ஏழையின் உயிரின் விலை வீடும் பணமும்!! கொலையாளி வெளியே வாறார்.
மன்னார் மூர்வீதி கிராம சேவகப் பிரிவில் நேற்று முன் தினம் 7 வயதுடைய செபஸ்தியான் அபிஷேக் எனும் சிறுவன் ஒருவன் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது. பள்ளிமுனை 50 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் இச் சிறுவனின் தகப்பன் மன்னார் சேவாலங்காவில் காவலனாக கடமையாற்றுபவர்.
பாடசாலை முடிந்து தந்தையாரோடு அலுவலகத்தில் வந்து நின்ற இச் சிறுவன் மிக்சர் வாங்க கடைக்குச் சென்ற சமயத்திலேயே விபத்திற்குள்ளாகி தன் உயிரை நீத்தான்.
மன்னார் மாவட்ட பிரபல வைத்தியரும் , முன்னாள் எம்ஓஎச் ஆக கடமையாற்றியவருமான டாக்டர் கதிர்காமநாதன் என்பவரின் கவலையீன வாகனச்செலுத்தல் காரணமாகவே இவ்விபத்து நேரிட்டுள்ளது.
மூர்வீதிப் பகுதியில் உள்ள தங்கு விடுதி ஒன்றில் இந்தியாவிலிருந்து வந்திருந்த ஒரு சாமியாரை சந்தித்து செல்ல புறப்பட்ட வேளை பிக்கப்பை பின்னோக்கி செலுத்தும் போது பின்னால் வந்த இச் சிறுவனை மோதியுள்ளார்.
விபத்துக்குள்ளான சிறுவனை உடனடியாக தனது வாகனத்தில் ஏற்றிக்கொண்ட வைத்தியர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன் சிறுவன் வலிப்பு ஏற்பட்டதானால் மரணித்துள்ளதாகவேறு கதையை முடிக்க முற்பட்டுள்ளார்.
ஊடகங்களுக்கு கதைகள் எட்டியதை தொடர்ந்து நிலைமைகள் சற்று கடினமானதையடுத்து பாதிக்கப்பட்ட இளைஞனின் பெற்றோருக்கு பணமும் : வீடொன்றும் கட்டித்தருவதாககூறி சட்டத்தின் பிடியிலிருந்த தப்பிக்க முற்பட்டுள்ளதாக அறியவருகின்றது.
ஏழைகளான சிறுவனின் பெற்றோர் வைத்தியரின் இவ்வேண்டுதலுக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
விபத்து என்பது விபத்தே வைத்தியர் திட்டமிட்டு கொலை செய்யவில்லை என்பது உண்மை. ஆனால் சிறுவன் வலிவந்து இறந்துவிட்டான் என கதையை முடிக்க வைத்தியர் செய்து முயற்சிக்கு என்ன தண்டனை? ஆதற்கு உடந்தைகளாகவுள்ள மன்னார் வைத்தியசாலை நிர்வாகம் உட்பட சந்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு யார் தண்டனை வழங்குவது?
பெற்றோருக்கு ஆசைவார்த்தைகளுடன் பெரும் வாக்குறதிகளை வழங்கியுள்ள வைத்தியர் அவ்வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உண்டு?
குறிப்பிட்ட விபத்து அங்கு ஓடித்திரியும் இராணுவ வாகனம் ஒன்றினால் ஏற்பட்டிருந்தால் புலிவால் ஊடகங்களுடன் சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாவரும் திட்டமிட்ட இனஅழிப்பு என விடயத்தை மாதக்கணக்கில்பேசி பாராளுமன்றில் சென்று இராணுவத்தினர் தமிழ் மக்களை திட்டமிட்டு இராணுவ வாகனத்தினால் மோதிக்கொல்கின்றனர் என்றிருப்பர்.
ஆனால் இன்று பாதிக்கப்பட்ட இளைஞனுக்காக நிதிகேட்டு வாதாடுவதற்கு வக்கீல்கள் கூட முன்வர தயங்குகின்றனர். காரணம் சிறுவன் வறுமைக்கோட்டின்கீழுள்ள குடும்பத்தை சேர்ந்தவன் என்பதாகும்.
இதேநேரம் ஊடகங்கள் இவ்விடத்தை பின்தொடர்கின்றபோது: ஊடகங்களுக்கு தகவல் வழங்கிய நபர்கள் தொர்பான கேள்விகள் எழுப்பப்படுவதாக அறிய முடிகின்றது.
வைத்தியரை காப்பாற்ற மன்னார் வைத்தியசாலை வட்டாரங்கள் முற்றுமுழுதாக செயற்பட்டு வருகின்றது. முறையான மரண பரிசோதனை செய்யப்பட்டு மரணச்சான்றிதள் வழங்கப்படாத நிலையில் பெற்றோரை அழைந்து உடலத்தை கொடுத்து உடன் புதைத்து விடுமாறு கேட்டுள்ளதுடன்: இன்று பிற்பகல் உடல் புதைத்தாகியும் விட்டது.
இதேநேரம் சிறுவனின் உடலம் வைத்திய சாலையின் பிரேதறையில் வைக்கப்பட்டிருந்தபோது எடுக்கப்பட்ட படங்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இப்படங்கள் எவ்வாறு வெளியே சென்றது ஊடகங்களை பிரேதவறையினுள் அனுமதித்தது யார் என்ற விசாரணைகளை மன்னார் வைத்திய சாலையின் டிஎம்ஓ ஊழியர்கள் மீது முடுக்கிவிட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
அத்துடன் சம்பந்தப்பட்ட வைத்தியர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் சார்பாக அங்கிருந்த வக்கீல்கள் யாவரும் ஆஜரானதுடன் பாதிக்கப்பட்ட சிறுவன் சார்பாக ஒரு கொசு இருக்கவில்லை எனவும் அவரை எதிர்வரும் பத்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக ஒருதகவலும்: அவர் தொடர்ந்து மன்னார் பொலிஸ் நிலையத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவலும் தெரிவிக்கின்றது. இது முற்றிலும் நடைமுறைக்கு முரணான செயற்பாடு: விபத்தாக இருந்தாலும் கொலைச் சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்கப்படுதல் வழமை. ஆனால் இங்கு சட்டமும் ஒழுங்கும் மீறப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள வைத்தியர் பெற்றோரின் ஒப்புதலுடன் நாளையே வெளிவரலாம் என தகவல்கள் கசிந்துள்ளது. இவ்வாறு வெளிவரும் வைத்தியர் பெற்றோருக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதற்கு யார் உத்தர வாதம் என்கின்ற கேள்விகளை நாம் மீண்டும் எழுப்புகின்றோம்.
ஏழைகளின் உயிரிற்கு இவ்வளவு தான் மதிப்பா??????
0 comments :
Post a Comment