Monday, October 31, 2011

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாயகம் திரும்பினார்

அவுஸ்திரேலியாவில்பேர்த் நகரில் இடம்பெற்ற 22 வது பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை தாயகம் திரும்பினர். இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகத்தில் நல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கும் புதிய இருதரப்பு உறவுகள் பலவற்றை கட்டியெழுப்புவதற்கும் இந்த விஜயம் வழிகோலியது என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மாநாடு நடைபெற்ற கால கட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷபல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சிங்கப்பூர், பாகிஸ்தான், மலேசியா, முருசீ ஆகிய நாடுகளின் பிரதமர்கள், இந்தியாவின் உபஜனாதிபதி ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்களாவர்.

அத்துடன் உகண்டா, சாம்பியா, கென்னியா, நைஜீரியா, மற்றும் கானா ஆகியநாட்டு தலைவர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்ததை மேற்கொண்டார்.

மாநாடு இடம்பெற்றகாலகட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக சிட்னி நகரில் வசிப்பவரான அருணாசலம் ஜெகதீஸ்வரன் என்பவரால் மெல்போர்ன், மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிகு அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டமைவிசேட அம்சமாகும்.

இவ்விஜயத்தின் போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்தித்தார். 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக விண்ணப்பித்துள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடலிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி தனது மாநாட்டின் முடிவுரையில் சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com