Tuesday, September 30, 2008

இதயம் விடிய உதயமாகும் இலங்கை நெற்!

அடியெடுத்த உன் கால்கள்
ஆறுபோல் ஓடட்டும்! - என்றும்
ஆறாமல் ஓடட்டும்
தடைகள் தாண்டி ஓடட்டும்!
தருமநெறி தழைத்திடவே
தரணியெங்கும் ஓடட்டும்!
இலங்கைநெற் இளநதியே - உன்கிளைகள்
இரக்கமில்லா பாறைகளை
பிளந்துடைத்து பாரெல்லாம் பரவட்டும்!
கட்டுரையாய் கவிதைகளாய்
செவ்விகளாய் செய்திகளாய்
உண்மைகளை உரசியிங்கே
ஓயாமல் ஓடட்டும்!
உன் சேவை தொடரட்டும்!
உன் உதயமதில் - எங்கள்
இதயங்கள் விடியட்டும்!
எங்கள் இதயங்கள் விடியட்டும்!!


கவிதா. VII

Read more...

Monday, September 29, 2008

இலங்கை நெற்

இலங்கை நெற் - இது
எங்கள் நெற் !
இலங்கைத் தமிழனின் இதய நெற் !
இறக்கை விரித்து பறக்க முயலும்
இரும்புத் தமிழன் முயற்சி அறிந்து
உயற்ச்சி கிடைக்க உழைக்கும் நெற் !!

இனத்தின் அவலம் கதைத்துக் கதைத்தே
இழுத்தடிக்கும் புலித்தலைமை
புலம் பெயர்ந்த தமிழினத்தை
மடையரெண்டு நினைக்குதோ!

போர்முனையே வாழ்க்கையென்று
நாள் கடத்தும் நாடகம் - அதை
நேர்முனையில் செல்லும்
இலங்கை நெற்றில் அறிந்து கொள் !

கப்பம் கட்டித் தெப்பமாகித்
தேய்ந்து போன தமிழினம்- இறுதி
யுத்தம் என்று புலிப்பிடியில் சிக்கிச் சோகமானதே!
தமிழினத்தை வழிநடத்த வந்த - அறிவுச்
சுடரெல்லாம் புலிப்பாசிசத்தால்
வேட்டையாடும் வேள்வி இன்றும் தொடருதே! - இன
அடக்குமுறை இருந்ததனால்
அணியணியாய்க் கிளந்தெழுந்து
அரசியலை அதிரவைத்துத் - தமிழர்
தலையெழுத்தை மாற்றவைக்க .. ..
வாழ்விழந்து உறவிழந்து உயிர் - தியாகம்
செய்யத் துணிந்த எங்கள்
உறவுகளை அழித்தொழித்து - பிரபா கூட்டம்
எம் மனக் கோட்டைகளை தகர்க்குதே!

சரணடைந்த உறவுகளை சங்கறுத்து சீரழித்த
சதி காரர்களின் நாடகத்தை
முழுத் தமிழினமும் அறிந்துகொள்ள
வேகமாக விவேகத்தோடு
உண்மைகளைக் காட்டும் நெற் !! -உயிர்
அச்சத்தோடு அமைதியின்றி
ஊருவிட்டு ஊரு சென்று - தாய்
நாட்டை விட்டு நாடு சென்று
வாட்டத்தொடு வாழும் தமிழர் - வாழ்வில்
மாற்றம் மலர வேண்டி
மூவினமும் சேர்ந்து - முழுச்
சுதந்திரத்தை அனுபவித்து
சுற்றத்தோடு வட்டமிட்டு
வாழ்ந்த சூழல் தோன்றிடவே - சதித்
திட்டமெல்லாம் ஊடறுத்து
தகவல் சொல்லும் இந்த நெற்! - உண்மைத்
தகவல் தரும் தமிழன் நெற்!!
இலங்கை நெற் - இது
எங்கள் நெற் !!!

சகா தேவன் - VII

Read more...

Tuesday, September 23, 2008

எம்மைப் பற்றி

ஊடக சுதந்திரத்தை இருள் சூழ்ந்துள்ள இவ்வுலகிலே உண்மைகளைத் தேடி பிடித்து அவற்றிற்கு ஓளியூட்டுவதை இலக்காக கொண்டு எம் சமுதாயத்தில் உள்ள மூத்த ஊடகவியலாளர்களினதும் புத்தி ஜீவிகளினதும் ஆசீர்வாதத்துடன் எமது பணியை முடிந்தவரை நியாயத்துடன் செவ்வனச் செய்வோம்.

அனைத்துச் செய்திகளையும் உறுதிப் படுத்தி உங்களிடம் கொண்டுவர இருக்கும் எங்களுக்கு உங்களது தகவல்கள் மூல சாதனமாக அமையுமாகையால் உங்களது தகவல்கள், விமர்சனங்கள், ஆக்கங்கள் ஆகியவற்றை ஆவலுடன் எதிர்பார்கின்றோம்.

உங்கள் கருத்துகளை மதிக்கும் வகையில் தனி நபர்களை புண்படுத்தாத பொது நோக்கு கொண்ட எவ்விதமான ஆக்கங்களையும் நாம் பிரசுரிக்கத் தயாராகவும் ஆவலாகவும் உள்ளோம். இது உங்கள் மன ஓவியங்களைத் தாங்கி வரும் தளம். தூரிகை உங்கள் கைகளில்.

"எந்த சந்தர்ப்பத்திலும் சமநிலையில் இருப்பதுதான் மகிழ்ச்சி"


நன்றி
இலங்கைநெற் - நிர்வாகம்.

Read more...
Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com