துமிந்தவுக்கு இப்போது ஒரு வார்த்தையையும் பேச முடியாத நிலை
கடந்த எட்டாம் திகதி முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்தும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகருமான துமிந்த சில்வா தற்போது எந்த ஒரு வார்த்தையையும் பேச முடியாத நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரது மூளைப் பகுதி குறித்து கூடிய அவதானம் செலுத்தப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன
.
இதற்கு முன்னர் அவர் அம்மா என்ற வார்த்தையை உச்சரித்திருந்ததுடன் அதனை எழுதிக் காட்டியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment