காலை உணவில் நஞ்சு. வர்த்தக வலய ஊழியர்கள் பலர் வைத்தியசாலையில்
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய தொழிpற்சாலை ஒன்றின் ஊழியர்;கள் சிலர் காலை அகாரமாக உட்கொண்ட உணவு நஞ்சடைந்ததன் காரணமாக சுகயீனமுற்ற நிலையில் இன்று காலை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுகயீனமுற்ற நிலையில் 135 ஊழியர்கள் வரை வைத்தியசலையில் அனுமத்திக்கப்பட்டு, அவர்களில் பெரும்பாலானவர்கள் சிகிச்சை பெற்று பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர்.15 பேர் வரையானோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் எவரும் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க நெஸ்ட் நிறுவன ஊழியர்களே சுகயீனமுற்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களாவர்.
0 comments :
Post a Comment