Friday, September 30, 2011

இராணுவத்திலிருந்து தப்பியோடிய 60 ஆயிரம் பேரை கைதுசெய்ய உடன் நடவடிக்கை

சட்ட ரீதியற்ற முறையில் இராணுவத்திலிருந்து ஒதுங்கியிருக்கும் 60 ஆயிரம் இராணுவ வீரர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் நிஹால ஹபபுஹாராச்சி குறிப்பிட்டுள்ளார். இவர்களுக்கு மீண்டும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக இதுவரை தீர்மானிக்கப்படவில்லை என்றும் கைது செய்யப்பட்டதன் பின்னர் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இராணுவ சேவையிலிருந்து விலகுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இந்த வருடம் ஆகஸ்ட் 15 வரையான காலப்பகுதியில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய 11 ஆயிரம் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை சட்ட ரீதியான முறையில் சேவையிலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் இராணுவ பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஒக்டோபர் முதலாம் திகதி முதல் வாகனங்களுக்கு ஆசனப்பட்டி அணிவது கட்டாயம்


நாளை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆங்கில இலக்கத் தகடுகள் கொண்ட வாகனங்களைச் செலுத்துபவர்கள் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கராஜ் இலக்கம் அல்லது சி.சி. இலக்கத்துடன் வாகனங்களை செலுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் இறக்குமதி மோசடிகளைத் தடுப்பதற்காக கராஜ் இலக்கத்துடன் அல்லது சி.சி. இலக்கத்துடன் வாகனங்களை செலுத்துவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

வாகனம் ஓட்டும் போது செல்லிடத் தொலைபேசியில் உரையாடுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Read more...

முகத்தில் பாய்ந்த கிரேனைட்டை அகற்றி பெண்ணை உயிர்பிழைக்க வைப்பு

கிரேணைட் ஊவு கருவியால் ஏவப்பட்ட கிரேனைட் குண்டொன்று எத்தருணமும் வெடிக்கலாம் என்ற நிலையில் பெண்ணொருவரின் முகத்தை ஊடுருவியதை அடுத்து மருத்துவர்கள் துணிகரமான அறுவைச்சிகிச்சை மேற்கொண்டு குண்டை அகற்றி பெண்ணின் உயிரை காப்பாற்றிய சம்பவம் வடமேற்கு மெக்ஸிகோவிலுள்ள சின்லோவா மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது.

3 பிள்ளைகளின் தாயான (32 வயது) கார்லா புளோரெஸ் என்பவரே இவ்வாறு அதிசயிக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்துள்ளார். அவர் குலியகன் நகரிலுள்ள வீதியில் கடல் உணவை விற்றுக்கொண்டிருந்த போது மேற்படி குண்டு அவரை தாக்கியுள்ளது.

இந்நிலையில் மயங்கி விழுந்த கார்லா மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார் இதனையடுத்து மருத்துவர்கள் குண்டு செயலிழக்க வைக்கும் பிரிவினரின் உதவியுடன் கார்லா முகத்தில் ஊடுருவிய குண்டை அகற்றி அவரது உயிரை காப்பாற்றியுள்ளனர்.

முகத்தில் கிரனேட் பாய்ந்த நிலையில் வைத்தியசாலை கொண்டுவரப்பட்டிருந்த பெண்ணின் அருகில் செல்வதற்கு பல வைத்தியர்களும் அச்சம் தெரிவித்திருந்த நிலையில் வைத்தியசாலையின் இயக்குனரால் விரும்பியவர்கள் முன்வரலாம் என விடுக்கப்பட்ட வேண்டுதலை அடுத்து நான்கு வைத்தியர்கள் தாமாக முன்வந்து இதனை செய்துள்ளனர்.

சிகிச்சைக்கு முன்னர் எடுக்கப்பட்ட எக்றே படத்தினை இராணுவ நிபுணர்களிடம் காண்பித்தபோது, சிறு அசைவு ஏற்பட்டாலும் குண்டு வெடிக்கலாம் என அவர்கள் எச்சரிக்கை தெரிவித்திருந்தமை குறிப்பிட்தக்கதாகும்.


Mexican Woman Has Live Grenade Lodged in Her Face

ShareKarla Flores, a 32-year-old street vendor from Culiacán, Mexico can consider herself after she survived being shot in the face with a live grenade.

On August 6, 2011 Mexico’s “Miracle Woman”, as she’s come to be known, was selling seafood on the street when all of a sudden she heard an explosion. As she turned around to see what had happened, the woman was hit in the face by an object, and the powerful impact caused her to fall on the sidewalk. She felt a burning sensation in her face and when she touched the point of impact with her hand there was a lot of blood. Karla passed out after that, but luckily for her an anonymous passerby took her in his car and drove her to the nearest hospital. There she woke up and when the doctors asked her about the wound Flores told them she thought a stone hit her. But their investigations would reveal it was something a lot deadlier than a stone.

From the x-ray and tomography, doctors could tell some sort of projectile was stuck between her superior and inferior jawbones, and military experts called on the scene identified it as the live explosive head of a fragmentation grenade. It had been fired with a grenade launcher, causing the bang Karla heard, but it didn’t detonate when it hit her face. Still, the grenade was extremely dangerous, just one wrong move and it could go off killing everyone in a 10-meter radius. The hospital’s patients and staff were evacuated, and something had to be done to help Karla, who could barely breath with the projectile locked in the side of her face.

Most of the doctors on duty were too scared to even go near Karla, let alone operate on her, knowing that one wrong move could blow them sky high, but when chief Gaxiola Meza asked for volunteers, four brave souls stepped up to the challege: anesthesiologists Felipe Ortiz and Cristina Soto, nurse Rodrigo Arredondo and doctor Lidia Soto. Together with two explosive experts from the Mexican army, they took Karla and all necessary equipment to an open field where in case of an explosion no one but them would be hurt. The doctors, who weren’t wearing any kind of armor, performed a tracheotomy on Karla, then proceeded to extract the grenade head, under the guidance of military experts. The operation lasted until midnight, but at the end, the projectile was safely removed and the patient saved.


Read more...

ஜேவிபி யின் உள்வீட்டுப் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் பொறுப்பல்லவாம்.

தற்போது மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளின் பின்னணியில் அரசாங்கம் இருப்பதாக கூறுப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானதாகும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியில் ஏற்பட்டுள்ள பிளவுகள் பிரச்சினைகள் தொடர்பாக பதிலளிப்பதற்கு தேவையோ அவசியமோ அரசாங்கத்திற்கு கிடையாது என்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.

ஜே.வி.பி ஜனநாயக ரீதியில் இயங்கும் அரசியல் கட்சி என்றும், ஏற்பட்டுள்ள பிரச்சினை கட்சியின் உறுப்பினர்களிடையே ஏற்பட்டுள்ள உள்ளக பிரச்சினை எனவும், அதை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர்
தெரிவித்தார்.

இலங்கையில் அரசியல் கட்சிகளுக்குள் பிளவுகளை உருவாக்குவதற்கு வெளிநாட்டு சக்திகளுக்கு தேவை இருப்பதாக கருதுவது கடினம் என்றும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கதவுகள் யாருக்கும் உள்வரவோ , வெளியேறவோ திறந்தே உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Read more...

யானை தாக்கி மரணம்

திருகோணமலை சலப்பை ஆறு பிரதேசத்தில் நேற்று அதிகாலை யானை தாக்கியதில் 54 வயதுடைய பிரதேசவாசி ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இப்பிரதேசத்தில் அடிக்கடி யானைகளினால் மக்களும் அவர்களுடைய சொத்துக்களும் அழிக்கப்படுவதாகவும் பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

2007 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை யானை தாக்கி சுமார் 07 பேர் மரணமடைந்துள்ளதாகவும் 10 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Read more...

18 பேருடன் இந்தோனேசிய விமானம் வீழ்ந்து நொருங்கியது.

இந்தோனீசியாவில் 18 பேருடன் புறப்பட்ட ஒரு சிறிய விமானம் பாதி வழியில் மலைப் பகுதியில் விழுந்து நொறுங் கியதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மூன்று சிப்பந்திகள் மற்றும் பயணிகள் 15 பேருடன் அந்த விமானம் நேற்று காலை சுமத்ராவில் உள்ள மேடான் நகரிலிருந்து அருகிலுள்ள அச்சே மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றதாகவும் ஆனால் பாதி வழியில் அந்த விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்ட தாகவும் இந்தோனீசிய போக்கு வரத்து அமைச்சின் பேச்சாளர் பம்பாங் எர்வான் கூறினார்.

அந்த விமானம் விழுந்து நொறுங்குவதற்கு சற்று முன்பு அந்த விமானி ஆபத்தில் இருப்பதாக சமிக்ஞை அறிவிப்பை அனுப்பியதாகவும் பம்பாங் கூறினார். அந்த விமானம் பஹோரோக் கிராமத்தின் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியதை குடியிருப்பாளர்கள் பார்த்ததாக பம்பாங் கூறினார்.

புகை கக்கியவாறு ஒரு விமானம் வட்டமிட்டபடி மிகத் தாழ்வாக பறப்பதைப் பார்த்த தாகவும் அதன் பிறகு அந்த விமானம் தன் பார்வையிலிருந்து மறைந்து விட்டதாகவும் குடி யிருப்பாளர் ஒருவர் கூறினார்.

விமானம் ரேடார் திரை யிலிருந்து மறைந்ததும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். கொட்டும் மழையில் மிகுந்த சிரமப்பட்டு அவர்கள், விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தை கண்டுபிடித்தனர்.

ஒரு மலைப்பகுதியில் அந்த விமானம் விழுந்து கிடப்பதை மீட்புக் குழுவினர் பார்த்தனர். அந்த விமானத்தின் இறக்கைகள் மட்டுமே சேதம் அடைந் திருப்பதால் விமான சிப்பந்திகள் உள்பட அந்த விமானத்தில் பயணம் செய்தவர்கள் அனை வரும் உயிர் பிழைத்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் இதுபற்றிய தகவல் எதுவும் இன்னும் தெரிய வில்லை. இந்தோனீசியாவில் ஹெலி காப்டர் உள்ளிட்ட விமான விபத்துகளும் படகு, ரயில் விபத்துகளும் அடிக்கடி நிகழ் கின்றன. அளவுக்கு அதிகமாக பயணிகள் ஏறுவதும் மோசமான பாதுகாப்பு தரங்களுமே இந்த விபத்துகளுக்கு காரணம் என்று இந்தோனீசிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

Read more...

தொம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் மரணம்.

கம்பஹா பிரதேசத்தில் தொம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தைச் சுற்றி வளைத்த பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸ் நிலையம் மீது பொதுமக்கள் தாக்குதலை நடத்தினர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டோர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்தினர். அவர்கள் சில மோட்டார் சைக்கிள்களுக்குத் தீ வைத்ததன் காரணமாக பொலிஸ் நிலைய வளாகத்தில் தீச்சுவாலை காணப்பட்டது. பொலிஸ் நிலைய கட்டிடத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றிரவு தொம்பே பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கட்டுலந்த பிதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தில் மரணமாகியுள்ளார்.

இதன் காரணமாக ஆத்திரமுற்ற பொது மக்கள் பொலிஸ் நிலையத்தை இன்று சுற்றி வளைத்து பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தீயை அணைக்க வந்த தீயணைப்பு படைப்பிரிவு வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க அங்கு விசேட அதிரடிப்படையினரும் மேலதி பொலிஸாரும் விரைந்துள்ளனர்.

இதேவேளை, தனது மகனின் மரணச் செய்தியை கேள்விப்பட்ட அந்த இளைஞனின் தந்தையார் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிகின்றது.

பொலிஸ் நிலையத்தை சூழவுள்ள வீதிகள் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது.

Read more...

பொலிஸ் பொதுமக்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாம். கோத்தா

பொதுமக்களுக்கும் பொலிசாருக்குமிடையிலான தொடர்புகள் இன்று அன்னியப்பட்டுள்ளன அவற்றை சீர்செய்வதாயின் மீண்டும் சிவில் பாதுகாப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்று பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். கடந்த திங்கட்கிழமை ரோயல் கல்லூரியின் கோட்போர் கூடத்தில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்பு குழக்ளுடனான சந்திப்பின் போதே பாதுகாப்பு செயலர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் குற்றமற்றதும் பாதுகாப்பானதுமான சூழலை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கமாகும் இன்று ஆசியாவிலே தூய்மையான நகரம் என்றால் அது இலங்கையின் கொழும்பு நகரம்தான். சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு பொலிசாரினால் மட்டும் முடியாது பொதுமக்களின் பங்களிப்பு இதற்கு அவசியமானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பொதுமக்கள் தமது பிரதேசங்களில் ஏற்படும் குழப்பசூழ்நிலைகள் மற்றும் பிரச்சனைகளை பொலிஸாருடன் இணைந்து தீர்த்துக்கொள்ளம் நோக்கிலேயே சிவில் பாதுகாப்புக் குழுக்கள் உருவாக்கப்பட்டது. இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் எனவும் அவர் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தல், 30000 வீடுகளை அமைக்கும் திட்டம் மற்றும் கொழும்பு நகரை அழகுபடுத்தல் தொடர்பாகவும் பாதுகாப்பு செயலாளர் இங்கு தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் சிவில் பாதுகாப்பு குழு தொடர்பான ஜனாதிபதியின் இணைப்பாளரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே, பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்கக்கோன், சிவில் பாதுகாப்பு பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் அநுர திஸாநாயக்க மற்றும் மதத் தலைவர்கள் உட்பட பலர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.




Read more...

கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐ.தே.க 13 முதல் 17 ஆசனம்களையே பெறுமாம்.

இத்தேர்தலில் எங்களுக்கு சவால் இல்லை- முஜிபுர்ரஹ்மான்
எதிர்வரும் கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐ.தே.கட்சி 13 முதல் 17 ஆசனம்களையே பெற்று தோல்வியடையும் என்று கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பிரதி மேயரும் தற்போதைய பிரதி மேயர் வேட்பாளருமான அசாத்சாலி குறிப்பிட்டார்.

சக்தி தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பான மின்னல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஸ்ரீரங்கா தொகுத்தளித்த இந்த நிகழ்ச்சியில் அசாத்சாலியுடன் மேல்மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (ஐ.தே.க) ஆகியோர் கலந்து கொண்டனர். அசாத்சாலி தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில் கொழும்பு மாநகர சபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வரலாற்றில் முதல்தடவையாக கைப்பற்றும் என்றும் குறிப்பிட்டார்.

மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நிகழ்ச்சியில் கருத்துத் தெரிவிக்கையில் கடைசியாக இடம்பெற்ற கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி யானை சின்னத்தில் போட்டியிட வில்லை. கண்ணாடிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது.

ஆனால் இந்த முறை யானைச் சின்னத்திலேயே ஐ.தே.கட்சி போட்டியிடுகிறது எங்களுக்கு எதிர்கட்சியினரால் எந்தவித போட்டியோ, சவாலோ இல்லை நாங்கள் வெற்றி பெறுவோம் கொழும்பு மாநகரில் 70 சதவீதமானோர் வருமானம் குறைந்த மக்களே வாழ்கின்றனர். கொழும்பில் இடம்பெறும் அபிவிருத்தி அபிவிருத்தி நடவடிக்கைகள் அவர்களை மையப்படுத்தியே நடத்தப்படவேண்டும் என்றார்.

கொழும்பு அபிவிருத்தி என்பது டொரிங்டனையும், காலி வீதியையும் அபிவிருத்தி செய்வதல்ல கொழும்பு அபிவிருத்தி என்பது அங்கு வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதாகும். வசதியடைந்த மக்களுக்கு மேலும் வசதிகளை செய்து கொடுப்பதல்ல என்றார்.

Read more...

கின்னியா பாடசாலைகளுக்கு தளபாடங்கள்.

கின்னியா மூதூர் கல்வி வலயத்திலுள்ள அதிகஷ்டப் பாடசாலைகளில் மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு வகுப்பு ரீதியான தனியான வாசிப்பறைகளுக்கான தளபாடங்கள் புத்தகங்கள் அன்மையில் வழங்கப்பட்டன.

இவை கின்னியா கல்வி வலயத்தில் 16 பாடசாலைகளுக்கும், மூதூர் கல்வி வலயத்தில் 09 பாடசாலைகளுக்கும் விநியோகிக்கப்பட்டன.

இந்நிகழ்வு நூம் டூரீட் நிறுவனத்தின் நிதி அனுசரணையுடன் கின்னியா விஷன் அமைப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது.

Read more...

பழிவாங்குவோம்: அமெரிக்காவிடம் பாகிஸ்தான் மிரட்டல்

அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கலை மேலும் அதிகப்படுத்தும் விதத்தில், ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, சி.ஐ.ஏ.,தலைவர் டேவிட் பீட்ரசிடம் மிரட்டல் விடுத்த தகவல், தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஹக்கானி குழுவை "வெளிநாட்டில் இயங்கும் பயங்கரவாதக் குழு' என அறிவிக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக இறங்கியுள்ளது. அமெரிக்கா, பாகிஸ்தான் இடையேயான சிக்கல் மேலும் தீவிரம் அடையாமல் இருக்க, இரு தரப்பிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொடர்கின்றன சந்திப்புகள்: பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் கேமரூன் முன்டர், நேற்று மீண்டும் பாக்., வெளியுறவுச் செயலர் சல்மான் பஷீரையும், அதிபர் ஆசிப் அலி சர்தாரியையும் சந்தித்தார். அதிபர் சர்தாரி, பிரதமர் யூசுப் ரசா கிலானியை சந்தித்துப் பேசினார். இன்று நடக்க உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பாக இருவரும் விவாதித்தாக அதிபர் மாளிகை கூறியது. பாக்., மற்றும் ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்க சிறப்புத் தூதர் மார்க் கிராஸ்மேன், அமெரிக்காவுக்கான பாக்., தூதர் உசேன் ஹக்கானியிடம் தொலைபேசியில் பேசினார்.

மிரட்டல் விடுத்த பாஷா: பதட்டத்தைத் தணிக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, பதட்டத்தை அதிகரிக்கும் முயற்சிகளும் மறுபுறம் அரங்கேறி வருகின்றன. இரு தரப்பிலும் மீண்டும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகள் அள்ளிவீசப்பட்டு வருகின்றன. இதன் மையமாக, சமீபத்தில், வாஷிங்டனுக்குச் சென்ற ஐ.எஸ்.ஐ., தலைவர் அகமது சுஜா பாஷா, "பாக்.,ன் பழங்குடியினப் பகுதிகளில் இனி ஒரு முறை, அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்துமானால், அதற்குப் பழிவாங்கும் சூழலுக்கு பாக்., தள்ளப்படும்' என, சி.ஐ.ஏ., தலைவர் டேவிட் பீட்ரசிடம் நேரில் எச்சரித்துள்ளதாக ஐ.எஸ்.ஐ., அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பதிலடிக்குத் தயார்: நேற்று முன்தினம் நடந்த பாக்., பார்லிமென்ட் நிலைக் குழுக் கூட்டத்தில், பாக்., பழங்குடியினப் பகுதிகளில் பதுங்கியுள்ள ஹக்கானி குழு மீது அமெரிக்கா தன்னிச்சையாகத் தாக்குதல் நடத்தினால் பொறுத்துக் கொள்ள முடியாது என, எம்.பி.,க்கள் தெரிவித்துள்ளனர். அப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுக்கவும் பாக்., தயாராக இருப்பதாக, நிலைக் குழுத் தலைவர் ஜாவேத் அஷ்ரப் காஜி தெரிவித்தார். பெஷாவர் ஐகோர்ட் வளாகத்தில் நேற்று நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய பாக்., பிரதமர் கிலானி,"ஒற்றுமை, பாதுகாப்பு, இறையாண்மை மிக்க பாக்., என்ற நோக்கத்தின் கீழ், நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும். அதன் மூலம் தான் நாடு தற்போதைய சிக்கல்களை சமாளிக்க முடியும்' என்றார்.

"எதிரிக்கு நிதியா?' : பாகிஸ்தான் தனது நிலையில் பிடிவாதத்துடன் இருப்பதைப் போலவே அமெரிக்காவும் தனது நிலையை விட்டுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. அமெரிக்க ராணுவத் தளபதி மைக் முல்லன், ஐ.எஸ்.ஐ., மற்றும் ஹக்கானி குழு இடையிலான தொடர்பு பற்றி குற்றம்சாட்டிய 22ம் தேதி மாலை, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில், டெக்சாஸ் மாகாண ஜனநாயகக் கட்சி உறுப்பினர் டெட் போ, பாக்.,னுக்கான அமெரிக்க நிதி முழுவதையும் தடை செய்யும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சபையில் பேசிய டெட் போ,"நாம் வழங்கும் நிதியை பாக்., நமக்கு எதிராக போர் தொடுக்கும் பயங்கரவாதிகளுக்கு அள்ளி விடுகிறது. நாம் தொடர்ந்து நமது எதிரிக்கு நிதி வழங்குகிறோம். நம்மை வெறுக்கவும் நமக்கு குண்டு வைக்கவும் நாம் அந்நாட்டிற்கு நிதி வழங்கி வருகிறோம்' என்று காட்டமாகத் தெரிவித்தார்.

அமெரிக்கா உறுதி: "வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' பத்திரிகைக்குப் பேட்டியளித்த மைக் முல்லன்,"நான் பாகிஸ்தானின் நண்பன். ஆனால், அவர்கள், ஹக்கானி குழுவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அதனால் தான் நான் அவர்களின் மீது குற்றம்சாட்ட வேண்டி வந்தது' என்று தெரிவித்தார்.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜே கார்னே நேற்று அளித்த பேட்டியில்,"அமெரிக்கா தனது பார்வையில் தெளிவாக உள்ளது. காபூல் தாக்குதலுக்கு ஹக்கானி குழுதான் பொறுப்பு. அதனால் அக்குழு மீது பாக்., விரைந்து நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும்' என்று கூறினார்.

மூன்றாவது நாடு தலையீடா? : அமெரிக்கா, பாக்., உறவுச் சிக்கலை சமாதானப்படுத்த சவுதி அரேபியா தலையிட்டு முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாயின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நுலண்டு,"இரு நாடுகளும் தெளிவான நேரடித் தொடர்பில் உள்ளன. அதனால் மூன்றாவது நாடு ஒன்றின் தலையீடு அவசியமில்லை' என்றார்.

வெளிப்படையாக குற்றம்சாட்டியது ஏன்? : பென்டகன் அதிகாரிகள் கூறுகையில், "ஐ.எஸ்.ஐ., பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி, தொழில்நுட்ப உதவி, ஆளுதவி என அனைத்தையும் வழங்குகிறது. துவக்க காலம் முதல் இன்று வரையிலான அதற்குரிய ஆதாரங்களை ஏற்கனவே பாகிஸ்தானிடம் வழங்கியுள்ளோம். ஆனால், காபூல் தாக்குதலால் பாக்., தனது அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டது. அதனால்தான் வேறு வழியின்றி பாதுகாப்பு அமைச்சகம் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியது' என்றனர்.

நன்றி தினமலர்

Read more...

Thursday, September 29, 2011

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டோர் விசாரணையின் பின்னர் வீடு சென்றனர்.

வீடியோ இணைக்கப்பட்டுள்ளது (அததெரண) பிரித்தானியாவில் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடுகடத்தப்பட்ட 50 இலங்கையர்கள் இன்று காலை பிரித்தானிய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளாரல் இலங்கை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர். விசேட விமானம் மூலம் கொண்டுவரப்பட்ட இவர்கள்ள கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் பின்னர் தங்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இலங்கை வந்தவர்களிடம் கடவுச் சீட்டு, விசா, அடையாள அட்டை என்பவை தொடர்பிலும் இதர விடயங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானியாவால் நாடு கடத்தப்பட்ட 42 ஆண்கள், 8 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் இன்று காலை 10.20 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தமை குறிப்பிடத்தக்கது.







Read more...

ரமேஸின் மனைவிமீது வரும் போர்குற்ற வழக்குகளை உருத்திரகுமாரும் இமானுவலும் எதிர்கொள்வார்களா?

புலிகளின் மட்டு அம்பாறை தளபதியாக இருந்த ரமேஸ் என்பவரின் மனைவி வத்சலாதேவி தனது கணவன் இலங்கை அரச படைகளால் கொல்லப்பட்டுள்ளாரெனவும், கணவனின் இழப்புக்கு நஷ்ட ஈடு வேண்டுமெனவும் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றொன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார் என்ற செய்தி இன்று பரவலாக பேசப்படுகின்ற விடயமாக அல்லது பரப்பப்படுகின்ற விடயமாகவுள்ளது.

வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் என்ன? இது நியாயம்கோரி தொடுக்கப்பட்ட வழக்கு என எவரும் கருதுவார்களானால் அவர்களின் அறியாமைக்கு ஈடுகிடையாது என்றே கூறலாம்.

வழக்காளி வத்சலாதேவி யை வைத்து குற்றஞ்சுமத்தப்படுகின்ற இலங்கை அரசின் முக்கியபுள்ளிகளை இரு பிரிவுகளாக பிரித்து ஒரே நீதிமன்றில் இருவழக்குளை தாக்கல் செய்து ஒவ்வொன்றுக்கும் இருவேறு ஸ்தாபனங்கள் உரிமைகோருகின்றது. ஒன்று ருத்திரகுமாரன் தலைமையிலான நாடுகடந்த தமிழீழ அரசு, இரண்டாவது இமானுவேல் தலைமையிலான உலகத் தமிழர் பேரவை.

ஒரே நீதிமன்றில், ஒரே வழக்காளியின் பெயரால் சாவேந்திர சில்வாவிற்கு வேறாகவும், மஹிந்தவிற்கு வேறாகவும் வழக்கு தாக்கல் செய்து இவ்வழக்கினை தாமே தாக்கல் செய்துள்ளோம் என மக்கள் மத்தியில் பரப்புரை செய்வதற்காக வழக்கு தாக்கல் செய்வதற்கு செலவு செய்த நேரத்தையும் பணத்தையும்விட பன்மடங்கு மேலதிகமாக செலவு செய்வதை பார்கின்றபோது நோக்கத்தை விளங்கமுடிகின்றது?

மேலும் நோக்கம் என்ன என்பதை மக்கள் விளங்கிக்கொள்வதற்கு முன்னரே தாமாகவே முன்வந்து அதையும் வெளிப்படையாக சொல்லி விட்டனர். நாங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம் இதன் மூலம் மஹிந்த அரசாங்கத்தை சிக்கலில் மாட்டப்போகின்றோம். அதற்கு நிதிப்பற்றாக் குறையாகவுள்ளது. எனவே மக்கள் தாராளமாக உதவி செய்யவேண்டுமாம்.

என்ன ஒற்றுமை.. ஓரேவழக்கை கச்சிதமாக பிரித்து ஒரே வழக்காளியை வைத்து இரு ஸ்தாபனங்கள் வழக்காடுகின்றன. இருவரும் போட்டிபோட்டு மக்களிடம் பணம்கேட்கின்றனர். மக்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் விடயத்தில் தங்களுக்குள்ள முரண்பாடுகளை மறந்த ஏகோபித்த உடன்பாடா? அன்றில் வசுந்தலாதேவியை தேரேற்றி இழுப்பதில் செய்துகொண்ட தற்காலிக உடன்படிக்கையா என்பதெல்லாம் காலம்கனியும்போது கறுப்பு வந்து மக்களுக்கு சொல்லும்.

வழக்குக்கு செலவளிக்க மக்கள் வந்து நிதி உதவி செய்யவேண்டுமென கூறுகின்றனர். என்னதான் அவ்வளவு செலவு? வக்கீல்களுக்கு மில்லியன் கணக்கிலா கொடுக்கப்போகின்றனர். அதிலும் வேடிக்கை என்னவென்றால் இவ்வழக்கை பதிவு செய்துள்ள சட்டத்தரணி, ஒரு பல்கலைக்கழகம் சார்பாக உலகில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக தனது மாணவர்கள் ஊடாக ஆய்வொன்றினை மேற்கொண்டுவருவதாகவும் அதன் அடிப்படையில் சனல் 4 என்கின்ற தொலைக்காட்சியில் வெளியான காட்சிகளை சாட்சியங்களாக வைத்து பரிட்சாத்தத்திற்கு இவ்வழக்கினை தாக்கல் செய்துள்ளதாகவும் பேசப்படுகின்றது.

இந்தப்பரிட்சாத்தத்திற்கு தமிழ் மக்கள் வேறு பணம் வழங்கவேண்டுமாம். அவ்வாறாயின் இவர்களிடம் முடங்கியுள்ள பணம் எதற்காக வைக்கப்பட்டுள்ளது. இலங்கையிலுள்ள மக்கள் அவதியுறும்போது புலம்பெயர் தேசம் எங்கும் புலிகளிடம் வசூலித்த பணத்தினை அம்மக்களுக்காக செலவிடுங்கள் என்றபோது, இலங்கை அரசாங்கம் அங்கு சென்று வேலை செய்ய எங்களை அனுமதிக்கின்றது இல்லை, அவ்வாறான சந்தர்ப்பம் வரும்போது அதனை செய்வோம் என்றார்கள். தற்போது அமெரிக்காவில் வழக்கு போடுவதற்கும், அமெரிக்க அரசாங்கம் புலிகளின் இருப்பிலுள்ள பணம்வேண்டாம், புதிதாக மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டுவாருங்கள் என நிபந்தனை விதித்து விட்டார்கள் போலும்.

தமிழ் மக்களை முடிந்த வழிகளிலெல்லாம் ஏமாற்றும் இமானுவேல் , உருத்ரகுமாரின் சில்மிசங்களுக்காக பங்;குபோடப்பட்டுள்ள வத்சலாதேவி யார்? திருமலை மாவட்டம மூதூர் பிரதேசத்தை சேர்ந்த இவரும் மண்மீட்கச் சென்ற புலிகளின் தளபதியான தனது கணவனை வைத்து வன்னி திருமலை மட்டக்களப்பு என பல இடங்களிலும் மண்சேர்த்தவர் எனவும் பணம் பண்ணுவதில் வல்லவர் எனவும் ரமேஸின் முன்னாள் மெய்பாதுகாவலர்கள் ஊடாகா அறியமுடிகின்றது.

அக்கா வன்னியில் இருக்கும்போதே சும்மா இருக்க மாட்டா எனவும் சகோதரங்கள் மற்றும் உறவினர்கள் பெயர்களில் இல்லாத எழைகளின் காணித்துண்டுகளை கபராது செய்வதையே முழு நேரப்பணியாக கொண்டிருந்தாகவும் அவர்கள் கூறுகின்றனர். இவ்வாறு மட்டக்களப்பு பிரதேசத்தில் ரமேஸின் சகோதரர்களின் பெயரிலும், திருமலை மற்றும் வன்னியில் சகுந்தலாதேவியின் சகோதரியான தாதி ஒருவரின் பெயரிலும் காணிகள் வாங்கி குவிக்கப்பட்டு, அளவுக்கு மீறிய சொத்து சேகரித்தமைக்காக கருணாவால் எச்சரிக்கப்பட்டதும், அதற்கு பழிவாங்கலாக கருணா பிரிந்தவுடன் நடாத்தப்பட்ட விடயங்கள் பலவும் சுவாரசியமானவை. ஆனால் இவ்விடயங்களை பிறிதொரு இடத்தில் பார்ப்போம்.

1985ம் ஆண்டு மட்டக்களப்பில் புலிகளியக்கத்தில் இணைந்து கொண்ட சகுந்தலாதேவி 1990 ஆண்டிலிருந்து வடபிரதேசங்களில் சுகபோக வாழ்க்கை வாழ்ந்துள்ளார். 1999ம் ஆண்டு கருணாவின் மனைவியின் ஏற்பாட்டில் ரமேஸை திருமணம் செய்து கொண்ட இவர், அதுவரைகாலமும் புலிகளின் அன்பரசி படையணியில் இருந்துள்ளார். இவரது இயக்கப்பெயர் சுனேத்திராவாகும்.

வன்னியில் போர் ஆரம்பமாகமுதலே அங்கிருந்து நழுவி திருமலை வந்துள்ளார். இவர் திருமலை வந்துள்ள செய்தியை அறிந்த ராபர்ட், ஜிம்கெலித்தாத்தா போன்றோரின் மனைவியரான விதவைப் பெண்கள் இவரைதேடி படையெடுக்க தொடங்கியவுடன் தலைமறைவாகியுள்ளார்.

புலிகளியக்கத்திலிருந்து கருணா பிரிந்ததை தொடர்ந்து அங்கு நிகழ்த்தப்பட்ட சகோதரப்படுகொலைகளை ரமேஸே முன்நின்று நடாத்தியவராவார். கருணாவுடன் பிரிந்து சென்று பின்னர் புலிகளுடன் இணைந்து கொண்ட ராபர்ட், ஜிம்கெலித்தாத்தா, விசு, திருமால், துரை, எஸ்பி உட்பட 25க்கு மேற்பட்ட புலிகளின் முன்னணித் தளபதிகளாக இருந்தவர்களை ரமேஸ் தனது கையாலேயே சுட்டுக்கொன்று தரவைக் காட்டுப்பகுதியில் புதைத்தார் என மேற்குறிப்பிட்ட இளம் விதவைப் பெண்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இப்படுபாதக கொலைகளில் சுனேத்திராவின் பங்கு மிக முக்கியமானது எனவும் இவரால் சுடப்பட்டவர்களின் மனைவிகளான இளம் விதவைப் பெண்கள் தெரிவிக்கின்றனர். தமது கணவன்மார் இயக்கத்திலிருந்து வெளியேறியிருந்தபோது ரமேஸின் மனைவி பல தடவைகளில் தமது கணவன்மாரை தொடர்பு கொண்டு நீங்கள் வாருங்கள் எனது கணவர் சகலவற்றையும் பாத்துக்கொள்வார். அவர் உங்கள் விடயமாக தலைமையுடன் பேசியுள்ளார். உங்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என ஆசைவார்த்தை கூறி அழைத்து தனது கணவனின் கொலைவெறிக்கு ஆளாக்கியதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மேலும் ரமேஸ் புரிந்த இன்னுமொரு தமிழின அழிப்பு சம்பவத்தையும் இங்கு குறிப்பிடலாம். 1989 ம் ஆண்டு இலங்கையிலிருந்து இந்திய இராணுவம் வாபஸ்பெற்றுச் சென்றபோது அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஈஎன்டிஎல்எப் என்கின்ற அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் இந்தியா விற்கு தப்பி ஓடினர். ஆனால் அவர்களால் பலாத்காரமாக அமைப்பில் இணைத்துக்கொள்ளப்பட்ட இளைஞர்களும் கீழ் நிலை உறுப்பினர்களும் நடுத்தெருவில் விடப்பட்டனர். அவர்கள் புலிகளிடம் சரணடைந்தார்கள். சரணடைந்த அவர்களை புலிகள் தமது கறடியனாறு முகாமில் வாராந்தம் வந்து கையொப்பமிடவேண்டுமென நிபந்தனை விதித்திருந்தனர். இவ்வாறு கையொப்பமிட வந்தவர்களை ஒருநாள் டிப்பர் ஒன்றில் ஏற்றிய ரமேஸ் கறுப்புபாலம் பகுதிக்கு கொண்டுசென்று அவர்கள் கையாலேயே பெரிய கிடங்கு ஒன்றை தோண்டவைத்து சுமார் 75 இளைஞர்களை அதே கிடங்கில் இறங்கச்சொல்லி சுட்டுத்தள்ளினார்.

இவ்வாறு தமிழ் மக்களின் இரத்தம்குடித்த கயவன் உயிர்பிச்சை கேட்டு அழுவதை வீடியோக்களில் பார்த்த பாதிக்கப்பட்ட மக்கள் மட்டற்ற மகிழ்சி அடைந்தனர். அத்துடன் ரமேஸ் புரிந்த கொலைகளுக்கு துணையாக நின்ற சுனேத்திரா என்கின்ற வத்சலாதேவி மீது பாதிக்கப்பட்ட மக்கள் நடவடிக்கை எடுக்க முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். அது தொடர்பான விபரங்கள் யாவும் விரைவில் வெளிவரும்.

இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் வத்சலாதேவி மீது மேற்கொள்ளவுள்ள சட்டநடவடிக்கைகள் அவரை சுற்றி வளைக்குபோது, தமது வியாபரத்திற்காக இவரை பங்கு போட்டுக்கொண்டுள்ள இமானுவேல் மற்றும் உருத்திரகுமாரன் ஆகியோரால் சுனேத்திராவை காப்பாற்ற முடியுமா என்பதுதான் பலராலும் கேட்கப்படுகின்ற கேள்வியாகவிருக்கின்றது.

Read more...

மேலுமோர் புலியை கனடா நாடுகடத்துகின்றது.

புலிகள் இயக்கத்துக்கு வரி சேகரிப்பின் மூலம் நிதி சேர்த்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இலங்கை பிரஜை ஒருவரை போர் குற்றவவாளி எனக் கூறியுள்ள கனேடிய பிராந்திய நீதிமன்றம் அவரை கனடாவிலிருந்து நாடு கடத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

பூவசரச் துரைராஜா என்று அழைக்கப்படும் 36 வயதுடைய இலங்கையர் கனடாவிற்குச் செல்லும் முன்னர் இலங்கையின் புலிகள் இயக்கத்துடன் இணைந்து செயற்பட்டவர் என கனடாவில் உள்ள பிராந்திய நீதிமன்றம் ஒன்று அறிவித்துள்ளது.

பாடசாலையில் கல்வி கற்று முடிந்ததும் தனது சகோதரனுடன் யாழ்ப்பாணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தான் பணிபுரிந்து வந்ததகவும் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் தொழிற்சாலைக்கு வரிப்பணம் பெற வந்து செல்வார்கள் என்றும் தன்னை அவர்கள் பக்கம் சேர்க்க முயற்சித்த போது தான் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாவும் பூவரசன் துரைராஜா கனேடிய அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.

1992ம் ஆண்டு புலிகள் தன்னை பலவந்தமாக முகாமிற்கு அழைத்துச் சென்று தங்களுடன் இணைந்து செயற்படுமாறு கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமார் மூன்று வாரங்கள் தான் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் புலிகளுடன் இணைந்து செயற்பட இணங்கியதாக தெரிவித்த அவர், புலிகளின் தின்னவெளி முகாமில் சம்பளத்திற்கு வேலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

பின்னர் இரண்டு வருடங்களுக்கு புலிகளின் சங்கானை நிதி திணைக்களத்திற்கு தான் மாற்றப்பட்டதாக துறைராஜா குறிப்பிட்டுள்ளார். சிவில் யுத்தத்துக்காக புலிகளுக்கு அளிக்கப்படும் வரிப் பணங்களுக்கு தானே பொறுப்பாளியாகச் செயற்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். வேலை செய்த நாட்களில் மாலை வேளையில் தான் வீட்டுக்குச் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டதாக துரைராஜா குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தை இராணுவத்தினர் கைப்பற்றியவுடன் தான் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி 2000 ஆம் ஆண்டு கொழும்பிற்குச் சென்றபோது கைது செய்யப்பட்டதாகவும் 6 நாட்களின் பின்னர் லஞ்சம் கொடுத்து விடுதலையானதாகவும் துரைராஜா தெரிவித்துள்ளார்.

பின்னர் பிரித்தானியாவிற்கு தப்பிச் சென்ற தனக்கு 2007ம் ஆண்டு அகதி அந்தஸ்த்து மறுக்கப்படவே போலி கடவுச் சீட்டைப் பயன்படுத்தி கனடாவிற்கு புகலிடம் கோரி வந்ததாக கனேடிய பிராந்திய நீதிமன்றில் அவர் சாட்சியளித்துள்ளார். இந்த நிலையில் நீதிமன்றம் அவரை போர் குற்றவாளி என அறிவித்ததை அடுத்து தன்னை பலவந்தப்படுத்திய ஒரு குழுவில் இருந்ததால் தனக்கு எதிரான நீதிமன்றத் தீர்ப்பு குறித்து துறைராஜா விவாதித்துள்ளார்.

புலிகள் இயக்கத்தின் நிதித்துறையில் பணிபுரிந்தாரே தவிர ஆயுதம் ஏந்திப் போராடவில்லை என துரைராஜா தரப்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது. எனினும் ஐக்கிய நாடுகள் அகதிகள் விதிமுறைகளின் படி துரைராஜா போர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவரை நாடு கடத்தும்படி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. -

Read more...

அநுராதபுரம் முஸ்லிம் ஸியாரம் உடைக்க உத்தரவிட்ட அதிகாரிக்கு இடமாற்றம்.

அநுராதபுரம், குருணாகல் சந்தியில் அமைந்திருந்த (ஒட்டுப் பள்ளம்) மிகப் பழமைவாய்ந்த முஸ்லிம் ஸியாரம் சிங்களவர்கள் மற்றும் பெளத்த மதகுருமாரால் முற்றாகத் தரைமட்டமாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெளத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர்களில் ஒருவரான எம்.எஸ்.கப்புகொட்டுவ உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அரச நிர்வாக அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

குறிப்பிட்ட ஸியாரத்தை அங்கிருந்து அகற்றுமாறு இவரே உத்தரவிட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த இடமாற்றத்துக்கான உத்தரவு பெளத்த சாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளர் கெசியன் ஹேரத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் ஸியாரத்தை அகற்ற உத்தரவு பிறப்பித்தமைக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கெசியன் ஹேரத் எம்.எஸ்.கப்புகொட்டுவுக்கு அறிவித்துள்ளார்.

Read more...

சோதிடனின் பேச்சைக் கேட்டு நிர்வாணமாக கோவிலுக்குச் சென்ற பெண்!

பல்லாவரத்தில் காதலனை வசியம் செய்ய நள்ளிரவில் சாலையில் நிர்வாணமாக நடந்து சென்று கோவிலில் பூஜை நடத்த முயன்ற பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை சேர்ந்த 25 வயதான அந்தப் பெண், பிளஸ்-2 வரை படித்துள்ளார். இவர் செய்யாறு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதல் ஜோடிகளாக சுற்றித்திரிந்த பிறகு ராமச்சந்திரன் அந்தப் பெண்ணை விட்டு விட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதில் ஆவேசமடைந்த அந்தப் பெண் எப்படியாவது காதலனை அடைந்தே தீருவது என சபதம் எடுத்தார். இதற்காக அப்பகுதியில் உள்ள சோதிடனைச் சந்தித்து, ``காதலனை எப்படியாவது வசியம் செய்து அவரை நான் அடைய வேண்டும். அவரையே திருமணம் செய்ய எனக்கு ஏதாவது வழி இருந்தால் கூறுங்கள்'' என்று கேட்டார்.

உடனே சோதிடன், ``முழு அமாவாசை இரவில் நிர்வாணமாக சென்று 3 கோவில்கள் முதல் 9 கோவில்கள் வரை சென்று பூஜை செய்து வழிபட்டால் அதன் பின்னர் உன் காதலன் உன் காலடியே சரணம் என்று கிடப்பான்'' என்றார்.

சோதிடன் சொன்னதை கேட்ட அந்தப் பெண் நிர்வாண பூஜையை சொந்த ஊரில் செய்தால் விஷயம் வெளியில் தெரிந்து விடும்; வெளிïரில் போய் பூஜை செய்யலாம் என்று முடிவெடுத்தார்.

சென்னை பொழிச்சலூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்த அந்தப் பெண் அமாவாசை இரவு என்பதால் இரவில் குளித்து விட்டு அருகில் உள்ள கடையில் போன் பேசி விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.

நள்ளிரவு 12 மணிக்கு பம்மல் கிருஷ்ணாநகர் அருகில் ஆடைகளை களைந்து நிர்வாணமானார். பின்னர் முகத்தை தலைமுடியால் மூடியவாறு சாலையில் நடக்கத் தொடங்கியுள்ளார்.

சாலையில் ஆள் நடமாட்டம் இல்லாததால் யாரும் இதை கவனிக்கவில்லை. பம்மல் கிருஷ்ணாநகரில் மூடியிருந்த கோவில் முன்பு நிர்வாணமாக வழிபட்டு விட்டு அதே சாலையில் பல்லாவரம் நோக்கி நடக்க ஆரம்பித்தார். அந்த சாலையில் உள்ள புத்துக்கோவிலில் அதே பாணியில் வெளியில் இருந்து வழிபாடு செய்து விட்டு பல்லாவரம் பெரிய பாளையத்தம்மன் கோவிலுக்கு செல்ல பல்லாவரம் ஆடுதொட்டி அருகில் ரோட்டில் நிர்வாணமாக சென்றார்.

நள்ளிரவில் பல்லாவரம் குற்றப்பிரிவு காவலர்கள் ரோந்து சென்று கொண்டிருந்த போது ரோட்டில் ஒரு பெண் நிர்வாணமாக செல்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே பல்லாவரம் காவல் நிலையத்தில் இருந்த பெண் காவலருக்கு தகவலைக் கூறி சேலையுடன் சம்பவ இடத்திற்கு வரும்படி தெரிவித்தனர்.

மாற்றுக்கு வைத்திருந்த சேலையை எடுத்துக்கொண்டு பல்லாவரம் ஆடு தொட்டி அருகில் பெண் காவலர்கள் வந்தனர். காவலர்களைக் கண்டதும் ஓடத்தொடங்கிய அந்தப் பெண்ணை அவர்கள் விரட்டிச்சென்று பிடித்து சேலையை போர்த்தி காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு பெண் காவலர்கள் விசாரணை நடத்தியதில் காதலனை வசியம் செய்ய சோதிடன் சொன்ன யோசனையில் நிர்வாண பூஜை நடத்த முயன்ற தகவலை சொல்லி தன்னை காதலனிடம் சேர்த்து வைக்குமாறு கூறினார்.

இரவில் பரங்கிமலை மகளிர் காவல் நிலையத்தில் அந்தப் பெண்ணை தங்க வைத்த காவல்துறையினர் நேற்று காலை பல்லாவரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more...

தமிழ் வர்த்தகர்களை கடத்தி கப்பம்கோரிய இராணுவத்தினருக்கு விளக்கமறியல் தொடர்கிறது.

நீர்கொழும்பு மற்றும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்த தமிழ் வர்த்தகர்கள் இருவரை கடத்திச் சென்று முறையற்ற விதத்தில் தடுத்து வைத்து அந்த வர்தகர்களிடம் ஒருகோடி ரூபாவை கப்பமாக பெற்றுக்கொள்ள முயற்ச்சி செய்த குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இராணுவத்தை சேர்ந்த முன்னாள் கோப்ரல்கள் இருவர் உட்பட ஐவருக்கு நீர்கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி பிணை வழங்குவதை
நிராகரித்தார்.

அத்துடன் பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து விசாரணை செய்வதற்காக இந்த வழக்கை 2012 ஜனவரி 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்ததுடன் அத்திகதி வரை சந்தேக நபர்களை விழக்கமறியலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

பிரதிவாதிகள் 2008 பெப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில், நீர்கொழும்பு கிரீன்ஸ் வீதியை சேர்ந்த வெளிநாட்டு நாணயமாற்று நிலையமொன்றையும் வீடியோ கிளப் ஒன்றையும் நடத்தி வரும் தமிழர் ஒருவரையும் வத்தளை வெலிகமுன வீதியை சேர்ந்த இலத்திரணியல் உபகரணங்களை விற்பனை செய்யும் தமிழ் வர்த்தகர் ஒருவரையும் கப்பம் பெறுவதற்காக கடத்திச் சென்றுள்ளனர். இதில் நீர்கொழும்பை சேர்ந்த வர்தகரிடம் 20 இலட்சம் ரூபாவையும் வத்தளையை சேர்ந்த வாத்தகரிடம் 80 இலட்சம் ரூபாவையும் பிரதிவாதிகள் கப்பமாக கோரியுள்ளனர்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளால் பிணை கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தின் கீழ் கடும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட பிரதிவாதிகளுக்கு பிணை வழங்க முடியாதெனவும் வழக்கு விசாரணைக்கு தயாராகுமாறும் நீதிபதி குறிப்பிட்டார்.

Read more...

புலிகளை ஒழித்த ஜனாதிபதி சிங்கம் போல் நியூயோர்க் சென்றார். நிமால் சிறிபால டி சில்வா

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு "சிங்கம்.' இலங்கையின் அரச தலைவர்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான நாடாகக் கருதப்பட்ட அமெரிக்காவில் வீரதீரமாகவும் உயர் இராஜதந்திர அணுகுமுறையுடனும் செயற்பட்டு பராக் ஒபாமா உட்பட ஏனைய நாடுகளின் அரச தலைவர்களை அவர் வெற்றிக் கொண்டு விட்டார் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டார். மத்திய கிழக்கு நாடுகளின் முழு ஆதரவும் இலங்கைக்கே உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத் தொடரில் ஜனாதிபதி உரையாற்றிய சர்வதேசத்தின் சவால்களுக்கும் இலங்கைக்கு எதிரான போலி குற்றச் சாட்டுகளுக்கும் பதிலளித்துள்ளார். இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு நன்றி கூற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சில தினங்கள் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திற்கு சென்றிருந்தார். இங்கு செல்வது இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கு உகந்த விடயமல்ல என்று பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். ஆனால் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிங்கத்தைப் போன்று ஐ. நா. தலைமையகத்திலும் அமெரிக்காவிலும் பிரகாசித்திருந்தார்.

அனைத்து சவால்களுக்கும் இராஜதந்திர ரீதியில் பதிலளித்து நாட்டின் நற்பெயரை பாதுகாத்தார். சர்வதேச நாடுகளில் வாழும் இடம்பெயர்ந்த தமிழர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் போலிக் குற்றச்சாட்டுகளுக்கும் அவர்கள் இடத்திலேயே வைத்து பதிலடிக் கொடுத்தார் என்றார்.

Read more...

நடிகைகளுக்கு எதிராக ஆண்கள் பாதுகாப்பு சங்கம்!

"பொய் புகார்கள் கொடுத்து பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் நடிகைகளின் வீடுகளின் முன்பு, தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும்" என்று அதன் தலைவர் வழக்கறிஞர் டி.அருள்துமிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறியுள்ளார்.

’’தமிழ்நாட்டில் பல்வேறு நடிகைகள், நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பொய்யான புகார்களை கொடுத்து அதன்மூலம், பின்னர் மிரட்டி பணம் பறிக்கும் நடிகைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் நடிகைகள், தன் சுய விளம்பரத்தை தேடிக்கொள்வதுடன், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கவும் முயற்சிக்கிறார்கள்.

இவர்கள் நீதிமன்றங்களுக்கு சென்று எதிராளிக்கு தண்டனை பெற்றுத்தர முயல்வதே கிடையாது. இரு தரகர்களை வைத்து பேசி பணம் பறிக்கும் செயலில்தான் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற செயலை தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நடிகைகள் மீது கிரிமினல் குற்ற நடவடிக்கை எடுக்க முதல்வர் ஜெயலலிதா, தனிப்பிரிவைஏற்படுத்தி கட்டுப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Read more...

மூலைமுடுக்கெங்கும் நுழைந்து வெளியேறியுள்ள பிளேக், உதுலையும் சந்தித்தாராம்.

அனைத்திலங்கை பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முன்னாள் ஒருங்கிணைப்பாளரான ‘நாம் இலங்கையர்’ அமைப்பின் தலைவரான உதுல் பிரேமரத்ன, அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மத்திய மற்றும் தெற்காசியாவுக்கான அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கை சந்தித்துப் பேசியுள்ளதாக அரச புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் மிகவும் இரகசியமான முறையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் காணாமல் போன தமிழ் மக்கள் சார்பாக என்று கூறி மக்கள் விடுலை முன்னணியினரால் அவசர அவசரமாக உருவாக்கப்பட்ட ‘நாம் இலங்கையர்’ அமைப்பின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் மேலும் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன என்றும் அவை அனைத்தும் இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன எனவும் மேலும் தெரிய வந்துள்ளது.

இது எதை விளக்குகின்றதாயின் அமெரிக்கா இலங்கையின் மூலை முடுக்கு எங்கும் நுழைந்து தனது ஆதிக்கத்தை தக்க வைத்து கொள்ள முனைகின்றது என்பதையாகும். ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரோ தங்களை அவர் சந்திக்கின்றபோது தமிழீழம் வாங்கித்தரப்போகின்றார் என்கின்றார்கள். அவ்வாறாயின் உதுலை சந்தித்தது சிங்கள ஈழம் வாங்கி கொடுக்கவா என்ற கேள்வி எழுகின்றது.

Read more...

யாசகர்களை கொலை செய்யும் திட்டம்.

இரவு வேளையில் தெரு மருங்குகளில் தங்கியிருக்கும் அநாதவரானன நபர்களின் தலைகளைத் தாக்கி கொலை செய்யும் அராஜக திட்டம் ஒன்று கொழும்பிலும் அதன் அண்மித்த பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிய வருகிறது.

கொழும்பிலும் அதன் அண்மித்த பகுதிகளிலும் தங்கியிருந்த அநாதவரான நபர்கள் மற்றும் யாசகர்கள் 20 பேர் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எந்த வித சாட்சியங்களும் இன்றி இக்கொலைகள் இடம்பெற்றுள்ளதோடு புலனாய்வுப் பிரிவினர் கொலைகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட போதிலும் எந்தவித தடயங்களும் இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் பிச்சை எடுத்து வைத்திருக்கும் பொட்டலங்களுடன் தெருவோரங்களில் படுத்துறங்குகின்றபோது இப்பொட்டலங்களை இலக்குவைத்தே இக்கொலைகள் இடமபெறுவதாக நம்பப்படுகின்றது.

Read more...

இலங்கையில் வருடாந்தம் இரண்டரை இலட்சம் கருக்கலைப்பு சம்பவம்கள்!

இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் கருக்கலைப்பு சம்பவம்கள் இலங்கையில் வருடம்தோறும் இடம்பெற்று வருவதாக குடும்ப சுகாதார பணியகம் குறிப்பிட்டுள்ளது குடும்ப சுகாதார பணியகத்தின் வைத்திய நிபுணர் டாக்டர் கபில ஜயரட்ன இது குறித்து மேலும் கூறியதாவது நாளொன்றுக்கு 900 கருக்கலைப்பு சம்பவம்கள் இடம்பெறுகின்றன. வருடம்தோறும் இடம்பெறும் மூன்று இலட்சத்து எண்பதாயிரம் பிறப்பு நிகழ்வுகளில் இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் கருக்கலைப்பு நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.

திருமணம் முடித்த 92 வீதமான பெண்களிடையேயும் 8 வீதமான திருமணம்
செய்யாத பெண்களிடைNயும் இக்கருக்கலைப்பு சம்பவம்கள் இடம்பெறுவதாக புள்ளிவிபரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 25 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட 27 வீதமான பெண்கள் கருக்கலைப்புக்கு உட்படுகின்றனர் இவற்றை தவிர்க்கும் முகமாக பல்வேறு குடும்பதிட்ட முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டு அவை தொடர்பான அறிவூட்டும் நிகழ்வுகள் நடாத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை இலங்கையில் கருக்கலைப்பு சட்ட அங்கீகாரம் இல்லாத போதிலும் அதை கட்டாயமானதாக்குவதற்கான ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Read more...

பொலிஸாருக்கு எதிராக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்ய வழி.

முறைப்பாடு செய்வதற்காக பொலிஸ் நிலையத்திற்கு வரும் நபர்களுக்கு வழங்கப்படும் சீட்டுப்பத்திரத்தில் உயர் பொலிஸ் அதிகாரிகளுடைய தொலைபேசி இலக்கங்களை குறிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் முடிவு செய்துள்ளது. அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் இது கட்டாயப்படுத்தப் பட்டுள்ளதாகவும் மாகாணங்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர். கோட்டத்திற்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரி, மற்றும் உதவி பொலிஸ் அதிகாரி ஆகியோருடைய தொலைபேசி இலக்கங்கள் இவ்வாறு பற்றுச் சீட்டில் குறிக்கப்படவுள்ளன.

முறைப்பாடு தொடர்பாக எந்தவித விசாரணைகளும் செய்யப்படாவிட்டால் அல்லது பொலிஸார் அநீதியாக நடந்து கொண்டால் அது தொடர்பாக உயர் பொலிஸ் அதிகாரிகளிடம் அறிவித்து நீதியைப் பெற்றுக் கொள்ளலாம் என்று பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

Read more...

கற்பிணித்தாய்மாரின் தொழில் காரணமாக பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு!

(புதிய ஆய்வுத்தகவல்)
கற்பிணிப் பெண்கள் பணியாற்றும் தொழில் காரணமாக அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா நோய் ஏற்படுவது புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது 7 வயதான 43.000 சிறுவர்களது ஆரோக்கியம் தொடர்பில் ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், அவர்கள் கற்பத்தில் இருக்கும்போது அவர்களது தாய்மார்கள் எங்கு பணியாற்றினர் என்பதை கண்டறிய ஆய்வை மேற்கொண்டனர் வாகனப் பாகங்கள், மரத்தளபாடங்கள் , காலணிகள் ஒட்டுப்பசைகள், வர்ணப்பூச்சு என்பன சம்பந்தமான தொழில்களில் ஈடுபடும் பெண்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு

ஏனைய தாய்மாருக்கு பிறக்கும் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் ஆஸ்துமா ஏற்படும் அபாயம் இருமடங்கு அதிகமாக உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின்போது தாய்மாரின் வயது, நிறை, புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் மிருகங்களுடன் பழகும் நிலை என்பன தொடர்பிலும் கவனத்தில் எடுத்துக்கொள்ப்பட்டது.

மேற்படி ஆய்வின் முடிவுகள் நெதாலாந்தின் தலைநகரில் செவ்வாய்கிழமை இடம்பெற்ற சுவாச சம்பந்தமான சபையின் வருடாந்த மாநாட்டில் சமர்பிக்கப்பட்டன.

எனினும் தொழிற்சாலைகளில் சிறந்த காற்றோட்ட வசதிகளை ஏற்படுத்தியிருப்பது ஆஸ்துமா ஏற்படும் அபாயத்தை குறைக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பிரித்தானியாவில் ஆஸ்துமா நோயால் 5 மில்லியன்பேர் பாதிக்கப்பட்டுளள்னர்.

Read more...

புலிகளைத் தண்டிக்க புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும்-ரொஹான் குணரட்ன!

புலிகளின் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை தண்டிப்பதற்கு அரசாங்கம் புதிய சட்டங்களை அமுல்படுத்த வேண்டுமென சர்வதேச பயங்கரவாத ஒழிப்பு தொடர்பான பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். புலிகள் யுத்த ரீதியாக இலங்கையில் தோற்கடிக்கப்பட்ட போதிலும் வட அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் வலுவாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ இராச்சியம் போன்ற புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களை இல்லாதொழிப்பதற்கு இலங்கை அரசாங்கமும், அமெரிக்காவும் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் பிரதமர் வீ.ருத்ரகுமாரன் தொடர்ந்தும் வன்முறை வழிமுறைகளில் நாட்டம் காட்டி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமெரிக்காவில் மிகவும் சிறந்த நீதிக் கட்டமைப்பு காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும், தீவிரவாதிகள் இதனை துஸ்பிரயோகம் செய்யக் கூடும் எனவும், பின் லேடனின் மனைவி அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கேணல் ரமேஷின் மனைவியினால் அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

அல் கய்தா இயக்கத்தினரைப் போன்று புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகள் உலக அளவில் பிரச்சாரம் செய்யப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

உலகப் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு புலிகள் பாரியளவு பங்களிப்பினை வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிரான இலங்கையின் பிரச்சார உத்திகள் காத்திரமானதாக அமையவில்லை எனவும், குறிப்பாக மேற்குலக நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் உரிய முறையில் பிரச்சாரம் செய்யத் தவறியுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

புலிகளுக்கு எதிராக சர்வதேச ரீதியில் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதனை இலங்கை அரசியல்வாதிகள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர, சட்ட மற்றும் அரசியல் ரீதியாக முறியடிக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

தாருஸ்மன் அறிக்கை ஒரு பக்கச்சார்பான அறிக்கையாகவே நோக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

மூச்சுத் திணறும் புலிகளுக்கு ஒட்சிசன் வழங்கும் ஓர் நடவடிக்கையாகவே இந்த அறிக்கையை நோக்க முடியும் என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

புலிகளின் தலைவர்கள் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் தருணத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குவது முட்டாள்தனமானது என அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க வேண்டுமென வலியுறுத்தும் தனிப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்களை அரசாங்கம் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் எனவும், சில வேளைகளில் குறித்த தரப்பினருக்கு புலிகள் நிதி வழங்கியிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளின் சர்வதேச தலைவர்கள் மக்களின் நலனைக் கருத்திற் கொள்ளாது செறய்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரபல ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Read more...

Wednesday, September 28, 2011

கோழியில் புழுக்களுடன் Freidrice விற்ற ஹோட்டல்காரருக்கு அபராதம். ஹோட்டல் சீல்

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற புழுக்களை கொண்ட பொரித்த கோழி இறைச்சியுடன் ப்ரைட்ரைஸ் விற்பனை செய்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்ட ஹோட்டல் உரிமையாளருக்கு நீர்கொழும்பு மேலதிக நீதவான் ஏழாயிரம் ரூபா அபராதம் விதித்தார். முஹம்மத் சரீம் முஹம்மத் உசைன் என்பவரே குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு அபராதம் விதிக்கப்பட்டவராவார்.

நீர்கொழும்பு –பெரியமுல்லை பிரதான வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் செவ்வாய்கிழமை மாலை கொழும்பை நோக்கி வாகனத்தில் சென்று கொண்டிருந்த குழுவொன்று உணவு உட்கொள்வதற்காக சென்றுள்ளனர் இதன்போது அவர்கள் ஓடர் செய்த ப்ரைட்ரைசில் வைக்கப்பட்டிருந்த பொரித்த கோழியில் புழுக்கள் இருந்துள்ளன இதுதொடர்பாக அவர்கள் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து
நீர்கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் கொலிசாருடன் சென்று நுகர்வுக்கு பொருத்தமில்லாத உணவுப்பொருட்களை கைப்பற்றியதுடன் தற்காலிகமாக அந்த ஹோட்டலையும் சீல்வைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து பொதுசுகாதார பரிசோதகர்களால் ஹோட்டல் உரிமையாளர் நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் இன்று ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது மேலதிக நீதவான் துலானி எஸ். வீரதுங்க ஏழாயிரம் ரூபா அபராதம் விதித்தார்

மனித நுகர்வுக்கு பொருத்தமில்லாத புழுக்களை கொண்ட பொரித்த கோழி இறைச்சியுடன் ப்ரைட்ரைஸ் விற்பனை செய்ததாக ஹோட்டல் உரிமையாளர் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது

Read more...

‘கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’

ஹினாவின் பேச்சால் பாக்.அமெரிக்க உறவில் விரிசலா? .
கோடிக்கணக்கில் பணம் கொடுத்து தீவிரவாதிகளை உருவாக்கியது அமெரிக்காதான்’ என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ரப்பானி கர் கூறியுள்ளார். ஆஃப்கானிஸ்தானில் தலிபான் இயக்கத் தலைவர் ஹக்கானி நெட்வொர்க்குக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனம் ஐ.எஸ்.ஐ உதவி செய்கிறது. அதை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹினா ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார். அப்போது அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: “ஆப்கானிஸ்தான் காபூலில் கடந்த வாரம் அமெரிக்க தூதரகம் மீது தலிபான்கள் தாக்குதல் நடத்திய பிறகு பாகிஸ்தான் அமெரிக்க உறவு பாதிக்கப்பட்டுள்ளது உண்மை தான்.

ஆனால் அமெரிக்கர்கள் மீதான தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் காரணமல்ல. தீவிரவாதத்தால் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானை சோவியத் படைகள் ஆக்கிரமித்து இருந்த போது முஜாகிதீன்களை உருவாக்கியது அமெரிக்கா தான். அவர்களுக்கு பல ஆண்டுகள் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து ஊக்குவித்தது அமெரிக்கா. இப்போது தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தானை பலிகடா ஆக்க நினைப்பது தவறு.

பாகிஸ்தான் அமெரிக்கா உறவில் சில சட்டதிட்டங்கள் உள்ளன. அவற்றை இருநாடுகளும் பின்பற்றுவது நல்லது. பாகிஸ்தான் மக்களின் நலனுக்கு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

அமெரிக்கா தாராளமாக பாகிஸ்தானுடனான உறவை முறித்துக் கொள்ளட்டும். அது அவர்களது இஷ்டம். ஆனால் அதனால் நஷ்டம் பாகிஸ்தானுக்கு கிடையாது, அமெரிக்காவுக்குத்தான் என்று கடுமையாக பதிலளித்தார். அதற்கும் மேலாக, உலக அளவில் தீவிரவாதிகளை வளர்த்து ஆளாக்குவதே அமெரிக்காதான் என்றும் மிகக் கடுமையாக குற்றம் சாட்டினார்.”

மேலும் அவர் கூறுகையில்; “அமெரிக்கா பாகிஸ்தானின் பொறுமையை சோதித்துப் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். இப்படி அமெரிக்க தலைவர்கள் பாகிஸ்தானை குறை சொல்வதைத் தொடர்ந்தால் இரு நாடுகளுக்கிடையே நடக்கும் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படும். அமெரி்க்காவின் இந்த குற்றச்சாட்டிற்கு அதனிடம் எந்தவித ஆதாரமும் இல்லை. அமெரிக்காவே ஹக்கானி அமைப்பை உருவாக்கிவிட்டு தற்போது அந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக பாகிஸ்தானை குற்றம் கூறுகிறது.

அமெரி்க்காவின் சிஐஏவுக்கு உலகில் உள்ள பல தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது. ஹக்கானி அமைப்பு சிஐஏவுக்கு பிடித்தமான ஒன்று தான்.

தீவிரவாதத்திற்கு எதிரான போரில் உலக நாடுகளை விட பாகிஸ்தான் தான் அதிகமான மக்களை இழந்துள்ளது. அமெரிக்கா தன் விருப்பத்திற்காக எந்த நாட்டையும் அழிக்க முடியாது. எங்களாலும் அமெரிக்கா மீது குற்றம் சுமத்த முடியும். ஆனால் நாங்கள் அப்படி செய்யவில்லை. அமெரி்ககாவில் ஒரு 9/11 தாக்குதல் தான் நடந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானில் அது போன்று 311 தாக்குதல்கள் நடந்துள்ளது.” என்றார்.

ஹினாவின் இந்த ஆவேசப் பேச்சால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

Read more...

போட்டோஷொப் சர்ச்சையில் கனேடிய தமிழ் எம்.பி. ராதிகா சிற்சபேசன்

இலங்கையில் பிறந்த தமிழ் பெண்ணான ராதிகா சிற்சபேசன், கனடாவில் முதலாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராகி சாதனை படைத்தவர். ஆண்களின் ஆதிக்கம் மிக்க அரசியல் கலாசாரத்தில் 29வயதான ராதிகாவின் வெற்றி சிலாகித்து பேசப்பட்டது. ஆனால் இப்போது அவரின் புகைப்படமொன்று போட்டோஷொப் முறையில் மாற்றியமைக்கப்பட்டதா என்பது குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இணையத்தில் ராதிகா சிற்சபேசனின் புகைப்படமொன்றை தேடிய ஒருவர் ராதிகாவின் புகைப்படங்களில் ஒன்றை கண்டார். ஆனால் ராதிகாவின் உத்தியோகபூர்வ நாடாளுமன்ற விபரப்பக்கத்தில் அதே படம் மாற்றங்களுடன் காணப்பட்டது.

முந்தைய படத்தில் காணப்பட்ட மார்பகப்பகுதி உத்தியோபூர்வ விபரப்பக்கத்தில் போட்டோஷொப் முறை மூலம் மாற்றப்பட்டிருந்தது.முதலாவது புகைப்படம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வேலைத்தளத்திற்குப் பொருத்தமானதல்ல என கனடாவின் பழைமைவாத அரசியல்வாதிகள் கருதியதாக கூறப்படுகிறது.

ஆனால் இப்படி புகைப்படத்தில் மாற்றம் செய்தமை பெண்ணியலுக்கு எதிரானது எனவும் மாற்றியமைக்கப்பட்ட புகைப்படம் அவரை குறைந்த பெண்தன்மையாக காட்டுகிறது எனவும் விமர்சகர்கள் சிலர் கூறியுள்ளனர்.புகைப்படத்தில் மாற்றம் செய்யவேண்டுமென கனேடிய கன்சர்வேட்டிவ் கட்சி கோரியதா அல்லது ராதிகாவின் அலுவலகத்தினரோஇ கனேடிய நாடாளுமன்ற இணையத்தள நிர்வாகிகளோ இதை செய்வதற்கு தீர்மானித்தார்களா என்பது தெரியவில்லை. (தமிழ்மிரர்)

Read more...

த.தே.கூ உடனான அரசின் பேச்சுக்கு தே.தே.இ கடும் எதிர்ப்பு.

புலிக்குட்டிகள் நாட்டை கூறுபோட முயற்சிக்கின்றன
ஐ.நாவின் 66 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக் காலை நாடு திரும்பியுள்ள நிலையில் தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசு நடத்தி வரும் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. புலிக் குட்டிகளான கூட்டமைப்புடன் நடத்தி வரும் பேச்சுக்களை உடன்நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்.

தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வு காணப்படவேண்டும் என்பது தொடர்பாக உதயனுக்கு விவரிக்கையிலேயே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு நாட்டைக் கூறுபோடுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முயற்சிக்கின்றது. இவர்கள்தான் புலிகளின் ஏகப் பிரதிநிதிகள் என்பதைப் புரிந்துகொண்டு அரசு செயற்படவேண்டும். புலிகளின் அனுசரணையுடன் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகி புலிகளின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள புலிக்குட்டிகளுடன் பேச்சுகளை அரசு தொடரக்கூடாது என்பதே எமது நிலைப்பாடு.

தேசிய இனப்பிரச்சினைக்கு உள்நாட்டிலேயே தீர்வு காணப்படவேண்டும். ஆரம்பம் முதலே நாம் இதனையே வலியுறுத்தி வருகின்றோம். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு எவ்வாறு வழங்கப்படவேண்டும் என்பது தொடர்பாக சிங்கள மக்களின் கருத்துகளை அரசு முதலில் கேட்டறிய வேண்டும். அதன் பின்னரே, ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும். தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுகளை முன்னெடுக்க வேண்டாம் என்று நாம் கூற வரவில்லை. நாட்டை கூறுபோட முனையாத, அதேபோன்று தேசப்பற்றுடனும் இதயசுத்தியுடனும் செயற்படும் தமிழ்ப் பிரதிநிதிகளுடன் பேச்சுகளை முன்னெடுக்குமாறே வலியுறுத்துகின்றோம் என்றார்.


Read more...

வத்தளை பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியையின் இறுதிச்சடங்கு நிறைவுற்றது.

உடல்பாகங்கள் மேலதிக பரிசோதனைக்காக அனுப்பிவைப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வத்தளை பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்ட நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த பாடசாலை ஆசிரியையின் மரணச்சடங்கு இன்று மாலை இடம்பெற்றது நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பூதவுடல் இன்று பிற்பகல் அவர் பணியாற்றிய கல்லூரியில் மரியாதைக்காக வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கத்திற்காக எடுத்துச்செல்லப்பட்டது.

பூதவுடல்பெட்டியில் சீல்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. சம்பவத்தில் இறந்தவர் சிறியானி வாசனா (33 வயது)என்ற ஒரு பிள்ளையின் தாயாராவார் இவர் ஒரு ஆந்கில ஆசிரியையாவார்.

கடந்த சனிக்கிழமையன்று முற்பகல் 10 மணியளவில் இவர் வீட்டைவிட்டு புறப்பட்டு சென்றுள்ளார் சிகையலங்கார நிலையமொன்றுக்கு சென்றுவிட்டு , மின்சார கட்டணத்தையும் செலுத்தி விட்டு வருவதாக கூறியே இவர் சென்றுள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை பிற்பகல் இவரது செல்லிடத் தொலைபேசி செயலிழந்துள்ளது. வீட்டார் தொடர்புகொள்ள முயன்றும் தொலைபேசி செயலிழந்துள்ளதால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

பின்னர் அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நான்கு மணியளவில் வத்தளை பிரதேசத்தில் இவரது சடலம் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை சம்பவத்தில் மரணமான ஆசிரியையின் பிரேத பரிசோதனை அறிக்கை திறந்த திர்ப்பாக வெளியிடப்பட்டுள்ளது. ராகமை வைத்திய சாலையின் சட்ட வைத்திய பிரிவினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மரணம் இடம்பெற்ற விதம் தொடர்பாகவோ மரணம் ஏற்பட்ட காரணம் தொடர்பாகவோ குறிப்பிடப்படாததுடன், மரணம் தொட்hபாக உண்மையான காரணத்தை கண்டறிவதற்காக பிரேதத்தில் இருந்து எடுக்கப்பட்ட சில பாகங்கள் வைத்திய பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மெற்கொண்டுள்ளனர்


Read more...

ஆட்கடத்தல் காரர்களுக்கும் புலிகளுக்கும் தொடர்பா? கியூ பிரிவு பொலிஸாரின் உதவி கோரப்படுகிறது.

34 இலங்கை தமிழ் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்ல முற்பட்டனர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கும் ( 5 இலங்கையர்கள், 4 கேரள பிரதேசத்தவர்கள்) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள தமிழ்நாடு கியூ பிரிவு பொலிஸாரின் உதவி பெறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 9 பேரும் கலமசேரி பொலிஸ் முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து அவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருக்குமோ என சந்தேகம் எழுந்துள்ளதாக ஏர்ணாகுள மாவட்ட பொலிஸ் உயரதிகாரி ஹர்சித அட்லூரி தெரிவித்துள்ளார்.

அத்தோடு கியூ பிரிவு பொலிஸார் அவர்களை விசாரணை செய்யும் வரை எதுவித உறுதியான தகவல்களையும் கூறமுடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு கியூப் பிரிவு பொலிஸார் இன்றிரவு அல்லது நாளை அதிகாலை விசாரணைகளை மேற்கொள்ள வந்துவிடுவார்கள் என குறிப்பிட்ட அவர் தடுத்து வைக்கப்பட்டு அகதிகள் அவர்களுக்கு உரிய முகாம்களுக்கு அனுப்பு வைக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அகதிகள் முகாமில் நிலவி வரும் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை காரணமாகவே இவ்வாறு மக்கள் வெளியேறி செல்ல முயன்றதாக ஒப்புக்கொண்டுள்ளனர் என குற்றத் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Read more...

கார் ஓட்டியதால் கசையடி...!சவூதி பெண்ணின் சோகம்...!

பெண்கள் கார் ஓட்டக்கூடாது என்று மன்னர் விதித்த தடையை மீறி கார் ஓட்டிய பெண்ணுக்கு 10 கசையடிகள் வழங்குமாறு அளிக்கப்பட்ட தீர்ப்பு, சவூதி அரேபியாவில் பெண்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவில் பெண்கள் வாகனங்களை ஓட்ட மன்னர் தடை விதித்துள்ளார்.

இருப்பினும் எனினும் இதற்கான தடையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஜூன் மாதம் முதல் சாலைகளில் பெண்கள் வாகனங்களை இயக்கி வருகின்றனர்.

போலீஸாரும் பெண் டிரைவர்களை சாதாரணமாக தடுத்து நிறுத்தி விசாரணை நடத்திவிட்டு, இனிமேல் வாகனத்தை ஓட்ட வேண்டாம் என்று எச்சரித்து அனுப்பிவிடுவர்.

இந்நிலையில் தற்போது தடையை மீறியதற்காக சவூதி பெண் ஒருவருக்கு 10 கசையடிகள் தண்டனை வழங்குமாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் சட்டரீதியாக தண்டனை வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

Read more...

78 நாடுகளுக்கு இணையத்தினூடான வீசா அங்கீகாரம்

78 நாடுகளுக்கு இணையத்தினூடாக வீசாவுக்கான முன் அங்கீகாரத்தை பெற்றுகொள்வதற்கான புதிய முறையொன்றான “இலத்திரனியல் பயண அங்கீகாரமளிப்பு” முறைமையை நடைமுறைபடுத்த குடிவரவு- குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன் அறிமுக நிகழ்வு எதிர்வரும் 30ஆம் திகதி காலிமுகத்திடல் ஹோட்டலில் பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறுங்கால தேவைக்காக இலங்கைக்கு வருகின்ற மற்றும் இலங்கையூடாக பயணம் செய்கின்ற எந்தவொரு வெளிநாட்டவரும் www.eta.gov.lk என்ற இணையத்தளத்தினூடாக “இலத்திரனியல் பயண அங்கீகாரமளிப்பு” க்கு விண்ணபிக்க முடியும். வெளிநாட்டவர்களின் வசதிகருதி ஒன்பது சர்வதேச மொழிகளில் இது தொடர்பான விபரங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். எனினும் விண்ணப்பதாரிகள் ஆங்கில மொழியில் மட்டுமே விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.

இவ் “இலத்திரனியல் பயண அங்கீகாரமளிப்பு” க்காக நிருவாகக் கட்டணம் மாத்திரமே அறவிடப்படவுள்ளதுடன், மாலைத்தீவு மற்றும் சிங்கப்பூர் பிரஜைகளுக்கு பரஸ்பர புரிந்துணர்வு உடன்படிக்கைகளுக்கு ஏற்ப முன்னர் போன்றே பிரவேச இடத்தில் கட்டணமின்றி வீசா வழங்கும் முறைமை தொடர்ந்து அமுலில் இருக்கும்.

2016 ஆம் ஆண்டில் 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவதை இலக்காகக் கொண்டும், மஹிந்த சிந்தனையின் நோக்கொன்றான இலங்கையை சர்வதேச ரீதியாக முக்கிய பொருளாதார மத்திய நிலையமாக மாற்றுதல் என்ற இலக்கையும் அடிப்படையாகக் கொண்டு இவ் வீசா அங்கீகாரமளிப்பு முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read more...

சிறுவர் துஷ்பிரயோகம் சம்மந்தமான தொடர் கருத்தரங்குகள்

சிறுவர் துஷ்பிரயோகம் நாடளாவிய ரீதியில் சாதாரண அம்சமாக மாறிவிடுமோ என்ற அச்சம் தற்போது நாட்டு மக்களின் மனதில் ஏற்பட ஆரம்பித்துள்ளது. காரணம் அண்மைக்கா லமாக இடம்பெற்றுவரும் தொடர் சிறுவர் துஷ்பிரயோகம் சார் சம்பவங்களே.

இந்நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் சம்பந்தமாக பெற்றோர் ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகள் கிண்ணியாவின் பல பாடசாலைகளிலும் இடம்பெற்றுவருகின்றன. மேற்படி கருத்தரங்கில் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கு கொண்டதோடு, 5-10 வயதுக்குற்பட்ட பிள்ளைகள் எவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உடபடுத்தப்படுகிறார்கள், அதை எவ்வாறு நாம் பாதுகாப்பது என்பது சம்பந்தமான விளக்கங்கள் இங்கே வழங்கப்பட்டன.

கல்வி அமைச்சும் கனேடியன் றெட்குரோஸும் இதற்கான அணுசரனையினை வழங்கி வருகின்றன.


Read more...

காதலனுட‌ன் செ‌ன்றா‌ர் ‌வீரப்பன் மக‌‌ள்.


காத‌‌ல் கணவருட‌ன் செ‌ல்ல ச‌ந்த‌ன கட‌த்த‌ல் ‌வீர‌ப்ப‌ன் மக‌‌ளு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி அ‌ளி‌த்து‌ள்ளது. வீரப்பன்- முத்துலட்சுமி‌க்கு வித்யாராணி, பிரபா எ‌ன்ற இர‌ண்டு மகள்க‌ள் இரு‌க்‌கி‌ன்றன‌ர். இ‌தி‌ல் வித்யாராணி சென்னையில் உள்ள மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் படித்து வந்தார். அ‌ப்போது பெரம்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மரிய தீபக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இத‌னிடையே, தனது மனைவி வித்யாரா‌‌ணியை அவரது தாயார் முத்துலட்சுமி சட்ட விரோத காவலில் தடுத்து வைத்திருப்பதாகவு‌ம், மனை‌வியை‌ ‌மீ‌ட்டு‌த் தரு‌ம்படியு‌ம் ம‌ரிய‌ ‌தீப‌க் சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் ஆ‌ட்கொண‌ர்வு மனு‌த் தா‌க்‌க‌ல் செ‌ய்தா‌ர்.

அ‌ந்த மனு‌வி‌ல், லயோலா கல்லூரியில் நா‌ன் படித்த போது வித்யாராணியுடன் நட்பு ஏற்பட்டது. நாங்கள் இருவரும் இர‌ண்டரை ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்தோம். கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டோம். கோடம்பாக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த ஏப்ரல் 26ஆ‌ம் தேதி பதிவு செய்தோம். அதன் பிறகு இருவரும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினோம்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்‌ட் மாதம் எனது மனைவி வித்யாவை அவரது தாயார் முத்துலட்சுமி மேட்டூர் மேச்சேரியில் உள்ள வீரப்பன் சமாதிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கூட்டிச் சென்றார். அதன் பிறகு வித்யாராணியை என்னுடன் அனுப்ப முத்துலட்சுமி மறுத்து விட்டார். நாங்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்ததால் எங்களை பிரிக்க முத்துலட்சுமி முயற்சி செய்கிறார்.

எனவே எனது மனைவியை மீட்டு தரும்படி கடந்த ஆகஸ்‌ட் 29ஆ‌ம் தேதி சென்னை காவ‌ல்துறை ஆணைய‌ரி‌ட‌ம் புகார் கொடுத்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே முத்து லட்சுமியின் சட்ட விரோத காவலில் இருந்து வரும் என் மனைவியை மீட்டு என்னிடம் ஒப்படைக்கும்படி செம்பியம் காவ‌ல்துறை‌க்கு உத்தரவிட வேண்டும் எ‌ன்று மனு‌வி‌ல் ம‌ரிய‌ம் ‌தீப‌க் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த வழ‌க்கு நீதிபதிகள் நாகப்பன், சத்யநாராயணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வித்யாராணியை நீதிபதிகள் முன் ஆஜர்படுத்த‌ப்ப‌ட்டா‌ர்.

அ‌ப்போது, வித்யாவை அழைத்து பே‌சிய ‌‌நீ‌திப‌திக‌ள், நீ யாருடன் வாழ ஆசைப்படுகிறாய்? என்று கேட்டனர். அதற்கு, கணவர் தீபக்குடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன் என்று ‌வி‌த்யாரா‌ணி கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதையடுத்து நீதிபதிகள் ‌பிற‌ப்‌பி‌த்த உ‌த்தர‌வி‌ல், வித்யாராணி மேஜரான பெண். அவர் சட்டப்படி தீபக்கை திருமணம் செய்துள்ளார். அவர் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். எனவே வித்யா கணவர் தீபக்குடன், சேர்ந்து வாழ அனுமதி அளிக்கிறோம் என்றன‌ர்.

‌‌நீ‌திம‌ன்ற‌ம் அனும‌தி அ‌ளி‌த்த‌த்தை தொட‌ர்‌ந்து காத‌ல் மனை‌வி ‌வி‌த்யாராண‌ியை காத‌ல் கணவ‌ர் ம‌ரிய ‌தீப‌க் அழை‌‌த்து செ‌ன்றா‌ர்.

நன்றி வெப்துனியா

Read more...

பிரிட்டனில் 6 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள்


பிரிட்டனில் கைது செய்யப்பட்ட 6 பேர் மீது பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டுள்ளதாக பிரிட்டிஷ் போலிசார் கூறினர். அந்த ஆறு பேரில் நால்வர் பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்த ஆயுத்தமாகி வந்ததாகவும் மற்ற இருவர் அதுபற்றிய தகவல்களை வெளியிட மறுத்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக போலிசார் தெரிவித்தனர்.

பர்மிங்ஹாமில் போலிசார் சென்ற வாரம் மேற்கொண்ட அதிரடி சோதனையின்போது அந்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் நேற்று லண்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும் நீதிமன்றத் தகவல்கள் கூறின. அந்த ஆறு பேரும் 25 வயதுக்கும் 32 வயதுக்கும் இடைப்பட்டவர்களாவர்.

Read more...

மிலிந்த மொரகொடவை நேரடி விவாதத்திற்கு அழைக்கின்றார் முஸம்மில்.

கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐ.தே. கட்சியின் மேயர் வேட்பாளராக போட்டியிடும் ஏ.ஜெ.எம் முஸம்மில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேயர் வேட்பாளர் மிலிந்த மொரகொடவை தொலைக்காட்சியில் நேரடி விவாதத்திற்கு வருமாறு சவால் விடுத்தார்.

கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே முசம்மில் சவால் விடுத்தார். அவர் சுவர்ணவாஹினி தொலைக்காட்சி சேவையில் இடம்பெறும் ரத்துஹிர அரசியல் நிகழ்ச்சியில் நேரடி விவாதத்திற்கு வருமாறு நான் மிலிந்த மொரகொடவிற்கு சவால் விடுகின்றேன், நாங்கள் இருவர் மட்டும் இந்த விவாதத்தில் பங்கு பற்ற வேண்டும் என்று தெரிவித்தார்

Read more...

6ம் மாடியிலிருந்து தள்ளி வீழ்த்தப்பட்ட யுவதியின் மரணம் தொடர்பான விசாரணகள் ஆரம்பம்

நீர்கொழும்பு வைத்திய சாலையின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து மரணமான யுவதியின் வழக்கு நவம்பர் 30 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு மாவட்ட வைத்திய சாலையின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து மர்மமான முறையில் மரணமான ஆடைத்தொழிற்சாலை யுவதி சர்மிளா திசாநாயகவின் வழக்கு நேற்று நீர்கொழும்பு மேல்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்ட போது இந்த வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மேல் நீதிமன்ற நீதிபதி சிரான் குணரத்ன ஒத்திவைத்ததுள்ளார்

இந்த வழக்கின் சந்தேக நபரான வைத்திய சாலையில் வைத்தியராக பணியாற்றிய வைத்தியர் சுதர்சன் பாலகேயின் சார்பில் சட்டத்தரணி அனுர்ஜ பிரேமரத்ன மன்றில் ஆஜராகியிருந்தார். சம்பவத்தில் இறந்த யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை சமர்பிக்கப்படவில்லை என்று சட்டத்தரணி மன்றில் எடுத்துரைத்தார். இதனை அடுத்து நீதிபதி எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி சட்டவைத்திய அதிகாரியின் அற்க்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதுடன், அன்றைய தினத்திற்கு இந்த வழக்கை விசாரணைக்காக ஒத்திவைத்தார்.

அத்துடன் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 23ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை இந்த தொடர்ந்து விசாரணை செய்யப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நீர்கொழம்பு மாவட்ட வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து சுதந்திர வர்த்தக வலய ஊளியரான சமிளா திசாநாயக மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது. இவர் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யும் நோக்கில் கீழே தள்ளப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபரான வைத்தியர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைத்து தற்கொலை செய்ய முயன்று காப்பாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது

சம்பவம் தொடர்பான மீள்பார்வை.

நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்த இளம் யுவதி ஒருவர் வைத்திய சாலையின் கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் 12-11-2007 அன்று மரணமானார். இச்சம்பவம் தொடர்பாக வைத்தியசாலையின் வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ (32 வயது) என்பவர் நீர்கொழும்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். சிகிச்சைக்காக வந்த யுவதியை குறித்த வைத்தியர் மயக்க மருந்து கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைது செய்யப்பட்டார்.

சம்பவத்தை அடுத்து (13-11-2007 அன்று) வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நீர்கொழும்பு மேலதிக நீதிவான் மஹிந்த பிரபாத்சிங்க சம்பவ இடங்களை பார்வையிட்டதுடன் வைத்தியரின் அறை உட்பட பல இடங்களையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

வைத்தியரின் அறைக்கு முன்னாள் உள்ள அறையில் இருந்து யுவதியின் கைப்பை மற்றும் பாதணி உட்பட பல பொருட்கள் மீட்கப்பட்டன.

பின்னர் நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் சந்தேக நபர் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டார். இதேவேளை, உரிய விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தண்டணை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி 15-11-2007 அன்று நீர்கொழும்பில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.

கொலை செய்யப்பட்ட யுவதி பணியாற்றிய தொழிற்சாலை ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பேரணியாகவும் வந்தனர். 16-11-2007 அன்று யுவதியின் பூதவுடல் கட்டான பிரதேசத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்ட்டது. பின்னர் யுவதியின் சொந்த ஊரான மொனராகலைக்கு கொண்டு செல்லப்பட்டு 17—11-2007 அன்று இறுதிச் சடங்கு நடத்தப்பட்டது.

இதேவேளை, சந்தேக நபரான வைத்தியர் 16—11-2007 அன்று சிறைச்சாலையில் வைத்து தனது காற்சட்டை நாடாவை பயன்படுத்தி தற்கொலை செய்ய முயன்றார். நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டார்.

இதற்கிடையில் நீர்கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் யுவதியின் மரணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுவரெட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. 19-11-2007 அன்று யுவதியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றிற்கு பொலிசாரால் சமர்பிக்கப்பட்டது. ராகமை வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு அதன் அறிக்கை சீல் வைக்கப்பட்டு நீதிமன்றில் சமர்பிக்கப்பட்டது. அறிக்கையை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்குமாறு நீதிவான் பிரபாத் ரணசிங்க உத்தரவிட்டார்.

27-11-2007 அன்று நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது சந்தேக நபரான வைத்தியர் வைத்தியசாலையின் சிற்றூழியரால் அடையாளம் காட்டப்பட்டார்.

சந்தேக நபருக்கு உரிய தண்டணை வழங்குமாறு கோரி நீர்கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றிற்கு முன்பாக அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமும் அன்றைய தினம் இடம் பெற்றது.

இதேவேளை, 5-12-2007 அன்று இடம் பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது சாட்சியமளித்த வைத்தியசாலை சிற்றூழியரான திருமதி பியற்றிஸ் 12-11-2007 அன்று வைத்தியசாலையின் ஆறாவது மாடியில் சந்தேக நபரான வைத்தியர் கார்ட்போட் மட்டையொன்றை இழுத்து வருவதை (ஏழாவது மாடியில் படி ஏறும் வழியில் வைத்து )கண்டதாகவும் அதில் பெண் ஒருவர் படு்த்திருந்ததை கண்டதாகவும் தெரிவித்தார். இது தொடர்பாக தாதி ஒருவரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். சந்தேக நபரான வைத்தியரை தொடரந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மஜிஸ்ரேட் உத்தரவிட்டார்.

பின்னர் இடம் பெற்ற நீதிமன்ற விசாரணையின் போது யுவதியின் மரணத்திற்கான காரணம் நீதிபதியால் தெரிவிக்கப்பட்டது. மேலிருந்து கீழே விழுந்ததால் இடுப்பு எலும்பும் முள்ளந்தண்டு எலும்பும் முறிந்ததாலும் மண்டையோடு சிதைந்ததாலும் உள்ளே இரத்தம் கசிந்ததாலும் ஏற்பட்ட மரணம் என நீதிபதி தீர்ப்பளித்தார். யுவதியின் கழுத்தும் நெறிக்கப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதி குறிப்பிட்டார்.

2008ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சந்தேக நபரின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதுடன் சந்தேக நபர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டார். இவ்வாறு பலதடவைகள் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது.

15-09-2008 நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த சந்தேக நபரான வைத்தியர் 24-09-2008 அன்று இரண்டாவது தடவையாகவும் தற்கொலை செய்ய முயன்று ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தயசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு காப்பாற்றப்பட்டார்.

வைத்தியரின் மனைவி அக்காலப் பகுதியில் குழந்தை ஒன்றை பிரசவித்தமை குறிப்பிடத்தக்கது. 2009 ஆண்டு ஜுலை மாதம் 27 ஆம் திகதி இவ் வழக்கின் இரண்டாவது டி.என். ஏ. (மரபணு) பரிசோதணை அறிக்ககை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, இவ் வழக்கினை மேல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லுமாறு மேலதிக மஜிஸ்ட்ரேட் உத்தரவிட்டார்.

பின்னர், இக் கொலை வழக்கு மேல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லபட்டது. மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது , சந்தேக நபர் 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா கொண்ட இரு நபர்களின் சரீரப்பிணையிலும் கடும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்ய நீதிவானால் உத்தரவிடப்பட்டார்.

விசாரணை தொடர்ந்து இடம் பெற்று தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வழக்கு இரண்டு ஆண்டு காலமாக (2009 ஆம் ஆண்டு வரையில்) இடம்பெற்று வருவதும், இரண்டாவது டி.என். ஏ. (மரபணு) பரிசோதணை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படுவதற்கு நீண்டகாலம் எடுத்தமையும் பல்வேறு தரப்பினரிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நீதி காப்பாற்றப்படுமா?
பொறுத்திருந்து பார்ப்போம்!

படவிளக்கம்-
படம் 1 - கொலை செய்யப்பட்ட யுவதி
படம் 2- நீர்கொழும்பு வைத்தியசாலை
படம் 3- கற்பழிப்புச் சம்பவம் நடந்த அறை
படம் 4,5,6 - மறைத்துவைக்கப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட யுவதியின் உள்ளாடைகளும் பொருட்களும் மற்றும் சாட்சியங்களும்
படம் 7,8- நீதவான் வைத்தியசாலையில் விசாரணையில் ஈடுபட்டுள்ள காட்சி
படம் 9,10,11,12 - நீதிகோரி ஆர்ப்பாட்டம்
படம்-13 சமிலா திசாநாயக்கவின் பிரேதம்
படம் 14,15 – வைத்தியர் தற்கொலை செய்ய முயன்று வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட காட்சி
படம் 16- சந்தேக நபரான வைத்தியர் தனது மனைவியுடன்






















Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com