யாழில். பெற்றோரை கைவிடும் பிள்ளைகளின் தொகை அதிகரிப்பு
யாழ். குடாநாட்டில் பிள்ளைகளினால் கைவிடப்படும் முதியவர்களின் தொகை அதிகரித்துள்ளதாக யாழ்.மாவட்ட செயலக சமூக சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் பிள்ளைகளினால் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் பெரும் தெகையில் சேர்க்கப்படுவதாகவும் அவர்களை வீடுகளில் வைத்து பராமரிப்பதற்கு பிள்ளைகள் தயங்குவதாகவும் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் தெரிவிப்பதாக யாழ். மாவட்ட செயலக சமூக சேவைகள் பணிமனை குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக அரச உத்தியோகத்தில் உள்ள பிள்ளைகள் தங்கள் வேலைப்பளு காரணமாகவும் உரிய முறையில் பெற்றோர்களைக் கவனிக்க முடியாத நிலையில் இருப்பதன் காரணமாகவும் பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் தங்கவைத்து பராமரிப்புக்கான தொகையை மாதா மாதம் கட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு இங்கு பாரம்பரிய சொத்துக்களை பராமரிக்கும் பெற்றோர்களின் தொகையும் தனிமையில் வீடுகளில் வாழும் முதியவர்களின் தொகையும் அதிகரித்துள்ளது என யாழ். மாவட்ட செயலக சமூக சேவைகள் பணிமனை சுட்டிக்காட்டியுள்ளது.
0 comments :
Post a Comment