ஊழியர் மீது பாலியல் பலாத்காரம் புரிய முனைந்தவருக்கு பிணை.
தனது வியாபார நிலையத்தில் பணியாற்றிய யுவதியை பலாத்காரம் புரிந்ததாக கூறப்படும் கடை உரிமையாளர் ஒருவரை நீர்கொழும்பு பிரதான மஜிஸ்ரேட் 5 ஆயிரம்ரூபா ரொக்கப்பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டார்.
நீர்கொழும்பு-அலஜ் வீதியை சேர்ந்த நபர் ஒருவரே பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டவராவார். இந்த வழக்கின் முறைப்பாட்டாளரான யுவதி கட்டுநாயகாவை சேர்ந்தவராவார். இவர் நீர்கொழும்பு தெல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் விற்பனையாளராக பணியாற்றியுள்ளார்.
சந்தேக நபர் தனது வியாபார நிலையத்தில் கட்டப்பட்டு வரும் நவீன வசதிகளுடன் கூடிய மலசல கூடத்தை காண்பிப்பதாக கூறி அந்த யுவதியை அழைத்துச்சென்று பாலியல் வல்லறவு புரிய முயன்றதாகவும் இதன்போது அந்த யுவதி தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலினை எடுத்து சந்தேக நபரை தாக்கியதோடு, சந்தேக நபரிடமிருந்து தப்பியோடி வந்துள்ளதாகவும், சந்தேக நபருக்கு எதிராக நீர்கொழும்பு பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு பொலிசாரிடம் வழங்கிய முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment