்ளனர். சிவஞானம்.

1700 அனாதைச் சிறுவர்களின் விடாமுயற்சி யாழ்ப்பாண, சிறுவர் அபிவிருத்தி நிலையத்தை(Centre For Child Development)ஓய்வின்றி உழைக்க வைத்துள்ளது. பெற்றோரை இழந்த இந்த சிறுவர்கள் பாடசாலையில் தாம் எட்டவிருந்த குறிக்கோளையடைவதற்கு பல தடைகளைத் தாண்ட வேண்டியிருந்துள்ளது. அவரகள் எல்லோரும் கற்றறிந்த வெற்றியாளர்கள் அல்லர், சரியான திசையில் செல்லும் முயற்சியாளர்கள் என மேற்படி நிலையத்தின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.

அவர் கருத்து மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் அவர்களுக்கு இலவசக் கல்வியை வழங்குகின்றது. நாங்கள் இந்த அனாதைச் சிறுவர்களைப் பராமரிப்பதற்கு நிதிவசதி அளிக்கின்றோம். அவர்களை அனாதை இல்லத்துக்குப் பதிலாக வீட்டுச் சூழலில் பாட்டன், பாட்டிமாரிடம் அல்லது பெற்றோரின் சகோரங்களுடன் இருந்து வாழவைக்கின்றோம். அவர்களும் இவர்களை அன்புடன் ஏற்றுக் கொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கில் உள்ள 3 இலட்சம் சிறுவர்களில் 17 வயதுக்குட்பட அனாதைகள் 11,000 பேர் பதிவாகியுள்ளார்கள். 1 – 9 வகுப்புகள் வரை படிப்புக்காக மாதம 750 ரூபாவும், உயர் இரண்டாம் நிலைக் 1000 – 1200 ரூபாவும் செலவழிக்கப்படுகின்றது. ஐரோப்பா மற்றும் உண்ணாடு வெளிநாடுகளில் உள்ள தமிழ் அடிப்படை அமைப்புகளில் இருந்து நிதி வந்து சேர்கின்றது. அனால், இன்னும் நன்கெடையாளர்களை நிறுவனம் எதிர்பார்க்கின்றது என திரு சிவஞானம் குறிப்பிட்டார்.

அக்கறையுள்ளவர்கள் 0094 213211354 அல்லது 0094212220483 தொலைபேசிகளைப் பயன் படுத்தலாம் எனவும் இணையம் isdevelopers.org. மற்றும் மினஞ்சல்:cfcd@isdevelopers.org
ஊடாக தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Read more...

அருவருப்பான அரசியல் கலாச்சாரத்தை கொண்டவை ஐ.தே.க, ஸ்ரீ.மு.கா மற்றும் த.தே.கூ

எதிர்க் கட்சிகளும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் கிழக்கு மாகாண தேர்தல் பிச்சாரங்களில் இனவாதத்தை தூண்டு கின்றன என்று நாட்டின் முதிர்சியான அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தி யுள்ளதுடன், அமைச்சர் டலஸ் அலகப்பெரும ஐ.தே.கடசியும், ஸ்ரீலங்கா முஸ்லிம் கா காங்கிரஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் தேர்தல் பிரச்சாரங்களில் இனவாதத்தை தூண்டுகின்றன என தெரிவித்துள்ளார்.

Read more...

புலிகளின் தாக்குதலில் காலை இழந்தவர் ஒலிம்பிக்கில் பங்கு கொள்கின்றார்.

எனது ஊன்றுகோலே பயிற்சிக்கான ஒரே சாதனம் – லால் புஸ்பகுமார

இலங்கை ஏழு பேர் கொண்ட குழுவை இலண்டன் பராஒலிம்பிக் போட்டிக்கு அனுப்புகின்றது. அவர்கள் பதக்கம் வெல்ல திடசங்கற்பம் பூண்டுள்ளனர் என்றும், அவர்களின் முயற்சிக்கு உத்தியோக பூர்வ ஒத்துழைப்பு போதியளவு இல்லை என்று பங்குபற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் குழுவின் தலைவர் லால் புஸ்பகுமார தெரிவிக்கையில், "பயிற்சிக்காக எனக்குள்ள ஒரே சாதனம் எனது ஊன்றுகோல் மட்டுமே" என தெரிவித்துள்ளார் .லால் புஸ்பகுமார 2008 ல் எல்.ரி.ரி யினரின் தாக்குதலில் தனது இடது காலை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல் ஊனமுற்றோருக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இன்று ஆரம்பமாகி செப்டம்பர் 9-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஒலிம்பிக் போட்டி முடிந்தவுடன் அதே நகரில் பரா ஒலிம்பிக் நடைபெறுவது வழக்கம்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில், சமீபத்தில் 30 வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. இங்கு, 14வது பாராலிம்பிக் போட்டி இன்று ஆரம்பமாகி செப்.9 வரை நடக்கவுள்ளது. இதில் 166 நாடுகளைச் சேர்ந்த 4,200 வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

Read more...

எனது தந்தை வைத்த பெயரை மாற்றி புதிய பெயர் வைத்துள்ளார் விமல் வீரவன்ச - சஜித்

எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் கம் உதாவ திட்டத்துக்கு விமல் வீரவன்சவால் ஜனசெவன என்று புதிய பெயர் குறிக்கப்பட்டுள்ளது என்று ஐ.தே.கட்சித் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எப்பாவலை பிரதேசத்தில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் 2000ம் ஆண்டில் எல்லோருக்கும் வீடு என்று இலக்கு வைத்திருந்தார் என்றும் ஆனால் தற்போது தலைக்குமேலே கூரையில்லாமல் இருக்கின்றார்கள் எனவும், ஐ.தே.க மாகாண சபையில் வெற்றி பெற்று பின்னர் ஐ.தே.கட்சி ஜனாதிபதி பதவியேற்றால் எல்லோருக்கும் வீடு வழங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.

Read more...

அணி சேரா நாடுகளின் மாநாட்டில் ஜனாதிபதி இன்று உரையாற்றவுள்ளார்.

ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெறும் அணி சேரா நாடுகளின் 16 வது உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஈரான் நோக்கி பயணமானார். அவர் இன்று அம் மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.

மாநாட்டின் போது பல வெளிநாட்டு அரச தலைவர்களையும் ஜனாதிபதி சந்தித்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. அணி சேரா அமைப்பில் 120 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. கண்காணிப்பு மட்டத்தில் 17 நாடுகள் இடம்பெறுகின்றன.

பெல்கிரேட்டில் இடம்பெற்ற முதலாவது மாநாட்டில் கலந்து கொண்ட 25 நாடுகளுள் இலங்கையும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அணி சேரா நாடுகளின் 5 வது உச்சி மாநாடு 1976 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உலகின் முதலாவது பெண் பிரதம மந்திரி திருமதி சிறிமாவோ பண்டாநாயக்க தலைமையில் இலங்கையில் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Read more...

Wednesday, August 29, 2012

விமான விபத்தில் காணாமல் போன இந்திய தூதரக பை 46 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு

கடந்த 1966ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற ஏர் இந்தியாவின் போயிங்-707 என்ற பயணிகள் விமானம், பிரான்சில் விபத்துக் குள்ளானது. மேற்கு ஐரோப்பாவின் மிகப்பெரிய மலைத்தொடரான ஆல்ப்ஸ் மலைத்தொடரில் விமானம் விழுந்து நொறுங்கியதால், அதில் பயணம் செய்த 117 பேரும் இறந்தனர்.

இந்த விமானத்தில் இருந்த இந்திய தூதரகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் கடிதங்கள் அடங்கிய பை இருந்தது. அந்த பை என்ன ஆனது என்று இதுவரை தெரியாமல் இருந்தது.

இந்நிலையில் அந்த பை, ஆல்ப்ஸ் மலைத்தொடரின், மவுன்ட் பிளாங்க் என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணியாளர் அர்னார்டு கிறிஸ்ட்மேன் மற்றும் அவரது பக்கத்து வீட்டுக்காரர் ஜூல்ஸ் பெர்ஜர் ஆகியோர் கடந்த 21ம்தேதி அந்த பையை கண்டெடுத்துள்ளனர்.

இதுபற்றி கிறிஸ்ட்மேன் கூறுகையில், ‘அப்பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிலர் அங்கு பனிப்பாறையில் பளபளப்பான ஒரு பொருள் இருப்பதாக கூறினர். இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது விமானத்தின் பாகங்கள் கிடந்தன. சற்று தூரத்தில் ஈரமான நிலையில் பை இருந்தது. அந்த பையை யாரோ ஒருவர் வைத்துவிட்டு சென்றதுபோல் அப்படியே இருந்தது. அந்தப் பையில் விலை உயர்ந்த வைரமோ, தங்கமோ இருக்கலாம் என்ற நம்பிக்கையில் திறந்து பார்த்தோம். ஆனால் அதில் ஈரமான நிலையில் அரசு கடிதமும், இந்திய செய்தித் தாள்களும் இருந்தன’ என்றார்.

இந்த தூதரக பை, மலையடிவாரத்தில் உள்ள சாமோனிக்ஸ் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் தெரியவில்லை என்றும், அந்த பை கிடைக்கப் பெற்றதும் ஆய்வு செய்யப்படும் என்றும் பாரிஸ் நகரில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2008ல் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் இதே பகுதியில் பிரபல மலையேற்ற வீரர் டேனியல் ரோச் என்பவர் ஆய்வு செய்தார். அப்போது 1996 ஜனவரி 23ம் தேதியிட்ட சில இந்திய செய்தித் தாள்களை கண்டுபிடித்தார். மேலும் 1950ல் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான என்ஜின் பாகத்தையும் கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.

Read more...

பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கியதில் பொறுப்பதிகாரி உட்பட பல பொலிஸார் காயம்.

நாட்டில் தற்போதுள்ள கல்வி முறை சம்பந்தமான அதிருப்தியை வெளிப் படுத்துமுகமாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு, இன்று கொழும்பு கோட்டையில் நடாத்திய ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்காக, பொலிஸார் முயற்சித்த போது, அவர்கள் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள், தாக்குதல் நடாத்தியுள்ளனர். இத்தாக்குதலில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பல பொலிஸார் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண இவ்வாறு தெரிவித்துள்ளார்.
 
இன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் அமைப்பு இதனை ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள், பிற்பகல் 01.00 மணியளவில், வன்முறை ரீதியில் செயற்பட்டனர். குறிப்பாக ஒல்கொட் மாவத்தை தடைப்படும் விதத்தில், அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் பிவேசிப்பதற்கும், அவர்கள் முயற்சித்தனர். ஏனையவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு, பொலிஸார், அவர்களுக்கு உத்தரவிட்டனர். அல்லது அங்கிருந்து விலகிச்செல்லுமாறு கேட்டுக்கொண்ட போதிலும், அவர்கள் இந்த உத்தரவிற்கு செவிசாய்க்கவில்லை.

இதனால், பொலிஸார், நீர் பீய்ச்சி அடித்தார்கள். இதற்கும் அவர்கள் அடிபணியவில்லை. இதனை தொடர்ந்து, அவர்கள் பொலிஸார் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடாத்தினர். இதற்கு, பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர். இந்த தாக்குதலில், மருதானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும், மேலும் ஐவரும், காயமடைந்தனர். அவர்கள், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எவருக்கும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு உரிமை உண்டு. இது, அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள ஒரு உரிமையாகும். அந்த உரிமையை பொலிஸாராகிய நாம் மதிக்கின்றோம். அத்துடன் நெடுஞ்சாலைகளை மறித்து, இவ்வாறான ஆர்ப்பாட்டங்களை செய்வதற்கு, எந்தவித அனுமதியும் இல்லை. உலகில் உள்ள எந்தவொரு சட்டத்திலும், ஏனையவரின் உரிமையை மீறுவதற்கு, அனுமதியில்லை. ஏனையவர்களின் உரிமைகளை மீறி ஆர்ப்பாட்டம் செய்வதற்கு, எவருக்கும் சந்தர்ப்பம் இல்லை. வீதிகளை மறித்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது, முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறான சந்தர்ப்பங்களில், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை முதலில் உருவாகும். பல லட்சக்கணக்கான மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு, இவ்வாறான நடவடிக்கையை நாம் எடுக்க வேண்டியுள்ளோம்.




Read more...

பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட தொழில்பயிற்சி திட்டங்களை அமுல்படுத்த திட்டம்

பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட தொழில்பயிற்சி திட்டங்களை அடுத்த வருடம் அமுல்படுத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ள தாகவும், கல்வி அமைச்சு மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சும் இணைந்து இத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார்.

அம்பாறை, இளைஞர் பயிற்சி நிலையத்தின் நிர்மாண பணிகளை ஆரம்பித்த வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

105 மில்லியன் ரூபா இதற்காக செலவிடப்படவுள்ளது. அத்துடன் அம்பாறை நிப்புனதா பியச நிலையமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சிரேஷ்ட அமைச்சர் பி.தயாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, தேசிய இளைஞர் சேவை மன்ற தலைவர் லிலித் பியும் பெரேரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Read more...

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு நிதி உதவியை வழங்க தீர்மானித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு ஒன்பது பில்லியன் ரூபா நிதி உதவியை வழங்கத் தீர்மானித்துள்ளதாகவும், இந்த நிதியுதவி மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைக் கிளைப் பிரதிநிதி பெர்னாட் செவாஜ் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் முகவர் நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம், யுனிசெப் உள்ளிட்ட அமைப்புக்களின் ஊடாக இந்த உதவிகளுக்கான அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஆசியவின் மிகப்பெரிய மீன்பிடித்துறைமுகம் இலங்கையில் இருப்பது மகிழ்ச்சி - சீசெல்ஸ்

கடற்றொழில் துறையில் ஏற்பட்டுள்ள துரித அபிவிருத்தி காரணமாக இலங்கையில் ஆசியாவின் மிகப்பெரிய துறைமுகம் இருப்பது மகிழ்ச்சிக்குரிய விடயம் என சீசெல்ஸ் நாட்டின் முதலீடு, இயற்கை வள மற்றும் கைத்தொழில் துறை அமைச்சர் பீட்டர் ஏ.சி.சினோன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்த சீசெல்ஸ் நாட்டின் அமைச்சர் சீனோன், ஹெந்தளை, திக்கோவிட்ட, கடற்றொழில் துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே இதனை தெரிவித்தார்.

கடந்த வருடம் இலங்கையின் மீன் உற்பத்தி ஒரு இலட்சம் தொன் வரை அதிகரித்ததாகவும் அது பொருளாதார அபிவிருத்திக்கு மிகவும் உந்து சக்தியெனவும் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதன் போது சுட்டிக்காட்டினார்.

கடற்றொழில் கூட்டுத்தாபன தலைவர் மஹில் சேனாரத்ன, சீனோர் நிறுவனத்தின் தலைவர் சரத் குமாரசில்வா, இலங்கை மீன்பிடி கூட்டுத்தாபன தலைவர் உபாலி லியனகே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Read more...

சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.

சீன பாதுகாப்பு துறை அமைச்சர் லியாங் குவங்லி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைகக்கு வருகை தரவுள்ளார். சீன பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட உயர்மட்ட அரச தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன். சப்புகஸ்கந்த பாதுகாப்பு கல்லூரி மற்றும் பனாகொட இராணுவ முகாம் ஆகியவற்றை பார்வையிடுவார் எனவும், காலி மற்றும் ஹம்பாந்தோட்டை பிரதேசங்களுக்கும் விஜயம் செய்ய தீர்மானித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

பஸ்ஸும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் 06 பேர் பலி - நிந்தவூரில் சம்பவம்

நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில், அக்கரைப்பற்றிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும், அக்கரைப்பற்று நோக்கிச்சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த 06 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த ஐவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், படுகாயமடைந்த சிறுவனொருவன் நிந்தவூர் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இறந்தவர்களில் மூன்று பெண்கள், ஒரு சிறுவன் , ஒரு சிறுமி மற்றும் முச்சக்கர வண்டிச்சாரதி ஆகியோர் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

பலிபூஜை வேண்டுமானால் எனது கழுத்தை வெட்டுங்கள் – மேர்வின்

கபிலவஸ்து புனித சின்னம் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த சமயத்தில் யாரும் மிருக பலி கொடுப்பதை நான் அனுமதிக்க மாட்டேன் என்றும், அப்படி பலி கொடுக்க வேண்டும் என்றால் முதலில் எனது கழுத்தை வெட்டுங்கள் என்று, அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

யார் எதிர்த்தாலும் மிருக பலியிடல் நடைபெறும் என்று முன்னேஸ்வரம் காளி கோயில் பூசகர் கூறியதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை முன்னேஸ்வரம் காளிகோயில் பூஜையில் யாரும் பிரச்சினைகள் ஏற்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

Read more...

சிறுவர்களுக்கான கடவுச் சீட்டின் வலிதுடைமைக் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் 10 வருடத்தில் இருந்து 3 வருடமாகக் குறைக்கப்பட்டுள்ள தெனவும், ஒரே நாளில் கடவுச் சீட்டு வழங்கும் சேவைக்கான கட்டணம் 7500 ரூபாயில் இருந்து 3500 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது என்று குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறுவர் தோற்றத்தில் விரைவான மாற்றங்கள் ஏற்படுவதால் 10 வருட கடவுச் சீட்டால் பெற்றோர் விமான நிலையத்தில் பல சிரமங்களை எதிர் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது, என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Read more...

இத்தாலிய அழகுராணி இறுதிப் போட்டியில் இலங்கைப் பெண்.

ரோம் நகரத்தில் இலங்கையர்களான ரேமண்ட்ஸ் மற்றும் சந்தியாவுக்குப் பிறந்த 18 வயது நயோமி ஆண்டிபுதுகே இத்தாலியின் உலக அழகுராணிப் போட்டியில் பங்குபற்றும் இறுதி ஆறுபேருக்குள் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

20 பேர்களில் இருந்து இந்த அறுவரும் தெரிவாகியிருக்கின்றார். இந்த 'மிஸ் இத்தாலி' இறுதிப் போட்டி அடுத்தமாதம் நடைபெறவிருக்கின்றது. இத்தாலியில் ஒரு வருடத்துக்கு மேல் வசிக்கும் வெளி நாட்டவர்களுக்கென இந்த இத்தாலியின் உலக அழகுராணி போட்டி புதிதாக ஆரம்பிக்கப்பட்டதாகும்.

தான் இத்தாலியில் பிறந்ததால் தனக்கு இதாலிய குடியுரிமை வேண்டும் என்று அவர் இத்தாலிய ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




Read more...

உரும்ராயில் உள்ள வசவிளான் ஆரம்ப பாடசாலை படைவீரர்களால் திருத்தப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் அச்செழுவில் உள்ள 511 வது பிரிகேட் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களால், உரும்ராயில் உள்ள வசவிளான் ஆரம்ப பாடசாலை முற்று முழுதாகத் திருத்தப்பட்டுள்ளது. மேற்படி பாடசாலையின் அதிபர் கே. கனகராம் விடுத்த கோரிக்கையின் பேரில் யாழ்ப்பாண-பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துறுசிங்க இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது வகுப்பறைகள் ஒரு தனியார் காணியில் 4 தற்காலிய கொட்டகைகளைக் கொண்டு நடாத்தப்படு வருவதாகவும், 460 சிறுவர் கற்கும் இந்த பாடசாலையை, சுமார் 300 பேர் கொண்ட படையணி 3 நாட்களில் திருத்தி கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

அதாவுல்லா தேர்தல் சட்டங்களை கடுமையாக மீறிவருகிறார் - ஃபவ்ரல் அமைப்பு

அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா அம்பாறை பிரதேசத்தில் மாகாண சபை தேர்தல் சட்டங்களை கடுமையாக மீறிவருகிறார் என்று பல முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக ஃபவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

குடிநீர் வழங்கல் சபையின் சுற்றுலா விடுதியை பலவந்தமாக பிடித்து வைத்திருத்தல், ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்துக்குச் சொந்தமான பிரதேச வானொலியை அமைச்சர் கலந்து கொள்ளும் தேர்தல் கூட்டங்களில் நேரடி ஒலிபரப்பு செய்வதற்குப் பயன்படுத்தல், தனக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை தேர்தல் முடிந்தவுடன் இடமாற்றம் செய்வதாக பகிரங்கமாக பிரகடனப்படுத்தல், போன்றவைகளைச் அமைச்சர் அத்தாவுல்லா செய்து வருவதாக ஃபவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com