ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இன்று காலை அவுஸ்திரேலியாவுக்கு விஜயம்
பொதுநலவாய அமைப்பின் அரசாங்க தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ இன்று காலை அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டார். பொதுநலவாய அமைப்பின் அரச தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் அவுஸ்திரேலியாவில் பேர்த் நகரில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகிறது. இதில் பங்கேற்பதற்காவே ஜனாதிபதி இன்று அவுஸ்திரேலியாவுக்கு புறப்பட்டுச்சென்றார்.
உலகில் 54 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் இம்மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நடைபெறும். மனித உரிமைகள், இயற்கை வளம், நிர்வாகம், காலநிலை மாற்றம், வருமான முரண்பாடுகள், உணவு பாதுகாப்பு, நிதி பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் இம்மாநாட்டில் ஆராயப்படவுள்ளன. அரச தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டின் பின்னர் சிரேஷ்ட அதிகாரிகளின் கூட்டம், வர்த்தகர்களின் மாநாடு மற்றும் இளைஞர்களின் மாநாடும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment