Wednesday, February 29, 2012

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரிதமாக செயற்படுத்துங்கள்.

காதினல் ரஞ்ஜித் ஆண்டகை அரசாங்கத்திற்கு அவசர வேண்டுகோள்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை அமர்வில்  இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணையானது நாட்டினுடைய சுதந்திரத்தையும் சுயாதீனத்தையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற பிரதான  கூறான கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை மிகத் துரிதமாக செயற்படுத்தமாறு காதினல் ரஞ்ஜித் ஆண்டகை அரசாங்கத்திற்கு அவரச வேண்டுகோள் விடுப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மித உரிமை பேரவையில் அமெரிக்காவின் மூலம் இலங்கைக்கு எதிராக பிரேரணையை முன்வைப்பதற்கு அவர்களுக்கு இன்னும் சில மேற்குலக நாடுகள் ஆதரவு அளிக்கவுள்ளன. இது எங்களுடைய நாட்டின் சுதந்திரத்திற்கும் மற்றும் சுயாதீனத்திற்கும் இடையூறாக அமையும். இதனை நாம் புத்திசாலித்தானமாக செயற்படுத்த வேண்டும்.

எனவே, இதற்கு பதில் அளிக்கக் கூடியதாக கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை துரித கதியில் செயற்படுத்தப்படுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

நாட்டை முற்றிலும் சீர்குலைக்க மாணவர்களை பயன்படுத்தும் JVP யின் நோக்கம் என்ன ?

நாட்டை சீர்குலைக்கும் சூழ்ச்சிகளில், பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக்கொள்ளும் ஜேவிபி யினரின் செயற்பாடுகளின் பின்னணியில் இருக்கக்கூடிய திட்டங்கள் பல அம்பலமாகியுள்ளதாக புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர். ஜே.வி.பி. மற்றும் அதன் புரட்சிக்குழு வே இந்த சூழ்ச்சியின் பின்னணியில் இருப்பதாக, அவர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச சக்திகளின் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகளுக்கு துணைநின்று, நாட்டில் அராஜக நிலையை ஏற்படுத்தி, சர்வதேசத்திற்கு ஆதரவு வழங்குவதே, பலக்லைக்கழகங்களில் மோதல்களை ஏற்படுத்துவதன் நோக்கமென, தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்கலைக்கழகங்களில் பிரவேசிக்கும் புதிய மாணவர்களை, அரசியல் ரீதியாக பிளவுபடுத்தும் சூழ்ச்சியில், ஜே.வி.பி. ஈடுபட்டுள்ளது. கல்வியை முடிக்காமல், ஜே.வி.பி. யின் அரசியலில் ஈடுபட்ட பழைய மாணவர்கள், இந்த அரசியல் நிகழ்ச்சி நிரலில் முன்நின்று செயற்படுகின்றனர்.

புரட்சிகர கருத்துகளுடன் பல்கலைக்கழகங்களில் பிரவேசிக்கும் மாணவர்கள், ஜே.வி.பி. யினரின் கடந்த காலத்தை அறிந்து வைத்திருக்காமை, இந்நிலைமைக்கான காரணமென, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1971, 1987, 1989 ஆகிய காலப்பகுதிகளில், ஜே.வி.பி., நாட்டை அராஜகத்திற்குட்படுத்தியதையும், பல்கலைக்கழக தொகுதியை முற்றாக சீர்குலைத்து, பல்லாயிரக்கணக்கான மாணவர்களை பலிகொண்ட கடந்த காலத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டுமென, அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1970 ஆம் ஆண்டு மக்கள் ஆணையினால், தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய முன்னணி அரசாங்கத்தை கவிழ்த்து, போலியான புரட்சிகரமான அரசாங்கமொன்றை உருவாக்குவதற்கு, ரோஹண விஜேவீர, 1971 ஆம் ஆண்டு முயற்சி எடுத்தார். ரோஹண விஜேவீரவின் இந்த போலி அரசியல் நிகழ்ச்சி நிரலில், பல்கலைக்கழக மாணவர்கள் சிக்கினார்கள். தாம், அதிகாரம் பெறுவதற்கு, அப்பாவி மாணவர்களை பலிகொடுத்த விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி. தலைவர்கள், கிளர்ச்சிக்கு முன்னர் சிறைவாசம் அனுபவித்து, தமது உயிரை பாதுகாத்து, மீண்டும் இந்நாட்டில் அரசியல் பயணத்தை ஆரம்பித்தனர்.

71 ஆம் ஆண்டு புரிந்த அழிவை, ரோஹண விஜேவீர மீண்டும் 88 ஆம் ஆண்டிலும் ஆரம்பித்தார். இதனூடாக, பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு, விஜேவீரவும், ஜே.வி.பி.யும், டயர் குவியல்களையும், வதை முகாம்களையுமே மீதப்படுத்தினர்.

மிலேச்சத்தனமான பயங்கரவாதி வேலுப்பிள்ளை பிரபாகரன், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை படுகொலை செய்ததற்கு இணைவாக, ரோஹண விஜேவீர தலைமையிலான கொலையாளிகள், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களின் கொலைக்கு காரணமாக அமைந்தனர்.

அன்று பல பல்;கலைக்கழகங்கள் வதை முகாம்ஙகளாக காணப்பட்டன. விஜேவீரவின் மிலேச்சத்தனத்திற்கு, அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும், மிலேச்சத்தனத்தினால் பதிலளித்தது. காலையில் பல்கலைக்கழகங்களுக்கு சென்ற பிள்ளைகளை, மாலையில் பெற்றோர் முண்டமாகவே, காண வேண்டி ஏற்பட்டது. கைகள், பின்புறம் கட்டப்பட்ட நிலையில், எரிக்கப்பட்ட சடலங்கள், சந்திகள் தோறும் காண முடிந்தது.

விஜேவீரவின் விடுதலைக்காக, ஏராளமான மாணவர்கள், உயிர்த்தியாகம் செய்தனர். தமக்கு கற்பித்த ஆசிரியர்களை கூட, கொலை செய்வதற்கு, பல்கலைக்கழக மாணவர்கள், கரங்களில் துப்பாக்கிகளை ஏந்தும் அளவுக்கு, அவர்கள் மோசமானவர்களாக மாறினர்.

அன்று பல்கலைக்கழக மோதல்கள் மற்றும் படுகொலைகளை புரிந்த ஜே.வி.பி. தலைவர்கள், எந்தவித பாதிப்புமின்றி, மிக பாதுகாப்பாக மறைந்திருந்தார்கள்;. 89 ஆம் ஆண்டுக்கு பின்னர், பிறந்த பிள்ளைகள், இன்று இளைஞர்களாக இருக்கின்றனர். அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களாக காணப்படுகின்றார்கள். தமது சகோதரர்களுக்கு விஜேவீர புரிந்த அநீதிகளை, இவர்கள் அறியாமல் இருக்கலாம். அறிந்து கொள்வதற்கும், சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. பெறுமதிமிக்க தமது சகோதரர்களை கொலை செய்வதற்கு, வழிவகுத்த ஜே.வி.பி., தம்மையும் பின்தொடர்வதை, பல்கலைக்கழக மாணவர்கள், அறிந்து வைக்க வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்களை பகிர்ந்து கொள்வதற்கு, ஜே.வி.பி.யின். சோமவன்ச அணியும், குமார் குணரட்னம் அணியும், கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. வாழ்க்கையின் ஒரு சிறந்த பயணத்தை நோக்கி செல்ல முயற்சிக்கும் கிராமங்களின் அப்பாவி பிள்ளைகளை, பல்கலைக்கழகத்தில் வைத்து, தமது மிலேச்சத்தனமான அரசியலுக்கு பயன்படுத்த, ஜே.வி.பி. சமூக விரோதிகள் முயற்சிப்பதை, நாடும் கண்டிக்க வேண்டுமென, பல்கலைக்கழகத்தின் மீது பற்றுவைத்துள்ளோர் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சக்திகள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களை ஏந்தியுள்ள சந்தர்ப்பத்தில், பல்கலைக்கழக தொகுதி உட்பட இந்நாட்டின் இளைஞர் யுவதிகளின் நோக்கமாக அமைய வேண்டியது, நாட்டுக்கு எதிரானவர்களுக்கு எதிராக, தேசப்பற்றுடன் கைகோர்ப்பதாகும். ஏனையவர்களின் குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலன்றி, தமது எதிர்கால கல்வி நிகழ்ச்சி நிரலூடாக, நாட்டை பாதுகாத்துக்கொள்வதற்கு, முன்நின்று செயற்படுவது, அனைத்து இளைஞர்களின் பொறுப்பாகும். குறிப்பாக மக்களின் பணத்தை கொண்டு, உயர் கல்வியை பெறும் பல்கலைக்கழக மாணவர்களின் பொறுப்பாக அமைய வேண்டும்.

தொழிற்சங்க நடவடிக்கைகளினால், அரசாங்க வைத்தியசாலைகளின் செயற்பாடுகளை சீர்குலைக்க, ஜே.வி.பி.யுடன் தொடர்புடைய தொழிற்சங்கமொன்று மேற்கொண்ட முயற்சி, முற்றாக தோல்வியடைந்துள்ளது.

ஜே.வி.யுடன் தொடர்புடைய தொழிற்சங்கமொன்று இன்று சுகயீன விடுமுறையில் அரச வைத்தியசாலைகளி;ன் சேவைகளை சீர்குலைக்க முயற்சித்தது. எனினும், இது தோல்வியடைந்து, வைத்தியசாலைகளில், நோயாளர்களுக்கு வழங்கும் சிகிச்சைகளை எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லையென, அரச வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தொழிற்சங்க நடவடிக்கைகளை கண்டித்துள்ள ஏனைய தொழிற்சங்கங்கள், ஜே.வி.பி.; யுடன் தொடர்புடைய தொழிற்சங்கள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் அன்றி, அது ஒரு அரசியல் செயற்பாடாகுமென, தெரிவித்துள்ளனர்.

Read more...

மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் உட்பட நால்வருக்கு 13 ஆம் திகதி வரை விளக்கமறியல்

நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோ உட்பட சந்தேக நபர்கள் நால்வரை எதிர்வரும் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி அமரசிங்க இன்று (29) உத்தரவிடார்.

பல இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு பணத்தை வர்த்கர் ஒருவரிடமிருந்து மோசடியான முறையில் ஏமாற்றி பெற்றுக் கொண்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மூவர் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவர் சட்டத்தரணியூடாக பொலிஸாரிடம் சரணடைந்தார்.

பின்னர் சந்தேக நபர்கள் நால்வரும் நீதிமன்ற உத்தரவில்

விளக்கமறியலில் வைக்கபட்டிருந்த நிலையில், இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போதே நால்வரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வழக்கின் முறைப்பாட்டாளரான அப்துல் சலாம் முகம்மத் அஜ்வாத் என்ற வர்த்தகரிடம் பொலிஸார் போன்று நடித்து அவரிடமிருந்த 3500 யூரோ பணத்தை அபகரித்துள்ளனர்.

கட்டுநாயக்க – வேபட பிரதேசத்தில் குறித்த வர்த்தகர் தங்கியுள்ள வீட்டில் இந்த சம்பவம் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி இடம் பெற்றுள்ளது. இதனை அடுத்து குறித்த வர்த்தகர் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முதலில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் ரொயிஸ் பெர்னாண்டோவுக்கும் இந்த சம்பவத்ததுடன் தொடர்பு இருப்பதாக பொலிஸாரிடம் வாக்கு மூலம் அளித்ததுள்ளதன் அடிப்படையிலேயே எதிர்கட்சித் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை பூர்த்தி அடையவில்லை என்பதால் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு தாங்கள் ஆட்சேபம் தெரிவிப்பதாக கட்டுநாயக்க பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

Read more...

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள முடியும். சம்பந்தன் முன்னிலையில் ஜனாதிபதி

எமது நாட்டின் பிரச்சினையை எம்மால் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் வெளிநாட்டு அழுத்தங்கள் தேவையில்லை இல்லை எனவும் அதற்கு நாங்கள் அடிபணியவும் மாட்டோம் எனவும் கூறியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு அணிதிரள்வோம் என மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ராவய பத்திரிகையின் வெள்ளிவிழா ஆண்டு பூர்த்தியை முன்னி;ட்டு சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற பைவத்தில் கலந்து கொண்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் உட்பட பல கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பெரியோர் மத்தியில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு தெரிவித்த ஜனாதிபதி தொடர்ந்து பேசுகையில்.
 
அனைவரும் ஏற்றுக் கொள்ள கூடிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நாம் அவதானம் செலுத்த வேண்டுமென்பதே எமது கருத்தாகும்.  ஆகவே அனைவரும் மதித்து கௌரவிக்கும் இலங்கையை கட்டியெழுப்புவதில் தற்போது மிகவும் இன்றியமையாத விடயமாக மாறியுள்ளது. பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்தது மட்டும் எமது பணியல்ல.  எதிர்காலத்தில் ஆயுதம் மோதல் ஒன்று உருவாகாமல் இலங்கையை பாதுகாப்பதும் எமது கடமையாகும். இனவாதத்தை தூண்டி இனவாதம் தொடர்பாக பேசி நாங்கள் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு முன்னிற்கவில்லை. ஒரே நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு எம்மை அர்ப்பணிப்பதற்கு இதுவோ சிறந்த தருணம், அதனை நாட்டின் தலைவரால் மட்டும் மேற்கொள்ள முடியாது. சமய தலைவர்கள் ஊடகவியலாளர்கள், அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் , அதாவது நாட்டை நேசிக்கும் அனைவரினதும் ஒத்துழைப்பு இதற்கு அவசியமாகும்.

நமது நாட்டில் ஐக்கியத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவதற்கு வெளிநாடுகளின் பங்களிப்பு  தேவையில்லை. வெளிச்சக்திகள்  நமது நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்த வருகிறோம், என்று தெரிவித்தால் அது நடைமுறைசாத்தியமற்றதாகும். அதனை நான் நம்புவதில்லை. இலங்கையின் இறைமையையும் ஆட்புலத்தையும் பாதுகாப்பு ஒரே இலங்கையர்கள் என்ற நாட்;டை கட்டியெழுப்புவதற்காக அனைவரும் இணைந்து  பாடுபட வேண்டும். இதனை நாம் செய்யாவிட்டால் எதிர்கால சமுதாயம் எம்மை சபிக்கும். அதனை அரசியல்வாதிகளால் மாத்திரம் செய்ய முடியாது. ஊடகவியலாளர்கள் புத்திஜீவிகள் மத தலைவர்கள்,   உள்ளிட்ட அனைவரும் அந்த சாபத்திலிருந்து விமோசனம் பெற முடியாமல் போய்விடும்.
 
இலங்கையின் தீர்வு திட்டங்களே இலங்கைக்கு பொருத்தமானதாகும். வேறு தரப்புகளால் திணிக்கப்படும் தீர்வுகள் ஒரு போதும் பொருத்தமாக அமையாதென எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க இவ்வைபவத்தில் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு அடிபணியாமல் இருப்பது இலங்கையின் தனிப்பnரும் கௌரவம் எனவும் தெரிவித்த ரணில் விக்ரமசிங்க நாட்டில் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்கு ராவய உள்ளிட்ட ஊடகங்கள் வழங்கிய பங்களிப்பையும் பாராட்டினார்.

ஜனநாயக விழுமியங்களை போன்று சிறந்த வாழ்க்கை கட்டமைப்பொன்றை ஜனநாயகத்தின் மூலம் உருவாக்க முடியும் என்பதை நாம்  நிருபிக்க வேண்டும். தென்பகுதி மக்களும் வடபகுதி மக்களும் பிரச்சினையை தீர்க்க முடியுமென நம்புகின்றனர்.  அதற்கு நாம் நடைமுறை சாத்தியமான தீர்வொன்றை காண வேண்டும். இலங்கையில்  எட்டப்படும்; இந்நாட்டின் தீர்வே இந்நாட்டுக்கு பொருத்தமானதாகும்.

ராவய பத்திரிகையின் 25 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன் பல்வேறு துறைகளில் திறமைகளை வெளிப்படுத்திய 14 பேருக்கு கௌரவ சின்னங்களையும் வழங்கினார். தமி;ழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நிஸாம் காரியப்பர், ஆகியோரும் இங்கு உரையாற்றினர். மகா சங்கத்தினர், சர்வமத தலைவர்கள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், புத்தி ஜீவிகள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், அரச அதிகாரிகள் மற்றும் ஏராளமான வாசகர்களும் இதில் கலந்து கொண்டனர்.

Read more...

மீன்கூழக்கு ஆசைப்பட்டு உயிரைப்பறிகொடுத்த குடும்பஸ்தர்- யாழ்ப்பாணத்தில் சம்பவம்

மீன்கூழ் குடித்தபோது தொண்டையில் மீன்முள்ளு சிக்குண்டதில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இன்று காலை குப்பிளான் வாரியபுலத்தில் இடம்பெற்றுள்ளது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த க.கிருஷ்ணகுமார் வயது 37 என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார்.

இவரது தொண்டையில் மீன்முள்ளு சிக்கியதால் இவர் சுவாசப்பிரச்சினைக்கு உள்ளான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் தற்போது பிரேதப்பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் இளவாலைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றல் இன்னமும் கைவிடப்படவில்லை - ரொபர்ட் ஓ பிளக்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் இன்னமும் கைவிடப்படவில்லை என தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் குறித்து தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஜெனீவா தீர்மானத்தைக்கண்டித்து யாழ்ப்பாண அரச ஊழியர்கள் போராட்டம்

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராகக்கொண்டு வரப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.மாவட்ட அரச ஊழியர்கள் அனைவரும் இன்றைய தினம் போராட்டங்களை மேற்கொண்டனர்.

இன்று மாலை 3 மணியளவில் பிரதேச செயலகங்கள் தோறும் பிரதேச செயலாளர்கள் தலைமையில் இப்போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதேவேளை போராட்டங்களை மேற்கொண்ட இவர்கள் பேரணியாக அருகிலுள்ள கோயில்களுக்கு சென்று அங்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

யாழ்.மாவட்டச்செயலகத்திலும் இப்போராட்டம் யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்றதோடு விசேட பூஜைகள் வழிபாடுகளும் இடம்பெற்றன.

இதேவேளை இவ்வாறான போராட்டங்களும் பிரார்த்தனைகளும் ஏனைய கிளிநொச்சி முல்லைத்தீவு உள்ளிட்ட ஏனைய மாவட்டங்களிலும் இடம்பெற்றதாக தெரியவருகின்றது.

Read more...

வன்னி தொண்டராசிரியர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்க நடவடிக்கை வடமாகாண ஆளுநர் உறுதி

வன்னி தொண்டராசிரியர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்க இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திடம் வடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் எ.சந்திரஸ்ரீ உறுதி அளித்தார்.

யாழ் குடாநாட்டில் இருந்து பதிலீட்டு ஆசிரியர்கள் அனுப்பப்படுவதால் தொண்டாசிரியர்கள் தமது நியமனத்தை இழக்க வேண்டியேற்படும் என்றும், வன்னி பகுதியில் கடமையாற்றும் தொண்டராசிரியர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்கவேண்டுமென்றும் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முன்வைத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட வடமாகாண ஆளுநர் வன்னி பகுதியில் கடமையாற்றும் தொண்டராசிரியர்களுக்கு உடனடியாக நியமனம் வழங்குவதற்கான சகல ஏற்பாடுகளும் பூத்தியாகியுள்ளன என்றும் அது உடனடியாக நடைபெறும் என்றும் உறுதியளித்தார்.

யாழ்ப்பாண பொதுநூலகத்தின் வடமாகாண கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஆளுநரின் ஒன்று கூடலில் இதுபற்றி எடுத்துக் கூறப்பட்டது.

இந்த ஒன்றுகூடலில் ஆளுநரின் செயலாளர் திரு.எல்.இளங்கோவ, பிரதமசெயலாளர், கல்வி, கலாசார, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் திரு.சி.சத்தியசீலன், உதவிச்செயலாளர்கள், மாகாணக் கல்விப்பணிப்பாளர்,மேலதிக மாகாண கல்விப்பணிப்பாளர், மாகாண கல்வி அதிகாரிகள், வடமாகாணத்தின் சகல வலயக்கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய தொழிற்சங்கப்பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் வன்னிப்பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் எண்ணிக்கையும், வன்னிப்பிரதேசத்தில் இருந்து யாழ் குடாநாட்டிற்கு வருகை தரும் ஆசிரியர்களின் விபரமும் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு வலயங்களில் இருந்தும் உட்செல்லும், வெளியேறும் ஆசிரியர்களின் விபரங்களை அந்தந்த வலயக்கல்விப்பணிப்பாளர்கள் அளுநரிடம் தெரிவித்தனர்.

இதைவிட ஆசிரியர்களுக்கான உள்ளக இடமாற்றம் வன்னி இடமாற்றத்தின் பின்னர் நடைபெறவேண்டுமென்ற இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அதுதொடர்பில் முறையான நடைமுறை பின்பற்றப்படவேண்டும் என்பதனையும் ஏற்றுக்கொண்டார்.

இதைவிட அதிபர்களின் இடமாற்றமானது மே மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் அதற்காக ஆசிரிய தொழிற்சங்கம் உள்ளிட்ட உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டு ஒருமுறையான நடைமுறைக்கூடாக அது நடைபெறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

வன்னிப் பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றுகின்ற ஆசிரியர்களில் இடமாற்றத்திற்கு தகுதியானவர்களை ஆசிரிய தொழிற் சங்கங்களின் பிரசன்னத்துடன் சரிசெய்து மார்ச் மாதம் 15ஆந்திகதிக்கு முன்னர் தம்மிடம் சமர்ப்பிக்கும்படி ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

(காரைதீவு நிருபர்)

Read more...

தந்தையை கொலை செய்த மகனுக்கு 5 வருட கடூழிய சிறைத்தண்டனை

திடீரென்று ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாக தனது தந்தையின் நெஞ்சில் கத்தியால் குத்தி கொலை செய்த மகனுக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனையும் 20 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் .

ஜா-எல ஏக்கல பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய தீருமணமான நபருக்கே சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது..பிரதிவாதி நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

2008 மார்ச் மாதம் 20 ஆம் திகதி ஜா –எல , ஏக்கல பிரதேசத்தில் வைத்து தனது தந்தையான டைலஸ் எரிக் அன்ரனி (51 வயது) என்பவரை கொலை செய்ததாக பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. பிரதிவாதியின் தாயார் கொலை சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வெளிநாட்டில் இருந்ததாகவும், பிரதிவாதியும் கொலை செ;யப்பட்டவரும் (தந்தை )ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் விசாரணையின் போது தெரியவந்தது.

Read more...

சம்பள உயர்வுக்காக பல்கலைக்கழக கல்விசார ஊழியர்கள் கால வரையறையற்ற பகீஸ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் சம்பள உயர்வை வலியுறுத்தி அனைத்துப்பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் இன்று முதல் கால வரையறையற்ற பகீஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது சம்பள உயர்வை வலிறுத்தி கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக முழுநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட இவர்கள் இன்று முதல் தொடர்ச்சியான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்படி ஏற்கனவே திட்டமிடப்பட்டபடி நாடாளாவிய அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் உள்ள கல்வி சார ஊழியர்கள் இன்று காலை 9 மணி முதல் இப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமார் 15 ஆயிரம் ஊழியர்கள் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுவதோடு இப்போராட்டத்தில் யாழ்.பல்கலைக்கழக கல்வி சார ஊழியர்களும் இணைந்து கொண்டு தமது ஆதரவை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது சம்பள உயர்வுக்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் வரையில் தமது போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read more...

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் புதிய நடைமுறைகள் அமுல் படுத்தப்படவுள்ளன.


அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால்; மாவட்ட மட்டத்தில் செயல்ப்படுத்தும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுக்களின் செயல்பாட்டை வலுவூட்ட புதிய நடைமுறைகள் அமுல்ப்படுத்தப்படவுள்ளன.

அனர்த்தங்களிலிருந்து மக்களை பாதுகாக்க அனர்த்த முகாமைத்து அமைச்சின் வழிகாட்டலிலேயே இவை மேற்கொள்ளப்படவுள்ளன.

ஜப்பான் ஜெய்கா திட்ட உதவியில் இந்த புதிய நடைமுறைகளை அமுல்;படுத்த அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீரவின் அங்கீகாரத்திற்கு அமைய அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு, மாத்தளை மாவட்டங்களுக்கென புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய திட்டங்களின் வரைபுகளை ஆராயும் விசேட நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைiமையில் நடைபெற்றது.

ஜெய்கா திட்டத்தின் பிரதிநிதி ஜூஸிகோ உச்சிகுரா அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் சத்துரலியன ஆராச்சி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read more...

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளன- பொருளாதார அறிக்கைகள்

கடந்த 2011ம் ஆண்டில், நாட்டின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில், 24 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக, பொருளாதார அபிவிருத்தி புள்ளிவிபர அறிக்கைகள் சுட்டிக்காட்டியுள்ளன.

கடந்த ஆண்டு தைத்த ஆடை ஏற்றுமதி மூலம் 4 ஆயிரத்து 201 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டது.

ஆனால் 2010 ஆம் ஆண்டில், மொத்த ஏற்றுமதி வருமானத்தில், 72 சதவீதம் தொழில்நுட்ப ஏற்றுமதியாக இருப்பதுடன், 2011 ஆம் ஆண்டில், இந்நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில், 76 சதவீதம் தொழில்நுட்ப உற்பத்தி மூலம் பெறப்பட்டது.

இதன் மூலம் கிடைக்கப்பெற்ற மொத்த வருமானம், 8 ஆயிரத்து 16 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

கடந்த ஆண்டின் மொத்த ஏற்றுமதி வருமானம் ஆயிரத்து 487 மில்லியன் அமெரிக்க டொலரென, பொருளாதார அபிவிருத்தி அறிக்கைகள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.

Read more...

முதன்முறையாக குடிசன மதிப்பீட்டி 'ஈ' மதிப்பீட்டு முறை அறிமுகம்

நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் குடிசன மதிப்பிட்டில் முதல் தடவையாக 'ஈ' மதீப்பீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஈ மதீப்பீடு குடிசன வீட்டு வசதிகள் கணீப்பீட்டுக்கு இணைவாக நேற்றுமுதல் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

2011ம் ஆண்டிற்கான குடிசன வீட்டு வசதிகள் கணீப்பீட்டின் முதற்கட்டப்பணிகள் நேற்று முதல் முறையாக ஆரம்பமாகியது. இது எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நடைபெறும். இம்முறை கணீப்பீட்டின் முக்கிய அம்சம் ஈ கணீப்பீடாகும்.

இணையத்தளம் ஊடாக கணீப்பீட்டு தகவல்கள் பெற்றுக் கொள்ளப்படும். ஆய்வு மட்டத்தில் இதற்கான வேலைத்திட்டத்தில் கொழும்பு நகரிலுள்ள 300 குடும்பங்களின் தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இதன் அங்குராப்பண வைபவம் தொலை தொடர்புகள் தகவல் தொழல்நுட்ப அமைச்சில் நேற்று நடைபெற்றது.

Read more...

Tuesday, February 28, 2012

கொழும்பு மேயரின் உத்தியோக இல்லத்தை அரசியல் நடவடிக்கைளுக்கு பயன்படுத்த நீதிமன்றம் தடைஉத்தரவு

கொழும்பு மாநகர மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் எதிர்கட்சி தலைவரின் அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் மொஹமட் மஹ்ருப் சமர்பித்த மனுவை ஆராய்ந்ததன் பின்னர் நீதிமன்றம் இவ் உத்தரவை பிறப்பித்துள்ளது.

எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் புரனமைக்கப்படும் காலப்பகுதியில் அதன் பணிகளை கொழும்பு மாநகர முதல்வரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து மேற்கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு ரணில் விக்ரமசிங்க சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தை நகர சபையின் பணிகளுக்கு அன்றி வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்துவது சட்டவிரோதமானதென மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இம்மனு மார்ச் மாதம் 2 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அன்றைய தினம் விளக்கமளிக்குமாறு நகர மேயர் மொஹமட் முஸ்ஸம்மில் உட்பட பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

Read more...

தனி அதிகார அலகுகளை வழங்கவும் மாட்டோம்: காலில் விழவும் மாட்டோம் - கோத்தபாய

யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கை அரசாங்கத்தை அடி பணிய வைத்து, வடக்கில் ஈழ அரசாங்கத்தை உருவாக்குவதற்கு வெளி நாட்டு சக்திகள் உடன் இணைந்து செயற்படும் தமிழ் பிரிவினைவாதிகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இலங்கைக்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை அனுப்புவதற்கு பல்வேறு வெளிநாட்டு ஆக்கிரமிப்பு சக்திகள் முயற்சி செய்வதாகவும் பாதுகாப்பு செயலர் குறிப்பிட்டுள்ளதாக லங்கா சி நிவ்ஸ் இணையத்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள சுதந்திரமான நிலைமையை அபகரிக்க எந்தவொரு அதிகார சக்திக்கும் இடமளிக்கப்போவதில்லை எனவும், எவராலும் தோற்கடிக்கப்பட முடியாது என்று கூறப்பட்ட பயங்கரவாத இயக்கமான புலிகள் இயக்கத்தை ஒழித்துக்கட்டி, மிகப்பெரிய எண்ணிக்கையுடைய பணயக் கைதிகளை மீட்டெடுத்து , வடக்கு மக்களை சுதந்திரமாக வாழ்வதற்கு வழியமைத்து கொடுத்த இலங்கை அரசாங்கத்திற்கும் ,இராணுவத்திற்கும் எதிராக செயற்படுவது பயங்கரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் மீண்டும் உருவாக்க எடுக்கும் முயற்சியாகும் என்று பாதுகாப்பு செயலர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேற்கத்தேய சக்திகளின் பிரிவினைவாத நோக்கத்தை தோற்கடிப்பதாக ஜெனீவா மனித உரிமை பேரவையின் போது ,சீனா , ரஸ்யா இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளதாகவும், அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

சிரியாவுக்கு மேலும் பல கடுமையான தடைகள் பல நகரங்களில் மக்கள் மீது ராணுவம் தாக்குதல்

சிரியா மீது நேற்று ஐரோப்பிய யூனியன் அமைப்பு மேலும் பல கடுமையான தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், சிரியாவின் இத்லிப் மாகாணம் மற்றும் ஹோம்ஸ் நகர் மீது ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.சிரியாவில் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டம் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சில் நேற்று கூடிய ஐரோப்பிய யூனியன் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாட்டில், சிரியா மீது மேலும் பல தடைகள் விதிக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அதிபர் அசாத்தின் நெருங்கிய உதவியாளர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளத் தடை, சிரியாவில் இருந்து புறப்படும் சரக்கு விமானங்கள் ஐரோப்பிய யூனியனுக்குள் நுழையத் தடை, தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களின் வர்த்தகத்திற்கு கடுமையான விதிகள் ஆகியவை விதிக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், சிரியாவின் வடமேற்கு மாகாணமான இத்லிப்பின் சர்மின், மாரத் அல் நுமான், பின்னிஷ் ஆகிய சிறு நகரங்களில், ராணுவம் நேற்று கடும் தாக்குதல் நடத்தியது. இப்பகுதிகள் அனைத்தும் எதிர்த் தரப்பின் வசம் இருப்பதால் இவற்றை மீட்பதில் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது. சிரியாவின் எதிர்த் தரப்புக்கு எவ்விதத்தில் ஆதரவளிப்பது என்பது குறித்து, சிரியா எதிர்ப்பு நாடுகள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது. சில நாடுகள், எதிர்த் தரப்புக்கு ஆயுதம் அளித்து உதவலாம் எனத் தெரிவித்து வருகின்றன.அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள் கூட இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த முடிவை வரவேற்பதாக, அல்- குவைதாவும், ஹமாசும் கூட அறிவித்துள்ளன.

ஆனால், இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறுகையில், இந்த முடிவு, அல்- குவைதாவிற்கும், ஹமாசுக்கும் தான் சாதகமாக முடியும் என எச்சரித்துள்ளார்.

ஐ.நா., பாதுகாப்புக் கவுன்சிலில், ரஷ்யாவும், சீனாவும் சிரியா தீர்மானத்திற்கு எதிராக தடையாணையை (வீட்டோ) பயன்படுத்தியதால், சிரியாவில் மக்கள் கொல்லப்படுவதாக கிளின்டன் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பத்திரிகை ஒன்று, "ஈராக்கில் தினம் தினம் மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒன்றே போதும், அமெரிக்காவின் பிற நாடுகள் பற்றிய கொள்கை மீது நாம் சந்தேகப்படுவதற்கு' எனத் தெரிவித்துள்ளது.

Read more...

ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மார்ச் 1 ம் திகதி

ஜெனிவா மனித உரிமைப் பேரவை அமர்வில் மேற்குலக நாடுகள் இலங்கை தொடர்பாக முன்வைக்கப்படவுள்ள பிரேரணை மார்ச் மாதம் முதலாம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரதி உதவி அரச செயலாளர் மரியா ஒடேரோவின் மூலம் முன்வைக்கப்படவுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.

இதன் பிரேரணையின் சாரம்சத்தின் பிரதி மனித உரிமைப் பேரவையின் 47 உறுபுரிமை நாடுகளின் தூதுவர்களிடம் தற்போது கையளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனித உரிமைப் பேரவையின் சாதாரண விதிமுறைக்கேற்ப அங்கு அந்தப் பிரேரணை சமர்பித்தல் செய்வதற்கு ஜெனிவாவில் சேவையாற்றும் நாடுகளுடைய தூதுவர்களூடாக மேற் கொள்ளப்பட்டுள்ளது. எனினும் வேறு மாற்று வழிமுறையினையும் கையாள்வதற்கும் இந்த பிரேரணையை அமெரிக்கா பிரதி உதவி அரச செயலாளர் மரியா ஒடேரியாவின் மூலம் சமர்ப்பிப்பதற்கு மிகவும் யோசனையுடன் செயற்பட்டு வருதாக
தூதுவராலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதி உதவி செயலாளர் மரியா ஒடேரியாவி உரையின் போது இலங்கைக்கு எதிரான பிரேரணையை முன்வைக்கப்பட்டதன் பின்பு அதற்கு கையொப்பமிடும் நாடுகளின் கருத்துக்களையும் மனித உரிமை பேரவை பெற்றுக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் 1 ம் திகதி ஜெனிவா நேரப்படி 10.40 க்கு அமெரிக்காவின் பிரதி உதவி அரச செயலாளர் மரியா ஒடேரோவின் மூலம் வெளியிட்ட கருத்தின் வாயிலாக இலங்கையின் பிரதிநிதியின் தலைவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கஹ நேற்று மனித உரிமைப் பேரவை ஆரம்ப உரையாற்றும் போது அதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே அறிந்து கொள்ள முடிந்தது.

இலங்கை தொடர்பாக பிரேரணையை முன்வைப்பதற்காக அமெரிக்காவிலுள்ள உயர் மட்ட அதிகாரிகள் ஜெனிவாவுக்கு வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

யாழ்ப்பாணத்தில் 50 வருடங்களாக செயற்படும் பௌத்த சங்கத்தின் பணிகள் பாரட்டத்தக்கது.

இலங்கையில் யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டு சிறப்பாக இயங்கி வருகின்றது தமிழ் பௌத்த சங்கம். இவ்வமைப்பு இன்றைக்கு நேற்று தோற்றம் பெற்றது அல்ல. இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன் உதயம் ஆனது. இதன் ஸ்தாபக தலைவராக மானிப்பாயைச் சேர்ந்த வி. வைரமுத்து என்கிற பெரியவர் செயல்பட்டார். இவருக்கு தற்போது 92 வயது. இன்றும் உயிரோடு உள்ளார்.

அந்நாட்களில் சுமார் மூன்று இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் உறுப்பினர்களாக இருந்து உள்ளார்கள்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் எழுச்சிஇ வளர்ச்சி ஆகியவற்றைத் தொடர்ந்து இச்சங்கம் செயல்பட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. புத்தர் ஒரு சிங்களவர்இ பௌத்த சமயம் சிங்களத்துக்கு உரியது என்கிற கண்ணோட்டத்திலேயே புலிகள் செயல்பட்டு இருந்தனர்.

2009 ஆம் ஆண்டு மே மாதம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. இலங்கையில் அமைதிச் சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இச்சங்கம் புத்துயிர் பெற்று மீண்டும் செயல்பட தொடங்கியது.

புதிய தலைவராக அ. ரவிகுமார் பதவி ஏற்றார். இச்சங்கம் புத்துயிர் பெறுவதற்கு அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜெகத் சுமதிபாலஇ சமூக நல சேவையாளர் பானி வவல்இ யாழ்ப்பாணத்து ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி வண. விமலதேரர் ஆகியோரின் ஆக்கம்இ ஊக்கம் ஆகியன உந்துசக்திகளாக அமைந்தன.

தற்போது 3000 உறுப்பினர்கள் வரை சேர்க்கப்பட்டு உள்ளார்கள்.குறிப்பாக எதிர்கால சந்ததியினரான பாடசாலைச் சிறுவர்களே அங்கத்தவர்களில் கணிசமான தொகையினர்.மத மாற்றம் செய்வது இவ்வமைப்பின் நோக்கம் அல்ல. பௌத்தர்கள் இந்து சமயத்தை ஏற்றுக் கொள்கின்றார்கள். புத்தர் ஒரு இந்துவாக இருந்தவர்தான். இலங்கைப் பௌத்தர்களின் ஆலயங்களில் இந்துக் கடவுளர்களை தரிசிக்க முடிகின்றது. பௌத்தர்கள் இந்துக் கடவுளர்களை வழிபடுகின்றனர்.

ஆனால் இப்பக்குவம் இந்துக்களுக்கு கிடையாது. இப்பக்குவம் இந்துக்கள் மத்தியில் உருவாக்கப்பட வேண்டும். சகோதர சமயமாகவேனும் பௌத்தத்தை இந்துக்கள் காண்கின்ற நிலை உருவாக்கப்பட வேண்டும். இப்பக்குவ நிலை ஏற்படுகின்றபோது இலங்கையில் அரைவாசிப் பிரச்சினை தீர்ந்து விடும். இப்பக்குவ நிலையை இந்துக்கள் மத்தியில் ஏற்படுத்த சங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகின்றது.

இனத்தால் வேறுபட்டு இருக்கின்ற சிங்களஇ தமிழ் மக்களை சமயத்தால் இணைக்கின்ற ஒரு உறவுப் பாலமாக சங்கம் அமைகின்றது. இரு இனத்தவர்களும் ஆன்மீக ரீதியாக ஒன்று இணைகின்றமை மிகப் பெரிய பலம் ஆகும். மனதை ஒரு நிலைப்படுத்துகின்றமைக்காக இங்கு விபசனா தியானப் பயிற்சி கிரமமாக கற்பித்துக் கொடுக்கப்படுகின்றது.

உள சமாதானத்தை அடைய தியானம் உதவுகின்றது. உள சமாதானத்தை ஒவ்வொருவரும் அடைகின்றமை மூலம் உலக சமாதானத்தை அடைய முடியும் என்பது சங்கத்தின் அதீத நம்பிக்கை.
சமயஇ ஆன்மீக பணிகளோடு நின்று விடாமல் சமூகப் பணிகளையும் சங்கம் மேற்கொண்டு வருகின்றது.

பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் உபகரணங்களை வழங்கி வருகின்றது. இலவச சிங்கள வகுப்புக்களை நடத்தி வருகின்றது. யாழ்ப்பாண மாணவர்களை தென்பகுதி உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் சுற்றுலா அழைத்து வந்து காண்பிக்கின்றது. வீடமைப்புத் திட்டங்கள்இ வேலை வாய்ப்புத் திட்டங்கள் ஆகியவற்றையும் முன்னெடுத்து வருகின்றது.

சங்கத்தின் நற்பணிகளுக்கு இராணுவ சிவில் நிர்வாகக் குழுவினர் பேருதவியாக இருந்து வருகின்றனர். அத்துடன் அரச தரப்பும் இயன்ற உதவிகளை செய்து கொடுக்கின்றது.

பௌத்த தமிழ் சங்கம் மட்டும் அல்லாது யாழ்ப்பாணத்தில் இந்து – பௌத்த கலாசார பேரவை என்கிற அமைப்பும் இயங்கி வருகின்றது. அதே போல யாழ். பல்கலைக்கழகத்தில் பௌத்த சங்கம் ஸ்தாபிக்கப்பட்டு உள்ளது.

சுவிற்சலாந்தை தளமாக கொண்டு இயங்கி வருகின்ற இந்து – பௌத்த சங்கம் இலங்கையில் அதன் செயல்பாடுகளை கடந்த மாதங்களில் இருந்து மிக ஆரோக்கியமான முறையில் முன்னெடுத்து வருகின்றது. இவ்வமைப்புக்கள் இலங்கையில் சமாதானம் ஐக்கியம் ஜனநாயகம் அமைதி ஆகியவற்றை நிலைநாட்டுவதில் காத்திரமான பங்களிப்பு வழங்கும் என்றால் மிகை ஆகாது.Read more...

அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேசத்துரோகிகளாம் !

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உpமைகள் பேரவையில் அமெரிக்கா சமர்பிக்கவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தேசத்துரோகிகள் என்று நவசமாசக்கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

இன பேதமுடைய அமைச்சர்களின் கேலிச் செயலே இதற்கெதிரான ஆர்ப்பாட்டமாகும் . இது முற்றிலும் அரச விரோத செயலாகும். இது போன்று மக்கள விரோத, தேசத்துரோக செயற்பாடுகளில் யாரும் பங்கு பற்ற வேண்டாம்.

மனித உரிமை பேரவைக்கு வந்துள்ள சக்திமிகு நாடுகள் , கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக்குழுவின் பிரேரணைகளை விரைவில் நடைமுறைப்படுத்துமாறும் , இல்லையேல், அவை வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டிவரும் என்றும் குறிப்பிட்டுள்ளன. அப்படியாயின் இவர்கள் பேரணி செல்வது எதற்காக என்று கலாநிதி விக்கிரமபாகு மேலும் குறிப்பிட்டுள்ளார் .

Read more...

இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்ற 37 அரசசார்பற்ற நிறுவனங்கள் ஆதரவு

இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கில், பிரேரனைக்கு ஆதரவு வழங்க, சுமார் 37 அரச சார்ப்பற்ற அமைப்புகள் ஜெனீவா நகருக்கு வருகை தந்துள்ளதாக, தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை, சர்வதேச நெருக்கடி குழு உள்ளிட்ட சர்வதேச அரச சார்ப்பற்ற அமைப்புகள் தற்போது ஜெனீவாவில் ஒன்றுகூடி, இலங்கைக்கு எதிரான பிரேரனையைக்கொண்டு வருவதற்கான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், அரசாங்கம் அறிவித்துள்ளது

சூழ்;ச்சிகளின் பின்னணியில் உள்ள அரச சார்ப்பற்ற அமைப்புகள் முன்னெடுத்து வரும் கருத்துகளை தோல்வியடையச்செய்வதற்கென, இலங்கையின் அரச இராஜதந்திரிகள் குழு, உயர்ந்தபட்ச முயற்சியில் ஈடுபட்டுளள்னர்

இதேவேளை ஆதரவு தெரிவித்து, ஜெனீவா நகரில் இலங்கையர்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது, இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு, அவர்கள் சர்வதேசத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more...

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டுப் போட்டி

காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியின் பவளவிழாவையொட்டி வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் தி.வித்யாராஜன் தலைமையில் காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இதன்போது, உணவு போசாக்கு அமைச்சர் பி.தயாரத்னா ,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சீ.செல்வராஜா ,கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எ.தௌபீக், அமைச்சரின் இணைப்பாளர் வீ.கிருஸ்ணமூர்த்தி, தவிசாளர் செ.இராசையா , காரைதீவ பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், முன்னாள் பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஸ்ணன் உள்ளிட்ட அதிதிகள் வரவேற்கப்படுவதையும், அமைச்சர் தயாரத்னா உரையாற்றுவதையும் மாணவரின் நிகழ்ச்சிகளையும் படங்களில் காணலாம்.

படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

Read more...

மெகசீன் சிறைச்சாலை மோதல்களுடன் தொடர்புபட்ட 46 கைதிகளுக்கு விளக்கமறியலில்.

மெகசீன் சிறையில் இடம்பெற்ற மோதல்களுடன் தொடர்பு என சந்தேகிக்கப் பட்டவர்கள் கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவின் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுததப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையின் படி இடம்பெற்ற விசாரணைகளிலிருந்து வெளியான தகவல்களை அடிப்படையாக கொண்டு, சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

மோதலுடன் தொடர்புடைய மேலும் 13 சந்தேக நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர்.

இக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட மேலதிக நீதவான் பிரஹர்ஷா ரணசிங்க இந்த சந்தேக நபர்களிடம் விசாரணையை மேற்கொள்ள பொலிஸாருக்கு சந்தர்ப்பம் வழங்குமாறு மெகசீன் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.

இதன்படியே 46 கைதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் விசாரணை இடம்பெறவுள்ளன.

Read more...

புலி ஆதரவு கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து- ஜரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் செயல்பாடுகள்இ புலி ஆதரவு சக்திகள் மற்றும் நிழல் அமைப்புக்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கின்ற நாடுகள்இ சுவிற்சலாந்து ஆகியன முடிவு கட்ட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி சமாதானத்தை விரும்புகின்ற இலங்கையர்கள் என்கிற அமைப்பினால் அதிரடிப் பிரசார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழு கூட்டம் நேற்று ஆரம்பமானது. இலங்கைக்கு எதிராக இக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினதும் புலி ஆதரவு சக்திகள் மற்றும் நிழல் அமைப்புக்களினதும் செயல்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்இ சுவிஸ் ஆகியன முடிவு கட்ட வேண்டும் என்று சமாதானத்தை விரும்புகின்ற இலங்கையர்கள் என்கிற அமைப்பு கோரி உள்ளது.

இக்கோரிக்கைக்கு ஆதரவு திரட்டுகின்ற வகையில் தீவிர கையெழுத்து வேட்டையிலும் ஈடுபட தொடங்கி உள்ளது.

இணையத்தளங்கள்இ சமூக இணைப்புத் தளங்கள்இ ஊடகங்கள்இ சுவரொட்டிகள்இ துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றின் மூலம் இக்கோரிக்கைக்கு வலுச் சேர்க்கப்படும் என்று இவ்வமைப்பின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

இக்கோரிக்கைக்கு ஆதரவாக திரட்டப்படுகின்ற கையெழுத்துக்கள் ஐரோப்பியம் ஒன்றியம்இ சுவிஸ் ஆகியவற்றிடம் கையளிக்கப்பட உள்ளன.

சமாதானத்தை விரும்புகின்ற இலங்கையர்கள் என்கிற அமைப்பின் கோரிக்கை அடங்கிய அறிக்கை வருமாறு:
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க நிழல் அமைப்புக்கள் மற்றும் ஆதரவு சக்திகளுக்கு முடிவு
கட்ட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம்இ சுவிற்சலாந்து ஆகியவற்றுக்கு கோரிக்கை!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்டு உள்ள போதிலும் இந்த இயக்கத்தின் நிழல் அமைப்புக்கள் இன்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மிகவும் பலமான நிலையிலேயே செயல்பட்டு வருகின்றன.

சுவிற்சலாந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்த ஒரு நாடு அல்ல. இன்றும் இந்நாட்டில் புலி ஆதரவுச் செயல்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்கால சமாதானம்இ அமைதிஇ சக வாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் குறிப்பாக தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தின் எதிர்கால சமாதானம்இ அமைதிஇ சக வாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கும் பேராபத்தானவையாக பயங்கரவாத அமைப்புக்களின் செயல்பாடுகள் இருந்து வந்திருக்கின்றன.

ஆனால் ஜனநாயகம்இ மனித உரிமைஇ மனிதாபிமானம் ஆகியவற்றின் பெயர்களால் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்இ சுவிற்சலாந்து ஆகியவை பயங்கரவாத அமைப்புக்களின் செயல்பாடுகளை அனுமதித்து வந்திருப்பது துரதிஷ்டமான நிலைமையே.

இலங்கையில் போர் உக்கிரம் அடைவதற்கும்இ பயங்கரவாத செயல்பாடுகள் தீவிரம் அடைவதற்கும்இ பயங்கரவாத அமைப்புக்கள் பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக வளர்வதற்கும் இந்நிலைமை ஊக்கியாக செயல்பட்டு வந்திருக்கின்றது.

இன்று பயங்கரவாதம் இல்லாத நாடாக இலங்கை மலர்ந்து உள்ளது. ஆனால் இலங்கையின் எதிர் கால சமாதான முன்னெடுப்புக்கள்இ இனங்களுக்கு இடையிலான சக வாழ்வு மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றுக்கு தடைக் கற்களாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்இ சுவிற்சலாந்து ஆகியவற்றின் ஜனநாயகம்இ மனித உரிமைஇ மனிதாபிமானம் ஆகியவற்றின் காரணத்திலான கண்ணோட்டம் காணப்படுகின்றது.

இலங்கையில் ஏற்படக் கூடிய நிரந்தர சமாதானம் மற்றும் இணக்கத் தீர்வு ஆகியவற்றுக்கு இந்நாடுகளின் மேற்சொன்ன கண்ணோட்டம் பாரிய தடை ஆகி விடும்.

எனவே இந்நாடுகள் புலிகள் இயக்கத்தின் நிழல் அமைப்புக்கள் மற்றும் புலி ஆதரவு சக்திகள் ஆகியவற்றின் செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
-சமாதானத்தை விரும்பும் இலங்கையர்கள்-

Read more...

ஐ.நா வில் எனது பேச்சை அடுத்து சர்வதேச அணுகு- முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. சமரசிங்க

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 19 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் தாம் நிகழ்த்திய உரை தொடர்பில் சாதகமான பிரதிபளிப்புக்கள் கிடைத்துவருவதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

ஜெனீவா நகரிலிருந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் தமது உரையைத் தொடர்ந்து, உரையாற்றி தாய்லாந்தின் வெளிவிகார அமைச்சர் இலங்கைக்கு பகிரங்க ஆதரவை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

இலங்கை சார்பில் விளக்கமளிக்கப்பட்டதன் பின்னர் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்த கருத்துக்கள் நாட்டிற்கு பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அது ஏனைய நாடுகளுக்கு சிறந்த செய்தியொன்றை வழங்குவதாகவும் மனித உரிமைகள் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்தைத் தவிர ஏனைய பல நாடுகள் இலங்கை பிரதிநிதிகளை சந்தித்து அணுகூலமான கருத்துக்களை வெளியிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் மேலும் பல நாடுகள் ஆதரவை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கடவுள்ள பிரேரணை தற்போது அமரிக்க தூதரகத்தின் ஊடாக விநியோகிக்கப்பட்டுவருகிறது.

எவ்வாறாயினும் மார்ச் மாதம் மூன்றாம் வாரத்திலேயே பிரேரணையொன்றை கூட்டத்தொடரில் சடர்ப்பிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச பிரேரணையின் பிரதிகளே அமெரிக்க தூதரகத்தினால் விநியோகிக்கப்படுவதாகவும் இலங்கைக்கு எதிரான பிரேரணை உத்தியோகபூர்வமாக சமர்ப்பிக்கப்படுமா? இல்லையா என்பதை தற்போது உறுதிப்படுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படலாம் என்பதை அடிப்படையாகக் கொண்டு இலங்கை பிரதிநிதிகள் ஜெனீவாவில் தமது செய்றபாடுகளை ஆரம்பித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான பிரேரணை தேவையில்லை - மஹிந்த சமரசிங்க!

முழுமையான மறுசீரமைப்பினை எட்டும் வகையிலான சிறந்த உள்ள திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முயல்கின்ற நிலையில், சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் பிரேரணைகள் கொண்டுவரப்படத் தேவையில்லை என்று இலங்கை அமைச்சரும் மனித உரிமை பேரவையின் மாநாட்டுக்கான இலங்கையின் தலைமைப் பிரதிநிதிரிதுமான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

மனித உரிமை பேரவையில் உரையாற்றியய அவர், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு இரண்டு மாதங்கள் செல்வதற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் எந்தவிதமான தீர்மானமும் மனித உரிமைக் பேரவையில் கொண்டுவரப்படுவதற்கான அவசரமும், நியாயமும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதுவும் இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கனவே அமல்படுத்தத் தொடங்கிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழு பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளை செய்திருப்பதாக கூறியுள்ள அவர், அதனடிப்படையில் இறந்தவர்கள் பற்றியும், அதில் இராணுவத்துக்கு பங்கிருக்கிறதா என்பது குறித்து ஆராயவும், அதற்கான பதில் நடவடிக்கைகளுக்காகவும் சிவிலியன் மற்றும் இராணுவ நடைமுறறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இந்த விடயங்களில் எந்தவொரு உள்ளூர் வழிமுறையும், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சரித்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

ஆகவே இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு உரிய காலக்கெடு வழங்கப்பட வேண்டும் என்றும், அதில் வெளியார் தலையீடு எதுவும் இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கங்க குறிப்பிட்டார்

Read more...

இலங்கைக்கெதிரான யோசனையை அமெரிக்கா இன்று மனித உரிமை பேரவையில் சமர்பிக்க தீர்மானம்

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் யோசனையை இன்று (28) ஜெனிவா மனித உரிமை பேரவையில் சமர்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது எனவும், இந்த யோசனையின் பின்னணியில் அமெரிக்க அதிகாரிகளான ரொபர்ட் ஓ பிளேக் மற்றும் சமந்தா பவர் ஆகியோர் இருப்பது தெரியவந்துள்ளதாகவும் “திவயின” பத்திரிகை நேற்று (27) தெரிவித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபை உட்பட 37 அரச சார்ப்பற்ற நிறுவனங்கள், இலங்கை அரசாங்கத்திற்கு தண்டனை வழங்கும் நோக்கில், ஜெனிவாவுக்கு சென்றுள்ளனர். இதனை தவிர தென்னாப்பிரிக்க முன்னாள் பேராயர் டெஸ்மன் டுடு, முன்னாள் அயர்லாந்து ஜனாதிபதி மேரி ரொபின்சன் ஆகியோரும், மனித உரிமை பேரவையில், இலங்கைக்கு எதிராக கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளனர் என்றும் “திவயின” பத்திரிகை மேலும் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவின் இந்த யோசனை மீதான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Read more...

இலங்கைக்கு ஆதரவளிக்க ஈரான், கட்டார் , சவூதி தாய்லாந்து, உறுதி அளித்துள்ளதாம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 19ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள பிரேரணைக்கு ஈரான், கட்டார், சவூதி அரேபியா,மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் எதிராக வாக்களிக்கும் என உறுதியளித்துள்ளதாக ஜெனிவாவிலுள்ள சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கட்டார், சவூதி அரேபியா, மலேஷியா மற்றும் தாய்லாந்து ஆகியவற்றின் பிரதிநிதிகளை பெருந்தோட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தலைமையிலான இலங்கை குழுவினர் ஜெனிவா நகரில் வைத்து சந்தித்த போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர், கட்டார் வெளிவிவகார அமைச்சர் கலீத் பின் முஹம்மத் அல் – அதீயா, மலேசிய வெளிநாட்டு அமைச்சர் ஹனீபா அமான் மற்றும் சவூதி அரேபியா அமைச்சர் பந்தர் பின் முஹம்மட் அல் அபான் ஆகியோருடனே இலங்கை குழுவினர் பேச்சு நடத்தியதாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் றிஷாட் பதியுதீன், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா ஆகியோர் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சலேஹியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது இலங்கைக்கு ஆதரவளிக்க ஈரான் உறுதியளித்தாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

Monday, February 27, 2012

நன்னாரி ( மூலிகை ) வேர்.

நன்னாரி (Hemidesmus indicus ஆங்கிலத்தில் பொதுப்பெயர்: Indian Sarsaparilla) என்னும் நிலைத்திணை (தாவரம்) படரும் ஒரு கொடி இனம் ஆகும். இதன் கெட்டியான வேர் மணம் மிக்கது். இக் கொடியின் இலைகள் மாற்றிலை அமைப்பு கொண்டது. இலைகள் நீண்டு கண் அல்லது மீன் வடிவில் இருக்கும். இக்கொடியின் தண்டு மெல்லியதாகவும், குறுக்குவெட்டு வட்டமாகவும் இருக்கும்.

* இக்கொடியின் பூக்கள் வெளிப்புறம் பசுமையாகவும், உள்புறம் கத்தரிப்பூ நிறத்திலும்(செம்மை கலந்த ஊதா நிறம்) இருக்கும். இச்செடி ஒரு மருத்துவ மூலிகையாகும்.

* நன்னாரியின் சாறில் இருந்து ஒருவகையான பருகும் நீருணவு செய்வர். நன்னாரி சர்பத் என்று கூறப்படும். நன்னாரி சாறு இந்திய மருத்துவத்திலும் பயன்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவ முறையில் இதன் பெயர் அனாதமூலா (Anantmula.).

* நன்னாரி குடிப்பதற்கு இதமாகவும், உடல் வியர்வையைக் கூட்டுவதற்கும், சிறுநீர் போக்கை கூட்டுவதற்கும் குருதியை தூய்மைப்படுத்துவதற்கும் பயன்படும் ஒரு பொருளாக கருதப்படுகின்றது. இது சிபிலிஸ் (syphilis), மூட்டுவலி, உடல் சூடு, மேல் பூச்சான தோல் நோய்களுக்கும் தீர்வாக பயன்படும் என்று கருதப்படுகின்றது.


ஆயுர்வேதத்தில் -நன்னாரியை சாரிப என்று கூறப்படுகின்றது.

மருத்துவ குணங்கள்:

1. மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாக...

2. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் எடுத்து அரைத்து 200 மில்லியளவு காய்ச்சிய பாலில் கலந்து 2 வேளை குடித்து வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் குணமாகும். தொடர்ந்து குடித்துவர இளநரை, பித்த நரை முடி மாறும். நன்னாரியில் மேலே உள்ள தோல், உள்ளிருக்கும் நரம்பு இவற்றை நீக்கிவிட்டு, வெளுத்த நிலையில் உள்ள சதையை மட்டும் 100 கிராம் எடுத்து, அதேயளவு மஞ்ஜிட்டி (இது நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) எடுத்து இரண்டையும் தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து 750 மில்லி நீரில் கலந்து அத்துடன் நல்லெண்ணெய் 1 1/2 கிலோ சேர்த்து சிறு தீயில் பதமாகக் காய்ச்ச வேண்டும். நல்லெண்ணெய் பொங்கி வரும். எனவே அடியில் பிடித்துள்ள கல்பத்தையும் திரும்பத் திரும்ப கிளறிக்கொண்டே இருக்கவேண்டும். கிளறாமல் இருந்தால் அடியில் பிடிக்கும். தீ அதிகமானால் பொங்கும். கவனமாகக் கையில் ஒட்டாமல் தங்கம் போல் திரண்டு வரும் சமயத்தில் இறக்கி வடிகட்டி அத்துடன் வெள்ளை குங்குலியம் 100 கிராம் எடுத்து இடித்துப் பொடி செய்து போட்டு, தேன் மெழுகு 100 கிராம் கூட்டிக் கலக்கி, நன்றாக ஆறிய பின்னர் கண்ணாடிப் புட்டியில் பாதுகாப்பாக வைக்கவும். நகச் சுற்று வந்தவர்களுக்கு இதை ஊற்ற, உடனே குணமாகும். 3 வருடம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

3. பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாக-நன்னாரி வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளையாகக் குடித்து வர நாள்பட்ட வாதம், பாரிச வாதம், தோல் நோய்கள், செரியாமை, பித்த குன்மம் குணமாகும்.

4. சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாக-நன்னாரி பச்சை வேரை 20 கிராம் எடுத்து ஒன்றிரண்டாக இடித்துப் போட்டு 200 மில்லி நீரில் ஒரு நாள் முழுவதும் ஊறப்போட்டு பின்னர் வடிகட்டி 100 மில்லியளவு 2 வேளை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வெட்டைச் சூடு, கிரந்தி, சொறி, சிரங்கு, தாகம், அதிபசி, மேகநோய் குணமாகும்.

5. நன்னாரி நீர் “தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

6. சிறுநீர் நன்றாகப் பிரிய, வியர்வையைப் பெருக்கி உடலில் உஸ்ணத்தைத் தணித்து உடம்பை உரமாக்கக்கூடிய தன்மை உடையது. ஒற்றைத் தலைவலிக்கு, செரிமானம், நாட்பட்ட வாத நோய், பித்த நீக்கம், மேக நோய், பால்வினை நோய் ஆகியவற் ற்றை சரிசெய்யும் .

7. பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி. பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேகவேட்டை, நீர்கடுப்பு, நீர் சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.

8. பச்சைவேரை 20 கிராம் சிதைத்து 200 மி.லி. நீரில் ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டி 100 மி.லி. வீதம் காலை, மாலை குடித்து வரப் பித்த நோய், சிறு நஞ்சு, நீரிழிவு, வேட்டைச்சூடு, கிரந்தி., சொறிசிரங்கு, தாகம், அதிக பசி, மேக நோய் தீரும். பத்தியம் அவசியம்.

9. வேர் 20 கிராம் அரைலிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாக்கி 100 மி.லி. வீதம் காலை, மாலை சாப்பிட்டு வர நாட்பட்ட வாதம், பாரிசவாதம். தொல்நோய்கள்,செரியாமை, பித்த குன்மம் தீரும்.

10. ஆண்மை பெருக நன்னாரி வேர் குடிநீரை இழஞ் சூடாக அருந்தி வரவேண்டும். வியர்வை நாற்றம் நீங்க மிளகு. உப்பு. புளி இவைகளுடன் நன்னாரியின் இலை, பூ, காய், கொடி, வேர் முதலியவற்றுடன் நெய்சேர்த்து வதக்கி 90 நாட்கள் உட்கொள்ள வேண்டும்.

11. குழந்தைகளின் உடலை தேற்ற -நன்னாரி வேர்ப் பட்டையை நீரில் ஊறவைத்து தேவையான அளவு பாலும், சர்க்கரையும், கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, உடலைத் தேற்றுவ தோடு நாட்பட்ட இருமலும், கழிசலும் நிற்கும்.

12. சிறு நீரகநோய்கள் தீர -நன்னாரிவேரை வாழையிலையில் வைத்துக் கட்டி எரித்து சாம்ப லாக்கி அதனுடன் தேவையான அளவு சீரகமும், சர்க்கரையும் பொடித்துக் கலந்து அருந்திவர சிறு நீரகநோய்கள் அனைத்தும் விலகும்.

13. வயிறு நோய்கள் தீர -நன்னாரி வேர் பொடியுடன் சமளவு கொத்துமல்லியைத் தூள் செய்து சேர்த்து அருந்திவர பித்த சம்பந்த மான கோளாருகள் நீங்கும். தவிர செரியாமை, பித்த குன்மம் தீரும்இவைகளில் உண்டாகும் நோய்கள் குணமாகும்.

14. விஷக் கடிக்கு -நன்னாரி வேர்ப் பொடியுடன் சோற்றுக் கற்றாழை சோறு சேர்த்து உண்ண விஷக் கடிகளால் உண்டாகும் பக்க விளைவுகள் நீங்கும்.


15. கல்லீரல் நோய் குணமாக -பெரு நன்னாரிக் கிழங்கை ஊறுகாய் செய்து சாப்பிடும் வழக்கம் உண்டு. இது கல்லீரலைக் குணப்படுத்தும், காமாலையும் குணமாகும், ஜீரண சக்தியையும் உண்டாக்கும். உடம்பு சூட்டைக் குறைக்கும், ஒவ்வாமைக்குச் சிறந்த மருந்து.

16. குணங்களில் -நீர் பெருக்கும்,உடலுக்கு குளிர்ச்சி தரும் ,பசி தூண்டும் ,காய்ச்சலை குறைக்கும் ,வெள்ளை படுதலை சரியாக்கும்.

17. உடல் குளிர்ச்சி அடைய வெயில் காலங்களில் நன்னாரி வேரை நன்றாக அலசி பச்சையாகவோ அல்லது நிழலில் உலர்த்திக் காயவைத்தோ மண்பானையில் போட்டு சுத்தமான நீரை அதில் ஊற்றி வைத்திருந்து அந்த நீரைக் குடித்தால், உடல் குளிர்ச்சி அடையும்.

18. குறிப்பு:

ரோட்டோரத்தில் கிடைக்கும் நன்னாரி சர்பத்தில் நன்னாரி எசன்சு மட்டுமே உள்ளது-இது நல்லதில்லை. thanks விக்கிபீடியா.

நன்னாரி--கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை மருந்து

சுட்டெரிக்கும் வெயில் காலங்களில், நம் உடல் வியர்வை மூலம் நீரை இழந்து விடுகிறது. உடலில் வறட்சி ஏற்பட்டு, பசி மந்தப்பட்டு விடுகிறது. இழந்த நீரை ஈடுகட்ட அதிக அளவு தண்ணீரை குடிப்பதுடன், உடல் வறட்சியை நீக்க நாம் நாடுவது சில்லென்று குளிரூட்டப் பட்ட குளிர்பானங்களைத்தான். இந்த சில பானங்கள் ஜீரணசக்தியை மேலும் மந்தப்படுத் துவதுடன் சளி, இருமல், தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளையும் தோற்றுவித்து விடும். உடலின் வறட்சியால் ரத்தத்தில் நீரின் அளவும்குறைந்து விடும். சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். நீர்எரிச்சல், நீர்சுருக்கு போன்ற பிரச்சினைகளும் தோன்றும்.

கோடை வறட்சியை சமாளிக்க இயற்கை பல மருந்துகளை நமக்கு அளித்துள்ளது. அதில் முக்கியமான ஒன்று நன்னாரி. நன்னாரியின் வேர்தான் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படு கிறது. உலக நாடுகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுத்தப் படுகிறது. இதன் வேர் தூள் செய்யப்பட்டு டீயாக பயன்பாட்டில் உள்ளது. நமது பரம்பரிய மருந்துகள் பலவற்றில் நன்னாரி வேர் பயன்படுகின்றது. நன்னாரியில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந் துள்ளது. `சப்போனின்' என்ற உடலை தூய்மை செய்யும் பொருள் இதில் அதிகம் உள்ளது. உடல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் ஏற்படக்கூடிய முடக்கு வாதம், செதில் உதிர் தல் நோய் எனப்படும் சோரியா ஸிஸ், கரப்பான் போன்ற தோல் நோய்களுக்கு, இது சிறந்த மருந்து. சிறுநீரக நோய்கள் உடல் சூட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் பால்வினை நோய் களுக்கு இது சிறந்த மருந்து.

உடலுக்கு உடனடியாக சக்தியளிக்க கூடிய இயற்கை ஸ்டீராய்டுகள் நன்னாரியில் நிறைந்து உள்ளதால் வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி டீயை அதிகம் விரும்பி பருகுகிறார்கள். உடற்பயிற்சி செய்வதால் உடலில் ஏற்படும் வெப்பம் தணிவதுடன் உடலுக்கு உடனடி சக்தியளிப்பதால் வீரர்களால் அதிகம் நன்னாரி பயன்படுத்தப்படுகிறது.

கோடையை குளிர்ச்சியாக கொண்டாட நன்னாரி பானம், நன்னாரி சர்பத் பருகி உடல் நலத்தை காத்து கொள்வோம்.

நன்னாரி பால்:
1. நன்னாரி - 200 கிராம்

2. சுக்கு - 50 கிராம்

3. ஏலக்காய் - 25 கிராம்.

செய்முறை:- நன்னாரியை இடித்து நடுவில் உள்ள நரம்பை நீக்கி கொள்ள வேண்டும். சுக்கின் மேல் தோலை நீக்கி கொள்ள வேண்டும். பின்பு எல்லா பொருட்களையும் மிக்சியில் இட்டு பொடி செய்து கொள்ள வேண்டும்.

தேவைப்படும் பொழுது 2 தேக்கரண்டி பொடியை 100 மி.லி நீரில் நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி அத்துடன் 100 மி.லி பால், 1 தேக்கரண்டி பனங்கற்கண்டு கலந்து பருகி வரலாம். காபி, டீ, அதிகம் பருகுபவர்கள் அதை தவிர்த்து இந்த நன்னாரி பாலை தினம் இரு வேளை பருகி வரலாம். நீரிழிவு நோயாளிகள் ஆவாரம்பூ (காய்ந்தது) 100 கிராம் கலந்து அரைத்து பயன்படுத்தினால் உடல் குளிர்ச்சி உண்டாகும். உடல் கழிவுகள் வெளியேறும். உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். தோல் நோயால் துன்பப்படுபவர்கள் தினம் இதை பருக விரைவில் நல்ல குணம் தெரியும்.

நன்னாரி சர்பத்:

நன்னாரி - 200 கிராம்.

தண்ணீர் - ஒரு லிட்டர்.

சர்க்கரை - 1 கிலோ.

எலுமிச்சம்பழம் - 6 (சாறு எடுத்து கொள்ளவும்).

செய்முறை:

1. நன்னாரி வேரை நன்கு இடித்து வைத்துக் கொள்ளவும்.

2. ஒரு பாத்திரத்தில் நீரை நன்கு கொதிக்க வைத்து இடித்து வைத்துள்ள நன்னாரியை அதில் இட்டு, அடுப்பை அணைத்து இறுக்கமாக மூடி எட்டு மணி நேரம் வைத்து விடவும்.

3. எட்டு மணி நேரம் கழித்து நீரை வடிகட்டி அத்துடன் சர்க்கரை கலந்து நன்கு கம்பி பதம் வரும் வரை காய்ச்சி, ஆற வைத்து கொள்ளவும்.

4. ஆறிய பின் எலுமிச்சை சாறு கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.

5. எலுமிச்சம் சாறு தேவைப்பட்டால் சேர்க்கலாம். நன்னாரி மட்டுமே கூட நல்ல சுவை மற்றும் மனம் நிறைந்து இருக்கும்.

தேவைப்படும் பொழுது குளிர்ந்த நீரில் 2 தேக்கரண்டி சர்பத் கலந்து பருகி வந்தால், வியர்வையால் உண்டாகும் நம் உடலின் நீர் இழப்பை ஈடுகட்டுவதுடன், நம் உடல் கழிவுகளும் சிறந்த முறையில் வெளியேறி உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். நன்னாரி வேர் மருந்து கடைகளில் கிடைக்கும்.


இணையத்திலிருந்து திரட்டியவை
Engr.Sulthan

Read more...

பாகிஸ்தானில் அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டி வரிசிஸ்தான் உள்ளது. இங்குள்ள மலைப்பகுதியில் பதுங்கி இருக்கும் தலிபான், அல்-கொய்தா தீவிரவாதிகளை அமெரிக்காவின் ஆளில்லா விமானம் ஏவுகணைகளை வீசி அழித்து வருகிறது.

இந்த நிலையில் மிரான்ஷா பகுதியில் பறந்து கொண்டிருந்த ஆளில்லா விமானம் சில நாட்களுக்கு முன் நொறுங்கி விழுந்தது. இந்த விமானத்தை தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தியதாக கூறப்படுகிறது.

மேலும் விமானத்தின் பாகங்களை அவர்கள் தூக்கி சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த தகவல்களை அமெரிக்கா மறுத்துள்ளது.

Read more...

'இலங்கைக்கு எதிரான தீர்மானம் தேவையில்லை' - மஹிந்த சமரசிங்க

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை ஏற்கனவே உள்ளூர் வழிமுறைகளை பின்பற்றத் தொடங்கியிருக்கும் நிலையில், இலங்கையின் படிபினைகள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்று மாறு கோரும் பிரேரணைகள் எதுவும் ஐநா மனித உரிமைக் கவுன்ஸில் கூட்டத்தில் கொண்டுவரப்படத் தேவையில்லை என்று இலங்கை அமைச்சரும் மனித உரிமை கவுன்ஸில் மாநாட்டுக்கான இலங்கையின் தலைமைப் பிரதிநிதிரிதுமான மஹிந்த சமரசிங்க கூறியுள்ளார்.

கவுன்ஸிலில் இன்று மாலை உரையாற்றியய அவர், இந்த விடயத்தில் இலங்கை இதுவரை காட்டி வருகின்ற அர்ப்பணிப்பு உணர்வை கொண்டு பார்க்கும் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு கோரும் எந்தவிதமான தீர்மானமும் மனித உரிமைக் கவுன்ஸிலும் கொண்டுவரப்படுவதற்கான அவசரமும், நியாயமும் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதுவும் இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை ஏற்கனவே அமல்படுத்தத் தொடங்க்விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கையின் இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டவை, மிகைப்படுத்திக் கூறப்பட்ட விடயம் என்று கூறிய அவர், அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை கணிக்க இலங்கை உரிய பொரிமுறைகளை கையாள்வதாகவும் கூறினார்.

நல்லிணக்க ஆணைக்குழு பல ஆக்கபூர்வமான பரிந்துரைகளை செய்திருப்பதாக கூறியுள்ள அவர், அதனடிப்படையில் இறந்தவர்கள் பற்றியும், அதில் இராணுவத்துக்கு பங்கிருக்கிறதா என்பது குறித்து ஆராயவும், அதற்கான பதில் நடவடிக்கைகளுக்காகவும் சிவிலியன் மற்றும் இராணுவ நடைமுறறைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்த விடயங்களில் எந்தவொரு உள்ளூர் வழிமுறையும், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சரித்திரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஆகவே இந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கைக்கு உரிய காலக்கெடு வழங்கப்பட வேண்டும் என்றும், அதில் வெளியார் தலையீடு எதுவும் இருக்கக் கூடாது என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்கங்கு குறிப்பிட்டார்.

Read more...

ஜெனிவாவுக்கு எதிராக யாழிலும் மாபொரும் பேரணி.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக யாழ் மக்கள் அணிதிரண்டனர். மேற்படி சத்திக்கு எதிராக மக்கள் அணிதிரளவேண்டும் என நேற்று சிறியகால அவகாசத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினரால் விடுக்கப்பட்ட அழைப்பை எற்று பெருந்தொகையான மக்கள் குவிந்து மேற்குலத்திற்கான கோஷங்களை எழுப்பினர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் யாழ்.அலுவலகத்திலிருந்து யாழ்.பேரூந்து தரிப்பிடம் வரைச் சென்ற மேற்படி ஊhவலத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமை தாங்கினார்.

இதில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ,வடமாகாண ஆளுநர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com