Saturday, December 31, 2011

பிரபாகரனின் படத்தை பிராண்ஸ் முத்திரை வெளியிட்டதாம். புலிகளின் புதுப் புளுடா!

பிராண்ஸ் அரசின் அங்கீகாரத்துடன் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் புகைப்படம் உட்பட அவ்வியக்கத்தின் சின்னங்களும் பிராண்ஸ் தபாலகத்தினால் முத்திரைகள் வெளியாகியுள்ளது என புலிகளின் இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தது.

மாவீரர் தின வசூலிப்புக்கள் முடிவடைந்தவுடன் அடுத்த வசூலிப்புக்கு தயாராகும் புலிகள் விடுத்த புளுடாவே இந்த முத்திரைக் கதை.

பிபிசி யிடம் சம்பளமும் புலிகளிடம் கிம்பளமும் வாங்கும் செய்தியாளர்களும் இம்முத்திரைக் கதைக்கு வலுச்சேர்த்துள்ளமை ஒன்றும் புதிய விடயம் அல்ல.

இவ்வாறான புலுடாக்களை புலிகள் விடும்போது பிபிசி யில் இருந்து கொண்டு புலிகளிடம் கிம்பளம் வாங்குவோர் அச்செய்திகள் எவ்வாறு மெருகூட்டுகின்றனர் தெரியுமா? முதலில் புலிகளின் ஊதுகுழல் இணையங்களில் செய்தியை வெளியிடச் சொல்வர். பின்னர் அச்செய்திகளை எடுத்துக்கொண்டு இணையங்கள் இவ்வாறு செய்தி தெரிவிக்கின்றது என உயர் அதிகாரிகள் மற்றும் ராஜதந்திரிகளிடம் கருத்துக்கேட்பர். அது கொடர்பாக வருகின்ற கருத்தை தமக்கேற்றவாறு பிரசுரிப்பர். அவ்வளவுதான். பின்னர் புலிவால் இணையங்கள் யாவும் பிபிசி யின் செய்தியை காவுவர்.

பிரபாகரனின் கொத்துப்படாத மண்டையை கொண்ட படத்துடன் முத்திரை ஒன்று வெளியாகியுள்ளது உண்மை. ஆனால் அது பிராண்ஸ் நாட்டு அரசாங்கத்தின் அங்கீகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் தமிழ் மக்கள் ஏமாளிகள், நாம் தொடர்ந்தும் ஏமாற்றுவோம், எம்மை யாரும் தடுக்க முடியாது என புலிகள் கங்கணம்கட்டி நிற்பதற்குச் என்பதற்கு சான்று.

பிராண்சில் தபால் திணைக்களத்தில் தாம் விரும்பும் படத்துடன் முத்திரையை கொள்வனவு செய்யக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதை நேரடியாகவும், இணையத்தளம் ஊடாகவும் கொள்வனவு செய்ய முடியும். பிறந்த தினச் வாழ்த்துக்கள், கல்லயாண அழைப்பிதழ்கள், கல்யாணநாள் வாழ்த்துக்கள் போன்ற பல்வேறு ஞாபக நிகழ்வுகளுக்காக இவ்வாறான முத்திரை தலைகளை கொள்வனவு செய்யும் கலாச்சாரம் ஒன்று பிராண்ஸ் நாட்டு பிரஜைகளிடையே உண்டு.

அதற்கான இணையத்தள முகவரியை இங்கு கிளிக்செய்து கண்டு கொள்ளுங்கள்.

அத்துடன் இவ்வாறு குழந்தைகள் மற்றும் திருமணமான ஜோடிகளின் புகைப்படத்துடன் முத்திரை தலைப்புக்களை இங்கு காண்கின்றீர்கள்.இந்த இடைவெளியினுள் புகுந்த புலிகள் தமிழரை ஏமாற்ற எடுத்த நடவடிக்கைக்கு விநாயகம் குழு , நெடியவன் குழு என்ற வித்தியாசம் இல்லாமல் தற்போது பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்றது. ஆனால் முத்திரை விற்பனையாகி பணம் பங்கிடுவதில் பிரச்சினை எழும். அத்தருணத்தில் இதன் போலித்தன்மையை அவர்களே வெளியிடுவர்.

இதேநேரம் இவ்வாறான முத்திரைகளை வெளியிடமுடியும் என்பதனை உறுதிப்படுத்துவதற்காக புலம்பெயர் தமிழ் மக்களின் நலன் விரும்பிகள் இணைந்து தமிழர் விடுதலைப் கூட்டணியின் செயலாளர் நாயகம் அமரர் அ.அமிர்தலிங்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் உமா மகேஸ்வரன்(புளொட்), தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம் (ரெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் க.பத்மநாபா (ஈபிஆர்எல்எவ்) ஆகியோருக்கான முத்திரைகள் பிரான்சில் வெளியிடப்பட்டுள்ளது.

Read more...

ஜனாதிபதி நினைத்தால் தமிழ் தேசியக் கூட்ட- மைப்பை இல்லாதொழிக்க முடியும். அரியநேந்திரன்

மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 ம் கிராமத்தில் தாய்மார் பள்ளியில் நேற்று விழிப்பூட்டல் கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து கொண்ட மட்டு பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன், இலங்கையின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வொன்றினை ஜனாதிபதி வழங்குவாராயின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லாது போகும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒன்று இல்லாது போகும் என்ற அச்சத்தில் அதன் பா.உ உள்ளனர் என்பதற்கு அரியநேந்திரனின் பேச்சு சான்று பகர்ந்துள்ளது.

Read more...

ஐதேகவில் ஜனநாயகம் காணப்படின் மக்கள் கல்லை கையில் எடுக்க வேண்டிவராது

எதிர்கட்சியில் தற்போது ஜனநாயகம் இல்லை எனவும் அழிவே அங்கு செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன தெரிவித்துள்ளார். எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆட்சி அதிகாரம் கிடைத்தால் நாட்டில் தற்போது காணப்படுவதைவிட அதிகம் அழிவை நோக்கிய வேலைத்திட்டங்களை கண்டுகொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சிக்குள் ஜனநாயகம் காணப்பட்டால் மக்கள் கல், கட்டைகளை கையில் எடுக்க மாட்டார்கள் என இன்று (31) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களை தெரிவு செய்ய அண்மையில் இடம்பெற்ற தேர்தல் நியாயமானதல்ல எனவும் அதன் பொறுப்பை கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் மைத்திரி குணரட்ன குறிப்பிட்டார்.

அத்துடன் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் நடவடிக்கை எடுத்தால் அதற்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டி போராடவுள்ளதாகவும் மைத்திரி குணரட்ன தெரிவித்தார்.

Read more...

மரண நிமிடங்களிலும் மலர்ந்த புன்னகை!

சீனாவில், மரண தண்டனைகளுக்கு பஞ்சம் இல்லை. மரண தண்டனை என்றால், நம் நாட்டை போல் தூக்கிலிடும் வழக்கம் எல்லாம் இங்கு இல்லை. விஷ ஊசி போடுவது அல்லது தலையின் பின் பக்கத்தில் துப்பாக்கியால் சுடுவது ஆகிய இரண்டு முறைகளில் மரண தண்டனை இங்கு நிறைவேற்றப் படுகிறது.

மனித உரிமை ஆர்வலர்களும், சர்வதேச நாடுகளும், காட்டுக் கத்தலாக கத்தியும், அதை சற்றும் பொருட்படுத்தாமல், மரண தண்டனையை சர்வ சாதாரணமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது சீனா. கடந்த, 2005ல் மட்டும், 10 ஆயிரம் பேருக்கு இங்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் நடவடிக்கைகள், வெளி உலகத்துக்கு அதிகம் தெரியாமல் ரகசியமாக நடக்கும். இதையும் மீறி, ஒரு சில தண்டனைகள் பற்றிய விஷயங்கள், வெளி உலகத்துக்கு கசிந்து கொண்டு தான் இருக்கின்றன.

போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நான்கு பெண்களுக்கு, 2003ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது, அந்த நான்கு பெண்களின் கடைசி நிமிடங்கள் ஒவ்வொன்றும் கேமராவில் பதிவு செய்யப்பட்டன. அந்த புகைப்படங்கள், ஒன்பது ஆண்டுகளுக்கு பின், தற்போது, ஹாங்காங்கை சேர்ந்த ஒரு, "டிவி' சேனலில் வெளியாகி, சர்வதேச அளவில் பரபரப்பையும், பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

மா ஷிங்குய், லி ஜூகுவா, டாய் டொங்குய், ஹி ஜியுலிங் என்ற நான்கு பெண்களுக்கும், போதை மருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்கள், வுகான் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

தண்டனை நிறைவேறுவதற்கு முதல் நாள் இரவே, இவர்களின் கடைசி நிமிடங்களை பதிவு செய்வதற்கு கேமராமேன்கள் வந்து விட்டனர். முதல் நாள் இரவு, 9:00 மணிக்கு துவங்கி, தண்டனை நிறைவேற்றப்படும் அடுத்த நாள் காலை, 7:21 வரை, அவர்களின் ஒவ்வொரு நிகழ்வும் பதிவு செய்யப்பட்டன. இந்த ஒவ்வொரு நிகழ்விலுமே, நான்கு பெண்களுமே, சாவைக் கண்டும் சற்றும் கலங்காமல், புன்னகையுடனேயே காணப்பட்டனர்.

முதல் நாள் இரவில் நான்கு பேருமே, தனித் தனி அறைகளில் அடைக்கப்பட்டு இருந்தனர். அவர்களின் கைகளிலும், கால்களிலும் விலங்கிடப்பட்டிருந்தது. அந்த இரவுப் பொழுதில், தண்டனை நிறைவேற்றப்படும் போது அணிய வேண்டிய உடையை, தானே தேர்வு செய்து அணிந்து கொண்டார், டொங்குய். இதன்பின், இரவு உணவு சாப்பிட்டார். இது, அவரின் கடைசி உணவு என்பதால், அங்கு இருந்த பெண் அதிகாரியே, அவருக்கு உணவை ஊட்டி விட்டார். சிரித்த முகத்துடன், அதை மகிழ்ச்சியாக சாப்பிட்டார், டொங்குய்.

இரவு, 10:15 மணிக்கு மற்றொரு அறையில், லி ஜூகுவாவின் கடைசி ஆசை, எழுத்துக்களாக பதிவு செய்யப்பட்டன. தரையில் விரிக்கப்பட்டிருந்த மெத்தையில் புன்னகையுடன் அமர்ந்தபடி, தன் கடைசி ஆசைகளை அவர் கூற, அதை சிறை அதிகாரி, கனத்த இதயத்துடன் பதிவு செய்து கொண்டார். தண்டனை பெற்றவர்களில், மிக இளையவரான, 25 வயது ஜியுலிங்கின் அறையிலும் இதே காட்சி காணப்பட்டது. சிறிய ஸ்டூலில் சிரித்தபடி அமர்ந்திருந்த ஜியுலிங்கிற்கு, பெண் அதிகாரி, கடைசி உணவை ஊட்டி விட்டார்.

அதிகாலை 4:00 மணிக்கு, நான்கு பேரும், ஒரே அறைக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு பெண் காவல் அதிகாரிகளும், சக கைதிகளும் அமர்ந்திருக்க, தண்டனை நிறைவேற்றப்படும் இடத்துக்கு செல்வதற்கான ஷூவை, ஜியுலிங்கிற்கும், மற்றவர்களுக்கும், பெண்களுக்கு அதிகாரிகள் அணிவித்து விட்டனர். அப்போது, மிகவும் கலகலப்பாக காணப்பட்ட ஜியுலிங், காவல் அதிகாரிகளுடனும், சக கைதிகளுடன், ஜோக் அடித்தபடி இருந்தார்.

பொழுது புலர்ந்தது. அந்த நான்கு பெண்களுக்கு மட்டும், "அடுத்த நாள் பொழுது புலர்வதை காண்பதற்கு, நாம் உயிருடன் இருக்கப் போவது இல்லை...' என்ற உண்மை உள்ளுக்குள் உறைத்தது.

அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், சுறுசுறுப்பாக குளித்து முடித்து, புன்னகையை உதட்டில் உறையவிட்ட படியே, கடைசி பயணத்துக்கு தயாராயினர். காலை, 7:00 மணிக்கு நான்கு பேரும், மைதானத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுடன், அன்று தண்டனை நிறைவேற்றப்படவிருந்த மேலும், 20 கைதிகள் காத்திருந்தனர். அனைவரும் வரிசையாக நடத்தி, அழைத்துச் செல்லப்பட்டனர்.

மற்ற மூன்று பேரும், சிரித்த முகத்துடன் அமைதியாக நடந்து சென்று கொண்டிருக்க, வயதில் இளையவரான ஜியுலிங் முகத்தில் மட்டும், புன்னகை மறைந்து, கலவர ரேகைகள் சூழ்ந்தன. நடந்து செல்லும் போதே, அவரது மனதில் மரண பீதி ஏற்பட்டது.

வயிற்றுக்குள் இனம் புரியாத, ஏதோ ஒரு பிரளயம் ஏற்பட, கண்களை முட்டிக் கொண்டு கண்ணீர் எட்டிப் பார்க்க, அழுகையை கட்டுப்படுத்த முயன்று, முடியாமல் தோற்றுப் போய், அடக்கி வைத்திருந்த அத்தனை உணர்ச்சிகளும், வாய் வழியாகவும், கண்கள் வழியாகவும், அழுகையாகவும், கண்ணீராகவும் வெடித்துச் சிதறின. மரணத்தை தழுவ மனமில்லாமல் வாய் விட்டு உரக்க அழுதார்.

குற்றவாளிகள் அனைவரும், வரிசையாக நிறுத்தப்பட்டனர். அவர்களுக்கு பின், தண்டனையை நிறைவேற்றுவதற்காக துப்பாக்கிகளுடன் போலீசார் தயாராக இருந்தனர்.

காலை, 7:21 மணிக்கு துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் வரிசையாக வெடிக்கத் துவங்கின. துப்பாக்கியில் இருந்து வெளியாகும் ஒவ்வொரு சப்தத்தின் முடிவிலும், ஒரு குற்றவாளி அலறித் துடித்தபடி மண்ணில் சாய்ந்தார். ஜியுலிங்கின் முறை வந்தது. கண்களை இறுக மூடி, கடைசி நொடிக்காக காத்திருந்தார். அவரது முகத்தில் அப்போது ஏற்பட்ட உணர்ச்சியை, எந்த வார்த்தையாலும் வர்ணிக்க முடியவில்லை.

சீன போலீசாரின் துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட, குண்டு எனும் உலோகப் பிசாசு, ஜியுலிங்கின் தலையின் பின்புறத்தில் பாய்ந்து, முன்புறம் வழியாக வெளியில் வந்தது. சில நொடிகளுக்கு முன் உயிருடன் இருந்த ஜியுலிங்கின் உடல், உயிரற்ற உடலாக மண்ணில் சாய்ந்தது. மனித நேயத்தையும், மனித உரிமை ஆர்வலர்களின் கூக்குரலையும், மவுனமாக்கி விட்டு, அந்த இடமே மயான அமைதியில் மூழ்கிப் போனது.

Read more...

ஓடும் ரயிலில் முதலிரவை கொண்டாடி அசத்திய ஒரு இளஞ்ஜோடி.

வழக்கமாக திருமணம் முடிந்த பிறகு வீட்டிலோ அல்லது ஓட்டலிலோ முதலிரவு நடைபெறும். ஆனால் கேரளாவில் வித்தியாசமாக முதலிரவை ஓடும் ரயிலில் ‘கொண்டாடி’ அசத்தியிருக்கிறார்கள். ஒரு இளஞ்ஜோடி கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து கேரள தலைநகர் திருவனந்தபுரத்திற்கு மாவேலி எக்ஸ்பிரஸ் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. தினமும் மாலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மறுநாள் காலை 7 மணியளவில் திருவனந்தபுரத்தை அடையும். நேற்று முன்தினம் இந்த ரயில் பையனூர் ரயில் நிலையத்தை அடைந்தது.

இந்த ரயிலில் எஸ் 8 கோச்சை பார்த்த பயணிகள் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இந்த கோச் முழுவதும் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. புதிய ரயில் பெட்டியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பயணிகள் விசாரித்த போது விஷயம் என்னவென்று தெரியவந்தது.ஆலப்புழா அருகே உள்ள களர்க்கோடு என்ற இடத்தைச் சேர்ந்த நாராயணன் நம்பூதிரி, சாவித்திரி தேவி தம்பதியினரின் மகன் ஹரீஷ் நம்பூதிரி. இவருக்கும் கண்ணூர் அருகே உள்ள பையனூரைச் சேர்ந்த சங்கரன் நம்பூதிரி, ரத்னமணி தம்பதியியரின் மகள் தீபாவுக்கும் நேற்று முன்தினம் காலையில் பையனூரில் திருமணம் நடந்தது.

மணமகனின் வீடும், மணமகளின் வீடும் வெகு தொலைவு என்பதால் திருமணம் முடிந்து முதலிரவை மணமகள் வீட்டிலேயே வைத்துக் கொள்ளலாம் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. ஆனால் மறுநாள் காலை 9 மணிக்குள் புதுமணத் தம்பதியினர் திருவனந்தபுரத்திலுள்ள மாப்பிள்ளை வீட்டுக்கு செல்லவேண்டும் என ஜோதிடர் கூறிவிட்டார். திருமணம் நடந்த அன்றே புதுமணத் தம்பதி மற்றும் திருமணத்திற்கு வந்த மணமகனின் உறவினர்கள் 70க்கும் மேற்பட்டோருக்கு மாவேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 8 கோச்சில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது.

அப்போது தான் மணமகன் ஹரீஷின் நண்பர்களுக்கு ஒரு ஐடியா உதித்தது. எஸ் 8 கோச் முழுவதிலும் மணமக்கள் மற்றும் திருமண வீட்டினரே இருந்ததால் ஒரு கூப்பேயை மணமக்களுக்காக முதலிரவு அறையாக மாற்ற தீர்மானித்தனர். உடனடியாக நண்பர்கள் அனைவரும் மங்களூர் சென்று ரயில் புறப்படுவதற்கு முன்பாக எஸ் 8 கோச்சை முதலிரவு அறையாக்கி விட்டனர். பின் பையனூரில் வைத்து மணமக்கள் மிகவும் சந்தோஷமாக ரயிலில் ஏறினர். ஜோதிடர் சொன்னபடியே நேற்று காலை 9 மணிக்குள் மணமக்கள் ஓடும் ரயிலில் முதலிரவை கொண்டாடிய வித்தியாசமான அனுபவத்துடன் திருவனந்தபுரத்தை அடைந்தனர்.

Read more...

TNA பா.உ கள் நால்வரை மத்திய குழுவில் இணைத்துக் கொண்டது இலங்கை தமிழரசுக் கட்சி.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் புதிதாக நால்வர் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். நேற்று கட்சியின் தலைவர் சம்பந்தன் தலைமையில் அவரது வீட்டில் இடம்பெற்ற ஒன்று கூடலில் இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், யோகேஸ்வரன், சரவணபவான், சிறிதரன் ஆகியோரே இவ்வாறு மத்திய குழு வில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளவர்களாவர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு போட்டிகள் நிலவிவருகின்றது. இப்போட்டி இலங்கை தமிழரசுக் கட்சிக்கும், முன்னாள் ஆயுதக் குழுக்களிடையேயே காணப்படுகின்றது. இந்நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி தம்மை பலப்படுத்தும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள ஆயுதக் குழுக்களைச் சாராத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கட்சியில் முக்கிய பதவிகளை வழங்கி கட்சியினுள் உள்வாங்கியுள்ளனர்.

இச்செயற்பாடுகள் கூட்டமைப்பினுள்ள காணப்படும் உட்கட்சி மோதலை மேலும் வலுவடையச் செய்யும் என எதிர்வுகூறப்படுகின்றது.

Read more...

Friday, December 30, 2011

டக்ளஸின் எடுபிடிகள் சபையில் இருக்கும் வரை அமர்வுகளின்போது அடிதடியே இடம்பெறுமாம்.

யாழ் மாநகர சபையின் அமர்வுகள் இன்று இடம்பெற்றபோது ஆழும் கட்சி உறுப்பினர்களிடையே இடம்பெற்ற கருத்து மோதல் அடிதடியில் முடிவடைந்துள்ளது. இந்நிலைமைகள் தொடர்பாக மாநகர சபையின் உறுப்பினர் மனுவல் மங்களநேசன் அவர்களிம் இலங்கைநெற் தொடர்பு கொண்டு கேட்டபோது டக்ளசின் எடுபிடிகள் மாநகர சபையில் இருக்கும் வரை இவ்வாறான நிகழ்வுகள் தவிர்க்க முடியாத ஒன்றாகபோகும் நிலையே காணப்படும் என்றார்.

மங்களநேசன் ஈபிடிபி அமைப்பின் மூத்த உறுப்பினர் ஆகும். இவர் கட்சியின் தலைமையை எதிர்த்து வெளியேறியுள்ளதுடன், டக்கிளஸ் தொடர்பான பல ரகசியங்களை அம்பலப்படுத்தப்போகின்றேன் என தெரிவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வடகிழக்கில் தமிழர் சுயாட்சி கேட்கின்றனர். சுயமாக மாநகர சபை ஒன்றை நிர்வகிக்க முடியாது , அமர்வுகள் இடம்பெறுகின்றபோது, கலகம் அடக்கும் மேலதிக பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டே வாதங்கள் இடம்பெறுகின்றது. இவ்வாறான நிலையில் இவர்களிடம் முழு நிர்வாகமும் ஒப்படைக்கப்பட்டால் எவ்வாறு இருக்கும் என ஆர்வலர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

Read more...

பிரபாகரனின் பிரதான மெய்பாதுகாவலருக்கு எதிராக இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்

புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்பாதுகாவலர்களின் பிரதானியாக செயற்பட்டவர் எனக் கருதப்படும் மண்ணிலவன் என்பவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (30) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபஷ் முன்னிலையில் சட்டமா அதிபர் இந்த குற்றப்பத்திகையை தாக்கல் செய்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

யுத்தத்தின் இறுதிக்கட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இவர் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மெய்பாதுகாவலர்களின் பிரதானியாகவும் அவருடைய தனியான பாதுகாப்பு பிரிவின் கட்டளையிடும் பொறுப்பாளராகவும் செயற்பட்டுள்ளதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபுக்கள் பாதுகாப்பு தொடர்பில் சந்தேகநபர் வெளிநாட்டவர்களிடம் பயிற்சி பெற்றுள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குற்றப்பத்திகை சமர்ப்பித்த பின்னர் சந்தேகநபரை எதிர்வரும் 10ஆம் திகதி வரை பூசா முகாமில் தடுத்து வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Read more...

ஏ.ரி.எம். இயந்திரம் ஏமாற்றுமா?

நாட்டில் இயங்கும் பிரபல்யமான தனியார் வங்கிகளில் அது வும் ஒன்று... அவ் வங்கியின் தன்னியக்க பணப்பரிமாற்றல் இயந்திரங்கள் (ஏ.ரி.எம்.) நகர்ப் பகுதிகள் எங்கும் உள்ளன. அவ்வங்கியின் நீண்ட கால வாடிக்கையாளர் ஒருவர் வெள்ள வத்தையில் உள்ள ஏ.ரி.எம். நிலையத்துக்கு நேற்றுக் காலை (29.12.2011) எட்டு மணியளவில் எண்பதாயிரம் ரூபா பணத்தை மீளப்பெறுவதற்காகச் சென்றார். பணம் மீளப்பெறும் அட்டையை இயந்திரத்தினுள் செலுத்தினார். இரகசிய குறியீட்டு எண்ணைப் பதிவு செய்து, எண்பதாயிரம் ரூபாவை மீளப் பெறுவதற்காக எண்களைப் பதிவு செய்தார்.

இயந்திரம் செயல்படத் தொடங்கியது. இயந்திரத்தின் உள்ளே பணம் எண்ணப்படும் ஓசையும் கேட்டது. அவர் காத்திருந்தார். ஏமாற்றம்தான் மிஞ்சியது. பணம் வெளியே வரவில்லை.

இயந்திரத்தினுள் பணம் இல்லையென்ற முடிவுக்கு அவர் வந்தார். இயந்திரத்துடன் பொருத்தப்பட்டிருந்த தொலைபேசியின் ரிசீவரை எடுத்து வங்கியுடன் தொடர்பு கொள்ள முயன்றார். தொலைபேசி பழுதடைந்து பல நாட்கள் சென்று விட்டதாக ஏ. ரி. எம். காவலாளி ஓடோடி வந்து சொன்னார்.

அந்த வாடிக்கையாளர் தனது ஏ. ரி. எம். அட்டையை மீண்டும் இயந்திரத் தினுள் செலுத்தி தனது கணக்கின் மிகுதியை சரிபார்த்தார். அவருக்குப் பகீரென்றது!

எண்பதாயிரம் ரூபா மீளப்பெறப்பட்டிருப்பதாக கணக்கு மிகுதி காட்டியது. கையில் பெறப்படாத பணம் கணக்கில் கழிக்கப்பட்டிருப்பது எவ்வாறு?

ஒருவேளை எண்பதாயிரம் ரூபாவை இழக்க வேண்டியேற்படுமோவென வாடிக்கையாளர் கலங்கிப் போனார். வெள்ளவத்தையில் உள்ள வங்கிக் கிளைக்கு சிறிது நேரத்தில் ஓடோடிச் சென்று விஷயத்தை அறிவித்தார். நடவடிக்கை எடுப்பதாக அறிவித்து கடிதமொன்றும் வாங்கிக் கொண்டனர்.

இச்செய்தி எழுதப்படும் வரை அவ்வாடிக்கையாளரின் எண்பதாயிரம் ரூபா பணம் மீண்டும் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

தொழில்நுட்பம் உச்சத்துக்கு வளர்ந்துவிட்ட இக்காலத்தில் வாடிக்கையாளர்களை மனப்பதற்றத்துக்கு உள்ளாக்கும் விதத்தில் தலைசிறந்த நிதிநிறுவனமென விளம்பரப்படுத்தும் பிரபல்யமான இவ்வங்கிகள் நடந்து கொள்ளலாமா என்கிறார் அவ்வாடிக்கையாளர்.

நன்றி தினகரன்

Read more...

வட கொரிய இளம் தலைவருக்கு புதிய பதவி.

வட கொரியாவின் சர்வ அதிகாரம் படைத்த தலைவராக, கிம் ஜாங் உன் அறிவிக்கப்பட்டுள்ளார். வட கொரிய அதிபர் கிம் ஜாங் இல், கடந்த 17ம் தேதி மாரடைப்பால் காலமானார். வட கொரிய அரசியலில், தொழிலாளர் கட்சி, ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு கமிஷன் ஆகிய மூன்று அமைப்புகள் தான் பலம் வாய்ந்தவை. இவை தான், நாட்டின் ஒவ்வொரு விஷயத்திலும் முடிவெடுக்கும். மறைந்த தலைவர் கிம் ஜாங் இல், இந்த மூன்றுக்கும் தலைவராக இருந்தார்.

அவரது மறைவை அடுத்து, அவரின் இளைய மகன் கிம் ஜாங் உன், ராணுவத்தின் தலைவராக அறிவிக்கப்பட்டார். இதை தொடர்ந்து, அவர் தொழிலாளர் கட்சியின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்கள் தலைவராகவும், அவரை அரசு அங்கீகரித்துள்ளது. இதன் மூலம், அவர் வட கொரியாவின் சர்வ அதிகாரம் படைத்த தலைவராகியுள் ளார். கிம் ஜாங் இல்லின் இரண்டாவது நாள் இறுதிச் சடங்கு, தலைநகரில் உள்ள கிம் சங் சதுக்கத்தில், நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கிம் ஜாங் உன்னுக்கு, ராணுவ தளபதிகள் அணிவகுத்து மரியாதை செலுத்தினர்.

Read more...

மார்ச் 31 இல் முல்லைத்தீவு மாவட்டத்தின் இரு பிரதேச சபைகளுக்கான தேர்தல்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மற்றும கரைதுறைபற்று பிரதேச சபைகளுக்கான வாக்கெடுப்பு, எதிர்வரும் 31 ஆம் திகதி நடைபெறவிருந்தது. எனினும், அவ்வுள்ளுராட்சி நிறுவனங்கள் அமைந்துள்ள பகுதிகளில், நிலக்கண்ணிவெடிகளை அகற்றி, மீள்குடியமர்த்தும் பணிகள் பூர்த்தியாகாமையினால், வாக்கெடுப்பை அன்றைய தினம் நடாத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த பல மாதங்களாக அப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழையும், வாக்கெடுப்புக்கு தடையாக உள்ளது. இவ்விடயங்களை கருத்திற்கொண்டு, வாக்கெடுப்பை ஒத்திவைக்க, தீர்மானிக்கப்பட்டது. குறித்த உள்ளுராட்சி நிறுவனங்களுக்கு போட்டியிடும் சகல அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தலைவர்களுக்கு, இது தொடர்பாக அறிவுறுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல்கள் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

செல்லிட தொலைபேசி பாவனையால் புற்றுநோய் பரவுகின்றது.

செல்லிட தொலைபேசிகளை வரையறையின்றி பயன்படுத்துவது, புற்றுநோய் பரவுவதற்கான பிரதான காரணமென, கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிந்திய அறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக, அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலநறுவையில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார். 15 நிமிடங்களுக்குள் பிறப்பு சான்றிதழ்கள் உட்பட ஏனைய சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில், பொலநறுவை மாவட்ட செயலகத்தி;ல் ஏற்படுத்தப்பட்ட விசேட பிரிவை திறந்து வைக்கும் வைபவத்தில் கலந்த கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உட்பட பலர், இதில் கலந்து கொண்டனர்.

Read more...

இலங்கையின் அபிவிருத்திக்கு உதவிடுவீர். சர்வதேசத்திடம் சீனா வேண்டுகோள்.

இலங்கையின் அபிவிருத்திக்கு கரம் கொடுக்குமாறு சீனா சர்வதேச சமுகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கையில் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு உகந்த சூழலை உருவாக்க ஒத்துழைப்பு நல்குமாறு சீனா சர்வதேச சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை நட்புறவு ரீதியான அண்டை நாடாகும். அங்கு உள்நாட்டு நெருக்கடி முடிவிற்கு கொண்டு வந்த நாள் முதல் சீனா இலங்கையுடன் மிக நெருக்கமான உறுவுகளை கொண்டுள்ளது.

இலங்கையின் சமூக நிலைப்பாடுகள், பொருளாதார அபிவிருத்தி, புனரமைப்பு ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள சாதகமான வளர்ச்சியை கண்டு மகிழ்ச்சியடைவதாக சீனா தெரிவித்துள்ளது.

இலங்கையின் யுத்தத்திற்கு பின்னரான புனரமைப்பு பணிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி தொடர்பாக கருத்து தெரிவித்து சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் லியூவெய்மின் சீனாவின் சிங்ஹூவா இணையத்தளத்திற்கு இதனை தெரிவித்துள்ளார்.

Read more...

சுவீடன் நாட்டு செய்தியாளர்களுக்கு எத்தியோப்பியாவில் 11 ஆண்டு சிறை

சுவீடன் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த செய்தியாளர்கள் இருவருக்கு எத்தியோப்பிய நீதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. செய்தியாளர் மார்ட்டின் ஷிப்பி, புகைப்படச் செய்தியாளர் ஜோஹன் பெர்ஸ்ஸன் ஆகியோர், நாட்டிற்குள் கள்ளத்தனமாகப் புகுந்தததோடு அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்ததாகவும் அவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

நீதிபதி ம்சு சிர்காகா, அம்ஹரிக் மொழியில் வழங்கிய தீர்ப்பு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு செய்தியாளர்களுக்கு விளக்கப்பட்டது.

தண்டனையை அறிந்த சுவீடன் செய்தியாளர்கள் எவ்வித கலக்கமும் இன்றி காணப்பட்டனர் என்று நீதிமன்றத்தில் இருந்த ஏஎப்பி செய்தியாளர் கூறினார்.

விசாரணைகள் நீதிமன்றிற்கு எடுக்கப்பட்டபோது குற்றவாளிகள் தாம் நாட்டினுள்ள சட்டவிரோதமாக நுழைந்தமை குற்றம் என்பதை ஏற்றுக்கொண்டதுடன் , தம்மீது சுமத்தப்பட்டிருந்த ஏனைய குற்றங்களை மறுத்துரைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Read more...

Thursday, December 29, 2011

50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.

வல்லிபுறம் விக்டர் படைத்தளம்-1 -தமிழர்களுக்கும், போர்க்கைதிகளுக்குமான சித்திரவதைக்கூடம் என்ற தலைப்பில் முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரால் எழுத்ப்பட்டுள்ள கட்டுரை ஒன்றில் புலிகள் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் மே 8ம் திகதி தமக்காக போராடி விழுப்புண்ணடைந்த பெண்போராளிகள் 50 பேரை பஸ் ஒன்றில் ஏற்றி அவர்களுக்கு தேனீர் வழங்கிவிட்டு பஸ்ஸினை குண்டுவைத்து தகர்த்ததை நேரில் கண்டதாக தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அவர் இதற்காக புலிகள் தமது பெயரில் விடுதலை என்ற சொற்பதத்தையும் செருகியுள்ளமை வியக்கத்தக்க விடயம் என தெரிவித்துள்ளார்.

அவர் எழுதியுள்ள கட்டுரை வருமாறு


உலகிலேயே மிகக் கொடூரமான மனித அட்டூழியங்களை புரிந்த அமைப்பே தமிழீழ விடுதலைப் புலிகள்! இதை உலகத்தார் அனைவரும் அறிவர். இவர்கள் 'விடுதலை' இயக்கம் என தம்மை பெயர்சூட்டிக் கொண்ட போதிலும், புரிந்த காரியங்கள் யாவும் விடுதலைக்கு மாறானவையே! போர்க்கைதிகளை தவிர, தமது சொந்த இனத்தை சேர்ந்த ஆண்களுக்கும், பெண்களுக்கும் மற்றும் சிறுவர்களுக்கும் சித்திரவதை செய்வதற்கென இப் புலிகள் பிரத்தியோகமாக இரகசிய கொலை முகாமொன்றை நடாத்திவந்துள்ளமை பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இவ்வாறானதொரு முகாமே வல்லிப்புறத்தில் அமைந்துள்ள 'விக்டர் படைத்தளம்-1'. இம் முகாமானது விடுதலைப்புலிகளின் உயர்மட்டக் குழுவினரால் மட்டும் கையாளப்பட்டதுடன், மிகவும் இரகசியமாகவும் பேணப்பட்டுவந்துள்ளது.

இம் முகாம் புதுக்குடியிருப்பு ஏ34 வீதிக்கு அருகாமையிலும், உடையார்கட்டு வனப்பகுதியில் இருந்து 4 கிலோ மீற்றரிலும் அமையப்பெற்றுள்ளது. 1997 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இச் சித்திரவதைக் கூடமானது, எவரும் தப்பியோட முடியாத அளவு இரும்புக் கம்பிக் கதவுகளுடனான 24 அறைகளாக கட்டப்பட்டுள்ளது. எனவே இதில் வெறுமனே 15 காவலர்களே நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலித் தவைலர் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரால் இச் சித்திரவதை அறைகள் கண்ணானிக்கப்பட்டு வந்துள்ளன. மேலும் பொட்டு அம்மானால் சகல சித்திரவதைகளும் வழங்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்படுவர். இச்சித்திரவதைக்கூடம் ஒவ்வொன்றும் 8 அடி உயரமும், 4 அடி அகலமும் கொண்டதாகும். கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரின் தகவில்படி ஒவ்வொரு கூடத்திலும் 15 பேரை அடைத்துவந்துள்ளனர். இவற்றைவிட மிகவும் கீழ்த்தரமான விடயம் யாதெனில், இச் சிறிய அறையினுள்ளே அக் கைதிகளுக்கான மசலம் கழிப்பதற்காக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளமையாகும்.


மேலும் கைதிசெய்யப்படும் அதி முக்கிய பிரமுகர்களை சிறைப்படுத்தும் கூடம், வன்னியின் அடர் காட்டுப்பகுதியில் அமைந்திருந்ததாகவும், இதனை ரட்னம் மாஸ்டர் எனும் விடுதலைப்புலி புலனாய்வு உறுப்பினர் நடத்தி வந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதைத்தவிர போர்க் கைதிகளாக அகப்படும் இராணுவத்தினருக்கு பொறுப்பாக கோபி எனும் விடுதலைப்புலி உறுப்பினர் பொறுப்பாக இருந்துள்ளார். ஆனால் இப் பயங்கரவாதிகள் வெளிநாட்டு தூதுவர்களுக்கும், அரசசார்பற்ற நிறுவனங்களுக்கும் கைதிகளின் சிறைக்கூடம் என பொய்யான இடங்களையே காண்பித்து வந்துள்ளனர்.

இப் பயங்கரவாதிகளால் சிறைப்பிடிக்கப்படுபவர்கள் தொடர்பாக மிகவும் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயம் யாதெனில், இவர்களில் பெரும்பாலானோர் தமிழர்களே!
அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியவர்கள் என்ற சந்தேகத்திலேயே இவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவர்களை 'நாய்கூடு' எனும் மிகவும் நெருக்கமான கூட்டில்பொட்டு அடைத்து நாட்கணக்கில் வைத்திருப்பார்கள். அக் கூட்டில் அடைக்கப்பட்டவர், அவரது உடம்பை சிறிதளவு கூட அசைக்க முடியாதளவு மிகவும் நெருக்கமாக இருக்கும். இவ்வாறான கொடுமைகள் ஹிட்லரின் காலத்தில் கூட இடம்பெறவில்லை எனக் கூறலாம். இதையா இவர்கள் 'தமிழீழம்' எனக் கூறினார்கள்?

இவ்வாறே இராணுவத்தின் 26 வீரமிகு படைவீர்ர்களையும் இவர்கள் சித்திரவதை செய்து கொலைசெய்துள்ளனர். இதில் கடற்படையைச் சேர்ந்த 18 வீரர்களும், தரைப்படையை சேர்ந்த 8 வீரர்களும் உள்ளடங்குவர். இப் பயங்கரவாதிகளின் படைத்தள வீழ்ச்சி அடையத் தொடங்கியதை அடுத்து, 2009 ஜனவாரி 16 ஆம் திகதி இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களது கொடூர அட்டூழியங்களுக்கு மிகவும் சிறந்த உதாரணமாக குறிப்பிடக்கூடிய விடயமே 2009 மே 8 ஆம் திகது இடம்பெற்ற மிகக் கொடூர நிகழ்வாகும். தமது இயக்கத்திற்காக போராடி காயப்பட்ட 50 பெண் போராளிகளை ஒரு பஸ்ஸில் ஏற்றி அவர்களுக்கு தேநீர் கொடுத்து பின்னர் அனைத்து கதவுகளையும் மூடிவிட்டு, குண்டு வைத்து அப் பஸ்ஸை தகர்தனர். அவ் உண்மை சம்பவத்தை பலர் நேரடியாக கண்டு சாட்சியம் அளித்துள்ளனர்.

இப் பயங்கரவாதிகள் தமது இயக்கத்திற்கு பொருத்தமில்லாத 'விடுதலை' என்ற சொல்லை தமது இயக்கத்தின் பெயரில் சூட்டியுள்ளனர்.

உலகிலேயே இவ்வாறானதொரு மனிதக் கொடுமைமைகளை புரிந்த பயங்கரவாதிகள் இவர்களை தவிர வேறு எவரும் இருக்கமாட்டார்கள் எனக் கூறலாம். இவர்களுக்கெதிராக நடவடிக்கையெடுக்க சர்தேசரீதியில் இயங்கும் எந்வொரு இயக்கம்மும் முன்வராதா?

30 வருட காலமாக இப் பயங்கரவாதிகள் புரிந்துவந்த, மிகக் கொடூர மனித அட்டூழியங்கள், சர்வதேச அமைப்புகளுக்கும், அதிகாரசபைகளுக்கும் கொடூர குற்றச் செயல்களாக தெரியவில்லையா?

ஆனால் இப் பயங்கரவாதிகளிடம் இருந்து அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றி அவர்களுக்கு நலன்புரி சேவைகளைப் புரிவதுடன், அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தியது மட்டுமல்லாது, அம் மக்களுக்கு தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் இராணுவத்தினரின் செயல்பாடுகளை, இச் சர்வதேச அமைப்புக்களும், அதிகாரசபைகளும் குற்றச்செயல்களாக விளங்கிக்கொள்வது சிரிப்பிற்கும்! கவலைக்குமுரிய விடயமாகும்!.
நன்றி விடிவு.

Read more...

மினுவாங்கொடை நகர சபை உறுப்பினர் பாலத்தின் அடியிலிருந்து சடலமாக மீட்பு

மினுவாங்கொடை நகர சபை உறுப்பினர் தினேஷ் சந்திரசிறியின் சடலம் கொட்டதெனியாவ பகுதியிலுள்ள தியகம்பொல பாலத்தின் அடியிலிருந்து நேற்றிரவு மீட்கப்பட்டுள்ளது. அவர் திட்டமிடப்பட்டு வேறொரு இடத்தில் கொலை செய்யப்பட்டு சடலத்தை பாலத்தின் அடியில் போடப்பட்டடிருப்பதாக பொலிஸாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
அவரின் மோட்டார் சைக்கிளும் சடலத்துக்கு அருகில் காணப்பட்டது. சடலம் கண்டுபிடிக்கப்ட்டபோது மோட்டார் சைக்கிள் இயங்கிக் கொண்டிருந்தது. அவரின் செல்லிடத் தொலைபேசி, தலைக்கவசம், பாதணிகள் என்பன வெவ்வேறு இடங்களிலிருந்து மீட்கப்பட்டன.

28 வயதான தினேஷ் சந்திரசிறி, இரு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் நடிகையும் நாடாளுமன்ற உறுப்பினருமான உபேக்ஷா ஸ்வர்ணமாலியின் மெய்ப்பாதுகாவலராக கடமையாற்றியவர். பின்னர் இவர் மினுவாங்கொடை நகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார்.

Read more...

பிரித்தானியாவில் இந்திய மாணவன் கொலை! மூன்றாவது சந்தேக நபரும் கைது.

பிரித்தானியாவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள மான்செஸ்டர் நகரில் இந்திய மாணவர் அனுஜ் பிட்வே கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக நேற்று பிரிட்டன் போலிசார், மூன்றாவது சந்தேகப் பேர்வழி ஒருவரைக் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மாணவன் 23 வயதுடைய அனுஜ் பிட்வே என இனம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் 16 வயது மற்றும் 17 வயதுள்ள இரு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் ஒரு மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் புனே நகரைச் சேர்ந்த அனுஜ், கடந்த திங்கட்கிழமை, சர்ஃபோர்ட் என்னுமிடத்தில் தான் தங்கியிருந்த விடுதியிலிருந்து நண்பர்களுடன் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருக்கும்போது இந்தச் சம்பவம் நடந்ததாக மான்செஸ்டர் போலிஸ் அனுஜின் பெற்றோரிடம் கூறியுள்ளது.

அனுஜுக்கு எதிரிகள் யாருமில்லையென்றும் அவர் எல்லாரிடமும் அன்பாகப் பழகக் கூடியவர் என்றும் ஏராளமான நல்ல நண்பர்களைக் கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.

Read more...

கிம் ஜோங் இல் இறுதிச் சடங்கு மாபெரும் அமைதி ஊர்வலம்

டிசம்பர் 17ம் தேதி மறைந்த வடகொரியத் தலைவர் கிம் ஜோங் இல்லுக்கு வடகொரியாவில் நேற்று மாபெரும் இறுதி ஊர்வலம் நடந்தது. ராணுவத்தின் நீண்ட அணிவகுப்புடன் மூன்று மணி நேரம் நடந்த இறுதி ஊர்வலம் நாடு முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

பியோங்யாங்கில் உள்ள கும்சுவான் நினைவாலய அரண் மனையில் உள்ள சதுக்கத்தில் பனிகொட்டுவதையும் பொருட் படுத்தாது துருப்புகளும் குடிமக்களும் ஆயிரக்கணக்கில் கூடி மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

நாட்டின் சக்திவாய்ந்த தலைவராக விளங்கிய கிம் ஜோங் இல்லின் நல்லுடல் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது. அதற்கு முன்னதாக ஒரு வாகனத்தில் அவர் புன்னகை பூத்தவாறு காட்சிதரும் புகைப்படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

கிம் ஜோங்-இல்லின் உடல் கண்ணாடிப் பெட்டகத்தில் வைத்துப் பத்திரப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. மறைந்த முன்னைய தலைவரின் உடலும் அவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது.
அன்புத் தந்தையின் உடலைத் தாங்கிச்செல்லும் வாகனத்தின் அருகே சோகமே உருவாகக் காணப்பட்டார் அவரது மகன் கிம் ஜோங்-உன்.Read more...

உடனிருந்து குழிபறித்தோரிடம் விளக்கம் கோரவுள்ளது அரசாங்கம்.

உள்ளுராட்சி நிறுவனங்களில் வரவு செலவுத்திட்டங்களை தோல்வியடையச் செய்த கூட்டமைப்பு உறுப்பினர்களிடம், விளக்கம் கோரப்படவுள்ளது. 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தோல்வியடைந்த உள்ளுராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் வரவு செலவுத்திட்டத்திற்கு எதிராக வாக்களித்த கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் விளக்கம் கோருவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, கூட்டமைப்பின் பொது செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் தெரிவித்துள்ளார். போப்பே போத்தல, தொடங்கொட ஆகிய பிரதேச சபைகளின் கூட்டமைப்பு உறுப்பினர்களிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. எம்பிலிபிட்டிய நகர சபை, மிஹிந்தலை, வெலிமட, சூரியவௌ ஆகிய பிரதேச சபைகளின் கூட்டமைப்பு உறுப்பினர்களிடமும், விளக்கம் கோரப்படவுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

Read more...

250 விஷப்பாம்புகளுடன் விமானத்தில் பயணம்: எக்ஸ்ரே ஸ்கேன் காட்டிக்கொடுத்தது

செக்குடியரசு நாட்டை சேர்ந்தவர் காரெல் அபெலோவஸ்கி (51). இவர் ஸ்பெயின் நாட்டுக்கு பயணிகள் விமானத்தில் பயணம் செய்தார். அப்போது அவர் ஒரு பிளாஸ்டிக் கன்டெய்னரை அதே விமானத்தில் எடுத்து வந்தார். அந்த விமானம் வழியில் அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ்ஏர்ஸ் சர்வதேச விமான நிலையத்தில் நின்றது. அப்போது அவர் கொண்டு வந்த பிளாஸ்டிக் கன்டெய்னரை சோதனையிட முடிவு செய்தனர்.

இதற்கு காரெல் எதிர்ப்பு தெரிவித்தார். எனவே எக்ஸ்ரே ஸ்கேனர் மூலம் சோதனையிடப்பட்டது. அப்போது அந்த பிளாஸ்டிக் கன்டெய்னருக்குள் 250 கொடிய விஷப்பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவை தவிர அரியவகை பல்லிகள், சிலந்திகள் மற்றும் நத்தைகளும் இருந்தன.

அவற்றில் பல்லிகள் மெக்சிகோவில் இருந்தும், பாம்புகள் உள்ளிட்ட மற்றவை தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள வடக்கு அர்ஜென்டினா, பராகுவே மற்றும் பிரேசில் நாடுகளில் இருந்தும் கடத்தி வரப்பட்டவை என தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு ரூ.1 லட்சத்து 25 ஆயிரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அவரது பாஸ்போர்ட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.

கொடிய விஷப்பாம்புகள் போன்றவற்றை பயணிகள் விமானத்தில் எடுத்துவர அனுமதி இல்லை. அவை பயணிகளை கடித்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்பதால் அவற்றை எடுத்துவர தடை செய்யப்பட்டுள்ளது.

Read more...

சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு: 2 வது லெப்டினட் பலி! ஓருவர் காயம்.

கிளிநொச்சி - சங்குபிட்டி - பூநகரி பகுதியில் சற்று முன்னர் (இரவு 7.45 மணியளவில்) இராணுவச் சிப்பாய் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 2ம் லெப்டினட் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் , கப்டன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். முகாமிலிருந்து தப்பியோடிய சிப்பாய் ஒருவரை பிடிக்கச் சென்றபோதே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 18வது கெமுனு படையணியைச் சேர்ந்த லாண்ஸ் கோப்ரல் சஞ்சீவ என்ற என்ற சிப்பாய் முகாமை விட்டு தப்பியோடியுள்ளார். இவரை கைது செய்வதற்காக சங்குப்பிட்டி பாலமருகில் விசேட சோதனைச் சாவடி ஒன்றை அமைத்து படையினர் தேடுதலில் ஈடுபட்டபோது, தேடுதலில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவரின் துப்பாக்கியை பறித்து அவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்திலேயே ஒருவர் மரணமானதுடன் ஒருவர் பாடுகாயமடைந்துள்ளார்.

உயிரிழந்தவர் 2 வது லெப் பெலவத்த என தெரியவருகின்றது.

லாண்ஸ் கோப்ரல் சஞ்சீவ கைது செய்யப்பட்டுள்ளார்.

Read more...

கிழக்கு பல்கலைக்கழகத்தின் நெருக்கடிகளுக்கு, தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் வெகுசன தொடர்புசாதன மற்றும் முகாமைத்துவ பட்டப்பாடநெறியை தொடரும் மாணவர்களுக்காக விசேட முதுமானி பட்டத்தை தொடருவதற்காக விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை நீக்க, பல்கலைக்கழக செனட் சபை தீர்மானித்துள்ளது.

அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க மற்றும் உயர்கல்வியமைச்சின் மாணவர் விவகார பணிப்பாளர் நாயகம் கி.பீ. மாவல்லகேயிடம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சங்கம் இந்த பிரச்சினையை தீர்க்குமாறு, வேண்டுகோள் விடுத்திருந்தது. இதற்கமைய பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு சபையுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தியதுடன், உரிய பரிந்துரைகளை, கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Read more...

துணை மருத்துவ சேவை பயிலுநர்களுக்கு மாதாந்தம் 12000 ரூபா கொடுப்பனவு.

துனை மருத்துவ சேவை பாடநெறியை மேற்கொள்ளும் மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழில்சங்க நடவடிக்கைகளின் ஊடாக நோயாளர்களை சிரமத்திற்குட்படுத்த வேண்டாமென சுகாதார அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.

துணை மருத்துவ சேவை பாடநெறியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கு மாதாந்தம் 12 ஆயிரத்து 360 ரூபா கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

இதற்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர். துனை மருத்துவ சேவை தொழில்சங்கங்களின் கோரிக்கையாக இருந்த 2006 , ஆறாம் இலக்க பொது நிருவாக சுற்று நிருபத்தை சீர்திருத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இது தவிர துனை மருத்துவ சேவை கூட்டு முன்னணியின் கோரிக்கை தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கும் துரித தீர்வு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலைமையில் தொழில்சங்க நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாமென சுகாதார அமைச்சு சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Read more...

பிரித்தானிய அரசாங்கத்திற்கு கொலை தொடர்பிலான தகவல்கள் தெளிவுபடுதப்பட்டுள்ளன.

தங்காலையில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றினுள் வைத்து, கொலை செய்யப்பட்ட வெளிநாட்டவரின் உறவினர்களுடன் நேற்றைய தினம் பகல் வரையில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதாகவும இந்த சம்பவம் தொடர்பிலான அனைத்து தகவல்களையும் பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக பிரித்தானிய அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்தியுள்ளதாகவும்,வெளிவிவகார பிரதி அமைச்சர் நியோமால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாட்டவரின் உறவினர் எவரையேனும் தொடர்புகொள்ளும் பட்சத்தில் உடனடியாக சடலத்தை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும்,கொலை செய்யப்பட்ட வெளிநாட்டவரின் சடலத்தை அரசாங்க செலவில் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிடுகின்றது..

Read more...

சீனாவில் 7 கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை

சீனாவில் மேற்கு ஷிங்ஜியாங் மாகாணத்தில் 2 பேரை சிலர் கடத்தி சென்று பிணை தொகை கேட்டு மிரட்டி வந்தனர். இதை தொடர்ந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர். அவர்கள் பிஷன் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

எனவே அங்கு சென்ற போலீசார் கடத்தல்காரர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். இதில் கடத்தல்காரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். கடத்தப்பட்ட 2 பேர் விடுவிக்கப்பட்டனர்.

Read more...

சூறாவளிவீசும் அபாயம்! மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாமென எச்சரிக்கை.

வங்காள விரிகுடாவை அண்டிய பகுதியில் நிலைகொண்டுள்ள தேன் சூறாவளி தாக்கும் அறிகுறிகள் தென்படுகின்றன. மீனவர்கள் கடற்றொழிலில் ஈடுபடுவதிலிருந்து தொடர்ந்து தவிர்ந்து கொள்ளூறு, வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

சூறாவளி காரணமாக, மன்னாரிலிருந்து யாழ்ப்பாணம் ஊடாக, திருகோணமலை வரை கரையோரம் மற்றும் ஆழ்கடல் பகுதியில் கொந்தளிப்பு நிலை ஏற்படலாமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும். கடலில் எக்காரணம் கொண்டும் பயணம் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு, மீனவர்கள் வேண்டப்பட்டுள்ளனர்.

நாட்டைச்சூழவுள்ள கடலில், வடமேற்கு மற்றும் மேற்கு திசையூடாக மணிக்கு 40 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாம். வடக்கு ஆழ்கடலில் காற்றின் வேகம் மணிக்கு 100 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாமென்றும், வடக்கின் கரையோரத்திலும், வடகிழக்கு மற்றும் தெற்கு ஆழ்கடலிலும் மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசலாமென, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சட்டதிட்டங்கள் மற்றும் சுற்றுநிருபங்களுக்கு வரையறுக்காமல், எந்தவொரு அனர்த்த நிகழ்வின்போதும், மக்களுக்கு சேவையாற்ற தயாராகவிருக்க வேண்டுமென, அமைச்சர் மஹிந்த அமரவீர, அதிகாரிகளை பணித்துள்ளார்.

வவுனியாவில் இடம்பெற்ற வைபவமொன்றில், கலந்து கொண்டு உரையாற்றும்போதே, அமைச்சர் இந்த வேண்டுகொளை விடுத்துள்ளார்.

ஆங்கு தொடர்ந்து பேசிய அமைச்சர் கடந்த கால அனர்த்தங்களின்போது, பாதுகாப்பு படையினர் ஆற்றிய பணியை, அமைச்சர் பாராட்டினார்.

கடந்த கால வெள்ளத்தின்போது, எமது ராணுவத்தினர் ஒரு நேரம், பட்டினி கிடந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமது உணவு பொதிகளை அன்பளிப்பு செய்துள்ளனர். விமானங்கள் மற்றும் கடற்படை படகுகள் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. மக்களை மீட்டெடுக்கும் பணிகளில், பொலிஸாருடன் இணைந்து, பாதுகாப்பு படையினர் துரித நடவடிக்கை எடுத்தனர். இதனால் எமக்கு வெற்றிகரமான முடிவுகளை பெற முடிந்தது.

Read more...

காலி முகத்திடல் வியாபாரிகளுக்கு இன்று முதல் சீருடை.

காலி முகத்திடலில் பாவனைக்கு உதவாத வகையில் உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து முகத்திடலில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள் ளவர்களுக்கு விசேட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இன்று முதல் சீருடை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கொழும்பு மாநகரசபை தெரிவித்துள்ளது.

ஒரு சில வர்த்தகர்கள் துணி வகைகளுக்குப் பயன்படுத்தும் வர்ணக் கலவைகளை உணவுகளுக்கு பயன்படுத்தியுள்ளதுடன், அத்தகைய வரத்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி டொக்டர் பரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.

Read more...

எண்ணெய் கப்பல்களை வழி மறிப்போம்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

ஈரானின் அணு ஆயுத கொள்கையை அமெரிக்கா எதிர்த்து வருகிறது. எனவே, அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடை மற்றும் எண்ணை வர்த்தகத்தை தடுக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஈரான் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் துணை அதிபர் முகமது ரெஷா ரகிமி விடுத்துள்ள எச்சரிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை மற்றும் நெருக்கடியை ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதற்கான பாராளுமன்ற தீர்மானத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா கையெழுத்திட்டால் ஈரான் வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது.

ஈரானின் ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுகம் வழியாக மற்ற அரபு நாடுகளில் இருந்து செல்லும் அனைத்து எண்ணைக் கப்பல்களையும் விடாமல் தடுத்து வழி மறிப்போம் என தெரிவித்தார்.

உலகில் எண்ணை வளம் மிக்க முதல் 5 நாடுகளில் ஈரானும் ஒன்று. அங்குள்ள ஸ்ரெயிட் ஆப் ஹார்மோஷ் துறைமுகம் வழியாகதான் அனைத்து எண்ணை கப்பல்களும் தற்போது சென்று வருகின்றன.

Read more...

ஜேவிபி தலைவர் உட்பட 22 பேருக்கு நீதிமன்று அழைப்பாணை.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க உட்பட 22 பேருக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி திஸ்ஸமஹாராமவில் நடைபெறவுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்று தொடர்பாக விளக்கமறிக்குமாறு கோரியே, நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

மக்கள் போராட்ட குழுவை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரான அஜித் குமார மற்றும் ஜி. குலரத்ன ஆகியோரால் இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மாநாடு சட்டவிரோதமானதென முறைப்பாட்டாளர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர். மத்திய செயற்குழுவில் வாக்குரிமையுள்ள தான் உட்பட சிலருக்கு இம்மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லையென முறைப்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மாநாடு இடம்பெற்றால் கட்சி உறுப்பினர்களுக்கு அநீதி இளைக்கப்படுமெனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் பிரகாரம் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மக்கள் விடுதலை முன்னணியின தலைவர் உட்பட 22 பேருக்கு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.

Read more...

மனைவியை பெற்றோல் உற்றி கொழுத்திய கணவன். திருமலையில் சம்பவம்.

தனது கணவரால் தீ மூட்டப்பட்டு தீ காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் திருக்கோணமலை - உப்புவெளி சுனாமி வீட்டுத்திட்ட கணேசபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கணவன் - மனைவிக்கு இடையில் கடந்த 2011-12-17 அன்று ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் சென்று முடிந்தபோது ஆத்திரமடைந்த கணவன் மனைவியை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

இதன்போது கடும் தீ காயங்களுக்கு உள்ளான மனைவி திருக்கோணமலை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 24 வயதுடைய இளம் குடும்பப்பெண்ணான கணேசபுரத்தைச் சேர்ந்த பத்மநாதன் இந்திராதேவி என்பவராவார்.

இந்த சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more...

Wednesday, December 28, 2011

இலங்கையின் நட்பு நாடான இந்தியா என்றும் எங்களுக்கு உதவ தயங்குவதில்லை:இலங்கை!

இந்தியா இலங்கையின் அயல்நாடு மட்டுமல்ல ஒரு உண்மையான நட்பு நாடும் ஆகும். இந்திய இலங்கை நல்லுறவு பல் லாண்டுகாலமாக நிலைத்திருக்கிறது. 1971ம் ஆண்டில் ஜே.வி.பி. இயக்கத்தினர், அன்றைய அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு ஆயுதப் போராட்டமொன்றை மேற்கொண்ட போது முதன் முதலில் இலங் கைக்கு நாம் உதவி கேட்பதற்கு முன்னரே தனது படைகளை அனுப்பி அன்று பலவீனமாக இருந்த எமது நாட்டின் ஆயுதப் படைகளுக்கு துணை புரிந்து, ஜே.வி.பி. ஆயுத போராட்டத்தை ஓரிரு தினங்களில் முறியடிப்பதற்கு இந்தியா பேருதவி புரிந்தது.

இந்த முயற்சியின் போது 1971ம் ஆண்டில் இந்திய விமானப்படை வீரர் ஒருவரும் உயிர்தியாகம் செய்தமை இந்தியாவின் தியாக உணர்வுக்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்தது.

அது போன்றே எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எண்ணத்துடன் 1987ம் ஆண்டில் இந்தியா தனது அமைதிகாக்கும் படையை இல ங்கைக்கு அனுப்பி இனப்பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வொன்றை ஏற் படுத்துவதற்கு எடுத்த முயற்சி எதிர்ப்பார்த்த அளவு வெற்றியளிக்க வில்லை. இறுதியில் சுமார் 2 ஆயிரம் தங்கள் இராணுவவீரர்களை இழந்த நிலையில் இந்திய அமைதி காக்கும் படையினர் இலங்கை யில் இருந்து வெளியேறினார்கள்.

இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பியமைக்காக அன்றைய பிரதம மந்திரி ராஜீவ் காந்தி மீது வஞ்சம் தீர்ப்பதற்காக எல்.ரி.ரி.ஈ யினர் அவரை தற்கொலை குண்டுதாரி ஒருவரின் மூலம் தென் னிந்தியாவின் திருப்பெரும்பூர் எனும் இடத்தில் தேர்தல் பிரசாரத் தில் கலந்து கொள்ள வந்த போது ராஜீவ் காந்தியை 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதியன்று படுகொலை செய்தமை இந்தியாவிற்கு ஏற்பட்ட பேரிழப்பு என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இவ்விதம் இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உறுதுணை புரிந்து வரும் இந்தியா, இந்தத் தடவையும் எமது நாட்டில் இனங்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு உதவி செய்ய முன்வந்திருப்பது பாராட்டக்கூடிய விடயமாகும்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை இலங்கை அரசாங்கத்தால் பகிரங்கப்படுத்தப்பட்டிருப்பதை வரவேற்பதாக இந்தியா அறிவித்துள்ளது. ஆணைக்குழுவின் பரிந் துரைகள் நிறைவேற்றப்படும் என இலங்கை அரசாங்கம் வழங்கி யிருக்கும் உறுதிமொழியைக் கவனத்தில் கொள்வதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் நல்லி ணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், மோதல்களால் ஏற்பட்ட வடுக் களை ஆறச்செய்வதற்குமான பல்வேறு ஆக்கபூர்வமான பரிந்துரை களை கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வெளியிட்டிருக்கும் அறி க்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் தகவல்கள், வடமாகாணத்தில் சிவில் நிர் வாகம், வடக்கில் பாதுகாப்புப் படைகளைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆணைக்குழுவின் அறிக்கை யின் பரிந்துரைகளை தாம் கவனத்தில் கொள்வதுடன், இவற்றை நிறை வேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அரசாங்கம் வழங்கியிருக்கும் உறுதிமொழிகளை ஏற்றுக்கொள்வதாகவும், இந்த அறிக்கையில் இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொரு வர் மேலும் தெரிவித்தார்.

இந்தியா நல்லிணக்க செயற்பாட்டு நடைமுறையில் தொடர்ந்தும் இலங்கை யுடன் இணைந்து அதனை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உறுதுணை புரியவும் தயாராக இருப்பதாகவும் இவ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த கால யுத்த வடுக்களை மறந்து நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதுடன் எதிர்காலத்திலும் இத்தகைய வன்முறைகள் ஏற்படாதிருக்கக்கூடிய வகையில் இலங்கை அரசு தீர்க்கமான நடைமுறைகளை எடுக்குமென்பதில் தனக்கு அசை யாத நம்பிக்கை இருப்பதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரண த்தை கண்டுபிடித்து அதிகாரப் பரவலாக்கல் என்ற உன்னத செய் முறைக்கு அமைய மக்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்து வதற்காக அரசியல் தீர்வொன்றை காண்பதன் அவசியத்தையும் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அதிகாரப் பகிர்வை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வின் மூலம் நாட்டில் நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கு இருக்கும் வாய்ப்புகளை ஆணைக்குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

மோதலை அடுத்து உருவாகிய சூழ்நிலையில் நிலையான சமாதானம் மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்துவதற்கு அரசாங்கம் தலைமைத்து வத்தை வழங்கி மோதல்களுக்கான மூலகாரணங்களை நிவர்த்தி செய்வதற்கு அரசியல் தீர்வொன்று அவசியம் என்பதை ஆணைக் குழுவின் அறிக்கை அடையாளம் கண்டிருப்பதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட அனைத்து கட்சிகளுடன் விரி வான பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வொன்றை காண்பதற்கும், 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது, அர்த்தபூர்வமான அதிகாரப் பகிர்வு தொடர்பாக இலங்கை அரசாங்கம் கடந்த காலங்களில் பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிமொழி வழங்கியுள்ளது.

இவற்றின் நிலைமைகளை அறிந்து உரிய நடவடிக்கை எடுக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்று இந்தியா நம்புவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. பொறிமுறையொன்றை உருவாக்கி அதன் ஊடாக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நட த்துவது பற்றி இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்தும் என நம்புவதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளதது.

thinakaran.lk

Read more...

முதலாம் திகதி தொடக்கம் தென்னிலங்கை கடுகதி வீதியில், பிரயாணிகள் பஸ் சேவை.

ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பிரயாணிகள் பஸ் சேவையை ஆரமபிப்பதற்கான, ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவிக்கிறது. பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துவதற்காக, இலங்கை போக்குவரத்து சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தருவிக்கப்பட்ட இரண்டு பஸ் வண்டிகள், முதல் கட்டத்தின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக, நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவிக்கிறது. அத்துடன் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சபையூடாக, இரு தனியார் பஸ் வண்டிகளையும் சேவையில் இணைத்துக்கொள்ள, திட்டமிடப்பட்டுள்ளது. தென்னிலங்கை கடுகதி வீதியில் வாகனம் செலுத்தும் வேக வரையறை உள்ளிட்ட ஏனைய சட்ட ஒழுங்குகளுக்கமைய, இப்பஸ் வண்டிகளை சேவையில் ஈடுபடுத்துவது தொடர்பாக, சாரதிகளையும் அறிவுறுத்த, நடவடிககைகள் எடுக்கப்பட்டன.

Read more...

உண்ணாவிரதத்தை கைவிட மருத்துவர்கள் அறிவுரை; சிறுநீரகம் செயலிழக்கும் என எச்சரிக்கை

வலுவான லோக்பால் மசோதா நிறைவேற்ற வலியுறுத்தி உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக சேவகர் அன்னா ஹசாரே போராட்டம் 2வது நாளை எட்டியுள்ள நிலையில் அன்னா உண்ணாவிரதத்தை கைவிட மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். உண்ணாவிரதத்தை கைவிடாவிட்டால் அவரது சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது என கூறினார்.

இது குறித்து அன்னா ஹசாரேவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூறுகையில், அன்னா உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று நாங்கள் வலியுறத்தியுள்ளோம். தவறும் பட்சத்தில் அவரது சிறுநீரகம் செயலிழக்கும் அபாயம் உள்ளது. அவரது உடலில் நீர் வற்றிப்போவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறினர்.

மேலும் அவர்கள், அன்னாவின் உடல்வெப்பநிலை 100 டிகிரி செல்சியஸ் ஆக உள்ளது எனவும், அவரது ரத்த அழுத்தம் குறைந்துள்ளதால் நடப்பதற்கு சிரமப்படுவார். அவரது ரத்த அழுத்தம் அமர்ந்திருக்கும்போது 120/90 என்ற அளவில் உள்ளது. நிற்கும்போது 105/70 என்ற அளவில் உள்ளது. நாடித்துடிப்பு 71 ஆக உள்ளது. மருத்துவர்கள் என்ற ரீதியில் அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இறுதி முடிவை அவர்தான் எடுக்க வேண்டும் என கூறினர்.

மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவுகானும், அன்னா உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எதிர்பார்த்த அளவு மக்கள் வரவில்லை; அன்னாவின் உண்ணாவிரத போராட்டம் 2வது நாளை எட்டியுள்ள நிலையில் எதிர்பார்த்த அளவு மக்கள் வரவில்லை. 2வது நாள் போராட்டத்தில் 4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வரை தான் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இது குறித்து அன்னா குழுவினர் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து அன்னா குழு உறுப்பினர்களில் ஒருவர் கூறுகையில், மும்பையில் நாங்கள் எதிர்பார்த்த அளவு மக்கள் வரவில்லை. டில்லியில் அன்னா உண்ணாவிரதம் இருந்த போது அதிகளவு மக்கள் வந்தனர். டில்லியை தவிர மற்ற இடங்களில் கூட்டம் குறைவாக உள்ளது. இதற்கு வருடம் நிறைவடைவது காரணமாக இருக்கலாம் என கூறினார். அன்னா போராட்டத்தில் உ.பி., அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களிலிருந்து அதிகம் பேர் கலந்து கொண்டுள்ளனர்.

பயனில்லாத மசோதா- அன்னா குழு; மத்திய அரசு பலனில்லாத லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளதாக அன்னா குழு குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பிரஷாந்த் பூஷன் கூறுகையில், மத்திய அரசு பலனில்லாத லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது. இதனை மக்கள் கேட்கவில்லை. எங்களது போராட்டம் தொடரும். ராஜ்யசபாவில் நடைபெறுவதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். சி.பி.ஐ.,யை சேர்க்காமல் எந்தவித அதிகாரமும் இல்லாத லோக்பால் மசோதாவை தாக்கல் செய்துள்ளது.Read more...

Tuesday, December 27, 2011

கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகத்தினை தடுக்க உத்தரவு.

கிழக்கு மாகாணத்தில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளது, சிறுவர்கள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் இவர்களின் பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு, தகவல் தொழில்நுட்பக்கல்வி மற்றும் சிறுவர் நன்னடத்தை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கிழக்கு மாகாண சிறுவர்களின் அபிவிருத்தி தொடர்பாக அண்மையில் அக்கரைப்பற்று நன்னடத்தை காரியாலயத்தில் கிழக்கு மாகாண நன்னடத்தை ஆணையாளர் எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போதே மேற்படி தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கிழக்கு மாகாணத்தில் உள்ள சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை முற்றாக தீர்ப்பதற்கு தன்னால் முடியுமான அர்ப்பணிப்புக்களை மேற்கொள்ள தயாராக உள்ளதாக செயலாளர் அஸீஸ் கூறினார்.

இக் கூட்டத்தில் நன்னடத்தை திணைக்கள மாகாண ஆணையாளர் எம்.முபாறக் பேசும்போது கிழக்கு மாகாணத்திற்கு தேவையான அத்தாட்சிப்படுத்தப்பட்ட சிறுவர் பாடசாலை, அரச பிள்ளைக் காப்பகம், சிறுவர் தடுப்புமுகாம் என்பன மாகாணத்தின் கலாசார விழுமியங்களை அனுசரித்து எதிர்காலத்தில் உருவாக்கப்படும். பிள்ளைகளுக்காக பணிசெய்கின்ற உயர் இலட்சியத்துடன் அனைத்து உத்தியோகத்தர்களும் செயற்படுதல் வேண்டும். இதன் மூலம் இலங்கையின் முன்மாதிரியான திணைக்களமாக கிழக்கு மாகாண நன்னடத்தை திணைக்களம் மாற்றப்படும் என தெரிவித்தார்.

இதன் போது திணைக்களத்தின் நிருவாக உத்தியோகத்தர், நன்னடத்தை காரியாலய பொறுப்பதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com