உள்ளூராட்சி மன்ற தேர்தல்களுக்காக அரச வளங்களை அரசாங்கம் பயன்படுத்துகிறது- UNP
நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் நீதியானதும் நேர்மையானதுமான முறையில் நடைபெற வேண்டுமாயின் அரசாங்கத்தின் அரசியல் கட்சிகளும் தலைவர்களும் தேர்தல் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளோரும் அரச சொத்துக்களை பாவிப்பது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஜக்கிய தேசியக் கட்சி தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரசார வேலைகளுக்காக அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் அரச வாகனங்களையும் கட்டடங்களையும் காரியாலங்கள் உட்பட அரச வளங்கள் பலவற்றை பயன்படுத்துவதாக ஜக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தேர்தல்கள் ஆணையாளரிடம் அறிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக அரசாங்க அமைச்சர்கள் வேட்பாளர்களை மட்டும் இணைத்துக் கொண்டு பல்வேறு உதவிகளையும் செய்து வருவதோடு புனரமைப்பு வேலைகளையும் மேற்கொள்வதாகவும் இவை அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறும் திஸ்ஸ அத்தனாயக்க தேர்தல்கள் ஆணையாளரிடம் கேட்டுள்ளார்.
...............................
0 comments :
Post a Comment