78 நாடுகளுக்கு இணையத்தினூடான வீசா அங்கீகாரம்
78 நாடுகளுக்கு இணையத்தினூடாக வீசாவுக்கான முன் அங்கீகாரத்தை பெற்றுகொள்வதற்கான புதிய முறையொன்றான “இலத்திரனியல் பயண அங்கீகாரமளிப்பு” முறைமையை நடைமுறைபடுத்த குடிவரவு- குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதன் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி காலிமுகத்திடல் ஹோட்டலில் பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
குறுங்கால தேவைக்காக இலங்கைக்கு வருகின்ற மற்றும் இலங்கையூடாக பயணம் செய்கின்ற எந்தவொரு வெளிநாட்டவரும் www.eta.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக “இலத்திரனியல் பயண அங்கீகாரமளிப்பு” க்கு விண்ணபிக்க முடியும். வெளிநாட்டவர்களின் வசதிகருதி ஒன்பது சர்வதேச மொழிகளில் இது தொடர்பான விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். எனினும் விண்ணப்பதாரிகள் ஆங்கில மொழியில் மட்டுமே விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
இவ் “இலத்திரனியல் பயண அங்கீகாரமளிப்பு” க்காக நிருவாகக் கட்டணம் மாத்திரமே அறவிடப்படவுள்ளதுடன், மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர் பிரஜைகளுக்கு பரஸ்பர புரிந்துணர்வு உடன்படிக்கைகளுக்கு ஏற்ப முன்னர் போன்றே பிரவேச இடத்தில் கட்டணமின்றி வீசா வழங்கும் முறைமை தொடர்ந்து அமுலில் இருக்கும்.
2016 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதை இலக்காகக் கொண்டும், மஹிந்த சிந்தனையின் நோக்கொன்றான இலங்கையை சர்வதேச ரீதியாக முக்கிய பொருளாதார மத்திய நிலையமாக மாற்றுதல் என்ற இலக்கையும் அடிப்படையாகக் கொண்டு இவ் வீசா அங்கீகாரமளிப்பு முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment