Tuesday, June 30, 2009

நோர்வே தமிழ் ஆலயம் பொலிஸாரின் கண்காணிப்பில். புலிகள் மிரட்டல்.

நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் கடந்த 11 ஆண்டுகளாக இயங்கிவரும் சிவசுப்பரமணிய ஆலயம் அந்நாட்டு பொலிஸாரின் கண்காணிப்பில் வந்துள்ளதாக தெரியவருன்றது. புலிகள் அவ்வாலயத்தின் நிர்வாகத்தினருக்கு விடுத்த மிரட்டலையடுத்து நிர்வாகத்தின் ஒருதொகுதியினர் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலை அடுத்தே இந்நிலை உருவாகியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினரிடம் பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் பல முக்கிய விடயங்கள் ஒப்புதல் வாக்குமூலமாக நிர்வாக அங்கத்தினரால் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் தாம் புலிகளின் மிரட்டலுக்கு உள்ளான விடயத்தை ஆதாரப்படுத்தும் விடியோக்களும் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அவர்கள் வழங்கியுள்ள ஒப்புதல் வாக்கு முலங்களில் சுவிற்சலாந்து நாட்டிற்கு கோயில் நிதியில் இருந்து அனுப்பட்ட 10 லட்சம் நோர்வே குரோணர்கள் புலிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே அனுப்பப்பட்டதாகவும் அப்பணத்தை அனுப்புமாறு புலிகளின் நோர்வே பொறுப்பாளர் முகிலன் தலைமையில் சென்ற குழுவினர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலய நிர்வாகத்தினரின் ஒப்புதல் வாக்குமூலத்தை தொடர்ந்து ஆலய வங்கிக்கணக்கு மற்றும் நிதிப் பரிமாறல்கள் நோர்வே உளவுப் பிரிவினரின் நேரடிக் கண்காணிப்பில் உள்ளதாக தெரியவருகின்றது. புலிகளியக்கத்தின் பயங்கரவாத செயல்களுக்கு தமது நாட்டில் இருந்து மேலும் நிதியுதவி செல்வதை தடுக்கு முகமாக நோர்வே பொலிஸார் புலிகளின் சகல செயற்பாடுகளையும் செயலிழக்கச் செய்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

Read more...

மடுமாதா தேவாலய உற்சவம்.

கடந்தவாரம் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்ட மடுத்தேவாலய உற்சவம் இவ்வாண்டு மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்பிரதேசத்தில் உள்ள மிதிவெடிகளை அகற்றுவதற்கான வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Read more...

யேமன் விமான விபத்தில் ஜந்து வயது குழந்தை உயிருடன் மீட்பு

யேமன் விமானத்தில் பயணித்த ஜந்து வயது குழந்தை ஒன்றை மீட்பு பணியாளர்கள் உயிருடன் மீட்டுள்ளனர். யேமன் தலைநகர் இருந்து பரிஸ் நோக்கி 150 பயணிகளுடன் பயணித்த யேமானியா ஏர்லைன்ஸ் விமானம் இந்துசமுத்திரத்தின் காமோறுஸ் தீவுகூட்டத்திற்கு அண்மையில் பறந்து கொண்டிருந்த போது விபத்திற்குள்ளாகியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விமானத்தில் 11 பணியாளர்கள் 3 சிறுவர்கள் உட்பட 150 பயணிகள் பயணித்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. விபத்து நடந்த இடத்தில் இருந்து பல சடலங்களை மீட்டதாக தெரிவித்த மீட்பு பணியாளர்கள் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை உறுதிபடுத்தப்படவில்லை என தெரிவித்துள்ளதுடன் இந்த விபத்தில் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் கருத்து தெரிவித்த ஜரோப்பிய ஒன்றியம், சர்வதேச தரத்திலான விமான உற்பத்தி கட்டளைகளை மீறி அமைக்கப்படும் விமானங்களில் பயணம் செய்வது பயணிகளுக்கு பாதுகாப்பற்றது எனவும், இவ்வாறான விமானங்களை கறுப்புபட்டியலில் சேர்ப்பதுடன்; இவற்றில் பயணம் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் சர்வதேச பயணத்திற்கான விமான சான்றிதளை பெற்ற பின்பே விமானம் போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக யேமன் விமான போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்

Read more...

இன்று நள்ளிரவு முதல் கேஸ் விலைமாற்றம்-நுகர்வேர் அதிகார சபை

12.5 கிலோ லாவ் கேஸ் சிலிண்டரின் விலை 100 ருபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாகவும் 12.5 கிலோ செல் கேஸ சிலிண்டரின் விலை 53 ருபாவினால் குறைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்த நுகர்வோர் அதிகார சபை இவ்விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்துள்ளது.

Read more...

சீனாவில் நில நடுக்கம்

சீனாவில் உள்ள கிச்சுவான் பிராந்தியத்தில் கடந்த ஆண்டு நில நடுக்கம் ஏற்பட்டு 80 ஆயிரம் பேர் பலியானார்கள். அதே பகுதியில் இன்று காலை நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 5.1 புள்ளியாக பதிவாகி இருந்தது. சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

Read more...

இடைத்தங்கல் முகாமிலிருந்து தப்பியோடிய இரு பெண்கள் விமான நிலையத்தில் கைது.

வவுனியா இடைத்தங்கல் முகாமில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறி வெளிநாடு செல்ல முற்பட்ட இரு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இடைத்தங்கல் முகாம்களில் உள்ள வசதி படைத்தவர்கள் வவுனியாவில் உள்ள தமிழ் அமைப்புக்களின் உறுப்பினர்களுக்கு பணம்கொடுத்து அவர்களின் உதவியுடன் அம்முகாம்களில் இருந்து வெளியேறி வருகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள மேற்படி இரு யுவதிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது அவர்கள் முகாம்களில் இருந்து சட்டவிரோதமாக வெளியேறுவதற்கு பணத்திற்காக உதவிய நபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அதிகாரி ஒருவர் அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள புலிகள் உட்பட சகல இயக்கங்களையும் சேர்ந்தோர் வவுனியா முகாம்களில் உள்ளோரை சட்டவிரோதமாக வெளியே கொண்டுவரும் விடயத்தை தமது வியாபாரமாக்கிக் கொண்டுள்ளனர். புலம்பெயர் புலிகள் தாம் விலைக்கு வாங்கியிருந்த பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் மூலமும் மாற்று இயக்கத்தினர் தமது அரசியல் செல்வாக்கு மூலமும் இச்செயலை செய்து வருகின்றனர்.

இச் சட்டவிரோத நடவடிக்கையானது முகாம்களில் இருக்க கூடிய மக்கள் மீதான பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரிக்க வைத்துள்ளதுடன் அங்குள்ள மக்களின் மனநிலையையும் பாதித்துள்ளது. பண வசதி படைத்தவர்கள் வெளியேறும் போது ஏழைக் குடும்பங்களை சேர்ந்தவர்கள் முகாம்களில் இருக்க வேண்டிய நிலையை இச்செயல் உருவாக்கியுள்ளது.

Read more...

Monday, June 29, 2009

புலி உறுப்பினர்களின் குரல்வளைகளை நசுக்கும் புலம்பெயர் புலித்தலைமை. -ஒர் புலி யின் மடலில் இருந்து சில துளிகள் -

புலிகளியக்கம் அஸ்தமனமாகிப் போயுள்ள இத்தருணத்தில் புலி உறுப்பினர்களது குரல்வளைகைள் புலம்பெயர் புலித்தலைமையால் நெரிக்கப்படுகின்றது. ஆங்காங்கே பதுங்கியிருக்க கூடிய புலி உறுப்பினர்கள் பல உண்மைகளையும் தமது துயரங்களையும் மக்களுடன் பகிர்ந்து கொள்ள புலி ஊடகங்கள் அனுமதிக்காத ஓர் துர்ப்பாக்கிய நிலைதோன்றியுள்ளது.

பிரபாகரனின் மரணத்தின் பின்பு புலிகளியக்கத்தின் புலம்பெயர் வலையமைப்பில் தோன்றியுள்ள பிளவுகளினூடாக அவ்வியக்கத்தின் பிரச்சார ஊடகங்களும் பிளவுபட்டு நிற்பதுடன் கடந்த காலங்களில் ஒருவரை ஒருவர் சாடியும் தூற்றியும் வருவதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

இந்நிலையில் புலிகளியக்கத்தினுள் இறுதிநேரத்தில் நடந்த நிகழ்வுகள், தோல்விக்கான காரணங்கள், எஞ்சியுள்ள ஒருசில உண்மையான புலிகளின் மனநிலை, அவர்கள் மக்களிடம் இருந்து எதிர்பார்ப்பது போன்ற விடயங்களை கூற அவர்களில் சிலர் முனைகின்றபோதும் அவர்களது குரல்வளைகள் நசுக்கப்பட்டுள்ளதை உணரமுடிகின்றது.

ஆனால் அவர்கள் அனுங்கும் சத்தம் அவர்களது ஏக்கங்கள் சில புதிய புதிய இலவச இணையச் சேவைகளுடாக வெளிவந்தவண்ணம் உள்ளது. அவ்வாறு புலிகளின் புலனாய்வுத் துறையைச் சேர்ந்தவர் என தன்னை இனம்காட்டியுள்ள அரவிந்தன் என்பவர் எழுதியுள்ள கட்டுரையில் இருந்து புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டதற்கான மூலகாரணமாக அதன் உறுப்பினர்கள் நம்பும் பல விடயங்கள் தெளிவாகின்றது.

அக்கட்டுரையில் அரவிந்தன் படையினரின் பகுதிகளுள் தான் ஊடுருவி இருந்தாகவும் அப்போது "படையினர் புலிகளின் செல்லடிகளுக்கு மிகவும் அஞ்சி ஓடுப்பட்டு திரிந்தாகவும் கூறும் அவர், துரதிஸ்டவசமாக அவனுக்கு தலையிடி கொடுக்க எம்மிடம் செல்கள் கையிருப்பில் இருக்கவில்லை என்பதை அவன் எப்படி அறிவான்?" எனக் கேட்டிருந்தார்.

எனவே புலிகளது ஆயுதக் கையிருப்பு முடிவுற்றிருக்கின்றது என்பதும் அவர்கள் ஆயுத விநியோகித்தர்களால் எமாற்றப்பட்டிருக்கின்றார்கள் என்பதும் அவரது மேற்படி கூற்றிலிருந்து தெளிவாகின்றது.

"சரணையடைய கைகளை தூக்கிய விடுதலைப்புலிகள் சுடப்பட்டனர்." என அக்கடிதத்தில் கூறப்படுகின்றது. ஆகவே புலிகள் எந்த ஒரு காலகட்டத்திலும் எதிரியிடம் சரணடைய வில்லை என புலம்பெயர் புலிகள் மேற்கொள்ளும் பிரச்சாரத்தில் எவ்வித உண்மையும் இல்லை என்பதும் புலிகள் எந்த காலகட்டத்திலும் சரணடையமாட்டார்கள் என்ற பரப்புரையாளர்களின் பரப்புரையும் நாம் சரணடைவதற்கு தயாராக இல்லை என நடேசன், புலித்தேவன், சூசை போன்றோர் கடைசி நேரம் வரை கூறிவந்தது யாவும் மக்களை ஏமாற்றவே என்பதும் வெளிப்படையாகின்றது. ஆனால் அவர்கள் அந்த சரணடைதலை சட்ட ரீதியாக மக்களின் அனுசரணையுடன் மேற்கொண்டிருந்தால் அவர்கட்கு அந்த நிலை வந்திராது என்பதுடன் பல நூற்றுக்கணக்கான உயிர்களையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் காப்பாற்றி இருக்க முடியும் என்பதும் நிச்சயமாகும்.

"எமது மக்கள் இறுதிவரை எம்முடன் நின்று எம்மைப் பலப்படுத்தினார்கள். இப்போது அவர்கள் எங்களாலேயே ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். இதை சர்வதேசம் திறம்பட செய்தது. எம்மை போரிட செல்ல விடாமல் ஒரு தீர்வை எமது மக்களுக்கு நாட்டை பெற்றுத்தருவோம் என மறைமுக வாக்குறுதிகளும் தமிழ் மக்களின் நண்பர்கள் போன்ற தோற்றத்தையும் காட்டி நாம் இறுதியில் ஏமாற்றப்பட்டோம். இதை தமிழர் பரம்பரை உள்ளவரை மறக்க முடியாது" என கூறி தாம் மக்களை இரும்புப் பிடியில் பலவந்தமாக வைத்திருந்த விடயத்தை மூடி மறைத்திருக்கும் அரவிந்தன்,

தமக்கான அரசியல் தீர்வொன்றை பெற்றுத்தருவதாக கூறிய சர்வதேச நாடுயாது? அதன் முகவர்கள் யார்? எவ்வாறான நிபந்தனைகள் விதிக்கப்பட்டன போன்ற விடயங்களை தெளிவாக கூறாமல் தொடர்ந்தும் மக்களை ஏமாற்றி சர்வதேச சமூகத்தின் மீது பழியைபோடுவதுடன் மக்களை தவறான வழிக்கு கொண்டு செல்ல முற்படுவதை உணரமுடிகின்றது.

"எனக்கு ஒரு சந்தேகம். நாம் சரணடையும் பரம்பரையில் வந்தவர்கள் அல்லவே. எப்படி 10000க்கும் மேற்பட்ட புலிகளை சரணடையச் செய்ய முடிந்தது என்பதே. அதற்கான விடைகளை நீங்கள் நிட்சயம் அறிந்து கொள்ள வேண்டும். அதற்கான ஆரம்ப வித்து தூவப்பட்டது சமாதான உடன்படிக்கையில் என்பதே. 36 வருடங்களாக போராடிப் போராடி எங்கள் மக்களும் போராளிகளும் சோர்வடைந்து இருந்தார்கள் என்பது உண்மைதான். அதனால் எல்லோரும் ஓர் போர் நிறுத்தத்தை விரும்பியது என்னவோ உண்மை ஆனால் அதுவும் சர்வதேச நிர்ப்பந்தத்தில் தான் என்பதை உலகே அறியும்." என உண்மை நிலையை கூறி அதை நியாப்படுத்துவதற்கு வசனங்கள் இல்லாமல் அரவிந்தன் திக்குமக்காடுவதை உணரமுடிகின்றது.

போராளிகள் சோர்வடைந்திருந்ததும் மக்கள் சமாதானத்தை வேண்டியிருந்ததும் உண்மையாயின் போராட்ட இயக்கமொன்று அம்மக்களினதும் போராளிகளினதும் விருப்பிற்கு மாறாக ஏன் போரை தொடுத்தார்கள் என்ற கேள்வியை அரவிந்தன் தனது தலைமையிடம் ஏன் கோரவில்லை என்பது வியப்பிற்குரியது. அத்துடன் சமாதான ஒப்பந்தம் கூட சர்வதேச சமூகத்தின் நிர்பந்தத்தில் உருவாக்கப்பட்டது என்பதை அவர் கூறுகின்றார் எனவே புலிகள் நிர்பந்தத்தின் அடிப்படையில் சமாதான உடன்படிக்கைக்கு சென்று அதை திட்டமிட்ட முறையில் முறித்துள்ளார்கள் என்ற உண்மையும் அரவிந்தனால் வெளியிடப்பட்டுள்ளது.

"சமாதானத்திற்கு முன் வீரனாக இருந்தவன் எப்படி கோழையாக மாற்றப்பட்டான் என்பது மிகவும் சுவாரஸ்சியமானவை." எனக்கூறும் அவர் பல சுவாரஸ்யமான கதைகளையும் கூறியள்ளார். ஆனால் அதற்கு முந்திய பந்தியில் போராளிகள் போராடிக் களைத்து சமாதானத்தை வேண்டிநின்றார்கள் என்ற விடயத்தை அவரே கூறியிருந்தார். ஆகவே அவர் குறிப்பிடும் நபர் தொடர்ந்து போராடுவதற்கு மனமில்லாமல் உடைந்தார் என்பதை வெளிப்படையாக கூறாமல் அரவிந்தன் அதற்கு கூறும் காரணங்களுக்கு கேலிக்கிடமானவை.

"சமாதான காலத்தில் எம்முடன் எங்கள் மக்களுக்காக பாடுபட்ட ஒரு ஐ.நா தொண்டு நிறுவன தலைமை பெண் அதிகாரி பாம்பு கடிக்கு இலக்கானார். உடனே வந்தது இராணுவ கெலி. என்னடா கெலி வருகிறது எனப் பார்த்தால் உண்மையில் அவர் ஒரு இராணுவ மேஜர் ஜெனரலுடைய மனைவி. ஆனால் அவருக்காக எங்கள் முகங்கள் கூட திறந்தே கிடந்தன. அவரும் எங்களுக்கென்றால் தனது வாகனத்தைக் கூட பரிசளிப்பார்.
திறமையான அப்படி ஒரு ஊடுருவல். இதே போல் பல நிறுவனங்கள் எம்மால் கண்டுபிடிக்கப்பட்டன."

"நாம் சாமாதானத்தின் பின் இராணுவ கட்டுப்பாட்டுக்கு பரப்புரைகளுக்கு போய் வந்தோம். அங்கு எம்முடன் தொடர்பை ஏற்படுத்திய பல வல்லவர்கள் ஒர சில இராணுவ வீரர்களை கொண்று தமது வீரப் பிரதாபங்களை எமக்கு காட்டுவார்கள். நாங்களும் அவரை விட்டால் ஆள் இல்லை என நினைத்து பழைய ஆட்களைப் பின்னுக்கு தள்ளி அவர்களை புதுப் புலிகளாக சேர்த்துக் கொள்வோம். அவர்களும் நம்பிக்கையாக நடந்து கொள்வார்கள். பின்பு முக்கிய தளபதிகளுடைய மெய்ப்பாது காவலர்கள் அல்லது முக்கியமான வேலைகளை செய்து கொண்டு இருக்கும் நபர்கள் ஆகிவிடுவார்கள்."

"இது எங்கே கொண்டு விட்டது தெரியுமா?

ஒரு சிலர் ஆவணங்களுடன் கம்பி நீட்டினர்.

பல தோல்விகளுக்கும் காரணமே கண்டு பிடிக்கப்படவில்லை இன்று வரை.

ஒர சிலர் திறமையாக இறுதிவரை இருந்து இறுதியில் தப்பி வந்தனர்.

அவர்கள் எல்லோரும் இறுதியாக சரணடைய வரும் மக்களோடு வந்த விடுதலைப்புலிகளை பெயர் கூறி வரவேற்றனர்."

"ஒரு சிலர் இராணுவ சீருடையில் இருந்தனர். தாம் இராணுவம் என வெளிப்படையாக அறிவித்தனர் எங்கள் எல்லோருக்கும் கண்ணீரைப் பரிசளித்த தமிழ் உத்தமர்கள் இவர்கள்.

மலையகம் மற்றும் கொழும்பை அண்டிய பகுதிகளை சேர்ந்த தமிழர்கள்.

நாமும் சிங்களம் தெரிந்த புலிகளைத்தானே விரும்பினோம். அதனால் இராணுவம் எமக்கு கொடுத்த அன்பளிப்பு அவர்கள்.

இப்படித்தான் ஒருவர் வைத்தியசாலைக்கு வந்தார். தொப்பியும் முகத்துக்கு கறுப்புத் துணியும் கட்டியிருந்தார். எல்லோரையும் பாடசாலை மாணவர்கள் போல் இருத்திவிட்டுக் கேட்டார். இதில் புலிகள் இருந்தால் சரணடையுங்கள் என. யாரும் எழும்பவில்லை. அவர் ஒரு சிலரை சுட்டிக்காட்டி நீ இந்த படையணியில் இருந்த நீ! உனது பெயர் இது எனக் கூற,
அவர்கள் இல்லை என மறுத்தனர். வந்தவன் ஒரு இகழ்ச்சி சிரிப்பின் பின் தொப்பியைக் கழட்டிக் கேட்டான். என்னைத் தெரியுமா? என்ன யாரும் பதில் சொல்லவில்லை. முகத் துணியைக் கழட்டினான். ஒரு சிலர் குனிந்து அழுதனர். பதில் சொல்ல மறுத்த பலர் தலை குனிந்து இருந்தனர். அவனே கதைக்கத் தொடங்கினான். நான் ஒரு இராணவவீரன். சமாதான காலத்தில் ஊடுருவியிருந்தேன். நான் 'கேணல் சாள்ஸ்க்கு பொடிக்காட்டாக இருந்திருக்கிறேன்';.

"அவருக்கு கிளைமோர் அடித்துக் கொன்றதும் நான் தான் என்றும், சில திகதிகளில் வன்னிக்குள் பஸ் வண்டிகள் மீது நடந்த தாக்குதல்களையும் தான், தான் வழி நடாத்தியதாக சொன்னான். எப்படியிருக்கிறது?"

இவ்வாறு இலங்கை இராணுவத்தின் இராணுவ மற்றும் புலனாய்வு , ஊடுருவல் திறமையை கூறியிருக்கின்றார். எதிரி தன்னுடைய விலங்கை எந்த வழியிலும் மாட்ட முயற்சிப்பான் என்பது போர்த்தந்திரம் அறிந்த குழந்தை கூட அறிந்திருக்கும். எனவே எதிரியின் விலங்கை உடைப்பதற்கு தகுதியவாய்ந்தவனே வீரனாவான். ஆகவே நாம் கோட்டைவிட்டு விட்டோம் என்பதை ஓர் வீரச்செயலாக அரவிந்தன் சொல்ல முற்படகின்றாரா என்பது கேள்வி.

"ICRC இலங்கை இராணுவத்தின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இதில் பணி புரியும் வெள்ளையர்கள் இராணுவத்திற்கு வேலை செய்கிறார்கள் என்பதை நிருபிக்க முடியாவிட்டாலும் எமக்கு அந்த சந்தேகம் நிஜம் என்பது தெரிந்து இருந்தது."

"உதாரணம் காயமடைந்த நோயாளர்களை ஏற்றிக் கொண்டு போகும் கிறீன் ஓசியன் கப்பலில் வரும் வெள்ளையினப் பெண் அதிகாரி வைத்தியசாலையில் வந்து எமது பிரதேச வைத்தியர்களுடன் ஒரு நாள் வாக்குவாதப்பட்டதை நான் நேரில் கண்டேன். காரணம் முந்நூறுக்கு மேற்பட்ட நோயாளர்களை ஏற்ற வந்ததாகவும் இப்போது நூற்றைம்பது வரையானோர் இருப்பதாகவும் கூறி ஓர் வெள்ளைப் பெண்மணி சண்டை பிடித்தார். ஏனெனில் கடும் காயக்காரர்களுக்கு மட்டும் நாங்கள் அனுமதியை வழங்கினோம்." எனக் கூறும் அரவிந்தன் தமது தோல்விக்கு மக்களுக்காக உதவிபுரிய வந்த ஐசிஆர்சியினரும் காரணம் என கூறுகின்றார். அத்துடன் அப்பெண்மணி 300 நோயாளர்கள் கொண்டு செல்லச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் நேரடியாகச் சண்டை பிடித்துள்ளார். ஆனால் புலிகள் நோயாளிகளைக் கூட வெளியேற அனுமதித்திருக்கவில்லை என்ற உண்மையை அரவிந்தன் தெளிவாக்கியிருக்கின்றார்.

புலிகளியகத்தில் இருந்து சண்டைகளில் காயமைடமந்து நிரந்தர அங்கவீனர்களாக்கப்பட்ட பலர் நவம் அறிவுக்கூடம் , மயூரி இல்லம் என பல பெயர்களில் அமைக்கப்பட்ட நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அப்போராளிகளை புலிகள் விரும்பியிருந்தால் இக்கப்பலில் அனுப்பி அவர்களின் வாழ்விற்கு உதவியிருக்க முடியும் ஆனால் புலிகள் அவ்வாறு செய்யவில்லை. இறுதி நேரத்தில் அவர்கள் புலிகளினால் அழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

அதை விட இரகசிய உள் நுழைவுகளுக்கு UN வாகனங்களில் கூட இராணுவம் பயன்படுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன. ஆனால் இந்த நிறுவனங்கள் எங்களில் பிழை பிடிப்பதிலும் எங்களுக்க எதிராக மக்களை திசை திருப்புவதிலும் பெரும் பங்கை ஆற்றின என்று கூறுவதன் மூலம் புலிகள் மீது மனித உரிமை அமைப்புக்கள் வன்முறைகளை கைவிடுமாறும் மக்களை வெளியேற அனுமதிக்குமாறும் சிறுவர்களை படையில் சேர்க்க வேண்டாம் எனவும் பலத்த அழுத்தங்களை கொடுத்துவந்தார்கள் என்ற உண்மையை தெட்டத்தெளிவாக்கியுள்ளார்.

"பல நாடுகளுக்கு காலச் சந்தைகளில் ஆயுதங்களை விற்கும் இதே அமெரிக்கா எங்களையும் வாழ விடவில்லை. தனது நலனுக்காக எதையும் செய்யும் அமெரிக்கா பல நாடுகளுக்கு சுதந்திரத்தையும் ஆயுதங்களையும் பல நாடுகளை சூறாடியும் கொண்டு தனது விஸ்தரிப்பை செய்கிறது" என அமெரிக்காவை நேரடியாக சாடும் அரவிந்தன்.

"ஆயுதம் வாங்கினார்கள் என காட்டிக் கொடுத்தவர் ஒரு தமிழர். அவரையும் அவர் செய்த போதைப்பொருள் வியாபாரத்தையும் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டுமென்று அவர் காட்டிக் கொடுக்க வேண்டுமென கேட்கப்பட்டு, அவர் பின்பு அவர்களைக் காட்டிக்கொடுத்தார் என்பதை தகவலறிந்தவர்கள் சொல்கிறார்கள்." என அரவிந்தன் கூறுகின்றார். யார் அந்த தமிழன்? குறிப்பாக கள்ளச் சந்தையில் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்தவர் கேபி எனப்படும் குமரன் பத்தமநாதனாகும். பிரபாகரன் இறந்தற்கு கேபி சதிவலையை பின்னினார் என பலமான சந்தேகங்கள் இருக்கின்ற நிலையில் அரவிந்தன் குறிப்பிடும் ஆயுதக் கொள்வனவுக்காரரும் போதைப்பொருள் கடத்தல் காரரும் யார் என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

"இறுதியில் நாங்கள் பிள்ளை பிடிகாரராக சர்வதேச அரங்கில் பிரச்சாரப்படுத்தப்பட்டோம். போராளிகளைக் கள முனைகளில் இருந்து ஓட, பெற்றோர் ஊக்கம் கொடுத்தனர். விளைவு எதிரி எங்கள் வயல்கள் தாண்டி, கிராமம், நகரம் தாண்டி, எங்கள் வாசல்களை தாண்டி எம்மைச் சுட்டுக் கொன்றான்." எனவும் கலைஞர் போன்ற பெரியவர்களை நாம் நம்பி இருக்க, அவர்களும் எல்லாம் வெறும் அரசியல் தான் என தமிழினத்திற்கே புரிய வைத்ததிற்கு அவருக்கும் எங்கள் கை கூப்பிய வணக்கங்கள். என மிகவும் சோர்வடைந்த நிலையில் தனது பெரிதோர் மடலை அரவிந்தன் முடித்துள்ளார்.

அரவிந்தனது இம்மடலானது இலவச இணையம் ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்மடலை புலிகளின் ஊடகங்கள் எதுவும் பிரசுரிக்க முன்வராததன் காரணம் அவர்களுள் ஏற்பட்டுள்ள பிளவாகும். ஆனால் அம்மடலில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் புலிகளின் கடந்த கால அராஜகங்களை வெளிப்படுத்துவதாக இருந்தாலும் அவ் அராஜகங்களை நியாயப்படுத்துவதாகவும் நொண்டிச் சாட்டுச் சொல்வதாகவும் அமைந்துள்ளமையால் அக்கடிதத்தை எம்மால் பிரசுரிக்க முடியவில்லை.

Read more...

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலை: அரசாங்கம்

மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலை காணப்படுகிறதென இடர்முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

13வது திருத்தம் அமுல்படுத்தவேண்டும் என்பதில் இணக்கப்பாடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கான நடவடிக்கைகளில் இலங்கை அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய அமைச்சர், எனினும், 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதில் சிக்கலொன்று காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

அந்த வகையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப, மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலையிருப்பதுடன், இலங்கை போன்ற சிறிய நாட்டில் பொலிஸ் அதிகாரம் மத்திய அரசாங்கத்தின் கீழேயே இருக்கவேண்டுமென்ற கருத்தியலொன்று நிலவுவதாகவும் மஹிந்த சமரசிங்க சுட்டிக்காட்டினார்.

எனவே, இந்த 2 காரணங்களாலுமே மாகாணசபைக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கமுடியாத நிலை காணப்படுவதுடன், இது தொடர்பில் ஆராயவேண்டியிருப்பதாகவும் மஹிந்த சமரசிங்க குறிப்பிட்டார்.


Read more...

தாய்தந்தையரை இழந்த சிறுவர்களுக்கான பராமரிப்பு நிலையம்.

வன்னியில் இடம்பெற்ற யுத்தத்தில் தாய்தந்தயைரை இழநது அனாதைகளாக்கப்பட்டுள்ள குழந்கைகளை கவனிக்கும் பொருட்டு சிறுலிய செவன எனும் பெயரில் பாராமரிப்பு நிலையம் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையத்தை முதற்பெண்மணி சிறாந்தி ராஜபக்ச திறந்து வைத்தார்.

இன்று வவுனியாவில் இடம்பெற்ற இந்நிலைய திறப்பு விழாவில் அவர் பேசுகையில், இடைத்தங்கல் முகாம்களில் 230 தாய்தந்தையரை இழந்த குழந்கைள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தமது 18 வயதை எட்டும் வரை பராமரிக்கப்படுவர் எனவும் அவர்கள் பராயமடைந்த பின்னர் அவர்களின் விருப்பிற்கேற்ப உறவினர்களுடன் இணைய முடியும் எனவும் தெரிவித்தார்.

இச் சிறுவர்களில் 125 பேர் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 5 மாடிக் கட்டிடத்தில் பாராமரிக்கப்படுவர். சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளீர் விவகார அமைச்சு பராமரிப்பிற்கு தேவையான 20 லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை வழங்கியுள்ளது.

Read more...

அமெரிக்காவிடுத்த பயண எச்சரிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு ஏமாற்றமளிக்கின்றது. -பாலித கோகன-

அமெரிக்க பிரஜைகளுக்கு பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாகவும் இலங்கையில் தாக்குதல்கள் இடம்பெறகூடும் எனவும் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் தனது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கையை விடுத்திருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோகன

இலங்கையில் பயங்கரவாதம் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் இலங்கையின் தற்போது உள்ள பாதுகாப்பான நிலைமையை கருத்தில் கொள்ளாமல் அமெரிக்காவிடுத்த பயண எச்சரிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு ஏமாற்றமளிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்வதில் எந்தவித ஆபத்தும் இல்லை என தெரிவித்துள்ளார்

Read more...

படையினரின் வெற்றியை தேர்தல் பிரச்சாரங்களில் பிரயோகிப்பதற்கு தடை.

படையினரின் வெற்றியை தேர்தல் பிரச்சாரங்களுக்கு உபயோகிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள சுற்றுநிருபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பரங்களிலும், கட்அவுட்டுக்களிலும், இணையத்தளங்களிலும் தேர்தல் பிரச்சாரங்களுக்காக படையினரது படங்களை வெளியிடுவது குற்றமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஓய்வு பெற்ற அதிகாரிகள் தேர்தல் பிரச்சாரங்களில் தமது புகைப்படங்களை வெளியிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை.

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பட்டிபொல பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்துள்ள பொலிஸ் பேச்சாளர் கொலைக்கான காரணம் இதுவரை தெளிவில்லை என தெரிவித்துள்ளார்.

Read more...

ஜாதிக ஹெல உறுமய அரசை மிரட்டுகின்றது.

அரசாங்கம் 13வது திருத்தச் சட்டத்தை முற்றாக நடைமுறைப்படுத்தி மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாம் அரசில் இருந்து வெளியேறுவோம் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடொன்றில் அக்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

Read more...

Sunday, June 28, 2009

ஜனாதிபதி கொலைச் சதித்திட்டத்தில் இரன்டு வெளிநாட்டுப்பிரஜைகள் கைது.

தற்கொலைகுண்டுதாரியை பயன்படுத்தி ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கொலை செய்யதீட்டியிருந்த சதிதிட்டத்தில் இரன்டு வெளிநாட்டுபிரஜைகளை கைதுசெய்திருப்பதாக தெரிவித்த புலனாய்வு பிரிவினர் இச் சதித்திட்டத்திற்கு துணையாக இருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இரண்டு அரசியல்வாதிகளையும் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இச் சதிதிட்டத்திற்கு துணையாக இருந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று வாகன சாரதிகள் உட்பட மூன்று உயர்மட்ட புலி உறுப்பினர்கள் ஏற்கனவே புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவ்வாகன சாரதிகள் அரசசார்பற்ற வெளி நாட்டு நிறுவனங்களான UNOPS, UNHCR மற்றும் Save the Children போன்றவற்றில் பணிபுரிந்தவர்கள் எனவும் இக்கொலை சதித்திட்டத்திட்டத்திற்கு 40 கிலோ எடையுள்ள C4 ரக வெடிபெருட்கள் இவ்வரசசார்பற்ற வெளி நாட்டு நிறுவனங்களின் வாகனங்கள் மூலமே கிளிநொச்சியிலிருந்து கொழும்பிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Read more...

நோர்வே இலக்கியச் சந்திப்பு : புலிகளும் கலந்து கொண்டனர்.

ஐரோப்பாவில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்றுவரும் இலங்கியச் சந்திப்பு இம்முறை நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் உள்ள குருறூட் சந்திப்பு மண்டபத்தில் 26ம் திகதியில் இருந்து இடம்பெற்று வருகின்றது. நாளை 30ம் திகதி நண்பகல் வரை தொடரவுள்ள இச் சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நோர்வே பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

37வது சந்திப்பாக இடம்பெறும் இந்நிகழ்வில் புலிகளுக்கு எதிரான வாதங்கள் பலமாக முன்வைக்கப்பட்டு வந்ததிருந்ததுடன் இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் தேசத்துரோகிகள் என புலிகளால் பரப்புரைசெய்யப்பட்டும் வந்தது.
புலிகளின் அஸ்த்தமனத்தின் பின்னர் பல பிரிவுகளாக பிளவுபட்டு நிற்கும் புலிகள் தாம் துரோகிகள் என பிரகடனப்படுத்தியிருந்தோருடன் பகிரங்கமாக கலந்து கொள்ளும் முதலாவது நிகழ்வு இதுவாகும். இந்நிகழ்வில் கலந்து கொண்ட புலிகள் தம்மால் துரோகி என பட்டமளிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட அமரர் திரு. சபாலிங்கம் அவர்கட்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சார்பாக அஞ்சலியும் செலுத்தினர்.

இங்கு புலிகள் சார்பாக அவ்வியக்கத்தின் முத்த உறுப்பினர்களில் ஒருவாரான சிரான் பணிப்பாளர், புலிகளின் மூத்த உறுப்பினரும் புலிகளின் நோர்வே பொறுப்பாளரின் மாமனாருமான சித்திவிநாயகநாதன், அன்னை பூபதி தமிழ்ப் பாடசாலை நிர்வாக உறுப்பினர் மனோ உட்பட புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் எண்மர் கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச்சந்திப்பில் புலிகள் கலந்துகொண்டதன் நோக்கம் பல முனைகளிலும் நோக்கப்படுகின்றது. புலிகளினால் தடைவிதிக்கப்பட்டிருந்த இந்நிகழ்வில் புலிகளின் ஒரு தரப்பினர் கலந்து கொண்டுள்ளமையானது அவ்வியக்கத்தினுள் ஏற்பட்டுள்ள பிளவினை மேலும் தெளிவு படுத்துகின்றது.

இச்சந்திப்பில் கலந்து கொண்ட புலிகள் ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தியுள்ளனர் ஒன்று தம்முடன் முரண்பட்டு நிற்கும் தமது மறுதரப்பினருக்கு தாம் தீவிர புலி எதிர்பாளர்கள் என்ற செய்தியையும் தமது பின்புலத்தில் அரசாங்கம் இருக்கின்றது என்ற செய்தியையும் சொல்வது. மறுபுறத்தில் புலிகளை முடித்துக்கட்டுவதில் அரசுக்கு துணையாக நின்ற மாற்றுக்கருக்தாளர்களுடன் கலப்பதன் மூலம் அவர்களுக்கும் புலிச்சாயம் உட்பட்ட அபகீர்த்தியை உண்டு பண்ணுவது.

எது எவ்வாறாயினும் கடந்த பல ஆண்டுகளாக நிலைநின்ற ஜனாநாயக கருத்துக்களுள் பாசிசம் நுழைந்துவிட்டதென்ற செய்தியறிந்த மக்கள் புலியெதிர்பாளர்கள் என்போர் தமது அரசியல் வங்கிறோத்து காரணமாக புலிகளை உள்வாங்கியுள்ளனர் என விசனம் கொண்டுள்ளனர்.


Read more...

ஜெனரல் சரத்பென்சேகா கூட்டுப்படையணிகளின் தலமையதிகாரியாக பதவியேற்பார்-அரசாங்கம்

கூட்டுப்படையணிகளின் தலமையதிகாரியாக ஜெனரல் சரத்பென்சேகா அடுத்தவாரம் பதவியேற்பார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. கூட்டுப்படையணிகளின் தலமையதிகாரி பதவிக்கு சட்டமூல அந்தஸ்தை வழங்குவதற்கான சட்டமூலம் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயகாவினால் பாராளுமன்றத்தில் சென்றவாரம் சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரம் பெற்றிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Read more...

நான் இந்த இடத்தில் இருப்பதற்கு இனியபாரதியே மூலகாரணம். -கருணா-

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்களுக்கான ஒன்று கூடல் நேற்று மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் முரளிதரன், தனது இன்றைய இருப்புக்கு ஜனாதிபதியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இனியபாரதியே பிரதான காரணம் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

கருணா நாட்டை விட்டு வெளியேறி லண்டன் சென்றிருந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் அமைப்பை முதலமைச்சர் சந்திரகாந்தன் தனது முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்தார். அந்த காலகட்டத்தில் கருணாவின் தீவிர ஆதரவாளர்களாக இருந்த பலர் பிள்ளையானது தலைமையை ஏற்றுக்கொண்டிருந்த போதிலும் பாரதி தனியானதோர் அரசியல் தளம் ஒன்றை அமைத்துச் செயற்பட்டுவந்தார்.

தற்போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியினால் கருணாவிற்கு வழங்கப்படுகின்ற பதவிகள் அவருக்கு அரசியல் பலம் சேர்ப்பதுடன் பலரும் கருணாவின் ஆதரவாளர்களாக தம்மை இனம்காட்ட முற்பட்டுவருகின்றனர். இந்நிலைமைகளை உணர்ந்துள்ள கருணா தனது இருப்பிற்கு காரணம் இனியபாரதியே என மிகவும் முக்கியமான நிகழ்வொன்றில் பகிரங்கமாக அறிவித்திருப்பதானது, பிள்ளையானது பலம் மேலோங்கியிருந்த காலத்தில் தன்னை கைவிட்டிருந்த எவரையும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என அர்த்தப்படுகின்றது.

Read more...

இலங்கைக்கு பயணிப்பது தொடர்பில் அமெரிக்க பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்

இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்தை முற்றுமுழுதாக தோற்கடித்திருந்தாலும் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகளுக்கு பாதுகாப்பு சிக்கல்கள் இருப்பதாகவும் குறிப்பாக வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் நிலக்கன்னிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் சிக்கிகொள்ளும் நிலை இருப்பதாகவும் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ளும் அமெரிக்க பிரஜைகளுக்கு அமெரிக்க இராஜாக்க திணைக்களம் எச்சரித்துள்ளது.

Read more...

புலிச் சந்தேகநபர்களுக்குப் பொதுமன்னிப்பு: அரசாங்கம் நடவடிக்கை

விடுதலைப் புலி சந்தேகநபர்களுக்கும், அவர்களின் ஆதரவாளர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பான சட்ட வரையறைகளை அரசாங்க சட்டத் திணைக்களம் தயாரித்துவருகிறது.

இதற்கமைய விடுதலைப் புலிகளின் பெரும்பாலான உயர்மட்ட உறுப்பினர்கள் மோதல்களில் கொல்லப்பட்டுள்ளனர். எனினும், உயர்மட்ட உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்படும் பட்சத்தில் அவர் இலங்கையின் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“இப்பொது நல்லிணக்கமொன்றை ஏற்படுத்தவேண்டிய சூழ்நிலையே காணப்படுகிறது. போதுமானளவு ஆதாரங்களின்றி பொதுமக்கள் மீது குற்றஞ்சுமத்துவது பிழையானது. எனினும், விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவர் மோசமான குற்றச்சாட்டில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டுப்படும் பட்சத்தில் அவருக்கு சட்டரீதியாகத் தண்டனை வழங்கப்படும்” என அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடைய சுமார் 10,000 பேர் மோதல்களின் பின்னர் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும், இவர்கள் அரசாங்கத்தால் வவுனியாவில் தனியான முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் மனித உரிமைக் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பொது மன்னிப்பு வழங்கும் அரசாங்கத்தின் வரையறைகள் தயாரிக்கப்பட்டதும் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்டுவிடுவார்கள் என அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

அதேநேரம், மோசமான குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்டார்கள் எனக் குற்றஞ்சுமத்தப்படுபவர்கள் தொடர்பான அறிக்கைகளைப் பொலிஸார் சட்டமா அதிபருக்குச் சமர்ப்பிப்பார்கள் எனவும், அதன் பின்னர் அவர்கள் மீது விசாரணைகள் நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் விடுதலைப் புலி உறுப்பினர்களை விசாரிப்பதற்கென எதிர்வரும் தினங்களில் விசேட நீதிமன்றமொன்று அமைக்கப்படவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தகவலின்படி அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் 135 தடுப்பு முகாம்களில் 6,700ற்கும் அதிமானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

Read more...

Saturday, June 27, 2009

கூட்டமைப்பின் நிலைப்பாடு நிரந்தரமானதா?

புலிகளின் தோல்வியுடன் இலங்கையில் தனிநாட்டுக் கோரிக்கை செத்துவிட்டது. வெளிநாடுகளில் அதற்குப் புத்துயிர் கொடுப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. புலம்பெயர்ந்து வாழும் புலிகள் இயக்க முக்கியஸ்தர்கள் சிலர் நாடுகடந்த தற்காலிக அரசு என்ற பெயரில் அமைப்பதற்கு முயற்சிக்கும் அரசாங்கம் இலங்கையின் இனப் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவரும் என்று நினைப்பது இலங்கையில் தனிநாடு அமையும் என்று மக்கள் மத்தியில் வளர்க்கப்பட்ட கற்பனையிலும் பார்க்க மோசமான கற்பனையாக இருக்கும்.

இலங்கையில் தனிநாட்டுக்கான போராட்டம் இங்குள்ள தமிழ் மக்களைப் படுகுழியில் தள்ளுவதில் முடிந்திருக்கின்றது. இப்போது வெளிநாடுகளில் மேற்கொள்ளப்படும் தனிநாட்டு முஸ்தீபு அங்குள்ள இலங்கைத் தமிழருக்கு என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி இன்று பலரிடம் எழுகின்றது.

வெளிநாடுகளில் இயங்கும் நாடுகடந்த தற்காலிக அரசு என்பது இலங்கையை இரு கூறாகப் பிளவுபடுத்தும் இலக்கைக்கொண்ட அமைப்பு. இது ஸ்தாபன ரீதியாகத் தமது மண்ணில் செயற்படுவதை உலக நாடுகள் எந்தளவுக்கு அனுமதிக்கப் போகின்றன என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த நாடுகடந்த அரசுக்காக உலக நாடுகள் இலங்கையைப் பகைத்துக்கொள்ளப் போவதில்லை.

வெளிநாடுகளில் புலிகள் இயக்கத்துக்கு ‘எக்கச்சக்கமான’ சொத்துகள் இருக்கின்றன. வெளிநாட்டு வங்கிகளிலுள்ள பணத்தையும் சேர்த்துப் பார்த்தால் ஆயிரம் கோடிக்கு மேல் தேறும். இவ்வளவு சொத்தும் சில தனிநபர்களிடம் சிக்கிப் போகாமலிருப்பதற்கான ஏற்பாடு தான் நாடுகடந்த தற்காலிக அரசு என்று சிலர் சொல்கின்றார்கள். அது எவ்வாறாயினும், இது தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் நன்மை பயக்காத முயற்சி.

இந்த முயச்சிக்கும் தங்களுக்கும் ஒரு தொடர்பும் இல்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறுகின்றார்கள். நாடுகடந்த தனியரசு அமைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களும் கூட்டமைப்புத் தலைவர்களும் கடந்த மூன்று வருடங்களாக ஒரே பாதையில் பயணித்தவர்கள். அதாவது தனிநாடு அமைக்கும் இலக்குடன் செயற்பட்டவர்கள்.

அரசியல் கட்சிகள் மக்களுக்குப் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளன. மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையிலேயே கட்சிகள் அதிகாரத்தையும் அங்கீகாரத்தையும் பெறுகின்றன. இக்கட்சிகள் காலத்துக்குக் காலம் எடுக்கும் முடிவுகளுக்கான காரணங்களை விளக்கிக் கூறுவதையே மக்களுக்குப் பதில் கூறல் என்பர். இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது எடுத்திருக்கும் முடிவு பற்றி மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்.

இதுவரை காலமும் புலிகளின் நிகழ்ச்சி நிரலை ஏற்றுத் தனிநாட்டுப் பாதையில் சென்றது தவறு என்பதை ஒத்துக்கொள்கின்றார்களா? அப்படியானால் ஏன் அந்தத் தவறைச் செய்தார்கள்? அப்படி இல்லையென்றால் இப்போது எடுத்திருக்கும் நிலைப்பாடு வெறும் தந்திரோபாயமா? மீண்டும் தனிநாட்டு வழியில் செல்வார்களா?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கடந்தகால பாரம்பரியம் மக்களுக்கு விளக்கமளிக்காமலே முடிவுகளை மாற்றுவதாக இருந்தது. ஆரம்பத்தில் சமஷ்டி. அதன் பின் தனிநாடு, பின்னர் மாவட்ட சபை. அதற்குப் பின் அரசியல் தீர்வு. மீண்டும் தனிநாடு. இப்போது மீண்டும் அரசியல் தீர்வு.

காலத்துக்குக் காலம் கொள்கையை மாற்றிய வேளைகளில் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு கொள்கையை மாற்றினார்கள். என்ன செய்தாலும் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை அப்போது இவர்களுக்கு இருந்தது. இன்று அந்த நம்பிக்கை இருக்க முடியாது. இவர்களை முழுக்க முழுக்க நம்பிய மக்கள் இன்று நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் மக்களை இன்றைய இடர் நிலைக்குத் தள்ளியதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குப் பிரதான பங்கு உண்டு. கடந்தகால நிலைப்பாடு பற்றியும் இன்றைய நிலைப்பாடு பற்றியும் இவர்கள் மக்களுக்கு விளக்கம் அளித்தாக வேண்டும்.

Read more...

அல்கொய்தா தீவிரவாதிகளை வேரோடு அழிப்போம்: ஒபாமா சபதம்

அமெரிக்க அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆப்கானிஸ்தான், பாகிஸ் தான் எல்லையில் தலிபான் தீவிரவாதிகள் மீண்டும் எழுச்சி பெற்று உள்ளனர். அவர்களும், அல்கொய்தா தீவிரவாதிகளும் தாக்கு தலை அதிகப்படுத்தி உள்ளனர். எனவே நமது படைகளுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் இதற்காக உரிய நிதிகள் தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்படும். அல்கொய்தா தீவிரவாதிகளை வேரோடு அழிப்போம். இதற்கான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும். ஆப்கானிஸ்தான், ஈராக் கில் உள்ள நமது படை களுக்கு தேவையான அத்தனை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். இவ்வாறு அதிபர் ஒபாமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளது

Read more...

அரசியல் நல்லிணக்கம் அவசியம் : பிளேக்

இலங்கையில் தமிழ் சமூகத்துடன் அரசியல் நல்லிணக்கம் ஏற்படும்வரை இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கப்படுமென தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் கூறினார்.

இலங்கையில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டியிருக்கும் அதேநேரம், தமிழ் சமூகத்துடன் அரசியல் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டுமெனச் சுட்டிக்காட்டியிருக்கும் அவர், இடம்பெயர்ந்தவர்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குச் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

“மோதல்கள் முடிந்த பின்னர் முகாம்களுக்குள் சென்று வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுகள் நீக்கப்பட்டு, அனுமதியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனினும், பல முன்னேற்றங்கள் செய்யப்படவேண்டியுள்ளன” என்று அவர் கூறினார்.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கும் வடபகுதிக்குச் சென்று அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்ற மனிதநேய அமைப்புக்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென தாம் இலங்கை அரசாங்கத்துக்குத் தொடர்ந்தும் அழுத்து வருவதாகவும் பிளேக் சுட்டிக்காட்டினார்.

மோதல்களுக்குப் பின்னர் இலங்கை அரசாங்கம் முன்னேடுக்கும் நடவடிக்கையானது மனிதநேயம் மற்றும் அரசியல் ரீதியாக முக்கியம் வாய்ந்தவையாக இருக்குமெனவும் பிளேக் தெரிவித்தார்.


Read more...

Friday, June 26, 2009

வவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்தவாரம் ஓமந்தை, பூவரசங்குளம் உட்பட 25 கிராமங்களில் மீள்குடியேற்றம்

வவுனியா மாவட்டத்தில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன. இது தொடர்பான இறுதிக் கட்ட அறிக்கை எதிர்வரும் மூன்றாம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப் படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் ‘தினகரனு’க்குத் தெரிவி த்தார்.

180 நாள் மீள்குடியேற்றத் திட்டத்தின் வவுனியா மாவ ட்டத்தின் ஓமந்தை மற்றும் பூவரசங்குளம் பிரதேசங்கள் உட்பட 25 கிராமங்களில் முதற்கட்டமாக மீள்குடியேற்றம் மேற்கொள்ளப்படுவதாக அரச அதிபர் தெரிவித்தார்.

மீள்குடியமர்த்துவதற்காக சுமார் 800 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நலன்புரி முகாம்களி லும், நிவாரணக் கிராமங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள வர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இவர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாகத் தயாரி க்கப்பட்டுள்ள இறுதித் திட்ட அறிக்கை ஜனாதிபதி செய லகத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் மீள்குடியேற்றம் ஆரம்பமாகுமென்று வவுனியா அரசாங்க அதிபர் தெரிவி த்தார்.

இது தொடர்பாக அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தலை மையில் நேற்று பிற்பகல் கூட்டமொன்றும் நடைபெற்றது.

வடக்கு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் மன்னார் முசலி பகுதியில் மக்கள் தமது சொந்த வாழ் விடங்களில் மீள்குடியேற்றப்பட்டார்கள்.

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தற்போது வவுனியா மாவட்டத்திலும் மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படுகின்றது என்று அரச அதிபர் சுட்டிக்காட் டினார்.

இதேவேளை, வவுனியா மாவட்டத்தில் உள்ள நலன் புரி நிலையங்களில் தங்கியிருந்த மக்களை நிவாரணக் கிராமங்களுக்குக் கொண்டு செல்லும் பணிகள் பெரும் பாலும் நிறைவடைந்துவிட்டதாக அரச அதிபர் தெரிவி த்தார்.

வவுனியா மாவட்ட கல்வி வலயத்தின் 17 பாடசா லைகள் இடம்பெயர்ந்தவர்கள் தங்கும் நலன்புரி நிலையங் களாகப் பயன்படுத்தப்பட்டன. தற்போது இந்த நிலையங் களில் இருந்த மக்கள் நிவாரணக் கிராமங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாடசா லைகளில் கல்வி நடவடிக்கைகள் சீராக மேற்கொள்ள ப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னமும் ஓரிரண்டு பாடசாலைகளே விடுவிக்கப்படவுள்ளதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.

நன்றி தினகரன்

Read more...

பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் காலமானார்

பிரபல பாப் இசைப்பாடகர் மைக்கேல் ஜாக்சன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 50. நெஞ்சுவலியால் லாஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாக்சன் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2.26 மணியளவில் உயிரிழந்ததாக அம்மாவட்ட மருத்துவ அதிகாரி ஃபெரட் காரல் தெரிவித்தார். ஜாக்சனின் பிரேதப் பரிசோதனை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

'கிங் ஆஃப் பாப்' எனப் புகழப்பட்ட ஜாக்சனுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். ஜாக்சன் குடும்பத்தில் மைக்கேல் ஜாக்சன் ஏழாவது குழந்தையாவார். அவரது Off the Wall (1979), Thriller (1982), Bad (1987), Dangerous (1991) and HIStory (1995) ஆகிய 5 இசை ஆல்பங்கள் உலகிலேயே அதிக அளவில் விற்று சாதனை புரிந்தன. பல்வேறு கின்னஸ் சாதனைகள் புரிந்துள்ள மைக்கேல் ஜாக்சன் 13 கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார்.

Read more...

அரசசேவையில் தமிழ்மொழி கட்டாயமாகின்றது:

அரசசேவையில் தமிழ்மொழி கட்டாயமொழியாவதாக அரசியல் யாப்பு அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் அரசசேவையில் இணையும் அனைவரும் தமிழ் மொழி சித்தியடைந்திருக்க வேண்டும் எனவும் அரசசேவையில் உள்ளவர்களுக்கு தமிழ் மொழி கற்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

கிழக்கில் சகல தரப்பினரிடமிருந்தும் ஆயுதங்கள் களையப்படவேண்டும்: இரா.துரைரட்ணம்

"கிழக்கு மாகாணத்தில் அரசியல் பலம் உள்ளவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்கள் உட்பட சகல தரப்பினரிடமிருந்தும் ஆயுதங்கள் உடனடியாகக் களையப்பட வேண்டும்" என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரட்ணம் பகிரங்கமாக கோருகின்றார்.

"மக்கள் ஆயுத வன்முறைகள் இன்றி,அச்சம்,பயம் இல்லாமல் வாழ்வதையே விரும்புகின்றார்கள்.கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு,ஆயுத வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து சட்டம் ஒழுங்கின் கீழ் நிர்வாகம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில அரசியல் கட்சி அலுவலகங்களிலோ அல்லது வேறு அரசியல் கட்சி சார்ந்தவர்களிடமோ ஆயுதங்கள் இருப்பது அர்த்தமில்லை என்றும் அவர் கூறினார்.

கப்பம்,கொள்ளை,ஆயுத வன்முறைகள் தொடர்கின்றன என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையான்றில் சுட்டிக் காட்டியுள்ளார்.

Read more...

Thursday, June 25, 2009

வங்கிக் கொடுப்பனவுக்கான கட்டளையை வாபஸ்பெற்ற நோர்வே மக்கள்.

நோர்வே நாட்டில் வாழும் தமிழ் மக்களில் பலர் போராட்டம் எனும் பெயரால் புலிகளுக்கு பெரும் உதவிகளை செய்து வந்துள்ளனர். புலிகளுக்கு அவ்வாறு பணம் செலுத்தி வந்த மக்கள் மாதாந்தம் தமது கொடுப்பனவுகளை வங்கிகளுடாகவே செலுத்தி வந்தனர். ஒவ்வொரு மாத முடிவுலும் ஒரு தொகைப் பணம் மக்களில் வங்கிக்கணக்கில் இருந்து புலிகளது வங்கிக்கு செல்லும் வகையில் மக்கள் தத்தமது வங்கிகளுக்கு கட்டளையிட்டிருந்தனர்.

கடந்த மாதம் புலிகளின் தலமை முற்றாக அழிக்கப்பட்ட போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் அடுத்த தலைமை யார்? என்கின்ற தமிழ் மக்களின் நியாயமான கேள்வி எழுவதற்கு முன்பே புலிகளியக்கத்தின் புலம்பெயர் வலையமைப்பு கூறுகளாக பிரிந்தது மட்டுமல்லாது, உதவி செய்த தமிழ் மக்களையும் காட்டிக்கொடுக்கும் நிலைக்குச் சென்றுவிட்டது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் புலிகளின் தலைமையின் கீழ் செயற்பட்ட புலிகளின் முக்கிய பிரதிநிதிகள் சிலர் நோர்வே தேசியத் தொலைக்காட்சில் தோன்றி விடுதலைப் புலிகள் சார்பாக எவராவது பணம் கோரிவந்தால் பொலிஸாரிடம் அறிவியுங்கள் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலைமை உருவாக்கக்கூடிய விபரிதங்களை உணர்ந்த இன்னுமோர் குழுவினர் ஊடகவியலாளர் மாநாடொன்றை நாடத்தி நோர்வேயில் உள்ள மக்கள் புலிகளுக்கு ஆயுதம் வாங்குவதற்காகவே பணத்தை தந்திருந்தனர் எனும் விடயத்தை கூறியிருந்தனர். அவ்வாறு அவர்கள் கூறியிருந்ததன் உண்மையான காரணம் யாராவது பொலிஸாரிடம் எம்மைக் காட்டிக்கொடுத்தால் நாங்களும், நீங்கள் ஆயுதம் வாங்கவே பணம் தந்ததாக காட்டிக்கொடுப்போம் என்ற மிரட்டலாகும்.

இவ்வாறான சகல விடயங்களையும் அவதானித்த மக்கள் உடனடியாக தாம் வங்கிகளுக்கு வழங்கியிருந்த மாதந்த கொடுப்பனவுகளுக்கான கட்டளையை வாபஸ்பெற்றுள்ளனர். மக்கள் புலிகளுக்கு வழங்கும் பணத்தில் ஆயுதம் வாங்கும் விடயத்தை அவர்கள் அறிநதுள்ளார்கள் என்ற விடயத்தை புலிகள் பகிரங்கமாக அறிவித்த பின்னர், என்றாவது ஒருநாள் பொலிஸார் பணஉதவி செய்பவர்களை விசாரணைக்கு அழைத்து உங்கள் பணத்தில் பயங்கரவாத இயக்கமொன்றிற்கு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டதை நீங்கள் அறிந்திருந்தீர்களா எனக் கேட்டால், மக்களால் இல்லை எனக் கூற முடியாது என்பதை புரிந்து கொண்ட மக்கள் தமது கொடுப்பனவுகளைச் நிறுத்தியுள்ளனர்.

புலிகளின் உள்ளகத் தகவல்களின்படி நோர்வேப் புலிகளுக்கு மாதாந்தம் 3 லட்சம் குரொன்கள் வசூலாகியதாகவும் ஆனால் அந்த தொகை 80 விழுக்காடு வீழ்ந்து இம் மாதம் ஆக 60000 குரோனர்களே வங்கிக்கு வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதில் முக்கியமான விடயம் யாதெனில் புலிகள் மக்கள் தரும் பணத்தில் தாம் சட்டவிரோத ஆயுதக் கொள்னவைச் செய்ததாகவும் அவ்விடயத்தை மக்கள் அறிந்திருந்ததாகவும் அறிவித்திருக்கும் நிடையில் சட்டரீதியாக நீருபிக்க கூடிய முறையில் வங்கிகளுடாக பணம் தொடர்ந்தும் செலுத்துவோரது நிலைமை கவலைக்கிடமாகும் என அஞ்சப்படுகின்றது.

Read more...

கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி பதவியை அதிகாரம் அளிக்கப்பட்ட பதவியாக்க முடிவு

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியை அதிகாரம் அளிக்கப்பட்ட சட்டபூர்வ பதவியாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுவரை காலமும் இப்பதவி நிலை சம்பிரதாயபூர்வமாகவே இருந்தது என்று பிரதமர் தெரிவித்ததுடன் இதற்கான சட்டமூலத்தையும் சபையில் சமர்ப்பித்தார்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு சட்டபூர்வமான அந்தஸ்து வழங்குவதே இந்த சட்டமூலத்தின் நோக்கமாகும் என பிரதமர் ரத்னசிறி விக்கிரம நாயக்க தெரிவித்தார்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலத்தை பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க சபையில் நேற்று சமர்ப்பித்துப் பேசும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் வி. ஜே. மு. லொக்குபண்டார தலைமையில் கூடியது. சபையின் வழமையான நடவடிக்கையினை அடுத்து பிரதமர் மேற்படி சட்டமூலத்தை சமர்ப்பித்துப் பேசினார்.

இதுவரை காலம் இருந்த கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற பதவி நிலைக்கு திறைசேரியிலிருந்து செலவுக்காக நிதிகூட பெற முடியாத நிலை இருந்தது.

இச்சட்டமூலத்தினூடாக இப்பதவி நிலைக்கு சட்டரீதியான அந்தஸ்தும் பொறுப்புகளும் எல்லைகளும் வகுக்கப்படுகின்றன.

கடந்த கால அனுபவங்களைக் கொண்டு படையணிகளுக்கிடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் முகமாக ஆலோசனைச் சபை ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளது.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவிக்கு நியமிக்கப்படுபவர் நான்கு வருடங்களுக்கு பதவியை வகிப்பார். இப்பதவிக்காலம் முதலில் இரண்டு வருடங்களாகவும் அடுத்து இரண்டு வருடங்களாகவும் சட்ட மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் அநேகரின் வேண்டுகோளுக்கிணங்க பதவிக்காலம் முதலில் இரண்டு வருடங்களாகவும், அதன் பின்னர் தலா ஒவ்வொரு வருடங்களாகவும் வழங்க வேண்டும் என்று திருத்தம் செய்யப்பட்டுள்ளது என பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.


ஜோன் அமரதுங்க ஐ.தே.க எம்.பி

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி என்ற பதவி நிலையை சட்டபூர்வமாக்குவதன் ஊடாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கான அதிகாரங்கள் எல்லைகள் அற்ற விதத்தில் அதிகரிக்கப்படுகிறது.

இந்த எல்லைகள் அற்ற அதிகாரத்தால் ஜனநாயக வரைமுறைக்கு ஏற்படப்போகும் நிலைமை குறித்து சந்தேகம் ஏற்படுகிறது.


விமல் வீரவன்ஸ ஜே.என்.பி எம்.பி


பாதுகாப்பு பணியாளர் தொகுதியினரின் தலைமை அதிகாரி என்ற பதவி நிலை வெறுமனே பெயருக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இனிமேல் அது அதிகாரமளிக்கப்பட்ட பதவி நிலையாக இருக்கும்.

எமது நாட்டில் பயங்கரவாதம் தலை விரித்தாடியது. இன்று முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது. இனிமேல் எந்த தசாப்தங்களிலும் இவ்வாறான நிலை தலைதூக்காமல் இருப்பதற்கு எல்லா பிரிவுகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டும்.

இந்தச் சட்டமூலத்தையும் அதன் ஒரு அங்கமாகவே கருதுகிறேன். கடந்த கால மனிதாபிமான நடவடிக்கையின்போது பாதுகாப்பு செயலாளர் என்ற பதவி நிலைக்குரிய அதிகாரங்களையும் விஞ்சி முப்படைகளையும் கூட்டிணைத்து முன்னெடுத்தாலேயே வெற்றி இலக்கை எட்டமுடிந்தது.

நிர்வாகத்திற்குள் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு செயலாளர் என்ற பதவியிலிருந்தவர் ஜனாதிபதியின் சகோதரர் என்பதாலேயே நிர்வாகம் என்ற பதவி நிலையையும் விஞ்சிய நிலையில் கூட்டுப்படைகளை ஒன்றிணைக்கக்கூடிய சக்தியை பிரயோகித்தார்.

பாதுகாப்பு செயலாளராக வேறு எவராவது இருந்திருந்தால் இது சாத்தியப்பட்டிருக்காது. இனிவரும் காலங்களில் அதிகாரமளிக்கப்பட்ட பதவி நிலையாக இருக்கலாம். எதிர்காலத்தில் புலிகள் போன்ற பிரிவினைவாத இயக்கங்கள் தலைதூக்க இடமளிக்கக்கூடாது என்பதாலேயே அதிகாரமளிக்கப்பட்ட கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சட்டமூலம் கொண்டு வரப்படுகிறது.

புலிகள் ஒழிக்கப்பட்டாலும் புலிகளின் நிழல்கள் ஆங்காங்கே விழுந்த வண்ணம் உள்ளன.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்க இடமளிக்க வேண்டாம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்தியாவுக்கு சென்று கூறியிருக்கிறார்கள்.

நாட்டின் எந்தப் பகுதியில் எங்கே இராணுவ முகாம் அமைக்கப்போகிறோம் என்று தீர்மானிக்கும் உரிமை இலங்கை அரசுக்கு இருக்கிறது என்பதை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மறந்துவிடக்கூடாது. இவ்வாறான நடவடிக்கைகளையும் அவர்கள் இனியாவது நிறுத்தவேண்டும்.


இரா. சம்பந்தன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி

கூட்டுப்படையணிகளின் தலைமை அதிகாரி என்ற பதவி நிலை ஒன்றும் புதிதல்ல. பழையதுதான். இப்போது அதிகாரமளிக்கப்பட்ட பதவி நிலையாக்கப்படுகிறது.

இந்தச் சட்டமூலத்தை கொண்டு வருவதன் மூலம் அரசாங்கம் இராணுவ மயப்படுத்தலை தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புவதாகவே கருதுகிறேன்.

புலிகள் இயக்கம் என்ற ஒன்று இப்போது இல்லை. இந்த நிலையில் இராணுவ மயப்படுத்தல் ஒன்று அவசியமில்லை. ஒருவேளை தொடர்ந்தும் இவ்வாறான ஒரு அச்சுறுத்தலிலேயே நாடு இருக்கவேண்டும் என்று அரசாங்கம் நினைக்கிறதா?

தமிழர் பிரச்சினை என்று ஒன்று இன்னமும் இருக்கிறது. இதனை இராணுவ ரீதியில்தான் தீர்க்க நினைக்கிaர்களா? ஒருபோதும் இராணுவ ரீதியாக தீர்க்க முடியாது. அப்படி முயற்சித்தால் வேறு பிரச்சினைகள் தலைதூக்கும். புலிகள் இல்லாத நிலையில் தமிழர் பிரச்சினையை பேச்சுவார்த்தைகள் மூலமே தீர்க்க வேண்டும். இராணுவ ரீதியாக அல்ல என்பதை அரசாங்கம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.

கடந்த காலத்தில் படைக்கு ஆட்சேர்ப்பு செய்தீர்கள். 98 சதவீதம் பெரும்பான்மையினரிடையே தான் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டது. இன்னும் ஒரு லட்சம் பேர் சேர்க்கப்படவுள்ளதாக அறிவித்துள்Zர்கள். இந்த ஆட்சேர்ப்பின்போதும் விகிதாசார முறை கடைப்பிடிக்கப்படுமா?

Read more...

அரச உயர்மட்டத்தினரின் இந்திய விஜயத்தில் சோமவன்சவிற்கு சந்தேகமாம்.

பா.உ பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் உயர்மட்ட குழுவொன்று இந்தியாவிற்கு மேற்கொண்டுள்ள விஜயத்தில் ஜே.வி.பி தலைவர் மோமவன்சவிற்கு பலத்த சந்தேகங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். "பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது - நாட்டைக்கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பில் நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இச் சந்தேகத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் அங்கு பேசுகையில், அரச உயர்மட்டக்குழுக்கள் பயணங்களை மேற்கொள்ளும் போது செய்திகளை வெளியிடுவது வழமை. ஆனால் இம்முறை மேற்கொள்ளப்பட்டுள்ள பயணம் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ் அரசாங்கம் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க முனைகின்றது. ஆனால் நாம் அதற்கு இடம் தரமாட்டோம். அவ்வாறு 13ம் திருத்தச்சட்டத்தை அரசு அமுல்படுத்தி அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நாடாத்தவேண்டும். அப்போது நாம் அதை மக்கள் பலம் கொண்டு தோற்கடிப்போம் என்றார்.

Read more...

ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு.

சுங்க இலாகாவின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் ஒரு கோடியே இருபத்தைந்து லட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை மீட்டுள்ளனர். பாக்கிஸ்தான் நாட்டிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கொள்கலன் ஒன்றிலிருந்தே மேற்படி போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்படடுள்ளது.

கொள்கலனில் கொண்டுவரப்பட்ட 1900 மூட்டைகளில் காணப்பட்ட 240 உருளைக்கிழங்குகளைத் தோண்டி அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ ஹெரோய்ன் மீட்கப்பட்டள்ளது.

Read more...

கொடிகாமம் பிரதேசத்தில் புலி உறுப்பினர் ஒருவர் சுட்டுக்கொலை.

கொடிகாமம் பிரதேசத்தில் புலிகளின் முக்கியஸ்தர் என நம்பப்படும் ஒருவரை படையினர் சுட்டுக்கொன்றுள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. அப் பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான நபர்களது நடமாட்டங்கள் காணப்படுவதாக பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் 522ம் படையணியினர் அப்பிரதேசத்தை சுற்றி வளைத்து தேடுதல் நாடாத்தியபோது இச்சம்பவம் இடம்பெற்றதாக அச்செய்தி தெரிவிக்கின்றது.

நேற்றுக் காலை தேடுதலுக்காக சென்ற படையினர் மீது பஸ் ஒன்றின் பின்னால் ஓழிந்திருந்த நபர் ஒருவர் கிரனேட் ஒன்றினை வீச முற்பட்டபோதே அவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் அவ்விடத்தில் இருந்து மைக்ரோ பிஸ்ரல் ஒன்று, கிரனேட்டுக்கள் இரண்டு, கையடக்கத் தொலைபேசி ஒன்று என்பன மீட்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவரது உடலம் கொடிகாமம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் அது புலிகளின் பிரதேச தலைவர்களில் ஒருவரான சாலப்பனது உடலம் எனவும் கூறப்படுகின்றது.

Read more...

சிகரெட் பிடித்தால் மூளையில் பாதிப்பு: ஆய்வு நிறுவனம் தகவல்

புகை பிடிப்பது உடல் நலத்திற்கு தீங்கானது. புகை பிடிப்பதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு கேன்சர், காசநோய் போன்றவை உருவாக வாய்ப்பு உள்ளது. இந்த விவரம் அனைவருக்கும் தெரிந்ததுதான். சிகரெட் பிடிப்பது மூளையும் பாதிக்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதை இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

புகையில் உள்ள நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களை கோபமூட்டச் செய்கின்றன. அவை மத்திய நரம்பு மண்டலத்தில் உள்ள சுகாதாரமான “செல்”களை தாக்குகின்றன.

இதனால் நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படும். இதன் மூலம் உடலில் பலவிதமான நோய்கள் உருவாகும்.

இதன் ஒரு பகுதியாக மூளையில் உள்ள “மைக் ரோக்லியா” என்ற முக்கிய செல்களும் பாதிக்கப்படு கின்றன. இதையடுத்து மூளையும் பாதிக்கப்படுகிறது.

இந்திய தேசிய மூளை ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த தெபாபிரியா கோஷ் டாக்டர் அனில்பான் பாசு ஆகியோர் ஆய்வு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது.

Read more...

கொலைச் சம்பவத்தை அடுத்து தலவாக்கலை பிரதேசத்தில் பதட்டம்.

தலவாக்கலைப் பிரதேசத்தில் நேற்று நள்ளிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் ஒருவர் அடித்தும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தையடுத்து அப்பிரதேசத்தில் பதட்டநிலை தோன்றியுள்ளதாகவும் நிலைமைகளை நேரடியாக பார்வையிடும் பொருட்டு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் தொண்டமான் அங்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Read more...

வவுனியாவில் த. வி். கூ : யாழ்பாணத்தில் மு. கா வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வவுனியா உள்ளுராட்சி சபைக்கான ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் ஒருவரது கையொப்பத்தில் காணப்பட்ட வித்தியாசம் காரணமாகவே இம்மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட மேலதிக தேர்தல் ஆணையாளர் எஸ். கருணாநிதி தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் இத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை இன்று பாரமளித்ததாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதே நேரம் யாழ் மாநகர சபைக்கான இலங்கை முஸ்லிம் காங்கிரஸினதும் சுயேட்சைக் குழுவொன்றினதும் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மேலதிக தேர்தல் ஆணையாளர் திரு. குகநாதன் தெரிவித்துள்ளார்.

Read more...

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவை அடிப்படையாகக் கொண்டே சர்வஜன வாக்கெடுப்பு

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்கும் இறுதியோசனைத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக தீர்வொன்றை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு, அரசியலமைப்பு மாற்றமொன்றைப் பரிந்துரைக்கவிருப்பதாகவும், இந்த அரசியலமைப்பு மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டே சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுமெனவும் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபயவர்த்தன கூறினார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டத்தை அடிப்படையாகக்கொண்ட அரசியலமைப்பு மாற்றத்தின் ஊடாகவே தீர்வொன்றை முன்வைக்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதேநேரம், 13வது திருத்தத்தை இலகுவில் நீக்கிவிட முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், 13வது திருத்தமானது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விடயமென்பதால் அதனைத் தடுக்க எவராலும் முடியாதெனவும் அவர் கூறினார்.

மாகாணசபை மற்றும் பிரேசபை முறைகளை ஏற்றுக்கொண்டே ஜே.வி.பி. உள்ளிட்ட கட்சிகள் அவற்றுக்கான தேர்தல்களில் போட்டியிடுவதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர், 13வது திருத்தத்தை எதிர்ப்பவர்களாயின் ஏன் அவர்கள் இந்தத் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள் எனக் கேள்வியெழுப்பினார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான மோதல்களில் அரசாங்கம் வெற்றிபெற்றிருப்பதால் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைக்கும் முயற்சிகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக அவர் கூறினார்.
Thanks INL

Read more...

வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் இடைத்தங்கல் முகாம் மக்களைச் சென்றடையும்.

இந்தியா சென்றுள்ள இலங்கை உயர் மட்டக் குழுவினருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஸ்ணா உட்பட்ட இந்திய உயர்மட்டக்குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்கள் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை சென்றடைவதற்கு ஏற்பாடாகியுள்ளதாக ஊடகவியலாளர்களிடம் இருதருப்பினரும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் 13ம் திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தி மாகாணங்களுக்கான அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதாகவும் இலங்கை அரசு உறுதி தெரிவித்ததாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்புக்கு பின் எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கையின் வட பகுதியில் புலம் பெயர்ந்த மக்களுக்காக `கேப்டன் அலி' கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிவாரண பொருட்களை பெற்றுக் கொண்டு வினியோகிக்குமாறு இந்தியா தெரிவித்த யோசனையை இலங்கை அரசின் குழுவினர் ஏற்றுக் கொண்டனர். இந்த நிவாரண பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும்.

மேலும், இலங்கையில் புலம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான புணரமைப்பு பணிகள் குறித்து இலங்கை குழுவினருடன் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அடுத்த 6 மாத காலத்தில் அனைத்து அகதி முகாம்களும் அகற்றப்பட்டு, அங்கிருக்கும் மக்கள் அனைவரும் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று இலங்கை குழுவினர் தெரிவித்தனர். இதற்கு தேவையான உதவிகளை இந்தியா வழங்கும்.

மாகாணங்களுக்கு குறிப்பிட்ட அதிகாரங்களை பகிர்ந்து அளிக்க இலங்கை அரசு தயாராக இருப்பதாகவும் அவர்கள் உறுதி அளித்தார்கள். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்தியாவின் சார்பாக தெரிவிக்கப்பட்டது. மேலும் இலங்கையின் அரசியல் சட்டத்தில் தேவையான திருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

கடந்த 2008-ம் ஆண்டு இந்தியா-இலங்கை அரசுகளுக்கு இடையே ஏற்பட்ட உடன்படிக்கையின்படி, மீன் பிடிக்க செல்லும் இந்திய மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசின் தூதர்களிடம் வலியுறுத்தப்பட்டது. கச்சத்தீவில் எந்தவித கட்டுமான பணியையும் மேற்கொள்ளவில்லை என்பதையும் இலங்கை தெளிவுபடுத்தி இருக்கிறது.

இவ்வாறு வெளியுறவு மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா கூறினார்.

இலங்கை அதிபரின் அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்சே கூறியதாவது:-

இந்திய வெளியுறவு மந்திரியுடன் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு இருக்கிறோம்.

முகாம்களில் தங்கி இருக்கும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அளிக்கப்படுகின்றன. அவர்கள் விரைவில் தங்கள் சொந்த இடங்களுக்கு சென்று வசிக்க தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொண்டு உள்ளது.

கண்ணி வெடிகளை அகற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த பணி முடிவடைந்ததும் முகாம்களில் இருப்பவர்கள் அவரவர் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். குடிநீர், சாலை வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பது 6 மாதங்களில் நிறைவு பெறும்.

இவ்வாறு பசில் ராஜபக்சே கூறினார்.
வணங்காமண் கப்பலில் வந்துள்ள நிவாரண பொருட்களை இறக்கி வினியோகிக்க சம்மதித்து விட்டீர்களா? என்று கேட்டதற்கு, ``கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டு உள்ளோம்'' என்று பதில் அளித்தார்.


Read more...

Wednesday, June 24, 2009

வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களை இறக்க இலங்கை அரசு உடன்பட்டுள்ளது.

வணங்காமண் கப்பலில் உள்ள பொருட்களை இறக்க இலங்கை அரசு உடன்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள இலங்கை உயர்மட்டக்குழுவினரிடம் தாம் இது தொடர்பான வேண்டுகோளை முன்வைத்தபோது அவர்கள் அதற்கு இணங்கியதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

இக்கப்பலில் உள்ள 800 மெற்றிக்தொன் பொருட்களும் சென்னையில் இறக்கப்பட்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தினரின் உதவியுடன் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களைச் சென்றடையும் என செய்திகள் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...

சாக்கிரதை, சாக்கிரதை, தொப்பி மாத்திகள் ஜாக்கிரதை. யஹியா வாஸித் ( வேப்பங்குளத்திலிருந்து )

முதல்தான் எதுக்கெடுத்தாலும் சோனி தொப்பி மாத்திட்டான்டா, சோனி தொப்பி மாத்திட்டான் என்பார்கள். இப்ப என்னடா என்றால் எல்லோருமே தொப்பி மாத்த தொடங்கி விட்டார்கள். அதுவும் நம்மட ராஜாதி ராஜ, ராஜ குலோத்துங்க, ராஜ கம்பீர, உலக மகா சூரர்களும் தொப்பி மாத்த தொடங்கி விட்டார்கள். நம்ம எம்பி கிஷோர் சாகேப் தொப்பி மாத்திட்டாராம், குதிரை கஜேந்திரன் அண்ணா எப்படி மாத்துவதென தெரியாம தொப்பியை களட்டி வைத்துள்ளாராம்இ தோழர் சுரேஸ் ஹி..ஹி..ஹி...ஓள் றெடி டண் என்றுதான் சொல்கின்றார்கள்.

கியூசிக்கள், ட்ரயல் அட் பார் பரம்பரையில் வந்த மற்றவர்களும், அது, வந்து நாங்க புலி சொன்னதற்காகத்தான் இவ்வளவும் செய்தோம் என முந்தா நாள் பத்திரிகை ஒன்றில் தொப்பி மாற்றியுள்ளார்கள். மாவை சேனாதிராசாண்ணா கடல்கடந்த தமிழீழமா, எங்களுக்கு யாரும் சொல்லலையே என தொப்பி மாத்தியுள்ளார். பொட்டண்ணா ஏசீ றூமில் சகல சௌகரியங்களுடனும் இருந்து கொண்டு நிமிடத்திற்கொருதரம், தொப்பி மாற்றுவதாக நம்பத் தகுந்த கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் குசு குசுக்கின்றன.

இளையோர் ஜின்னாத் தொப்பியுடனும், ஆய்வாளர்கள் குல்லாத் தொப்பியுடனும், வசூல் மன்னர்கள் துருக்கித் தொப்பியுடனும், நம்முட ஒலி,ஒளி பரப்புக்காறர்கள் சேகுவேராத் தொப்பியுடனும் உலா வருகின்றனர்.

ஜின்னாத் தொப்பி இரண்டு முனைகள் கொண்டது. நேரு தொப்பி என்றும் சொல்வர். ஒரே ஒரு முறைதான் திருப்பலாம். அல்லது மாத்தி போடலாம். இளையோர்களெல்லாம் ரொம்ப புத்தி சாலிகள். இன்னும் இந்தக் குழந்தைகளுக்கு வன்னி புராணம் தெரியாது. மொத்த உண்மையும் தெரிந்தவுடன்தான் இவர்கள் தொப்பியை மாத்திப் போட்டு கே.பி.அண்ணாவிடம் கேள்வி கேட்கத் தொடங்குவார்கள் என நினைக்கின்றோம்.

குல்லாத் தொப்பி ரொம்ப ராசியானதும், சுகமானதும், தலையிலும் போட்டுக்கலாம், கொஞ்சம் இழுத்து இரு காதுகளையும் சேர்த்து மாத்தியும் போர்த்திக்கலாம். அதுவும் முடியாவிட்டால், இன்னும் கொஞ்சம் ஜவ்வுமாதிரி இழுத்து முகத்தையும் சேர்த்து மூடிக் கொண்டு கம்முணு தூங்கிடலாம். எப்படி எப்படி எல்லாம் தமிழனை இழுத்து கதை சொல்ல முடியுமோ, கதை கதையாக சொல்லி இப்போ மெல்லவும் முடியாமல், சொல்லவும் முடியாமல் அற்லீஸ் முழுங்கவும் முடியாமல், நன்றாக குல்லாவை மாற்றி இழுத்து மூடிக்கொண்டு ஆய்வாளர்கள் எல்லோருமே தூங்குவதாகக் கேள்வி.

துருக்கித் தொப்பி, இது வெல்வெட் துணியினால் செய்யப்பட்ட சிவப்புக் களர் தொப்பி. கறுப்புக்களர் குஞ்சம் ஒன்று தேமே எனத் தொங்கிக் கொண்டிருக்கும். இடத்துக் கேற்ற மாதிரி இதை திருப்பி திருப்பி போடலாம். மொத்த வசூல் சக்கரவர்த்திகளும் மாத்தி, மாத்தி கதை சொல்லிஇ சொல்லி வசூலித்தார்கள். அடக்கி வாசிக்க வேண்டிய இடத்தில் அடக்கி வாசித்தும், அடாவடி பண்ண வேண்டிய இடத்தில் அடாவடி பண்ணியும், உறும வேண்டிய இடத்தில் உறுமியும், கனைக்க வேண்டிய இடத்தில் கனைத்தும் காரியத்தை சாதித்தார்கள். இப்போ துருக்கித் தொப்பியை, குஞ்சத்தை அகற்றிவிட்டு அணியலாமா என இவர்கள் யோசிப்பதாகவும் கேள்வி.

சேகுவேராத் தொப்பி. ரொம்ப கம்பீரமானது. இதை போட்டால் இராணுவ மிடுக்கு தெரியும். மே 16 இரவு மிட் நைட்வரை, இந்த ஒலி, ஒளி பரப்புக்காறர்கள் காட்டிய பந்தா இருக்கிறதே அட போங்கப்பா, அப்படியே மொத்த தமிழனையும் கதிரை நுனிக்கு கொண்டு வந்து உட்கார வைத்து விட்டு, அடுத்த நாள் காலையில் தொப்பியை களற்றி மாத்திப் போட்டுக்கொண்டு, றெக்கார்டிங் றூமில் இருந்து உலகப் பொருளாதார வீழ்ச்சி பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

தம்பி கதிர்காமத்தம்பி அறிவழகன், இவரது அறிவு அவ்வளவு அழகாக இருக்குமா இருக்கும்இ அதனால்தான் தல இறந்துஇ பல நாட்களுக்கப்புறம்இ எங்கடவர் இறந்து போயிட்டாராம் என்று, அழகாக தொப்பி மாத்தி புலனாய்வு செய்துள்ளார். ஜேர்மன் அண்ணா வாகீசன், இன்னும் ஒரு படி மேலே போய், கேபி அண்ணாவுடைய தொப்பி சரிவராது நாங்க ஹிட்லர் தொப்பிதான் அணிவோம் என முந்தா நாள் ஊரைக்கூட்டி ஜேர்மனியில் உபதேசம் செய்துள்ளார்.

இராஜதந்திரப்போர், அகிம்சைப்போர் எல்லாம் கறிக்குதவாதுஇ ஆயுதப்போர்தான் இறுதி முடிவு என்று 30 வருடமாக தமிழனை கறிவேப்பிலை ஆக்கியவர்கள், இனி இராஜதந்திரப் போர்தான் முடிந்த முடிவு என மொத்தமாக தொப்பியை மாற்றியுள்ளனர். மாத்துங்கோ, மாத்துங்கோ, சந்கோஷமாக மாத்துங்கோ. இனியாவது ஒரு விதிசெய்வோம் மாத்துங்கோ.

எல்லா படையணிகளும் உடைந்தாலும், சூசையண்ணாவின் கடற்புலி அணி சிங்களத்துக்கு முக்காபுலா பாடுவார்கள் என்று சொன்ன ஆனந்தவிகடன் காறனும் தொப்பிய மாத்திட்டான். இப்போ அவனுகளும் கேபி அண்ணாவின் நாடுகடந்த தமிழீழம் சிங்களத்துக்கு முகாரி பாடும் என சொல்லி சேர்குலேசனை கூட்டத் தொடங்கிவிட்டார்கள். நடக்கட்டும், நடக்கட்டும், ஒங்கட மஞ்சள் பத்திரிகை வியாபாரம் நன்றாகவே நடக்கட்டும்.

கைது செய்யப்பட்டு கோர்டில் ஒப்படைக்கப்பட்ட அந்த கெயார் ஹோம் பணியாளர்களும் தொப்பி மாத்திட்டாங்களாம். ஆமா சத்தியமாக நாங்க வெடிபொருட்களை கெயார்ஹோம் வாகனங்களில் கொண்டு வந்தோம் என தொப்பி மாத்தியுள்ளார்கள்.

அந்த வேப்பங்குளம் முகாமில் ( வன்னி பல்கலைக்கழக வளாகம் ) மிக மிக பாதுகாப்பாக உள்ள அந்த 2873 மனிதப் புனிதர்கள் பற்றி கொஞ்சம் பதறத்தான் வேண்டியுள்ளது. கிட்டத்தட்ட 15 வருடங்கள் அவர்கள் ஐந்தறிவு மிருகங்களாக வளர்க்கப்பட்டுள்ளார்கள். சிறிலங்கா என்றதொரு நாடு இருக்கின்றது, அதன் தலை நகர் கொழும்பு என்ற சங்கதி அந்த மகாத்மாக்களில் 635 பேருக்கு தெரியவே தெரியாது. தல, தல, தல அது பற்றித்தான் அவர்களுக்கு பாடம் நடாத்தப்பட்டுள்ளது. இவர்களை மனிதர்களாக மாற்ற பல வருடங்கள் எடுக்கலாம். அதற்கிடையில் விபரம் தெரிந்த, விபரம் புரிந்த பலர் அரசுக்கு ஆதரவாக தொப்பி மாத்திவிட்டதாக கிளி ஜோசியர்கள் சொல்கின்றார்கள்.

இவையெல்லாம் பார்க்கும் போது எல்லாமே பெரிய ராஜதந்திரம் போலதான் கிடக்கிறது. தொப்பி மாத்துவதென்றால் சும்மாவா. இது ரொம்ப பெரிய ராஜதந்திர தொப்பி மாத்தல். அப்போ டக்ளஸ் மாறியது. அது கோடரி காம்பு, கருணா மாற்றியது. அது எட்டப்பன். அஸ்றப் ஹாஜியார் மாத்தியது, அவன் காக்கா. அப்போ கிழக்கு மாகாணத்தான் மாறியது, அது சிங்களத்துக்கு சோரம் போன தேவடியாள்தனம். அட நாச மறுவார்களே ! அப்போ இப்போது நீங்கள் நாடு நாடாக, கூடிஇ கூடி மாற்றுகின்றீர்களே ! அது என்ன ராசா. அது எங்கள் ராஜ தந்திரம், எங்களது போராட்டத்தின் இன்னொரு பரிமாணம்.

மாத்துங்கோ, மாத்துங்கோ. நல்லா தொப்பி மாத்துங்கோ. இன்னும் கொஞ்சம் தொப்பி எங்களிடம் இருக்கிறது. குரங்குத் தொப்பி, நரித்தொப்பி, பங்சோந்தி தொப்பி, சர்க்கஸ் பபூன் தொப்பி. தொப்பி வாங்கலையோ தொப்பி. இந்த தொப்பி அணிந்து கொண்டால், புலன் பெயர் தமிழனை ஜாலியா ஏமாத்தலாம். தமிழ் வாசிக்கத் தெரியாத இளையோரை ரொம்ப பதவிசாக பூச்சுத்தலாம். வாழ்வைத் தொலைத்த 3லட்சம் வன்னித் தமிழனை வக்கனையாக விலை பேசலாம். வாங்கோ, வாங்கோ தொப்பி வாங்குங்கலையோ தொப்பி.

வாங்கி, தொப்பிய வாங்கி சந்தோஷமாக மாற்றுங்க, வணங்கா மண், நாங்கள் யாருக்கும் வணங்க மாட்டோம் என வெறித்தனமாக பெயர் சூட்டாமல், கும்புர்ரோமுங்கோ என்று பெயரை சூட்டி அதே கப்பலை பெயரை மாத்தி அனுப்புங்க, ஆயிரம் கைகள் அதை அரவணைக்கும். இன்று எத்தனை கும்புடு போடுகின்றீர்கள் இந்த வணங்கா மண்ணுக்காக, சிறிலங்கா அரசை ஒரு கும்பிடு, ஹாபரில் நிறுத்தமுடியாமல், கடற்படையிடம் ஒரு கும்பிடு, தமிழ் நாட்டு அரசிடம் ஒரு கும்பிடு, குடிக்க தண்ணி தாங்கோ என மெட்ராஸ் ஹாபரில் ஒரு கும்பிடு, மூன்று பேருக்கு நோய்வந்திடுச்சு மருந்து வாங்க வேண்டும் என ஒரு கும்பிடு, ஐயகோ புலம் பெயர் தமிழர்களே ! நீங்கள் குருவி சேர்ப்பது போல் சேர்த்த பணத்தை இந்த தொப்பி மாத்திகள் எப்படி வீணாக்குகின்றார்கள் பார்த்தீர்களா.

சிறிலங்கா சோனிகளுக்கிட்ட ஒரு சூப்பர் தொப்பி இருக்கிறது. வெள்ளை பஞ்சு மிட்டாய் தொப்பி, புஸ், புஸ் என்று பஞ்சு போன்று இருக்கும். அழுக்கு பிடித்து ஊத்தையாகத்தான் அது இருக்கும். அவ்வளவு, வேதனையும், சோதனையும் அந்த தொப்பியில் மண்டியிட்டுக் கிடக்கும். அந்த வேதனைகளையெல்லாம் சுமந்து வந்து, பள்ளிவாசலுக்குள்ள உட்கார்ந்து கொண்டு சத்தம் வராமல், ஓஎன்று கதறியழுவோம். அவன் காப்பாத்துவான், காப்பாற்றினார் இனியும் அவர் எங்களை காப்பாற்றுவார். நம்மாளுகளுக்கு இந்த ராஜதந்திர மண்ணாங்கட்டி யாவாரம் எல்லாம் தெரியாது. தடாரென்று கால்ல உழுந்து காரியத்த சாதிச்சுடுவான்.

அம்பாரையில் பள்ளிவாசலில் பாங்கொலியே கேட்க கூடாது என கொஞ்சம் துடுக்குத்தனமான சிங்கள இளைஞர்கள் கூறிவிட்டார்கள். செய்தி அஸ்ரப் ஹாஜியாருக்கு றெக்கை கட்டி பறக்கிறது. அடுத்த வெள்ளிக்கிழமை காலையில் அஸ்றப் ஹாஜியார் அம்பாரை பன்சலவுக்கு போகின்றார். பெரிய ஹாமுதுறுவிடம் சுக செய்தி விசாரிக்கின்றார். அப்புறம் பன்சலவை கொஞ்சம் பெரிசாக கட்டலாமே. ஏன் வசதியி்ல்லையா என கேட்கின்றார். பெரிய ஹாமுதுறு வசதியில்லை என்கின்றார். உடனடியாக கப்பல்துறை அமைச்சூடாக வசதி செய்து கொடுக்கப்பட்டது.

அப்புறம் பெரிய ஹாமுதுறுவையும் தனது வண்டியில் ஏற்றிக் கொண்டு பள்ளி வாசல் வருகின்றார். பள்ளி வாசலில் உட்கார்ந்து கொண்டு அளவளாவிக் கொண்டிருக்கின்றனர். பள்ளி வாசலில் உச்சஸ்தாயில் பாங்கொலி ஒலிக்கிறது. சிங்கள இளைஞர்கள் கம்பு, தடிகளுடன் ஓடி வருகின்றார்கள். லொக்கு ஹாமுதுறு பள்ளிவாசலைவிட்டு வெளியே வந்து என்ன சத்தம் என கேட்கின்றார். சிங்கள இளைஞர்கள் ஹாமுதுறுவை மண்டியிடுகின்றனர். அஸ்றப் ஹாஜியார் அன்றும் ஒரு தரம் தொப்பி மாற்றினார். அவர் மறைந்தும் அந்த பாங்கொலி இன்றும் அம்பாரை நகரெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இதுதான் காக்காமாருட தொப்பி. பஞ்சு மிட்டாய் தொப்பி.

நீங்களும் மாத்துங்கோ, நன்றாக தொப்பிமாத்துங்கோ. மாற்றி, கங்கை கொண்டோம், கடாரம் வென்றோம், சிங்களத்தை கொல்வோம் என்பதை எல்லாம் விட்டு விட்டு, பாலும் தர மாட்டோம், தெளிதேனும் தரமாட்டோம், பாகும் தரமாட்டோம், பருப்பும் தரமாட்டோம், இவை ஒன்றுமே உனக்குத் தர மாட்டோம். அது எங்கள் வன்னிப் புனிதர்களுக்கு வேண்டும், ஆனால் நீ எங்களுக்கு அன்பை கற்றுத்தா, அறிவைக் கற்றுத்தா, அந்த வன்னி மக்களுக்கு நிம்மதியை பெற்றுத்தா, மகின்த ராசாவுக்கு ஒவ்வொரு நிமிடமும், தமிழன் என்றொரு இனமுண்டு, அதற்கும் இந்நாட்டில் பங்குண்டு என்ற உதிப்பை பெற்றுத்தா என தொப்பியை மாத்துங்க.

கிட்டத்தட்ட எல்லா மக்களையும் பேட்டி கண்டாயிற்று, கிளிநொச்சி தொடக்கம் புதுமாத்தளன் ஊடாக முள்ளிவாய்கால் வரையுள்ள மக்களனைவரையும் பேட்டி கண்டாயிற்று. அந்த மக்கள் தங்களூருக்கு ஓடிப்போய், அந்த சேற்றிலும், அந்த சகதியிலும், அளையவும், அலையவும் விரும்புகின்றார்கள். நீங்கள் என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ தெரியாது. அன்பு எங்கின்ற மயிரைகட்டி, அந்த மலைகளை இழுத்துப்பாருங்கள். முதலில் பொருளாதார ரீதியாக அந்த மக்களை உயரப் பண்ணுங்கள். அதுதான் பழைய பல்லவிகளையெல்லாம் விட்டுப்போட்டு தொப்பியை மாத்துங்க. நீங்க தொப்பிமாத்தினா அதற்குப் பெயர் ராஜதந்திரம். பிளீஸ் ஒரே ஒரு வாட்டி மாத்துங்க. தொப்பி வாங்கலையோ ! தொப்பி.

24-06-2009


Read more...

ஜோசப் மைக்கல் பெரேரா ஐ.தே.ச நீர்கொழும்பு அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினிமா.

ஐ.தே.கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினருமாகிய ஜோசப் மைக்கல் பெரேரா நீர்கொழும்பு மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து இராஜினிமா செய்துகொண்டுள்ளார். கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடாக கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பப்பட்ட அவரது ராஜினிமாக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அவர் அப்பதவியை இராஜினிமா செய்ததை அடுத்து அவ்விடத்திற்கு அவரது மகன் நியமிக்கப்படவுள்ளதாகவும், ஜோசப் மைக்கல் பெரேரா அவர்கள் ஜா-எல பிரதேச அமைப்பாளராக நியமிக்கப்படவுள்ளதாகவும் கட்சி வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

அதே நேரம் தான் கட்சியில் இருந்து விலகும் நோக்குடன் பதவியில் இருந்து இராஜினிமா செய்து கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Read more...

காணாமல்போன மாணவி நேற்று சடலமாக மீட்பு

எஹலியகொடையில் காணாமற்போன பாடசாலை மாணவி நேற்று சடலமாக மீட்கப்பட்டார்.
எல்லாவெல பிட்டகந்த பகுதியைச் சேர்ந்த பியுமி மதூசிக்க எனும் (15) மாணவியே இனந்தெரியாதோரினால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் தலையில் தாக்கப்பட்டு கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

எஹெலியகொடை எல்லாவெல பாடசாலையில் தரம் 10 இல் கல்வி கற்கும் இம்மாணவி நேற்று முன்தினம் பாடசாலையில் நடைபெற்ற மாணவத் தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்துகொண்ட மாணவி வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தார் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பாக தேடுதல் நடத்திய பொலிஸார் நேற்றுக்காலை மாணவியை சடலமாக மீட்டுள்ளனர். வீதியிலிருந்து 50 கிலோமீற்றர் தொலைவிலுள்ள காட்டுப்பகுதியினுள்ளேயே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சம்பவத்துக்கு காரணமானவர்களை தேடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

நன்றி தினகரன்


Read more...

100 கிலோ தங்க நகைகளும் 6.5 மில்லியன் ரூபாக்களும் மீட்பு.

தடுப்புக்காவலில் உள்ள புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவர் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் 100 கிலோ தங்க நகையும் 6491000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இறுதி யுத்தம் இடம்பெற்றபோது புலிகளின் உயர் மட்டத்தளபதிகள் வெள்ளாமுள்ளி வாய்க்கால் பகுதியில் தங்கியிருந்த மறைவிடம் ஒன்றிலேயே இவை மீட்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதே நேரம் முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தேடுதல் மேற்கொண்டுவரும் படையினர் புலிகளினால் மறைத்துவைக்கப்பட்டுள்ள பல ஆயுதக்கிடங்குகளை மீட்டு வருகின்றனர்.

Read more...

ஐரோப்பிய யூனியன் இலங்கைக்கு ஐம்பது லட்சம் யூரோ நிதியுதவி.

இலங்கையின் வடக்கே இடம்பெற்ற யுத்தத்தில் பாதிக்கப்பட்டு இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் நிவாரண உதவிகளுக்காக ஐரோப்பிய யூனியன் 5 மில்லியன் யூரோக்களை இலங்கை அரசிற்கு வழங்க முன்வந்துள்ளது. இந் நிதியானது உரியமுறையில் சம்பந்தப்பட்ட தரப்பினரை சென்றடைகின்றதா என்பதை ஐரோப்பிய நிவாரண உதவிகள் ஆணைக்குழு கண்காணிக்கும் என அக்குழுவின் ஆணையாளர் லுயிஸ் மிகேல் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்நிதி இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களில் நீர் வழங்கல், மலசலகூட வசதிகள், உடைகளை, சத்துணவு, குழந்தைகளுக்கான பொருட்கள், நுளம்பு வலைகள் போன்றவற்றிகு பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் நிலைமைகள் கவலையளிக்கின்றது. இலங்கை மக்களின் நலனில் நாம் என்றும் அக்கறை கொண்டுள்ளதுடன் அவர்களுக்கு கைகொடுக்க எந்த நேரத்திலும் தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read more...

இடைத்தங்கல் முகாம் வாழ்வு மிகவும் கொடுமையானது. SB திசாநாயக்க.

இடைத்தங்கல் முகாம்களில் வாழும் மக்களின் வாழ்கைத்தரம் மிகவும் கவலைக்குரியதும் கொடுமையானதாகவும் இருப்பததாக தெரிவித்துள்ள ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் SB.திசாநாகயக்க மக்கள் சுதந்திரமாக வெளியேற அனுமதிக்கப்பட்டால் அவர்கள் இம்முகாம்களில் வாழ்வதைவிட மர நிழல்களில் வாழ்வதையே விரும்புவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இது தமிழ் மக்கள் சமத்துவத்தை உணரவேண்டிய நேரம். ஆனால் நாம் அவர்களை முகாம்களில் அடைத்து ஆத்திரமூட்டுகின்றோம் எனவும் கூறியுள்ளார்.

Read more...

மனித தலையில் சூப்பு தயாரித்த பெண்

சீனாவில் உள்ள கிச் சுபான் பகுதியை சேர்ந்த பெண் லின்சாங்யூ. இவருடைய 25 வயது மகள் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். மனித தலையை சூப்பு வைத்து கொடுத்தால் மனநிலை சரியாகி விடும் என்று கருதினார்.

எனவே இவர் தனது கண வருடன் சேர்ந்து ரோட்டில் குடி போதையுடன் மயங்கி கிடந்த ஒருவர் தலையை துண்டித்து எடுத்து சென்றார்.

அதில் சூப்பு தயாரித்து மகளுக்கு கொடுத்தனர். இது தொடர்பாக லின்சாங்யூவை போலீசார் கைது செய்தனர். அவருக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. 1 1

Read more...

கப்டன்அலி கப்பல் தொடர்பான முடிவை இன்று இந்தியா வெளியிடும்.

இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக நிவாரணப்பொருட்களை ஏற்றி வந்த கப்படன் அலி எனும் கப்பல் சட்டவிரோதமாக இலங்கை நீர்ப்பரப்பினுள் புகுந்ததாக இலங்கை கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்டிருந்தது. திரும்பிச் சென்று சென்னையில் நங்கூரமிட்டுள்ள இக்கப்பல் தொடர்பாக இன்று இந்தியாவரும் இலங்கையின் உயர்மட்டக்குழுவினருடன் பேசிய பின்னர் முடிவெடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சார் எஸ்-எம் கிருஸ்ணா தெரிவித்துள்ளதார்.

Read more...

இலங்கை உயர்மட்டக் குழு புதுடில்லி விஜயம்

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவிருக்கும் இலங்கை உயர்மட்டத் தலைவர்கள், மத்திய அரசாங்கத்தின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவிருப்பதாகத் தெரியவருகிறது.

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இன்று புதன்கிழமை புதுடில்லி செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதுடில்லிசெல்லும் இலங்கை உயர்மட்டக் குழுவினரிடம் இலங்கையில் அதிகாரப் பகிர்வைத் துரிதப்படுத்துமாறு இந்தியத் தலைவர்கள் வலியுறுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை உயர்மட்டக் குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வெளிவிவகாரச் செயலாளர் சிவ் சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரைச் சந்திக்கவுள்ளனர்.

இலங்கையில் மோதல்கள் முடிவடைந்திருக்கும் நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணப் பணிகளுக்கும், புனர்நிர்மாணப் பணிகளுக்கும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கும் இந்தியா, இனப்பிரச்சினைக்கு விரைவில் அரசியல் தீர்வொன்றை முன்வைக்குமாறு இலங்கையை வலியுறுத்தும் எனக் கூறப்படுகிறது.


விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்தியாவின் யுத்தத்தையே தான் முன்னெடுத்ததாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியிருந்த நிலையில், இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வுமூலமான தீர்வொன்றை முன்வைக்கவேண்டுமென இந்தியாவும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறது.

Read more...

Tuesday, June 23, 2009

ஜேர்மனியில் புலிகளின் மத்திய குழு கூடியது.

ஜேர்மன் கேளின் நகரில் ஒபா ஹவுசன் எனும் இடத்தில் உள்ள புலிகளின் காரியாலயத்தில் புலிகளின் மத்திய குழு நேற்று பிற்பகல் கூடியது. ஜேர்மன் பொறுப்பாளர் வாகீசன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் மத்தியகுழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். அவசரமாக கூட்டப்பட்ட இக்கூட்டத்தில் ஜேர்மன் புலிகளின் எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இக்கூட்டத்தின்போது புலிகளியக்கத்தினுள் ஏற்பட்டுள்ள பிளவுகள், சதிமுயற்சிகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் கே.பி குழுவின் நடவடிக்கைகளை எவ்வாறு முறியடிப்பது எனவும் பொலிஸாரின் உதவிகளை எவ்வாறு பெற்றுக்கொள்வதெனவும் விளக்கப்பட்டுள்ளது. அங்கு பேசிய ஜேர்மன் பொறுப்பாளர் வாகீசன், கே.பி குழுவினர் ஜேர்மன் நாட்டிற்கு புதிதான ஓர் தலைமையை நியமிக்க திட்டமிட்டுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் இவ்விடயம் மக்களுக்கு ஏற்படுத்தக் கூடிய விளைவுகளை அவர்களுக்கு உரியமுறையில் விளங்கப்படுத்தி கே.பி குழுவினரை மக்கள் நிராகரிப்பதை உறிதிப்படுத்த சகல முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு அனைத்து அங்கத்தவர்களையும் கேட்டுக்கொண்டார் என தெரியவருகின்றது.

Read more...

மீண்டும் ஐ.தே.கட்சியினுள் பிளவா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க நிற்கப்போவதில்லை என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பிரதி பொதுச் செயலாளருமான லக்ஸ்மன கிரியல்ல கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரத்தியேக நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கலந்துரையாடும் பொருட்டு ஒன்றுகூடல் ஒன்று ஒழுங்குபடுத்தப் பட்டுள்ளதாகவும் அவ் ஒன்றுகூடலுக்கு ரணிலுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனவும் உள்ளக வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. இந்த ஒன்றுகூடலில் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாகவும் பேசப்படும் என தெரியவருகின்றது.

Read more...

யாழ், வவுனியா தேர்தல்களுக்கான வேட்புமனு ஏற்பு நாளையுடன் பூர்த்தி

ஐ.ம.சு.மு முதற்தடவையாக வெற்றிலைச் சின்னத்தில் குதிப்பு

* மு.கா. தனித்து போட்டி
* கூட்டமைப்பு இன்று தாக்கல்
* ஐ.ம.சு.மு. நாளை தாக்கல்
* கூட்டமைப்பு, மு.கா., ஐ.தே.க.வின்

முதன்மை வேட்பாளர்களும் அறிவிப்பு


யாழ். மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை நண்பகல் 12.00 மணியுடன் முடிவடைகின்றன. ஐ.தே.க. மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் என்பன வவுனியா மாநகர சபைக்கு நேற்று (23) வேட்பு மனுத்தாக்கல் செய்தன. யாழ்.

மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று (24) வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதோடு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாளை (25) வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளன. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முதற்தடவையாக வெற்றிலைச் சின்னத்தில் யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைகளுக்கு போட்டியிட உள்ளது.

இம்முறை தேர்தலில் ஐ.ம.சு. கூட்டமைப்பில் அங்கம் வகிக்காத பல கட்சிகள் யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வெற்றியைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.

இம்முறை தேர்தலில் ஈ.பி.டி.பி. உட்பட பல கட்சிகள் ஐ.ம.சு. கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதாகவும் ஐ.ம.சு. கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இன்று பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் கூறினார். முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்தும் இன்று தீர்மானிக்கப்படவுள்ளதோடு நாளை வேட்பாளர் பட்டியல் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மஹாவலி நிலையத்தில் நேற்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். யாழ். வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் அரசாங்கம் பெரு வெற்றியீட்டும் எனவும் தமிழ் மக்கள் அரசாங்கத்தையே ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். யாழ். மாநகர சபைக்கான ஐ.தே.க.வின் வேட்பு மனு நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டதோடு வவுனியாவுக்கான வேட்பு மனுவை ஐ.தே.க. செயலாளர் நாயகம் திஸ்ஸ அத்தநாயக்கவும் ஜெயலத் ஜெயவர்தன எம்.பி.யும் நேற்று தாக்கல் செய்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், வவுனியா நகர சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுவை நேற்று (23) தாக்கல் செய்ததோடு கட்சியின் பதில் செயலாளர் நிசாம் காரியப்பர், முன்னாள் அமைச்சர் நூர்தீன் மசூர் ஆகியோர் வேட்பு மனுக்களை கையளித்தனர். மு.கா.வின் முதன்மை வேட்பாளராக சுல்தான் முகைதீன் அபுல்கலாம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்ய உள்ளதோடு யாழ். மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளராக சிவஞான சுந்தரமும் வவுனியா நகர சபைக்கான முதன்மை வேட்பாளராக எஸ். என். ஜி. நாதனும் நியமிக்கப்படவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. ஏனைய தமிழ் கட்சிகள் மற்றும் பிரதான கட்சிகள் இன்றும் நாளையும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளன.

கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது தொடர்பில் கட்சிகளிடையே தொடர்ந்தும் ஆராயப்பட்டு வருவதாகவும் அந்தந்த கட்சி வட்டாரங்கள் கூறின.

வவுனியா நகர சபைக்கு இதுவரை 3 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதோடு யாழ். மாநகர சபைக்கு 4 சுயேச்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்று (23) சுயேச்சைக்குழுவொன்று கட்டுப்பணம் செலுத்தியதாகவும் இன்று நண்பகல் 12.00 மணி வரை கட்டுப்பணம் ஏற்கப்படும் எனவும் யாழ். உதவித் தேர்தல் ஆணையாளர் குகநாதன் கூறினார்.

தேர்தல் திகதி நாளை அறிவிக்கப்படவுள்ளது.

Read more...

நோர்வே புலிகளின் ரிப் ரொப் புலனாய்வுத்துறை. -கபில்-

நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லோ வில் குறோன்டாலன் என்ற இடத்தில் ஓர் நிலக் கீழ் தொடருந்து செல்லுமிடம் உண்டு. இவ்விடத்தில் உள்ள கட்டிடத்தில் பல தமிழர்களின் கடைகள் உண்டு. அக்கட்டிடத்தில் ரிப்ரொப் எனும் பெயருடைய பெட்டிக்கடையொன்றும் உள்ளது. இங்கு பெரும்பால தமிழர்கள் கூடுவர்.

ரிப்ரொப் எனும் கடையின் உரிமையாளரான றொபின் என்பவர் தமிழ் மக்கள் மத்தியில் தன்னை புலிகளின் புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவராக அறிமுகப்படுத்தி வருவதாக தெரியவருகின்றது. அத்துடன் புலிகள் தனது பெயரில் புலனாய்வுத் துறை கிளையொன்றை வைத்திருந்தாகவும் அதற்கு தான் பல வருடங்கள் தலைமை வகித்ததாகவும் கூறியவருவதாக மக்கள் கூறுகின்றனர்.

ஜேம்ஸ்போன்ட007 வேடம் போடும் இந்நபர்கள் கடந்தகாலங்களில் பல முறை பெண்களுடன் சேட்டை உட்பட பல குற்றங்களுக்காக உள்ளே சென்று வந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது. எனவே மக்கள் இவ்விடத்திற்கு செல்லும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு நோர்வேவாழ் ஆர்வலர்கள் அங்குள்ள மக்களுக்கு பிரத்தியேகமாக அறிவுறுத்தி வருவதாக எமது நோர்வே செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

புலிகள் இன்று இரண்டுக்கு மேற்பட்ட பிரிவுகளாக பிரிந்துள்ள நிலையில் பணத்திற்காக புல(நாய்)வு வேடம் போடும் இவர்களது நடமாட்டம் உள்ள இடங்களில் மக்கள் அவதானமாக இருப்பது சிறந்ததாகும். காரணம் இன்று புலிகளியக்கத்தினுள் தோன்றியிருக்கும் பிளவுகள் எதிர்காலத்தில் மக்கள் மீது வன்செயல்களைப் பிரயோகிக்கக் கூடிய நிலை ஒன்று தோன்றலாம் என அச்சப்படும் இச்சந்தர்ப்பத்தில், இவர்கள் மக்கள் கதைக்கின்ற விடயங்களைக் ஒட்டுக்கேட்டு புலிகளின் ஏதாவது ஒரு தரப்பிற்கு போட்டுக்கொடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Read more...

கிளிநொச்சி மாவட்ட நீதவான் கைது.

புலிகளின் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றின் பிரதான நீதவானாக செயற்பட்டுவந்த சுடர் என்பவர் வவுனியா மெனிக்பாம் இடைத்தங்கல் முகாம் ஒன்றில் இருந்து கைதுசெய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள இவரிடம் குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரியவருகின்றது.

புலிகள் வடகிழக்கின் பெரும்பாலான பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டு பிரதேசங்களில் வைத்திருந்த காலத்தில் தமக்கென உருவாக்கியிருந்த அரசாங்கத்தில் நீதிதுறை ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது யாவரும் அறிந்ததே.

Read more...

ஐ.தே.க வவுனியா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல்.

ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. ஐ.தே.க பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க , பா.உ ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோர் தலைமையில் வவுனியா பிரதேச செயலகத்தில் பாரமளிக்கப்பட்ட வேட்புமனுவில் தலைமை (தவிசாளர்) வேட்பாளராக ரங்கநாதன் பாக்கியராஜா அவர்களது பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

Read more...

இந்தியாவிற்கு உல்லாசப் பிரயாணம் சென்ற பெண் மரணம்.

இந்தியாவிற்கு சுற்றுலாச் சென்ற ரதிதேவி, (வயது 55) எனும் இலங்கைப் பெண் நோய்வாயுற்று இந்திய வைத்தியசாலை ஒன்றில் மரணமடைந்துள்ளதாக இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது. வைத்தியத்தின் போது ஏற்பட்ட தவறுகாரணமாக மரணம் ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் அவரது உடலம் மரணபரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Read more...

புலிவேட்டை முடிந்து பாதளக்குழுவேட்டை தொடர்கின்றது.

கொழும்பு மற்றும் சுற்றுப்புறங்களில் செயற்படும் பாதாளக்குழுக்களை தேடி அழிக்கும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இன்று காலை மாளிகாவத்தை, அப்பெல்வத்தை பிரதேசத்தை சுற்றி வளைத்த இராணுவத்தினரும் , பொலிஸாரும் பாதாளக்குழுக்களின் அங்கத்தவர்கள் உதவியாளர்கள் மறைந்திருக்க கூடிய இடங்களில் சல்லடைபோட்டுத் தேடுதல் நாடாத்தினர். தேடுதலின் போது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

குடும்பத்தை சுட்டுக்கொன்ற உதவி பொலிஸ் பரிசோதகர்.

தெஹிவல பொலிஸ் நிலையத்தை சேர்ந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தனது மனைவி, மாமா, மாமி ஆகியோரைச் சுட்டுக்கொன்று விட்டு பொலிஸில் சரணடைந்துள்ளார். நேற்று இரவு தெஹிவல நிகாபே பிரதேசத்தில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்துள்ளனர். கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Read more...

கப்பம் வாங்கிய இருவர் கைது.

ஏறாவூர், மாவடிவேம்பு பிரதேசத்தில் கப்பம் வாங்கிய இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவர்களைச் கைது செய்தபோது இவர்களிடம் இருந்த 2 கிரனேட்டுக்களை மீட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். மக்கள் பொலிஸாருக்கு புகார் கொடுத்ததையடுத்து கைதுசெய்யப்பட்ட முன்னாள் புலிகளான இவர்கள் கருணா அல்லது பிள்ளையான் தரப்பினர் எனக் கூறப்படுகின்றது.

Read more...

மூன்று வருடத்துக்குள் வடக்கில் 325,000 புதிய வீடுகள்

மூன்று வருட வேலைத்திட்டத்திற்கமைய வடமாகாணத்தில் புதிதாக 325,000 வீடுகள் அமைக்கப்படவிருக்கும் அதேநேரம், அங்கு 150,000 வீடுகள் புனரமைத்துக் கொடுக்கப்படும் என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பாக, வடக்கின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி விசேட செயலணிக் குழுவின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பில் மோதல்களால் பாதிக்கப்பட்ட வடபகுதியின் பெருந்தெருக்கள், மின்சார விநியோகம், வீடுகள், நீர் விநியோகம், விவசாயம், சுகாதாரம் மற்றும் கல்வி அபிவிருத்திகள் போன்ற பல்வேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டன.

தற்பொழுது முன்னெடுக்கப்பட்டிருக்கு துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் ஏ மற்றும் பீ தர வீதிகளைப் புனரமைப்பதற்கென ஏற்கனவே 72 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருப்பதுடன், இந்த வீதி அபிவிருத்திப் பணிகள் 180 நாட்களில் பூர்த்தியடையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், மூன்று வருட வேலைத்திட்டத்தின் கீழ் 11.5 பில்லியன் ரூபா செலவில் 325,000 புதிய வீடுகள் அமைப்பதற்கும், 150,000 வீடுகளைப் புனரமைப்பதற்கும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

முன்னுரிமை அடிப்படையில் இந்தப் பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் வசதிகள் செய்துகொடுக்கப்படும் என பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தக் கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் டிக்சன் டெல பண்டார, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாட் பதியுதீன், மாவட்டச் செயலாளர் மற்றும் மீள்குடியேற்றம் மற்றும் மனிதநேய விவகாரங்களுக்கான பொறுப்பதிகாரி மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழர் தரப்புத் தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் எதிர்ப்பு அரசியலால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பயனும் ஏற்படவில்லையெனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், இதனை மக்கள் தற்பொழுது உணர்ந்திருப்பதாகவும் கூறினார்.
Thanks INL


Read more...

Monday, June 22, 2009

மங்கள தலைமையில் எங்கள் தேசிய முன்னணி

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பலம் மிக்க அரசியல்வாதியாக விளங்கிய மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர அவர்கள் தலைமையில் எங்கள் தேசிய முன்னணி எனும் பெயரில் புதியதொரு அரசியல் கட்சி உருவாகியுள்ளது.

தேர்தல் திணைக்கள ஆணையாளர் நாயகம் தயானந்த திசாநாயக அவர்களினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இக்கட்சியின் தலைவராக மங்கள சமரவீரவும் செயலாளராக றுவன் பேர்டிநான்டஸ் அவர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இத்துடன் மேலும் 7 கட்சிகள் அரசியல் கட்சிகளாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இவற்றை உறுதிப்படுத்தும் கடிதம் நேற்று 22 யூன் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் இலங்கையில் அரசியல் கட்சிகளாக அங்கிகாரம் பெற்றுள்ள கட்சிகளின் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.

Read more...

யுத்தத்தின் முடிவாக இலங்கையில் உல்லாச பிரயாணிகள் அதிகரிப்பு. - வெளிநாட்டு அமைச்சு.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துள்ள நிலையில் உல்லாச பிரயாணிகளின் வருகை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. வுருகின்ற உல்லாச பிரயாணிகளில் 73 சதவிகிதமானோர் ஒய்வு எடுக்கும் நோக்கிலேயே இங்குவருகின்றனர் என தெரிவித்துள்ள அமைச்சகம், இவ்விடயத்தை கருத்தில் கொண்டு உல்லாசதுறையின் தரத்தை மேம்படுத்துவதற்கான பல திட்டங்களை நடைமுறைப் படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

Read more...

புலிகள் இயக்கத்துக்கு உதவி வழங்கிய குற்றச்சாட்டின் மீது கூட்டமைப்பு உறுப்பினர் கனகரட்னம் நீதிமன்றத்தில் ஆஜர்

வன்னியில் மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட வேளை கைப்பற்றப்படாத பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுடன் இருக்கையில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் புலி பயங்கரவாதிகளுக்கு உதவி செய்ததுடன் பல்வேறு குற்றங்கள் புரிந்திருப்பதாகவும் இரகசிய பொலிஸார் நேற்று (22) கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளனர்.

நேற்றுவிசாரணைக்காக பிரதம நீதவான் நிஷாந்த ஹபுவாரச்சி முன்னிலையில் சந்தேகத்திற்குரிய மேற்படி எம். பியை ஆஜர்படுத்திய இரகசியப் பொலிஸார், அவசர காலச்சட்டத்தின் பேரிலேயே இவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

மனிதாபிமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட காலப் பகுதியில் விடுவிக்கப்படாத பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தோர்களுள் கனகரத்தினம் எம். பியும் இருந்துள்ளார். அங்கு கடமையிலிருந்த விசேட விசாரணைக் குழுவினராலேயே கைது செய்யப்பட்டுள்ளார். எல். ரி. ரி. ஈ. பயங்கரவாத அமைப்புக்கு நிதியுதவிகளைப் பெற்றுக்கொடுப்பதில் இவருக்கு தொடர்பு இருப்பதாகத் தெரிவித்து மேற்படி எம். பிக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளுக்கு உதவி பெற்றுக்கொடுத்தல் பயங்கரவாதிகளுக்கு உதவும் வகையில் வாசகங்கள் மற்றும் கருத்துக்களை பகிரங்கமாக வெளியிடல் ஆகிய காரணங்களுக்கு அமைய கடந்த மே 21 ஆம் திகதி வவுனியாவில் வைத்து இவர் கைது செய்யப்பட்டார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் மே மாதம் 21 ஆம் திகதி விதிக்கப்பட்ட தடுத்து வைத்தல் உத்தரவுக்கமைய இரகசியப் பொலிஸாரால் சதாசிவம் எம். பி. தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

விசாரணை நடவடிக்கைகள் இன்னும் முடிவுறாமல் உள்ளதால் சந்தேக நபரை மேலும் தடுத்து வைக்கும் உத்தரவுக்கமைய தடுத்து வைத்து விசாரணை செய்ய வேண்டுமென்பதால் அவரை மீண்டும் தங்களது பொறுப்பில் விடுமாறு, இரகசியப் பொலிஸ் சார்ஜண்ட் வாசல விஜேரட்ண குறிப்பிட்டுள்ளார். முல்லைத்தீவு முள்ளியாவளை மூன்றாம் இலக்க வாட்டில் வசிக்கும் சதாசிவம் கனக ரத்தினம் எம்.பியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியவேளை பிரதம நீதவான் ஹப்பு வாரச்சி தொடுத்த கேள்விக்கு விடைய ளிக்கும் போது கனகரத்தினம் எம்.பி. தடுத்து வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருப்பதற்கு தமக்குப் பிரச்சினையில்லையெனக் கூறினார்.

உணவு மற்றும் சுகாதார வசதிகளும் தமக் குக் கிடைப்பதாக சந்தேக நபர் நீதிமன்ற த்தில் மேலும் கூறினார்.

சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் தொடர்பிலான தடுத்து வைத்தல் உத்தரவின் பிரதியொன்றை நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்த இரகசியப் பொலிஸார் மே மாதம் 21 ஆம் திகதியிலிருந்து 90 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட முடியுதென்பதால் மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபரை மீண்டும் இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கு மாறு கேட்டுக் கொண்டார்.

இதனை ஏற்றுக்கொண்ட பிரதம நீதவான் நிசாந்த ஹப்புஆரச்சி சந்தேக நபரை விசாரி த்து இரகசிய பொலிஸாரிடம் ஒப்படைப் பதற்கும் எதிர்வரும் 26ம் திகதி மீண்டும் இந்த மனுவை விசாரணைக்கு எடுக்குமா றும் உத்தரவிட்டார்.
நன்றி தினகரன்

Read more...

வணங்காமண் கப்பலை அனுமதிப்பது என்ற கதைக்கே இடமில்லை: அரசாங்கம்

வணங்காமண் கப்பலை இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதிப்பது என்ற கேள்விக்கே இடமில்லையெனக் கூறிய இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ் அதிகாரி ஒருவர், இந்த நடவடிக்கை அரசியல் மற்றும் பிரசார நோக்கம் கொண்டதெனவும் தெரிவித்தார்.

வணங்காமண் கப்பலிலிருக்கும் நிவாரணப் பொருள்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளின் உதவியுடன் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு கிடைக்க வழிசெய்யவேண்டுமென தமிழக முதல்வர் மு.கருணாநிதி, கடித மூலம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணாவிடம் கோரியிருந்தார். இந்த நிலையில், இதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா உறுதியளித்திருந்தார்.

இதேவேளை, இந்த நிவாரணப் பொருள்கள் விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகளால் சேகரிக்கப்பட்டதென்பதுடன், பிரசார நோக்கங்களுக்காகவே இந்தப் பொருள்கள் சேகரிக்கப்பட்டதாகவும் இலங்கை அரசாங்கம் கருதுகிறது.

புலம்பெயர்வாழ் தமிழர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருள்களை ஏற்றிய வணங்காமண் கப்பல் இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைந்தபோது சர்வதேச விதிமுறைகளை மீறியுள்ளதெனக் கூறி மீண்டும் திருப்பியனுப்பப்பட்டிருந்தது.

Read more...

தமிழ் இனவாதத்தை தோற்கடித்தோம், சிங்கள இனவாதத்துக்கு இடமளியோம்: ராஜித

இலங்கையில் தமிழ் இனவாதிகளைத் தோற்கடித்த அரசாங்கம், சிங்கள இனவாதிகள் எதிர்க்கிறார்கள் என்ற காரணத்துக்காக இனப்பிரச்சினையைத் தீர்ப்பதென்ற யோசனையைப் பின்வைக்கப்போவதில்லையென நிர்மாண மற்றும் பொறியியல்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறினார்.

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனக் குறிப்பிட்ட அமைச்சர், விடுதலைப் புலிகள் என்ற இனவாதிகளைத் தோற்கடித்திருக்கும் நிலையில், சிங்கள இனவாதத்துக்கு இடமளிக்கப்போவதில்லையெனத் தெரிவித்தார்.

“அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருக்கும் 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பாக அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடிவருகிறோம். மாகாணங்களுக்குக் குறைந்தளவிலான பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க இணக்கம் காணப்பட்டு வருகிறது” என்றார் அமைச்சர்.

13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் யாவும் ஆதரவளிக்குமெனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

உயிரைப் பணயம் வைத்தாவது தடுப்போம்

அதேநேரம், உயிரைப் பணயம் வைத்தாவது 13வது திருத்தத்தை அமுல்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சியை முறியடிப்போமெனத் தேசப்பற்றள்ள தேசிய இயக்கம் சூழுரைத்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் 13வரு திருத்தத்தை அமுல்படுத்தி துரோகச் செயலொன்றைச் செய்ய முற்பட்டால் அதனைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைக்கும் தாம் அனுமதிவழங்கப் போவதில்லையெனவும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இனரீதியாகப் பிரித்து நாட்டின் ஐக்கியத்தை நலிவடையச் செய்யும் சதித்திட்டம் சர்வதேச ரீதியில் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம், சர்வதேச சதிவலைக்குள் இலங்கை சிக்கிவிடக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது.

இதேவேளை, இனப்பிரச்சினைத் தீர்வுதொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் இறுதி யோசனைத் திட்டம் 13வது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டதாக அமையாது என அக்குழுவின் தலைவரும், அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண கூறியுள்ளார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் ஆலோசனைப் படியே இந்த யோசனைத் திட்டம் தயாரிக்கப்படுமெனவும், எனினும் 13வது திருத்தத்தில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திசெய்யவே தாம் எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்து விடயங்களிலும் இணக்கப்பாட்டுக்கு வந்துவிட்டன. நாம் தற்பொழுது இறுதி யோசனைகளைத் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம் கூடிய விரைவில் இறுதி யோசனைத் திட்டம் முன்வைக்கப்படும்” என அமைச்சர் கூறினார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com