Monday, October 31, 2011

உலகின் 700வது கோடி குழந்தை பிலிபைன்ஸில் பிறந்தது

நேற்று நள்ளிரவு 12 மணியுடன் உலக சனத்தொகை 700 கோடியை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று நள்ளிரவு சரியாக 12 மணிக்குப் பிறந்த குழந்தை 700வது கோடி குழந்தை என அழைக்கப்படுகிறது

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள நெரிசலான அரசு மருத்துவமனையில் உலகின் 700வது கோடி குழந்தை பிறந்ததுள்ளதென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைக்கு தானிகா மே கமாச்சோ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது ஒரு பெண் குழந்தை என்பது விசேட அம்சமாகும். கேமிலி டலூரா, புளோரன்ட் கமாச்சோ என்ற தம்பதியினருக்கு பிறந்த 2வது குழந்தைதான் உலகின் 700கோடியாவது குழந்தையாகும்.

2.5 கிலோ உடல் எடையுள்ள இந்தப் பெண்குழந்தை நேற்று நள்ளிரவு மணிலாவின் ஜோஸ் பாபெல்லா நினைவு மருத்துவமனையில் பிறந்தது. தானிகா என்றால் காலை நட்சத்திரம் என்று பொருள். பெற்றோரையும், குழந்தையையும் ஐ.நா. அதிகாரிகள் சந்தித்து கேக் கொடுத்து கொண்டாடினர்.

இதேவேளை, இலங்கையிலும் 700வது கோடி குழந்தைகள் இரண்டு பிறந்துள்ளதாக கொழும்பு சிறுவர் ரிட்ஜ்வே வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார். நேற்று நள்ளிரவு 12 மணி 1 செக்கனில் இரு குழந்தைகள் பிறந்ததாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு சுகாதார அமைச்சர் தலைமையில் இன்று காலை இடம்பெற்றது. நேற்று நள்ளிரவு கொழும்பு காசல் வைத்தியசாலையில் 12.01 மணிக்குப் பிறந்த குழந்தை 700 கோடியில் இணைந்து கொண்ட இலங்கை குழந்தையாக இடம்பிடித்துள்ளது. கிரிபத்கொட - பமுனுவிலவைச் சேர்ந்த தனுஷிகா டிலானி என்ற தாய்க்கு இக்குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு பரிசு வழங்கும் நிகழ்வு இன்று காலை வைத்தியசாலையில் சுகாதார அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது.

உலகின் 700 ஆவது கோடி குழந்தையை முதல் படத்திலும் இலங்கையில் பிறந்த குழந்தையை இரண்டாவது மூன்றாவது படங்களிலும் காணலாம்

Read more...

பொலிஸ் பொறுப்பதிகாரிகளை கண்காணிக்க நடவடிக்கை.

நாடு பூராகவும் உள்ள 428 பொலிஸ நிலையப் பொறுப்பதிகாரிகளின் பணி நடவடிக்கைகள் தொடர்பாக கண்காணித்து தவறுகள் இருப்பின் நடவடிக்ககைளை மேற்கொள்ளும் பொருட்டு விசேட குழு வொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் என். கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார்

இந்தச் செயற் திட்டதின் காரணமாக எந்த பொலிஸ் நிலைப் பொறுப்பதிகாரியும் ஊழல் மோசடியில் ஈடுபடுதல், கட்சி வேறுபாடின்றி பணிகளை மேற்கொள்ளல், அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராக கடமையைக் சரிவரச் செய்தல், ஒழுங்கு விதிகளை அவதானித்தல், அசையா சொத்து பரீசிலனை செய்தல் விடயங்களில் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் தொடர்பாக வேறு வேறாக கண்டறிந்து இந்தச் சோதனை செயற்படுத்தும்.

சில பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் ஊடாக பொது மக்களுக்கு சாதாரண சேவையை விரும்பியவாறு செய்வதற்கு அந்த பொலிஸின் முக்கியமானவர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பண்புகள் செயற்பாடுகள் எல்லாம் வலயத்திலுள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் விருப்பத்தின் பேரில் நடக்கும்.

பொலிஸினூடாக பொது மக்களுக்கு உயர் சேவையை வழங்குவதற்காக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் விருப்பமான பாதையில் இட்டுச் செல்லும் நோக்கிலேயே இந்த வேலைத் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

இதன் போது பொலிஸின் கௌரவம் பாதிக்கப்படாமமல் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தொடர்பாக தகவல் கிடைக்கும் பட்சத்தில் அது தொடர்பாக கடுமையான சட்ட நடவடிக்கை செயற்படுத்த பொலிஸ் மாஅதிபர் தீர்மாணம் எடுத்துள்ளார்.

Read more...

அரசாங்கத்தை வீழ்த்த இரகசிய நடவடிக்கை

படுகொலை செய்யப்பட்ட பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர தொடர்பான சம்பவத்தை பயன்படுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு மேலைத்தேய ஒற்றர் நிறுவனமொன்று நடவடிக்கை எடுத்துள்ளதாக “ரண்திவ” என்ற வார இறுதி சிங்கள பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.. அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூத்த அரசியல் உறுப்பினர்களை பயன்படுத்தி அரசாங்கத்தை வீழ்த்தும் இரகசிய நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரதான வர்த்தகர்கள் சிலர் முன்வந்துள்ளதுடன், இவர்கள் மூலமாக பிரதான புலளாய்வு பிரிவொன்று இதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முன்வந்துள்ளது.

லிபியாவை போன்றே இலங்கையின் நிலைமையும் காணப்படுவதாகவும், இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்பதே இந்த புலனாய்வு பிரிவின் நோக்கமாகும்.இதற்கு ஐ.தே.கவின் கொழும்பு மாவட்ட முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரும் உதவி வருவதாக அந்த செய்தி தெரிவிக்கின்றது.

Read more...

முதல் 10 மாதத்தில் மின்னல் தாக்கி 45 பேர் பலி

இந்த வருடத்தின் கடந்த 10 மாத காலத்தில் மின்னல் தாக்கி 45 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மாதத்தில் மாத்திரம் எட்டு பேர் மின்னல் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மின்னல் தாக்கத்திற்கு பாதுகாப்பினை பெற்றுக்கொள்வதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

மின்னல் தாக்கம் தொடர்பில் சிறுவர்களை தெளிவுபடுத்துவதுடன் சகலரும் அவதானமாக இருக்குமாறும், திணைக்களத்தின் கடமைநேர வானிலை நிபுணர் மெரில் மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

கல்முனையில் சர்வதேச சமாதானம் மற்றும் சிறுவர் தின விழா (படங்கள் இணைப்பு)

இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவும் மனித அபிவிருத்தித் தாபனமும் இணைந்து கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியில் இன்று திங்கட்கிழமை நடாத்திய சர்வதேச சமாதானம் மற்றும் சிறுவர் தின விழாவை நடத்தியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக் கலந்துகொண்டார். கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.தௌபீக், தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் ஆகியோர் பரிசளிப்பதையும் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம். படங்கள் காரைதீவு நிருபர் வி.ரி.சகாதேவராஜா

Read more...

பதுளை பசறை வீதியின் போக்குவரத்து பாதிப்பு

சீரற்ற கால நிலை காரணமாக பதுளை பசறை வீதியின் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பதுளை பசறை வீதியின் 2 மைல் கல் பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக பதுளை பசறை வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பதுளை பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. பலத்த மழையை தொடர்ந்து ஏற்பட்ட மண்ணரிப்பு காரணமாக மேட்டு நிலங்கள் இடிந்து வீழ்ந்துள்ளன.

பதுளை பொலிஸாரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் இணைந்து வீதியை திருத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போதைய மழையுடன் கூடிய காலநிலை நீடித்தால் நிலைமை மோசமடையலாமென அறிவிக்கப்படுகின்றது.

பதுளை பசறை வீதியில் பயணம் செய்யும் சாரதிகள் மின அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பதுளை பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Read more...

வீடுகளில் திருடி வந்த இருவர் நீர்கொழும்பு பொலிசாரால் கைது

நீர்கொழும்பிலும் அயற் பிரதேசங்களிலும் உள்ள வீடுகளிலும் திருடியதாக கருதப்படும் இரு சந்தேக நபர்களை திருடப்பட்ட பொருட்களுடன் கைது செய்துள்ளதாக நீர்கொழும.;பு குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பு முன்னக்கரை மற்றும் பசியவத்தை பிரதேசத்தை சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டவர்களாவர்; சந்தேக நபர்களால் திருடப்பட்ட நான்கு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை பொலிசார் மீட்டுள்ளனர்.

சிறிய ரக செலி மோட்டார் சைக்கிள் டி வி. டீ பினேயர்,தொலைக்காட்சி பெட்டி ஒன்று மூன்று மோட்டார் சைக்கிள் தலை கவசங்கள் ,மூன்று சைலன்சர்கள் ,வீடியோ கசட் ஒன்று என்பன பொலிசாரால் மீட்கப்பட்ட பொருட்களில் அடங்குகின்றன.சந்தேக நபர்கள் திருடுவதற்காக பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஒன்றையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்

Read more...

கொழும்பு மேயர் முஸம்மில் நாளை பதவியேற்பு

கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு கொழும்பு மாநகர சபை மேயராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட ஏ.ஜே.எம்.முஸம்மில் நாளை தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்கவுள்ளார். அத்துடன் பிரதி மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ள டைடஸ் பெரேராவும் நாளை கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

இதனை முன்னிட்டு கொழும்பு நகர மண்டபத்தில் நாளை காலை 9.30 மணிக்கு விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாநகர சபை தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிட்ட ஏ.ஜே.எம்.முஸம்மில் 50,000 ற்கும் மேற்பட்ட விருப்பு வாக்குகளைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Read more...

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தாயகம் திரும்பினார்

அவுஸ்திரேலியாவில்பேர்த் நகரில் இடம்பெற்ற 22 வது பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்றஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை தாயகம் திரும்பினர். இலங்கை தொடர்பாக சர்வதேச சமூகத்தில் நல் அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கும் புதிய இருதரப்பு உறவுகள் பலவற்றை கட்டியெழுப்புவதற்கும் இந்த விஜயம் வழிகோலியது என அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மாநாடு நடைபெற்ற கால கட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷபல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், சிங்கப்பூர், பாகிஸ்தான், மலேசியா, முருசீ ஆகிய நாடுகளின் பிரதமர்கள், இந்தியாவின் உபஜனாதிபதி ஆகியோர் இவர்களில் முக்கியமானவர்களாவர்.

அத்துடன் உகண்டா, சாம்பியா, கென்னியா, நைஜீரியா, மற்றும் கானா ஆகியநாட்டு தலைவர்களுடனும் ஜனாதிபதி பேச்சுவார்ததை மேற்கொண்டார்.

மாநாடு இடம்பெற்றகாலகட்டத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக சிட்னி நகரில் வசிப்பவரான அருணாசலம் ஜெகதீஸ்வரன் என்பவரால் மெல்போர்ன், மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிகு அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டமைவிசேட அம்சமாகும்.

இவ்விஜயத்தின் போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களையும் ஜனாதிபதி சந்தித்தார். 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்காக விண்ணப்பித்துள்ள இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய நாடுகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடலிலும் ஜனாதிபதி கலந்து கொண்டார்.

2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் பங்கேற்குமாறு ஜனாதிபதி தனது மாநாட்டின் முடிவுரையில் சர்வதேச தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் உட்பட பலர் ஜனாதிபதியின் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர்.

Read more...

நம்நாட்டிலும் கார் தயாரிப்பு (வீடியோ இணைப்பு )

இலங்கையில் ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை. இறப்பர், வாசனைத் திரவியங்கள் சிறந்து விளங்குவது போன்று தற்போது நமது நாட்டில் உற்பத்தியாகும் மைக்ரோகாரும் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது என்று மைக்ரோ கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் கலாநிதி லோரன்ஸ் பேரேரா தெரிவித்தார்.

மைக்ரோ கார் உற்பத்தி நிறுவனத்தின் குருநாகல் பிராந்தியக் கிளைக் காட்சி சாலை கண்டி வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு தலைமையுரை நிகழ்த்திய கலாநிதி லோரன்ஸ் பேரேரா அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட குருநாகல் மாநகர முதல்வர் காமினி பெரமுனகே கார் காட்சி சாலையைத் திறந்து வைத்தார். அத்துடன் குருநாகல் மாவட்டச் செயலாளர் திருமதி குசும் ஹெட்டிகே உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்த கொண்டனர்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

மைக்ரோ கார் நிறுவனம் தம் சேவையை கொழும்புக்குள் மாத்திரம் மட்டுப் படுத்திக் கொள்ளாமல் நாட்டின் நாலா பாகங்களிலும் தம் காட்சி சாலைகளைத் திறந்துள்ளது. அந்த வகையில் கண்டி, மாத்தறை போன்ற இடங்களில் காட்சி சாலைகள் திறக்கப்பட்டுள்ளன. நுகர்வோரின் தேவையைக் கருத்திற் கொண்டு குருநாகல் நகரிலும் இந்தக் கட்சி சாலை திறக்கப்பட்டுள்ளது. இந்தப் பிரதேச மக்களுக்கும் சிறந்த சேவையை காலடியில் வழங்குவதற்காகும். இதன் உற்பத்தி நிலையம் கூட பொல்கஹவெலவில்தான் அமைந்துள்ளன. இந்தக் காருக்கு நம்நாட்டு மக்கள் மத்தியில் அதிக வரவேற்புக்கள் கிடைத்துள்ளன. மக்களுடைய தேவை கருதி சகல வசதிகளுடனான வாகனங்களை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். அதில் பென்டா கார். மைக்ரோ கார், உழவ இயந்திரம், சொகு வாகனங்கள் எனப் பல அடங்கும்.

வேளிநாட்டு 'வொல்வோ' கம்பனி மற்றும் அதிசிறந்த நிறுவனங்களின் தொழில் நுட்ப அறிவுடன் மக்கள் விரும்பக் கூடியவாறு உற்பத்தி செய்து சந்தைப் படுத்துவதில் முன்னணி வகிக்கின்றோம். அது மாத்திரமல்ல தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்று மதி செய்கிறோம். நேபாளம் நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இன்னும் எதிர் காலத்தில் பாக்கிஸ்தான். பங்களதேஷ;, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகளுக்கும் இந்த வாகன வகைகளை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read more...

Sunday, October 30, 2011

கனடியத் தமிழருக்கு வந்த சோதனை! த.தே.கூ. இராப்போசனத்தில் கலந்துகொள்ள 100 டொலர்களாம்!

பிரபாரனுடன் இருந்து இராப்போசனம் உண்பதானால் அதற்காக விலைமதிப்பற்ற உயிரை சன்மானமாக வழங்கவேண்டும். இங்கு சம்பந்தன் குழுவுடன் இருந்து உண்பதற்கு 100 கனடிய டொலர்களை வழங்கவேண்டுமாம். அவ்வாறாயின் இங்கு சொல்லப்படும் கதை என்ன? பிரபாகரனுக்கு இவர்கள் நிகர் இல்லை என்று சொல்லப்படுகின்றதா? அன்றில்

தமிழ் மக்களுக்கு தீர்வு வாங்கிக் கொடுக்கப் போகிறோம் என அமெரிக்கா சென்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்காக, இன்று மாலை கனடா ஸ்காப்றோ எனுமிடத்தில் ஏற்பாடாகியுள்ள இராபோசன விருந்தில் விசேட விருந்தினர்களாக கலந்து கொள்ளவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், மாவை சேனாதிராஜா, சுபந்திரன் ஆகியோருடன் இணைந்து விருந்துண்ண விரும்புகின்ற கனடியத் தமிழர்கள் நுழைவுக்கட்டணமாக 100 கனடிய டொலர்களை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி பணம் பண்ணும் கைங்கரியத்தின் கதாநாயகனாக 'தமிழ் தேசியக் கூட்டமைப்பு கனடா கிளை' எனப்படும் பதியப்படாத அமைப்பொன்றின் தலைவர் நக்கீரன் எனப்படுகின்ற தங்கவேலு காணப்படுகின்றார்.

தமிழர்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்று அதனூடாக இலங்கையில் உயர் அந்தஸ்துடனும் சகல சௌபாக்கியங்களுடனும் வாழ்க்கை நடத்துகின்றவர்களைச் சந்திப்பதற்கு, புலம்பெயர்ந்து இயந்திரங்களாக சுழன்று உழைத்து, வேலைப்பழு தாங்க முடியாமல் வாழுகின்ற மக்கள் பணம் வழங்கும் அளவிற்கு இவர்கள் மக்களுக்கு செய்த சேவை என்ன? எனக் கேட்டபோது, எற்பாட்டாளர்களிடமிருந்தும் வரும் பதில்கள் மிகவும் நகைப்புக்குரியதாகவுள்ளன.

நாட்டிலிருந்து வருகின்ற நம்மவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக இந்த இராப்போசன ஏற்பாடுகளை செய்துள்ளார்களாம் என இழிச்சவாயன் கணக்கில் பதில் சொல்கின்றனர்.

அதற்கு எதற்கு தமிழ் மக்களிடம் 100 டொலர்கள் வாங்குகின்றீர்கள்? எனக்கேட்டபோது,

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இதுவரை 2 லட்சம் கனடிய டொலர்களை வழங்கியுள்ளார்களாம், அத்துடன் அந்தப்பணத்தை எடுப்பதற்கு வேறு வழயுமில்லையாம். இவங்கள் இங்க வாற நேரம் இவங்களைக் காட்டி சனத்திட்ட புடுங்கினா தவிர வேறு வழியில்லை, காரணம் சனம் இப்ப முதல் மாதிரியில்லை என்கின்றனர்.

அதெல்லாம் சரி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் மக்களுக்கு எந்த திருப்தியும் இல்லையே எனக்கேட்டபோது,

அது உண்மையாக இருக்கலாம், ஆனால் இவர்களை தவிர எங்களிடம் இப்போது யார் இருக்கிறார்கள் எனக் கேட்கின்றனர் ஏற்பாட்டாளர்கள், அதுமட்டுமல்ல சம்பந்தன் சிறந்ததோர் சட்டத்தரணி எனவும் அவரது மரணத்திற்கு பின் தமிழ் மக்களுக்கு ஓர் தலைவர் இல்லை என்று அம்புலிமாகக் கதை வேறு கூறுகின்றனர்.

தமிழ் மக்களுக்கு தலைமைதுவத்தை வழங்கக்கூடிய தலைவர்கள் தற்போது இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளலாம், இதற்கு காரணம் யார் என்ற கேள்விக்கு பதில் சொல்ல அவர்கள் தயாராக இல்லை. காரணம் இந்தநிலை உருவாவதற்கு இவர்களும் உடந்தையாக இருந்தவர்கள், தமிழ் மக்களின் தரமான தலைவர்களை புலிகள் சுட்டுக்கொன்றபோது கொலைக்காரர்களுக்கு சாமரம் வீசியவர்கள் , தற்போது அக்கொலைகளின் ஊடாக தலைவர்களான எச்சங்களை தலைவர்களாக தலையில் வைத்து ஆடுகின்றனர்.

புலிகளின் கோரத்தாண்டவ ஆட்டம் தமிழ் மக்கள் மத்தியிலிருந்த சகல புத்தி ஜீவிகளையும் பூண்டோடு அழித்ததோடு, கடந்த மூன்று தாசாப்தங்களில் அரசியல் எனும் பாடத்தை கற்பதும் அதன்பால் நாட்டம் செலுத்துவதும் மரணத்தையே தருவிக்கும் என்ற செய்தியை தமிழ் மக்களுக்கு சொல்லி நின்றது புலிப்பாசிசம்.

இலங்கையில் பாசிசத்தை ஏற்காத எந்த ஜீவராசியும் அரசியல் என்ற நாமத்தை உச்சரிக்க முடியாத அளவுக்கு அச்சத்தை ஏற்படித்தியிருந்ததுடன், அதன் பக்க விளைவுகள் சம்பந்தன் போன்ற பச்சோந்திகள் தலைவர்கள் ஆவதற்கு வழிசமைத்தும் கொடுத்தது.

40 மேற்பட்ட ஆண்டு அரசியல் வரலாற்றில் சம்பந்தன் தமிழ் மக்களுக்கு செய்தது என்ன?

பாசிசப் புலிகளை தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என உலகிற்கு சொன்ன ஒரே காரணத்திற்காக புலிகளின் வால்கள் சம்பந்தனின், சட்டத்தரணிப் புகழ் பேசுகின்றனர்.

ஆம், சம்பந்தன் ஓர் சட்டதரணிதான், அத்துடன் காலகாலமாக சம்பந்தன் அரசின் மீது லட்சக்கணக்கான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வந்திருக்கின்றார்.

இவர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்கள் நியாயமானதாயின், ஏன் இக்குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் நீதிமன்று செல்லவில்லை? இதுவரை தமிழ் மக்கள் சார்பாக சம்பந்தன் எத்தனை வழக்குகள் தாக்கல் செய்திருக்கின்றார்? அதில் எத்தனை வழக்குகளை ஜெயித்திருக்கின்றார்?

தேர்தல் பிரச்சார மேடைகளிலும், ஊடகங்களுக்கும், தமிழ் மக்களுடனான சந்திப்பின்போதும் தமிழ் மக்கள் மீதான அவலங்கள் என அடுக்கி கொண்டு செல்லும் சம்பந்தன் அதை சட்ட ரீதியாக அணுக முற்படாமைக்கான காரணம் என்னவென்று எடுத்துக்கொள்வது?

அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் என்று எடுத்துக் கொள்வதா?

குற்றச்சாட்டுக்களில் நியாயம் இருப்பின் நீதிமன்று செல்லாமைக்கான காரணம் , இப்பிரச்சினைகள் தொடர்ந்து இருந்தால்தான் தமது இருப்பு நிலைக்கும் என சம்பந்தன் தலைமையிலானோர் கருதுகின்றார்கள் என்ற உண்மையை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என ஆணித்தரமாக கூறுவதா?

தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு புலம்பெயர் நாடுகளில் குடைபிடிக்கும் பினாமிகளிடம் த.தே.கூ வினர் தமிழ் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று கேட்கின்றபோது, அவர்களால் அங்கு ஒன்றும் செய்ய முடியாதாம், அவர்கள் உயிர் அச்சுறுத்லுடன் வாழ்கின்றார்களாம் என்று பதில் வருகின்றது.

இவ்விடயத்தில் பினாமிகள் உண்மையை மறைக்கின்றார்களா? அல்லது இப்பினாமிகள் உண்மை தெரியாமல் பேசுகின்றார்களா?

இலங்கையில் சாதாரண தமிழ் மக்களை விட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சிறந்த பாதுகாப்புடன் உள்ளனர். ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் 2 தொடக்கம் 4 நன்கு பயிற்சி பெற்ற மெய்பாதுகாவலர்களுடன் வலம் வருகின்றனர்.

இவற்றுக்கும் அப்பால் சம்பந்தன் இன்றும் சந்திரிகா அம்மையாரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட குண்டு துளைக்காத வாகனத்திலேயே பவனி வருகின்றார். அத்துடன் மாவையும் அமெரிக்க தூதரகத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட குண்டுதுளைக்காத சொகுசு வாகனத்தில் வலம் வருகின்றார் என்பதை மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் புலிவால் ஊடகங்கள் அவர்களை இன்னும் இருட்டில் அடைத்தே வைத்துள்ளது. .

இவ்விடத்தில் சம்பவம் ஒன்றை நான் நினைவு படுத்தவேண்டும், ஒரு நாள் மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் மக்களுக்குமிடையேயான சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடாகியிருந்தது. அன்று திடீரென பாராளுமன்ற உறுப்பினரின் மெய்பாதுகாவலர்களில் ஒருவருக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்டுவிட்டது. சக மெய்பாதுகாவலர்கள் அவரை விட்டுவிட்டு நாம் போவோம் ஐயா என பாராளுமன்ற உறுப்பினரிடம் தெரிவித்தனர். ஆனால் நம்ம ஐயாவுக்கு வாந்திபேதி ஆரம்பித்துவிட்டது. நான்கு பாதுகாவலர் இல்லாமல் மக்கள் முன்செல்ல அவ்வளவு பயம். வயிற்றுக்கோளாறு என போன்பண்ணிச் சொல்லி நிகழ்வை ரத்துச் செய்து கொண்டார்.

மேற்படி விடயத்தில் இருந்து என்ன விளங்குகின்றது? தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் காணப்படும் பயம் தமிழ் மக்களைச் சந்திக்கவே. காரணம் இவர்கள் இதுவரை காலமும் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.

எது எவ்வாறாயினும் மக்கள் அவர்களுக்குத்தானே வாக்களிக்கின்றார்கள் என்ற நியாயமான கேள்வி எழலாம்.

தமிழ் மக்கள் தமிழ் உணர்வு ஊட்டப்பட்டுள்ளார்கள், தழிழர் அல்லாத தமிழ்த் தேசியம் பேசாத ஒருவருக்கு வாக்களிப்பது துரோகம் எனக் கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மாயையில் சிக்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் தமிழ் தேசியத்தின் பெயரால் வாக்களிக்கின்றனர். அதற்காக சம்பந்தனும் , மாவையும் , மண்டையன் குழுவின் தலைவராக சுரேஸ் பிறேமச்சந்திரனும் மக்களுக்கு செய்த சேவைக்காக மக்கள் வாக்களித்துள்ளார்கள் எனக் கருதுவது மடமையாகும்.

காட்டு மிராண்டி பாசிட்டுக்களான புலிகளை தேரில் வைத்து இழுத்த ஒரு மந்தைக் கூட்டம் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பச்சோந்தி கூட்டத்தை அந்த தேரில் ஏற்றி இழுக்க ஆரம்பித்துள்ளது. அதற்காக கனடா , லண்டன் ஆகிய நாடுகளில் கிளைகளையும் அமைத்துள்ளது. இக்கிளைகளைக் காட்டி அரசியல் செயல்பாடுகளுக்கென மக்களிடம் பணம் வசூலிப்பதே இவர்களது நோக்கம். அதன் முதற்படியாகவே தற்போது சம்பந்தன் கும்பலுடன் இருந்து உணவு உண்பதற்கு பணம் கோருகின்றனர்.

பிரபாரனுடன் இருந்து இராப்போசனம் உண்பதானால் அதற்காக விலைமதிப்பற்ற உயிரை சன்மானமாக வழங்கவேண்டும். இங்கு சம்பந்தன் குழுவுடன் இருந்து உண்பதற்கு 100 கனடிய டொலர்களை வழங்கவேண்டுமாம். அவ்வாறாயின் இங்கு சொல்லப்படும் கதை என்ன? பிரபாகரனுக்கு இவர்கள் நிகர் இல்லை என்று சொல்லப்படுகின்றதா? அன்றில் பிரபாகரன் போன்று இவர்கள் கொடூரமானவர்கள் அல்லர் இவர்கள் வயிற்றுப்பிளைப்புக்காக அரசியல் செய்பவர்கள், இவர்களின் பெறுமதியே 100 கனடிய டொலர்கள் தான் எனக் கொள்வதா?

Read more...

டீசல் விலை உயர்வால் விரைவில் பஸ் கட்டணம் அதிகரிக்குமாம்

அரசாங்கம் டீசல் விலையை அதிகரித்துள்ளதால் பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டுள்ளதென அந்த சங்கத்தின் செயலாளர் அங்ஜன பிரியன்ஜித் தெரிவித்துள்ளார். டீசல் விலை அதிகரிப்பால் குறுந்தூரம் செல்லும் பஸ்களுக்கு நாளாந்தம் 600 ரூபாவும் நீண்ட தூரம் செல்லும் பஸ்களுக்கு நாளாந்தம் 1200 ரூபாவும் நட்டம் ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

. இதனால் பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்வதற்கான தேவை ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து எதிர்வரும் புதன்கிழமை கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை ஒரு லிட்டர் 12 ரூபாவாலும், டீசல் 8 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை தெரிந்ததே.

Read more...

சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம்

அந்தமான் தீவில் சிறைவைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கந்தக்குளிய பிரதேசத்தில் நடத்தப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நேற்று சனிக்கிழமை காலை நீர்கொழும்பு-மங்குளிய பிரதேசத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேசத்தின் மீனவ பெண்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அருட் சகோதரிகள் அருட்சகோதரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக மாகாண மீன்பிடித் துறை அமைச்சர் சனத் நிசாந்த வழங்கிய வாக்குறுதியை அடுத்து நேற்று இரவு அந்த உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் விஷேட செய்தியாளர் மாநாடு நாளை பிற்பகல் 2 மணிக்கு கந்தக்குளி விகாரையில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. < செய்தியாளர் –எம்.இஸட். ஷாஜஹான்

Read more...

சொத்தை பல் கிருமிகளால் குடல் புற்று நோய் ஏற்படும்

பொதுவாக மனிதர்களை மார்பக மற்றும் நுரையீரல் புற்று நோய் தாக்கி வருகிறது அதற்கு அடுத்த நிலையில் குடல் புற்று நோய் உள்ளது. இந்த குடல் புற்று நோய் எவ்வாறு உருவாகிறது என கண்டறிய முடியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர். பல் சொத்தை மற்றும் தோலில் புண் போன்றவற்றை ஒரு வித பக்ரீரியாக்கள் ஏற்படுத்துகின்றன அந்த கிருமிகளுக்கும் குடல் புற்று நோய்க்கும் சம்பந்தம் இருக்கலாம் என கண்டு பிடித்துள்ளனர்.

இந்த புற்று நோய வருவதை முன் எச்சரிக்கையுடன் தடுக்க முடியும். உடல்எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இறைச்சியை குறைந்த அளவு சாப்பிடுதல். நார்ச்சத்து உணவை அதிகளவில் சாப்பிடுதல் போன்றவற்றால் குடல் புற்று நோய் வராமல் தடுக்கலாம் இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த புற்று நோய் ஆராய்ச்சி நிபுணர் சாரா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

Read more...

பிரபாகரன் தப்பிச் செல்ல முற்பாட்டால் பிடித்துக் கொடுக்க அமெரிக்கா தயாராகவிருந்தது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது புலிகளின் தலைவரும் அவரின் சகாக்களும் தப்பிச்செல்ல முற்பட்டால் அவர்களை கைது செய்வதற்கு தாம் உதவி செய்ய தயாராக இருப்பதாக அப்போது இலங்கைக்கு அமெரிக்கா உறுதி வழங்கியிருந்ததாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி ரொபட் ஒ பிளேக்கினால் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட தகவலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதென கொழும்பு ரெலி கிராப் தெரிவித்துள்ளது.

இதே வேளை அத்தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், புலனாய்வு பிரிவு தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்ட சகல புலிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாரானதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்க தூதுவர் ரொபட் ஒ பிளேக்கிற்கும் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் இடையில் நடைபெற்ற முன்னைய சந்திப்பின் போதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டிருந்தது. எவ்வாறெனினும் பொது மன்னிப்ப வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவித்தால் ஜே.வி.பி, மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற கட்சிகள் அதிருப்தி அடைய கூடும் என கோத்தபாய தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பெது மன்னிப்ப குறித்த பகிரங்கமாக அறிவிக்கப்படாவிட்டால் அந்த முயற்ச்சியில் பயனிருக்காது என பிளேக் தெரிவித்துள்ளார். யுத்த நிறுத்தம் , பாதுகாப்பு வலயம் மற்றும் பொது மக்களை மீட்டல் தொடர்பில் பாதுகாப்பு செயலர் தகவல்களை வழங்கியுள்ளார்.

Read more...

சீன சுரங்கத்தில் வெடி விபத்து: 29 பேர் பலி!

சீனாவில், அரசிற்கு சொந்தமான ‌நில‌க்க‌ரி‌ச் சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடி விபத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சியாலுசோங் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மாலை 6 மணி அளவில் இந்த எ‌ரிவாயு வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.

35 பேர் பணிபுரிந்துக்கொண்டிருந்த அந்த சுரங்கத்தில், வெடி விபத்திற்குப் பிறகு 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 29 பேரும் வெடி விபத்தில் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வச் செய்தி தெரிவிக்கிறது.

கடந்த மூன்று நாட்களில் ஏற்பட்டுள்ள 2வது எரிவாயு வெடி விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

கொழும்பில் 350 ஹெரோய்ன் போதைப்பொருள் வர்த்தகர்கள்

இலங்கையின் கொழும்பு நகரத்தில் மாத்திரம் 350 ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனையாளர்கள் இருப்பதாக தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் தொடர்ந்து தெரிவித்துள்ளதாவது, தற்போது இலங்கையில் 10 முதல் 15 வரையிலான ஹெரோயன் மொத்த விற்பனையாளர்கள், மாபியா என்ற அடிப்படையில் செயற்படுகின்றனர். கொழும்பு நகரத்தில் ஹெரோய்ன் போதைப்பொருள் விற்பனையாளர்களில் 45 பேர் ஹெரோய்ன் மொத்த வர்த்தகர்களாக செயற்பட்டு வருகின்றனர். இதேவேளை, நாடளாவிய ரீதியில் சுமார் 300 பேர் ஹெரோய்னை 50 கிராம் மற்றும் 100 கிராம் என்ற அளவுகளில் விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்களின்படி இலங்கைக்கு 90 வீதமான ஹெரோய்ன் பாகிஸ்தான் மற்றும் தென்னிந்தியா ஆகிய நாடுகளில் இருந்து எடுத்து வரப்படுகின்றன என்று ஒளடதங்கள் கட்டுப்பாட்டுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது
.

Read more...

நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களுக்கான விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. பெற்றோல், மண்ணெண்ணெய் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெட்ரோலின் விலை ஒரு லிட்டர் 12 ரூபாவாலும், டீசல் 8 ரூபாவாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

Read more...

Saturday, October 29, 2011

மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்காக 30வரை விண்ணப்பிக்க முடியும்

இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை தேசிய அடையாள அட்டைக்காக விண்ணப்பிக்க முடியுமென ஆட்பதிவு திணைக்களம் தெரிவிக்கிறது.

அடுத்த மாதம் 30ஆம் திகதியன்று 16 வயது பூர்த்தியடைகின்ற அனைத்து மாணவர்களினதும் விண்ணப்பங்கள் பாடசாலை அதிபர்கள் ஊடாக ஆட்பதிவு திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட வேண்டும் என ஆட்பதிவு திணைக்களஆணையாளர் ஜகத் விஜேவீர கேட்டுக் கொண்டுள்ளார்.

கல்வி பொது தாரதர சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 12 ஆம் திகதி ஆரம்பமாகிறது
.

Read more...

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது

தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் 'வியர்வையின் ஓவியம்' உழைக்கும் மக்கள் கலைவிழா அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.

இயக்குனர் கேசவராஜ் இயக்கும் 'பனைமரக்காடு' திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர், ஏலவே ஜனாதிபதி விருது-(2001), அகஸ்தியர் விருது(2011), சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.

இவரது 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read more...

ரிவைஓ ஊடாக வன்னி வந்த அனைவரும் ஆயுதப் பயிற்சிகளை பெற்றுக்கொண்டனராம்.

இலங்கையில் சமாதான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற கால கட்டத்தில் ரிவைஓ எனப்படும் தமிழ் இளையோர் அமைப்புகளுடாக புலம்பெயர் நாடுகளிலிருந்து வன்னிவந்த அவ்வமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் புலிகளிடம் ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டுள்ளதாக, புலிகளின் சர்வதேச வலையமைப்பின் பொறுப்பாளாராகவிருந்த கஸ்ரோவின் உதவியாளர் நவரத்தினம் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவில் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவ்வழக்கினை ஜெகன் என அழைக்கப்படும் அருணாச்சலம் ஜெகன் மற்றும் மீனா கிருஸ்ணமூர்த்தி எனப்படுகின்ற இருவர் தாக்கல் செய்துள்ளனர்.

மேற்படி வழக்கினை தாக்கல் செய்துள்ள மீனா கிருஸ்ணமூர்த்தி என்பர் அவுஸ்திரேலிய தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ள நேர்காணலில் தான் வன்னியில் இருந்தபோது பல தரப்பட்ட விடயங்களை நேரடியாக அனுபவித்ததாகவும், தனது கணவர் புலிகளின் சிவில் நிர்வாக பிரிவில் கணக்காளராக பணியாற்றியதாகவும், தெரிவித்துள்ளதுடன் தான் கர்பிணியாகவிருந்தபோது யுத்த உக்கிரம் காரணமாக தனது குழந்தை வயிற்றினுள் இறந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேநேரம், மேற்படி மீனா கிருஷ்ணமூர்த்தி வன்னியில் புலிகளின் ஆயுதப்பயிற்சியை பெற்றுக்கொண்டு மாலதி படையணியில் இருந்தவர் எனவும் இவரது இயக்கப்பெயர் ஈழநதி எனவும் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாகவிருந்த கஸ்ரோவின் உதவியாளராக செயற்பட்டுவந்த கனகரட்ணம் பிரபாகரன் தெரிவிக்கின்றார்.


அவுஸ்திரேலிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட விடயங்களுக்கு பதிலளிக்கும் வகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள பிரபாகரன் மேலும் ஈழநதி முத்தையன் கட்டுப்பிரதேசத்தில் ஆரம்பப்பயிற்சிகளையும் பளையில் போர்ப்பயிற்சியையும் பெற்றுக்கொண்டதாவும் பின்னர் புலிகளின் போர்ப்படையணி ஒன்றின் சிரேஸ்ட உறுப்பினரான குபேரன் எனப்படுகின்ற தயாபரனை திருமணம் செய்து கொண்டாதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வெளிநாடுகளின் உள்ள புலிகளின் முக்கியஸ்தர்களான பாதிரி இமானுவேல், அவுஸ்திரேலியாவில் வழக்கு தாக்கல் செய்துள்ள ஜெகன், அமெரிக்காவில் புலிகளுக்காக ஆயுதங்களை கொள்வனவு செய்ய முயன்று சிறை அனுபவித்துவரும் சதா எனப்படும் இளைஞன் உட்பட பல்வேறுபட்டோர் சம்பந்தமான தகவல்களை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

அவரது நேர்காணலை முழுமையாக கேட்க இங்கு அழுத்தவும்.

Read more...

சரணடைகிறார் கடாபி மகன்?

கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் மும்மர் கடாபியின் மகனுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் சர்வதேச குற்றவியல் கோர்ட் ஈடுபட்டுள்ளதாக அதன் தலைமை வழக்கறிஞர் லூயிஸ் மொரினோ தெரிவித்துள்ளார். தற்போது மாலியில் உள்ள பாலைவனப்பகுதியில், கடாபியின் மகன் சய்ப் அல் இஸ்லாம் கடாபி மறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் சர்வதேச கோர்ட்டில் சரணடையும் பட்சத்தில் அவரிடம் நியாயமான விசாரணை நடைபெறும் என்றும் சர்வதேச கோர்ட் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read more...

கருக்கலைப்பு நிலையம் சுற்றிவழைப்பு 60 வயது பெண் உட்பட நால்வர் கைது.

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் மிகவும் சூட்சுமமான முறையில் ஜா-எல பகுதியில் இயங்கிய கருக்கலைப்பு நிலையமொன்றை சுற்றிவளைத்த பொலிசார், நடத்துனர் உட்பட நால்வரை கைது செய்துள்ளனர். கைதான நால்வரும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்ததுடன் நீதிமன்றின் உத்தரவின் பேரில் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கருக்கலைப்ப நிலையத்தை நடாத்தி வந்த 60 வயது பெண்ணும் அந்த நிலையத்துக்கு கருக்கலைப்புக்கு வந்திருந்த பெண்கள் உட்பட அங்கிருந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் .

குறித்த நிலையம் ஜா-எல வெலிகம்பிட்டிய கிறிஸ்துராஜ மாவத்தையிலுள்ள வீடொன்றில் மேல்மாடியில் இயங்கி வந்துள்ளது. இந்த கருக்கலைப்புக்காக வரும் நபரொருவரிடம் 18 ஆயிரம் ரூபா அறவிட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக தெரிவிக்கும் ஜா-எல பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

இதேநேரம் இலங்கையில் 10 தொடக்கம் 14 சத வீதமான சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என குடும்ப சுகாதாரப் பிரிவு சுட்டிக் காட்டியுள்ளது. இவர்களில் 7 சத வீதமானோர் கர்ப்பம் தரிக்கின்றனர் எனவும் அது தெரிலித்துள்ளது.

இதேவேளை, பெண்களுக்கு ஆலோசனை வழங்குவதற்கென நாடளாவிய ரீதியில் ஆலோசனை நிலையங்களை அமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக மகளிர் விவகார, சிறுவர் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வினையையும் ஆலோசனைகளையும் வழங்கும் பொருட்டே இந்த ஆலோசனை நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

Read more...

எனது உயர்வுக்கு அமைச்சர் நிமல்லான்சாதான் காரணம்- நீர்கொழும்பு மேயர் அன்ரனி

நான் கனவில் கூட மேயராவேன் என்று நினைத்ததில்லை. இறைவனின் நாட்டப்படியே எல்லாம் நடக்கிறது .இறை நாட்டப்படி ஒருவருக்கு கிடைக்க இருப்பது கிடைத்தே தீரும். .நீர்கொழும்பு நகர அபிவிருத்தியின் தந்தையும் முன்னாள் மேயரும், மேல்மாகாண அமைச்சருமான நிமல்லான்ஸாதான் எனது வளர்ச்சிக்கு பிரதான காரணகர்த்தாவாவார் என்று நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் அன்ரனி ஜயவீர குறிப்பிட்டார்.

நீர்கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர், பிரதி மேயர் ஆகியோரின் பதவியேற்பு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மாநகர சபையின் உறுப்பினர்களாக தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் பதவியேற்பு நிகழ்வும் வெள்ளிக்கழமை(28) இடம்பெற்ற போதே, பதவியேற்பின் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் மேயர் அன்ரனி ஜயவீர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பதவியேற்பு மற்றும் சத்திய பிரமாண நிகழ்வு நேற்று காலை 8 மணியளவில் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க , மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்சா, மேல்மாகாண சபை உறுப்பினர்கள். கம்பஹா மாவட்ட செயலாளர் ,நீர்கொழும்பு பிரதேச செயலாளர் ,கட்சி முக்கியஸ்தர்கள் சமயத்தலைவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்

பிரதி மேயர் சகாவுல்லாஹ் அங்கு உரையாற்றுகையில்,

நீர்கொழும்பு மாநகர சபை கடந்த காலங்களில் ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக இருந்தது. எமது ஆட்சி இருந்தது சிறிய காலப்பகுதியாகும் . ஆனால் அந்த சிறிய காலப்பகுதியில் நகரம் மிகப்பெரிய அபிவிருத்தியை கண்டது. இதை யாரும் மறுக்க முடியாது. தேர்தலில் போட்டியிட்ட 32 வேட்பாளர்களின் முயற்ச்சியினால்தான் எமது கட்சி 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேலதிக வாக்குகளால் தேர்தலில் வெற்றி பெற்றது என்பதை யாரும் மறக்க கூடாது என்றார்

மேல்மாகாண அமைச்சர் நிமல்லான்ஸா அங்கு உரையாற்றுகையில்,

1997 ஆம் ஆண்டு 500 மேலதிக வாக்குகளாலும் 2011 ஆம் ஆண்டு 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளாலும் நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் எமது கட்சியினால் வெற்றி பெற முடிந்தது. இந்த வளர்ச்சிக்கு காரணம் நாங்கள் நகரில் மேற்கொண்ட பாரிய அபிவிருத்தி திட்டங்களாகும் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே பத்து முதல் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளால் நாங்கள் வெற்றி பெறுவொம் என்றும், 16 உறுப்பினர்கள் தெரிவாவார்கள் என்றும் நான் குறிப்பிட்டேன். அது போலவே நடந்தது .நகரில் 75 சத வீதமான வீதி அபிவிருத்தி வேலைகள் நிறைவடைந்துள்ளன. எஞ்சிய 25 வீத வேலைகள் இனி நடைபெறும். நகரின் வாராந்த சந்தைகள் உட்பட மேலும பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. கொழும்ப நகரத்துக்கு அடுத்ததாக பொருளாதார ரீதியில் மிகவும் முன்னேற்றமடைந்த நகரமாக நீர்கொழும்பு நகரம் அபிவிருத்தி செய்யப்படும் இதுவே எமது திட்டமாகும் என்றார்.

மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாஅங்கு உரையாற்றுகையில்,

புதிய மேயரின் சேவையை நகர மக்கள் ஏற்றுக்கொண்டதன் காரணமாகவே அவரால் 21 வருட காலமாக மாநகர சபை உறுப்பினராக இருக்க முடிந்துள்ளது. எமது ஜனாதிபதி சகல இன மக்களையும் நேசிப்பவர் பலஸ்தீன முன்னாள் தலைவர் யாசிர் அரபாத் ஒரு தடைவை இலங்கை வந்த போது ஒரு விடயத்தை என்னிடம் கூறினார். தான் இலங்கை வந்ததற்கு இரண்டு பிரதான காரணங்கள் இருப்பதாகவும், அதில் ஒன்று உலகின் முதல் பெண் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக என்றும் இரண்டாவது காரணம் மஹிந்த ராஜபக்க்ஷ அவர்கள் என்றும்தெரிவித்தார். இவ்வாறு மேல்மாகாண ஆளுநர் அலவி மௌலானா குறிப்பிட்டார்.

இந்திகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினராக தெரிவாகியுள்ள மொஹமட் இஹ்சான் மேல்மாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். செய்தியாளர் –எம்.இஸட்.ஷாஜஹான்

Read more...

Friday, October 28, 2011

பொலிஸார் மற்றும் வாகனங்களுக்கு காயம் ஏற்படுத்தியோருக்கு விளக்கமறியல்

தெரிவித்து கடந்த மே மாதம் 29 ,30, ஆம் திகதிகளில் கட்டுநாயக சுதந்திர வர்த்தக வலய பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸ் அதிகாரிகளுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் காயம் ஏற்படுத்தியமை வாகனம்களுக்கும் கட்டிடம்களுக்கும் சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட 8 சந்தேக நபர்களை நீர்கொழும்பு மேலதிக நீதவான் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று உத்தரவிட்டார். சந்தேக நபர்கள் எட்டு பேரில் சுதந்திர வர்த்தக வலய ஊளியர்களும் அடங்குவர்.

ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 29 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் (அதிகாரிகள் அடங்கலாக) காயமடைந்து வைத்திய சாலைகளில் அனுமதிக்கப்பட்டதாகவும் , வாகனம்களுக்கும் கட்டிடம்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டதாகவும் குற்ற புலனாய்வு திணைக்களம் வழக்கின் குற்றப்பத்திரத்தில் தெரிவித்துள்ளது

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com