Tuesday, January 31, 2012

மத்தியவங்கி மீதான புலிகளின் தாக்குதல் 16 ஆண்டுகள். உயிரிழந்தோருக்காக விசேட பூஜைகள்.

மத்திய வங்கி மீது புலிப் பயங்கரவாதிகள் தாக்குதல் நடாத்தி, இன்றுடன் 16 ஆண்டுகள் பூர்த்தியடைகின்றன. 1996 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் திகதி புலிப் பயங்கரவாதிகள், மத்திய வங்கி மீது தாக்குதல் நடாத்தினர். இலங்கை பொருளாதாரத்தின் இருதயமாக விளங்கிய மத்திய வங்கி மீது பயங்கரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடாத்தினர். இந்த தாக்குதலின் போது, மததிய வங்கி ஊழியர்கள் உட்பட 91 அப்பாவி பொது மக்கள், கொல்லப்பட்டனர். ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோர், காயமடைந்தனர். நூற்றுக்கும் கூடுதலானோர், பார்வையிழந்தனர்.

குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் தங்கள் உறவுகளை நினைவுகூர்ந்ததுடன் அவர்களின் ஆத்தமசாந்திக்கா விசேட பூஜை நிகழ்வுகள் மத்திய வங்கியின் தலைவர் அஜித் கப்ரால் தலையில் நிகழ்த்தியதுடன் நினைவுப் பலகை ஒன்றும் திரைநீக்கம் செய்யப்பட்டது.


வெடிபொருட்கள் அடங்கிய டிரக் வண்டி, மத்திய வங்கியின் நுழைவாயலில் பிரவேசித்த போது, முச்சக்கர வண்டியில் வருகை தந்த தற்கொலை குண்டுதாரி, மத்திய வங்கிக்குள் ஊடுறுவி மேற்கொண்ட தாக்குதலில், பல மாடிகளை கொண்ட மத்திய வங்கி கட்டிடத் தொகுதி மாத்திரமன்றி, அதனை அண்டிய 8 கட்டிடங்களும், சேதமடைந்தன.

இந்த பயங்கர தாக்குதலில், காயமடைந்தவர்களில், அமெரிக்கா, ஜப்பான், நெதர்லாந்து நாட்டவர்களும், அடங்கினர். இந்த பயங்கர குண்டு தாக்குதலை நடத்திய  பயங்கரவாத தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தினால், 200 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன் புலிப் பயங்கரவாதிகளுக்கு எதிராக, சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கச் செய்வதற்கும் இந்த தாக்குதல் காரணமாக, அமைந்தது.

இந்த தாக்குதல், இடம்பெற்று பல வருடங்களுக்கு பின்னர், அதாவது செப்டெம்பர் 11 நியூயோர்க் தாக்குதல் நடாத்தப்பட்ட சர்ந்தப்பத்தில், இதுபோன்ற ஒரு தாக்குதலே , இலங்கை மத்திய வங்கி மீதும் மேற்கொள்ளப்பட்டதை, சர்வதேச சமூகம் உணர்ந்தது. பயங்கரவாத தாக்குதலினால் அழித்தொழிக்கப்பட்ட மத்திய வங்கி கட்டிடத் தொகுதி, தற்போது, சகல சவசதிகளுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு கேடு விளைவித்த பயங்கரவாதமும், முற்றுமுழுதாக ஒழிக்கப்பட்டு, நாட்டில் சமாதானம் நிலை நிறுத்தப்பட்டுள்ளமை நாட்டு மக்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியமாகும்.
...............................

Read more...

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க ஈரான் தயாரிக்கும் ஆள் இல்லாத விமானம்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கம் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. அமெரிக்கா ஆள் இல்லாத விமானங்களை அனுப்பி உளவு பார்த்து வருகிறது. கடந்த மாதம் அமெரிக்கா இதே போல அனுப்பிய விமானம் ஒன்றை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

இப்போது ஈரான் ஆள் இல்லாத விமானத்தை விரைவில் தயாரிக்க போவதாக அந்த நாட்டு ராணுவ மந்திரி அகமது வாஜி கூறியிருக்கிறார். இந்த விமானத்துக்கு ஏ-1 என்று பெயரிட்டு உள்ளனர். 10 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. 2 மணி நேரம் தொடர்ந்து பறக்கும். 5 கிலோ குண்டை ஏந்தி சென்று குறிப்பிட்ட இலக்கை தாக்க முடியும்.

இதன் எரி பொருளாக பெட்ரோல் மற்றும் கியாஸ் பயன்படுத்தப்படும். ரேடார் கருவிகளும் இதில் பொருத்தப்பட்டு இருக்கும். ஈரான் ஏற்கனவே கடற்படைக்கு பயன்படுத்தும் விமானங்களை தயாரிக்க போவதாக அறிவித்து உள்ளது.

Read more...

தடைசெய்யப்பட்ட கடற்றொழில்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

தடைசெய்யப்பட்ட கடற்றொழில்களை யாழ்ப்பாணத்தில் முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வடபகுதி கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதி நிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்திய இழுவைப்படகுகளும் உள்ளுர் இழுவைப்படகுகளும் கடல் வளங்களை முற்றாக அழிப்பதாக தெரிவித்துள்ள இவர்கள் இழுவைப்படகுகளால் கடற்றொழில் உபகரணங்களும் சேதமாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக வெடி வைத்தல் தங்கு ஊசி வலை உள்ளிட்ட உபகரணங்களை இன்னமும் கடற்றொழிலாளர்கள் பாவனை செய்து வருவதாகத் தெரிவித்துள்ள இவர்கள் இதனை முற்றாக கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கடந்த சில கிழமைகளுக்கு முன்னர் கொழும்பிலிருந்து யாழ்.வந்த கடற்றொழில் நீரியல் வளத்துறைத்திணைக்கள விசேட குழவினர் சட்டவிரோத கடற்றொழில் முறைகளை பாவித்து கடற்றொழிலில் ஈடுபட்டவர்களை கைது செய்து நீதிமன்றில் நிறுத்தியதும் இங்கு குறிப்பிடத்தக்கது.








Read more...

ஈராக்கிலுள்ள இலங்கை தூதரகத்தை திறக்குமாறு ஜனாதிபதி உத்தரவு

ஈராக்கிலுள்ள இலங்கை தூதரகத்தை மிக விரைவாக திறக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிடம் இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read more...

தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தை சொந்த இடத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை

தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வடமாகாண ஆளுநரின் உதவியுடன் இச்செயற்பாட்டை வல்வெட்டித்துறை நகர சபை மேற்கொண்டு வருகின்றது.உள்நாட்டு யுத்தம் காரணமாக கடந்த 25 வருடகாலமாக இயங்காமல் இருந்த இவ்வெளிக்கள நிலையம் மாணவர்களின் விஞ்ஞான அறிவையும் வெளிக்கள பயிற்சி அனுபவங்களையும் மேம்படுத்தி கல்வியை தரமாக்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.

யுத்தத்தின் பின்னர் தற்காலிகமாக யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த இந்நிலையத்தை வடமாகாண ஆளுநரின் செயலாளரும் முன்னாள் கல்வியமைச்சின் செயலாளருமான இ.இளங்கோவனின் பணிப்பில் வல்வெட்டித்துறை நகர சபையினால் இது புனரமைக்கப்படவுள்ளது.

இதற்காகதொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தினால் வழங்கப்பட்ட 48 லட்சம் பெறுமதியான காணியில் கடந்த செவ்வாய் கிழமை இதற்கான முதற்கட்டபணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதற்கான நிதியினை தொண்டமனாறு வெளிக்கள நிலையத்தின் முன்னாள் ஆலோசகர் சரத் கொட்டகோட வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

பாராத லக்ஷ்மனின் பாதுகாப்பு அதிகாரிக்கு பிணை வழங்க மறுப்பு

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை வழக்கு தொடர்பில் துமிந்த சில்வாவுக்கு பதிலாக சட்டத்தரணி ஒருவர் ஆஜராவதற்கு எழுந்த எதிர்ப்பை ஆராய்ந்த கொழும்பு மேலதிக நீதவான் சந்தேக நபரான துமிந்த சில்வாவுக்கு பதிலாக சட்டத்தரணி ஒருவர் ஆஜராக முடியாது என இன்று தீர்ப்பளித்துள்ளார்.

முல்லேரியா சம்பவம் குறித்த அனைத்து விசாரணை அறிக்கைகளும் சட்ட மா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டு அவருடைய ஆலோசனைக்காக காத்திருப்பதாகவும் துமிந்த சில்வாவை கைது செய்வது குறித்து சட்ட மா அதிபர் இன்னும் தமக்கு ஆலோசனை வழங்கவில்லை என இரகசிய பொலிஸார் தெரிவித்துளளனர்

பாராத லக்ஷ்மனின் பாதுகாப்பு அதிகாரியாக கடமையாற்றிய ஆர்.காமினி என்பவருக்கு பிணை வழங்குமாறு அவருடைய சட்டத்தரணி கேட்டுக் கொண்ட போதும் இரகசிய பொலிஸார் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனால் பிணை வழங்க மறுத்த நீதவான் முல்லேரியா சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 13 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.




Read more...

ஈரான் மீதான பொருளாதார தடையினால் சிறிய நாடுகள் பாதிப்பு -ஜனாதிபதி

அமெரிக்காவின் ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளால் இலங்கை போன்ற சிறிய நாடுகளுக்கே தாக்கம் ஏற்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஊடகவியலாளர்களை அலரிமாளிகையில் இன்று சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடன் இலங்கை கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டு வருகிறது. எவ்வாறாயினும், பொருளாதார தடையை ஏற்படுத்தியதன் பின்னர் மாற்று நடவடிக்கைகள் அவசியமாகிறது.

இந்தியாவும் இது தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஅங்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

நீர்கொழும்பு சிறு மீன்பிடி துறை மீனவர்கள் தொழிலுக்கு செல்லாமல் பகிஸ்கரிப்பு

நீர்கொழும்பு கொட்டுவ மைதானம் அருகில் உள்ள (திறந்த மீன்விற்பனை சந்தையருகில் ) கடலோரப் பகுதியில் கருவாட்டு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் கருவாட்டு தயாரிப்பதற்காக வெளியிடங்களிலிருந்து மீன்களை கொள்வனவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முற்பகல் அப்பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.

நீர்கொழும்பு கடற்கரைத் தெரு மற்றும் குடாப்பாடு ஆகிய பிரதேசங்களில் சிறிய ரக மீன்பிடி படகுகளில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டதுடன் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளையும் ஏந்தி நின்று எதிர்ப்பை தெரிவித்தனர்.

தங்களிடம் மீன்களை கொள்வனவு செய்யாமல் (வாங்காமல்) வெளியிடங்களிலிருந்து மீன்களை கருவாட்டு தயாரிப்பதற்காக வாங்குவதால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் தெரிவித்தனர்.

சம்பவத்தை அடுத்து பொலிஸார் அந்த இடத்துக்கு வந்த பொலிஸார் குறிப்பிட்ட இடத்தில் நீதிமன்றங்கள் சில இருப்பதன் காரணமாக அமைதியை பேணுமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தினர்.

இப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இருதரப்பினரையும் பொலிஸார் பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர் ஆயினும் எந்த வித தீர்வும் எட்டப்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

Read more...

நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு தாக்குதல்

நீர்கொழும்பு மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் மீது இன்று காலை வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று காலை 8.20 மணியளவில் நீர்கொழும்பு அங்குருகாரமுல்ல விகாரை அருகில் இடம் பெற்றுள்ளது .

மாநகர சபை உறுப்பினர் கபில நந்தன சுலோச்சன மீதே கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வலது கையில் காயங்களுக்கு உள்ளான மாநகர சபை உறுப்பினர் பின்னர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது கையில் பத்து தையல்கள் போடப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மாநகர சபை உறுப்பினர் நீர்கொழும்பு ஹரிச்சந்திர தேசிய பாடசாலையில் கல்வி கற்கும் தனது மகளை இன்று காலை பாடசாலையில் விட்டு வரும் போது இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவரில் பின்னால் அமர்ந்து வந்தவர், மாநகர சபை உறுப்பினரை வாள் ஒன்றினால் வெட்ட முயன்றுள்ளார்.இதன் போது அவரது வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது . சம்பவத்தை அடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் தப்பி சென்றுள்ளனர் .

சம்பவம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை,

இச்சம்பவம் தொடர்பாக நீர்கொழும்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

செய்தியாளர் - எம்.இஸட்.ஷாஜஹான்

Read more...

பதிவுசெய்யப்படாத பயிற்சி மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை

சுகாதார அமைச்சு மற்றும் பொலிஸ் பதிவு இல்லாமல் நாட்டில் கடமையாற்றும் பயிற்சி மருத்துவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்கு முன் பொலிஸார் நடத்திய ஒரு கணக்கெடுப்பில் நாட்டில் 40 ஆயிரம் பயிற்சி மருத்துவர்கள் இலங்கை மருத்துவ கவுன்சில், ஆயுர்வேதம் குழுவில் பதிவு செய்யாமல் இருந்தனர் என்று அரசாங்க மருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கத்தின் (GMOA) தலைவர் டாக்டர் அநுராத பதனிய தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள சட்டங்களின் படி, மருத்துவ கவுன்சில் இணைந்து பதிவுசெய்யப்படாத மருத்துவர்கள் பயிற்சியின் போது சிறு அபராதத்தை செலுத்தி கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிக்கொள்கின்றனர். இருப்பினும், இச்சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பதிவுசெய்யப்படாத பயிற்சி மருத்துவர்களுக்கு எதிராக கடுமையான கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டுமென டாக்டர் அநுராத மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

கதிர்காமம் ஹோட்டலில் தற்கொலை அங்கி மீட்பு.


கதிர்காமம் பகுதியில் தற்கொலை தாக்குதல் அங்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். கதிர்காமத்தில் விடுதியொன்றில், சந்தேகத்திற்கிடமான தற்கொலை அங்கியொன்று காணப்படுவதாக, பொலிஸ் நிலையத்திற்கு இன்று காலை கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பொன்றை அடுத்து கதிர்காம பொலிஸார், மேற்கொண்டு பரிசோதனையின்போது, தற்கொலை குண்டுதாரிகள் அணியும் அங்கியொன்றை கண்டெடுத்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அங்கி, இவ்விடத்திற்கு எவ்வாறு கொண்டுவரப்பட்டது? மற்றும் இதனுடைய நோக்கம் தொடர்பாக அறிந்து கொள்ளும்பொருட்டு கதிர்காமம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ள பொலிஸார் அதனை அண்டிய பகுதிகளில் உள்ளவர்களிடமிருந்து தகவல்களை பெற்றுவருவததாகவும் தெரிவித்துள்ளார்.

குண்டு செயலிழக்கச் செய்யும் குழுவினர் அவ்விடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.

ஓய்வு விடுதியொன்றிலேயே, இந்த அங்கி காணப்பட்டதாக, அறிவிக்கப்படுகிறது. 

Read more...

யாழ்.மாவட்டத்தில் தீவிரமடைகிறது டெங்கு- தை மாதத்தில் மட்டும் 91 நோயாளர்கள்

யாழ் மாவட்டம் முழுதிலும் தை மாதத்தில் மட்டும் 91 டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு நோயாளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் ஏழாலை பகுதியிலும், கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் நீர்வேலி பகுதியிலும் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் மல்லாகம் பகுதியிலும் அதிகரித்த டெங்கு நோய்த் தாக்கம் அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியமாக வெட்டப்பட்ட வாழைக்குற்றிகள், கிளுவை மரப் பொந்துகள், வாழைப் பூவிலிருந்து உதிரும் மடல்கள் போன்றவற்றில் தேங்குகின்ற நீரிலிருந்து நுளம்புகள் பெருக்கமடைவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தவிர யாழ் மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் டெங்கு நோய்த் தாக்கம் பரவலாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

மக்கள் தமது சுற்றாடலில் டெங்கு நுளம்புகள் பெருக்கமடையாது தினந்தோறும் கண்காணிப்பதன் மூலமும், காய்ச்சல் நோயாளர்கள் உடனடியாகவே தகுதியான வைத்திய ஆலோசனை பெறுவதன் மூலமும் டெங்கு நோயினால் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளிலிருந்த தம்மைப் பாதுகாத்துக் கொள்ள முடியுமென பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றுநோய்த் தடுப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

Read more...

சட்டவிரோத கருக்கலைப்பு! இரு வைத்தியர்கள் இருபெண்கள் கைது.

குருநாகல் பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் கருக்கலைப்பில் ஈடுபட்ட இரு பெண்கள் உட்பட  வைத்தியர்கள் இருவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெல்லவப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வெல்லவ பானகமுவ பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தி வந்த சட்டவிரோதக் கருக்கலைப்பு நிலையத்தினைச் சுற்றிவளைப்பு மேற்கொண்ட போது கருக்கலைப்பிற்காக வருகை தந்திருந்த இரு பெண்களுடன் வைத்தியர்கள் எனக் கூறப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸாருக்கு நபர் ஒருவர் வழங்கிய தகவலை அடுத்து இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குருநாகல் பிரதேச வைத்தியரின் ஊடாக இந்த கருக்கலைப்பு மத்திய நிலையத்திற்கு தேவையான பெண்கள் வருவதற்கு ஏற்பாடுகள் செய்து கொடுப்பதாகவும், கருக்கலைப்பு நிலையத்தை நடத்திச் சென்ற வீட்டுக்கார இளைஞனும் மற்றும் கருக்கலைப்பிற்காக வருகை தந்திருந்த இரு வைத்திய அதிகாரிகளும் ஒன்றிணைந்து இந்தக் சட்டவிரோத நிலையத்தினை நாடாத்தி வந்துள்ளமை பொலி;ஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்கள் இருவரில் ஒருவர் கலைப்புச் செய்யப்பட்டவர் எனவும் மற்றையவர் அதற்குத் தயார் நிலையில் இருந்தவர் எனவும் பொலிஸர் தெரிவிக்கின்றனர்,

கருக்லைப்பிற்காகப் பயன்படுத்தக் கூடிய உபகரணங்கள் மற்றும்  போக்குரத்திற்காகப் பயன்படுத்திய முச்சக்கர வண்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள பெண்களில் ஒருவர் கலகெதர பிரதேசத்தையும் மற்றையவர் மெல்சிரிபுரு பிரதேசத்தையும் வதியிடமாகக் கொண்டவர்கள் எனவும் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.

Read more...

Monday, January 30, 2012

சரத் பொன்சேகாவின் விடுதலை கோரி பெப்ரவரி 8 இல்ஆர்ப்பாட்டம்!

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி பாரிய ஆர்ப்பாட்டமொன்று பெப்ரவரி 8ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.

சரத்பொன்சேகா கைது செய்யப்பட்டு இரண்டு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு ஜனநாயகத்துக்கான மக்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள் மற்றும் ஜனநாயக விரும்பிகள் என சகல தரப்பினரும் கலந்துகொள்ள உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

கருணா எனது நண்பன்! ஆனால் அரசியலில் எதிரி! சுவிட்சர்லாந்தில் பிள்ளையான் முழக்கம்.

ஐரோப்பிய விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண முதல்வரான பிள்ளையான் எனபடுகின்ற சந்திரகாந்தன் சுவிட்சர்லாந்தில் பல மக்கள் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். அவ்வாறான சந்திப்பு ஒன்றில் பொதுமகன் ஒருவரால் : கருணாவுடனான தங்கள் உறவு எவ்வாறு உள்ளது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிள்ளையான் : ' கருணா தனிப்பட்ட வாழ்வில் எனது நண்பன், அனால் அரசியலில் அந்த நிலைமை கிடையாது! அவர் புலிகளியக்கத்திலிருந்து விலகி வந்தபோது அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததை நானும் அறிந்திருந்தேன் நீங்களும் அறிந்திருப்பீர்கள், நாங்கள் அவற்றை அப்போது நம்பாமல் நிராகரித்தோம், அனால் தற்போது அக்குற்றச்சாட்டுக்கள் யாவற்றையும் அவரே நிரூபித்து காண்பித்துள்ளார்' என பதிலளித்துள்ளதுடன் கருணா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை அடுக்கியுள்ளார்.

Read more...

கந்தரோடை கந்தையா வித்தியாசாலையின் பாடசாலை தினமும், பரிசளிப்பும்.

யாழ். கந்தரோடை தமிழ் கந்தையா வித்தியாசாலையின் பாடசாலை தினமும், பரிசளிப்பு விழாவும் இன்று பிற்பகல் 1.30க்கு ஆரம்பமாகி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. வித்தியாசாலை அதிபர் கா.சசிதரன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமாகாண பாடசாலைகள் வேலைப்பகுதி பணிப்பாளர் க.குகநேசன் அவர்களும், சிறப்பு விருந்தினராக வித்தியாசாலையின் ஸ்தாபகர் குடும்பம் சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர். பொறியியலாளர் க.பிரகாஸ் அவர்கள் நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து பாடசாலைச் சிறார்களின் பாட்டு, நடனம் என பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில் கிராம மக்கள், பெற்றோர், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர்.

பொலிஸ் நிலையத்திற்கான அடிக்கல்லினை யாழ் மேயர் அவர்களும் நாட்டிவைத்தமை சிறப்பம்சமாகும்.





Read more...

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது

பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் அமைப்பதற்கான அடிக்கல் இன்றைய தினம் காலையில் சம்பிரதாய பூர்வமாக நாட்டி வைக்கப்பட்டுள்ளது.காலையில் இடம் பெற்ற பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து பருத்தித்துறை நகரில் உள்ள பழைய பொலிஸ் நிலைய கட்டிடத்தில் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

இந்நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பருத்தித்துறையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் சிரேஷ்ர பொலிஸ் மா அதிபர் காமினி சில்வா யாழ்.மாவட்ட சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் ரி.இந்திரன் காங்கேசன் துறைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி காமினி பேராரா பருத்தித்துறை உதவிப்பிரதேச செயலளர் திருமி எஸ்.உஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Read more...

இடைநிலை பாடசாலை அபிவிருத்தியெனும் புதிய திட்டத்தால் ஆரம்ப பிரிவுக்கு பாதகமாம்

இடை நிலைப் பாடசாலைகளின் அபிவிருத்தி என்ற அரசாங்கத்தின் தேசிய செயற்றிட்டமானது தெளிவற்றதும் எதிர்கால நோக்கற்றதுமாக இருப்பதுடன், இது ஆரம்பப் பிரிவுகளை இல்லாது செய்யும் நடவடிக்கையாகவும் இருக்கின்றது. எனவே இத் திட்டத்தை உடனடியாக இடை நிறுத்த வேண்டும் என ஜே.வி.பி. அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவர் அனுர குமார திசாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2012 முதல் 2016 ஆம் ஆண்டுகளுக்குள் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான வகுப்புக்களை இல்லாது செய்வதற்கு கட்டம் கட்டமாக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பினைத் தெரிவிப்பதாகவும், மேற்படி ஆரம்பப் பாடசாலைகளில் ஜனாதிபதியினதோ அமைச்சர்களினதோ பிள்ளைகள் பயிலவில்லையென்றும் அங்கு சாதாரண மற்றும் குறைந்த வருமானம் பெறுவோரது பிள்ளைகளே பயின்று வருவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்தப் புதிய செயற்றிட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்ட அவர், சுகாதாரத் துறையில் மக்கள் எந்தளவு நம்பிக்கை இழந்துள்ளனரோ அதே போன்று தற்போது கல்வித் துறையிலும் நம்பிக்கை இழந்து விட்டனர் என்றும் தெரிவித்தார்.

Read more...

சிரியாவில் முற்றுகிறது கலவரம்: ராணுவத் தாக்குதல் அதிகரிப்பு!

சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு அருகில் உள்ள பகுதிகளை, எதிர்த்தரப்பினரிடம் இருந்து கைப்பற்றுவதற்காக, அதிபரின் ராணுவம் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இந்நிலையில், அங்கு நிலவரத்தைப் பார்வை யிட்டு வந்த பிரதிநிதிகள் குழுவை, அரபு லீக் திரும்பப் பெற்றுள்ளது.

11 மாதங்களாக...:
சிரியாவில், அதிபர் பஷர் அல் அசாத்திற்கு எதிரான மக்கள் போராட்டம், கடந்தாண்டு மார்ச்சில் துவங்கியது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது, ராணுவம் தாக்குதல் நடத்தவே, படிப்படியாக ராணுவ வீரர்கள் பலர், அங்கிருந்து பிரிந்து, எதிர்க் கட்சிகளுடன் இணைந்தனர்.பிரிந்த ராணுவ வீரர்கள், சிரியா விடுதலை ராணுவம் என்ற எதிர்த்தரப்பு ராணுவத்தை உருவாக்கினர். அதிபரின் ராணுவத்திற்கு, இந்த புதிய ராணுவம் மிகப் பெரிய சவாலாக விளங்கி வருகிறது.

அரபு லீக் குழு:
சிரியாவில் அமைதியை நிலைநாட்ட, அரபு லீக் சில பரிந்துரைகளை முன்வைத்தது. அதன்படி, கடந்தாண்டு டிசம்பர் 26ம் தேதி முதல், அரபு லீக் சார்பில், 165 பிரதிநிதிகள் கொண்ட குழு, சிரியாவில் நிலவரத்தை நேரில் பார்வையிட்டது.ஆனால், இக்குழு வந்த பின், மக்கள் மீதான ராணுவத்தின் தாக்குதல் குறைவதற்குப் பதிலாக அதிகரித்தது. அதனால், அதிபர் அசாத், தனது பொறுப்புகளை துணை அதிபரிடம் ஒப்படைத்து விட்டு, பதவி விலக வேண்டும் என, அரபு லீக் கோரிக்கை விடுத்தது.

சவுதியின் அதிரடி:
இதற்கு மறுப்பு தெரிவித்த சிரியா, அரபு லீக்கில் உள்ள சில நாடுகள், அன்னிய நாடுகளின் கைப்பா வையாகி விட்டதாக குற்றம் சாட்டியது. இதனால், அரபு லீக்கில் உள்ள சவுதி அரேபியாவும் கத்தாரும், சிரியா குழுவில் இருந்து, தங்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெற்றன.

குழு வாபஸ்:
அரபு லீக்கில் செல்வாக்கு மிகுந்த, சவுதியின் இந்த முடிவை அடுத்து, அரபு லீக் வெளியுறவு அமைச்சர்கள் கலந்தாலோசித்தனர். இதையடுத்து, சிரியாவில் இருந்து அரபு லீக், தனது பிரதிநிதிகள் குழுவை, முழுமையாகத் திரும் பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்தது.கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவிற்கு, கடந்த நான்கு நாட்களில் மட்டும், 200 பேர் அதிபர் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி வலியுறுத்தல்:
அதே நேரம், அதிபர் அசாத்தை பதவி இறங்கும்படி வலியுறுத்தவும், அவரிடம் இருந்து, அந்நாட்டு மக்களை காப்பாற்றவும், நெருக்கடி கொடுக்கும்படி, அமெரிக்காவிடம் வலியுறுத்த, சிரியாவின் எதிர்க்கட்சிக் கூட்டமைப்பான சிரியா தேசிய கவுன்சில் தலைவர், விரைவில் அமெரிக்கா செல்ல இருப்பதாக, அக்கூட்டமைப்பு அறிவித்துள்ளது.சிரியாவில் நடக்கும் வன்முறைகளை, உடனடியாக நிறுத்த, சர்வதேச சமூகம் தலையிட வேண்டும் என, வளைகுடா நாடுகள் மற்றும் துருக்கி வலியுறுத்தியுள்ளன.

முழுவீச்சில் ராணுவம்:
இந்நிலையில், சிரியாவின் புறநகர்ப் பகுதிகளை, நேற்று முன்தினம் எதிர்த்தரப்பு ராணுவம் கைப்பற்றியது. இதையடுத்து, அப்பகுதிகளில் அன்றைய தினமே, அதிபர் ராணுவம் முழுவீச்சில் இறங்கியுள்ளது. இதனால், அப்பகுதிகள் போர்க்களம் போல் காட்சியளிக்கின்றன.

ஐ.நா.,வில் நாளை:
இதற்கிடையில், அரபு மற்றும் ஐரோப்பிய நாடுகளால், ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், நாளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இத்தீர்மானம், சிரியாவில் வெளிநாட்டுத் தலையீடுகளை நிறுத்த வகை செய்யா ததால், ஆதரிக்க முடியாது என, ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது.ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், இத்தீர்மானத்தின் அவசியம் குறித்து, நாளை அரபு லீக் தலைவர் நபீல் அல் அரபி பேச உள்ளார். ரஷ்ய அதிகாரிகள் தங்கள் எதிர்ப்பை கைவிடும்படி, அவர்களிடம் நேரடியாக அரபி பேசி வருகிறார்.

Read more...

குத்துச்சண்டை வீரர் ஹொலிபீல்டின் கதை பிடித்தார் ஜனாதிபதி!

உலக குத்துச்சண்டை சாம்பியன் ஹெவன்டர் ஹொலிபீல்ட் இன்று (30) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்வை அலரி மாளிகையில் சந்தித்தார். இதன் போது ஜனாதிபதி ஹொலிபீல்டின் காதை பிடித்துப் பார்த்தார்.

1997.06.28 அன்று இடம் பெற்ற குத்துச் சண்டை போட்டியில் உலக புகழ்பெற்ற குத்துச் சண்டை வீரர் மைக் டைசன், ஹெவன்டர் ஹொலிபீல்டின் காதின் ஒரு பகுதியை கடித்துத் துப்பினார் என்பது பிரசித்தாமான விடயமாகும்.

அந்த காதுப் பகுதியையே ஜனாதிபதி பிடித்துப் பார்த்தார்.

இதனை நீங்கள் படத்தில் காணலாம்.

Read more...

பொலிஸ், காணி அதிகாரங்களை எதிர்க்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.


அதிகாரப்பரவலாக்கல் பட்டியலிலிருந்து பொலிஸ், காணி அதிகாரங்களை நீக்கக்கோரி நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிடம் எமது உறுதியான யோசனையை முன்வைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம் என்று ஜாதிக ஹெலஉறுமய நேற்றுத் தெரிவித்துள்ளது.

அத்துடன், பொலிஸ், காணி அதிகாரங்களைப் பகிர்வதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இணங்க மாட்டார் என நாம் உறுதியாக நம்புகின்றோம் என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் கருத்துவெளியிடும் போதே ஜாதிக ஹெலஉறுமயவின் ஊடகப்பேச்சாளரும் மேல்மாகாண சபை அமைச்சருமான உதய கம் மன்வில தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு, தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்திடம் தூக்கிப்பிடித்து வருவதால் பயன் கிட்டப்போவதில்லை. எமது நாட்டு மக்களின் பிரச்சினைகளை நாமே பேசித் தீர்க்க வேண்டும். இதற்கு முன்வரத் தயங்குபவர்கள் தமிழர்கள் நலனில் அக்கறை கொள்வது போல் நடிக்கின்றனர். தமிழ் மக்களை ஏனைய சமூகத்தினருடன் இணையவிடாது தடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது.

நாட்டுக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகமிழைக்கும் வகையிலேயே அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. தமிழ் மக்களுக்கு விடிவைத் தேடிக்கொடுப்பதற்கு அவர்கள் விரும்பினால் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கலாம் அல்லவா?

காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதற்கு ஜனாதிபதி ஒருபோதும் இணங்கமாட்டார் என நாம் உறுதியாக நம்புகின்றோம் என்றார்.

இதேநேரம் இரு நாட்டு கொள்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றி வருவதாக தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டின் சகல இன மக்களையும் ஐக்கியப்படுத்தும் முனைப்புக்களில் அரசாங்கம் தீவிரம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பத்தாண்டு கால மும்மொழிக் கொள்கையின் ஊடாக பாரிய மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் ஐக்கிய இலங்கை என்ற கோட்பாட்டில் இயங்கி வரும் அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இரு நாட்டு கொள்கைகளை பின்பற்றி வருகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிங்கள கடும் போக்குடைய கட்சிகள் சிறுபான்மை மக்கள் தங்களது ஆதிக்கத்தின் கீழ் வாழ வேண்டுமென எதிர்பார்க்கின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வழங்குவதனை சிறுபான்மை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே கடும்போக்குடைய சிங்கள கட்சிகள் இருக்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைப்பாடு அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளை பாதிக்கக்கூடும் என அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படுமாயின் ஒற்றுமையாகவும், நிம்மதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் பிரிவினைக்கு வழிவகுக்கும் என்று உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்.

மிகவும் சிறிய இந்த அழகிய தேசத்திற்கு மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் அவசியமற்றவை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அம்பாறை மாவட்டத்திலுள்ள நாமல் ஓயா பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத் திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நெல்சிப் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அபிவிருத்தி வேலைத் திட்டங்களை தொடக்கி வைத்து உரையாற்றிய அமைச்சர் அதாவுல்லா நாட்டில் பயங்கரவாதம் நிலவிய காலத்தில் மக்கள் சொல்லொண்ணா துன்ப, துயரங்களை அனுபவித்தார்கள்.

ஒவ்வொரு வினாடியுமே அச்சம், பீதியுடனேயே கழிந்து கொண்டிருந்தது. இந்த நிலமை ஓரிரு நாட்களோ, வாரங்களோ நிலவவில்லை. மாறாக மூன்று தசாப்த காலம் இந்த துரதிஷ்டகரமான நிலமை நீடித்தது.

இந்த நிலமையிலிருந்து நாட்டை விடுவித்து இங்கு வாழுகின்ற எல்லா மக்களும் ஒற்றுமையாகவும், சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழக்கூடிய சூழ்நிலையை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஏற்படுத்தித் தந்திருக்கின்றார்.

இப்போது நாம் அச்சம், பீதியின்றி சந்தோஷமாக வாழுகின்றோம். இவ்வாறான சூழ்நிலையில் ஓரிருவர் தங்களது அரசியல் நலன்களுக்காக மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர். இது இந்தச் சின்னஞ்சிறிய தேசத்திற்கு தேவையற்றதாகும்.

இவ்வாறான அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படுமாயின் தற்போது ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழும் மக்கள் மத்தியில் வீண் ஐயங்களையும், பிரிவுகளையும் ஏற்படுத்தும். ஒருவர் மீது அடுத்தவர் அதிகாரம் செலுத்தும் நிலமை உருவாகும்.

இந்த நிலமை நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய முயற்சி செய்யும் வெளிநாட்டுச் சக்திகளுக்குத் தான் நன்மையாக இருக்குமேயொழிய எமது மக்களுக்கு எந்தப் பயனுமே கிடைக்கப் போவதில்லை.

ஆகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் கரங்களைப் பலப்படுத்தி நாம் தொடர்ந்தும் ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வோம் எனக் கூறியுள்ளார்.

Read more...

முல்லைத்தீவில் தாயை இழந்த மாணவி மீசாலையில் தாத்தாவால் கற்பழிப்பு. .

முல்லைத்தீவில் தாயை இழந்த பதின்ம வயது மாணவி ஒருவர் தனது தாயின் தகப்பனால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை மீசாலையில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்துக்குக் காரணமானவர் எனச் சந்தேகிக்கப்படும் மாணவியின் பேரனாரை (வயது 65) தாம் கைது செய்துள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, மீசாலையில் வசிக்கும் பிரஸ்தாப மாணவி தமது தாயின் தந்தையான பேரனா ருடன் வசித்து வருகிறார். சம்பவ தினமன்று மதுபோதையில் வீட்டுக்குச் சென்ற சந்தேக நபர் மாணவியைத் துஷ்பிரயோகம் புரிந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரஸ்தாப மாணவி மறு நாள் தனது ஆசிரியை ஒருவரிடம் தனக்கு நேர்ந்த கதியைக் கூறியதை அடுத்து அந்த மாணவி சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுப் பின்னர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பாக மாணவியின் சித்தி ஒருவர் பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டு விசாரிக் கப்பட்டார். இதனை அறிந் ததும் சந்தேக நபர் நஞ்சருந் தியுள்ளார். அவர் உடனடி யாக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார். பொலிஸார் அவ ரைச் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர். அவர் தொடர்ந் தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொலிஸார் மேலதிக விசார ணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பிட்ட மாணவியின் தாயர் இறந்த பின்னர் தந்தையார் வேறு திருமணம் செய்து கொண்டதை அடுத்தே இவர் குறிப்பிட்ட 65 வயதுடைய பேரனுடன் தங்கியிருந்து கல்வி பயின்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பேரனார் கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த ஆபாசப் படங்களைக் காட்டி வன்புணர்வு புரிந்தார் எனபதும் மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

இந்தியாவை பழிவாங்குவோம்! ஹபீஸ் சயித் முழக்கம்!

நாங்கள் எப்போதும் பாகிஸ்தானை பாதுகாப்பதில் ‌உறுதியாக இருக்கின்றோம் என்றும், அங்கு தான் வாழ விரும்புகிறோம் என்றும், காஷ்மீர் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும், இதற்கென இந்தியாவுக்கு எதிராக போராடவும் அனைவரும் தயாராக வேண்டும் என்றும், அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளுக்கு எதிராக செயல்படுவதாகவும் பாகிஸ்தானில் நடந்த மாபெரும் பேரணியில் ஜமாஉத்தவா அமைப்பு தலைவர் ஹபீஸ் சயீத் தெரிவித்துள்ளார்.

முல்தானில் நடந்த பேரணியில் 40 க்கும் மேற்பட்ட மத மற்றும் அரசியல் கட்சியினர் பங்கேற்றனர் . இந்த பேரணியில் மும்பை வழக்கில் தொடர்புடைய ஜாமத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் ஆவேசமாக பேசினார். இந்த பேரணியில் அவர் பேசுகையில் கூறியதாவது:

இந்தியாவிற்கு எதிரான ஜம்ஜக்தா எக்ஸ்பிரஸ் ரயில் தாக்குதலில் இருந்து எங்களின் பணி துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் நல்ல படியாக நடக்கும்.

சுதந்திர காஷ்மீரைத்தான் நாங்கள் விரும்புகிறோம். அமெரிக்கா - பாகிஸ்தான் உறவை மறு ஆய்வு செய்ய வேண்வும். இந்நாட்டினர் இஸ்லாம் நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் என்றார். பாகிஸ்தான் மக்கள் இணைந்து உறுதியான நிலைப்பாட்டை எடுதத்தோமானால் அமெரிக்காவின் சதியை உடைத்து எறிய முடியும் என்றார்.

இந்த பேரணியில் முன்னாள் ஐ.எஸ்.ஐ., ஹமீத் ஹூல், முக்கிய பிரமுகரான ஷேக்ரசீத் அகம்மது, ஜியா உல் ஹக் மகன் இஜாஸ் உல் ஹக் உள்ளிட்ட சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

Read more...

தோல் தொற்று நோய்களைத் தடுக்க...

மனித உடலின் தோல் பகுதி ஆரோக்யத்தின் கண்ணாடி. தோலில் பிரச்னை ஏற்பட்டால் உடலில் ஏதோ தொந்தரவு உள்ளது என்று அர்த்தம். தவறான உணவு முறை, அலர்ஜி, சுகாதாரத்தில் கவனம் இல்லாமை, சத்துக் குறைபாடு போன்ற காரணங்களால் தோல் நோய்கள் ஏற்படுகிறது. தோல் நோய்களை கண்டு கொள்ளாமல் விடுவதால் அது பல்வேறு மனஉளைச்சல்களை ஏற்படுத்துகிறது. எனவே தோல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து குணப்படுத்த வேண்டும் என்கிறார் காஸ்மெடிக் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் விக்னேஷ்வரி.

தோலின் தன்மைக்கு ஏற்றாற்போல பனிக் காலங்களில் தோல் வறட்சி, தோல் சுருக்கம் மற்றும் பரு போன்ற பிரச்னைகள் தோன்றும். தோல் பகுதி பளபளப்பாக சுருக்கம் ஏற்படாமல் இருக்க பழங்கள் அதிகம் சாப்பிட வேண்டும். சத்தான உணவுப்பழக்கத்தை கடை பிடிப்பதன் மூலம் தொல்லைகள் ஏற்படாமல் தடுக்கலாம். வெயில் மற்றும் பனியில் செல்லும் போது சன்ஸ்கிரீன் மற்றும் வின்டர் கேர் கிரீம்களை பயன்படுத்தலாம். தேமல் பிரச்னைகள் இருந்தால் கட்டாயமாக மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும். தோல் பிரச்னை உள்ளவர்கள் தனியாக துண்டு, சீப்பு பயன்படுத்துவதன் மூலம் மற்றவருக்குப் பரவாமல் தடுக்கலாம். மஞ்சள் பூசிக் குளிக்கும் பழக்கம் இல்லாத காரணத்தால் இன்றைய டீன் ஏஜ் பெண்களில் பலருக்கு முகத்தில் ரோமம் வளரும் பிரச்னை உள்ளது.

தைராய்டு ஹார்மோன் பிரச்னை, கருப்பையில் நீர்க்கட்டி இருத்தல், மாதவிலக்கு கோளாறு, ஆண் தன்மைக்கான ஹார்மோன் அதிகமாக இருக்கும் போதும் பெண்களுக்கு முகத்தில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது போல் முடி வளரும் போது அதை கண்டு கொள்ளாமல் விடுவது பெண்களுக்கு மனதளவில் மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இதற்கு பெண்கள் பிளக்கர், திரட்டிங், ஷேவிங் மற்றும் வேக்சிங் போன்ற முறைகளில் முடிகளை நீக்குகின்றனர். இது போன்ற முறைகளில் முடிவளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. மேலும் முடி இருக்கும் தோல் பகுதி தடிமனாக மாறும். வேக்சிங் முறையில் முடியை நீக்கினால் தோல் பாதிப்படையும். பெண்களின் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை லேசர் சிகிச்சை மூலம் பாதிப்புகள் இன்றி நீக்க முடியும். இதே போல் பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்பு, வளரும் தன்மையுள்ள மரு, டாட்டூஸ், பச்சை குத்தியதை நீக்குவதற்கும் நவீன சிகிச்சை முறைகள் உள்ளன. அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக் கொண்டு குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்கும், தோல் பிரச்னைக்கும் தகுந்த சிகிச்சை முறையை தேர்வு செய்வதன் மூலம் வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும். காஸ்மெடிக் சர்ஜரியில் இதற்கு எளிய தீர்வுகள் உள்ளன.

பாதுகாப்பு முறை: புற ஊதாக் கதிர்களின் தாக்கம் இல்லாமல் காப்பதன் மூலம் தோல் நோய் மற்றும் தோல் புற்றுநோயைத் தவிர்க்க முடியும். தோல் பகுதி யை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். வெளியில் சென்று வந்ததும், இளம் சுடுநீரால் முகத்தை கழுவி பஞ்சு அல்லது துண்டால் முகத்தை அழுத்தி துடைத்து, இறந்த செல்களை நீக்கலாம். காய்ந்த மற்றும் வறண்ட சருமத்துக்கு கொழுப்பு உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். எண்ணெய் பசை சருமத்தை தினமும் மூன்று முறை சுத்தம் செய்ய வேண்டும். ஆண்கள் ஷேவிங் செய்யும் முன்பு சூடான தண்ணீரில் நனைக்கப்பட்ட துண்டால் முடியைத் துடைக்கவும். முகத்தில் உள்ள சுரப்பிகள் அடைத்துக் கொள்வது மற்றும் பாக்டீரியா தொற்றின் காரணமாக முகத்தில் பருக்கள் தோன்றுகிறது. தைராய்டு சுரப்பியின் மாறுபாட்டால் பருக்கள், முடி வளர்வது போன்ற தொல்லைகள் ஏற்படுகிறது. தோல் பிரச்னைகளுக்கு தோல் மருத்துவரின் ஆலோசனைப்படி கிரீம்களை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம்.

அரைக்கீரை கூட்டு: ஒரு கட்டு அரைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் சீரகம் சேர்த்து தாளிக்கவும், 3 பச்சை மிளகாய் நறுக்கியது, 4 தக்காளி 5 பல் பூண்டு, சின்ன வெங்காயம் 5 சேர்த்து லேசாக வதக்கிய பின்னர் வேகவைத்த துவரம்பருப்பு 1 கப் சேர்த்து இறுதியில் அரைக்கீரை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு ஒரு கொதி விட்டால் அரைக் கீரை கூட்டு ரெடி. இதில் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.

ரெசிபி

பிரெட் சப்பாத்தி:
பத்து ஸ்லைஸ் பிரெட் எடுத்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும். 150 கிராம் மைதாவுடன், பிரெட் தூள், 2 டீஸ்பூன் வெண்ணெய், 100 மிலி பால், 1 டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து மாவாக பிசைந்து கொள்ளவும். இதனை சப்பாத்தியாக சுட்டுக் கொள்ளலாம். புரோட்டீன் மற்றும் வைட்டமின் சத்துகள் இதில் உள்ளன.

புரூட் கேசரி: பப்பாளி, வாழைப்பழம், ஆப்பிள், சப்போட்டா, மாதுளை ஆகிய அனைத்தும் சேர்த்து இரண்டு கப் அளவுக்கு எடுத்து மிக்சியில் அடித்து ஜூஸ் எடுக்கவும். வாணலியில் 3 டீஸ்பூன் வெண்ணெய் விட்டு பழச்சாறு சேர்த்து கிளறவும். இத்துடன் கால் கப் பால் பவுடர், குளுக்கோஸ் பவுடர் 3 டீஸ்பூன், சேர்த்து கிளறவும். கெட்டியான பின் இறுதியில் பாதாம், பிஸ்தா சேர்த்து கிளறி இறக்கவும். இந்த புரூட் கேசரியில் பி காம்ப்ளக்ஸ் மற்றும் பி12 சத்துகள் அதிகம் உள்ளன.

டயட்

சத்துக்குறைபாடுகள், சுத்தமின்மை, மற்றும் பரம்பரைக் காரணங்களால் தோல் நோய் ஏற்படலாம். தேமல் போன்ற பிரச்னைகளுக்கு வைட்டமின் குறைபாடே காரணம். ஆரஞ்சுத் தோல், வெள்ளரி, எலுமிச்சை சாறு ஆகியவற்றை தடவிக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகளுக்கு தீர்வு காணலாம். எலுமிச்சை சாறு, முட்டைக்கோஸ் இலை, கோசா பழச்சாறு, ஆரஞ்சு, தக்காளி, வெள்ளரி, ஆப்பிள் சாறு, அரைக்கீரை சாறு ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். தோல் பகுதியிலும் தடவலாம். வைட்டமின் பி2 குறைபாட்டின் காரணமாக தோலில் கரும்புள்ளிகள் தோன்றும். வைட்டமின் பி6 குறைபாட்டால் தேமல், அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படும். நைசின் சத்துக் குறைபாட்டினால் முகப்பருக்கள் ஏற்படும். அயோடின், கோபால்ட், பி 12 குறைபாட்டால் தோலில் பல பிரச்னைகள் உண்டாகிறது. உணவில் ரவை , சர்க்கரை அதிகம் சேர்த்துக் கொள்பவர்களையும் அதிகளவில் பாதிக்கிறது. ரத்த ஓட்டம் குறைந்தால் தோல் வறட்சி உண்டாகும். இது போன்ற பிரச்னைகளைத் தடுக்க முழு தானியங்கள், உலர்ந்த பருப்புகள், பழங்கள் மற்றும் காய்கள், பாலுடன் சத்துமாவு சேர்த்துக் கொள்ளலாம். வெஜிடபிள் ஆயில் மற்றும் கடலை எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்க்கலாம். வைட்டமின் பி12 அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் தோல் பிரச்னைகள் வராமல் தடுக்க முடியும் என்கிறார் உணவு ஆலோசகர் சங்கீதா.

பாட்டி வைத்தியம்

*அகத்தி கீரைச்சாற்றில் கடல் சங்கை இழைத்து மருக்கள் மீது தடவினால் விரைவில் உதிர்ந்து விடும்.

*அருகம்புல் வேர், சிறியாநங்கை வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குணமாகும்.

*எலுமிச்சை பழச்சாற்றில் தேன் கலந்து முகத்தில் பூசி வந்தால் தோல் சுருக்கம் மறையும்.

*எலுமிச்சம்பழச்சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் மறையும்.

*எலுமிச்சம்பழச் சாற்றில் லவங்கப் பொடியைக் கலந்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறையும்.

*நல்லெண்ணெய்யை கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் கலந்து பருக்கள் மீது பூசி வந்தால் விரைவில் மறையும்.

*குப்பை மேனி கீரையை பொடி செய்து தினமும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் இளமையில் ஏற்படும் தோல் சுருக்கத்தை தவிர்க்கலாம்.

*கொத்தமல்லியை அரைத்து 2 நாள்களுக்கு ஒரு முறை முகத்தில் தடவினால் பருக்கள் மறையும்.

*சோற்றுக் கற்றாழையின் சாறை பருக்கள் மீது தடவி வந்தால் பருக்கள் உதிர்ந்து தோல் மென்மை அடையும்.

*முகத்தில் தேவையற்ற முடி வளர்வதைத் தடுக்க கஸ்தூரி மஞ்சள் பயன்படுத்திக் குளிக்கலாம்.

நன்றி தமிழ் முரசு
Engr.Sulthan

Read more...

13 + ல் எதை சேர்ப்பது என்பதை தீர்மானிக்கவே பாராளுமன்றத் தெரிவுக்குழு . ஜனாதிபதி

13வது பிளஸ்ஸுல் எதை உள்ளடக்குவது என்பது பற்றி தீர்மானிக்கவே பாராளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இன்று (30) அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பின்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார்.

அங்கு தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் ஜனாதிபதி மேலும் கூறியதாவது,

13வது பிளஸ் என்ற விடயத்தை நான் நேற்று இன்று அல்ல தொடர்ந்தும் கூறி வருகிறேன். மஹிந்த சிந்தனை திட்டத்திலும் உள்ளடக்கியுள்ளேன்.

13வது பிளஸ் திட்டத்தில் எதனை உள்ளடக்குவது என்பது தொடர்பில் தீர்மானிக்கவே பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்துள்ளேன்.

எனவே எதிர்கட்சிகள் சற்று பொறுப்புடன் சிந்தித்து பாராளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டும். இல்லையேல் பிரச்சினைக்கு தீர்வு பெறுவது தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படக்கூடும்.

இது ஊடகங்களினதோ, ஜனாதிபதியினதோ, எதிர்கட்சித் தலைவரினதோ தனிப்பட்ட பிரச்சினை அல்ல. நாட்டு மக்களின் தேசியப் பிரச்சினை. இதற்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

அதனால் விரைவில் இது தொடர்பில் தெளிவுபடுத்த பாராளுமன்றில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களை விரைவில் நான் சந்திக்க உள்ளேன்.

பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் அனைத்துக் கட்சிகளும் கூடி 13வது பிளஸ்ஸில் இவற்றைதான் உள்ளடக்க வேண்டும் எனக் கூறினால் நான் அதனை செயற்படுத்துவேன்.

இது இவ்வாறிருக்கையில் சில ஊடகங்கள் நாடு தொடர்பில் சர்வதேசத்திற்கு தவறான தகவல்களை வழங்கி வருகின்றன. இந்த ஊடகங்கள் நாடு தொடர்பில் நினைத்து பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

ஊடகங்கள் நினைத்தால் 6 மாதங்களுக்குள் இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முடியும். ஆனால் நாடு தொடர்பில் முதலில் சிந்திக்க வேண்டும்.

எனவே அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலமே தேசியப் பிரச்சினைக்கு உரிய தீர்வை விரைவில் பெற முடியும்.

மேலும் இந்தியாவுடன் 13ஆவது திருத்தச்சட்டம் குறித்து கலந்துரையாடியுள்ளபோதிலும், அரசியல் தீர்வு பற்றிய இறுதி முடிவினை நாடாளுமன்ற தெரிவுக்குழுவே தீர்மானிக்கும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் அங்கத்துவர்களை இணைத்துக்கொள்வது தொடர்பாக அனைத்துக்கட்சி உறுப்பினர்களையும் விரைவில் சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

விற்பனைக்காக ஹெரோயின் வைத்திருந்த குற்றவாளிக்கு மரண தண்டனை

ஹெரோயின் போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்த ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி பத்மன் சுரசேன பி.சுரசேன குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

2008 செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி கொழும்பு - பௌத்தாலோக்க மாவத்தை பகுதியில் வைத்து ஆறு கிலோகிராம் ஹெரோயினுடன் குறித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது பிரதிவாதிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டதால். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Read more...

‘தேசத்திற்கு மகுடம்' கண்‌காட்சி பெப். 4ஆம் திகதி ஆரம்பம்

தேசத்திற்கு மகுடம்' தேசிய அபிவிருத்தி கண்காட்சி அநுராதபுரம் மாவட்டத்திலுள்ள தந்திரிமலை, ஓயாமடு பிரதேசத்தில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ளது.

தேசிய கண்காட்சி மற்றும் அதனை முன்னிட்டு முன்னெடுக்கப்படவுள்ள பாரிய அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

தந்திரிமலை பகுதியிலுள்ள 600 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெறவுள்ள இக் கண்காட்சியில் அரச மற்றும் தனியார் துறையினரின் பங்களிப்புக்களுடன் ஆயிரத்திற்கும் அதிகமான காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி மாலை ஜனாதிபதி அவர்களினால் இக்கண்காட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் காலை 8.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணிவரை பொது மக்களின் பார்வைக்காக கண்காட்சி கூடங்கள் திறந்திருக்கும்.

பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும் கண்காட்சியை இலவசமாக பார்வையிட தேவையான சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளதுடன் ஏனையோர் நுழைவாயில் தேசத்திற்கு மகுடம் அபிவிருத்தி சீட்டை பெற்றே நுழைய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசத்திற்கு மகுடம்(தயட்ட கிருள) கண்காட்சியை முன்னிட்டு அநுராதபுரம் மாவட்டத்தில் 25 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் பாரிய அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக கண்காட்சியின் ஏற்பாட்டுக் குழுவின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

Read more...

கள்ளக்காதலியின் கரம்பிடிக்க வெள்ளைவேன் கடத்தல் நாடகமாடியவர் அச்சுவேலியில் கைது.

இனந்தெரியாத சிலரால் கடத்தப்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட கொழும்பு மாநகரபை மற்றும் பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றி வந்த சத்தியசீலன் பாக்கியராஜ் என்ற நபரை கடந்த 23ஆம் திகதி இரவு அச்சுவேலிப் பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மாநகரபை மற்றும் பல நிறுவனங்களின் மொழிபெயர்ப்பாளராக கடமையாற்றும் இவர், விடுமுறையை கழிப்பதற்காக திருகோணமலைக்கு சென்றபோது இனந்தெரியாதோர் சிலரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டதாக அவரது மனைவி திருகோணமலை, துறைமுகப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 13ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.

இதனையடுத்து, திருகோணமலை பிரிவு பிரதி பொலிஸ் மா அதிபர் ரவீந்திர வைத்தியலங்கார மற்றும் திருகோணமலை பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் பந்துல விஜயவர்தன ஆகியோரின் பணிப்புரைக்கமைய குற்றவியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் அநுர பிரேமசந்த மேற்கொண்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது, காணாமல் போனதாக கூறப்பட்ட சத்தியசீலன் பாக்கியராஜ்pன் தொலைபேசியை கொண்டு நவீன சாதனங்களின் உதவியுடன் அவர் இருக்குமிடத்தை கண்டடிந்த பொலிஸார் அவரை செய்து செய்துள்ளனர்.

தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளிடம் காணாமல் போனது போன்று நடித்த பின்னர் அச்சுவேலி பிரதேச பெண்ணொருவரை திருமணம் செய்ய அவர் தயாராகியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

சத்தியசீலன் பாக்கியரா திருமணம் செய்யவிருந்த பெண்மனியின் தயாரே, இது தொடர்பான வாக்குமூலத்தை அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபாலி பி.நவரம்பாவனவின் அறிவுறுத்தலுக்கிணங்க பொலிஸ் இன்ஸ்பெக்டர் கே.எம்.நந்தல மற்றும் ஐ.சுரேஷ் குமார் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

பாக்கியராஜ் இலங்கையில் கைது செய்யப்பட்டமையினால், உண்மை வெளிவந்துள்ளது. ஆன்றில் அவர் வெளிநாடு ஒன்றுக்கு தப்பிச்சென்றிருந்தால் , நிலைமைகள் எவ்வாறு இருந்திருக்கும் என்பது யாரும் அறிந்ததே.

Read more...

பிள்ளையானை எச்சரிக்கின்றார் கருணா!

கிழக்கு மாகாண முதல்வர் சந்திரகாந்தன், மாகாணங்களுக்கு காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்று முன்வைத்துள்ள கோரிக்கை அவருக்குப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) எச்சரித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவது போன்று காணி, காவல்துறை அதிகாரங்களை அரசாங்கம் ஒருபோதும் மாகாணங்களுக்கு வழங்காது என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களுக்கு காவல்துறை அதிகாரங்கள் எதற்குத் தேவைப்படுகின்றன என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் வாக்குகளைக் குறிவைத்தே இவ்வாறு கோரிக்கைகளை விடுகின்றனர்.

கிழக்கு முதல்வர் சந்திரகாந்தன் கூட காணி, காவல்துறை அதிகாரங்கள் தேவை என்று கோரியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகித்துக் கொண்டே அதனுடன் முரண்பட்டால், அது சந்திரகாந்தனுக்கும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

Read more...

யாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்?

கடந்தவாரம் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்த இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்கள் சொன்ன விடயம் யாது? யாழ்பாணம் சென்ற அவர் தமிழ் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் நியாயமானதும், என்னவென்று யாருக்கும் தெரியாததும், எவரும் இதுதான் என்று கூற தயங்குவதுமான தீர்வு பற்றி ஏதாவது திருவாய்மலந்தருளுவார் என பலரும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அப்துல் கலாம் அவர்களோ அங்கு குழுமியிருந்த யாழ்பாணத்து ஆசான்களான பேராசிரியர்கள், பெரியார்கள் உட்பட மாணவர்கள் யாவருக்கும் ஒரு சில போதனைகளை புகட்சிச் சென்றார். அதுவும் அதனை அவர் சாதாரண பேச்சு வடிவல் பேசிச் சென்றிருக்கவில்லை தனது போதனைகள் இவர்களின் மனங்களில் பசுமரத்து ஆணியாக பதியவேண்டும், அதனை அவர்கள் பின்பற்றவேண்டும் என்ற சிந்தனையுடன், நான் சொல்வதை நீங்கள் மீண்டும் சொல்லி உங்கள் மனங்களில் பதிவு செய்து கொள்ளுங்கள், என பவ்வியமாக அவர்களை தனது வசனங்களை மீளவும் கூறச்செய்தார்.

அவர் அங்கு இறுதியாக கூறியது யாதெனில் என்னுடைய இதயத்தில் எனது தேசியக் கொடி பறந்து கொண்டிருக்கின்றது என்ற வாக்கியமாகும். (My national flag flies in my heard )

அத்துடன் அவர் போதித்தது, வன்முறையை மறக்கவேண்டும், அமைதியை நாடவேண்டும், எனது நாடு என்ற எண்ணம்வேண்டும், நாட்டுக்காக உழைப்பேன் என்ற உறுதிவேண்டும், நேர்மை வேண்டும், கடின உழைப்பு வேண்டும், இலக்கு வேண்டும் என அடுக்கி கொண்டே போகலாம்.

ஓட்டு மொத்தத்தில் அவர் கூறியது, இலங்கையர்களாகிய நீங்கள் வெளியார்வந்து உங்களுக்கு யாவற்றையும் செய்து தரவேண்டும் என்று பார்த்துக்கொண்டு இருக்ககூடாது உங்களை நாட்டை முன்னனேற்ற நீங்களே உழைக்கவேண்டும் என்ற செய்தியாகும்.

ஆனால் அவர் அங்கு சுமார் 40 நிடங்கள் பேசியிருந்தார், அதிலே உள்ள சில விடயங்ளை தணிக்கை செய்து சில ஊடகங்கள் காணஒளியாக வெளியிட்டிருந்தன , மேலும் அப்துல்கலாம் அவர்கள் தனது கணித ஆசிரியர் யாழ்பாணத்தவர் என்ற செய்தியை சொல்லியிருந்ததை தலைப்புச்செய்தியாக வெளியிட்டு தற்பெருமை பேசிக்கொண்டன. இவற்றுக்கு அப்பால் அப்துல்கலாம் அவர்கள் ஐந்து கேள்விகளை தன்னிடம் கேட்கலாம் என மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கியபோது, ஒருவரைத்தவிர எவரும் கேள்வி கேட்கவில்லை என்பனவாகும்.

திரு அப்துல் கலாம் அவர்கள் சார்ந்த அரசியல் கட்சியின் மீதான விருப்பு, வெறுப்பு, விமர்சனங்களுக்கு அப்பால், அவர் உயர்ந்த மனித பண்புகள் கொண்ட , சிறந்ததோர் பார்போற்றும் விஞ்ஞானி அவார். அவர் யாழ்பாணத்திற்கு வந்து தனக்கு பேசக்கிடைத்த அத்தனை நிமிடங்களிலும் கூறிய வாசகங்களில் சிலவற்றை அப்படியே கீழே தருகின்றோம். இதிலிருந்து உலகம் இன்று தமிழரிடமிருந்து எதை எதிர்பார்கின்றது என்பதனை உணர முடியும்.


இந்த உலகத்திலே நம்மிடையே பல பிரச்சினைகள், சுயநலம், நம்பிக்கையின்மை, சமூகப்பொருளாதார வேறுபாடு, கோபம், வெறுப்பு, இவற்றின் மூலம் வன்முறை, இப்படிப்பட்ட சூழ்நிலையில் புத்ததவஸ்தலம் என்ன செய்தியை பரப்புகின்றது என்றால் நாம் ஒவ்வொரு நான் , எனது என்ற எண்ணத்தை நமது மனதில் இருந்து நீக்கினால், நம்மிடையே உள்ள தற்பெருமை மறையும் , தற்பெருமை மறைந்தால் மனிதர்களுக்கு இடையிலான வெறுப்பு அகலும், வெறுப்பு நம் மனதிலிருந்து அகன்றால், வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு அகலும், வன்முறை எண்ணங்கள் நம்மை விட்டு மறைந்தால் அமைதி நிலவும், நம்மனதை தழுவும். வன்முறை மறையும்.

நான் பிறந்தேன் அரும்பெரும் சக்தியுடன்
நான் பிறந்தேன் நற்பண்புகளுடன்
நான் பிறந்தேன் கனவுடன்
வளர்ந்தேன் நல்ல எண்ணங்களுடன்
நான் பிறந்தேன் உயர் எண்ணங்களை செயல்படுத்த
நான் பிறந்தேன் ஆராய்ச்சி உள்ளத்துடன்
நான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்க
நான் பிறந்தேன் ஆகாயத்தின் உச்சியில் பறக்க
நான் பூமியில் ஒருபோதும் தவழ மாட்டேன்
தவழவே மாட்டேன்
ஆகாய உச்சிதான் என் லட்சியம்
பறப்பேன் பறப்பேன் பறந்துகொண்டே இருப்பேன்

பறக்கவேண்டும் என்ற உணர்வு வாழ்வில் பெரிய லட்சியத்தை அடைய வழிவகுக்கும்.
அந்த லட்சியத்தை அடைய என்ன செய்ய வேண்டும். நீ யாராக இருந்தாலும்
பரவாயில்லை, உன்னால் வெற்றியடைய முடியும்.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை,
நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும்
உன் உழைப்பால், நீ எண்ணியது உன்னை வந்து சேரும்.

என்னுடைய கருத்து என்னவென்றால்,

உன் உள்ளத்தில் லட்சிய ஒளி பிரகாசிக்கட்டும்,
இலட்சியத்தை அடைய அறிவாற்றலை பெருக்கு,
அதை அடைய உழைப்பு முக்கியம்,
உழை, உழைத்துக்கொண்டே இரு.

இத்துடன் விடாமுயற்சி உனக்கிருந்தால் நீ யாராக இருந்தாலும் வெற்றி உன்னை வந்து சேரும்.


இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாதவர்.

அதாவது தோல்விமனப்பாண்மைக்கு வெற்றி தோல்வியை கொடுத்து வெற்றியடைய வேண்டும் என்பதுதான் இந்த திருகுறலின் மூலக்கருத்தாகும்

இந்த நூற்றாண்டில் அகிம்சா தர்மம் என்ற கத்தியில்லா, ரத்தமில்லா ஆயுதத்தால் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்று உலகிற்கே அகிம்சா தர்மத்தை போதித்தவர் மகாத்மா காந்தியடிகள்.

ஆக ஒவ்வொருவரும் ஒருவகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகமே படிக்க வைப்பது இளைளுர்களாகிய உங்கள் கைகளில் தான் சிந்தனை செயல்களில் தான் உள்ளது

நீங்கள் அனைவரும் தனித்துவமானவர்கள். ஆனால் இந்த உலகம் இரவும் பகலும் கடுமையாக உழைத்துக்கொண்டு இருக்கிறது, ஏனென்று தெரியுமா, உங்களையும் மற்றவர்களைப்போல் ஆக்குவதற்காக.

அந்த மாய வலையில் நான் விழமாட்டேன், நான் தனித்துவமானவன் என்பதை நிருபிப்பேன் இருப்பேன் என்பதை நிரூபிப்பேன் என்று நீங்கள் நினைத்த அடுத்த வினாடி வரலாற்றில் உங்கள் பக்கம் எழுதப்பட நீங்கள் விதை விதைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.

இந்த சமயத்தில் நான் ஓரு முறை இந்திய பாராளுமன்றத்தில் இயற்றி பாடிய
கவிதை வரிகள் என் நினைவுக்கு வருகிறது. அந்தக் கவிதையின் தலைப்பு
இலட்சியம். நான் சொல்வதை திரும்ப சொல்லவும்


இலட்சிய தாகம்.

நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா
எங்கிருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா

நான் தோண்டிக்கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா

நான் பெருங்கடலில் நீந்திக் கொண்டே இருக்கிறேன்,
எங்கிருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா

இறைவா, இறைவா, நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும்,
அறிவுப்புதையலையும், இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக.

இந்த கவிதையின் கருத்து

அதாவது, நமது எண்ணம் உயர்வாக இருந்தால், அரும் பெரும் இலட்சியங்கள்
தோன்றும், பெரும் இலட்சியம் இருந்தால் அருமையான எண்ணம் வரும். எண்ணம்
உயர்ந்தால் நம் பணிகள் எல்லாம் உயர்ந்ததாக இருக்கும்.


I will have a goal and work hard to achieve that goal.

I realize small aim is a crime.

I will work with integrity and succeed with integrity

I will be a good member of my family, a good member of the society, a good member of the nation and a good member of the world.

I will always protect and enhance the dignity of every human life without any harm

I will always remember that "Let not my winged days, be spent in vain".

I will always work for Clean Green Energy and Clean planet Earth.

As a youth of Nation Sri Lanka, I will work and work with courage to achieve success in all my tasks and enjoy the success of others.

My national flag flies in my heard



Read more...

Sunday, January 29, 2012

புலிகளின் புதிய தலைவர் நெடியவனைக் கைது செய்ய சர்வதேச பிடியாணை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவராக நோர்வேயில் இருந்து செயல்பட்டு வருகின்ற நெடியவனுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரின் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நோர்வேயில் புலிகள் இயக்கத்துக்கு நிதி சேகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். கறுப்புச் சந்தை வியாபரத்திலும் சம்பந்தம் உடையவர் என்று சந்தேகிக்கப்படுகின்ற இவரது சொந்த பெயர் சிவபரன் பேரின்பநாயகம்.

1976 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வட்டுக்கோட்டை.யில் பிறந்த இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வயதில் சேர்ந்தவர். அங்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு மிக நெருக்கமான ஒருவரhக இருந்துள்ளார்.

கே.பி என்று அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதன் இலங்கைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் புலிகள் இயக்கத்தின் புதிய தலைவர் என்று சுயம் பிரகடனம் செய்து கொண்டார் நெடியவன்.

பயங்கரவாதத்தோடு சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக இவரை கைது செய்கின்றமைக்கு உதவி செய்ய வேண்டுமென சர்வதேச பொலிஸாரிடம் இலங்கை கோரி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read more...

இந்தியாவின் சைக்கிளை வைத்து மிரட்டி அரசியல் செய்யும் ஈ,பி..டி.பி- அதிகாரிகள் மௌனமாயினர்

இந்திய அரசினால் வழங்கப்படும் துவிச்சக்கர வண்டிகளை வைத்து மிகவும் கேவலமான ஒரு அரசியலை ஈ.பி.டி.பி மேற்கொண்டு வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளதோடு இவ்வாறான செயற்பாடுகளுக்கு அரச அதிகாரிகளும் துணைபோவதாக கவலை தெரிவித்துள்ளனர்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களுக்கு 10 ஆயிரம் துவிச்க்கர வண்டிகளை வழங்க இந்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்திய அரசினால் வழங்கப்படும் 10 ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளுக்கான பயனாளிகள் தெரிவினை பிரதேச செயலகங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் உட்புகுந்த ஈ.பி.டி.பி தனக்கு இசைவானவர்களையும் தனது கட்சிக்கு வேண்டியவர்களுக்கும் துவிச்சக்கர வண்டிகளை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றது.

இதன் ஒரு கட்டமாக நேற்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பகுதிகளில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்களை தமது கட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு பிரதேச செயலகத்தை வற்புறுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் இத்தகவலை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

இதன்படி நேற்று காலை 10 மணியளவில் பொது மக்கள் கட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளதாக தெரியவருகின்றது. இவ்வாறு இந்திய அரசின் துவிச்சக்கர வண்டிகளை வைத்து மிகவும் கேவலமாக அரசியலை ஈ.பி.டி.பி மேற்கொண்டு வருவதாகவும் இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுகம் கேட்பராற்று விட்டிருப்பதாகவும் அவர்கள் விசனம் தெரிவித்தனர்.

மேலும் இவற்றை அரசாங்கம் தட்டிக்கேட்க வேண்டும் என்றும் குறிப்பாக பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு இவ்வுதவிகள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும அவர்கள் கேட்டுள்ளனர்.

Read more...

முன்னாள் போராளிகளை அரசு ஒருபோதும் கைவிடாது- புனர்வாழ்வு அமைச்சர் கஜதீர

முன்னாள் போராளிகளை நாம் ஒரு போதும் கைவிடமாட்டோம் என்றும் அவர்களுக்குரிய சகல வசதிகளையும் செய்து கொடுப்போம் என்று சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திர சிறி கஜதீர தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற முன்னாள் போராளிகளுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.அரச முகவர் திருமதி இமெல்டா சுகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்

முன்னாள் பேராளிகள் சமூகத்தில் இணைந்துள்ளனர். அவர்கள் தற்போது பல்வேறு பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். இவ்வாறு அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நாம் அறிவோம் அவற்றை தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் விரைவில் மேற்கொள்வோம்.

நீங்கள் எங்களைத் தேடி வராவிட்டாலும் நாங்கள் உங்களைத் தேடி வருவோம். உங்களுக்கான சகல உதவிகளையும் மேற்கொள்ள அரசாங்கம் தாயராக உள்ளது.

மேலும் சமாதானத்தை கட்டியெழுப்பும் நண்பர்கள் எனும் தலைப்பில் முன்னாள் போராளிகளை இணைத்து அமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளோம். இதன் மூலம் அவர்களுக்கான உதவிகளையும் மேற்கொள்ளவுள்ளோம்.

எதிர்வரும் 2013ம் ஆண்டில் வடக்கின் அபிவிருத்திக்காக மட்டும் 252 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் வடபகுதி முற்றாக அபிவிருத்தி செய்யப்படும் என்றார்.


Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com