Thursday, April 30, 2009

ரோறொன்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பான வீடியோ பதிவு ஆர்சிஎம்பி கையில்புலி ஆதரவாளர்கள் ரொறொன்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தாக்கு முகமாக கடந்த 27.04.2009 அன்று தூவராயலத்திற்கு சென்றிருந்தனர். அங்கு சென்றவர்கள் இலங்கைத் தூதரான பந்துள ஜெயசேகராவுடன் சந்திப்பு ஒன்று உள்ளதாக கூறியுள்ளனர். தூதருடைய நிகழ்ச்சி நிரலைப் பார்வையிட்ட ஊழியர்கள் அவ்வாறானதோர் சந்திப்பு பதிவாகியிராததையிட்டு அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.

பலாத்தாரமாக தூதரக வளாகத்தினுள் புக முற்பட்ட அவர்களை தூதரக காவல் அதிகாரிகள் தடுத்த போது அங்கிருந்த சிறீலங்கா எயர்லைன் ஆளளவு உயரமுள்ள சேவைதாதிக் கட்டவுட்டின் தலையைக் கொய்து கொண்டு போய் தமது நெட்டூர எல்லை எந்த மட்டத்திற்குப் போகும் என்று உலகத்திற்குக் காட்டியுள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு விரைந்த பொலிஸாருக்கு பாதுகாப்பு கமராவில் பதிவாகியிருந்த படங்கள் காட்சிகள் அனைத்தும் கொடுக்ப்பட்டுள்ளதுடன் பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

ஏறாவூர் பிரதேசத்தில் ஆயுதங்கள் மீட்பு.

காத்தான்குடிப் பொலிஸார் சந்தேகத்தின்பேரில் இளைஞர் ஒருவரைக் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டனர். அவ் இளைஞன் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் நேற்று பிற்பகல் 5 மணியளவில் ஏறாவூர் பிரதேசத்தில் வைத்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட ஆயுத விபரங்கள்

T-56 weapon 01
T-56 ammunition 70
Hand Grenades 03
SLR weapon 01
SLR magazines 01
SLR ammunitions 08
Anti Personnel Mine 01
Motorola phone 01
Radio battery 01மேலும் குஞ்சனாமலைப் பிரதேசத்தில் நேற்று பிற்பகல் தேடுதல் மேற்கொண்ட படையினர் கீழ்காண்படும் ஆயுதங்களை மீட்டுள்ளனா.

82mm mortar bombs 02
Hand Grenade 01
T-56 magazines 03
T-56 ammunition 33Read more...

நிலமைகள் தகரும் மட்டத்தில் இருக்கின்றது. UNHCRஐக்கியநாடுகள் சபையின் அகதிகள் புனர்வாழ்வுக்கான உயர் ஸ்தானிகர் ஆலயம் 160000 மக்கள் வன்னியிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பிரதேசத்துள் வந்துள்தை ஊர்ஜிதப் படுத்தியுள்ளது. இவற்றுள் 140000 பேர் வவுனியாவிலுள்ள 32 புனர்வாழ்வு முகாங்களிலும் 11000 பேர் யாழ்பாணத்திலும் 5000 பேர் திருகோணமலையிலும் குடியமர்த்தப் பட்டுள்ளனர்.

ஐநா உயர்தானிக நிலய அதிகாரிகளின் களநிலவரச் செய்திகள் "வடக்கு இலங்கையில் நிலமைகள் பாரதூரமானவை" என்று தெரிவிக்கின்றது. வில்லியம் ஸ்பின்டலர் என்ற ஐநா முகவர் ஒருவர் ஜெனிவாவிலிருந்து கூறுகையில் "இந்தப் புனர்வாழ்வு முகாங்களின் நிலமைகளோ தகர்ந்து கொட்டுப்படக் கூடியவை என்றும் மனிதாபிமான சேவை நிறுவனங்களுக்குமேல் தாங்க முடியாத சுமைகளைச் சுமத்தியுள்ளனவென்றும்" கூறியுள்ளார்.

மக்கள் கூடாரங்கள் ஏதுமின்றித் தாங்கொணாத வெயிலில் வதங்குகின்றனர் என்று இந்த முகவர் அமைப்பு கூறியுள்ளது. அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிகுள் வர எத்தனித்த ஆடவர்களும் பெண்களும் சரீரரீதியில் தாக்கப்பட்டுள்ளார்கள் என்று உறுதியான தகவல்கள் உள்ளது என்று இந்த அமைப்பு கூறுகின்றது.

அரசாங்கத்திற்குத் தனது சொந்த மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உள்ளது என்று தாங்கள் ஞாபகப்படுத்தியதாக ஸ்பின்டலர் கூறியுள்ளார். அரசாங்கம் அதிக வளங்களைத் தர வேண்டுமென்றும் சனங்களை உள்ளடக்கப் போதுமான அரச கட்டிடங்களையும் காணிகளையும் வழங்கவேண்டும் என்றும் தாம் கோரியதாக அவர் கூறுகின்றார்.

இந்த முகவர் அமைப்பு டுபாயிலிருந்து 3000 குடும்பங்கள் வாழக் கூடிய கூடாரங்களை விமான மூலம் கொண்டுவந்ததாகக் கூறியுள்ளது. இரணடாவது மனிதாபிமான விமானம் 103 மெற்றிக் தொன் நிவாரணப் பொருட்களைக் கொழும்புக்குக் கொண்டு வந்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளது.

உயர் ஸ்தானிகர் அந்தோனியோ கூட்ரெறெஸ் 2 மில்லியன் டொலர் மேலதிக நிதியை சனங்களின் தேவைக்கான கூடாரங்கள், புரதம்போன்ற உணவுப் பொருட்கள் வாங்குவதற்காகக் கொழும்புக்கு ஒதுக்கியுள்ளதாகக் கூறியுள்ளார். இந்த முகவர் அமைப்பு அரசாங்கத்தின் வேண்டுதலுக்கு ஏற்ப உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பராமரிப்புக்காக மேலும் 16.6 மில்லியன் டொலர் நிவாரண நிதியை ஒதுக்கியுள்ளது. அவசர செலவுக்கு இது தரப்படும் என்று நம்புகின்றோம் என்று இந்த ஐநா முகவர் அமைப்பு கூறியுள்ளது.

Read more...

நோர்வேயைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு இலங்கையை விட்டு வெளியேற கதவுகள் காட்டப்பட்டுள்ளது.புலிகளுக்கு 36 வாகனங்களைக் கொடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் இலங்கையில் இயங்கும் நோர்வே நாட்டின் பீபிள்ஸ் எய்ட் எனப்படும் நிறுவனத்தின் 3 உயர் அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

அவ்வமைப்பின் உயர் அதிகாரிகளான ஹைய் றொடெஸ் , பிலீப் அட்கின் மற்றும் பேதானி எரிக்ஸன் ஆகியோரது வீசாக்களை இலங்கை அரசு ரத்யதுச்செய்து வெளியேறும் கதவைக் காட்டியுள்ளது.

Read more...

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் தாகம் தணிக்க தண்ணீர் பவுசர்கள் வேண்டும்.வன்னியில் இருந்து பல துயரங்களைச் சந்தித்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் தாகம் தணிக்க தண்ணீர் பவுசர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு அறிவித்துள்ளது.

இம்மக்களின் இவ் அத்தியாவசியமான தேவையை பூர்த்தி செய்ய உதவி புரிய விரும்புவோர் (0094) 0112431590 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது உதவிகளை புரியலாம் என அமைச்சகம் அறிவித்துள்ளது.


மேற்படி தேவையை பூர்த்தி செய்ய விரும்பும் புலம் பெயர் தமிழர்கள் இலங்கையிலுள்ள பவுசர் நிறுனங்கள் அல்லது அவற்றை வாடகைக்கு விடுகின்றவர்களைத் தொடர்பு கொண்டு தாம் விரும்பிய காலத்திற்கு அவ் பவுசர்களை அங்குள்ள மக்களின் தேவைக்காக வாடகைக்கு அமர்த்துவதன் மூலம் அம்மக்களின் தண்ணீர்த் தாகத்தை தணிக்க முடியும் என இலங்கைநெற் நம்புகின்றது.

Read more...

நிவாரணக் கிராமங்களில் சொந்தங்களை இணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

வவுனியா நலன்புரி நிலையங்கள், இடைத்தங்கல் முகாம்கள், நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுள் ஆங்காங்கே சிதறி இருக்கும் குடும்ப உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்து ஒரே இடத்தில் தங்கவைப்பதற்கான நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வவுனியா கதிர்காமர் நிவாரணக் கிராமத்தின் இரண்டாவது பகுதியில் நேற்றுக் காலை அமைச்சர் ரிஷாத் விசேட கூட்டமொன்றை நடத்தினார். புலிகளின் பிடிக்குள்ளிருந்து தப்பி வந்த மக்களுள் அரச உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பிரதேச செயலாளர்கள் போன்றோரும் அடங்குவர்.

இவர்களது உதவியுடன் குடும்ப அங்கத்தவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறும் அமைச்சர் பணிப்புரை வழங்கினார்.

புலிகளின் பிடியிலிருந்து தப்பிவரும் போது குடும்பத்திலுள்ள சிலர் முதலில் பிள்ளைகளையும், சிலர் பெண்களையும் அனுப்பினர். வந்தவர்கள் வவுனியாவில் ஆங்காங்கேயுள்ள இடைத் தங்கல் முகாம்களில் குடும்ப அங்கத்தவர்கள் கட்டம் கட்டமாக தங்க வைக்கப்பட்டதால் சிதறிக் கிடக்க வேண்டிய நிலை உருவாகியது.

தங்கள் பிள்ளைகளுக்கு என்ன நடந்தது. எங்கே இருக்கிறார்கள் என்ற ஏக்கம், தவிப்பு ஏற்படுவது போல பிள்ளைகளும் இதே தவிப்புடன் இருக் கின்றனர். இதனை கருத்திற் கொண்டே அமைச்சர் ரிஷாத் இந்த நடிவடிக்கையை எடுத்துள்ளார்.

Read more...

Wednesday, April 29, 2009

இங்கிலாந்து, பிரான்ஸ் நாட்டு வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு விஜயம்.இலங்கையில் யுத்த அனர்த்தங்களுள் சிக்குண்டு தவிக்கும் மக்களின் நலன்கள் தொடர்பாக ஆராயும் பொருட்டு இலங்கைவந்துள்ள இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்கள் நேற்று வவுனியா சென்றுள்ளனர். வவுனியா சென்றடைந்த குழுவினரை வன்னி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா வரவேற்றார்.

அக்குழவில் இங்கிலாந்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் டேவிட் மிலிபாண்ட் பிரான்ஸ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேர்ணாட் ஹொக்னர் அமைச்சர்களான றிசாட் பதுர்தீன், றோஹித்த அபயகுணவர்த்தன, மஹிபால ஹேரத் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலர் பாலித ஹோகன்ன ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

குழுவினர் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள உலக உணவு நிலையம், கூட்டுறவு சங்கக்கடைகள் என்பவற்றை பார்வையிட்டதுடன் அம்முகாம்களில் உள்ள மக்களுடன் தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களின் உதவியுடன் பேசி அம்மக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொண்டனர். அங்கு வந்திருந்த சர்வதேச அமைச்சர்களுடன் பேசிய இடைத்தங்கல் முகாம்களில் வசிக்கும் மக்கள் தாம் புலிகளின் பிடியில் இருந்தபோது அனுபவித்த துன்ப துயரங்களையும் புலிகளின் பிடியில் இருந்து தப்பிவந்து இராணுவக்கட்டுப்பாட்டு பிரதேசங்களை அடைந்தபோது தாம் பாராமரிக்கப்பட்டவிதம், தமக்கு அளிக்கப்படுகின்ற உதவிகள் பற்றி விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

அத்துடன் பிரான்ஸ் அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வைத்திய நிலையத்திற்கு சென்ற பிரான்ஸ் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தமது வைத்தியப்பிரிவினர் அங்கு பணியாற்றுகின்ற விதத்தைப் பார்வையிட்டதுடன் வைத்தியகுழுவுடன் பேசி அங்குள்ள குறைநிறைகளையும் கேட்டறிந்து கொண்டார்.
Read more...

பிரபா இறுதிநேரத்தில் தப்பிச்செல்ல பாரிய 11 படகுகள் தயார் நிலையில்"புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் எட்டியுள்ளது" என்கிறார் உதய நாணயக்கார


புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் இறுதி நேரத்தில் தப்பிச் செல்வதற்காக சகல வசதிகளையும் கொண்ட 11 பாரிய படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இதேவேளை, பாதுகாப்பு வலயத்தில் புலிகளின் பிடியில் சிக்கியுள்ள பொது மக்கள் கடல் வழியைப் பயன்படுத்தி தப்பிச்செல்வதை தடுக்கும் வகையில் அங்குள்ள கரை யோரத்தில் நிறுத்திவைக்கப்பட்டு ள்ள சகல மீனவப் படகுகளையும் தீயிட்டுக் கொளுத்துமாறு புலிகளின் தலைமைத்துவம் உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு தேசிய பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர், அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தலைமையில் நடைபெற்றது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற இந்த செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் மேலும் தகவல் தருகையில்:-

பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள மிகவும் குறுகியதும், ஒடுக்கமானதுமான பிரதேசத்தில் முற்றாக முடக்கிவிடப்பட்டுள்ள புலிகளின் தலைவர்கள் எவ்வாறாவது தப்பிச் செல்வதற்கு முயற்சித்து வருகின்றனர்.

பிரபாகரன் மற்றும் அவரை சுற்றியுள்ள முக்கியஸ்தர்கள் மாத்திரம் தப்பிச் செல்வதற்கென ஆறு பாரிய படகுகள் தயார் செய்யப்பட்டுள்ளன. அதிநவீன தொழில் நுட்ப கருவிகள், ஜி. பி. எஸ். கருவிகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உட்பட சகல வசதிகளையும் கொண்டதாக இந்த படகுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தப்பிச் செல்பவர்களுக்குத் தேவையான உணவு வகைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட மேலும் 5 படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதென புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் பிரிகேடியர் குறிப்பிட்டார்.

எனினும், புலிகள் எந்த வகையிலும் தப்பிச் செல்ல முடியாத வகையில் சகல நடவடிக்கைகளையும் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, எஞ்சியுள்ள பிரதேசத்தில் புலிகள் தங்களது பாதுகாப்புக்காக பணயமாக பிடித்துவைத்துள்ள பொது மக்கள் தரைவழியையோ கடல் வழியையோ பயன்படுத்தி எந்த விதத்திலாவது தப்பி பாதுகாப்பு படையினரை நோக்கி வர தயாராகக் காத்திருக்கின்றனர்.

இந்த மக்கள் தரைவழியால் தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் கனரக ஆயுதங்களை பயன்படுத்தி கடுமையான தாக்குதல்களை நடத்தி தடுத்துவரும் புலிகள் இந்த மக்கள் கடல் வழியை பயன்படுத்தி தப்பிச்செல்வதையும் தடுக்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்பு வலயத்தில் எஞ்சியுள்ள பிரதேசத்தில் உள்ள சகல மீனவப் படகுகளை உடைத்து தகர்க்கும் வகையிலும், எரித்து நாசமாக்கும் வகையிலும் புலிகளின் உயர்மட்டம் தமது சகாக்களுக்கு உத்தரவிட்டுள்ளனர் என்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹ¤லுகல்லே, விமானப் படைப் பேச்சாளர் விங் கொமாண்டர் ஜனக நாணயக்கார, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நன்றி தினகரன்

Read more...

பாராளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜயநாயக்கவிற்கு பிடிவிறாந்து.ஜேவிபியில் இருந்து பிரிந்து சென்ற விமல்வீரவன்சவின் கட்சியான தேசிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜயநாயக்க மற்றும் ஐவரைக் கைது செய்யுமாறு அத்தனகல மஜிஸ்திரேட் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்துள்ளது.

வெயங்கொடப் பிரதேசத்தில் அண்மையில் ஜேவிபி உறுப்பினர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாகவே இவ் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி பாராளுமன்ற உறுப்பினர் சம்பவ இடத்தில் காணப்பட்டதாக கண்கண்ட சாட்சிகள் நீதிமன்றில் தெரிவித்திருந்ததுடன் அவரது கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டு அரச பரிசோதனைத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிந்ததும் குறிப்படத்தக்கதாகும்.

Read more...

சமாதானம் பற்றிய உண்மையை வெளிப்படுத்தும்படி நான்கு கட்சிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை.

யுத்தகளத்தில் கனரக ஆயுதங்கள் மற்றும் விமானத்தாக்குதகளை நிறுத்துவதாக ஆரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக நான்கு கட்சிகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கூட்டிறிக்கையில் புலிகளிக்கத்தோடு அரசாங்கம் ஏற்படுத்தியிருக்கும் சமாதானம் பற்றிய இரகசியத்தை வெளியிடும்படி கோரப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் ஐக்கியதேசியக் கட்சியின் செயலாளர் திசா அத்தனாயக்கா, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மகாஜனக் கன்னைத் தலைவர் மங்கள சமரவீரா, சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீம், ஜனநாயக மக்கள் முன்னணித்தலைவர் மனோகணேசன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கூட்டி அன்றேல் ஜனாதிபதி தன் அறிக்கைமூலம் தான் வெளியிட்டுள்ள "படைகள் எதிர்த்துப் போராடும்பொழுது கனரக ஆயுதங்களையும் விமானத்தாக்குதலையும் தவிர்க்கும்படி" கூறியாதாக வெளியிட்ட அறிக்கை பற்றித் தெளிவு படுத்த வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.

"எதிர்த்துப்போரிடும் நடவடிக்கைகள் ஒரு முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கனரக ஆயுதங்களைப் பாவிப்பதையும் விமானப்படைத தாக்குதலையும் தவிர்க்கும்படி எமது பாதுகாப்புப் படையினருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது." என்று ஏப்ரல் 27 தேதி அரசாங்கம் வெளியிட்ட அறிக்கையைப் பற்றி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசாங்க செய்தித் திணைக்கள இணையத்தளம் இவ்வறிக்கையை சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை வரவேற்று இந்திய உள்விவகார அமைச்சர் பி.சிதம்பரம் அவர்களும் தமிழ் நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களும் "பகைமையை முடிவுக்கக் கொண்டு வருதல்" என்று இதைக் கூறியுள்ளனர். அவர்கள் கூறிய அக்கூற்றை சர்வதேச ஊடகங்கள் பெரிதாக வெளிப்படுத்திய பொழுது சிறிலங்கா அரசாங்கம் வேறும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் "சிறீலங்கா பாதுகாப்பப் படைகள் தமது மனிதாபிமான மீட்பு நடவடிக்கைகளைத் தொடரும் என்றும் எதிர்ப்பு நடவடிக்கைளை முடிவுக்குக் கொண்டவருதல் என்பதை சமதானம் செய்துவிட்டதாகப்" பிழையாக வியாக்கியானப்படுத்தப் படுகிறதென்றும் வெளியிட்டுள்ளது.

இப்படியான முரண்பாடான அறிக்கைகளால் இந்த நாட்டு மக்கள் குறிப்பாக வன்னியிலுள்ள இடம்பெயர்ந்த தமிழ்மக்களும் வெளிநாட்டு சமூகங்களும் இலங்கை அரசாங்கமா இந்திய அரசியல்வாதிகளா உண்மை கூறுகிறார்கள் என்று முடிவெடுக்க முடியாமல் உள்ளனர்.
இலங்கைப் பிரச்சனைகள் பற்றி அறிய அவாவுள்ளவர்கள் எது உண்மை என்பதை அறிய விரும்பகின்றனர் என்று அந்த அறிக்கை கூறுகின்றது.


..................

Read more...

இலங்கை வந்துள்ள சர்வதேச பிரதிநிதிகள் வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்கின்றனர்.இலங்கையில் இடம்பெறுகின்ற உள்நாட்டு யுத்தத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராய வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் செயலர் டேவிட் மிலிபாண்ட் மற்றும் பிரான்ஸ் நாட்டின் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் ஹொக்னர் ஆகியோருக்கு இலங்கை வெளிவிவகார அமைச்சில் வைத்து அம்மக்களின் நிலைமைக் தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் பத்திரிகையாளர்களுடன் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ள அவர்கள் இடைத்தங்கல் முகாம்களுக்குச் சென்று வன்னியில் இருந்து தப்பி வந்துள்ள மக்களை நேரடியாக பார்வையிடவுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

முல்லைத்தீவு கடற்பரப்பில் மோதல். 25 புலிகள் பலி.முள்ளிவாய்கால் பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் படையினர் மீது கடல் மார்க்கமாக தரையிறங்கி தாக்குதல் நாடாத்த கடற்புலிகள் மேற்கொண்ட முயற்சி இன்று அதிகாலை முறியடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற இம் மோதலின் போது புலிகளின் 4 தற்கொலைப் படகுகள் உட்பட ஆறு படகுகள் நீர்மூலமாக்கப்பட்டுள்தாகவும் 25 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

Read more...

பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரவேண்டும். ஐ.தே.கபுலிப்பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படும் வரை வன்னியில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் தொடரவேண்டும் என ஐ.தே.க தெரிவித்துள்ளது. மேலும் புலிகள் முற்றாக ஒழிக்கப்படாமல் யுத்தத்திற்கு இடைவெளி வழங்கப்பட்டால் புலிகள் தமது மனிதாபிமானமற்ற செயல்களை தொடங்குவதற்கு அது ஏதுவாக அமையும் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

Read more...

பன்றிக் காய்ச்சல் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine influenza) -கிழக்கான் ஆதம்-“Thou shall not kill. Thou shall not commit adultery. Don't eat pork. I'm sorry, what was that last one?? Don't eat pork. God has spoken. Is that the word of God or is that pigs trying to outsmart everybody?”

-Jon Stewart American Actor and Comedian(1962)-

இன்று மிகவேகமாக பரவி உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்சல் (Swine flu) எனப்படும் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine fluenza) மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு வைரஸாக இன்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை வைரஸ் காய்ச்சல் பன்றிகளில் இருந்து தோன்றி இன்று மனிதர்களின் உடலை சல்லடையாக்கிக் கொண்டிருக்கிறது. உலகில் அதிகமான பன்றிப் பன்னைகள் ஐரோப்பிய நாடுகளிலேயே காணப்படுகின்றன பன்றி இறச்சி அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் உண்ணப்படுவதோடு உணவுக்காகவே இந்தப் பன்றிப் பண்ணைகள் நிறுவகிக்கப் பட்டுவருகின்றன.

திடீரேன தோன்றி படுவேகத்தில் பரவும் இத்தகைய வைரசுகள் பன்றிகளில் இருந்து மனிதனுக்குப் பரவுவதால் பன்றிக் காய்ச்சல் எனப் பெயர் பெறுகிறது. பன்றிக்கு பிக் தவிர ஹாக்ஸ், ஸ்வைன் எனவும் பெயர்கள் உண்டு எனவே ஸ்வைன் ப்ளூ (Swine flu) என ஆங்கிலத்தில் கூறப்படுவதால் பன்றிக் காய்ச்சல் என தமிழில் கூறப்படுவதாகவும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த காய்ச்சலைப் பரப்பி வருவது Orthomyxoviridae என்ற ரகத்தைச் சேர்ந்த வைரஸாகும் (Swine fluenza virus- SIV) பன்றிகளுக்குள் புகுந்துவிட்டால் அதன் சுவாசப்பாதையில் பயணிப்பதனூடாக சுவாசத்தை மட்டுப்படுத்தி பன்றிகளை கொன்றுவிடும். இந்த வைரஸில் பல வகைகள் (Strains) விஞ்ஞானிகளால் இனம் காணப்பட்டுள்ளது.

இந்த வைரஸின் தன்மைகள் தற்போது கண்டரியப்பட்டுள்ளன ஆர்.என்.ஏ.(R.N.A) வை அடிப்படையாகக் கொண்ட இந்த வைரசுகளின் ப்ளெஸ் பொயின்ட் அவை தங்கள் உருவை (Mutate) மாற்றிக்கொள்ளக் கூடியது. ஆகவே மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவும்போது மனிதனின் உடலிலுள்ள தற்காப்பு முறைமையை (Immune System) இது வென்றுவிடுவதால் மனிதன் பாரதூரமாக இதனால் பாதிக்கப்பட்டு இறந்துவிடும் அபாயமும் உண்டு.

அதுமட்டுமல்லாமல் அது மனிதனுக்குள் புகுந்துவிட்டால் மனித உடலில் பல்கிப்பெருகி மனித சூவாசத்தினூடாக மற்றவரையும் தொற்றிக்கொள்ளக் கூடியது இந்த வைரஸ் இதற்கு H1N1 எனப் பெயரிட்டுள்ளனர். ஆகவே ஐரோப்பிய அமெரிக்க மற்றும் இலத்தின் அமெரிக்க நாடுகளில் வாழும் நமது மக்கள் மிகவும் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்ட பன்னிரென்டுபேர் அமெரிக்காவில் 2005 ம் ஆண்டு இனங்காணப்பட்டனர். என்றாலும் இந்நோயின் தன்மையினை கண்டறிந்து இது பன்றிகளிலிருந்து பரவியிப்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்கான தடுப்பு மருந்து பன்றிகளுக்கு ஏற்றப்பட்டபோது அமெரிக்காவில் முற்றாக இது தடுக்கப்பட்டுவிட்டதாக கூறியிருந்தனர்.

இதுபோன்ற காய்ச்சல் (flu) வகை உலக சரித்திரத்தில் பலமுறை கண்டறியப்பட்டுள்ளது. 1957ம் ஆண்டு (Asian Flu) ஆசியக் காய்ச்சல் என்ற ஒன்று நாற்பதைந்து மில்லியன் அமெரிக்கர்களை பாதித்து அதில் எழுபதுனாயிரம் பேர்வரை இறந்து போனார்கள். அதன் பதினொரு வருங்களின் பின்னர் 1968 ஆண்டு தொடக்கம் 1969 ம் ஆண்டு காலப்பகுதியில் ஹோங்கோங் காய்ச்சல் (HongKong flu) ஐம்பது மில்லியன் அமெரிக்கர்களை பாதித்து அதில் முற்பத்தி மூவாயிரம்பேர் இறந்தார்கள். 1976ம் ஆண்டு அமெரிக்க படைவீரர்கள் ஐநூறுபேர் பன்றிக் காய்ச்சலால் (Swine flu) சில வாரங்கள் பீடிக்கப்பட்டார்கள் என்றாலும் சில மாதங்களின் பின்னால் இந்த நோய் மாயமாக மறைந்துவிட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியதுடன் இந்நோய் மீண்டும் தொன்றுவதற்கு எந்த அறிகுரியையும் காணமுடியவில்லை என்று கூறியிருந்தனர்.

தற்போது ஐரோப்பிய மற்றும் மேற்கத்தைய தேசங்களுடன் அவுஸ்ரேலியாவையும் பயமுறுத்திக் கொண்டிருக்கும் இந்தக் காய்ச்சலானது ஸ்பானிஸ் ப்ளூ (Spanish flu) எனப்படும் ஸ்பானியக் காய்ச்சலிலிருந்து பன்றிக் காய்ச்சலாக மாற்றமடைந்திருக்கலாமென நம்பப்படுகிறது. என்றாலும் உலகம் முழுவதும் பல இலட்ச்சம் மக்களை இந்தக் காய்ச்சல் தொற்றிக்கொள்ளும் அபாயமிருப்பதால் அனைவரும் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

இந்த எஸ்.ஐ.வி.(SIV) வைரஸ் வகை இரண்டு பிரவுகளாக காணப்படுகிறது இன்ப்ளூயென்ஸா சி (Influenzavirus C) அல்லது அதன் மற்றொரு உபபிரிவான இன்ப்ளூயென்ஸா ஏ (Influenzavirus A) என்பனவாகும் அவை.

இந்த வைரஸின் இன்ப்ளூயென்ஸா ஏயின் (Influenza virus A) உப கூறுகளான (H1N1, H3N2, and H1N2) இவை உலகம் முழுவதும் பன்றிகளில் கண்டறியப்பட்டிருந்தது. 1998ம் ஆண்டுக்கு முந்திய காலப்பகுதியில் அமெரிக்காவிலுள்ள பன்றிகளில் H1N1 காணப்பட்டது என்றாலும் 1998ம் ஆண்டு ஆகஸ்ட் மாதகாலப்பகுதியில் அமெரிக்கப் பன்றிகளில் H3N2 கண்டறியப்பட்டிருந்த்து. என்றாலும் இரண்டாயிரத்து நாலாமாண்டு H3N2 காணப்பட்ட அமெரிக்கப் பன்றிகளிலும் துருக்கிய பன்றிப் பண்னைகளிலும் இந்தவகை வைரசுகளின் கூறுகள் மனிதனில் (HA, NA, and PB1) பன்றியில் (NS, NP, and M) பறவைகளில் (PB2 and PA) என காவப்பட்டிருந்தது

இதன் பிரதான வடிவமான எபியன் இன்ப்ளூயென்ஸா வைரஸ் (Avian Influenzavirus) H3N2 முதலில் சீன மற்றும் வியட்னாம் பன்றிகளில் இருப்பது கண்டறியப்பட்டபோது அவை இலகுவாக மனிதர்களின் காவப்படக்கூடியது என்றும் அவை காவப்படும்போது இலகுவாக மாற்றமடைந்து புதியவகைகளை தோற்றுவிக்கும் எனவும் உலக சுகாதார வல்லுனர்கள் எச்சரித்திருந்தனர். அவ்வாறே அது மனிதனால் H2N2 வாக காவப்பட்டு மீண்டும் பன்றிகளுக்கு தொற்றியுள்ளது 2004ம் ஆண்டு சீனாவில் பன்றிகளை சோதனையிட்டபோது H5N1 என்ற வடிவத்தில் கண்டறியப்பட்டது.

தற்போது மெக்ஸிக்கோவில் மனிதர்களை உலுக்கும் இந்தப் பன்றிக் காய்ச்சல் மெக்ஸிக்கோவின் பண்ணைகளிலிருந்து மனிதனுக்குள் புகுந்து கொண்டதாகக் கூறப்பட்டாலும் அது எவ்வாறு மெக்ஸிக்கோவிற்கு வந்து சேர்ந்தது என்பதற்கு சரியான தகவல்கள் இல்லை.

இந்த வைரஸின் ஆர்.ஏன்.ஏவை பரிசோதித்தபோது அதில் வட அமெரிக்கப் பன்றிகளில் காணப்படும் வைரசின் சில ரசாயனங்களும் ஐரோப்பிய பன்றிகளில் காணப்படும் வைரசின் சில வேதியல் பொருற்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இது ஐரோப்பாவிலிருந்து பறவைகள் மூலம் வட அமெரிக்க நாடான மெக்ஸிக்கோவிற்கு வந்திருக்கவேண்டும் என நம்பப்படுகிறது

தற்போது மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும இந்த வைரஸ் காய்ச்சல் பன்றியின் இறச்சியை உண்பதால் பரவாது என்பதுடன் பன்றியின் இறச்சியை 75 டிக்கிரியில் சூடாக்கினால் அந்த வைரஸ் அழிந்துவிடும் என்கிறார்கள் ஆராச்சியாளர்கள்.

இந்த நுண்ணுயிர்கள் சுவாசத்தின் மூலமாகவும் வாய், மூக்கு மற்றும் கண்களின் தொடுகையினால் பிரதானமாக பரவுவதாக ஆராச்சிகள் கூறுவதால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் அனைவரும் மூக்கு வாய்களை மூடியவர்களாக காண முடிகிறது மற்றுமல்லாமல் காதலர்களுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதை நோக்கக் கூடியதாக உள்ளது.
இலங்கையில் பன்றியைப் சாப்பிடுவர்கள் அதிகமாக கிடையாது. என்றாலும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மிகச் சிலரும் மற்றய பகுதிகளில் நோக்கின் புற கொழும்புப் பகுதிகளிலும் நீர்கொழும்பு, ஜாஅல, கட்டுநாயக்க, களுத்துறை, மொரட்டுவ பகுதிகளில் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காய்ச்சல், தலைவலி, உடல் வலி, குளிர் காய்ச்சல், தொண்டை வலி, வயிற்றுப் போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும். கவனக்குறைவாக இருப்பவர்களுக்கு இது உயிராபத்தை ஏற்படுத்தவல்லது.

இவ்வகை வைரசுகளை கட்டுப்படுத்தக்கூடிய மருந்துகள் பல இருந்தபோதும் இதை முன்கூட்டியே தடுக்கக்கூடிய தடுப்பு மருந்துகள் இதுவரை உலகில் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் தற்காப்பு நடவடிக்கைகள் மூலம் இதை தடுத்துக் கொள்ளலாம் நோய் காணப்படுகின்ற நாடுகளில் வாழ்பவர்கள் வாய், மூக்கு பகுதிகளை மூடிக்கொள்ளுதல், குப்பைகள் சேராமல் சூழலை சுத்தமாக வைத்திருத்தல், நோயினால் பாதிக்கப்பட்டவர் இருமல் வரும் போது வாயில் துணியை வைத்து மறைத்துக் கொள்ளுதல், நோயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று வருவர்கள் தங்கள் வாய், கண், மூக்குப் பகுதிகளை கையினால் தொடாதிருத்தல், கைகளை சவர்காரம் இட்டு நன்றாக்க் கழுவிக் கொள்ளுதல் போன்ற தற்காப்பு நடவடிக்கைகளால் நோயிலிருந்து பாதுகாப்புப் பெறலாம்.

உலகில் தற்போதுள்ள முன்னனி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் இந்த வைரசுக்கான தடுப்புசியை தாயாரிப்பதில் இரவு பகலாக முயற்சித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்களை தெரிவிப்போம்.

தற்போதைய உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) இன்றைய தகவலின் படி அமெரிக்காவில் 64 ஆய்வுகூடங்களினால் மனிதர்கள் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன ஆனால் இதுவரை எந்த மரணமும் சம்பவிக்கவில்லை என்பதுடன் மெக்ஸிக்கோவில் இருப்பத்தாறுபேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் எழுபேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிகிறது. தவிரவும் கனடாவில் 06, நியூலாந்தில் 03 ஐக்கிய இராச்சியத்தில் 02 இஸ்ரேல் 02 ஸ்பெயில் 02 என இவ்வைரசால் பாதிகப்பட்டவர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இந்நோய் பரவாமல் தடுப்பதற்காக பாதிகப்பட்ட நாடுகளின் எல்லைகளை மூடும்படியும் பிராயண தடைகளை கையாளுமாறும் உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளிளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

...............................

Read more...

பிரித்தானியத் தூதரகம் முன்பாக தேரர் ஒருவர் உண்ணாவிரதம். 50 கோடி ஸ்ரேலிங் பவுண் நஷ்டஈடு வேண்டுமாம்.


இலங்கையின் உள்வீட்டு விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து ஜாதிக்க ஹெல உறுமயவைச் சேர்ந்த ஒமல்பே சோபித தேரர் கொள்ளுப்பிட்டியில் உள்ள இலங்கைக்கான பிரித்தானி உயரிஸ்தானிகர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதத்தில் இறங்கியுள்ளார்.

அத்துடன் பிரித்தானியா இலங்கையை ஆண்ட காலத்தில் இலங்கைக்கு ஏற்படுத்திய பாதிப்புக்களுக்காக 50 கோடி ஸ்ரேலிங் பவுண் நஸ்டஈடு கோரி ஜாதிக ஹெல உறுமய பிரித்தானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலர் டேவிட் மிலிபாண்ட க்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

Read more...

சர்வதேச சமுகம் பிரபாகரனை காப்பாற்ற முற்படவில்லை. பிரித்தானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்.


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் காப்பாற்ற சர்வதேச சமுகம் முற்படவில்லை எனவும் அவர்கள் இலங்கையில் யுத்த சூழ்நிலைகளுள் சிக்கித்தவிக்கும் மக்களைப் பற்றியே தமது கருசனைகளைச் செலுத்தியுள்ளார்கள் எனவும் பிரித்தானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலர் டேவிட் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

Read more...

Tuesday, April 28, 2009

யாழ்பாணத் தமிழ் நடுத்தரவர்க்கத்தின் ஏகாதிபத்தியமோகம். கம்பர்மலை-அழகலிங்கம் (ஜேர்மனி)

புகலிட நாடுகளில் யாழ்ப்பாண நடுத்தர வர்க்கம் வரலாற்றில் என்றுமில்லாத அளவுக்கு ஏகாதிபத்திய ஏஜண்டுகளாகச் செயற்படுகின்றன. இலங்கைத் தொழிலாளி வர்க்கமும் வறிய விவசாயிகளும் பகீரதப் பிரயத்தனப்பட்டு அகற்றிய பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கொடியை வெட்கமில்லாமல் தூக்கிக் கொண்டு லண்டனில் உள்ள தமிழர்கள் ஊர்வலம் வைக்கிறார்கள். அந்தக் காட்சிகளைப் பார்த்தாலே சமுதாய உணர்மையுள்ளவர்களுக்கு இதயம் வெடிக்கிறது.

சில கிழமைகளுக்கு முன்னதாக ஜெனிவாவில் நடந்த தமிழர்கள்களின் ஊர்வலத்தில் ஜேர்மன் ஏகாதிபத்திய சான்சலரான அங்கேலா மேர்கலின் படத்தையும், பிரெஞ்சு ஏகாதிபத்திய ஜனாதிபதியான சாக்கோசியின் படத்தையும், பிரித்தானிய ஏகாதிபத்தியப் பிரதமரான கோர்டன் பிறவுணின் படத்தையும், கூடவே அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் படத்தையும் தூக்கிக் கொண்டு ஊர்வலம் செய்தனர். மீண்டும் இலங்கையை ஏகாதிபத்தியக் காலனியாக்கும்படி இவர்கள் கோருகிறார்களா? என்று அரசியல் உணர்மையுடையவர்கள் விசனப்பட்டார்கள்.

24.4.2009 அன்று பெர்லினிலுள்ள சீனத்தூதரகத்திற்குப் புலிப்பாசிவாதிகள் முட்டை எறிந்து ஆர்ப்பாட்டமும் செய்துள்ளனர். சீனத்தூதரகத்திற்கு முட்டை எறிந்தது போன்ற ஏகாதிபத்தியத்தை மகிழவைக்கும் சம்பவம் வேறு ஏதும் இருக்க முடியாது. இன்றுவரை ஜேர்மனியர்கள்கூட சீனாவுக்கு எதிராக ஒர் ஊர்வலத்தையும் நடாத்தியது கிடையாது.

மேற்குலகத்தால் தோற்றுவிக்கப்பட்ட புலிகளின் ஆயுதப் பயங்கரவாதம் தோற்றதற்கான ஒரேயோரு காரணம், புலிகளின் ஏகாதிபத்தியத்திற்கு அடிமையாகிப் போன அரசியற் கொள்கையாகும். பூகோளமயமான இன்றய சகாப்தத்தில் முதலாளித்துவத் தேசிய அரசுகள் பொருளாதார விதிகளின் அழுத்தங்கள் காரணமாக ஒன்றுபடும் நிகழ்வுப் போக்குகள் நிகழ்ந்து கொண்டிருக்கையில் இலங்கையைத் துண்டாடி, ஒரு ஏகாதிபத்திய அடிவருடி முதலாளித்துவ தமிழ்ஈழ அரசை உண்டாக்கும் கொள்கையைத் தமிழ் நடுத்தரவர்க்கம் முன்னெடுத்ததாலேயே அவர்களது அத்தனை பிரயத்தனங்களும் தியாகங்களும் அவமாகிப் போனது.

"முதலாளித்துவ உற்பத்திமுறையும் சர்வதேச வர்த்தகமும் உலகச் சந்தையும் முதலாளித்தவத் தேசியத்திலும் பார்க்க பல்தேசியக் குணாம்சத்தையே வெளிப்படுத்துகின்றன.", என்றார் மாக்ஸ்.

இன்றய உலக அபிவிருத்தியோ மாக்ஸ் காலத்து மட்டத்திலல்ல. இந்திய உபகண்டமே ஏன முழு ஆசியாவுமே ஐக்கியப்படும் வளர்ச்சிப்போக்குகள் நடந்;துகொண்டிருக்கும் இக்காலத்தில் இந்த ஆசியஅபிவிருத்திகளை நிர்மூலமாக்கவே மேற்குலக ஏகாதிபத்தியங்கள் புலியை உருவாக்கி உரமூட்டி வளர்த்தன. இதுவரை அதைக் காப்பாற்றவும் முனைகின்றன.

புலியின் ஏகாதிபத்திய அடிமைத்தனக் கொள்கை மிகவும் அம்மணமானது, ஒளித்து மறைக்க முடியாதது. 2002 இல் வன்னியில் நடைபெற்ற ஒரேயோரு உலக ஊடகவியலாளர் மகாநாட்டில் பிரபாகரனும் பாலசிங்கமும் தமது பொருளதாரக் கொள்கை சுதந்திர வர்த்தகமென்றே கூறினர். யாரோடு புலி என்ன வர்த்தகத்தை செய்யப் போகிறது??? உலகச் சந்தையில் சுதந்திரமாகப் போட்டி போடக் கூடிய ஏதாவது தொழிற்துறை, மற்றும் விவசாயப் பொருட்களைப் உற்பத்தி செய்யக் கூடிய தொழிற்துறைச் சாதனங்கள் எதையும் புலி ஏற்படுத்தி வைத்திருக்கிறதா?

புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள வன்னிக்குள் ஒரு பெட்டிக்கடைகூட இருந்ததற்கான சான்றுகள் எதுவும் வெளிவரவில்லை. மாறாக அழிவிற்கான ஆயுதக்கிடங்குகளே அங்கு காணப்படுகின்றன. மேற்குலக அகதித் தமிழ் மக்களிடமிருந்து கசக்கிப்பிழிந்து கறந்த காசுகளாலும் புலிகளின் மாபியா மண்கொள்ளைகளாலும் பெற்ற செல்வத்தால் ஒரு சின்னத்தொழிற்சாலையைக்கூடப் போட்ட அடையாளம் ஏதும் தெரிய வில்லை. சுனாமிப் புனருத்தாரணத்திற்கென்று கொடுத்த காசுமுழுவதிலும் ஒரு ஓலைக் கொட்டிலைக்கூடப் புலி தமிழ்ப்பகுதிகளில் போடவில்லை.

இப்படி நிலமை இருக்கும் பொழுது புலிக்கு ஏன் சுதந்திர வர்த்தகம்? ஓரேயொரு காரணம் தான். ஏகாதிபத்தியங்களுக்கு எமது உள்நாட்டுச் சந்தையைத் தடையின்றித் திறந்துவிடுவதைத்தவிர வேறு என்ன நோக்கமாக இருக்க முடியும்?

இன்று எந்தத் தேசிய விடுதலை இயக்கங்களும் முதலாளித்துவ முரண்பாடுகள் உள்ள முதலாளித்துவ அமைப்பு முறைக்குள் ஏதோ ஒரு முதலாளித்துவத்தைப் பற்றிப் பிடிக்காமல் வளர்ந்தது கிடையாது.

மேற்கு நாடுகளில் சிலபல கிழமைகளாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், தீக்குளிப்புப் போராட்டங்கள், மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்கள், இலங்கைத்தூதரகங்களை உடைத்தது, மற்றும் பேர்ளினிலுள்ள மக்கள் சீனத் தூதரகத்திற்கு முட்டை அடித்தது ஏதும் தற்செயல் நிகழ்ச்சியல்ல.

இத்துடன் இந்திய, ஜப்பானிய, இந்தோனேசிய, ஈரானிய, ரஸ்சிய எதிர்ப்புகளும் புலிப் பாசிச ஊடகங்களால் பேசப்பட்டன. இன்றய உலக வர்த்தகப் போட்டியில் சீனாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வது மேற்கு ஏகாதிபத்தியங்களுக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். ஆசியர்களைக் கொண்டு ஆசியர்களையே எதிர்ப்பிக்கும் அரசியலாகும்.

யூகோஸ்லோவியாவை ஏகாதிபத்தியங்கள் ஆக்கிரமித்த போதும், மக்கள் சீனத் தூதரகத்திற்கு அமெரிக யுத்த விமானம் குண்டு வீசி தூதரக இராஜதந்தரிகள் கொல்லப்பட்டது வரலாறு. அந்த யுத்தத்தின்போது புலிகள் நேட்டோவுக்கு ஜே. கொசோவாவுக்கு ஜே என்றே வாய்கிழியக் கத்தி நேட்டோ ஆக்கிரமிப்பை ஆதரித்தனர். தற்போதும் கோசோவா போலத் தமிழ் ஈழத்தையும் இலங்கையிலிருநது நேட்டோ விடுதலை செய்ய வேண்டுமென்று தமிழ் ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன.

பயங்கரவாத இயக்கமென்று தடைசெய்யப்பட்ட புலிகளியக்கத்தை மேற்குலகங்கள் எந்தவித பொலீஸ் அனுமதியுமில்லாமல் இவ்வாறான தொடர் போராட்டத்திற்கு எவ்வாறு அனுமதிப்பார்கள்? இன்றும் ஐரோப்பாவில் ஆர்ப்பாட்டம் செய்த குர்டிஸ்தேசிய விடுதலை இயக்கத்தின் அங்கத்தவர்கள் தடைசெய்யப்பட்ட தமது இயக்கத்தின் கொடியை வைத்திருந்த குற்றத்திற்காக சிறைகளில் வாடுகிறார்கள். அல்கைடா இயக்கத்தையும் காமாசையும் எந்த மேற்கு ஏகாதிபத்தியங்களும் இப்படி ஒரு ஆர்ப்பட்டத்தைச் செய்ய அனுமதிக்குமா என்று கேட்டுப் பார்த்தால் உண்மை விளங்கும்.

1983ல் புலிப் பாசிசவாதிகள் தின்னவேலியில் 13 இராணுவத்தைக் கொன்று ஆத்திரமூட்டி இனக்கலவரத்தைத் தொடக்கிவிட்டு சிங்களவன் அடிக்கிறான் என்று குய்யோ முறையோ என்று கூச்சல்போட்டுக் கொண்டு இந்திய முதலாளிகளிடம்; சரணாகதி அடைந்தார்கள். 1987 இல் இந்தியா அடிக்குதென்று சொல்லிக் கொண்டு பிரேமதாசாஊடாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திடமும் தஞ்சம் புகுந்தார்கள். 1995ல் யாழ்பாணத்தைவிட்டு வன்னிக்கு ஓடினார்கள். இன்று இதன்விழைவு பிரபாகரன் சுடுகிறான் என்று சொல்லிக்கொண்டு மீண்டும் இலங்கை ஆயுதப்படைகளிடம் ஓடுகிறார்கள். ஓடினார்கள் ஓடினார்கள் பிற்போக்கின் அந்தலைக்கே ஓடினார்கள்.

தமிழினத்தின் ஓட்ட அவலங்களை விபரிக்க முடியாத போதும் அதற்கான மூலகாரணம் நடுத்தரவர்க்கத் தமிழர்களால் கைவிடப்பட முடியாத ஏகாதிபத்தியத்தை அடிவருடும் மனப்பான்மைதான் என்றே கூறலாம்.

கடந்த மூன்று தசாப்தங்களாகச் செய்த தியாகங்களும் செலவழித்த காசுகளும் பலதரம் விடுதலையைப் பெறப் போதுமானதாகும். ஆனால் வரலாற்றைப் பின்நோக்கி இழுக்கும் அவர்களது அரசியலாலேயே இந்த ஒருபோதும் ஈடுசெய்ய முடியாத அவலங்கள் ஏற்பட்டுள்ளன. முழு இலங்கைத் தீவும் அதன் சகல இனமக்களும் புகலிடத்தமிழர்களின் நடவடிக்கைகளால் பயணம் வைக்கப்பட்டுள்ளனர்.

அடுத்துச் செய்வதென்ன?

தமிழ் மக்களுக்கென்று ஒரேயொரு ஆயுதந்தான் உள்ளது. அது சிங்கள முஸ்லீம் தமிழ் அனைத்து மக்களும் இணைந்த ஒரு புரட்சிகர அமைப்பைத் தோற்றுவிப்பது ஆகும். முதலாளித்துவ அமைப்புமுறை இருக்கும் வரைக்கும் ஒடுக்குமறை, சிறைவாசம,; இரத்த ஆறு, வறுமை, நோய,; வேலையில்லாத் திண்டாட்டம், கல்வியின்மை, வீடின்மை போன்ற இன்னோரன்ன துன்பங்களே நித்தியவரமாகக் கிடைக்கும்.

"ஆட்சிஅதிகாரத்திற்கான போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்திற்கு அவர்களது புரட்சிகர ஸ்தாபனத்தைத் தவிர வேறு ஆயுதம் கிடையாது. முதலாளித்துவ உலகத்தில் உள்ள அராஜகப் போட்டியானது மூலதனத்தின் கட்டாயவேலையால் வீழ்ந்துபட்டு தொடர்ந்து பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆதரவற்று காட்டுமிராண்டித் தனத்துள் வீழ்ந்து உருக்குலைந்து போன பாட்டாளிவர்க்கம் தவிர்க்க முடியாமல் மாக்ஸ்சியவிதிக்கிரமங்களோடு தத்துவார்த்த ரீதியில் ஐக்கியப்பட்டு அதன் ஸ்தாபனத்தோடு சடத்துவரீதியில் பிணைக்கப்பட்டுக் கெட்டியாக்கப்பட்டால் மாத்திரம்தான், அதாவது மில்லியன் கணக்கான பாட்டாளிகளோடு ஸ்தாபனரீதியில் அணிவகுக்கப் பட்டால் மாத்திரம் தான் வெல்லமுடியாத சக்தியாக முடியும்." --என்று லெனின் „என்னசெய்ய வேண்டும்' என்ற நூலிற் குறிப்பிடடுள்ளார்.

மனிதவராலாற்றில் இன்றிருப்பது போல உள்முரண்பாடுகளும் சர்வதேச முரண்பாடுகளும் நிறைந்ததாக வரலாறு ஒருகாலமும் இருந்ததில்லை. பாராளுமன்ற ஜனநாயகமானது சுதந்திரமான வர்த்தகப் போட்டியோடும் சுதந்திரமான உள்நாட்டு வர்த்தகத்தோடும் நீக்கமறப் பிணைந்துள்ளது. இது சுமுகமாக நடைபெறுங்காலங்களில் முதலாளித்துவமானது சுதந்திரமாக வேலைநிறுத்தம் செய்வதையும, சுதந்திரமாகக் கூட்டங்கூடுவதையும் பத்திரிகைச் சுதந்திரத்தையும் சகிக்கும். அதாவது பொருளாதாரமானது மேல் நோக்கி வளரும்பொழுதும், வர்த்தகமானது மேலும் மேலும் வளர்ந்து செல்லும்பொழுதும் மாத்திரமே வெகுஜனங்களுக்கான சமூக சேவைகளை அரைகுறையாக வென்றாலும் அனுமதிக்கும். அப்பொழுது மாத்திரமே முதலாளித்துவ தேசங்கள் வாழும். மற்றவரையும் வாழவிடும். இப்பொழுதோ எல்லாமே தலைகீழாகவும் தவிடுபொடியாகவும் ஆகிவிட்டன. முதலாளித்துவப் பாதுகாப்பு வால்வுகளெல்லாம்(எயடஎந) வெடித்துச் சிதறிவிட்டன.

சர்வதேசரீதியாக மூலதன வங்கிகள் பல திவாலாகிவிட்டன. பல நட்டமடைந்து கொண்டிருக்கின்றன. பங்குச் சந்தைகள் பொறிந்து கொண்டே இருக்கின்றன. தொழிற்துறை உற்பத்திப் பொருட்கள் விற்கமுடியாமற் தேங்குகின்றன. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. வேலையில்லாத்திண்டாட்டம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றது. நுகர்திறனும் விலைக்குவாங்கும் சக்தியும் வீழ்ந்துவிட்டன. வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளிலேயே மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். உற்பத்திச் சக்திகள்பெருகி அதீத உற்பத்தியால் சந்தைகள் திமிறுகின்றன. மேற்கு நாடுகள் தமது தொழில்நுட்ப மேலாண்மையை இழந்ததால் பழைய காலனி நாடுகளுக்குத் தொழிற்துறைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் சுரண்ட முடியவில்லை.

ஒட்டுமொத்த முதலாளித்துவ முறையே வெடித்துச் சிதறுகிறது. மூன்று சகாப்தத்திற்கு மேலான உள்நாட்டு யுத்தத்தால் இலங்கைத்தேசமே நிர்க்கதியாக இருக்கிறது. இத்தனை வரலாற்று மாற்றங்களையும் தமிழ்மக்களுக்கு விளங்கவிடாதபடிக்குச் செய்ததாலேயே இவ்வளவு அழிவுகள் ஏற்பட்டது என்பதே கடைசி ஆய்வில்வெளியாகும். உப்புக் கல்லை வைரமென்று சொன்னால் அதை ஒத்துக் கொள்ளும் மட்டத்திற்கே தமிழ்மக்களது சமுக உணர்வும் அறிவைப் பெறுவதற்கான அறிதிறனும் மழுங்கடிக்கடிக்கப்பட்டது.

கடந்த சில தினங்களாக அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் விடுத்த அறிக்கைகளை நடந்துமுடிந்த சரித்திரத்தோடு ஒப்பிட்டுச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். தமிழ் மக்களின் உடலங்கள் கிழிந்த அதே நேரத்திலேயே முதலாளித்துவங்களின் முகமூடிகளும் கிழிந்து அம்பலமாகின. 1971 முதல் லட்சக் கணக்கான தமிழ் முஸ்லீம் சிங்கள மக்களை இரைகொடுத்துத்தான் இலங்கையில் முதலாளித்துவம் தக்கவைக்கப்பட்டது.

2002 வன்னியில் நடந்த சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் பிரபாகரனும் பாலசிங்கமும் இதை நன்றாகவே தெளிவாக்கியிருந்தனர். உங்களது பொருளாதாரக் கொள்கை என்னவென்று கேட்ட கேள்விக்குப் பிரபாகரனும் பாலசிங்கமும் சுதந்திர வர்த்தகமென்றே மிகஅறுத்துறுத்திக் கூறினர். அதனோடு நில்லாது தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தொழிலாளிவர்க்க இயக்கங்களே இல்லையென்று மிகத் திமிரோடு கூறினார்.

இன்று மேற்குலகெங்கணும் தமிழர்களால் நடாத்தப் பெற்ற ஜனநாயக மனித உரிமைபேணல் கேலிக் கூத்துகளெல்லாம் ஓரளவுக்கு முடிவுக்கு வந்துள்ளன. எந்த மட்டத்திற்கு முக்கி முக்கி தமிழீழம் தாயகக்கோட்பாடு என்று கத்துகிறார்களோ அந்தமட்டத்திற்கு அவர்களுக்கு முதலாளித்தவத்தைக் காப்பாற்றும் விசர்பிடித்துள்ளது.

அன்றியும் அமெரிக்க, ஐரோப்பிய மேற்குலக ஏகாதிபத்தியநாடுகள் எல்லாம் இலங்கை அரசாங்கத்தை மிக மூர்க்கமாக எதிர்க்கும் பொழுதும், மிகச்சிறிய கடனாளியான இலங்கை அரசு யுத்தத்தில் வெல்வதன் ஒரே காரணம், வரலாறு கண்டு கேட்டிராத தமிழ் மக்கள் மேலான புலிப்பாசிசத்தின் ஒடுக்குமுறையானது தமிழ் மக்களை இலங்கை அரசாங்கத்தின் பக்கம் கொண்டு வந்துவிட்டுள்ளதாகும்.

புலிக்கட்டுப்பாட்டு நரகத்திலிருந்து வந்த தமிழ் மக்கள் இலங்கை இராணுவத்திடம் தண்ணிக்கும் உணவுக்கும் கையேந்துகின்ற உள்ளம் உருக வைக்கும் காட்சியானது , தமிழ் மக்களின் ஆத்மா எந்தமட்டத்திற்கு சாகடிக்கப்பட்டிருக்கிறது என்பதை சொல்லும். புலிகள் காலம் முழுதும் செய்த கொடுமைகள் எந்தப் பொய்ப்பிரசார மொங்கானாலும் சமரசப்படுத்த முடியாது.

புலியின் தோல்விக்கான ஒரேகாரணம் வன்னியிலுள்ள தமிழ்மக்களின் எந்த ஆதரவும் புலிப்பாசிசத்திற்கு இல்லை என்பதாகும். ஏகாதிபத்தியங்கள் புலிதான் தமிழ்மக்களின் பிரதிநிதி என்று சொல்வது மிக நகைப்புக்கிடமான செய்தி மாத்திரமல்ல அதை வரலாறும் ஏற்றுக் கொள்ளாது. ஓரு காலத்தில் வன்னியிலுள்ள ஒருபகுதித் தமிழ் மக்கள் புலியை ஆதரித்திருக்கலாம். அது செத்துப்போன வரலாறு. கறந்தபால் மீண்டும் முலை புகாதது போன்ற வரலாறு.

At a daily press briefing on Friday US State Department spokesman Robert Wood had stated, “”The Tamil Tigers must stop holding civilians and thus placing them in harm’s way. We call on the Tamil Tigers to lay down their arms and surrender to a third party.” Yet, the US State Department has not specified who the third party is, media reports stated.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசாங்க பேச்சாளரான றோபேட் வூட் புலி களை மூன்றாவது தரப்பிடம் சரணடைய விடவேண்டும் என்று கேட்டுள்ளார். அது எந்த மூன்றாவது இடம் என்று கூடச் சொல்லவில்லை. அது நோர்வேயா? அமெரிக்காவா? இலங்கை அரசாங்கம் அல்கைடாவை இலங்கையிடம் சரணடைய விட வேண்டும் என்று கேட்டால் அதை அவர்கள் ஒத்துக் கொள்வார்களா? ஐறிஸ் பிரச்சனையில் இலங்கை தலையிட்டு சமாதானம் பேச பிரித்தானிய ஒத்துக் கொள்ளுமா? இதே பாணியிலேயே பிரத்தானிய பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களதும் தலையீடுகள் தர்க்கத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது.

கொழும்பிலே லட்சக்கணக்கான தமிழ்மக்கள் வாக்களித்ததினாலேயே கொழும்பு மாவட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி 42 ஆசனங்களில் 25ஐ கைப்பற்றியுள்ளது. காலங்காலமாகத் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் வாழும் பிரதேசங்களில் யூஎன்பி வெல்வதுதான் வழமை. ஆனால் இம்முறை தமிழ் முஸ்லீம் மக்கள் மூன்றில் இரண்டுபகுதியுள்ள கொழும்பு மாவட்டத்தில் மக்கள் ஐக்கிய முன்னணி வெற்றியீட்டியுள்ளது. தேர்தல்கள் வர்க்கத் துருவப்படுத்தலை அளந்துகாட்டும் அளவுமானியாகும்.

புதிய உலக பொருளாதார நெருக்கடி தோற்றுவித்த தாக்கங்களால் பழைய சமுதாய உறவுகளானது குலுங்கிக் கொட்டுப்பட்டு சிதறடிக்கப்பட்டுள்ளது. சமூகம் மீண்டும் புதிய முறையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளது. மேற்குலகங்களின் பொருளாதார அரசியற் தோல்வியே புலியைத்தோற்க வழிவகுத்தது.

பழைய புலியான கருணா சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உபதலைவர் ஆனது ஏதும் தற்செயலான நிகழ்வுப் போக்கல்ல. இந்தப் புதிய வர்க்க தகவமைப்பின் ஒரு பகுதியாகவே இது நடைபெற்றது என்பதுவே இயங்கியலாகும்.

தமிழ் மக்கள் இந்த மூன்று சகாப்த அனுபவங்களால் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பது போலப் பாவனை செய்து அவர்களை மீண்டும் பழைய சிங்கள விரோத இனவாத அரசியலில் தள்ள முயல்பவர்கள் தோல்வியடைவர். மேற்குலக ஏகாதிபத்தியங்களே தமிழ்மக்களது இரட்சகர்கள் என்று கூறிய தமிழ் கூலிகளது பேச்சை உண்மையென்று நம்பியதாலேயே தமிழ் இனம் தன்னைத்தானே அழித்துக் கொண்டது.

புலி தோற்றது இலங்கை இராணுவத்தின் பலத்தினால் அல்ல. புலிக்குள்ளே ஏற்பட்ட உள் முரண்பாடே புலியை உள்ளுக்குள்ளிருந்தே அழுகச் செய்தது. வன்னியிலிருந்து தப்பி வரும் நெஞ்சைத் தீயவைக்கும் காட்சிகள் எவரையும் உருக வைக்கும். இந்த மக்களின் சொல்லவொண்ணாத் துயரங்கள் அவர்களை அடக்கியாண்ட புலி இயக்கத்திலே பிரதிபலித்ததால் ஏற்பட்ட சமுக நெருக்கடியாலேயே புலி தோற்றது.

யுத்தவரலாறுகளும் போற்கலை நுட்பங்களும் சமுகநெருக்கடி ஏற்படாமல் பேணப்படும்போதுதான் வெற்றியைப் பெற்றுத்தரும். மக்கள் ஆதரவு என்ற அத்திவாரம் இல்லாதாலேயே புலிப்பாசிசம் படுதோல்வி அடைந்துகொண்டிருக்கிறது.

1914, 1929 உலகபொருளாதார நெருக்கடிகள் எவ்வாறு முதலாம் உலக யுத்தத்தைத் தோற்றுவித்ததோ, அதே போலவே இன்றய உலக முதலாளித்துவ நெருக்கடியானது மூன்றாமுலக யுத்தத்தைத் தோற்றுவிக்கும் தறுவாயில் உள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து முதலாளித்துவத்தால் இலகுவில் மீளமுடியாது.

றோசா லுக்ஸ்சம்பேர்க் கூறியாங்கு முதலாளித்துவ சமுதாயத்தில் யுத்தம் வருவது தவிர்க்க முடியாத சமூக விதியாகும். முந்திய இரண்டு யுத்தங்களும் ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் காலனிகளை மறு பங்கீடு செய்வதற்கான யுத்தமாகவே தோன்றி முடிந்தன. தற்போதய யுத்தமானது ஆசிய முதலாளித்துவத்திற்கும் மேற்குலக முதலாளித்தவத்திற்குமிடையேயே தோன்றும். சனத்தொகை கூடிய, நுண்தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொண்ட மூலதனத்தைத் திரட்டிக் கொண்ட, மலிவு உற்புத்திசெய்யக் கூடிய ஆசிய உற்பத்திகளோடு மேற்குநாடுகள் சுதந்திர சந்தைப் போட்டியில் வெல்லமுடியாது. ஐரோப்பா ஏற்கனவே தனது நுகர்வுச் சக்தியை இழந்து கீழ்நோக்கி போய் கொண்டிருக்கிறது.

இதன் ஒரு பாகமாக ஈராக் ஆப்கானிஸ்தான் யுத்தங்கள் வெடித்தன. ஏற்கனவே அமெரிக்கப் படைகள் பாகிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கி விட்டன. அது மேலும் இந்தியாவக்குத் தொற்றுவது தவிர்க்க முடியாதது;. ஆதலால் ஆசியவை ஸ்த்திரமடைய விடாமல் வைத்திருப்பது மேற்குலக ஏகாதி பத்தியங்களின் கட்டாய தேவையாகும். இந்த முன்னோக்காலேயே மேற்கு ஏகாதிபத்தியங்கள் தங்களின் வாழையடிவாழையான ஏகாதிபத்திய ஏவல்சக்திகளான ஆங்கிலம்பேசும் யாழ்ப்பாண நடுத்தரவர்க்கத்தை முடுக்கிவிட்டு ஆர்ப்பாட்டங்களையும் செய்விக்கின்றன.

போதாதற்கு தமிழ்மக்களைக் கண்டுகேட்டிராத மட்டத்திற்கு ஒடுக்கும் புலிப் பாசிசத்தைக் காப்பாற்றப் பகீரதப் பிரயத்தனம் எடுக்கின்றன. இதற்காக சர்வதேச என்.ஜி.ஓக்கள் பூர்வாங்க வேலைகளைச் செய்துகொண்டிருகின்றன. புலி அரசியல்வானுக்கு வந்து மூன்று தசாப்தங்களாகத் தனது எதிர்ப்புரட்சிக் கைங்கரியத்தைப் பூர்த்திசெய்து திவாலாகிப் போய் அரசியல் வானைவிட்டு அகல இருக்கும் இந்தநிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அரசாங்கப் பேச்சாளர் றொபேட் வூட் புலியை ஏதோ ஒரு மூன்றாம் தரப்பிடம் சரணடைய விடவேண்டும் என்று இறமையுள்ள இலங்கை அரசை நிர்ப்பந்திக்கின்றார்.

அதன்மூலம் புலிப் பாசிசத்தைக் காப்பாற்றி மீண்டும் அதன் எதிர்ப்புரட்சி ஏகாதிபத்திய வேலையத் தொடரச் செய்ய முயற்சிக்கின்றார். புலிப்பாசிவாதிகளையும் அதன் வெளிநாட்டு உள்நாட்டு ஏஜண்டுகளையும் இலங்கைமக்கள் நீதிவிசாரணைக் குழுவுக்கு முன்னால் நிறுத்த வரலாறு அவகாசம் வழங்காத துர் அதிஷ்டம்தான். ஆனால் ஏகாதிபத்திய்ங்களிடம் புலியை ஒப்படைபது புலியைப் பாதுகாத்து மேலும் எதிர்ப்புரட்சியைத்தொடரவிட வழிவகுப்பதாகவே முடியும்.

இலங்கைத்தொழிலாளி வர்க்கத்ஸ்தாபனங்கள் தமது பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாத முன்னோக்கைவிடுத்து தேசிய வேலைத்திட்டத்தினுள் மூழ்கித் தம்மைக் கெடுத்ததிலிருந்து மீண்டுள்ள இந்நிலையில் தமிழ் மக்களுக்கு மேலும் சிங்கள இனவாதிகளால் வரும் ஆபத்துக்கள் மருவிவிட்டன.

இப்பொழுது ஒன்றைமட்டும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். சோஷலிச இயக்கங்கள் முதலாளித்துவ ஜனநாயகத்தோடு சோரம்போகமல் தமது வர்க்க சுயாதீனத்தை எப்பாடுபட்டும் பாதுகாக்க வேண்டும். ஆனால் ஜனநாயகத்தின் தலைவிதியானது சோஷலிசத்தின் வளர்ச்சியில் மாத்திரம்தான் தப்பிப்பிழைக்கும். தொழிலாளிவர்க்கம் தனது விடுதலைக்காகப் போராடாது விட்டால் ஜனனாயகம் என்பதை நினைத்தே பார்க்க முடியாது.

அதேநேரத்தில் சோஷலிச இயக்கங்கள் பலமடையும் பொழுது ஜனநாயகம் பலமடைவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகமாகும். எவர் ஜனநாயகத்தைப் பலமடையச் செய்ய விரும்புகிறார்களோ அவர்கள் சோஷலிசத்தைப் பலவீனமடையவிடாமல் மாறாகப் பலமடைய வைக்க வேண்டும். எவர் சோஷலிசத்திற்கான போராட்டத்தை உதறித்தள்ளுகிறார்களோ அவர்கள் ஜனநாயகத்தை உதறித்தள்ளுபவர்களாகும்.

Read more...

வெடி பொருட்களுடன் வந்த மூன்று புலிகள் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புலிகள் இயக்க சந்தேக நபர்கள் மூவர் மன்னார் பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் கைது செய்யப் பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

பத்து கிலோ எடை யுள்ள அதிசக்தி வாய்ந்த சி- 4ரக வெடிமருந்து, இர ண்டு கைக்கண்டுகள் மற்றும் வெடிக்க வைக்கும் கருவி ஒன்றையும் இவர்கள் மூவரிடமிருந்து படையினர் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தின் பிடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

Read more...

வன்னி மக்களுக்கு சோறு மட்டும் போதுமா ? - யஹியா வாஸித் -

இறைவன், கடவுள், அல்லாஹ், யேசு என ஆயிரம் கடவுள்களை பற்றி ஒவ்வொருவரும் பீத்திக் கொண்டாலும் எல்லாக்கடவுள்களும் ஒரு விடயத்தில் கொஞ்சம் விதண்டாவாதம் பண்ணிக் கொண்டுதான் இருப்பார்கள். நல்ல ஒரு பக்தன், இரவு பகலாக அவனை பூஜிக்கின்ற பக்தன் கிடைத்து விட்டால் போதும். அவனை சோதிக்கின்றோம் பேர்பழி என கூறிக்கொண்டு அவனை பரதேசியாக்கி இறுதியில். பக்தா உன் பக்தியை மெச்சினோம். இந்தா பிடி கேட்டவரம் என பார்வதி, பரமேஸ்வரன் சகிதமாக ஜெகஜோதியாக வந்து அருள் பாலித்து விட்டு கம்முன்னு போய்க் கொண்டே இருப்பார்கள். அதற்கிடையில் நமக்கு கடன் தந்தவன் எல்லாம் வந்து நம் உள்ளங்களை எல்லாம் நொருக்கிய கதை அவர்களுக்கெங்கே தெரியப் போகின்றது. இப்போது மொத்த கடவுள்களும் ( எமன்,இஸ்ராயில் அலைவஸ்ஸலாம்) வன்னியில் கேம்ப் போட்டு உட்கார்ந்து கொண்டு திருவிளையாடல் நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.

வீட்டில் தான் பெற்ற மகன் இறந்து கிடக்கின்றான். மகனை அடக்கம் செய்ய வழி தெரியாமல்
தாய் திணறிக் கொண்டிருக்கிறாள். திருநாவுக்கரசர் வந்து கதவை தட்டி தாயே பசிக்கிறது உணவு இருந்தால் தர முடியுமா என கேட்க. பிணத்தை மூடி வைத்துவிட்டு திருநாவுக்கரசருக்கு ஒரு தாய் உணவு படைக்கிறாள். அதே கடவுள் வைரவர் கோலத்தில் வந்து ஒரு தாயிடம் எனக்கு மனித தலைக் கறி வேண்டும் என்ற போதும் மகனை கொன்று தலைக்கறி செய்து இன்னும் ஒரு தாய் கொடுக்கின்றாள். இங்கே ஹிந்துக் கடவுள்கள்தான் இப்படி என்றால் இப்றாஹீம் (அலை) அவர்களிடம் அல்லாஹ் உனது மகன் இஸ்மாயில் (அலை) அவர்களை காலையும் கையையும் கட்டி கழுத்தை அறு என உத்தரவிடுகின்றார். இப்படி ஒவ்வொரு கடவுள்களும் திருவிளையாடல்களை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.

எந்த ஒரு விடயத்தையும் ஒரு முறைக்கு பல முறை திட்டமிட வேண்டும் என்பதற்கு பாரிய உதாரணம் இப்போது வன்னியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. கெரில்லாப் படங்களையும்,
ரோபோக்களையும் பார்த்துவிட்டு துப்பாக்கி சனியன்தான் இனி கடவுள் என கேடு கெட்டத்தனமாக முடிவெடுத்தெதால் வந்த விளைவு ஒரு சமூகத்தை, ஒரு கூட்டத்தை, ஒரு மனிதப் பட்டாளத்தை எவ்வாறு கஞ்சிக்கில்லாதவர்களாக்கி உள்ளது பார்த்தீர்களா. மனித நேயம்.., மனித நேயம்.., மனித நேயம்.. என்ற ஒரு கூப்பாடு எப்போது உன்னிடம் குடி கொள்கின்றதோ, உன் அடி மனதை ஆட்கொள்கின்றதோ அப்போதிருந்து நீர்தான் முதல் குடிமகன். நீர்தான் தலைவன். நீர்தான் தொண்டன். உனக்குத்தான் முதல் சொர்க்கவாசல் திறக்கப்படும் என அனைத்து வேதங்களும் பறைசாற்றுகின்றன. கடவுளை மற. மனிதனை நினை என்ற அனைத்து சோஷலிச, கலப்பு, முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களும் இதையேதான் எழுதி, சொல்லி, நடாத்தி காட்டி விட்டு சென்றனர்.

அதனால்தான் மகாத்மா வாழ்கின்றார். மா ஓ செத்தும் சைனாவை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றார். புத்தன் பாரிஜாதம் பண்ணிக் கொண்டிருக்கின்றார். முகம்மது நபி உலாவந்து கொண்டிருக்கின்றார்.

இந்த வருடத்தை மாவீரர் வருடமாக்காமல் கொஞ்சம் வன்னி மனிதப் புனிதர்களுக்கு கை கொடுக்கும் வருடமாக சிந்திப்போம். இப்போது அவர்களுக்கு உணவு தேவை, உடை தேவை, உறைவிடம் தேவை என அடுத்த கட்டத்தை நோக்கி அனைவரும் புறப்படத் தொடங்கி விட்டனர். இதை அரசும், ஏனைய அமைப்புக்களும் பார்த்துக் கொள்ளட்டும். பார்த்துக் கொள்வார்கள். இது அவர்களது கடமையும் கூட. இது எனது நாடு இந்நாட்டு மக்கள் அனைவரும் எனது பிரஜைகள் என மூச்சுக்கு முன்னூறு தடைவ சொல்லும் திரு.மகிந்த ராஜபக்ஷ அவர்கள் நிச்சயம் பார்த்துக் கொள்வார் என நம்புவோம். இல்லை செய்ய மாட்டார். ஒன்றுமே செய்ய மாட்டார் என ஏன் இப்போதே அடம் பிடிக்க வேண்டும். கொஞ்சம் விட்டுத்தான் பார்ப்போமே.

செய்வார். செய்து புழுத்துவார், செய்து கிழி கிழி என கிழிப்பார் என்று இலவுகாத்து கடைசியில் பங்கர் பங்கராக செய்து வைத்துள்ளதைத்தான் கடந்த சில மாதங்களாக பார்க்கின்றோமே. சேர்த்த பணத்தில் கொலகந்த கஞ்சி (சிங்கள கிராமங்களில் பொன்னாங்கண்ணி போன்ற ஒரு வகை கீரையால் கஞ்சி செய்து வீதிகளில் இலவசமாக வினியோகிப்பர்) தொட்டிகள் கூட செய்து வைக்கவில்லையே.

நாம் வியாபார நோக்க முள்ளவர்கள்தான். இன்று அரசியலும் ஒரு வியாபாரம்தானே. ஏன் நாம் சற்று வித்தியாசமாக அரசியல் வியாபாரம் பற்றி சிந்திப்போமே. அந்த மக்களின் கல்வி, விளையாட்டு, வளமுள்ள எதிர்காலம் பற்றி யோசித்தால் என்ன.

நிலா நிலா ஓடி வா.
நில்லாமல் ஓடி வா.
மலை மேல் ஏறி வா.
மல்லிகைப் பூ கொண்டு வா.

என்று போன வாரம் இந்த யுத்த சூழ் நிலையிலும் ரி.வீக்களில் மழலை பேசிய அந்த வன்னி சின்னஞ்சிறு குழந்தைகளின் எதிர்காலம் இனி ஒரு போதும் சூனியமாகிவிடக் கூடாது என ஒரு சொட்டு சிந்திப்போமே.

இன்று புலம் பெயர் நாடுகளில் உண்ணாவிரதம், கொடி பிடிப்பு, முடிந்த முடிவு தமிழீழம் என கனாக்காணும் அண்ணாக்கள், அக்காக்கள், இளையோர்களே உங்களது பேச்சுக்களையும் உணர்ச்சிகளையும் பார்க்கும் போது உங்களுக்கு எல்லாமே தெரியும் போல் தெரிகிறது. பிளீஸ் ஒரு தடைவ லண்டன் எக்ஸல் எக்ஸிபிஸன் சென்டரில் அடுத்த வாரம் ஒரு கொம்பியூட்டர் எக்ஸிபிஸன் நடக்க இருக்கிறது. அங்கு விதவிதமான லேட்டஸ்கொம்பியூட்டர்களும், யூஸ்ட்கொம்பியூட்டர்களும் விற்பனைக்கு வர இருக்கிறது. பிளீஸ் இரத்தத்தின் இரத்தங்களே.பிளீஸ். பணத்தை பணமென்று பார்காமல் கொஞ்சம் கொம்பியூட்டர் வாங்கி அந்த சிறுசுகளுக்கு அனுப்பிவையுங்கள்.

இல்லை இலவசமாக அனுப்ப முடியாது என்றால் கூட. குறைந்த விலைகளில் அவைகளை வாங்கி இரண்டு அல்லது மூன்று வருட இன்ஸோல்ட்மென்ட்(மாதக்கட்டண) அடிப்படையிலாவது அனுப்பி வையுங்கள்.

அந்த வன்னி மக்கள் ரொம்ப நல்லவர்கள். இப்போது அவர்களை கடவுள்கள் சோதித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாளைக்கு அவர்கள் பீனிக்ஸாக வந்து வட்டியுடன் உங்கள் கடனை அடைக்கும் திறன் அவர்களுக்கு நிறையவே உண்டு.

அதுவும் உங்களால் முடியாவிட்டால் இப்போதே எக்ஸல் ஹோள் போய் கொஞ்சம் கொம்பியூட்டரை குறைந்த விலையில் வாங்கி வையுங்கள். இன்னும் கொஞ்ச நாளில் விடயமெல்லாம் உள்ளங்கை நெல்லி கனியாக உங்களுக்கு வெளிக்கும். அப்போது கிளிநொச்சி போய் குட்டி குட்டி ரியூட்டரிகள் திறந்து செய்த பாவங்களுக்காவது பிராயச்சித்தம் தேடுங்கள். உங்களை போல் அவர்கள் டோல் பணத்திலும், கவுன்ஸில் வீட்டிலும் வளர்ந்தவர்கள் அல்ல. அதுகளுக்கு தெரிந்த தெல்லாம் நாத்து நட்டு பயிர் வளர்த்தால் வாழலாம் என்பதே. பிளீஸ் கொஞ்சம் புண்ணியம் தேடுங்கள்.

கனடாவில் அடுத்த வாரம் பாரிய கைத்தொழில் பொருட்காட்சி( மே 1, ஆகஸ்ட் 12, அக்டோபர் 19) நடக்க இருக்கிறது. உங்கள் பிள்ளைகளும், இந்த இளையோரும் இங்கே ஐக்கிய நாடுகள் சபையையே அதிரச் செய்ய அங்கே தண்ணீர் குடித்து பல நாட்கள் என பேட்டிகள் தொடருகிறது. நீங்கள் சீபீபீசி யும், பாபா பிளக் சீப்பும் படித்து வளர்ந்தவர்கள். பாவம் அதுகள் படுக்க பாயின்றி அலைகின்றன. பிளீஸ் ஒருக்கா கனடா கைத்தொழில் பொருட்காட்சிக்குப் போய் சிறிய தொகையில் தொழில் ஆரம்பிப்பது எப்படி, நவீன முறையில் குட்டி குட்டி இயந்திரங்களை உருவாக்குவது எப்படி, தொழில் நுட்பம், ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப்பட்ட புத்தகங்களையும், குட்டிகுட்டி இயந்திரங்களையும் வாங்கி அவர்களுக்கு அனுப்பி வையுங்கள்.

அபலைகளின் சாபம் பொல்லாதது உடன் பிறப்புகளே. இவ்வளவு காலமும் அவர்களின் வாழ்வில் நாம் அசைலம் எடுத்து வாழ்ந்து விட்டோம். இனியும் அவர்களின் சாவில் நாம் வாழாமல் அவர்களின் விடிவில் பங்கு கொள்வோம். சோறும், தண்ணியும், உடையும் அரசும் என்ஜிஓக்களும் கொடுக்கட்டும். அவர்களது அடுத்த பத்து வருட வளர்ச்சி பற்றி எல்லாம் தெரிந்த நாம் கொஞ்சம் புத்தியை கிளறுவோம்.

இப்படித்தான் சுனாமியின் போது சோறு சோறு என சோறு சேர்த்தார்கள். கடைசியில் எக்கச் சக்கமான அரிசியும், பருப்பும், உடு புடைவைகளும் வீதிகளில் பொது மக்கள் ஏலம் போட்டு விற்கும் நிலைக்கு வந்தது. ஒரு வேளை சோற்றுக்கு வழி செய்ய ஆயிரம் பேர் புறப்பட்டு விட்டார்கள். நீங்கள் புத்திசாலிகள், புத்திஜீவிகள், போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லப்போகின்றவர்கள் என புலம் பெயர் நாடுகளில் கொத்தணிக்குண்டுக்கு விளக்கம் சொல்பவர்களே. அங்கு கொத்துக் கொத்தாக ஓலமிடும் அந்த ஜீவன்களுக்கு மூச்சுவிட வழி அமைத்து கொடுங்களேன்.

ஜெனிவா அடலேறுகளே இந்த ஆட்டத்தை எங்களுடைய பதினெட்டு வயதில் நாங்களும் ஆடினோம் புண்ணியவான்களே. இந்த ஆடு புலி ஆட்டம் சரி வராது என உங்கள் பரமாத்மா எங்களை எல்லாம் சுட்டுச் சாக்காட்டி, ஓட ஓட விரட்டி விட்டு. இப்போது அகிம்சை போராட்டம் என 20 வருடத்துக்கு பிறகு திருவாய் மலர்ந்தருளியுள்ளாரே. அகிம்சை போராட்டம் செய்ய உங்களுக் கென்ன கொழுப்பெடுத்தது. நீங்கள் தான் உலகையே உள்ளங்கைக்குள் கொண்டு வரக் கூடிய ஐ.ரி.உலகில் வாழ்பவர்களாயிற்றே. .உங்களுக்கும் ஒன்றுமே புரியலையா அல்லது தலைவரிஷம் தலைக்கேறி விட்டதா.

தம்பிகளா.. நாளை மறுதினம் ஜெனிவாவில் அங்கவினர்களுக்கான உபகரண கண்காட்சி ( மே 5. மே12. ஜூன் 12, நவம்பர் 17) தொடங்க உள்ளது. பிளீஸ் ஒருவாட்டி விசிட் பண்ணுங்கோ தம்பிகளா. புண்ணியம் தேடுங்கோ தம்பிகளா. காசிக்குப் போனாலும் இவ்வளவு புண்ணியம் கிடைக்காது. அகதிக்கு தெய்வம் நேரடியாக வந்து உதவுவதில்லை. அது மனித உருவில்தான் உதவும். போங்கள் தெய்வங்களா. போய் செய்த மொத்த பாவங்களுக்கும் புண்ணியம் தேடுங்கோ. காது கேளாதவர்களுக்கு, கண் தெரியாதவர்களுக்கு, கை கால் ஊனமானவர்களுக்கு, வாய் பேச முடியாதவர்களுக்கு, எழும்பி நடக்கவே முடியாதவர்களுக்கென நவீன உபகரணம் தயாரிக்கும் 487 கம்பனிகள் உலகம் முழுதும் இருந்து ஜெனிவா வர உள்ளன.

நீங்கள் நாட்டுக்கு நாடு புட்போல் கிளப் வைத்து வல்வை ரீம், மகஜன ரீம் என கொழுப்பெடுத்து அடிபிடி பட ஒன்றுமே தெரியாத ஒரு கூட்டம் சோத்துக்கு லாட்டரி அடிப்பதை மனக்கண்ணில் கொஞ்சம் துள்ளி விளையாட விடுங்கள். ஐயகோ அந்த தமிழச்சியின் பிள்ளை காதில்லாவிட்டாலும் நாளை அவள் செவிட்டு மெசினுடன் உலக அரங்குக்கு வர பிளீஸ் ஒருக்கா ஜெனிவா மெடிக்கல் அன்ட் ஓர்ப்பன்ஏஜ் எக்ஸிபிஸனுக்கு போங்கோ.

காது கேளாதவர்களும், வாய் பேச முடியாதவர்களும் உபயோகிப்பதற்கான மொபைல் போன் அளவிலான சிறிய கருவி, இரு கையும் இல்லாதவர்கள் இயக்கக் கூடிய கொம்பியுட்டர்,
கால் இல்லாதவர்கள் காலில் மாட்டிக் கொண்டு இயக்கக் கூடிய பொய்க்கால்கள்,
இசைக்கருவிகள், சிந்தனையை தூண்டக் கூடிய விளையாட்டு உபகரணங்கள், வீட்டில் உட்கார்ந்து கொண்டே குறும் படம் தயாரிப்பது எப்படி என ஆயிரம் உபகரணங்களும் விளக்க நூல்களும் அங்கு விற்பனைக்கு வரப் போகின்றது.

கத்திகளையும், துப்பாக்கிகளையும் தீட்டியது போதும். கொஞ்சம் புத்தியையும் தீட்டுங்கோ. ரொம்ப புண்ணியமா போகும். நீங்கள் உண்ணாவிரதம் இருந்து, கொடி பிடித்து உலகை பேச்சு வார்த்தை மேடைக்கு கொண்டுவரும் போது வன்னித்தமிழன் செத்து விடுவான். அவனுக்கு இனிஒரு ஜென்மம் எடுக்க முடியாது. எடுத்த ஜென்மங்கள் எல்லாம் போதும். நீங்கள் ஸ்கூள் லீவுக்கு வந்து கொடிபிடித்து விட்டு ஓடி விடுவீர்கள். அவளுக்கு அங்கு பாடசாலையே கிடையாது. நவீன பாட சாலை உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் என வாங்கி இலவசமாக அனுப்புங்கள் அல்லது குறைந்த விலைக்கு கொடுத்துதவுங்கள்.

317 விளையாட்டு கழகங்களை உலகம் முழுவதும் வைத்துள்ளீர்கள். இதுவரை கூடி கூத்தாடி இறுதியில் வெட்டுக் கொத்து பட்டுக் கொண்டு போவதைத்தான் கண்டுள்ளோம். தயவு செய்து நீங்கள் எல்லாம் சேர்ந்து நவீன விளையாட்டு உபகரணங்களை வாங்கி அனுப்பி அடுத்த ஒலிம்பிக்குக்கு இல்லாவிட்டாலும் 2016 ஒலிம்பிக்குக்காவது வன்னியில் உள்ள ஒரு சிறுசை கொண்டு வந்து நிறுத்தி மொத்த பாவத்துக்கும் பிராயச்சித்தம் தேடுங்கள். கேகல்ல காட்டில் பிறந்த ஒரு சுசந்திகா ஒலிம்பிக்கிக்கு வர முடியுமென்றால் எல்லாம் தெரிந்த உங்களால் ஏன் இரண்டு பேரை உருவாக்க முடியாது.

கடந்த 25 வருடங்களாக நாங்கள் செய்த இத்தனூண்டு பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேடிக் கொண்டிருக்கின்றோம். அதுவே இன்னும் முடிவதாக இல்லை. கடவுள் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றார். நீங்கள் மகா,மகா,மகா பாவங்கள் செய்துள்ளீர்கள், செய்து கொண்டிருக்கின்றீர்கள்.

பெல்ஜியத்திலும், பிரான்ஸ் லார்ச்சப்பிளிலும் முரண்டு பிடிக்கும் எதிர்கால விடி வெள்ளிகளே மே, ஜூன் மாதங்களில் இவ்விரண்டு நாட்டிலும் உணவு பொருட்காட்சி நடக்க இருக்கின்றது. இதில் கோழி முட்டையை உடைத்து காயவைத்து எவ்வாறு பவுடராக்குவது (எக் பவுடர் மேக்கிங் மெசின்) என்பது தொடக்கம் இறைச்சி வகைகளை உலர வைத்து பதப்படுத்தி சிறிய பொலித்தீன் பாக்கட்டுகளில் எவ்வாறு அடைப்பது என்பது வரை சிறிய ரக இயந்திரங்கள் வர இருக்கிறது. பிளீஸ் அண்ணாக்களே இவைகளை வாங்கி அனுப்பி உங்கள் கறைகளை போக்கிக்
கொள்ளுங்கள் முள்ளில்லா ரோஜாக்களே. உங்கள் கல்வியறிவு பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும் குழந்தைகளே. வெழுத்த தெல்லாம் பாலென்று நினைத்து விடாதீர்கள் பிஞ்சுகளே. ரொம்ப காலத்துக்கப்புறம் இந்த வன்னி மைந்தர்கள் பசுத்தோலுடன் உலாவருகின்றனர்.

உலகத்திற்கே துப்பாக்கி சனியனை விற்று பல லட்சம் மக்கள் முடமாக காரணமாக இருந்த
ஒரு வெள்ளையன். புத்தி தெளிந்து சிறிலங்கா வந்து ஜாஎல வத்தளையிலும், கண்டியிலிருந்து 32 மைல் தொலைவில் காட்டுக்குள் மலை உச்சியிலும் 532 அனாதைகளை வைத்து தாயாக, தந்தையாக, குழந்தையாக, மகாத்மாவாக இருந்து குடும்பத்துடன் ஓ என்று கண்ணீர் விட்டழுது கொண்டிருக்கின்றான் உறவுகளே. நீ பெற்றுள்ள பட்டம், பதக்கம், டிப்ளோமா எதையும் கடவுள் கண்ணெடுத்துப் பார்க்கப் போவதில்லை. அவர் உன்னிடம் எதிர் பார்ப்பதெல்லாம் நீ செய்துள்ள தியாகத்தின் தழும்புகளைத்தான் இளசுகளே.

கடந்த நான்கு வருடத்துக்கு முன் ஐரோப்பாவுக்கு விசிட்டிங் விசாவில் தனதுமகளைப் பார்க்க வந்து ஆறு மாதம் தங்கிவிட்டு போன புதுக்குடியிருப்பு தாயொருத்தி அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வர முயன்ற போது போன வாரம் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டுள்ளார். இவர் ஐரோப்பாவில் இருந்த போது எனது மனைவி எட்டுமாத கர்ப்பிணியாக இருந்தார். எனது மனைவிக்கு குழந்தை பிறக்கும் வரையும் கிட்டத்தட்ட ஒரு மாதம் எங்கள் வீட்டுக்கு இரவு பகலாக வந்து பத்தியச் சாப்பாடு எனக்கூறிக்கொண்டு எதை எதையோ எல்லாம் அரைத்தும் சமைத்தும் கொடுத்தார். என் மனைவி திட்டிக் கொண்டிருந்தார். இந்த கிழவிக்கு வேலையில்லை. கண்டது கடியது எல்லாம் தின்னச் சொல்லுகின்றார் என. அவளது கைப்பக்குவம், கைராசி, முகராசி என என் மனைவிக்கு சுகப்பிரசவம் நடந்தது. எனது குழந்தையின் பிறந்த தினத்துக்கு முதல் டெலிபோன் கோள் அந்த கிழவிதான் வன்னியில் இருந்து பண்ணுவாள். அடுத்த வாரம் என் மகளுக்கு ஐந்தாவது பிறந்த தினம். ஆனால் இம் முறை புதுக்குடியிருப்பில் இருந்து டெலிபோன் கோள் வரவே வராது என்ற சங்கதியை நாங்கள் இன்னும் எங்கள் மற்ற பிள்ளைகளுக்கு சொல்லவில்லை. இனியும் சொல்லப்போவதுமில்லை. இப்படி ஆயிரம் சங்கதிகள் மதங்களை கடந்து நடந்து கொண்டிருக்கின்றது. இயற்கை மரணம் என்ற செய்திகளை மட்டும்தான் இனி நாம் வன்னியில் இருந்து அறிய வேண்டும். கேட்க வேண்டும். அகால மரணம் இனி எங்களுக்கு வேண்டாம். ஆத்மார்த்தமான இயற்கை மரணம் எங்களுக்கு வர ஆவன செய்யுங்கள் உறவுகளே. VIII


28-04-2009

Read more...

சுவீடன் வெளிவிவகார அமைச்சருக்கு இலங்கை அனுமதி மறுப்புசுவீடன் நாட்டு வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட்டின் இலங்கை விஜயத்துக்கு அரசாங்கம் மறுப்புத் தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரித்தானிய வெளிவிவகராச் செயலாளர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் கவுச்னர் மற்றும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கார்ல் பில்ட் ஆகியோர் நாளை இலங்கை வரவிருப்பதாக பிரித்தானியா கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்தது.

சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், சுவீடன் வெளிவிவகார அமைச்சரின் கோரிக்கையைத் தாம் நிராகரிக்கவில்லையெனவும், ஒரே நேரதத்தில் பலநாடுகளின் உயர்மட்டக் குழுவினரைக் கையாள முடியாதெனவும் இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியிருப்பதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டுள்ளது.

ஆனாலும், திட்டமிட்டபடி தான் இலங்கைக்குச் செல்லப்போவதாக சுவீடன் வெளிவிவகார அமைச்சர் பில்ட் ஏ.எவ்.பி. செய்திச் சேவைக்குக் கூறியுள்ளார்.

“என்னை அனுமதிக்க முடியாதென இலங்கை அதிகாரிகள் கூறியுள்ளனர். நான் ஒரு அனுமதி வழங்கக்கூடாத நபரல்ல. ஏனைய நேரங்களில் நான் வரவேற்கப்பட்டுள்ளேன். எனவே, இலங்கை செல்வதில் உறுதியாகவுள்ளேன்” என சுவீடன் வெளிவிவகார அமைச்சர் கூறியுள்ளார்.

இலங்கை அதிகாரிகளின் நடவடிக்கை வழமைக்கு மாறான வகையில் அமைந்துள்ளது எனவும் சுவீடன் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில் ஒரே நேரத்தில் பல்வேறு இராஜதந்திரிகள் வரும் பட்சத்தில் அவர்களின் தேவைகளைக் கவனிப்பதில் தாம் சவால்களை எதிர்கொண்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அதிகாரியொருவர் கூறியுள்ளார்.

நன்றி ஐஎன்எல் லங்கா

Read more...

Monday, April 27, 2009

பிரபாகரன் தப்பிச்செல்லாதவாறு இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பு பன்மடங்காக்கப்படுகின்றது.

புலிகளியக்கத்தில் இருந்து தப்பி வந்த அவ்வியக்கத்தின் ஊடக ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்ரர் இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கிய தகவல் மற்றும் இராணுவப் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் பிரபாகரன் சப்மரைன்களின் உதவியுடன் தப்பிச் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக இந்திய எல்லைப் பிரதேசங்களான தமிழ் நாடு மற்றும் ஏனைய கரையோரப் பிரதேசங்களில் பாதுகாப்பு பன்மடங்காக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து இந்தியாவைச் சென்றடையும் ஒவ்வொரு அகதிகளையும் பல கோணங்களில் விசாரணை செய்யுமாறும் அவர்களின் சகல அசைவுகளையும் கண்காணிக்குமாறும் இந்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் உள்துறை அமைச்சு சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிக்கு உரிய பிதேசங்களில் படையினரின் எண்ணிக்கையை உடனடியாக அதிகரிக்க பணித்துள்ளதாகவும் கரையோரப் பிரதேசத்தில் உள்ள சகல பிரிவுகளையும் சேர்ந்த பாதுகாப்புப் படையினரையும் உசார் நிலையில் இருக்குமாறு பணித்துள்தாகவும் தெரியவருகின்றது.

பிரபாகரனும் அவரது தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் உறுப்பினர்களும் தப்பி ஓட முற்படும் போது இந்தியாவில் தங்கியுள்ள அகதிகள் பிளையான வழிக்குச் செல்லாமல் தடுப்பதற்காக ஒவ்வொரு முகாம்களையும் விசேட கண்காணிப்புக்கு உட்படுத்துமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

Read more...

“தலைவர் சொல்லாமல் அடிப்பதை ஜனாதிபதி சொல்லியடித்தார்” -கிழக்கான் ஆதம்-“இனி நான் சும்மா இருக்க மாட்டேன்! இந்த ஆண்டு பெப்ரவரி இருபத்தி மூன்றாம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்தைக்குப் பிறகு புலிகள் இருபது குண்டுவெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள் நாற்பத்தேழு இராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள் நூற்றி முப்பத்தொன்பது பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது”

-2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-

நேற்றைய தினம் இருபத்தி ஆறாம் திகதி விடுதலைப் புலிகள் சர்வதேசத்தின் வேண்டுகோள்களை ஏற்று ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பில் அவர்கள் இனி எப்போதும் வலிந்த தாக்குதல் எதையும் மேற்கொள்ள போவதில்லை (முடிந்தால் செய்யமாட்டார்களா? என்ன?) எனவும் காலவரையரையற்ற முறையில் இத்தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சார்பு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இதற்கு சில நாட்களுக்கு முன்புதான் புலித்தேவன் மற்றும் நடேசன் ஆகியோர் ஊடகங்களுக்கு மின்னஞ்சல் வழியாக வழங்கியிருந்த செய்திகளில் அவர்கள் எந்தவித யுத்தநிறுத்தத்திற்கும் இனி இடமில்லையெனவும் தவைவர் இறுதிவரை போராடுவார் எனவும் கூறியிருந்தனர்.

இச்செய்தி வெளியிடப்பட்டு ஒரு சில நாட்களிலேயே இந்தச் செய்தியும் வந்திருப்பதானது புலிகள் அவர்களின் பலத்தை மொத்தமாக இழந்திருந்த காரணத்தினால் எந்த முறையடிப்புப் தாக்குதலையும் செய்ய முடியாமல் இருப்பதும். சில நாட்களுக்கு முன்னர் அரசிடம் சரணடைந்த புலிகளின் தளபதிகள் மற்றும் உறுப்பினர்கள் யுத்த பிரதேசத்தில் பிரபாகரனின் நடமாட்டம் தொடர்பாகவும் புலிகளின் தற்போதுள்ள தாக்குதல் திறன் உட்பட்ட பல முக்கிய தகவல்களை இராணுவத்திற்கு வழங்கியுள்ளமையால் தங்களின் இயலாமையையும் தாங்களின் இறுதி போராட்டம் மிகவும் சுலபமாக இரானுவத்தினரால் வெற்றிகொள்ளப்படும் செய்தி புலம்பெயர் ஆதரவாளர்களை சோர்வடையச் செய்திவிடும் என்ற காரணத்தினாலும் தந்திரமாக இவ்வாறான ஒரு லேபலுடன் சரணடைவதை அல்லது இராணுவத்தினரிடம் தோற்றுப் போவதை புலிகள் மறைக்க முற்படுகின்றனர்.

இதற்கு முதலும் சார்க் மகாநாடு நடக்கும்போதும் இவ்வாறான ஒரு அறிவிப்புச் செய்யப்பட்டடது அதனுடாக சார்க் நாடுகள் உட்பட உலகத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்து இன்னுமொருமுறை அவர்களுக்கு காதில் பூ சுற்ற நினைத்தனர் அது கைக்கூடவில்லை.

அதன் பின்னர் புலிகளின் நலன் விரும்பிகள் எனும் புலிக்குடத்திகள் இந்தியாவில் தொடங்கி உலகம் முழுவதும் யுத்தத்தை நிறுத்துமாறு கோரி உண்ணாவிரதம், கவனயீர்ப்பு, மனிதச் சங்கிலி, தீக்குளிப்பு என தோடர் போராட்டங்களில் ஈடுபட்டபோதும் அது கைக்கூடாத நிலையில் இந்திய தூதரகம், சீனத் தூதரகம், இலங்கைத் தூதரகம் என தாங்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் நாடுகளின் அமைதிக்கும் நல்வாழ்விற்கும் பங்கமும் அந்தந்த நாடுகளின் கௌரவத்தை கெடுக்கும் வண்ணம் தங்களின் காடைத்தனத்தை காண்பித்து வருகின்றனர்.

இவை அனைத்தையும் பார்த்த சர்வதேச சமூகம் செவிடன் காதில் சங்கு ஊதுவது போல் அமைதியாக இருந்தாலும் அவர்கள் தாங்களின் நிலைப்பாட்டில் எப்போதும் தெளிவாக இருந்துவருவதுடன் புலிகளை ஆயுதங்களை கீழே வைத்து இலங்கை அரசிடம் சரணடையுமாறே கூறி வருகின்றனர் இது புலிகளுக்குச் சார்பானதாக இல்லாததால் அதை இந்த புலிக்குடத்திகள் கண்டும் காணாமல் நடந்து கொண்டிருக்கின்றனர்.

மேற்கில் நாங்கள் வசிக்கும் நாடுகளில் புலிக்குடத்திகள் நடாத்தும் இந்த அராஜகங்களை அந்தந்த அரசுகள் சகித்துக் கொள்வது போல தெரிந்தாலும் அதற்கான எதிர் நடவடிக்கைகள் நிச்சயம் மிகவும் பாரதூரமான அளவில் இதை முன்னெடுப்பதாக இனம் காணப்பட்டவர்கள் மீது அந்த அரசுகளால் மேற்கொள்ளப்படவே செய்யும். தற்போதுள்ள இந்த கொடியும் கோஷமும் அடங்கும் போது சட்டம் தனி நபர்கள் மீது பாயும்.

இவ்வாறான ஒரு நடைமுறையை தற்போதும் மேற்கத்தைய நாடுகள் புலிகள் விடயத்தில் பின்பற்றியே வருகின்றன அதுவே புலிகள் அவர்கள் பலமாக இருந்த காலத்தில் மேற்கத்தைய நாடுகளின் அலோசனைகளை மதியாமல் போனதற்கான பரிசாக இன்று அவர்கள் புலிகளையும் அவர்களின் புலிக்குடத்திகளையும் கண்டுகொள்ளாமல் இலங்கை அரசுக்கு தொடர்ந்து அளிக்கும் ஆதரவாகும்.

வன்னியில் வலைஞர்மடத்தையும் இராணுவத்தினரிடம் தாரைவார்த்துக் கொடுத்துவிட்ட புலிகளால் தற்போது தற்காப்பு யுத்த்த்தை நடத்துவது கூட கடினமாக உள்ளமையால் இன்னும் சில நாட்களில் நிகழப்போகும் அந்த விபரீதத்தின்போது “அண்ணன் அடிப்பார், சிங்கள இராணுவம் ஓடும்” என்றெல்லாம் கூறி அடிக்கடி ஜோசியமும் பார்த்து அம்மாவுடன் இணைந்து கூட்டுப் பிராத்தனை செய்துகொண்டிருக்கும் இந்தக் கூட்டதுக்கு தலைவரால் எந்த சந்தோசமான செய்தியையும் கொடுக்க முடியாதுபோனதை மறைக்க இந்த யுத்த நிறுத்த அறிவிப்பைச் செய்திருக்கிறார்.

தற்போது வன்னியில் மீதமிருக்கும் அனைத்தும் படையினர் வசம் செல்லும்போதும் எஞ்சியுள்ள பு(கி)லித்தளபதிகள் சரணடையும் போதும் தலைவர் யுத்த நிறுத்தம் செய்திருந்தபோது சிங்கள இராணுவம் மனிதாபிமானமற்ற முறையில் சிறை பிடித்திருக்கிறது என தங்களுக்கு தாங்கள் சாமாதானம் கூறிக்கொள்ள இந்தப் புலிக்குடத்திகளால் முடியும்.

அதனையே இனிவரும் நாட்களில் புலிகளின் போரியல் ஆய்வாளர்களும் அவர்களின் பணத்திலியங்கும் ஊடகங்களும் கருப்பொருளாக கூறி உலகில் பல போராட்ட இயக்கங்கள் இவ்வாறு சமாதானம் வேண்டி நின்றபோது அடக்கப்பட்டன என்பதை கட்டியம் கூறி தலைவர் தவறிழைக்காதவர் என காப்பாற்றப்போகின்றன. தலைவரை நம்பி உயிர் துறந்த ஏழைப் பிள்ளைகள் மட்டுந்தான் ஏமாந்தவர்கள்.

இவர்கள் ஒருதலைப் பட்சமாக போர்நிறுத்தம் அறிவித்த நாள் மிகவும் முக்கியமான நாளாகும் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ஏப்ரல் 25ம் திகதிதான் கொழும்பு இராணுவத் தலைமையகத்தில் வைத்து தற்போதைய இராணுவத் தளபதி மீது ஒரு கற்பிணிப் பெண்ணை அனுப்பி உலக மானிட நடைமுறைக்கு அப்பால் தற்கொலைத் தாக்குதலை புலிகள் நடாத்தினர். அன்று இராணுவத் தளபதி எப்படியோ உயிர் தப்பிவிட்டார். அக்காலகட்டத்தில் இராணுவத் தளபதிக்கு நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலை அறிந்த புலம்பெயர் புலிக்குடத்திகள் பின்வருமாறு கூறி குடித்து கும்மாளமடித்தனர்.

“ஐயோ ஐயோ, சரத் பொன்சேகா மாத்தையாவின் இடுப்புக்கு கீழ் உள்ள பகுதிகள் செயற்படவில்லையாம்.

விடுமுறையை கழிப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு 2 கால் நடையில வந்து கொண்டாடிப்போட்டு போகக்கை சிங்கன் மாதிரி போனியளே மாத்தையா, எனி அந்த நடையை எப்ப எனி என் தோழர்களுடன் பார்க்கப்போறம்? டக்கிளஸ் நீதாண்டா எனது நாய்குட்டி, ஆனந்தசங்கரி நீதானய்யா என்னுடைய நாய் எண்டு அடிக்கடி சொல்லுவியளே மாத்தையா, இப்ப நீங்கள் முண்டமாகிட்டீங்களே, ஐய்யகொ, சாகிறதிலும் கொடுமையான விடயமாச்சே மோட்டைய்யா சா மாத்தைய்யா சரத் பொன்சேகா இப்பதான் நீர் அவதானமாக இருக்கவேண்டும், கதிர்காமரை திட்டம்போட்டு கொன்று புலிகளை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பிராயண வரவேற்பு தடையை போட்டமாதிரி, உம்மை முடிச்சு புலிகளை ஐரோப்பிய ஒன்றியத்தில தடைசெய்ய முயற்சி செய்வார்கள் சிங்கள மரமண்டைகள். (நீர் எனி உதவமாட்டீர்தானே)

பொன்சேகா என்ன ஒரு பெயர், புண்(காயம்)சேகா அட இது கூட நல்லா இருக்கேப்பா?.”

இவ்வாறு தங்களுக்கு தெரிந்த இணையத் தளங்களிலெல்லாம் தங்களின் வக்கிரங்களையும் அவர்களின் நிஜமான தமிழர் நாகரீகங்களையும் வெளிக்காட்டியிருந்தனர். இலங்கை போன்றதொரு நீண்ட கால யுத்தம் நடைபெறுகின்ற நாட்டில் சர்வதேசத்தின் கண்காணிப்பில் யுத்தநிறுத்த ஒப்பந்தம் அமுலிலிருக்கும் போது புத்தியில்லாமல் தலைவர் செய்கின்ற கொடுமைகளை ஆதரித்தனர் இந்த இரத்த வெறியர்கள்.

அக்காலகட்டத்தில் சர்வதேசமும் இவர்களுக்கு பல ஆலோசனைகளையும் வேண்டுதல்களையும் விடுத்து சமாதான ஒப்பந்தத்தை பாதுகாக்குமாறு கூறிக்கொண்டிருக்க புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் அவலை நினைத்து உரலை இடித்தனர்.

சர்வதேசம் இவர்களை அன்று கெஞ்சிக் கூத்தாடியதற்கு ஒரு பிரதான காரணமிருந்தது அது இலங்கையில் அப்போது ஆட்சிமீடமெறியிருந்த ஜனாதிபதி மற்றும் இராணுவத் தளபதியாகியோர் கடும் போக்குடையவர்கள் மட்டும்ல்லாமல் அவர்களின் தகுதி திறமை என்பனவும் சர்வதேசத்தால் கணிக்கப்பட்டிருந்தது.

மட்டுமல்லாமல் புலிகளை ஓழித்துவிடவேண்டும் என்ற கொள்கை கொண்ட மத்திய அரசு இந்தியாவில் அமைந்திருந்ததாலும் புலிகளை அழிக்க அரசு முற்படும்போது அவர்களுடன் சேர்த்து மாட்டிக்கொள்ளும் அப்பாவி தமிழ் மக்களின் இழப்பையும் நினைத்தே சர்வதேசம் இறுதி சந்தர்ப்பமாக யுத்த நிறுத்தத்தை மீறவேண்டாம் என புலிகளை வேண்டிக்கொண்டது.

அவையணைத்தையும் கண்டுகொள்ளாத பிரபாகரன் தனது ஆதிக்கத்தை மாவிலாறு நீரணையில் காட்டி அதைப் பூட்டி இன்று மாட்டிக்கொண்டார்.

மாவிலாறு அணையை மட்டும் புலிகள் மூடவில்லை பக்கதிலிருந்த மூதூர் பிரதேசமும் புலிகளால் சுற்றிவலைக்கப்பட்டு அங்கு காலாகலமாக வாழ்ந்துவந்த முஸ்லீம் மக்கள் அவ்வூரை விட்டு துரத்தப்பட்டனர். பெரும்பாலான முஸ்லீம் இளைஞர்கள் புலிகளால் சிறைபிடிக்கப்பட்டதுடன் அவர்களனைவரையும் சுட்டுக்கொள்வதற்கும் புலிகள் முற்பட்டனர். இச் சம்பவம் குறித்து புலிகளினால் சிறைபிடிக்கப்பட்டு தப்பித்த ஒரு நண்பர்,

“புலிகள் எங்களின் சுமார் நூற்றி ஐம்பது இளைஞர்கள் அளவில் பிடித்து ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று எங்களை கொலை செய்வதற்காக வரிசையில் நிறுத்திவிட்டு உத்தரவுக்காக காத்திருந்தனர் அச் சமயம் இராணுவம் வந்து அடித்த செல் எங்களுக்கு அருகில் விழ எங்களை விட்டு விட்டு அவர்கள் ஓட்டம் பிடித்தனர் நாங்கள் வேறு திசையால் ஓடி உயிர் தப்பினோம்” என்றார்.

இவ்வாறு பிரபாகரன் ஒரு தவறைச் செய்ய புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்கள் இன்னொன்றை நினைத்து குடித்துக் கும்மாளம் அடித்ததன் பிரதிபலன் இன்று தெரிகிறது இதைதான் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதோ!

புலிகள் யுத்த நிறுத்தத்தை உண்மையில் மேற்குலக வேண்டுகோளுக்கிணங்க மேற்கொள்வதாக இருந்தால் இன்று அவர்களின் கோவணமும் உறுவப்பட்ட நிலையில் அதைச் செய்திருக்க மாட்டார்கள் அன்றே சர்வதேசத்தின் அலோசனைப்படி நடந்திருப்பர்.

சமாதான ஒப்பந்தம் அமுலிலிருக்கும் காலத்திலேயே புலிகள் தங்களின் தன்னாதிக்க வெறியால் சர்வதேசம் முகம் சுழிக்கும்படியான பாரிய யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்களைச் செய்தனர்.

வெளிநாட்டமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் மீதான சினேப்பர் தாக்குதல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான தற்கொலைத் தாக்குதல் முயற்சி, இராணுவத் தளபதி மீதான தாக்குதல், கிழக்கில் முஸ்லீம்கள் மீது ஒட்டமாவடி மற்றும் வாழைச்சேனையில் தாக்குதலும் சொத்துக்கள் அழிப்பும், வெருகல் தறையிரக்கமும் சொந்த தமிழ் உறவுகள் மீதான புலிகளின் வன்முறை, இலங்கை இராணுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதல், கிழக்கில் முஸ்லீம்கள் பூர்வீக நிலங்களை விட்டு வெளியேற வேண்டும் என்ற துண்டுப் பிரசுர மிரட்டல்கள், மாவிலாறு அணை மறிப்பு மற்றும் மூதூர் மீதான தாக்குதல் என புலிகள் பலமாக இருந்தபோது உலக சமாதான கண்காணிப்பாளர்கள் இலங்கையில் இருக்கும் நிலையில் தங்கள் சர்வதிகார இரத்தவெறியைக் காட்டிவிட்டு இன்று முடியவில்லை எனும் போது அவர்கள் யுத்த நிறுத்தம் அறிவிக்கும் போது அதை எப்படி உலகமும் இலங்கை அரசும் ஏற்றுக் கொள்ளும்.

தற்போதைய கால சூழலில் புலிகள் சொந்த வன்னித் தமிழ் மக்களுக்கும் தூரோகம் இழைத்துவிட்டதாகவே அந்த மக்கள் கருதுகின்றனர். தற்போது இராணுவத்தினரால் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் மக்கள் அதனையே சர்வதேசத்திடமும் அரசிடமும் தெரிவிக்கின்றனர்.

புலிகள் தமிழர் தாயக நிலப்பிரதேசமான வடக்கு கிழக்கு ஆகிய இருபிரதேசங்களில் வாழும் மக்களின் மனங்களில் இருந்தும் தூர தூக்கியெறியப்பட்டுள்ள நிலையில் புலிகளுக்கு தற்போது பூஜை செய்பவர்கள் புலம்பெயர் தேசத்தில் உள்ள கொஞ்ச ஆதரவாளர்கள் மட்டுந்தான். அவர்களின் சுயரூபமும் அந்தந்த நாடுகளுக்கும் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் வெளிக்க ஆரம்பித்து விட்டது.

வணங்காமண் தொடங்கி பல இறுதிப்போராட்டம் என்ற பெயரில் சுலை சுலையாக சுருட்டியவர்கள் தற்போது இந்தியாவின் தமிழ் நாட்டில் தி.முக. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை துரோகிகள் எனக் காட்ட “இறுதியுத்தம்” இறுவெட்டு வெளியிட்டதானது தமிழ்நாட்டு மக்களுக்குள் புலிகளால் நடாத்தப்பட்ட ஆதரவுப் போராட்டங்களை முடக்கவே உதவப்போகிறது.

இவ்வாறு தங்கள் மூலைக்கும் செயற்பாடுகளுக்கும் சம்பந்தமில்லாமல் புலிகளின் பினாமிகள் நடத்திய நிழல் போராட்டங்கள் அனைத்தும் சகல தேசங்களிலும் முறைவுரைக்காவே காத்திருக்கின்றன என்பது தெளிவாகிறது.

பி.பி.சி தமிழோசையூடாக வன்னியிலிருந்து இராணுவத்தாரால் மீட்கப்பட்ட ஒரு அவலைப் பெண்ணின் குரல் இவ்வாறு ஒலித்தது.

“ஐயா இவர்கள் (புலிகள்) இப்படி துரோகம் செய்வார்கள் என்று நினைக்கவில்லை ஐயா, எங்கள் குழந்தைகளை மீட்டுக் கொடுங்கள் “ VIIIRead more...

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்கள் சார்பாக அம்பாறை மாவட்டம் எங்கும் அத்தியாவசிய பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன.வன்னியில் புலிகளின் பிடியில் சிக்குண்டு பல சிரமங்களைச் சந்தித்து தப்பி வந்துள்ள மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டியதன் அவசியம் ஒலிபெருக்கி மூலம் அம்பாறை மாவட்டம் எங்கும் அறிவிக்கப்படுவதுடன் அத்தியாவசியப் பொருட்களும் சேகரிக்கப்படுகின்றது.

நேற்றும் இன்றும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்கள், பொதுமக்களின் சங்கங்கள், ஆலயநிர்வாகங்கள் போன்றன அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் இனியபாரதி தலைமையில் இப்பணியை முன்னெடுத்து வருகின்றனர். இன்று சேகரிக்ப்பட்ட பொருட்கள் இன்றிரவு பார ஊர்திகள் மூலம் அனுப்பி வைக்கப்டவுள்ளதாக தெரியவருகின்றது.


Read more...

விடுதலைப் புலிகளுக்குப் பொதுமன்னிப்பு: அரசாங்கம் நிராகரிப்பு

விடுதலைப் புலிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி, அவர்களுடன் பேச்சுவார்த்தையொன்றுக்குச் செல்லவேண்டுமென இணைத்தலைமை நாடுகளின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

அமெரிக்கா தலைமையில் கூடிய இணைத்தலைமை நாடுகள் இலங்கை விடயம் பற்றிக் கலந்துரையாடியதுடன், விடுதலைப் புலிகளுக்கு இலங்கை அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தது.

சர்வதேச நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றபோதும், யுத்த சூனியப் பிரதேசத்தில் எஞ்சியிருக்கும் மக்கள் முற்றாக வெளியேற்றப்படும்வரை விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்படாது என தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் குலுகல்ல தெரிவித்துள்ளார்.

“இது பிரபாகரனின் இறுதி நேரம். அவரும், வருடைய போராளிகளும் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையவேண்டும். மோதல்கள் பெருமளவில் முடிந்துவிட்டது. யுத்த சூனியப் பிரதேசத்திலுள்ள அனைத்து மக்களும் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்” என குலுகல்ல கூறினார்.

விடுதலைப் புலிகளுடன் அரசாங்கம் ஒருபோதும் அரசியல் பேச்சுவார்த்தைக்குச் செல்லாது என அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் அழுத்தம் குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் தொடர்ச்சியான அழுத்தங்கள் குறித்து பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தாக்கிப் பேசியுள்ளார்.

இந்த சர்வதேச நாடுகள் தமது வேலைகளைப் பார்க்கவேண்டும், அரசாங்கம் ஒருபோதும் இராணுவ நடவடிக்கைகளை கைவிடாது எனக் கூறியிருந்தார்.

நன்றி ஐஎன்எல் லங்கா

Read more...

யுத்த நிறுத்தம் கிடையாது - தவறான செய்தி.

வன்னியில் இடம்பெற்றுவருகின்ற யுத்தத்தில் அதிபார ஆயுதங்கள், விமானத்தாக்குதல் நாடாத்துவதை தற்காலிகமாக நிறுத்துவதாக அரசாங்கம் முடிவெடுத்துள்ளதே தவிர யுத்த நிறுத்தம் ஒன்று செய்யப்படவில்லை என இலங்கை இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையை தவறாக புரிந்து கொண்ட சில ஊடகங்கள் இலங்கையில் யுத்தநிறுத்தம் பிரகடணப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகளை வெளியிட்டதை அடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Read more...

ஜோன் கோல்ம்ஸ் ஜனாதிபதியைச் சந்திக்கன்றார்.இலங்கையில் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்ற யுத்தத்தில் பாதிக்கப்படுகின்ற மக்களின் நிலமைகள் தொடர்பாக ஆராய்வதற்காக இலங்கை வந்திருக்கும் ஐ.நா சபையின் மனித உரிமை விவகாரங்களுக்கான தலைவர் திரு. ஜோன் கோல்ம்ஸ் அவர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி அவர்களை சந்திக்கவுள்ளார்.

இன்று காலை அவர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் றோஹித்த போகல்லாகமவைச் சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read more...

மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் தீர்மானம்மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான மோதல்களில் பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள், போர்விமானங்கள் பயன்படுத்தப்படாது எனவும், மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக்கொண்டுவரத் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“எமது பாதுகாப்புப் படையினர் பொதுமக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தும் கனரக ஆயுதங்கள் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தமாட்டார்கள்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்துக் கவனம் செலுத்தியிருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மோதல் நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவருவதுடன், பொதுமக்கள் தங்கியிருக்கும் பகுதிகளை நோக்கி கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியோ அல்லது விமானங்களைப் பயன்படுத்தியோ தாக்குதல்கள் நடத்தப்படாது என இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருப்பதாக இந்திய உட்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

எனினும், பொதுமக்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடருமென இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதாகவும் இந்திய உட்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

நன்றி ஐஎன்எல்

Read more...

கடற்புலிகளின் மூன்று படகுகள் மூழ்கடிப்பு, 12 கடற்புலிகள் பலி.

வெள்ளாமுள்ளிவாய்கால் கடற்கரைப்பகுதியில் நிலைகொண்டுள்ள படையினர் மீது கடற்பரப்பில் இருந்து புலிகள் மேற்கொள்ள முயன்ற தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. நேற்று நண்பகல் 1.00 மணியளவில் இடம்பெற்ற கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 3 படகுகள் முற்றாக நிர்மூலமாக்கப்பட்டுள்ளதுடன் 12 புலிகள் கொல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றது.

Read more...

Sunday, April 26, 2009

20 ஆசனங்களை இழந்து ஜே. வி. பி. படுதோல்வி. இனவாதத்திற்கு கிடைத்த பரிசு.மேல் மாகாண சபைத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜே. வி. பி.) 3 ஆசனங்களை மாத்திரமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது.

2004ம் ஆண்டு நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிட்டு 23 ஆசனங்களைத் தமதாக்கிக் கொண்டிருந்த ஜே. வி. பி, இம்முறை தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு மேல் மாகாண சபையில் இருபது ஆசனங்களை இழந்துள்ளது.

Read more...

23 புலிகள் படையினரிடம் சரண்.வலைஞர்மடம் பிரதேசத்தைக் கைப்பற்றிய படையினர் அப்பிரதேசத்தில் யுத்தத்தில் ஈடுபட்ட ஒரு தொகுதி புலிகளை சுற்றிவளைத்து அவர்களை சரணடையுமாறு அறிவித்திருந்தனர். படையிரின் வேண்டுதலைத் தொடர்ந்து ஆயுதங்களைக் கீழே போட்டு 23 புலிகள் படையினரிடம் சரணடைந்துள்ளனர்.

சரணடைந்தவர்களில் 17 ஆண்களும் 6 பெண்களும் அடங்குவதாகவும், அப்பகுதியில் சிக்கியிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களும் அடங்குவதாகவும் தெரியவருகின்றது.

சரணடைந்த புலிகளை புனருத்தாபன நிலையங்களுக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

Read more...

வலைஞர்மடம் படையினர் வசம்

மனிதபிமான படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் 58வது டிவிசன் படையினர் வலைஞர்மடம் பகுதியை கைபற்றி எல்ரிரிஈயினரிடம் சிக்கியிருந்த மேலும் பல சிவிலியன்களை விடுவித்துள்ளனர்.

இராணுவக் கொமான்டோக்கள்,விசேடபடையினர்,10வது காலால்படையினர் மற்றும் 12வது கெமுனுப்படையினர் ஆகிஆயார் நேற்று(ஏப்:25)வலைஞர்மடம் பகுதிக்குள் நுளைந்து அப்பகுதியின் பாதுகாப்பை இன்று (ஏப்:26) காலை முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொன்டு வந்ததுடன் 500 மேற்பட்ட சிவிலியன்களையும் விடுவித்துள்ளதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

வலைஞர்மடம் எல்ரிரிஈயினரின் கடைசி மறைவிடமான வெள்ளமுள்ளிவாய்கலிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது.

Read more...

கருணா என்கின்ற முரளிதரனுக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும். ( பாகம் 10 ) - யஹியா வாஸித் -


உங்கள் மனம் கடினமான வயல் கடின உழைப்பிற்கு ஏற்ற விழைச்சல் நிச்சயம் கிடைக்கும்.


மேற்கே கொழும்பை அண்டிய பகுதிகளில் தினமும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு வர்த்தகர்களும், பிரமுகர்களும், உல்லாசப் பிரயாணிகளும் வந்து போய்க்கொண்டிருக்கின்றார்கள், கிழக்கில் ஒருபக்கம் அடை மழை அதோடு போட்டி போட்டுக் கொண்டு வெள்ளம் அதே நேரம் அமோக நெல்விழைச்சல், தெற்கே கடல் வாழ் மீன்களும், மாணிக்க கற்களும், மத்தியில் தேயிலை, இறப்பர், கைவினைப் பொருட்கள், வாசனைத் திரவியங்கள், வடக்கில் யுத்தம் அதனோடு போட்டி போட்டுக் கொண்டு வெங்காயம், புகையிலை செய்கை என சகல காலநிலைகளையும் தன்னகத்தே உள்ளடக்கிய ஒரு நாடு இருந்ததென்றால் அது சிறலங்கா என்ற நாட்டை தவிர வேறு எந்த நாடுமே கிடையாது. ஆனால் நாம் எல்லாவற்றையும் ரொம்ப அழகாக தொலைத்து விட்டு வாலைப்பிடித்துக் கொண்டிருக்கின்றோம்.

எல்லா வளமும் நிரம்பிய நாம் எல்லாவற்றுக்கும் அரசையே எதிர்பார்க்கின்றோம். பல்கலைக்
கழகத்தைவிட்டு வெளியேறிய அடுத்த நாளே வேலைதா என அரசை நெருக்க ஆரம்பித்து விடுகின்றோம். பல்கலைக்கழக கல்வி என்பது உன்னையே நீ உணர்ந்து நீயாகவே ஒரு தொழிலை உருவாக்கி நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தவே வழங்கப்படுகிறது.

வாழை மரத்தை எப்படி நடுவது, எத்தனை மாதங்களில் காய்க்கும், அதை எவ்வாறு பழுக்க வைப்பது, பழத்தை எவ்வாறு உரித்து தின்பது என வழிகாட்டவே அரசே தவிர மரத்தை நட்டு
பழத்தை கொண்டு வந்து உரித்து உன் வாய்க்குள் வைப்பதற்கல்ல. எனவே கொஞ்ச காலத்துக்கு அரசை மறந்துவிடுவோம். அவர்களுக்கு அடுத்துவரும் வருடங்களில் நிறைய வேலை இருக்கின்றது. அதை அவர்கள் கச்சிதமாக முடிக்கட்டும். நாம் நமது வீட்டுப்பற்றுடையவர்களாக மாறுவோம். ஓவ்வொருவரும் அவ்வாறு மாறும் போது தானாகவே நாடு உருப்படும்.

நாடு பாரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் போகப்போகின்றது. நிறைய வியாபாரங்கள் களைகட்டப் போகின்றது. உலகம் முழுதும் சகல துறைகளிலும் உள்ள நம்மவர்கள் மூட்டைகளில் கட்டிவைத்துள்ள பணங்களுடன் வந்து குவியப்போகின்றார்கள். காணி விலை,
வீட்டு விலை, பழைய இரும்பு விலைகளிலிருந்து உழுத்துப் போன கொட்டப் பாக்குவரை சந்தையை ஆக்கிரமிக்கப் போகின்றது. இப்போதே அடுத்த வருடத்தை டார்கட் பண்ணி வியாபாரத்தில் இறங்குங்கள்.

வட மாகாணம் முழுக்க கட்டுமாணப் பணிகள் தொடங்கப் போகின்றது. இரும்பு பாரிய அளவில் தேவைப்படும். இரண்டு கோடி ரூபா முதல் ஆறு கோடி ரூபாவில் இரும்புகளைத் தயாரிக்க கூடிய இரும்பு ஆலைகள் இந்தியாவில் பஞ்சாப் லூதியானா இண்டஸ்ரியல் சூனில் இருக்கின்றது. இவைகளை வாங்கிவந்து வவுனியா, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களில் நிறுவினால் 75 வீதம் நெட் புறபிட் நிச்சயம். அடுத்த ஓரிரு மாதங்களில் உறவினர்களை பார்க்க வவுனியாவிற்கு புலம்பெயர் நாடுகளிலுள்ளவர்கள் வரப்போகின்றார்கள். அவர்கள் தங்குவதற்கு வாடகை வீடு, உணவு என்பன தேவைப்படப் போகின்றது. அத்துடன் தொலைபேசிவசதி,வாகன வசதி என்பவற்றுக்கெல்லாம் பாரிய தேவை ஏற்படும். இப்போதே அதற்குரிய திட்டங்களை வகுக்கலாம். இணையத்தளங்களுக்கு மெயில் எழுதிய வவுனியா, கிளிநொச்சி சகோதரர்களே இதை கொஞ்சம் சீரியசாக யோசியுங்கள். உங்கள் பொருட்களை உலகத்தரத்தில் சந்தைப்படுத்தி நீங்களும் நிமிர்ந்து நில்லுங்கள். மாற்றாந்தோட்டத்து மல்லிகைக்கு மணமில்லை எங்கள் வீட்டு வாழைப் பூவும் மணக்கும் என தெரியப்படுத்துங்கள்.

வட பகுதியில் உள்ள காய்கறி, குறிப்பாக பழவகைகளை உலர வைக்கக் கூடிய சிறிய இயந்
திரங்கள் உலகம் எங்கும் கொட்டிக் கிடக்கின்றது. புறுட் ட்ரையர் டொட் கொம் என்று இன்டர் நெட்டில் தடவினால் அனைத்தும் விரியும். 100 டொலரில் இருந்து 5000 டொலர் வரை நமது வசதிக்கேற்ப வாங்கலாம்.இனி பழவகைகளை தூக்கி வீச வேண்டிய அவசியமேயில்லை. இவ்வியந்திரத்தில் உலர வைத்து சேகரித்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யலாம்.

உலகமே சனத்தொகைப் பெருக்கத்தால் திக்கு முக்காடிக் கொண்டிருக்கின்றது. இதற்கு ஒத்த வகையில் விஞ்ஞானமும் வளர்வதால் சுற்றுச் சூழல் மாசடைந்து மக்கள் மத்தியில் புதுப் புது வருத்தங்களும், அசௌகரியங்களும் ஏற்பட்டுக் கொண்டே போகின்றது. இவற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள என பல வகையான மருந்துகள், நுண்உயிர் கொல்லிகள், கிருமிநாசினிகள் என தினம் தினம் வந்து கொண்டே இருக்கின்றது. இவைகளை பணம் கொடுத்து வாங்கி நாமும் உபயோகித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். இயற்கை தந்த அவ்வளவு வளமும் நம் கண் முன்னே நமது காலடியிலேயே கொட்டிக் கிடக்க நாம் நெய் தேடி அலைந்து கொண்டிருக்கின்றோம். இப்போது புதிதாக ஒரு புரளியை கிளப்பி விட்டுள்ளார்கள் ஓசோன் படலத்தில் ஓட்டையாம். இனி அதை சொல்லிக் கொண்டு கொஞ்சம் மருந்து வியாபாரிகள் நமது வேப்பம் பட்டையை அரைத்து, அழகாக வடிவமைத்து மேல் பாகத்தில் இனிப்புத்தடவி நமக்கே விற்கப் போகின்றார்கள்.

ஏன் அதை நாமே தயாரித்தால் என்ன. சிறிலங்காவிலேயே வேப்பமரம் அதிகமுள்ள பகுதி யாழ்ப்பாணம். இதை நாம் ரொம்ப கசப்பானது என்று சொல்லித்திரிகின்றோம். ஆனால் வைத்திய ஏடுகளில் இனிக்கும் வேம்பு என்றுதான் எழுதி ஜமாய்த்திருக்கின்றார்கள். சுற்றாடலுக்கு குளிர்ச்சியையும், சுவாசிப்பதற்கு ஆரோக்கியத்தையும் வழங்கும் இந்த வேப்ப மரத்தடியில் தலையிடி, தலைச்சுற்றல், உடம்பு உளைச்சல், மூச்சுத்திணறல் உள்ளவர்கள் ஒரு நாள் முழுக்க உட்கார்ந்திருந்தால் அனைத்தும் பறந்தோடி ஒரு உட்சாகமும், புத்துயிர்ப்பும் வந்து விடும்.

ஆயிரக்கணக்கான டொலர் செலவு செய்து கேரளா போய் இந்த வெள்ளையர்கள் எல்லாம் எடுக்கும் ஹேர்பள் பாத் இன் ரகசியமும் இந்த வேப்பமரம்தான். நம்மட கொஞ்சம் புதுப் பணக்காறர்களும் பேங்கொக் போய் ஹேர்பள் பாத் எடுப்பதாக கேள்வி. வேப்பம் குருத்தை அரைத்து காலையில் உண்டு பெரும் பாடகர்கள் தமது குரல் வளத்தை பேணிவருவதுடன், வேப்பம் பூவை காயவைத்து வடகம் போட்டு உணவுடன் சேர்த்தும் உண்டு தங்களுக்கு மட்டும் தான் கணீர்குரல் என பாராட்டுகளையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள.

கூகை கட்டு வந்தால் கறிமஞ்சளுடன் அரைத்து வீக்கத்துக்கு இதை பூசுவார்கள் என்ற சங்கதிதான் எமக்கு தெரியும் ஆனால் மகப்பேற்றின் போது தாய்மாரை குளிப்பாட்ட வேப்ப இலைகளை நீரில் போட்டு அவித்த தண்ணீரையே முழு ஆபிரிக்காவும் உபயோகித்துக் கொண்டிருக்கின்றது.

வேப்பம் விதைகளை நன்கு சுத்திகரித்து அதிலிருந்து வேப்பெண்ணை பெறுவார்கள். சிறு குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பு,தொண்டை கட்டி வந்தால் இந்த எண்ணையை தடவுவார்கள; பூச்சி கொல்லி, பூச்சி நாசினியாகவும் இவ்வெண்ணை பயன்படுகிறது. சட்டியில் நெருப்புத் தணல்களை போட்டு எரித்து வேப்ப இலையை அல்லது விதையை அதில் தூவி நுளம்பை விரட்ட நமது தாய்மார் உபயோகித்த போது நாம் மூக்கை சுளித்தது ஞாபகத்துக்கு வரலாம். ஆனால் அப்போது நாம் அந்த புகையை சுவாசித்திருந்தால் இப்போது நமக்கு வந்திருக்கும் அரைவாசி நோய் பறந்திருக்கும்.

ஆலும் வேலும் பல்லுக்குறுதி மட்டுமல்ல இதிலிருந்து எண்ணை எடுத்த பின் மீந்து போகும் சக்கை இலுப்பை பிண்ணாக்கு என்ற பெயரில் உரமாகவும், ஆடு வளர்ப்பில் ஈடுபடுபவர்கள் வேப்பம் குழையையும் கலந்து ஆட்டுக்கு கொடுத்தால் ஆட்டு தீவன செலவு குறைவதுடன் ஆடுகளை ஒரு நோய் நொடியும் அண்டவே அண்டாதும் செய்யலாம். வீட்டுத் தளபாடங்களாகவும் இன்று வேப்ப மரம் உலக வலம் வந்து கெண்டிருக்கின்றது.

அது சரி இதனால் என்ன வியாபார இலாபம் அடையலாம் என யோசிக்கின்றீர்களா.அங்குதான் நீங்கள் உங்கள் புத்தியை கொஞ்சம் தீட்ட வேண்டும். கொழும்பு கண்டி வீதியில் கொழும்பிலி
ருந்து 40 மைல் தொலைவில் சித்தாலேப மருந்து கம்பனி இருக்கின்றது. இரண்டாயிரத்துக்கு அதிகமானவர்கள் வேலை செய்கின்றார்கள். உலகம் முழுதும் இந்த சித்தாலேப ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இவர் ஒரு லேகிய வியாபாரி. திடீரென இவருக்கு ஒரு குட்டி ஐடியா வந்து இண்டஸ்ரியல் டெவலப்மென்ட் போர்ட் கதவுகளை போய் தட்டியுள்ளார். நமது நாட்டிலுள்ள மூலிகைகளை நவீனப் படுத்தி ஏற்றுமதி செய்ய முடியாதா என கேள்வி மேல் கேள்வியாக கேட்டு அதிகாரிகளை துளைத்துள்ளார். பிறகென்ன அபுல்கா காசம் அண்டா காகாசம் திறந்துடு கதவே என்ற கதையாக அனைத்துக் கதவுகளையும் திறந்து அவருக்கு ஆலோசனை செய்துள்ளனர். முதலில் நிட்டம்புவயில் ஆரம்பித்த வியாபாரம் மௌ;ள மெதுவாக சூடு பிடித்து இப்போது புலம் பெயர்நாடுகளில் உள்ள கடைகளில் ஜொலிக்கிறது.

அமெரிக்கன் எம்பசிக்கும், பிரிட்டிஷ் எம்பஸிக்கும் முன்னால் தவம் இருப்பவர்கள் இவைகளுக்கு நேர் முன்னால் இருக்கும் இண்டஸ்ரியல் டெவலப்மென்ட் போட்டுக்கும் நாலு வேப்பிலையை எடுத்துக் கொண்டு போய் பாருங்கள். விஸா றிஜக்ட் ஆனாலும் கூட வேப்பிலை மகாத்மியம் பாஸாகலாம். உலகம் முழுக்க நம்மவரின் கடைகள் வேரூன்றி இருக்கின்றது. எவ்வளவுதான் இருமலுக்கு புலம்பெயர் நாடுகளிலுள்ள கோப் சிரப்புகளைக் குடித்தாலும் பனங்கல்கண்டு சிறிதளவை எடுத்து வாய்க்குள் போட்டு உமிழ்ந்தால்தான் இருமலே பறக்கிறது. அது போல் இனி வேப்பிலையையும் ஏதோ ஒரு வடிவில் கொண்டுவருவோம்.

மாம்பழத்தை ஜாலியாக தின்றுவிட்டு அதன் கொட்டையை தூக்கி தூர வீசி விடுவோம். நாம் எப்போதும் அப்படித்தானே இருக்கின்றோம். ஒருவரிடமிருந்து உருப்படியான விடயங்களை எல்லாம் கறந்து விட்டு பிறகு மண்டையில் போட்டு எட்டப்பன் என்று போஸ்டர் ஒட்டி சங்கி
லியன் பஞ்சாயத்து வந்து உரிமையும் கோரிவிடும். ஆனால் மாங்கொட்டையிடம் அந்த பாச்சா பலிக்காது. தூர வீசினாலும் நான் இரும்பையும் கரைப்பேனாக்கும் என முரண்டு பிடித்துக் கொண்டு வந்து நிற்கும்.

ஒரு கிலோ அளவு மாங்கொட்டையை எடுத்து உள்ளே இருக்கும் பருப்பை மிககவனமாக ஜ(ச)
வ்வுகளை எல்லாம் அகற்றி எடுத்து. சிறிது தண்ணீர் விட்டு மைபோல அரைத்து ஒரு குட்டி பாத்திரத்தில் ஊற்றி. லேத் பட்டறைகளிலிருந்து எடுத்துவரப்பட்ட இரும்புத்தூள் 50 கிராமை இதனுடன் நன்கு கலக்கி. வெயிலில் வைத்து விட்டு இரண்டு மணிநேரத்தின் பின்பார்த்தால் பாத்திரத்தில் கரு நீலநிற திரவம் தெரியும்.ஆம் இப்போது எடுத்துப் பாருங்கள். இரும்பு கரைந்து விட்டது தெரியவரும். கரைந்த பின் நன்கு வடிகட்டி வரும் மீதியை மீண்டும் காய வைத்தால் கூழ் போன்ற ஒரு திரவம் வரும். அது தான் துணிகளுக்கு போடப்படும் நம்பர் ஒன் சாயமாகும். அதுமட்டுமல்ல நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் பேனா ரீபிளுக்குள் இருக்கும் மையும் இதுவே. மாங்கொட்டையிலிருந்து பெறப்படும் கொழுப்பினால் வாசனை சோப் தயாரிக்கலாம். உலகின் மிக தரமான சோப்புகள் மாங்கொட்டையினாலேயே தயாரிக்கப்படுகின்றன. மாம் பூவை காய்வதற்கு முன் சேகரித்து ஸ்டீம் டிஸ்ரிலேஷன் என்ற முறையில் பூவில் கலந்துள்ள பொருள்களை பிரித்து அதி உயர்ந்த வாசனைத்திரவியம் தயாரிக்கப்படுகின்றது.

இவ்வாறு பூவிலிருந்து எண்ணையை எடுத்த பின் மீதியாக உள்ள பொருளை மிக நன்றாக காய வைத்து அரைத்து தயாரிக்கப்படுவதுதான் வயிற்றுப் பேதியை நிறுத்துவதற்காக நாம் உபயோகிக்கும் மாத்திரைகள். பெண்களின் தலையில் இருக்கும் ஈரையும், பேனையும் ஒழிக்கும் சக்தி மாம்பூவிலிருந்து தயாரிக்கும் எண்ணைக்குத்தான் உண்டு.இன்னும் பல மகாத்மியம் இங்த மாவிலைக்கு உண்டு.

முட்டாள்கள் விமர்சிப்பார்கள்.குறை கூறுவார்கள்,மறுப்பார்கள் நீங்கள்
தொடர்ந்து செல்லுங்கள்.அவர்களுக்கு நின்று காது கொடுக்காதீர்கள்.
அவர்களுக்கு வேலையே இல்லை.உங்களுக்கு நிறைய வேலை இருக்கிறது.


( தொடருவேன்....) T111


25-04-2009


Read more...

Saturday, April 25, 2009

மக்கள் உங்கள் உதவியை எதிர்பார்க்கின்றனர்.வன்னியிலிருந்த இடம்பெயர்ந்து வரும் மக்களுக்கு தமிழீழ விடுதலைக் கழகத்தினர் தம்மால் முடிந்த உதவிகளைச் செய்து வருகின்றனர். அத்துடன் அம்மக்களுக்கு உதவி புரியுமாறு பல தரப்பட்ட அமைப்புக்களும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் வவுனியாவில் நிலைகொண்டுள்ள புளொட் அமைப்பினர் அம்மக்கள் சார்பாக பொது மக்களின் உதவியை நாடி நிற்கின்றனர்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு புளொட் அமைப்பினூடாக உதவி புரிய விரும்புவோர் அவ்வமைப்பின் கொழும்புக் கிளையை தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுவதுடன் நிதிஉதவி செய்ய விரும்புவோர் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வங்கிக்கணக்கிற்கு உங்கள் பேருதவிகளை அனுப்புமாறு வேண்டப்படுகின்றனர்.

இலங்கை வங்கி, கிளை: பம்பலபிட்டி
கணக்கின் பெயர்: D.P.L.F
கணக்கு இலக்கம்: 718534 Swift code: BCEYLKLX
காரியாலய முகவரி: 16, Haig Road, Colombo-04.
தொலைபேசி இல: 0094112586289Read more...

ஐ.நா ஊழியரின் 16 வயதுடைய மகளை புலிகள் பலாத்காரமாக யுத்தத்தில் ஈடுபடுத்துகின்றனர். 12 வயது சிறுவர்களும் யுத்தத்தில்.யுத்த சூனியப் பிரதேசத்தின் ஒரு மூலையினுள் முடக்கப்பட்டுள்ள புலிகள் யுத்தத்தில் 12 வயது சிறுவர்களைக்கூட பலாத்காரமாக ஈடுபடுத்துகின்றனர் என ஐ.நா இன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இலங்கைக்கான ஐ.நா பேச்சாளர் கோல்டன் வைஸ் இன்று பேசுகையில், யுத்த சூனியப் பிரதேசத்தில் மிகவும் கஷ்டங்களுடன் வாழ்ந்து வந்த ஐ.நா ஊழியர் ஒருவரின் 16 வயதுடைய மகளை விடுதலைப் புலிகள் யுத்ததிற்கு பலாத்காரமாக இணைத்துக்கொண்டுள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

யுத்த சூனியப் பிரதேசத்தில் உள்ள சிறுவர்களைப் புலிகள் பிடிக்கச் செல்கின்ற போது அவற்றை தடுக்க முற்படுகின்ற பெற்றோருக்கும் புலிகளுக்கும் இடையில் பல தடவைகள் மோதல் வெடித்துள்ளமைக்கான பதிவுகள் உள்ளது. அவ்வாறு தடுக்க முற்பட்ட பலர் தாக்கப்பட்டும் சுடப்பட்டும் உள்ளனர் எனவும் கூறியுள்ள அவர் தொடர்ந்து பேசுகையில் அங்குள்ள மக்கள் வெறும் மண் தரையில் உட்காந்திருக்கின்றபோது அங்கு வரும் புலிகள் குடும்பத்தில் உள்ள ஓருவர் அல்லது இருவரை யுத்தத்தில் இணையுமாறு வேண்டுகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

புலிகள் 12 வயது சிறுவர்களைக் கூட பிடித்துச் சென்று அவர்களது கைகளில் இயந்திரத் துப்பாக்கிகளைக் கொடுக்கின்றனர். பின்னர் அக்குழந்தைகளைக் குடுப்பத்தினாரால் பார்க்க முடிவதில்லை. யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், புலிகளிடம் அனுபவம் மிக்க உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. அவற்றை பூர்த்தி செய்ய புலிகள் சிறுவர்களை பலாத்காரமாக இணைக்கின்றனர் எனவும்,

அங்குள்ள மாணவர்கள் புலிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். அவர்கள் பாடசாலைக்குச் செல்லும் அதேநேரத்தில் இராணுவப் பயிற்சியும் பெறவேண்டியுள்ளது. ஏறக்குறைய 200000 மக்கள் புலிகளின் பிடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தெரிவிக்கின்றது. ஆனால் ஐ.நா வின் கணிப்பின் படி இன்னும் 150000 மக்கள் யுத்த சூனியப் பிரதேசத்தினுள் எஞ்சியிருக்க வேண்டும் என நம்பப்படுகின்றது எனவும்

ஜி8 நாடுகளின் வெளிநாட்லுவல்கள் அமைச்சர்களின் கூட்டறிக்கையில், மக்களுக்கு இழப்பு ஏற்படுவதை தடுக்கு முகமாக இருதரப்பினரம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேண்டப்பட்டுள்ளது. ஐ.நா சபையின் உத்தியோகபூர்வ தகவல்களின் படி 2000 பேர் கடந்த மாதம் இறந்துள்ளதாக தொவிக்கப்படுகின்றபோதிலும் கடந்த வாரம் இடம்பெற்ற அதி உக்கிர யுத்தத்தின் போது இடம்பெற்ற இழப்புக்கள் இங்கு சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஐ.நா வின் இரு உத்தியோகித்தர்கள் கடந்த தை மாதம் 20 ம் திகதியில் இருந்து ஏறக்குறைய 6500 பேர் உயிரிழந்துள்ளதாக பிரத்தியேகமாக தெரிவித்துள்ளனர். யுத்தசூனியப் பிரதேசத்தில் உள்ள குழந்தைகள் சிலர் போசாக்கின்மையால் உயிரிழந்துள்ளதாக அங்குள் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

எது எவ்வாறாயினும் எந்த தகவல்களையும் ஊர்ஜிதம் செய்வது கடினமாகவுள்ளது. காரணம் இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட பிரதேசத்தினுள் ஊடகவியலாளர்களை அனுமதிக்கின்றார்கள் இல்லை. இலங்கை இராணுவத்தினர் ஒரு தொகுதி ஊடகவியலாளர்களை விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள் ஆனால் படையினரின் மேற்பார்வையிலேயே அவர்களுடைய செயற்பாடுகள் இருந்துள்ளது.

மக்களை வெளியே எடுக்கும் பொருட்டு யுத்தத்திற்கு ஓர் ஓய்வு கொடுக்குமாறு சிறிலங்கா அரசை வேண்டுமுகமாக இந்தியா தனது இரு பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பியிருந்தது. ஆனால் யுத்தத்தில் வெற்றி என்பது மிகவும் அண்மித்துள்ளது என்பதை தெரிந்துகொண்டுள்ள இலங்கை அரசிற்கு புலிகளை மேலும் சுவாசிக்க விடுவதற்கு எண்ணம் கிடையாது எனவும் அவரது நீண்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com